Sunday, February 13, 2011

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…


அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

தொலைந்து போன பைலை கண்டுபிடிப்பது எப்படி?


இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.
1. உங்களுக்கு அந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது *.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டுமானாலும். இருக்கலாம். பைலை முதல் பிரிவில் தரவும்.
2. பெயரும் தெரியவில்லை ; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.
3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது. என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look IN : என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம். எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.
4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனை பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்.

இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.

உங்கள் DVD யை எளிதாக Youtube ல் Upload செய்யலாம்


1.VidCoder
2.My MP4Box (இந்த சாப்டுவேருக்கு .Net framework 3.5 தேவை )
.Net framework 3.5
Step1:  வீடியோ கோப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் (select the file)alt

VidCoder  சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவவும்
பிறகு உங்களுடைய DVD யை உங்கள் கணினியில் செலுத்தவும் .
VidCoder சாப்ட்வேர் மூலம் VIDEO_TS என்ற போல்டரை (folder) உங்கள் DVD யில் இருந்து தேர்வு செய்யவும்.
Step2: DVD யில் இருந்து MP4 ஆக மாற்றுதல்
VidCoder ல்,  Ctrl + T அழுத்தவும் இல்லையேல்

File –> Enque Multiple Titles என்பதை menu வில் தேர்வு செய்யவும்
பிறகு DVD யில் அனைத்து titles களையும் தேர்வு செய்து queue சேர்க்கவும் .
உங்களுக்கு தானாகவே encoding ஐ தேர்வு செத்து இருக்கவும் அதுவே conversion செய்ய சிறந்ததாக இருக்கும்.
இல்லையேல் உங்களுக்கு வேண்டியபடி மாற்றிக் கொள்ளலாம்
பிறகு Encode என்ற button ஐ அழுத்தவும்.
உங்களின் கணினியின் திறனை பொருத்தும் வீடியோவின் நீளத்தைப் பொருத்தும்
நேரம் எடுத்துக் கொள்ளும்.
Step3: இணையத்திற்கு (ex: youtube) ஏற்றவாறு மாற்றுதல் :alt

 
MyMP4Box software மூலம் vidcoder software Mp4 ஆகா மாற்றிய கோப்புகளை தேர்வு செய்து நமக்கு தகுந்தாற்போல் எவ்வளவு நேரம் வேண்டுமோ அதை கட்டத்தினுள் கொடுத்தால். இந்த மென்பொருள் தானாகவே விடியோவை பகுதிகளாக பிரித்து கொடுத்துவிடும் .
இதன் பயன்பாடு என்னவெனில் நீங்கள் வீடியோவை youtube ல் ஏற்றும் பொழுது பதினைந்து (15 mins) நிமிடத்திற்கு மேல் இருக்கும் வீடியோவை எடுத்துக் கொள்ளாது . எனவே நீங்கள் இந்த மென்பொருள் மூலம் எளிதாக உங்கள் வேலையை முடித்துக் கொள்ள முடியும்.TechTamil.com

போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்


அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும்.
ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி (Background) மோசமான நிலையில் இருக்கும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

கை கழுவுதல் எப்பொழுது, எப்படி?, யாருக்கு


அவருக்கு மூக்கை அரித்தது போலும். தனது வலது கையால் மூக்கை அழுதித் தேய்த்தார். பின் அதை ரவுசரில் தேய்த்துத் துடைத்தார்.

கதிரையில் உட்கார்ந்ததும் இடது கையில் தூக்கி வைத்திருந்த குழந்தையின் கன்னத்தை வலது கையால் தடவியபடியே,

“குஞ்சு சரியாச் சாப்பிடுதில்லை. மெலிஞ்சு போகுது” என்றார்.

சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு இவரது கையிலுள்ள சளியின் மிச்சங்களில் உள்ள கிருமி தொற்றிக் காய்ச்சலும் வந்தால் இன்னும் பல நாட்களுக்குச் பசியின்மை தொடரப் போகிறது என்பதை நினைவில் கொண்டேன்..

எமது கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது உடல் நலத்தைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானதாகும்.
  • தனக்கு நோய் வராது தடுப்பதற்காக மாத்திரமின்றி, 
  • தனது நோய் மற்றவர்களுக்குப் பரவாது தடுப்பதற்கும் இதைக் கடைப்பிடிப்பது அவசியம். 

