Showing posts with label கண்டுபிடிப்புகள். Show all posts
Showing posts with label கண்டுபிடிப்புகள். Show all posts

Friday, November 18, 2011

காலையில் எழும்ப கஷ்டப்படும் உங்களுக்கு இது நிச்சயம் பயனளிக்கும் (காணொளி இணைப்பு)


இது சற்று முட்டாள் தனமான வீடியோ. ஆனாலும் புத்திசாலித்தனமானது தூக்கத்தில் இருந்து எழும்ப கஷ்டப்படும்


பலர் இந்த முறையின் மூலம் இலகுவாக எழும்பலாம். ஒரு முறை முயன்று பாருங்கள்.

சிறிய கோள்களில் காணப்படும் பாரிய கறுப்பு ஓட்டைகள்: ஆய்வாளர்கள் தகவல்

நமது வான்பகுதியில் பால்வீதி மண்டலம் எனப்படும் நட்சத்திர கூட்டங்கள் அதிகளவில் உள்ளன. நமது பூமியிலிருந்து சிறிய தொலைவில் உள்ள பால்வீதி மண்டலத்தில் பெரும் திறள் கருப்பு ஓட்டைகள் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொலைதூர பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்காக ஹப்பில் விண்வெளி நுண்ணோக்கியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது சிறிய நட்சத்திர கூட்டங்களில் பெரிய கருப்பு ஓட்டைகள் வளர்வதை கண்டறிந்தார்கள்.


சிறிய பால்வீதி மண்டலத்தின் புதிய பரிணாமத்தின் போது மத்திய கருப்பு ஓட்டைகள் உருவானதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வின் மூலம் மிகச் சிறிய அடர்த்தி உள்ள நட்சத்திர கூட்டங்களிலும் மிக பெரிய கருப்பு ஓட்டைகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.
அனைத்து பெரும் பால்வீதி மண்டலங்களிலும் ஒரு மைய பெரிய கருப்பு ஓட்டைக் காணப்படுகிறது. அது மிகவும் வெளிச்சம் மிக்கதாக இருக்கிறது. இந்த ஆய்வினை டிரம்ப் மற்றும் இணை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுப் பகுதி 1000 கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் நடைபெற்று உள்ளது.

நாங்கள் 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் பிரபஞ்சத்தினுடைய இளம் காலத்தை பார்வையிட்டோம். அப்போது இந்த மிகச் சிறிய இள நட்சத்திரக் கூட்டங்களைக் காண முடிந்தது என டிரம்ப் தெரிவித்தார்.

Wednesday, July 6, 2011

நுண்ணோக்கியும், தொலைநோக்கியும் பிறந்த கதை.!

தூரத்தில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவும் டெலஸ்கோப், 1608-ல் ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற டச்சுக்காரரால் உருவாக்கப்பட்டது. 1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலைநோக்கிகளும், பைனாகுலர் களும் இதன் வழி வந்தன. 18-ம் நூற்றாண்டில், கண்ணாடி அணிவதற்குப் பதில் சிறிய தொலைநோக்கியைச் சிலர் தூக்கித் திரிந்தனர்.
 

 நுண்ணிய பொருளை பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ரோஸ்கோப்) டச்சு கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென் 1590-ல் கண்டுபிடித்தார். கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க மைக்ரோஸ்கோப் போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்.

17-ம் நூற்றாண்டின் மத்தியில், டச்சு நாட்டுக் கண்ணாடிப்பொருள் தயாரிப்பாளரான அண்டன் லீவென்குக், மைக்ரோஸ்கோப்பில் பாக்டீரியாவையே பார்க்கும் அளவுக்கு மேம்படுத்தினார். ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார். இதே காலகட்டத்தில், பிரிட்டீஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக் `மைக்ரோகிராபியா’ என்ற நூலை வெளியிட்டார். அதில் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதன்பின் மைக்ரோஸ்கோப் பிரபலமானது. நுண்ணுயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதே முக்கியமான காரணம்.

ரைஸ் குக்கரிலும் மொபைல் ரீசார்ஜ் பண்ணலாம்

ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்துள்ள ‘குக்கர் சார்ஜர்’ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 
ஜப்பானின் ஒசாகா நகரை சேர்ந்த நிறுவனம் டி.இ.எஸ். நியூஎனர்ஜி. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வருகிறது. இதன் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு ‘தெர்மோ எலக்ட்ரிக் குக்பாட் சார்ஜர்’. பெயர்தான் மலைக்க வைக்கிறது.

ஆனால் இது டீ, வெந்நீர் போடுவது போன்ற சாதாரண பாத்திரம்தான். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்றவைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் வெளிவரும் நீராவி, பிரத்யேக அறைக்குள் செல்கிறது. அதில் இருக்கும் சிறிய ரக டர்பைன் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்உற்பத்தி தொடங்கியதும் சிறிய லைட் எரிகிறது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள யுஎஸ்பி போர்ட்டை செல்போனில் சொருகினால் சார்ஜ் ஏறத் தொடங்குகிறது.செல்போன் மட்டுமின்றி ஜிபிஎஸ் கருவிகள், எம்பி3 பிளேயரையும் இதன் மூலம் சார்ஜ் செய்ய முடியும். உணவையும் சூடாக்கிக் கொள்ள முடியும். இதன் விலை ரூ.13 ஆயிரம். தற்போது ஜப்பானில் பல வீடுகளில் இந்த வகை சார்ஜரை பார்க்க முடிகிறது. இதுபற்றி டிஇஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கசுஹிரோ புஜிடா கூறியதாவது: கடந்த மார்ச் 11-ம் தேதி ஜப்பானை உலுக்கிய பூகம்பம், சுனாமிதான் இந்த கண்டுபிடிப்புக்கு தூண்டுகோலாக இருந்தது. 
 
