Sunday, April 3, 2011

காணாமல் போகும் கிரெடிட் கார்டு மோகம்!

2003-ம் ஆண்டில் அந்த அலை எழுந்தது. ஒட்டுமொத்த நாட்டையும் அந்த அலை பெருவேகமாக அடித்துச் சென்றது. இந்திய நடுத்தர வர்க்கம், தங்கள் கனவுகளை உடனடியாக நனவாக்க வந்த வரமாக நினைத்த `கிரெடிட் கார்டு' அலை பற்றித்தான் நாம் கூறுகிறோம்.

அது இப்போது பழைய கதை. `பிளாஸ்டிக் மணி' மீதான மக்களின் கவர்ச்சி வெகுவாக மறைந்துவிட்டது. அப்படித்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ரிசர்வ் வங்கி இதழில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், இந்திய வாடிக்கையாளர்களிடையே `கிரெடிட் கார்டு' பயன்பாடு வெகுவாகக் குறைந்து வருவது தெரிகிறது.

கடந்த 2005- 2006-ல் இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சமாக இருந்தது. அது 2007- 2008-ம் ஆண்டில் 2 கோடியே 75 லட்சமாக எகிறியது. அது 2008- 2009-ம் ஆண்டில் 2 கோடியே 46 லட்சமாகக் குறைந்தது. தொடர்ந்து வந்த 2009- 2010 ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. தற்போது கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை, 1 கோடியே 83 லட்சம்தான்.

ஆனால் `டெபிட் கார்டுகள்' விஷயத்தில் இந்த நிலைமை இல்லை. 2005- 2006-ல் இநதியச் சந்தையில் புழக்கத்தில் இருந்த `டெபிட் கார்டுகளின்' எண்ணிக்கை 4 கோடியே 98 லட்சம்தான். 2007- 2008-ல் இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்து 10 கோடியே 24 லட்சம் ஆனது. 2009- 2010 ஆண்டிலோ 18 கோடியே 14 லட்சம் ஆகியிருக்கிறது.

ஆக, வாடிக்கையாளர்கள் இடையே ஆரம்பகட்ட `கிரெடிட் கார்டு' மோகம் மறைந்து, அவர்கள் `டெபிட் கார்டு'க்கு மாறி வருவது தெளிவாகத் தெரிகிறது.

2005- 2008 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை அள்ளி வழங்கின. தொடர்ந்து வந்த பொருளாதார மந்தநிலையும், கிரெடிட் கார்டு விஷயத்தில் தவறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பும், வங்கிகளை எச்சரிக்கையாகச் செயல்படச் செய்திருக்கின்றன.

`பிளாஸ்டிக் பண' பயன்பாடு குறித்த வாடிக்கையாளரின் மனோபாவமும் மாறியிருக்கிறது. இது ஒரு `பேன்சி ஐட்டம்' அல்ல, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவேண்டிய சீரியசான பணம் செலுத்தும் முறை என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள் என இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

குழந்தையின் முதல் அழுகை


குழந்தைகள் பிறந்தவுடன் நன்றாக வேகமாக அழ வேண்டும். அப்போதுதான், முதன்முறையாக தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசிக்க முடியும். உடலும் சிவப்பு நிறமாக மாறும்.
குழந்தையின் முதல் அழுகை என்பது தன்னுடைய சுவாச முறையைத் தொடங்குவதற்காகவே இயற்கை ஏற்படுத்தியது. ஆனால், இந்த இயற்கையான நடவடிக்கைக்கு மாறாக வேறு பல காரணங்களால் குழந்தை அழலாம். அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டு சிகிச்சை அளித்தால், ஒருவேளை குழந்தைக்கு வேறு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.
சில காரணங்களை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். பசிக்கும்போது அழலாம். வயிற்றில் இருந்து காற்று வெளியேறும் போது அழலாம். துணியால் உடல் மூடப்படாமல் கதகதப்பு இல்லாமல் இருந்தால் அழலாம்.
சில குழந்தைகள், விளக்கை அணைத்தால் அழத் தொடங்கும். சில குழந்தைகள், விளக்கைப் போட்டால் அழும். எல்லாக் குழந்தைகளும், கை கால்கள் மற்றும் கழுத்துப் பகுதியை கெட்டியாக அழுத்திப் பிடித்தால் அழும்.
வேறு காரணங்கள்
கைக்குழந்தைகள்
பசி
தாகம்
வயிற்றில் காற்று
அரிப்பு
வயிற்று வலி
ஈரமான துணி
அதிக சத்தம்
மாட்டுப்பால் அலர்ஜி
பல் முளைக்கும் போது
சிறுநீர் கழிக்கும்போது
தனிமை
இவை தவிர,
1. நோய்த் தொற்று
2. தலைவலி
3. காது வலி
4. குடல் இறக்கம்
5. விறை முறுக்குதல்
6. குடல் அடைப்பு
போன்ற காரணங்களாலும் குழந்தை அழலாம்.
சிறுவர்கள்
1. ஆளுமை
2. பாதுகாப்பு இல்லாமை
3., பழக்கம்
4. பசி
5. களைப்பு
6. நோய்
7. மருந்துகள் ஏதாவது
8. அலர்ஜி
சிகிச்சை
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். பாலுக்காகத்தான் அழுகிறது என்றால், பால் கொடுத்தால் அழுகை நின்று விடும். குழந்தையைப் படுக்க வைத்திருக்கும் துணி நனைந்திருப்பதால் குழந்தை அழுகிறது என்றால், அந்தத் துணியை மாற்றிவிட்டால் அழுகை நின்றுவிடும்.
காது வலி போன்றவை இருந்தால், மருத்துவரிடம் காட்டி மருந்துபோட்டால் அழுகை நின்றுவிடும்.

