Wednesday, January 12, 2011

ட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி

விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.

முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer

இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.

அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்

விலை உயர்ந்த வெங்காயம் பற்றி சில செய்திகள்

உலகத்தில் இன்று உபயோகத்திலிருக்கும் காய்கறிகளிலேயே மிகவும் பழமையானதும , விலை உயர்ந்ததும்  வெங்காயம். வெங்காய உற்பத்தியில் இந்தியா,மலேசியா,பர்மா,சைனா,எகிப்து மற்றும் பல ஆப்ரிக்க நாடுகளும் முன்னணியில் உள்ளன.வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.இந்தியாவில் சின்ன வெங்காயம்(சாம்பார் வெங்காயம்),பெரிய வெங்காயம்(பெல்லாரி வெங்காயம்) என இரண்டு வகைகள் மிகவும் பிரபலமானவை

100 கிராம் வெங்காயத்தில் உள்ள சத்துக்கள்:

நீர்ச்சத்து-86.6 கிராம்,
புரதம்-12 கிராம்,
கொழுப்பு-0.1கிராம்,
மாவுச்சத்து-11.1 கிராம்,
நார்ச்சத்து-0.6 கிராம்,
தாதுக்கள்-0.4கிராம்,
கால்சியம்-47மில்லி கிராம்,
பாஸ்பரஸ்-50 மி.கிராம்,
வைட்டமின் சி-11 மி.கிராம்,
இரும்புச்சத்து-0.7  மி.கிராம்,
பி.காம்ப்ளக்ஸ்-சிறிய அளவு.

பாதுகாத்தல்:

நன்கு காய்ந்த வெங்காயம் 3 முதல் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.குளிர்பதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.வினிகரில் ஊறவைத்த வெங்காயம் 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உள்ளது என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.வெங்காயம் தொடர்ந்து உண்ணும் போது ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு குறைவதோடு ரத்தத்தின் உறைதன்மையும்,ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.தினமும் 100 கிராம் வெங்காயம் தொடர்ந்து உண்டுவந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.நுரையீரல் நோய்கள்,சிறுநீரக நோய்கள்,மூலநோய்,புற்றுநோய் எதிர்ப்பு,மன அமைதி ஆகியவற்றிற்கு வெங்காயம் மிகவும் சிறந்தது

உங்கள் "பயோடேட்டா'வை பார்வையிட்டால் பணம்

இணையதளத்தில் வேலைக்கு விண்ணப்போரின் முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை நிறுவனங்கள் பார்வையிட்டால் அதன் அடிப்படையில் பணம் வழங்கப்படும்.

ஸ்ரீப்ண்ஸ்ரீந்த்ர்க்ஷள்.ஸ்ரீர்ம் எனும் இணையதளம் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இது பாரத் மேட்ரிமோனியல் நிறுவனத்தின் அங்கமாகும்.

ஒரு நிறுவனம் தங்களிடம் உள்ள வேலை வாய்ப்புகளை இந்த இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம். இதில் வேலை தேடுவோரின் பயோடேட்டாவும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ஏற்கெனவே இந்த இணையதளத்தில் பதிவு செய்தவர்களின் பயோடேட்டாவை ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பார்வையிட்டு, அதில் யாரையாவது வேலைக்காக தொடர்பு கொண்டால், அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கிளிக் ஜாப்ஸ் எனும் இணையதளத்துக்கு சென்று சேரும்.

அதிலிருந்து 50 சதவீதம் பணம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரரை சென்று சேரும். நம் நண்பர்கள் யாருக்காவது இந்த இணையதளத்தை பரிந்துரை செய்து அந்த நண்பர் விண்ணப்பித்தால் 10 சதவீதம், நண்பரின் பயோடேட்டா நிறுவனங்களால் பார்வையிடப்பட்டால் 5 சதவீதம் பணம் கொடுக்கப்படும்.

இவ்வாறு கொடுக்கப்படும் பணத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை வழங்கும் திட்டமும் அந்த இணையதளத்தில் உள்ளது.

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் 12 அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இந்த அறிவுரைகளை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து வீடு, வீடாக கொடுத்து பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


குற்ற தடுப்பு நடவடிக்கைகள்

சென்னை நகரில் குற்றங்களை தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் சேகர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. யாராவது மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிடுகிறார்கள்.

தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ள கமிஷனர் சேகரின் அறிவுரைப்படி, 12 ஆலோசனைகளை சென்னை நகர போலீசார் வெளியிட்டுள்ளனர்.

12 அறிவுரைகள்

இந்த 12 அறிவுரைகளையும் துண்டு பிரசுரமாக அச்சடித்து சென்னை நகரில் வீடு, வீடாக விநியோகிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசார் வழங்கியுள்ள 12 அறிவுரைகள் விவரம் வருமாறு:-

* வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.

* வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக `லென்ஸ்' பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.

* ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள். தங்கள் கணவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்பன போன்ற விஷயங்களையும், கணவர் வெளிïர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக்கூடாது.

தற்காப்பு கலை

* வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற கலைகளை கற்றுக்கொண்டால் நல்லது. திடீரென்று கொள்ளையர்களாக மாறும் நண்பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். நகைகளை கொடுக்கமாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, கொள்ளையர்களிடம் புத்திசாலித்தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம். அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.

* அறிமுகம் இல்லாத நபர்களையோ, அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பி விடுங்கள்.

* வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.

முதியவர்கள்

* வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை வங்கி லாக்கரில் கண்டிப்பாக வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.

* அடுக்குமாடிகள் மற்றும் பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்போடு பழக்கம் வைத்துக்கொண்டால் ஆபத்து நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.

ஜோதிடர்கள்

* ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை, தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின் பெயர்கள், அவர்களது முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே காரியத்தை முடித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிடுவது சால சிறந்தது.

டெலிபோன் எண்கள்

* அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

* ஒவ்வொரு வீட்டிலும் அருகிலுள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண், தீயணைப்புத்துறை டெலிபோன் எண், அவசர போலீஸ் தொலைபேசி எண், அல்லது தங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது டெலிபோன் எண்களை ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருக்கலாம். ஆபத்து காலங்களில் இந்த டெலிபோன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்பதற்கு வசதியாக இருக்கும்.

* இதேபோல, போலீசார் சமுதாயத்தில் நடக்கும் மற்ற குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளையும் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க உள்ளனர்.

டவுன்லோட் ஆகும் பைலின் பார்மட்டை காண

இணையதளம் நான் உபயோகிக்கும் போது சில சமயம் நமக்குத் தேவைப்படும் தகவல்கள் ஒரு பைலில் இருப்பதாக தெரியவரும் .அந்த பைலை இறக்கிப் படிக்க லிங்க் ஒன்றும் அங்கு தரப்பட்டிருக்கும்.உடனே அதனை கிளிக் செய்து டவுன்லோடு செய்வோம்.டவுன்லோடு முடிந்த பிறகுதான் அந்த பைல் நாம் எதிர் பாராத பார்மட்டில் இருப்பதை அறிவோம்.சில சமயங்களில் அந்த பைல் உங்கள் ஆப்பரேடிங் சிஸ்டத்தால் படிக்க இயலாத பைலாக கூட இருக்கலாம்.ஆகையால் டவுண்லோடு செய்யும் முன்னரே அந்த பைலின் பார்மட் குறித்து ஒரு அலெர்ட் மெசேஜ் வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா!


மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் இதற்கென ஒரு ஆட்-ஆன் புரோகிராம் ஒன்றை கொண்டுள்ளது.இதனை பெற்று இன்ஸ்டால் செய்துவிட்டால் ,வெப்சைட்டில் லிங்க் அருகே கர்சரை கொண்டு சென்றால் அது பைலின் எக்ஸ்டென்ஷனுக்கேற்ப தன் வடிவை மாற்றுகிறது .இதன் மூலம் பைல் வகையை அறிந்து கொண்டு அந்த பைல் வேண்டுமா என முடிவு செய்யலாம்.

இதனைப் பெற பின்வருமாறு செயல்படவும்.

1.Tools கிளிக் செய்து AddOns தேர்ந்தெடுக்கவும்.

2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.இதில் "Get AddOns" என்னும் பட்டனைக் கிளிக் செய்யவும்.