சுனாமி ஏற்பட்ட நேரத்தில் பல பகுதிகளில் மின்இணைப்பு முழுவதுமாக துண்டாகிவிட்டது. யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் உதவிக்கு அழைக்க முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலையை உண்டாக்கவே இதை கண்டு பிடித்துள்ளோம். ஜப்பான் மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு கசுஹிரோ கூறினார்.

Tuesday, June 21, 2011

படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான்

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு? என்று கேட்கின்றனர் மருத்துவர்கள்

நிம்மதியான உறக்கம்

நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது. உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்

பெண்களுக்கு அதிக உற்சாகம்

தாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.

மாயமாகும் கலோரிகள்

30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும். வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கற்பனைத் திறன்

தினமும் ஒரே உணவை சாப்பிட்டாலும் போரடிக்கும் அல்லவா! ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள்.அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும்.

படுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன?. ஆரோக்யமான உறவு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்கும்.

Thursday, June 16, 2011

இதையும் கொஞ்சம் படிங்க


அனலாக் (Analogue): எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக் கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட கடிகாரத்தின் முகப் பக்கத் தினையும், டிக் டிக் என ஒவ்வொரு விநாடியாக நகரும் விநாடி முள் கொண்ட கடிகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதலில் குறிப்பிட்டது அனலாக் சிக்னல் தருவதாகும். இரண்டாவது டிஜிட்டல் சிக்னல். இரண்டாவதாகச் சொன்னது, ஒவ்வொரு எண்ணாக, ஒரே மதிப்பில் மாறுகிறது.

ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன் படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதின் மூலம் சொல்கிறோம்.

பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல் களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம். 


Thursday, June 9, 2011

விமான விபத்தை தடுக்க சாப்ட்வேர், இந்திய விமான படை கண்டுபிடிப்பு




விமான விபத்துக்கள் ஏற்படும் காரணிகளை முன்கூட்டியே அறிந்து அதன்மூலம் விமானங்களை ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்கானபுதிய சாப்ட் வேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்திய விமானப்படை பிரிவைச் சேர்ந்த குழுவினர் இதற்கான சாப்ட்வேரை தயாரித்துள்ளனர். ஏர்மார்ஷல் ஏ.எஸ்.கார்னிக் ( ஆய்வு மற்றும் பாதுகாப்பு ) தலைமையிலான குழுவினர் இத்தகைய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். 
கடந்த 30 ஆண்டுகாலம் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு கணித்தின் மூலம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாப்ட் வேரை வெளியிட்டு பேசிய இந்திய விமானப்படையினர் இதன்மூலம் விமான விபத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புக்கள் உண்டாகும் என நம்பிக்கை தெரிவித்தனர்

Saturday, May 14, 2011

நினைத்தால் போதும். அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்.

யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களை மனதில் நினைத்தால் போதும். அவர்களுக்கு அழைப்பு சென்று விடும். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய முறையை கண்டறிந்துள்ளனர். 

இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது: 

மனதில் நினைப்பதை புரிந்து கொண்டு செயலாற்றும் கணணிகள் ஏற்கனவே உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை செல்போனிலும் பயன்படுத்தியுள்ளோம். மூளையில் ஏற்படும் அதிர்வுகளை இ.இ.ஜி கருவி மூலமாக பதிவு செய்து அதற்கேற்ப இது செயல்படுகிறது. 
இதற்காக புளூடூத் கருவியுடன் இணைந்த பட்டை ஒன்றை தலையில் அணிந்து கொள்ள வேண்டும். "யாருக்கு போன் செய்ய வேண்டும்" என்று மூளையில் ஏற்படும் நினைப்பு, அதிர்வு இ.இ.ஜி கருவி மூலம் பதிவு செய்யப்பட்டு இத்தகவல் புளூடூத்துக்கு அனுப்பப்படுகிறது. நினைத்த எண்ணுக்கு அழைப்பு போகும். 

நோக்கியா என்73 என்ற மாடல் செல்போனை வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு 70 முதல் 85 சதவீதம் வரை வெற்றி கிடைத்திருக்கிறது. பிரத்யேக பயிற்சி எடுத்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் நினைத்தவுடன் போன் செய்ய முடியும். 

நம்பர் அழுத்த முடியாத வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை கருத்தில் கொண்டு இதை கண்டுபிடித்துள்ளோம். இவ்வாறு ஜங் கூறினார்

Friday, April 29, 2011

புதிதாக 31 தொலைக்காட்சி சேனல்கள், 806 எப்.எம். ரேடியோ ?


