Wednesday, March 30, 2011

எம்.எஸ்.ஆப்பிஸ்க்கு மாற்று மென்பொருள் - LibreOffice 3.3.2


ஆப்பிஸ் தொகுப்பு என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே ஆகும். கொஞ்சம் மிஞ்சி போனால் ஒப்பன் ஆப்பிஸ்,ஸ்டார் ஆப்பிஸ் போன்ற மென்பொருட்களே அனைவருக்கும் தெரிந்தவை ஆகும். இன்னும் பல சிறப்புவாய்ந்த ஆப்பிஸ் மென்பொருட்கள் பலவும்வெளியே தெரியாமல் உள்ளது. அந்த வகையில் உள்ளது தான் LibreOffice 3.3.2 இந்த ஆப்பிஸ் தொகுப்பானது ஸ்டார் ஆப்பிஸ் தொகுப்பை போன்றே உள்ளது. இந்த LibreOffice தொகுப்பானது சுகந்திர மென்பொருள் (OpenSource) ஆகும். அதன் காரணமாக இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் பிறரிடம் உரிமம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிஸ் என்றாலே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே உள்ளது என இன்னும் நிறைய கணினி பயனாளர்கள் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதைவிட சிறப்பானதாக நிறைய ஆப்பிஸ் தொகுப்புகள் இருந்தும் அவையாவும் வெளியே வராமல் சென்றுவிட்டது. எம்.எஸ். ஆப்பிஸ் தொகுப்பை போல அனைத்து வகையிளும் சிறப்பானதொரு மென்பொருள் என்றால் அது LibreOffice மட்டுமே ஆகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த தளத்திற்கு சென்று இணையத்தினுடைய உதவியுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் கொள்ளவும். LibreOffice மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் இயங்குமாறு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மற்ற ஆப்பிஸ் தொகுப்புகளை ஒப்பிடுகையில் LibreOffice ஆப்பிஸ் தொகுப்பு அளவில் சிறியதே ஆகும். மேலும் இந்த LibreOffice தொகுப்பில் உரைஆவணங்கள் (Text document), அட்டவணைச்செயலி (SpreadSheets), நிகழ்த்துதல் (Presentation), தரவுத்தளம் (Database), ட்ரா (Draw) மற்றும் கணக்குகளை செய்ய Formula போன்ற பயன்பாடுகள் இந்த LibreOffice ஆப்பிஸ் தொகுப்பில் உள்ளன. 

இந்த LibreOffice ஆப்பிஸ் தொகுப்பில் சிறப்பம்சம் என்னவெனில் ஒரு தொகுப்பில் இருந்தவாறே மற்றொரு தொகுப்பிற்கு மாறிக்கொள்ள முடியும். ஸ்டார் ஆப்பிஸ் போன்றே இந்த ஆப்பிஸ் தொகுப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பிஸ் தொகுப்பு இலவசம் என்பதால் இந்த தொகுப்பு தற்போது பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் நன்றாக இருக்கும். பணம் கொடுத்து ஒரு மென்பொருளை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக இலவசமாக (Open Source) கிடைக்கும் மென்பொருளை பயன்படுத்தினால் நம்முடைய பணமாவது மிச்சம் ஆகும். மேலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி  உருவாக்கும் டாக்குமெண்ட்கள் அனைத்தும் இந்த மென்பொருளின் வசதி இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். என்ற அவசியம் இல்லை, நாம் போப்பினை சேமிக்கும் போதே பைல் பார்மெட்டை மாற்றி சேமித்தால் எம்.எஸ்.ஆப்பிஸ்லில் கூட கோப்பினை திறந்து பார்க்க முடியும். இதனால் இந்த ஆப்பிஸ் தொகுப்பை தாராளமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

தமிழனுக்கு ஒரு சவால்...


 சவாலில் பங்கேற்கும் தமிழன் மட்டும் இந்த பதிவிற்குள் நுழையவும்


தமிழனுக்கு வாய்சவடால் அதிகம். தமிழனுக்கு வீரம் வாய்லதான் செயலில் அல்ல .தான் பெரிய ஆளு வீரம் உள்ளவன் என்ற நினைப்பு அநேக ஆண்களூக்கு உண்டு. அப்படி நினைப்பவர்கள் கிழேயுள்ள படத்தை ஒரு முறை பார்க்கவும். அதில் உள்ள ஆளூக்கு உள்ள துணிச்சல் நமக்கு இருக்குமா என்று ஒரு கணம் நினைத்து பாருங்கள்.