3. அங்கு உள்ள சர்ச் கட்டத்தில் link alert என டைப் செய்து பின் மேக்னியை கிளாஸ் பிரஸ் செய்திடவும்.
4. உடன் Link Alert எக்ஸ்டென்சன் காட்டப்படும்.அதில் கிடைக்கும் "Add to Firefox" என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.

5. உடன் "software Insllation" என்னும் டயலாக் பாக்ஸ் தோன்றும்.அதில் "install Now" என்னும் பட்டன் கிடைத்தவுடன் கிளிக் செய்திடவும்.

6. இந்த ஆட்-ஆன் புரோகிராம் இன்ஸ்டால் செய்தவுடன் "Restart Firefox" என்னும் பட்டனைக் கிளிக் செய்க.நீங்கள் ஏற்கனவே அதனை செட் செய்தபடி பயர்பாக்
ஸ்சரை ஏற்கனவே குறிக்கப்பட்ட பைல் வகை மீது கொண்டு சென்றால் ,லிங்க் அலெர்ட் அந்த கர்சரை அந்த பைல் வகை குறித்து உங்களுக்கு எச்சரிக்கை செய்தி கொடுக்கும் வகையில் மாற்றி கட்டும்.இதனை சோதனை செய்து பார்க்க விரும்புபர்களுக்காக http:///linkalert.googlepages.com/testpage.htm என்ற முகவரியில் இந்த ஆட்-ஆன் புரோகிராமை தயாரித்தவர் ஒரு சோதனைப் பக்கத்தினை வைத்துள்ளார்.இந்த லிங்க் அலெர்ட் புர்கிரமினை இன்னும் உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப வடிவமைக்கலாம்.பல்வேறு ஆப்ஷன்கள் இதற்கெனத் தரப்பட்டுள்ளன.

லிங்க் அலெர்ட் புரோகிராமின் ஆப்ஷன்களை மாற்ற:
1. Tools கிளிக் செய்து AddOns தேர்ந்தெடுக்கவும்.

2. இங்கு AddOnsடயலாக் பாக்ஸ் கிடைக்கும்.இதில் "Extensions" என்னும் பட்டனை கிளில் செய்திடவும். 3. பின் "link Alert" என்பதின் கீழ் "Options" என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். 4. உடன் "Link Alert Options" டயலாக் பாக்ஸ் தோன்றும்.இதில் "Basic" என்னும் பட்டனை அழுத்தி மவுஸ் பாயிண்டரை முன்னரே வரையறை செய்த பைல் வகைகளுக்கு மாற்றவும் மாற்றாமல் இருக்கவும் செய்திடலாம். இதில் உள்ள "Advanced" பட்டன் நாம் உருவாக்கும் பைல் வகைகளை இந்த பட்டியலில் இணைக்க வழி செய்திடுகிறது.இங்கு கிடைக்கும் "Display" பட்டன் டிஸ்பிளே வகைகளில் மாற்றத்தினை ஏற்படுத்த வழி தருகிறது.

வேலைத்தேடிக் கொண்டிருக்கும் பெண்களே.. உஷார்.


  நீங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்ணா?அல்லது உங்களுக்கு இப்போது தான் படிப்பை முடித்துள்ள மகள் இருக்கிறாரா?..அல்லது வேலை தேடிக்கொண்டிருக்கும் உங்களின்/நண்பரின் சகோதரி இருக்கிறாரா? எனில் நீங்கள் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய பதிவு இது...

                               சில நாட்களுக்கு முன் என்னுடன் படித்த ஒரு தோழி அவளுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதை சொல்ல போன் செய்திருந்தாள்.வழக்கமான அரட்டைக்கு நடுவே அவள் கூறிய ஒர் விஷயம்..எனக்கு எதிர்பாராதது..
விஷயம் இதுதான்..

                               தோழியின் தங்கை..இப்போது தான் இஞ்சினியரிங் படித்து முடித்தார் (அதுவும் என்னோட துறை பிரிவு தான்).[நாங்கள் படிக்கும் போது..பத்துபதினைந்து பேராய்ஒன்றாக காலேஜ் கட்டடித்து,படத்துக்கு போவதெல்லாம் தெரிந்தும் தோழியை வீட்டில் மாட்டிவிடாத(விட தெரியாத) நல்ல பெண்.நான் கடைசி பத்து நாளில் படிச்சுதான், கல்லூரி முதல் மதிப்பெண் வாங்குவதை, எல்லாரும் சொல்லியும் நம்பாமல் தெனமும் வீட்டுக்கு வந்து ரெய்டு செஞ்ச புண்ணியவதி..