நாட்டில் புதிதாக 806 எப்.எம். ரேடியோ துவங்க விரைவில் மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி நேற்று தெரிவித்தார். 
டெல்லியில் பிரஸ் கவுன்சில் சார்பில் கருத்து சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு நேற்று நடத்தப்பட்டது. இதில் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி பேசியதாவது:

நாட்டில் இது வரை 653 தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது. இன்னும் 31 புதிய சேனல்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றன. விரைவில் 283 நகரங்களில் மொத்தம் 806 புதிய எப்.எம். ரேடியோ துவங்குவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. 

உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது, மற்ற நாடுகளில் பத்திரிகை துறையிலும் சரிவு காணப்பட்டது. ஆனால், இந்தியாவில் பத்திரிகை துறை 6.2 சதவீதம் வளர்ச்சியடைந்தது. சமீப காலமாக, பத்திரிகைகள் வாசிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்த சில ஆண்டுகளில் செய்தித் தாள் வாசிப்போர் எண்ணிக்கை பல லட்சம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அம்பிகா சோனி பேசினார்.

Sunday, April 24, 2011

விஞ்ஞான கண்டுபிடிப்புகள்

(1) மின் குமிழைக் கண்டு பிடித்தவர்.

*தோமஸ் அல்வா எடிசன்

(2) கணணியைக் கண்டு பிடித்தவர்

*சாள்ஸ் பபேஜ்

(3) விமானத்தைக் கண்டு பிடித்தவர்

*ரைட் சகோதரர்கள்

(4) கொதி நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர்

*ஜேம்ஸ் வார்ட்

(5) உட்தகன எஞ்சினைக் கண்டு பிடித்தவர்

*நிக்கலஸ் ஏ. ஓட்டோ

(6) வானொலியைக் கண்டுபிடித்தவர்

*மார்க் கோணி

(7) தொ¨லைக்காட்சிப் பெட்டியை கண்டுபிடித்தவர்

*ஜோன் லொகி பெயார்.

(8) தொலைக்காட்டியை கண்டுபிடித்தவர்

*கலிலியோ கலிலி

(9) அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர்

*ஜோனல் டுடன் பார்க்

(10) ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர்

*சேர் ஐசன் நியுற்றன்

(11) முதல் முதல் உலகப் படத்தை வரைந்தவர்

*தொலமி

(12) முதல் முதலில் வின்வெளிக்கு சென்ற பெண்மணி

*கல்பனா செளலா

(13) முதன் முதலில் சந்திரனில் காலடி வைத்தவர்

*நீல் ஆம் ஸ்ரோங்

(14) தந்தி முறையைக் கண்டுபிடித்தவர்

*சாமு வேல் போர்ஸ்

(15) தொலை பேசியைக் கண்டுபிடித்தவர்

*கிரகாம் பெல்

(16) இனையத்தைக் கண்டு பிடித்தவர்

* டிம் பெர்னஸ் லீ

(17) தொலை நகலைக் கண்டுபிடித்தவர்

* ஆர்த்தர் கோர்ண்

(18) உயிரங்கிகளின் தோற்றப்பாட்டை கண்டுபிடித்தவர்

*சாள்ஸ் டார்வின்

(19) அணுக் கொள்கையைக் கண்டு பிடித்தவர்

*ஜோன் தாற்றன்



(20) முதன் முதலில் கற் பாதைகளை அறிமுகப் படுத்தியவர்

*ஜோன் மெகடம்

அதிவேக ‘ஹைப்பர்சொனிக்’ ஜெட் விமானங்கள் : நாஸா உருவாக்கம்


அதிவேக ‘ஹைப்பர்சொனிக்’ (Hypersonic Jets) ஜெட் விமானங்களை உருவாக்கவுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது.
‘ஹைப்பர்சொனிக்’ என்பது ஒலியின் வேகத்தினை விட 5 மடங்கு வேகமாகசெல்லுதலாகும். ஒலியின் வேகம் ஈரப்பதம் இல்லாத காற்றில் செக்கனுக்கு 343.2 மீட்டர்களாகும்.
விண்வெளிக்கென தயாரிக்கப்பட்ட போதிலும் இவ்விமானம் பயணிகள் விமான சேவைக்கு உபயோகப்படுத்தப்படுமாயின் நியூயோர்க்கிலிருந்து சிட்னிக்கு 2 1/2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
இதற்கென நாஸா அடுத்த 3 வருடங்களுக்கும் தலா 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஒதுக்கீடு செய்யவுள்ளது. _