துணிச்சல் உள்ளவன் என்று கருதும் ஆண்கள் இந்த பீல்டிங் எங்கே இருக்கிறது என்று கண்டு பிடித்து இந்த மாதிரி ஒரு படம் எடுத்து அனுப்பி வைக்கவும். உங்கள் படத்தை என் ப்ளாக்கில் அறிமுகப்படுத்துகிறேன்.( நீங்கள் என்னை கட்டி வைத்து தர்ம அடி அடிக்க வேண்டும் நினைப்பது எனக்கு தெரியும். அதனால் தான் நான் என் பெயர் படம் எல்லாம் இங்கே போடல. ஹீ...ஹீ...ஹீ) 2012 எனது ப்ளாக் டாப் நம்பர் ஒன் ப்ளாக்காக இருக்கும். அப்பவந்து என் படம் போடு என்னை உன் ஃபலோவராக சேர்த்து கொள் என்றால் என்னால் சேர்க்க முடியாது

எப்போதும் போல வந்தமா படித்தோமா என்று இருக்காமல் ஏதாவது கமெண்ட்ஸ் போட்டு போங்கள்.....இல்லையென்றால் நான் என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது( என்ன செய்வேன் என்று கற்பனை பண்ணி பயப்பட வேண்டாம். நான் கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேன் அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும்)

பழைய MS-DOS லிருந்து Windows 7 வரை


பழைய MS-DOS லிருந்து Windows 7 வரை ஒரே கணினியில் VMware கருவியை பயன்படுத்தி upgrade செய்திருக்கிறார். 

மைக்ரோசாப்ட் வோர்ட் -இல் ப்ளாக் இடுகையை எளிதாக உருவாக்க


மைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டினை நம்மில் பலரும் பல வருடங்களாக பயன்படுத்தி வந்தாலும், இதனை பெரும்பாலான பதிவர்கள் ஒரு ப்ளாக் டூலாக உபயோகித்து இடுகையை உருவாக்கியதில்லை என்பது  உண்மை. 

வேர்டு 2007 -இல் இடுகையை உருவாக்கி பப்ளிஷ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.  இதனை உருவாக்க உங்கள் கணினியில் NHM Writer அல்லது வேறு ஏதாவது ஒரு ஒருங்குறி கருவி இருத்தல் அவசியம். முதலில் உங்கள் MS-Word 2007 திறந்து கொண்டு, Office பட்டனை க்ளிக் செய்து New என்பதை க்ளிக் செய்யுங்கள். 
இப்பொழுது திறக்கும் திரையில் New blog post ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். 

இப்பொழுது வரும் Register a Blog Account வசனப் பெட்டியில் Register Now பொத்தானை அழுத்தி, அடுத்து வரும் பெட்டியில், உங்கள் Blog Provider ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக Blogger ஐ தேர்வு செய்வோம்.
 
இனி ப்ளாக்கருக்கான உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து, OK பொத்தானை சொடுக்குங்கள்.
 
 
படங்களை இணைப்பதாக இருந்தால் Picture Options க்ளிக் செய்து, தேவையான URL ஐ (FlickR / PhotoBucket) கொடுங்கள். 


அடுத்து வரும் திரையில் உங்கள் ப்ளாக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் உங்கள் இடுகையை எழுத துவங்கலாம். வேர்டு தொகுப்பில் உள்ள பல்வேறு துணைக் கருவிகளைக் கொண்டு உங்கள் இடுகையை இன்னும் அழகு படுத்தலாம்.


இடுகையை உருவாக்கிய பிறகு, Publish பொத்தானை சொடுக்கி, Publish அல்லது Publish as Draft என்பதில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து உங்கள் இடுகையை Publish செய்து கொள்ளலாம்.


இந்த வசதியை பயன்படுத்தி நான் ஒரு இடுகை மட்டுமே உருவாக்கினேன், எனக்கு படங்களை இணைப்பதில் சில சிக்கல்கள் எழுந்தன. மற்றபடி வேர்டில் வழக்கமாக பணிபுரிவது போல எளிதாகவே இருந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.