மருந்து... மாத்திரை... உணவு!




சில நோய்களுக்கான மருந்துகளை சாப்பிடும் காலகட்டத்தில் மிகுந்த ஆரோக்கியம் தருவதாக நம்பும் உணவு வகைகளைக்கூட சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் எதிர்விளைவுகள் ஏற்பட்டு விடும்.

* தொற்றுநோயின் பாதிப்பிற்காக `ஆன்டிபயாடிக்' மருந்துகள் சாப்பிடுவோர், பாலையும், `யோகர்ட்' உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இறைச்சியையும் ஒதுக்கி விடலாம்.

* வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு'களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் வயிற்றுப் போக்கு இன்னும் மோசமாகி விடும்!

* ஒவ்வாமைக்காக மருந்து சாப்பிடும்போது, நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்ளும்போது, கால்சியம் செறிந்த உணவுகள், முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்திடுங்கள். வேறு வழியின்றி சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

* நீங்கள் வலிநிவாரணி மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும்.

* மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம்.

* மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம்.

எதிர்கால நவீன சிகிச்சைகள்





இன்று உலக மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது எய்ட்ஸ். அடுத்து இதய நோய்கள். அதிலும் குறிப்பாக மாரடைப்பு. இவை தவிர, புற்றுநோய் உள்ளிட்ட எத்தனையோவிதமான நோய்களில் எய்ட்ஸ் தவிர மற்ற அனைத்துக்கும் ஏதோ ஒரு வகையில் பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.

இதய நோய்களுக்கான அடிப்படை விஷயம்:
இதயத் திசுக்கள் பல்வேறு பரம்பரைக் காரணங்களால் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு இதயம் பாதிக்கப்படுவதறகு மரபணுக்கள் காரணமாக இருக்கின்றன. அதேபோல், புகை, மது, மிகை ரத்த அழுத்தம், நீரிழிவு, நுண்கிருமிகள், கொலஸ்ட்ரால் போன்ற பல காரணங்கறாலும் இதயம் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு இதய பாதிக்கப்படும் போது, ஆக்ஸிஜனும், போதுமான சத்தும் கிடைக்காமல் இதய செல்கள் நலிவடைந்து பிறகு செயலிழந்துவிடுகின்றன. இதுதான் இதய நோய்களின் அடிப்படை விஷயம். இப்படிப்பட்ட பலவகையான இதய நோய்களுக்கும் எத்தனையோ வகையான சிகிச்சைகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, மக்களுடைய உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை நடைமுறைகள் போன்றவற்றால் புதுப்புது இதய நோய்கள் உருவாகின்றன. அவற்றைத் தொடர்ந்து அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆக, என்றென்றும் இதய நோய்கள் துறை 'புதுப்பிக்கப்பட்டு' வருகிறது.அந்த வகையில், மரபணு சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை போன்ற நவீன சிகிச்சை முறைகள் தற்போது பரிசோதனை முறையைக் கடந்து கிட்டத்தட்ட செயல்வடிவம் பெறும் நிலையில் இருக்கின்றன. இவற்றை இதய நோய்களுக்கான எதிர்கால நவீன சிகிச்சை முறைகள் என்று சொல்லலாம். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1. ஸ்டெம் செல் சிகிச்சை
2. மரபணு சிகிச்சை
முதல் வகையான ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், நலிவடைந்த இதய செல்களை சீராக்க முடியும். அதேசமயம், மரபணு சிகிச்சையின் மூலம் செயல்படாத, நலிவடையாத இதய செல்களையும் பாதுகாக்க முடியும்.