100 மைல் தொலைவில் இருந்து எதிரிகளை தாக்கும் நவீன துப்பாக்கி: அமெரிக்கா கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் கப்பற்படையில் புதிய வகை துப்பாக்கி ஒன்று சேர்க்கப்பட இருக்கிறது. இதில் இருந்து வெளிப்படும் துப்பாக்கி குண்டு ஒலியை விட எட்டு மடங்கு வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 20 பவுண்டு எடை கொண்ட இந்த துப்பாக்கி குண்டு சிறிய வகை ராக்கெட் போல் காணப்படுகிறது.அமெரிக்காவின் விர்ஜினியாவில் அமைந்துள்ள கப்பற்படை மையத்தில் இந்த துப்பாக்கி சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்பட்டது. அப்போது அது 33 மெகா ஜூல்கள் அளவு ஆற்றலை வெளிப்படுத்தி சீறி பாய்ந்து சென்றது. (ஒரு மெகா ஜூல் என்பது ஒரு டன் எடையுள்ள கார், மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்வதற்கு சமம்). ஒரு சில நிமிடங்களிலேயே 100 மைல்கள் தூரம் செல்ல கூடிய இந்த ராக்கெட் மற்ற சாதாரண வகை துப்பாக்கிகளை விட அதிக துல்லியம் வாய்ந்தது.
தற்போது அமெரிக்காவின் கப்பற்படையில் 13 மைல்கள் தூரம் சென்று தாக்கும் திறன் வாய்ந்த துப்பாக்கிகளே உள்ளன. இவ்வகை துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்த பின் பாதுகாப்பான இடத்தில் இருந்தே எதிரி படைகளை தாக்க இயலும். அதற்கு இன்னும் 5 அல்லது 10 வருடங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. வரும் 2025-ஆம் ஆண்டில் இருந்து 6 நிமிடங்களில் 200 மைல்கள் சென்று தாக்கும் தன்மை வாய்ந்த நவீன தொழில்நுட்பம் வாய்ந்த துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்

புதிய கண்டுபிடிப்பு: பணத்தை கணக்கிட..!




எல்லாமே எளிதாக இருக்கவேண்டும் என்றும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் நினைக்காத மனிதன் இருக்கமாட்டான். அதுபோல மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சரியாக எண்ணிக் கொடுக்க வேண்டும் என்றும் வாங்கும் போது அதிக அளவு கிடைத்தால் சந்தோஷமே ஆனால் குறைந்த அளவு வாங்கிவிடக் கூடாது என்று ஓன்றுக்கு இரண்டு தடவையாக எண்ணி பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடையே உண்டு.


பணப் புழக்கம் அதிகரித்துவிட்ட தமிழ் நாட்டில் அதுவும் இந்த தேர்தல் சமயத்தில் ஐயாயிரம் பத்தாயிரம் என்றால் எப்படியாவது எண்ணி முடித்துவிடலாம். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் கச்சிதமாக எண்ணி முடிக்க என்ன வழி..?

வங்கிகளில் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். வங்கிகளுக்கோ, பெரிய நிறுவனங்களுக்கோ அதை வாங்கி வைப்பதில் பெரிய பிரச்னை எதுவுமில்லை.ஆனால், தனி நபர்களுக்கு அவ்வளவு பெரிய மெஷின்கள் தேவையில்லை அதற்காக. உங்களின் இந்தக் கவலையைப் போக்க வந்திருக்கிறது பணத்தை எண்ணும் "கவுண்ட்டிங் ரிங்" என்ற மோதிரம்.


இந்த கவுண்ட்டிங் ரிங்கை உங்கள் கட்டை விரலில் மோதிரம் போல மாட்டிக் கொள்ள வேண்டும். மோதிரத்தில் உள்ள பவர் பட்டனை ஆன் செய்து கொண்டால், அதன் டிஸ்பிளேயில் ஜீரோவைக் காட்டும். அடுத்து நீங்கள் பணத்தை வேகமாக மேலிருந்து கீழே அதன்மீது படுமாறு விட்டாலே போதும், மோதிரத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரப்பரானது இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை நோட்டுக்கள் மேலிருந்து கீழே போயிருக்கிறது என்பதை அரை நொடியில் கச்சிதமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். ஒன்றுக்கு இரண்டு முறை எண்ணிப் பார்த்து குறித்துக் கொண்ட பிறகு, டிஸ்பிளேயை மீண்டும் 'ரீசெட்’ செய்து கொள்ளலாம்

.இதில் சிறிய அளவிலான பேட்டரி ஒன்று இருக்கிறது. உங்கள் வேலை முடிந்த பிறகு பேட்டரியை ஆஃப் செய்து கொள்ளலாம் என்பதும் விசேஷமான அம்சம். பல ஊர்களுக்குச் சென்று பணம் வசூல் செய்து வருபவர்களுக்கு கவுண்ட்டிங் ரிங் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி தலைவர்களுக்கு மிகவும் இது உதவியாக இருக்குமென்பதால் இந்த பதிவை வெளிடுகிறேன். ஹீ....ஹீ...........ஹீ........

மக்களே இதுவும் உங்களுக்கு கடினம் என்றால் என்னிடம் அனுப்பி வையுங்கள் நான் உங்களுக்காக கணக்கிட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பேன். இதற்கெல்லாம் நீங்கள் சுவிட்ஸர்லாந்து போக வேண்டாம்.

உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் இலங்கையில் அறிமுகம்.


உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் சமீபத்தில் அபான்ஸ் நிறுவனத்தினால் இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த சலவை இயந்திரம் அதனை பயன்படுத்துபவர்களுக்கு இலகுவில் புரியக் கூடிய விதத்தில் உங்களுக்கு விளக்கம் கொடுக்கும். “சலவை இயந்திரமான என்னை நீங்கள் நான் சொல்வது போன்று இயக்கினால், உங்களுடைய உடைகள் மற்றும் ஏனைய துணிகளை தூய்மையாக சலவை செய்வதற்கு நான் உதவி செய்வேன்” என்று முதலில் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்.

