Wednesday, April 27, 2011

குறட்டை விடுவதை தவிர்க்கும் புதிய கருவி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம். குறட்டை அவரவர்களுக்கு தகுந்தபடி இருக்கும்.

உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்ல வேண்டி வரும்.

இந்த நிலையை போக்க பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது.

லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. அப்போது இதயத்திலிருந்து வெளியேறும் காற்று எந்த தடையும் இன்றி வெளியேறுகிறது.

இதனால் குறட்டை நின்று போகும். இதில் பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் மூலம் நாம் படுக்கைக்கு செல்லும் போது ஓன் செய்தும், எழுந்திருக்கும் போது ஓப் செய்தும் வைத்துக் கொள்ளலாம். இந்த சாதனம் தற்போது பரிசோதனையில் இருந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால் தூக்கம் கெட்டு தவிக்கும் மக்கள் பயன் பெறுவர்.

பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸ்களைத் தடுக்க



தற்பொழுது பென்டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.

இதனை தடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. USB Firewall எனப்படும் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

அதன் பின் எந்தவொரு பென்ட்ரைவையும் கணணியுடன் இணைக்கும் பொழுது, இந்த மென்பொருளானது அதுவாகவே பென்ட்ரைவை ஸ்கேன் செய்து விடும். கணணியில் நுழைய முயற்சிக்கும் கோப்புகளை தடுத்து நிறுத்தும். (முக்கியமாக Autorun.inf).


உங்கள் கணணியில் வேறு ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவப்பட்டிருந்தாலும் அதனோடு இதையும் உபயோகப்படுத்தலாம்.

தரவிறக்க சுட்டி

அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்


அனைவருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்றும், மற்றவர்களை அது கவர கூடியதாய் அமைய வேண்டும் என்றும் எண்ணம் உண்டு.

புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில் வடிவமைப்பதற்கு ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. LOONA PIX.COM: இதில் புகைப்படங்களை பல வழிகளில் வடிவமைக்கலாம். போட்டோ பிரேம், அனிமேஷன், காலண்டர் பின்னணியிலும் வடிவமைக்கலாம்.

இத்தளத்தில் வடிவமைக்கப்படும் புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இத்தளத்தில் இருந்தே அனுப்பலாம்.

இணையதள முகவரி

2.LUNA PIC: இந்த தளமானது ஒரு ஓன்லைன் போட்டோ எடிடர் ஆக காணப்படுகிறது. இத்தளத்தில் Edit Your Profile Picture For Face Book, Animation, Rotating Cube, Add Text இவற்றுடன் பெயிண்டிங் வசதியும் உண்டு.

இணையதள முகவரி

3. FLAUNT R: இந்த தளத்தில் 1000க்கு மேற்பட்ட போட்டோ அனிமேஷன் உள்ளது. இந்த தளத்தில் இருந்து 30க்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான Profile புகைப்படத்தை வடிவமைக்க முடியும்.

இணையதள முகவரி

ஆடியோ கோப்புகளை பிரித்து பின் ஒன்றிணைக்க


பெரும்பாலானோர்கள் ஒரு பாடலை விரும்பி கேட்போம். ஆனால் பாடல் முழுவதையும் கேட்க மாட்டோம். ஒரு குறிப்பிட்ட ஒருசில வரிகளை மட்டுமே ரசித்து கேட்போம்.

அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கேட்போம். கைத்தொலைபேசியில் ரிங்டோன் அமைக்க வேண்டுமெனில் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அமைத்துக் கொள்வோம்.

இவ்வாறு ஒரு பாடலில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டுமெனில், நாம் ஒரு ஓடியோ கட்டரின் உதவியை நாட வேண்டும். அந்த வகையில் உள்ள மென்பொருள் தான் Weeny Free Audio Cutter.

இந்த மென்பொருள் மூலமாக எளிமையான முறையில் ஆடியோவினை பிரித்துக் கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் ஆடியோ கோப்புகளை பிரித்த பின் ஒன்றிணைக்கவும் முடியும்.

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் கணணியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

இதில் Cut Audio, Merge Audio என்ற தேர்வினை உங்கள் விருப்பபடி தெரிவு செய்து கொள்ளவும். பின் ஓடியோ கோப்பை உள்ளிட்டு வேண்டியபடி உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். எந்த அளவுடைய ஓடியோ கோப்புகளையும் ஆதரிக்கும் தன்மை இந்த மென்பொருளுக்கு உண்டு.

தரவிறக்க சுட்டி

இருமல் இருப்பதை தொலைபேசியின் மூலம் கண்டறியலாம்: ஆய்வாளர்களின் புதிய சாதனை







சளி அல்லது வறட்சி ஏற்படுவதை தொலைபேசி மூலம் கண்டறியும் மென்பொருள் கருவியை ஜேர்மனியை சேர்ந்த பிரான்கோபர் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிய கருவி மூலம் ஒரு நபருக்கு ஏற்பட்டுள்ள இருமல் குறித்த விவரங்களை அறியலாம் என கூறப்பட்டாலும், மருத்துவ சமூகத்தினர் இதன் சேவை குறித்து ஐயம் எழுப்பியுள்ளனர்.

ஜேர்மனியின் ஓல்டன்பர்க் நகரில் உள்ள ஆய்வாளர்கள் இக்கருவியை கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மனியில் முதல் தானியங்கி இருமல் கண்டறியும் சேவையாக இந்த புது கண்டுபிடிப்பு உள்ளது. ஆய்வாளர் கோட்சும், அவரது குழுவினரும் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வை தொடர்ந்து இந்த புதிய மென்பொருள் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.


இதற்காக மக்கள் கூட்டம் நிறைந்த ஹம்பர்க் மற்றும் ஓல்டன்பர்க் வீதிகளில் சென்றவர்களின் மாதிரிகளை பதிவு செய்திருந்தார். இந்த புதிய மென்பொருள் கருவி மூலம் 80 சதவீத முடிவுகள் சரியானவையாக உள்ளன என்று கோட்ஸ் தெரிவித்தார். தினமும் 200 அழைப்புகள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.