பக்றீரியா, பங்கசு, வைரஸ், புரடசோவா என எத்தனையோ வகையான கிருமிகள் எமது சூழல் எங்கும் பரந்து கிடக்கின்றன. எமக்கு கிட்டாத சுதந்திரத்துடன் கை கால் மேல் என கேட்டுக் கேள்வியின்றி நீக்கமற உலவித் திரிகின்றன.

ஆயினும் கிருமித் தொற்றுள்ள போது அவற்றின் செறிவானது
எமது உடற்திரவங்களான
  • எச்சில், 
  • சளி, 
  • மூக்கிலிருந்து சிந்தும் நீர், 
  • சிறுநீர், 
  • மலம்
போன்றவற்றில் மிக அதிகம்.

கிருமியால் மாசடைந்த எமது கைகள் வாய், மூக்கு, கண், சருமம் போன்ற உறுப்புகளில் படும்போது அவற்றில் கிருமி பரவிவிடும்.

சாதகமான சூழல் அங்கிருந்தால் அவை பல்கிப் பெருகி நோய்களை ஏற்படுத்தும். இவ்வாறு பரவுவதைத் தடுக்கவே கை கழுவுவது அவசியமாகும்

எவ்வாறு கழுவுதல் வேண்டும்?

குழாய் நீர் போன்ற ஓடும் நீரில் கழுவுதல் நல்லது. இளம் சூட்டு நீரில் கழுவுவது மேலும் சிறந்தது.

முதலில் கைகளை நீரில் நனையுங்கள். பின் சோப் போடுங்கள். கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து நுரை வரச் செய்வதுடன் விரல் இடுக்குகள், நகங்கள் உட்பட கைமுழுவதையும் சுத்தம் செய்யுங்கள். குறைந்தது 20 செகண்டுகளுக்காவது அவ்வாறு தேய்த்துச் சுத்தப்படுத்துவது நல்லது.

ஓடும் தண்ணீரில் சோப் இட்ட கைகளை நன்கு கழுவுங்கள்.

ஓடும் தண்ணீரில் கழுவுங்கள்

கழுவிச் சுத்தப்படுத்திய கைகளை புதிய பேப்பர் டவலினால் துடைத்து உலர வைப்பது நல்லது. முடிந்தால் அந்த டவலினாலேயே குழாயை மூடுவது சிறந்தது.

ஏனெனில் ஏற்கனவே குழாயைத் திறந்தபோது உங்கள் கையிலிருந்த அழுக்கு அதில் பட்டிருக்கும். கழுவிச் சுத்தம் செய்த கைகளால் மீண்டும் அதை மூடும்போது மீண்டும் கிருமி கையில் தொற்றிவிடும். அல்லது குழாய் மூடியை நீரினால் கழுவிய பின் கைகளால் மூடலாம்.

அழுக்கான டவல், கைலேஞ்சி போன்றவற்றில் துடைக்க வேண்டாம்.
காற்றினால் உலர வைக்கும் உபகரணங்கள் (Air Dryer) இப்பொழுது இங்கும் கிடைக்கின்றன. அவையும் நல்லது.

எப்பொழுது கைகளைக் கழுவ வேண்டும் ?


எப்பொழுதும் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது விரும்பத்தக்கது. இருந்தபோதும் கீழ் வரும் செயற்பாடுகளின்போது கழுவுவது மிக அவசியமாகும்.
  • உணவு தயாரிக்க முன்னரும் உணவு உட்கொள்ள முன்னரும் மிக மிக அவசியமாகும்.
  • மலசல கூடத்திற்குச் சென்று வரும்போது
  • நோயுள்ளவர்களைப் பராமரித்த பின்னர்.
  •  மலசலம் கழித்த குழந்தைகளைச் சுத்தம் செய்த பின், அவர்களின் னiயிநசள யை மாற்றிய பின்
  • தும்மல் இருமல் மூக்குச் சீறல் போன்ற செயல்களுக்குப் பின்னர்.
  • வீட்டுக் கழிவுப் பொருட்களைத் தொட்டழைதல், அகற்றல் போன்ற செயல்களின் பின்னர்.
  • வெட்டுக் காயங்கள் புண் போன்றவற்றை தொட்டு, மருந்து கட்டல் போன்ற செயற்பாடுகளின் பின்னர்.
  • வளர்ப்புப் பிராணிகளை தொட்ட பின்னர்.
  • கைகளில் கிருமி தொற்றக் கூடிய எந்தச் செயற்பாட்டின் பின்னரும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு ஒக்டோபர் 15ம் திகதி உலக கை கழுவும் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது.

நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா?


"கனநாளா இருமல். அடிக்கடி வந்து வந்து போகும். கன பேரட்டை மருந்து எடுத்தனான். மாறுற பாடாக் காணயில்லை." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சைத் தடவினார் அந்த தொந்தி பருத்த மனிதர்.

"நெஞ்சிலை என்ன?" எனக் கேட்டேன். "ஒனறுமில்லை. நெஞ்சரிப்பு. அடிக்கடி வாறாது. இண்டைக்கு கொஞ்சம் கூடச் சாப்பிட்டிட்டன். அது தான் ..." என இழுத்தார். எனக்கு மின்லடித்தது போல அவரது இருமலுக்கான காரணம் வெளித்தது.

நெஞ்சரிப்பு என்பது ஒரு இடைஞ்சல் தரும் உணர்வு. எரிவு போலவோ, வலிப்பது போலவோ, சூடு போன்றது போலவோ ஆனதொரு உணர்வு. பொதுவாக மேல் வயிற்றில் ஆரம்பித்து நடு நெஞ்சுக்கு வருவது போல இருக்கும். தொண்டை வரை பரவுவதும் உண்டு. சில வேளைகளில் வாய்க்குள் புளித்துக் கொண்டு வருவது போலவும் செய்யும். செமியாத்தன்மை, சாப்பாடு மேலெழும்புவது, புளித்துக் கொண்டு வருதல், என்றெல்லாம் நாம் சொல்லுவதை ஆங்கிலத்தில் Heart Burn என்பார்கள்.

எப்படி அழைத்தாலும் இப் பிரச்சனைக்கும் இருதயம், மாரடைப்பு போன்ற பயமுறுத்தும் நோய்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆயினும் மிக அரிதாக மாரடைப்பானது நெஞ்சில் எரிவது போல வெளிப்படுவதுண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

பெரும்பாலும் நெஞ்செரிப்பானது உணவிற்குப் பின் வருவதை நீங்களும் அனுபவித்திருக்கலாம். உணவின் பின் இரண்டு மணி நேரம்வரை கூட நீடிக்கலாம். குனிவதாலும் படுப்பதாலும் இது திடீரென ஏற்படவும் வாய்ப்புண்டு. அவ்வாறான தருணங்களில் எழுந்திருந்தால், அல்லது எழுந்து நின்றால் அதிலிருந்து நீங்கள் விரைவில் விடுபட முடியும். அடிக்கடி நெஞ்செரிப்பு வருபவர்கள் சாப்பிட்ட உடன் படுக்கைக்குப் போகக் கூடாது. சாப்பிட்டு இரண்டு மணிநேரமாவது கழிந்த பின்னர்தான் படுக்கைக்குப் போக வேண்டும்.

இரைப்பைக்குள் வழமையாக இருக்கும் அமிலம் அல்லது அத்துடன சேர்ந்து குடலில் உள்ள உணவுகளும் மேலெழுந்து நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவுக் குழாயின் இன்னொரு பகுதியான களத்திற்குள் (Oesophagus) ஊடுருவுவதாலேயே நெஞ்சரிப்பு ஏற்படுகிறது. இரைப்பைக்குள் இருப்பவை மேலெழுந்து நெஞ்சுப் பகுதிக்கு வருவதைத் தடுக்கும் 'வால்வ்' (Lower oesophageal spincter) சரியாகச் செயற்படாததாலேயே இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதனால்தான் கருப்பையில் உள்ள குழந்தையானது இரைப்பையை அழுத்துவதால் கர்ப்பமாயிருக்கும் காலங்களில் தாய்க்கு அடிக்கடி நெஞ்செரிப்பு வருவதைக் காண்கிறோம்.

பொரித்த ஊணவுகள், கொழுப்புப் பண்டங்கள், சொக்கிளேட், பெப்பர்மின்ட், கோப்பி, மென் பானங்கள், மது போன்றவை நெஞ்செரிவைத் தூண்டும். நெஞ்செரிவு உள்ளவர்களுக்கு புளிக்கும் தன்மை உள்ள தோடம்பழம், தேசி, அன்னாசி போன்ற பழவகைகளும் கூடாது. உள்ளி, வெங்காயம், தக்காளி, மற்றும் காரமான உணவு வகைகளும் நோயைத் தீவிரமாக்கலாம்.