“நீங்கள் எனது யோசனைகளை சரியான முறையில் நிறைவேற்றினால், என்னை இயக்குவதற்காக விரயம் செய்யப்படும் மின்சாரத்தையும் உங்களுக்கு சாதுரியமாக சிக்கனப்படுத்திக் கொள்ள முடியும்” என்று, சொல்லும் இந்த பேசும் சலவை இயந்திரம் தன்னை எவ்விதம் இயக்க வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களையும் படிப்படியாக ஒவ்வொன்றாக எடுத்துரைக்கும்.

நீங்கள் என்னை இயக்குவதில் ஏதாவது, சிறு தவறிழைத்து விட்டீர்கள் என்றாலும், அதனையும் நான் உடனடியாக திருத்துவதற்கான ஆலோசனைகளை உங்களுக்கு தருவேன் என்ற அந்த சலவை இயந்திரம் சொல்லும். தன்னிச்சையாக இயங்கும் இந்த சலவை இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 7 கிலோகிராம் நிறைவுடைய ஆடைகளையும், துணிகளையும் பளீச் என்று வெள்ளையாக்க கூடிய முறையில் சலவை செய்ய முடியும்.

ஆடைகளிலும், துணிகளிலுமுள்ள கறைகள், அழுக்குகளையும் ஒரே நொடிப்பொழுதில் இந்த சலவை இயந்திரம் துவைத்து சுத்தமாக்கி விடும். இதில் துணிகளை போடுவதற்கு முன்னர் சலவைத் தூளை இயந்திரம் கூறும் அளவுக்கு போட்டபின்னர், தண்ணீரை கலந்துவிட்டால், சலவை இயந்திரம் தண்ணீரை கொதிக்க வைத்து, துணிகளை சுத்தமாக சலவை செய்துவிடும்.

டேர்போடிறம் என்னும் தொழில்நுட்பத்தின் மூலமே இந்த பேசும் சலவை இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆடைகளையும், துணியையும் சுத்தமாக சலவை செய்த பின்னர், அவற்றில் ஈரலிப்பு தன்மையின்றி சூடேற்றி காயவைத்து, சலவை இயந்திரம் ஆடைகளை வெளியேற்றி விடும். பின்னர், அதன் பாவனையாளர்கள் ஆடைகளை ஸ்திரி செய்யும் பணியை மாத்திரமே கையால் செய்ய வேண்டியிருக்கும்.இந்த பேசும் சலவை இயந்திரம் இப்போது கொள்ளுப்பிட்டியில் இருக்கும் 
அபான்ஸ் காட்சிசாலைகளில் விற்பனைக்கு இருக்கிறது.

Friday, April 8, 2011

கணினியில் ஏற்படப் போகும் மாற்றம் – புதிய கண்டு பிடிப்பிற்கு நோபல் பரிசு


 பயன்படுத்தப்படுகிறது அதையும் விட நுண்ணிய அளவில் கார்பன் எனப்படும் கரியைப் பயன்படுத்த முடியும் இதைத் தங்கள் ஆராய்ச்சி மூலம் ருஷயாவில் பிறந்து பிற ஐரோப்பிய நாடுகளில் வாழும் இரு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள் இந்த ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது பரிசுத் தொகையை இருவரும் பங்கிட்டுக் கொள்வர்
அன்ட்ரீ ஐPம் (51) கான்ஸ்ட்டான்டின் நோவோசெலோவ் (36) இங்கிலாந்து மான்செஸ்ரர் பல்கலைக் கழக இயற்பியல் துறையில் ஆராய்சியாளர்களாகப் பணியாற்றுகின்றார் எழுதுகோலகப் பயனபடும் பென்சிலில் கிரபைற் எனப்படும் கரி பயன்படுத்தப்படுகிறது

பென்சிலில் உள்ள ஒரு மில்லி மீற்றர் கிரபைற்றை 30 லட்சம் இழைகளாகப்  பிரித்து கிரபீன் என்ற பெயரிடப்பட்ட புத்தம் புதிய கார்பன் பொருளை இவர்கள் ஆய்வு கூடத்தில் உருவாக்கியுள்ளனர் இந்தக் கிரபீனை கணினியில் பயன்படுத்தலாம் சிலிக்கனிலும் பார்க்க மெல்லிய இழைகளாக கிரபீனைத் தயாரிக்க முடியும் கிரபீன் மிகச் சிறந்த வெப்பக் கடத்தி அதை உலோகங்களுக்குப் பதிலாகத் தேவையான இடங்களில் பயன் படுத்தலாம்
அறிவியலில் கிரபீன் கண்டுபிடிப்பு மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது மின்னணுச் சாதனங்களில் கிரபீனின் பயன்பாடு எதிர்வரும் காலத்தில் உச்சம் அடையும் என்று கருதப்படுகிறது

Sunday, March 27, 2011

புதிய கண்டுபிடிப்பு: பணத்தை கணக்கிட....Simplified money counting machine


எல்லாமே எளிதாக இருக்கவேண்டும் என்றும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் நினைக்காத மனிதன் இருக்கமாட்டான். அதுபோல மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சரியாக எண்ணிக் கொடுக்க வேண்டும் என்றும் வாங்கும் போது அதிக அளவு கிடைத்தால் சந்தோஷமே ஆனால் குறைந்த அளவு வாங்கிவிடக் கூடாது என்று ஓன்றுக்கு இரண்டு தடவையாக எண்ணி பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. 
பணப் புழக்கம் அதிகரித்துவிட்ட தமிழ் நாட்டில் அதுவும் இந்த தேர்தல் சமயத்தில் ஐயாயிரம் பத்தாயிரம் என்றால் எப்படியாவது எண்ணி முடித்துவிடலாம். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் கச்சிதமாக எண்ணி முடிக்க என்ன வழி..?