ஸ்டெம் செல் எனப்து மிகவும் அடிப்படையான மனித செல்லாகும். அதிலிருந்துதான் உடல் உறுப்புக்கான அனைத்து செல்களுமே உருவாகின்றன.ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது உண்டாகும் கருத்தரித்த செல்தான் ஸ்டெம் செல்லாகப் பிரிந்து, உடலில் ஒவ்வொரு உறுப்புகளையும் உருவாக்குகிறது.இத்தகைய ஸ்டெம் செல்கள் உடலில் பல இடங்களிலும் காணப்படும். இந்த செல்களைத் தனியே பிரித்தெடுத்து, அவற்றை நேரடியாக இதயத்தில் செலுத்துவதன் மூலமாகவோ அல்லது இதய ரத்தக் குழாய் வழியாக செலுத்துவதன் மூலமாகவோ, நலிவடைந்த பாதிக்கப்பட்ட செல்களுக்குப் பதிலாக புதிய செல்களை உற்பத்தி செய்து இதயத்தைச் சீராக்கும்.எலும்பு மஜ்ஜை, தசைப்பகுதி மற்றும் சிசுவின் வளர்ச்சிப் பருவத்தில் இருந்தோ இத்தகைய ஸ்டெம் செல்கள் அதிக அளவில் பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

மரபணு சிகிச்சையில், மரபணுக்களை உடலில் செலுத்தும்போது, பரம்பரைக் காரணங்களால் பாதிக்கப்பட்ட மரபணுவோடு அவை சேர்த்து அவற்றைச் சீராக்குகின்றன.இந்தப் புதிய மரபணுவின் உத்தரவுப்படி, இதயத்தில் பாதிக்கப்படாத, நலிவடையாத இதய செல்கள் தூண்டப்பட்டு அவை வேலை செய்யும் விதமாக மாற்றப்படும்.இப்படி, மரபணுக்களை உடலில் செலுத்துவதற்கு வைரஸ் நுண்கிருமிகள்தான் ஊடகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், மரபணுக்கள் மிகவும் நுட்பமான உயிர்ப்பொருள் என்பதால், அவற்றைக் கடத்திச் செல்ல வைரஸ் போன்ற மிகவும் நுட்பமான உயிரினகளையே பயன்படுத்தவேண்டி இருக்கிறது.அதேசமயம், இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் வைரஸ் நுண்கிருமிகளால் புதிய நோய் ஏற்படாமலும் தடுக்க வேண்டும். அதற்காக, அடினோ வைரஸ், ரீட்ரோ வைரஸ், லென்டீ வைரஸ் போன்ற வைரஸ்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.இந்த இரண்டு நவீன சிகிச்சை முறைகளும் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தால், இதய நோய்கள் மட்டுமல்ல வேறு பல சிக்கலான நோய்களுக்கும் பெரிய தீர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலக இதய தினம்:
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'உலக இதய தினமாக'க் கடைப்பிடிக்கப்படுகிறது.இன்றைய தினம், உலகம் முழுவதும் சிறப்பு மருத்துவ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இதய நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் மருத்துவர்களே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலும், அதில் மக்களே அதிகமாகக் கலந்துகொள்கிறார்கள்.
இதய நோய்கள் குறித்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு பிரசார பேரணிகள், கூட்டங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன. இதில கலந்துகொள்ளும் மக்கள், இதய நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுகிறார்கள். மேலும், இதய நோய் வராமல் தடுக்கும் முறைகளையும், உணவு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இதயத்தை வலுவாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் அறிந்து கொள்கிறார்கள்.தவிர, இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? அவற்றின் சிறப்புகள் என்னென்ன? என்பது போன்ற தகவல்களைத் தெரிந்து தங்களுக்கு உள்ள பாதிப்புகளுக்கு ஏற்ற மருத்துவச் சிகிச்சையை அவர்களே தேர்வு செய்யும் 'வசதியும்' அவர்களுக்குக் கிடைக்கிறது.