                                வேலைக்கு காத்திருக்கும் அவளுக்கு ஒரு போன் வந்தது.ஏதோ லோக்கல் பூத்துலருந்து ..கூப்பிட்டவன் " நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது,ஆனா நீங்க யாருன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.".என்று சொல்லி அவளது மதிப்பெண் ,முதல்கொண்டு கூறவும்,இவளும் சரி சரி யாரோ தெரிஞ்சவங்கதான் விளையாடுராய்ங்கன்னு.. ஜாலியா..அசால்டா பேசியிருக்கா.முடிவுல.. "நீங்க யாருன்னு இன்னும் தெரியல்லய்யே"ன்னு..கேட்டதுக்கு "கண்டுபிடி பாக்கலாம்"ன்னு வச்சுட்டான்.

                            இத்தோட விடலை அந்த "விடலை"ப் பையன்.. அடிக்கடி போன் செய்ய ஆரம்பித்தான்.இரவிலும் கூட..சில நாள்களில் பேச்சும் வேறு ரீதியில மாறவே,மிரண்டு போன தோழியின் தங்கை,வேறு எண்ணை மாற்றிவிட்டாள்.அப்பவும் அவன் விடவில்லை.. அவளோட வீட்டு எண்ணுக்கே போன் போட ஆரம்பித்து விட்டான்."நான் அந்த பார்க்கில் காத்திருப்பேன்.நீ வரவில்லை என்றால்.நாம ஜாலியா பேசனத எல்லாருக்கும் மொபைல்ல அனுப்பிச்சுடுவேன்"னு மெரட்டியிருக்கான்.முதன் முறையா..பயந்து போன அவள் வீட்டுலயே முடங்கி தனிமையில் அழுதிருக்கிறாள் அந்த சின்னப்பெண்.

                               வழக்கத்துக்கு மாறா அடிக்கடி வீட்டுல போன் வர்ரதும் யாராவது எடுத்தா கட் ஆவதும்,கலகலப்பான தங்கையின் நடவடிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றமும் தோழிக்கு சந்தேகத்தை உண்டாக்க..பக்குவமாய் விசாரித்தபோதுதான்.. அழுகையோடு விஷயத்தை கூறியிருக்கிறாள்.அதிர்ச்சியடைந்த தோழி.."கவலைப்படாதேம்மா..உன்னை பத்தி எங்களுக்கு தெரியும்".இதை சரிப்படுத்திடலாமின்னு ஆறுதல் கூறியிருக்கிறார். தன் பெற்றோரிடம் பக்குவமாக எடுத்துக் கூற.. அவர்களும் நிலமையை புரிந்துக்கொண்டு மகளுக்கு ஆறுதல் சொல்லியிருக்காங்க...

                              இதை தோழி என்னோடு கூறி.. "என்ன செய்யரதுன்னே தெரியலடா..அவ வேற ரொம்ப அப்செட்" ன்னு கவலைப்பட.. எனக்கு தெரிந்த (நம்பகமான) ஒரு காவல்துறை நண்பர் முகவரியை கொடுத்து,அவருக்கும் பேசி உதவுமாறு கேட்டுக்கொண்டேன்."இவனுங்களை எல்லாம் விடக்கூடாது"ன்னு அவரும் சூடாயிட்டார்.

                               நண்பரும் உடனே தோழியோட ,அவரது வீட்டுக்கு போயி விசாரணயை ஆரம்பிச்சிட்டாரு..(கேஸ் இல்லாமத்தேன்).மொதல்ல வந்த டெலிபோன் பூத்து நம்பர் மொபைல்ல இருந்து அழிஞ்சிட்டதால...