வங்கிகளில் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். வங்கிகளுக்கோ, பெரிய நிறுவனங்களுக்கோ அதை வாங்கி வைப்பதில் பெரிய பிரச்னை எதுவுமில்லை.ஆனால், தனி நபர்களுக்கு அவ்வளவு பெரிய மெஷின்கள் தேவையில்லை அதற்காக. உங்களின் இந்தக் கவலையைப் போக்க வந்திருக்கிறது பணத்தை எண்ணும் "கவுண்ட்டிங் ரிங்" என்ற மோதிரம். 
இந்த கவுண்ட்டிங் ரிங்கை உங்கள் கட்டை விரலில் மோதிரம் போல மாட்டிக் கொள்ள வேண்டும். மோதிரத்தில் உள்ள பவர் பட்டனை ஆன் செய்து கொண்டால், அதன் டிஸ்பிளேயில் ஜீரோவைக் காட்டும். அடுத்து நீங்கள் பணத்தை வேகமாக மேலிருந்து கீழே அதன்மீது படுமாறு விட்டாலே போதும், மோதிரத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரப்பரானது இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை நோட்டுக்கள் மேலிருந்து கீழே போயிருக்கிறது என்பதை அரை நொடியில் கச்சிதமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். ஒன்றுக்கு இரண்டு முறை எண்ணிப் பார்த்து குறித்துக் கொண்ட பிறகு, டிஸ்பிளேயை மீண்டும் 'ரீசெட்’ செய்து கொள்ளலாம்

.இதில் சிறிய அளவிலான பேட்டரி ஒன்று இருக்கிறது. உங்கள் வேலை முடிந்த பிறகு பேட்டரியை ஆஃப் செய்து கொள்ளலாம் என்பதும் விசேஷமான அம்சம். பல ஊர்களுக்குச் சென்று பணம் வசூல் செய்து வருபவர்களுக்கு கவுண்ட்டிங் ரிங் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி தலைவர்களுக்கு மிகவும் இது உதவியாக இருக்குமென்பதால் இந்த பதிவை வெளிடுகிறேன். ஹீ....ஹீ...........ஹீ........

மக்களே இதுவும் உங்களுக்கு கடினம் என்றால் என்னிடம் அனுப்பி வையுங்கள் நான் உங்களுக்காக கணக்கிட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பேன். இதற்கெல்லாம் நீங்கள் சுவிட்ஸர்லாந்து போக வேண்டாம். 

Tuesday, March 8, 2011

மதுரை பேராசிரியர் கண்டுபிடித்த பிளாஸ்டிக் ரோட்டிற்கு அங்கீகாரம்: கெஜட்டில் வெளியீடு


 மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி, அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.

மறுபயன்பாட்டிற்கு வாரத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், டீ கப், தெர்மோகோல் ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தவும், இவற்றை எரிப்பதால் பூமி வெப்பமடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பேராசிரியர் வாசுதேவன், 2001ல் ஆய்வு மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக் ரோடு அமைக்கவும் முடிவு செய்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்காமல், இவற்றை ஜல்லிகளில் கலந்து "பிளாஸ்டிக் கோட்டிங்' கொடுத்து அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் தார்ரோடு அமைக்கவும் ஆய்வு செய்தார். பிளாஸ்டிக் தார்ரோடு: உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் தார் ரோடு, கோவில்பட்டியில் 2002ல் போடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடால் ஏற்படும் பயன்கள், தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 2002-03ல் தமிழக அரசு புத்தகமாக வெளியிட்டது. மத்திய அரசு 2002ல் பிளாஸ்டிக் ரோட்டிற்கு காப்புரிமை வழங்கியது. கிராம வளர்ச்சி துறைமூலம் தமிழகத்தில் 2000 கி.மீ., அதிகமான பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பை, கேரளா, சிம்லாவிலும் வாசுதேவன் மேற்பார்வையில் பிளாஸ்டிக் ரோடுகள் அமைக்கப்பட்டன.

காப்புரிமை: தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி, பிளாஸ்டிக் ரோடு அமைக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கேட்டது. ஆய்வு அறிக்கையை வாசுதேவன் சமர்ப்பித்தார். அது 2006ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடுக்கு தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு மத்திய அரசு 2006ல் காப்புரிமை வழங்கியது. 2002 முதல் 2008வரை இந்தியாவில் போடப்பட்ட பிளாஸ்டிக் ரோடுகளின் தன்மை, பயன்கள், தரம், உழைப்பு, சுற்றுச்சூழல் குறித்து ஆய்வுக்கு இரண்டாம் கட்டமாக 15 லட்சம் ரூபாய் வழங்கியதுடன், இவரது அறிக்கையை ஆய்வு செய்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் ரோடு அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரண ரோட்டிற்கும் பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள், உழைப்புகள் குறித்து (கைடு லைன்) மற்றொரு புத்தகம் வெளியிட்டது. இந்த புத்தகத்தில், இந்தியா முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ரோடுகள் பராமரிப்பு துறைகளுக்கும் அனுப்பப்பட்டு, அந்த புத்தகத்தில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் தரமானது, நீடித்து உழைக்கக்கூடியது என குறிப்பிட்டுள்ளது.

