வீட்டு முகவரி இருக்கோ இல்லையோ ஆனால் மின்னஞ்சல் முகவரி இல்லாத இணைய பயணார்களே இல்லை என்று கூறும் அளவிற்கு மின்னஞ்சல் சேவையானது இன்று அனைவரிடமும் சென்றுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு இலவசமாக ஈமெயில் சேவையினை வழங்குவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் மின்னஞ்சல் முகவரி இல்லையெனில் கணினி பயன்பாட்டாளர் என்பதற்கு அடையாளமே இல்லையென்ற நிலை உள்ளது. ஏன் நம்மில் பலர் பல்வேறு நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருவோம் இதற்கு காரணம் இலவசம் என்ற ஒன்றே ஆகும்.
ஒரு சில இணைய பயனார்கள் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துவார்கள் அவற்றில் ஒன்றை தன்னுடைய நண்பர்க்கு கொடுத்திருப்பார் ஆனால் அந்த முகவரியை பயன்படுத்தாமல் இருப்பார், இதனால் அந்த மின்னஞ்சல் முகவரி செயல் இழந்துவிடும். அந்த செயலிழந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால், சரியான முகவரி அல்ல என்ற செய்தியே வரும். இதுபோன்ற கோளாருச்செய்திகள் வருமேயானால், அந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியானது உபயோகத்தில் உள்ளதா என்பதை ஆராய வேண்டும். இதற்கு ஒரே வழி குறிப்பிட்ட மின்னஞ்சலுடைய உரிமையாளரிடம் கேட்டால் மட்டுமே மின்னஞ்சல் முகவரி நடப்பில் இருக்கிறதா என்பது சாத்தியம் ஆகும். இதற்கு மற்றுமொரு வழி உள்ளது. சரியான மின்னஞ்சல் முகவரிதான என்று சோதிக்க ஒரு மென்பொருள் உள்ளது அந்த மென்பொருளின் வாயிலாக அறிய முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இணையத்தில் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Import என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து மின்னஞ்சல் முகவரிகளை உள்ளினைத்துக்கொள்ளவும். நாம் txt, CSV, Excel, Access அல்லது Database பைல்களை உள்ளினைத்து கொள்ள முடியும். பைல்களை இணைத்தப்பிறகு Check emails என்னும் பொத்தானை அழுத்தவும், பின் சில நொடிகளில் உங்களுக்கான முடிவு தெரிந்துவிடும். சரியான முகவரி எவைஎவை என்று, பின் தவறான முகவரியை நம்மால் எளிமையா முறையில் அறிந்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இணைய வசதியுடன் எந்ததெந்த மின்னஞ்சல் முகவரிகள் போலியானவை என்று எளிமையான முறையில் கண்டறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருள் வசதியில் மூலமாக டொமைன் மின்னஞ்சல் முகவரிகள் சரியானவைதான என்றும் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகும்.
|