                                    "அந்த நபர் இதுவரை உன்னைப்பற்றி என்னென்ன தெரியுமுன்னு சொன்னான்"ன்னு கேட்டு எழுதிக்கிட்டாரு.கடைசியா அத மொத்தமா படிச்சிக்காட்டி..இத்தன விபரங்கள் ஒரே சமயத்துல வெளியாளுக்கு கெடக்கனுமின்னாக்கா அது நீயே கொடுத்தாத்தாம்மா உண்டு..இவையெல்லாம் யார்யாருக்கு தெரிய வாய்ப்பு இருக்குன்னு "கேட்டு ஒரு பட்டியல் தயாரிச்சார்.அப்பத்தேன்..இந்தப்பெண் எல்லா கம்பெனிக்கும் அனுப்பிய CVல இந்த விபரங்கள் எல்லாம் இருந்ததும்.வீட்டுல நெட் இல்லாததால வழக்கமான ஒரு இன்டர்நெட் சென்டருல அத சேத்து வச்சிருக்கிறதும் தெரிய வந்தது..பழக்கமான சென்டர்ங்கரதால அங்க போயி பாத்ததுக்கு..அப்பயும் அந்த குறிப்பிட்ட கம்பியுட்டர் திரையில அந்த CV FILE இருந்திருக்கு..

                                சென்டர் நடத்துற பெண்ணை விசாரிசப்போ..அந்த குறிப்பிட்ட கம்பியூட்டர் மொதல்ல இருக்கிறதுனால,தனிமை விரும்பி பலபேரும் அத விரும்பரதில்ல..தோழியின் தங்கை போல கொஞ்சம் பேருதா உபயோகிச்சதாவும்.அரைமணிக்கொருதரம் புகைப்படம் எடுக்கும் கேமிராவை முதலாளி, உள் கூரையில் பொருத்தி இருப்பத்தால்,கடந்த ஒரு மாதம் வரை அதுல புகைப்படம் கிடைக்கும் எனக்கூறவும்.ஒரு வாரத்துக்கு முந்தைய (போன் வந்த வாரம்) படங்கள பாத்து ,ரெஜிஸ்டரையும் பாத்து ஒருத்தன புடிச்சார்(அவன் அங்கே மாதாந்திர கட்டண திட்டத்தில சேந்திருந்ததால..)

                               அவன் வந்த தேதியும் நேரமும் ,அந்த fille ஜ கடைசியா திறந்த நேரமும் (file ன் propertyல பாக்க தோழி யோசனை கொடுத்திருக்கா.) ஒத்துப்போகவே..அவன் வீட்டுக்கே போய் அவனப்பத்தி விசாரிச்சியிருக்கார்.டிப்ளமா சேந்து படிக்கவராததால பாதியிலேயே விட்டுட்டு ஊர் சுத்தும் அவன், அவர கண்டதும் மிரண்டதும்."ஏண்டா நீதான் போன் பன்னுனியா? எனக்கேட்டதும்..டபால்ன்னு உண்மைய ஒத்துக்கிட்டான்.

                             இது போல பலபெண்கள் CV ய நெட்சென்டருல அழிக்காம எதிர்கால உபயோகத்துக்கு/மறந்து விட்டுட்டு போவதாயும்,தேடினாக்கா ஒரு சென்டருல நாலாஞ்சாவது தேறுமுன்னும்(?),பொழுது போக்காயும்,தேவைப்பட்டால் மிரட்டி பணம் வாங்கவும் முயன்றதா ஒத்துக்கிட்டான்..(இத்தனைக்கும் அவன் தோழியோட தங்கைய பாத்ததே இல்ல).அவனோட நண்பனும் இப்பிடி ஒரு பெண்ணோட பேசி இப்ப நல்ல நண்பர்களா இருக்காங்களாம்(ஒருவேளை அவன் ரொம்ப நல்லப் பையனோ?).நண்பர் ,அவனை ரெண்டு தட்டு தட்டி,அவனோட பெற்றோர் கெஞ்சல்/உத்தரவாதத்தின் பேரில் அவனை விட்டிருக்கிறார்.