அங்கீகாரம்: மத்திய கிராம வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய ரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமங்களில் பிளாஸ்டிக் தார்ரோடுகள் அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்து கொடுத்து, அதற்கான கைடு லைன் வெளியிட்டது. அதில், பிளாஸ்டிக் தார்ரோடு அமைக்க விரும்பும் உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள், தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பினால், செலவில் பாதியை மானியமாக வழங்க இருப்பதாகவும், அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற பேராசிரியர் வாசுதேவனை அணுகலாம் என கைடு குறிப்பிடப்பட்டிருந்து. சிம்லாவில் பிளாஸ்டிக் ரோடு: அதன்பின் சிம்லாவில் வாசுதேவன் மேற்பார்வையில் 150 கீ.மீ,. ரோடு அமைக்கப்பட்டது. "பிளாஸ்டிக் மறு சுழற்சி கமிட்டியில் டேட்டா புத்தகம் தயாரிக்கும் உறுப்பினராக வாசுதேவனை, கேரள அரசு சேர்த்தது.

தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, பிப்.,4ல் வெளியிட்டுள்ள அரசு கெஜட்டில், பிளாஸ்டிக் ரோடு போட தடை இல்லை என்றும், இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலைகள் அமைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

பேராசிரியர் வாசுதேவன் கூறியதாவது: இது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரண ரோட்டை காட்டிலும், ஐந்து ஆண்டுகள் கூடுதலாக உழைக்கும். மழைநீர் ஊடுருவி சாலைகள் பாதிப்படைவதில்லை. தேய்மானம் மிக குறைவு. பராமரிப்பு செலவுகள் கிடையாது. தார் பயன்பாடு 10 சதவீதம் குறைவு. ஒரு கி.மீ.,க்கு 50 ஆயிரம்வரை செலவு மிச்சம். கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்படும் மாசு தவிர்க்கப்படும். தட்பவெட்ப நிலை சீராகும். பிளாஸ்டிக்கை பிரித்துவிடுவதால், குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது எளிது. இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ரோடு அமைத்தால், பிளாஸ்டிக்கால் இவ்வுலகிற்கு ஏற்பட்டுவரும் ஆபத்தை நீக்கலாம்.பிளாஸ்டிக் ரோடு அமைக்க விரும்புவோர் 0452 248 2240 அல்லது 94864 86728 ல் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, March 5, 2011

2010ன் புதிய கண்டுபிடிப்பு. ஆறுவகை 'ஹார்ட் அட்டாக்!'


மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

ஆறு வகை மாரடைப்புமாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது; இவற்றில், ஐந்து, ஆறாவது வகை மாரடைப்புகளுக்கு காரணம், ஸ்டென்ட்டையும், பைபாஸ் கிரங்குகளையும் சரியாக பாதுகாக்காததால் தான். பெரும்பாலான சர்ஜன்களும், மருத்துவர்களும் வேறு மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவோர் தான்; இவர்களுக்கு மொழி சரியாக தெரியாது, நோயாளிகளிடம் பேசும் நேரம் குறைவு, நிறைய நோயாளிகளை ஸ்டென்ட், பைபாஸ் செய்து நிறைய எண்ணிக்கையைக் கட்டி பெரும் பணம் பார்க்கும் நோக்கமாகிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை போல மருத்துவர், நோயாளி இவர்களின் ஆலோசனை பல மணி நேரம் ஆகிறது. இதனால், நோயாளிகள் எது எப்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்கின்றனர்.

முதல் வகை மாரடைப்பு
முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்டக்கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது; இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர்; இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.
கோல்டன் ஹவர்முதல் 2 மணி நேரம் "கோல் டன் ஹவர்' என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.
இரண்டாவது வகை
இந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது; இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும்; ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால், கரோனரி ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.
கள்ளக்குறிச்சி பெண்
என்னிடம் சிகிச்சைப் பெற்ற பெண்மணி வயது 42, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர். ஒரு மாதம் முன், ஆஞ்சியோ கிராம் செய்துப் பார்த்ததில் ஆஞ்சியோ கிராமில் எந்த அடைப்பும் இல்லை. மறுநாள் ஊர் திரும்பும் வழியில் மூச்சிரைப்பு படப்படப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார். இதற்கு காரணம், ரத்த நாள சுருக்கம், கண்ணுக்கு தெரியாத மைக்கிராஸ் கோப் இதயத்தினுள் இருக்கும் நாளங்களில் சுருக்கம் அடைப்பும், இஸ்மியாவும், அர்த்திமியாவும் தான் காரணம்.
கூலித்தொழிலாளிஇதே போல இருபது ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக இருந்த போது, 20 வயது திருமணமான கூலித் தொழிலாளி பெண் சேலத்தைச் சேர்ந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தேன். இதை மருத்துவ சங்கத்தில் பேசும் போது, சில மருத்துவர் சிரித்தனர். இந்த செய்தியை மக்களுக்கு கொண்டுப் போனேன். இன்று ரத்த நாளத்தின் சிறியக் குழாய்கள் ஸ்பெசம் என்ற சுருக்கம் என்பது உலகுக்கு தெரிய வந்துள்ளது.
மூன்றாவது வகைநீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.
நான்காவது வகை
மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் இது, இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்துவிடலாம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக்கும் வசதிகளும் உள்ளன.
ஐந்தாவது வகை
ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும். அதாவது ஸ்டென்ட் வைத்த டாக்டர் அல்லது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகவும் தெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, ஸ்டென்டின் இன்றைய நிலை. அதில், கொழுப்பு படிந்துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணிப்பில் பரிசோதனைகள் செய்து காத்துக் கொள்ள வேண்டும். ஸ்டென்ட் சிகிச்சை செய்து, இருபது ஆண்டுகள் என்னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு. இரண்டு ஆண்டுகளில் ஸ்டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலாமவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்; இரண்டாமவர், தான் தோன்றிய முறையில் வாழ்பவர்; ஸ்டென்ட் முழுவதும் மூடினால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.
ஆறாவது வகை
மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும்.
என்ன செய்யணும்?
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித ஒழுக்கம், மது மங்கை, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்கநெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
பேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம், 98401 60433.