பல இடங்களில் 'இலவச இதய மருந்துச் சிகிச்சை முகாம்' நடத்தப்படும். அதில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு இலவச இதய ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்படும். பண வசதி இல்லாதவர்கள், இந்த முகாம்களுக்கு வந்து நிவாரணம் பெற முடியும்

3ஜி மூலம் மொபைல் போனில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டே செல்லலாம்.


3ஜி தரும் பயன்கள்



பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு உள்ளது. தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப்படுவதே அதன் அடிப்படையான ஒரு செயல்பாடாகும். 3ஜி இதனைத் தருவதுடன், மிகத் தெளிவான ஒலி பரிமாற்றத்தையும் தருகிறது. மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற்றத்தை 3ஜி மூலம் மேற்கொள்ள முடியும். இந்தியாவில் அண்மைக் காலத்தில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமுதாய இணைய தள சேவைத் தளங்களால், டேட்டா பரிமாறப்படுவது அதிகரித்துள்ளது. அதே போல ப்ளிக்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல்களும் பரிமாறப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு இன்னொரு காரணம், டாட்டா டொகோமோவில் தொடங்கி பல தொலைதொடர்பு நிறுவனங்கள், மிகக் குறைவான கட்டணத்தில் டேட்டா பரிமாறிக் கொள்வதற்கு அளித்து வரும் திட்டங்களாகும்.
பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடங்கி வைத்த 3ஜி சேவையினை, இனி பல தனியார் நிறுவனங்கள் தர இருக்கின்றன. 3ஜி சேவையில் பலப் பல புதிய தொழில் நுட்ப மாற்றங்களையும் பயன்பாடுகளையும் காண இருக்கிறோம். ஏற்கனவே முதன்மையான பயன்பாடுகளை குறிப்பிட்டு எழுதி உள்ளோம். இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்.
1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்: 3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடப்படுவதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம். அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்திகளைப் பெற வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம்.
2. இமெயில் மற்றும் பைல் பெறுதல்: 3ஜி மூலம் நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகளை மொபைல் போன் வழியாக, எந்த நேரத்திலும் பெற முடியும். அதே போல அனுப்பவும் முடியும். நமக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பைல்களையும் இதே போலப் பெற முடியும். நாம் தயாரித்து வைத்துள்ள ஆவணங்களில், எந்த நேரத்திலும் எடிட் செய்து மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
3. மொபைல் ஒரு முனையமாக: மொபைல் போனை இனி ஒரு ஆன்லைன் டெர்மினல் போலப் பயன்படுத்த 3ஜி வழி தருகிறது. திடீரென நமக்குக் கிடைத்து வரும் இன்டர்நெட் இணைப்பு செயல்படாமல் போகும்போது, மொபைல் போனை நம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து, இணைய மோடம் போலப் பயன்படுத்தலாம். இதனால் எந்த நேரத்திலும் சூழ்நிலையிலும் நமக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும்.
4. வீடியோ ஸ்ட்ரீமிங்: நாம் நண்பர்களுடனும், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோ பைல்களை, எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப, காண முடியும். வேகமான பரிமாற்றத்தை 3ஜி மூலம் பெற முடியும். இவற்றைப் பதிந்து கொள்வதற்கும் 3ஜி உதவிடும்.
5. இணைய வழி அழைப்புகள் – வி.ஓ.ஐ.பி. (Voice Over Internet Protocol (VOIP):மிகப் பெரிய அளவில் பேண்ட்வித் எனப்படும் தகவல் பரிமாற்றத்திற்கான அலைவரிசையை, 3ஜி தருகிறது. ஏற்கனவே நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வரும் ஸ்கைப் போன்ற புரோகிராம்கள் மூலம், குறைந்த கட்டணத்தில் நம்மால் நம் நண்பர்களுடன், அவர்கள் எங்கிருந்தாலும் பேச முடியும். வீடியோ வழி உரையாடலையும் மேற்கொள்ள முடியும்.
6. அதிக வேகத்தில் கூடுதல் தகவல்: பல வேளைகளில் நாம் பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்து, பின்னர் படிக்கிறோம். அதிகமாக ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள், அதில் உள்ள லிங்க்ஸ் தரும் இணைப்புகளை இதே போல்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஜி.பி.ஆர்.எஸ். வழங்கும் வேகம் மிக மிகக் குறைவாக உள்ளதால் இவ்வாறு செயல்படுகிறோம். 3ஜி மூலம் இந்தக் குறை நிவர்த்தி ஆகும். வேகமாக டேட்டா கிடைப்பதால், லிங்க் இணைக்கும் அந்த வேளையிலேயே பைல்களைக் காண முடியும்.
7. துல்லிய ஒலி அனுபவம்: சிக்னல் கிடைக்கல, வாய்ஸ் விட்டு விட்டு வருது, பேசறது ஜாம் ஆகுது – போன்ற உரையாடல்களை நாம் 3ஜியில் சந்திக்க மாட்டோம். மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் ஒருவர் பேசுவதை இதன் மூலம் நாம் பெற முடியும். உங்கள் குழந்தையின் மழலையை, நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பக்கத்தில் இருந்து பேசுவது போலக் கேட்டு ரசிக்கலாம். மொத்தத்தில், இதுவரை தொழில் நுட்ப நீண்டநாள் கனவாக இருந்த 3ஜி சேவை, இப்போது கையில் வந்துவிட்டது. சிறிய வணிகர்கள் இதன் சேவையினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் வர்த்தகத்தினை மேம்படுத்தலாம். இன்னும் இன்டர்நெட் நுழையாத கிராமங்களில் உள்ள மக்கள், 3ஜி மூலம் அதனைப் பெறலாம். வலைமனைகளை இணையத்தில் உருவாக்கி செயல்பட்டு வருபவர்கள், இடைஇடையே இணைப்பு அறுந்து போகும் இன்டர்நெட்டை விட்டு, 3ஜி சேவை மூலம் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
பல துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு, 3ஜி ஒரு வரப்பிரசாதமாகக் கிடைத்துள்ளது. அனைவரும் இதனைப் பயன்படுத்தி நம்மையும் நாட்டையும் வளப்படுத்துவோம்.