                  நேத்து தோழி போனுல.".தாங்க்ஸ்டா.."என்றபோது " ஃபிரண்ட்ஸ்க்குள்ள எதுக்குப்பா இந்த தாங்க்ஸ் எல்லாம்"ன்னு சொல்லிட்டு ,சந்தோஷமா நண்பரை கூப்பிட்டு நன்றி(அப்ப நீ மட்டும்?) கூறிய போது.."பையா..நன்றியெல்லாம் இருக்கட்டும்..ஊருக்கு வரும் போது ,நான் சொன்ன போலிஸ் கூலிங் கிளாசை டுவ்டிஃபிரில வாங்கிட்டு வந்துரு.."என சிரித்தார்(என்னயிருந்தாலும் நம்ம ஊரு போலிசாச்சே..ஹிஹி..).அவர் சும்மா விளையாட்டுக்கு சொன்னாலும்,நெசமா வாங்கிக் கொடுக்கனுமின்னு முடிவு செஞ்சிக்கிட்டேன்.

                                   மத்தவங்களுக்கும் ஜாக்கிரதையா இருக்கட்டுமின்னு தோழியோட அனுமதியோட..இத சொல்றேன்.

                               வேலை தேடும் பெண்களே.. இப்பத் தெரியுதா..நாட்டுல என்னவெல்லாம் நடக்குதுன்னு?.இன்னும் எத்தன பேர் இப்பிடி மாட்டிக்கிட்டு..வெளிய சொல்ல முடியாம தவிக்கிறாய்ங்களோ.?.

                               இது போன்ற "களவாளிப்பசங்க "எல்லா எடத்துலயும் இருக்காங்க..நெட்சென்டர் வச்சியிக்கிறவனோடகூட்டாளியாயிருந்துட்டாக்கா.. அவனோட உதவியோட உங்களை சென்டருல வீடியோவே எடுக்க முடியும்ங்கரது அதிர்ச்சியான விஷயம்.

                               மேலும் நீங்க அனுப்பும் cv கப்பெனியோட மேலிடத்துக்கு மட்டுமே போய் சேரரதில்ல..இடையில பியுன்..போன்ற சம்பந்தமில்லாதவங்ககிட்டயும்.cv நிராகரிக்கப்பட்டாக்கா பழைய பேப்பர்காரங்க கிட்டயும் (சில சமயங்களில முழுமையா அழிக்கப்படாமல்)போய் சேருது.

      
           இதனால வர்ர ஆபத்த தவிர்க்க சில யோசனைகள்..


1)       எந்த நெட் சென்டருலயும் உங்க சம்பந்தப்பட்ட கோப்புகள சேமிச்சி வைக்காதிங்க...கையோட ஒரு "flash memory/floopy disk" வாங்கி வச்சிக்கோங்க..

2)       CVல சொந்த முகவரிய/டெலிப்போன கொடுக்காம .. வயசு பொண்ணுங்க இல்லாத உறவினர்/நண்பர் வீட்டு முகவரிய அவிங்க அனுமதியோட கொடுத்துட்டு அடிக்கடி செக் பண்ணிக்கலாமே.

3)      இப்பல்லாம் இரண்டு சிம் கார்டு ஒரே போனுல வந்துட்டதால.. முடிஞ்சா வேலை தேடும் விஷயத்துக்கு ஒரு சிம்கார்டு தனியா வைக்கலாம்.அந்த எண்ண CV யில மட்டும் கொடுத்துட்டு ,வேலைய தவிர வேற கால் வந்தாக்கா.. உஷாராயிடலாம்.

4)       கம்பெனி சம்மந்தப்பட்ட மானேஜரோட மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியா விண்ணப்பம் அனுப்பினாக்கா.. சம்மந்தமில்லாதவங்ககிட்ட போறத குறைக்கலாம்.

5)       தவிர்க்க முடியாத அவசியம் இருந்தா மட்டும்,புகைப்படம் இணைச்சா போதுமானது.

6)       கெடைச்ச உப்புமா கம்பெனி பேருக்கெல்லாம் CV அனுப்பாம..நல்லா விசாரிச்சு ,நல்ல கம்பெனிகளுக்கு மட்டும் அனுப்பலாம்.


                             
    முக்கியமா..ஒருவேளை இப்படி ஏதாவது பிரட்சனையில மாட்டிக்கிட்டாக்கா.. சோர்ந்துடக்கூடாது..தைரியமா அத எதிர்கொள்ளனும்..ஏன்னாக்கா..நாம வாழுர உலகம் அப்படியாயிடுச்சு..பெத்தவங்ககிட்ட மறைக்காதிங்க.. விளக்கிசொல்லி அவங்க உதவிய கேளுங்க..