"பளீச்' அறிகுறிகள்* மார்பின் மையப்பகுதியில் வலி ஆரம்பமாகும்; அல்லது, இடது பக்கம் வலி ஏற்படும். அந்த வலி, இடது கையில் பரவலாம்.
* வயிற்றின் மேல் பகுதியில் ஒரு வித எரிச்சல் இருக்கும். இதைத்தான் பலரும், காஸ் டிரபிள் என்று நினைத்து , டைஜின் போட்டு ஏமாந்து விடுகின்றனர்.
* திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும்; திணறலும் இருக்கும். புழுக்கம் தெரியும்.
* உடலில் வியர்வை பெருக்கெடுக்கும்; அதுவும் குளிர்ந்த வியர்வையாக இருக்கும்.
தவிர்க்கலாம் நிச்சயம்என்ன தான் அறிகுறிகள் இருந்தாலும், அதை நோயாளியால் தான் கண்டுபிடிக்க முடியும். சில சமயம் இந்த அறிகுறிகள் இல்லாமல் கூட பிரச்னை வரலாம்.
அதை தவிர்க்க முடியும்... அதற்கு...
* சிகரெட் பிடிப்பதை விட வேண்டும்.
* உடல் எடையை அதிகரிக்க விடக்கூடாது.
* சர்க்கரை , ரத்த அழுத்தம் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கொழுப்பு, பால், கிரீம், அசைவ உணவை கைவிட வேண்டும்.
டென்ஷன் "நோ' டென்ஷன் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்; யோகா, தியானம் செய்தால் எந்த டென்ஷனும் போயேபோச்சு தான். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும் மிகவும் நல்லது; கலோரி குறைந்து, உடல் ஒபிசிட்டி இல்லாமல் "ஸ்லிம்'மாக இருக்கும்.

Sunday, February 13, 2011

தொலைந்து போன பைலை கண்டுபிடிப்பது எப்படி?


இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.
1. உங்களுக்கு அந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது *.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டுமானாலும். இருக்கலாம். பைலை முதல் பிரிவில் தரவும்.
2. பெயரும் தெரியவில்லை ; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.
3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது. என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look IN : என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம். எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.
4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனை பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்.

இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.

Friday, January 28, 2011

இண்டநெட் இணைப்பில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டு சரிசெய்ய


இணைய இணைப்பிலோ அல்லது இணைய சேவையிலோ பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். நம்மை அறியாமலையே இணைய  அமைப்பில்(Setting) ஏதேனும் மாற்றங்களை செய்யக்கூடும் அதுபோன்ற சூழ்நிலையில் இணைய இணைப்பு நமக்கு கிடைக்காது, அல்லது இணைய இணைப்பில் ஏதேனும் சிறு தவறுகள் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கம் மட்டும் திறக்காது, அது போன்ற நிலையில் எந்த இடத்தில் தவறு நடந்தது என கனிக்க முடியும் ஆனால் அந்த தவறினை எவ்வாறு சரிசெய்வது என்பது மட்டும் புரியாது, இதுபோன்ற கோளாருகளை சமாளிக்க ஒரு மென்பொருள் உள்ளது.


மென்பொருளை தரவிறக்க: சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொண்டு, அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் மென்பொருளின்  (CIntRep.exe) மீது வலதுகிளிக் செய்து Run as administrator என்பதை தேர்வு செய்யவும் தற்போது அப்ளிகேஷன் ஒப்பன் ஆகும். அதில் உங்களுடைய Problem தை தேர்வு செய்து GO பட்டனை அழுத்தவும். தற்போது சிஸ்ட்டம் ரீஸ்ட்டார்ட் ஆகும்.

தற்போது இணையத்தில் உலவுங்கள் இணையமானது சரியாக வேலை செய்யும், நெட்வொர்க் தொடர்பான எந்தஒரு சிக்கல்கள் அனைதும் தற்போது சரியாகிவிடும். இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.