சர்க்கரையை கண்டுபிடிக்க நவீன பரிசோதனை




சர்க்கரையை கண்டுபிடிக்க நவீன பரிசோதனை hba1c அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரத்தத்தில் கடந்த மூன்று மாத காலமாக ஏறி இறங்கும் சர்க்கரையின் சராசரி அளவுகோல். இது எப்படி கண்டறியப்படுகிறது என்றால், நம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களிலிருந்து பிரித்தெடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. hba1c இதுவரை ஒருவருக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லையா என்று கண்டறிய செய்யப்பட்டு வந்தது. இப்போது இதே பரிசோதனை ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்க சர்க்கரை நோய் கழக ஆய்வில் சர்வதேச சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.




பயன்கள்: எந்த நேரம் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒரே ரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை உள்ளதா? இல்லையா என்று கண்டறிய முடியும். இரண்டு அல்லது மூன்று வேளை ரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த பரிசோதனை முடிவு 6.5 சதவீதத்துக்கு மேல் இருந்தால் சர்க்கரை உள்ளது என்று உறுதி செய்யலாம். 6 முதல் 6.5 சதவீதம் வரை இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 6 சதவீதத்துக்கு கீழ் இருந்தால், சர்க்கரை இல்லை என்று கூறலாம். சர்க்கரை அளவு உண்ணும் உணவை பொருத்து மாறுபடும். பரிசோதனைக்கு முன் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் சர்க்கரை அதிகமாக காட்டும். இதை வைத்து கொண்டு ஒருவருக்கு சர்க்கரை உள்ளது என்று தீர்மானம் செய்யக் கூடாது. இதனால் தான் இந்த புதிய பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பரிசோதனை அதிநவீன கருவிகளாக பயோரேட் d-10 அல்லது immunoturbidometry முறைகளில் செய்யப்பட வேண்டும். சாதாரண முறையில் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.