                                 இந்த முன்னெச்சரிக்கை விஷயத்தை உடனே உங்களுக்கு தெரிந்த வேலை தேடும் தோழிகளிடமும்,நண்பர்களின் மகள் /உறவினர் குடும்பத்தாருக்கும் அனுப்பி வையுங்க..

                                 விங்களும் இப்படி ஏதேனும் ஆபத்துல மாட்டிக்கிறதுக்கு முன்னாடி,நீங்க செய்யர இந்த உதவி.நீங்க அவங்க மேல வைச்சிருக்கிற உண்மையான அக்கறையை உணர்த்தும்


Read more: http://therinjikko.blogspot.com/2009/04/blog-post_4069.html#ixzz1B82PWUEl

உண்மைகளும் நம்பிக்கைகளும்

கிழே கொடுக்கப்பட்டவைகளில் எத்தனை உண்மை?




1) லேம்மிங்-கள் மலையுச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளும்



2) பச்சோந்திகள் சுற்றுசூழலுக்கு  ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்ளும்


3) நிலவிலிருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் தெரியும்


4) அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைபேசியை முதன் முதலில் கண்டு பிடித்தார்


5) ரோம் எரியும்போது நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்


6) பேஸ்பால் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது


7) Survival of the fittest என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் சார்லஸ் டார்வின்


8) இறந்த பின்னும் நகமும் முடியும் வளரும்


9) இந்த உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிராணவாயு மரங்களிடமிருந்து தான் 
கிடைக்கின்றன


10) முதன் முதலில் பென்சிலினைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் பிளமிங்


11) ஹிட்லர் ஒரு சைவ ஆசாமி



http://www.thenatureofreality.com/facts.htm-படி மேலே சொன்னவை ஒன்று கூட உண்மை இல்லையாம். விக்கி பீடியாவையும் பார்த்தேன் - ஆமாம் என்கிறது அதுவும். மேலே சொன்னவை எல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்ட நம்பிக்கைகள் தான்


பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

பல் போனால் சொல் போச்சு …  என்று  பழமொழி சொல்லுவார்கள்.

நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. அந்த காலத்து மனிதர்களை பாருங்கள் என்பது வயதிலும் அனைத்துப்பல்லும் உறுதியாக இருக்கும் . மொத்தம் உள்ள 32 பற்களை ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 25லிருந்து 30க்குள் தான் இருக்கும்.

போனதுபோகட்டும். இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம் 

முதலில் பற்களின் பயன்பாடுகளைபார்ப்போம்.

1. முகத்திற்கு அழகு சேர்க்க பயன்படுகிறது.
2. அழகான உச்சரிப்பிற்கு பயன்படுகிறது.
3. சிறந்த சிரிப்புக்கு பயன்படுகிறது.
4. உண்ணும் உணவை நன்றாக மென்று உண்பதற்கு பயன்படுகிறது.
பல்லின் குறுக்கு வெட்டுத்தோற்றம்.



























பற்களின் அமைப்பு














1,2 வெட்டுப்பற்கள். 

3- சிங்கப்பல்கள்

4- முதல் கடைவாய்ப்பல்

5- இரண்டாம் கடைவாய்ப்பல்.

20 - பால் பற்களும் 7 வயது முதல் 12 வயது வரை விழுந்து
அந்த இடத்தில் நிலையான பற்கள் முளைக்கின்றன.

நிலையான பற்கள்
















1,2 - வெட்டுப்பற்கள்.

3- சிங்கப்பல்

4- முதல் முன்கடைவாய்ப்பல்

5- இரண்டாம் முன் கடைவாய்ப்பல்.

6- முதல் கடைவாய் பல்.

7- இரண்டாம் கடைவாய் பல்.

8-மூன்றாம் கடைவாய் பல்.

பற்களை பார்த்தோம். இனி அதை பாதுகாப்பது பற்றி அறிந்துகொள்வோம்.

பற்களை பாதுகாக்கும் வழிகள்.

1.காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல் வேண்டும்.











2. நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.










3. உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை கொப்பளித்தல் வேண்டும்












4. ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்.












5. இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல் வேண்டும்.  











