பொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் நாளடைவில் வயோதிகனை போல் மெதுவாக இயங்கி நம்மை சோதிக்கும் .
சிலரது கணினி பூட் ஆவதற்குள் காலை சிற்றுண்டியை முடித்துவிடலாம்.சிலரது கணினி SHUT DOWN ஆவதற்கு மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளும் .இடையில் கணினியை RESTART செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்குள் தூக்கம் வந்துவிடும் .
இதுபோல இல்லாமல் நாம் கணினியை வாங்கியபொழுது என்ன வேகத்தில் இயங்கியதோ அதே வேகத்தில் தொடர்ந்து இயங்க ஒரு மென்பொருள் உள்ளது .
WIN ASO REGISTRY OPTIMIZER என்னும் மென்பொருளில் உங்கள் கணினியை வேகமாகவும் பிழையின்றியும் செயல்பட வைக்க பல்வேறு கருவிகள் உள்ளன.மிகவும் மெதுவாக இயங்கும் ஒரு பழைய கணினியில் இதை நிறுவினால் நிறைய வித்தியாசத்தை உணரலாம் .
ஒண்ணே ஒண்ண சொல்ல மறந்துட்டேன் .இதோட TRIAL VERSION தான் இலவசமாக கிடைக்கிறது .FULL VERSION தேவை படுபவர்கள் அதற்குரிய வழிகளில் பெற்றுக்கொள்ளலாம் .
இந்த மென்பொருளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் கண்டிப்பாக நிரந்தரமாக வைத்துக்கொள்வார்கள் .TRIAL VERSION டவுன்லோடு செய்ய இங்கேகிளிக் செய்யவும் .
|
No comments:
Post a Comment