உணவு முறை: நார்சத்து நிறைந்த உணவு. உதாரணம்: நான்கு இட்லி சாப்பிடுவதற்கு பதில் மூன்று இட்லி, ஒரு கப் காய்கறி பொரியல், ஒரு கப் கூட்டு, ஒரு கப் சுண்டல், காய்கறி சாலட், பழ சாலட் சாப்பிடுவதால், சாப்பிட்ட பின் சர்க்கரை 240 மி.கி.,லிருந்து 170 மி.கி., குறைந்துள்ளது. இந்த உணவு முறையே நமது ரிசார்ட் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. காய்கறி சேர்த்து சாப்பிடுவது இட்லி ஜீரணமாகும் தன்மை குறைந்து சர்க்கரை மெதுவாக ஏறுகிறது. நார்சத்து குறைந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசி நல்லதல்ல. இந்த மாதிரி உணவு சாப்பிட்டால், குறைவான அளவு இன்சுலின் இருந்தாலும் சர்க்கரை ஏறாது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, இன்சுலின் வேலை செய்யும் திறன் அதிகம். இதனால் உடலில் குறைந்த அளவு இன்சுலின் இருந்தாலும் அது முழுமையாக திறமையாக பணி செய்ய முடியும். இன்சுலின் தசைகளுக்குள் உள்ளே குளுகோஸ் செல்ல உதவுகிறது மற்றும் தசைகளுக்குள் சென்ற குளுகோஸை சக்தியாக மாற்றுவது இன்சுலினின் முக்கிய பணி. சுரக்கும் இன்சுலின் 30 - 40 சதவீதம் தசைகளில் தான் வேலை செய்கிறது. இதற்கு உடற்பயிற்சி அவசியம்

நீங்கள் 30 வயதை கடந்தவரா? அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறீர்களா: அவசியம் படியுங்கள்...



வீட்டிற்கு வீடு சர்க்கரை நோய் இருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் 30 கோடிபேருக்கு இந்நோய் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இன்று 25 வயது, 30 வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர்.
இதற்கான காரணங்கள் குறித்து, மதுரை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் சங்குமணி கூறியதாவது : குடும்பத்தினரில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்களால் இதை தடுக்க முடியும். அதிக உடல் எடை, உழைப்பின்மை, ரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு சத்து, கர்ப்ப கால சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பு, சினைப்பை சம்பந்தப்பட்ட நோய், தொப்பை வயிறு ஆகியவற்றால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 4 கி.மீ., வரை "வாக்கிங்' செல்ல வேண்டும். இதனால் ரத்தஅழுத்தம் சீராகிறது. ரத்தகொழுப்பு சத்து குறைகிறது. இதய ரத்தநாளங்கள் மற்றும் கால், கை ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. உடல் எடை குறைகிறது. மூளைக்கு செல்லும் ரத்தஓட்டத்தை அதிகரிக்கிறது.

"வாக்கிங்' செல்லும்போது கவனிக்க வேண்டியவை: சரியான ஷூ அல்லது செருப்பு அணிதல், தனது வயது ஒத்த ஒருவருடன் செல்வது, சிறிது சிறிதாக "வாக்கிங்' நேரத்தை அதிகரிப்பது உடலுக்கு நல்லது. உடல்நலம் இல்லாதபோது உடற்பயிற்சி செய்யக்கூடாது. உடல் பருமன் உள்ளவர்கள் 10 சதவீத எடையை குறைக்கும்போது, சர்க்கரை நோய் வருவதற்குரிய வாய்ப்பு 60 சதவீதமாக குறைகிறது. முதற்கட்டமாக, உடற்பயிற்சி செய்யும்போது 5லிருந்து 10 நிமிடம் மெதுவாக நடந்து உடல் உறுப்புகளை பயிற்சி செய்ய தயார்படுத்த வேண்டும். இதற்கு "வார்ம்-அப் பிரீயட்' என்பர். இரண்டாம் கட்ட உடற்பயிற்சியில், 30 நிமிடம் மித வேகம் அல்லது அதிக வேகத்துடன் நடக்கலாம்; சைக்கிள் ஓட்டலாம், நீச்சல் பயிற்சி செய்யலாம். மூன்றாம் கட்டத்தில், 10 நிமிடம் மெதுவான பயிற்சி செய்யும்போது நாடித்துடிப்பு சீராகிறது. இதை "கூல்டவுண் பிரீயட்' என்பர்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்: நார்ச்சத்து அதிகமுள்ள கீரை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த காய்கறி மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்கவும். காலை உணவை தவிர்த்துவிட்டு, மதிய உணவை அளவுக்கு அதிகமாக எடுத்தாலோ, மதிய உணவை தவிர்த்துவிட்டு இரவு உணவை அதிகமாக எடுத்தாலோ சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகம்.
தொப்பைக்கு தேவை "குட்பை' தொப்பை பல நோய்களுக்கு காரணமாகிறது. அதில் உள்ள கொழுப்பு செல்கள், சுரக்கும் ஹார்மோன்கள் சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. மது, சிகரெட்டை நிறுத்த வேண்டும். இவை இன்சுலின் சுரப்பை குறைப்பதுடன் அதன் செயல்திறனையும் குறைத்துவிடுகிறது. ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் பழக்கம் இருந்தால் நிச்சயமாக நிறுத்திவிட வேண்டும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், கோபப்படுதலை குறைத்து யோகா பயிற்சி செய்தால் சர்க்கரை நோயை தடுக்கலாம். வடை, சோமாஸ், காரா சேவு, மிக்சர் போன்ற உணவுகளில் அதிக கொழுப்புச்சத்தும், கலோரியும் உள்ளது. இந்த உணவுகளை குறைப்பதன்மூலம் சர்க்கரை நோயை தடுக்கலாம். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாம். அப்பார்ட்மென்ட் என்றால், "லிப்ட்'டிற்கு பதில், மாடி படிகள் வழியாக செல்லலாம். இவ்வாறு கூறினார்.