6. ப்ளுரைட் கலந்த தரமான பற்பசையை பயன்படுத்துதல் வேண்டும்.

7. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

  பாராமரிப்பற்ற,நோய்கள் நிரம்பிய வாய் மற்றும் பற்கள்











நன்கு பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான வாய் மற்றும் பற்கள்.













பற்களில் வரும் பொதுவான நோய்கள்





























பற்களில் நோய் வரக்காரணங்கள்

1. பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல் இருப்பது.

2. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள். அதிகமான இனிப்பு உண்பது. சுத்தமில்லாத உணவு 

வகைகள்.

3. தவறான வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது. (பல்லால் பாட்டில் திறப்பது உட்பட)

4. விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.

5. உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும் நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.
(உதாரணம்:- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் பல் பிரச்சனைகள்).

பல் மருத்துவரால் செய்யப்படும் முக்கிய சிகிச்சை. பொதுவான ஆரம்ப நிலை சிகிச்சைகள்.

1. சொத்தை வருவதற்கு முன்பாகவே பற்களை சுத்தம் செய்து சொத்தை வராமல் அடைத்தல்.
(Pit and fissure sealant)












2. பற்களை உறுதிப்படுத்த ப்ளுரைடு ஜெல்லை பற்களின் மேல் செலுத்துதல்













3. ஆரம்ப நிலையில் உள்ள சொத்தையை சுத்தம் செய்து அடைத்தல்.(filling)










4. பற்களின் மேல் படிந்துள்ள காரைகளை சுத்தம் செய்தல்(Scaling)
 













நோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய சிகிச்சைகள்.

1. பல்லை எடுத்தல்.

2. செயற்கை பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.

3. வேர் சிகிச்சை.

4. வேர் அறுவை சிகிச்சை.

5. ஈறு அறுவை சிகிச்சை.

புகையிலை, குட்கா, பான் போன்றவற்றை பயன்படுததுவதால் ” வாய்புற்றுநோய்” ஏற்படலாம்.
புகையிலையினால் வாயில் ஏற்படும் ஆரம்பநிலை மாற்றங்கள்.








1. வாயில் எரிச்சல்.
2. வாய் திறக்கும் அளவு குறைந்து போதல்.
3. வலி இல்லாத வெண்படலம்.

4. சிவந்த மேல் அன்னம்(புகைப்பதால் ஏற்படுவது)





















பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

1. பல் கறுப்பு நிறமாக மாறுவது.

2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது.

3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் மற்றும் வலி.

4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.

5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம் இருத்தல்.









குழந்தைகளின் பல் பராமரிப்பு.
1. பால் பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது முக்கியம்.

2.. நோய் ஏற்பட்டு பல்லை இழக்க நேரிட்டால் நிலையான பற்கள் சரியான இடத்தில் முளைப்பது 
தடைபடலாம்.

3. இனிப்பு - மிட்டாய் - பிஸ்கேட் - இவற்றின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.

4. முதல் பல் முளைத்த நாள் முதல் பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

5. விரலில் அணியக்கூடிய பிரஷ் கொண்டு குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும்.

6. காய்கறி மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

7. இரவில் படுக்கும் முன் குழந்தைக்கு புட்டிபால் (சர்க்கரை கலந்த பால்) கொடுக்க கூடாது. அப்படி
கொடுத்தால் எல்லா பால் பற்களுமே சொத்தையில் சிதையும் வாய்ப்பு உள்ளது.

8. உறக்கப் போகும் முன் குழந்தையின் பற்களை துலக்கிவிட வேண்டும்.

9. மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழந்தையை பல்டாக்டரிடம் காண்பித்து பல்லை பரிசோதனை
செய்து கொள்ளவேண்டும்.

சிறந்த முறையில் பற்களை துலக்குவது எப்படி? 

















வந்தபின்பு அவஸ்தைபடுவதைவிட வரும்முன் காப்பது சால சிறந்தது. இந்த கட்டுரையை படித்தபின் நீங்கள் மீண்டும் பல் துலக்குகையில் இந்த கட்டுரை உங்கள் நினைவுக்கு வந்தால் அது இந்த கட்டுரைக்கு கிடைத்த வெற்றியே.