புகைத்தலும், புகையிலையும், அத்துடன் கூடவே வலிநிவாரணி மாத்திரைகள், இரும்புச் சத்து மாத்திரைகள், அலர்ஜிகளுக்கு எதிரான Antihistamine மருந்துகளும் நெஞ்செரிப்பின் தீவிரத்தை அதிகரிக்கும். அதேபோல அதீத எடையுள்ளவர்களின் வயிற்றின் கொழுப்பும், இறுக்கமான ஆடைகளும் இரைப்பையை அழுத்துவதால் அமிலத்தை மேலெழச் செய்து நெஞ்செரிப்பை ஏற்படுத்தலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் மலத்தை வெளியேற்றுவதற்காக முக்குவதால் மூலநோய் மாத்திரமின்றி நெஞ்செரிவும் ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்றறையில் இருக்கும் இரைப்பையின் பகுதியாவது அங்கிருந்து இடைமென்தட்டு (Diaphragm) வழியாக நெஞ்சறைக்குள் செல்லக் கூடும். 'ஹையற்றஸ் ஹேர்னியா' எனும் இது வெளிப்படையாக பார்க்க முடியாத ஒரு நோயாகும். இதுவும் நெஞ்செரிப்பை ஏற்படுத்துகிறது.

உங்களுக்கு மனஅழுத்தமும் இருந்தால் கூட நெஞ்செரிப்பு ஏற்படுத்துகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா? மனஅழுத்தம் இரைப்பையில் அமிலம் சுரப்பதை அதிகரிக்கிறது. அத்துடன் இரைப்பையின் செயற்பாட்டை ஆறுதல் (Slow)படுத்துகிறது. இவை இரண்டுமே நெஞ்செரிப்பை ஏற்படுத்துகினறன.

நெஞ்செரிவு பொதுவாக ஆபத்தற்ற அறிகுறியாகும். ஆயினும் கடுமையான சத்தி, உடல் மெலிதல், பசிக்குறைவு, வாந்தியோடு இரத்தம் போதல், மலம் தார்போல கருமையாகப் போதல் போன்ற அறிகுறிகளும் கூட இருந்தால் அலட்சியம் பண்ண வேண்டாம். ஏனெனில் அவை குடற்புண், புற்றுநோய் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கக் கூடும்.

வியர்வை, கடுமையான களைப்பு, மூச்சிளைப்பு ஆகியவற்றுடன் நெஞ்செரிவு வந்து அந்த வலியானது கழுத்து, தாடை, அல்லது கைகளுக்குப் பரவினால் அது மாரடைப்பாக இருக்கலாம் என்பதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய செய்தியாகும்.

உங்களுக்கு நெஞ்செரிவு இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
அ. அதிக உடையுள்ளவராயின் உணவு முறை மாற்றங்களாலும், உடற்பயிற்சியாலும் உங்கள் எடையைக் கட்டுப்பாற்றிற்குள் கொண்டுவர முயலுங்கள்.
ஆ. வயிற்றை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணிய வேண்டாம்.
இ. சாப்பிட்டு சில மணிநேரங்கள் செல்லும் வரை குனிந்து வேலை செய்ய வேண்டாம். சாப்பிட்டு இரண்டு மணி நேரமாவது கழிந்த பின்னர்தான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
ஈ. நெஞ்செரிப்பை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகளைத் தவிருங்கள்.
உ. மது, புகையிலை போடுதல், புகைத்தல் ஆகியவற்றை நிறுத்துங்கள்.
ஊ. மனஅழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.

நீண்டநாள் இருமல் இருந்தவருக்கும் நெஞ்செரிப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? நெஞ்செரிப்பின் போது இரப்பையிலிருந்து மேலெழும் அமிலமானது சுவாசத் தொகுதியினுள் சிந்திப் பாதிப்பதுண்டு. இது அங்கு அரிப்பை உண்டாக்கி ஆஸ்த்மா, இருமல் போன்றவையை ஏற்படுத்தலாம். அத்தகையவர்களுக்கு சளிக்கான மருந்துடன், அமிலம் சுரப்பதையும், அது மேலெழுவதையும் தடுப்பதற்கான மருந்துகளையம் சேர்த்துக் கொடுத்தால்தான் இருமல் குணமடையும். அதைத்தான் செய்தோம்.அவரது எடை அதிகமாததால் அதையும் குறைக்கும் படியும் ஆலோசனை கூறப்பட்து.