அனலாக் (Analogue): எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக் கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட கடிகாரத்தின் முகப் பக்கத் தினையும், டிக் டிக் என ஒவ்வொரு விநாடியாக நகரும் விநாடி முள் கொண்ட கடிகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதலில் குறிப்பிட்டது அனலாக் சிக்னல் தருவதாகும். இரண்டாவது டிஜிட்டல் சிக்னல். இரண்டாவதாகச் சொன்னது, ஒவ்வொரு எண்ணாக, ஒரே மதிப்பில் மாறுகிறது.
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன் படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதின் மூலம் சொல்கிறோம்.
பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல் களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம்.
|
No comments:
Post a Comment