சுஜாதாவின் மின்நூல்கள்



http://www.freetamilbook.com/Portals/0/sujatha.jpeg 
நண்பர்களே! எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சில நூல்கள் உங்களுக்காக.
இவை அனைத்தும் இணையத்திலிருந்து பெறப்பட்டவை.

சுஜாதா - கொலையுதிர்காலம் 

http://www.mediafire.com/?w93xkvto8y3x88q

சுஜாதா -  பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம் 
http://www.mediafire.com/?eaa4ydu1b61o0n9
சுஜாதா - Dr. நரேந்திரனின் வினோத வழக்கு 
http://www.mediafire.com/?0jzjigmdnx4
சுஜாதா -  கடவுள் வந்திருந்தார் 
http://www.mediafire.com/?ujhmn3mkqzl

நன்றி:http://tamil-ebooks.webs.com

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்-சுகபோதானந்தா-மின்நூல்



 http://sukhabodhananda.jnanajyoti.com/intro-sukhabodhananda.jpg
நண்பர்களே! சுவாமி சுகபோதானந்தா அவர்களின் பத்திரிகை தொடராக வெளிவந்த மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற நூல் உங்களுக்காக! மின்நூல் வடிவில். இந்த நூல் இணையத்தில் இருந்து பெறப்பட்டது.

பதிவிறக்க கீழே உள்ள தலைப்பை சொடுக்கவும்:


Start Button-ஐ ரீநேம் செய்ய


நண்பர்களே! ஸ்டார்ர்ட் பட்டனை ரீநேம் செய்ய பல வழிகள் உள்ளன. ரீசோர்ஸ் ஹேக்கர் என்னும் மென்பொருள் மூலம் பல மாற்றங்களை மேற்கொண்டால் இதைச்செய்ய முடியும்.


சிறிது தவறு நேர்ந்தாலும் சிஸ்டம் ரெஜிஸ்ட்ரி செயலிழக்கும் வாய்ப்பு அதிகம். ரெஜிஸ்ட்ரியைப் பற்றி நன்கு அறிந்தவர்களே இதை எளிதாக செய்ய முடியும்.

ஆனால் யார் வேண்டுமானாலும் இதை எளிதாக செய்ய ஒரு மென்பொருள் உள்ளது. இதைப் பயன்படுத்தி மிக மிக எளிதாக ரீநேம் செய்யலாம்.இந்த மென்பொருள் ஒரு போர்ட்டபிள் மென்பொருளாகும்.எனவே நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பது சிறப்பு



மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக்கவும்:

பதிவிறக்கம் செய்த பைலை வின்ரேர் மூலம் அன்சிப் செய்து கொள்ளுங்கள்.
 படம்01: ல் உள்ளபடி StartBtn ஐ ரன் செய்யுங்கள்


ScreenShot005

படம்02: ல் உள்ளபடி விண்டோ உங்களுக்கு வரும் type heare என்ற இடத்தில் உங்கள் விருப்பமான பெயரை டைப் செய்யுங்கள். பிறகு பட்டனை அழுத்துங்கள்.



ScreenShot006




படம்03-ல் நான் எனது பெயரை டைப் செய்திருக்கிறேன். ரீநேம் இட் என்ற பட்டனை அழுத்த வேண்டும்ScreenShot007

படம்04.ல் பட்டனை அழுத்திய பிறகு ஸ்டார்ட் பட்டனின் பெயர் மாறியிருப்பதை காணலாம்.


ScreenShot008


நணபர்களே! இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துரையிட தயக்கமென்ன