Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Sunday, June 26, 2011

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி?



பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.

குழந்தைப் பிறப்பு என்பது கணவன் - மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம். 

இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும். 

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:

இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும். 

குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். 

பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.

விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும். 

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.

அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்

Friday, April 29, 2011

பொய் வழக்குப்போடும் மருமகளை தண்டிப்பது எப்படி?


மாப்பிள்ளை வீட்டார் நிரபராதிகள் என்றால் சட்டம் ஏற்றுக்கொள்ளாது.

இந்தியாவில் பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டார் (99%) வரதட்சணை வாங்கும் அல்லது மருமகளை கொடுமை செய்யும் குற்றவாளிகளே. அதனால்தான் நீங்கள் கூறியிருப்பதுபோல மாப்பிள்ளை வீட்டார் நிரபராதி என்று சொன்னாலும் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. பொய்யை நீங்களே ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் பிறகு சட்டம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? இது எப்படி பொய் என்று பின்வரும் பதில்களில் விளக்கமாகப் புரியும்.

எனினும் இந்த சட்டத்தை எத்தனை பேர் சரியாக பயன் படுத்துகின்றார்கள்? எத்தனை பேர் இதனை முறைகேடாக பயன் படுத்துகின்றார்கள் ? 

இந்த சட்டங்கள் அனைத்தும் 100% சரியாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல மருமகள்கள் தங்களது அறியாமையால் இதை எப்படி பக்குவமாகப் பயன்படுத்துவது என்று தெரியாமல் தவறு செய்துவிடுகிறார்கள். அதற்கு சிறு உதாரணம் சொல்கிறேன்: கணவனிடம் உள்ள பொருட்களை பெறுவதற்கு IPC406 என்ற குற்றப்பிரிவையும் சேர்க்க வேண்டும். ஆனால் தவறுதலாக சில மருமகள்கள் வெறும் IPC498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம் இவற்றை மட்டுமே பயன்படுத்துவதால் கணவன் வீட்டார் எங்களிடம் மருமகளின் பொருட்கள் எதுவுமே இல்லை. அதனால்தான் பாருங்கள் IPC406 இல்லை. வெறும் 498A மட்டும்தான் இருக்கிறது. அதனால் இது பொய் வழக்கு என்ற அவதூறு பேசிவருகிறார்கள்.

உங்களைப்போல இந்திய தலைமை நீதிபதியும் ஒருமுறை மருமகள்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதாக கூறியதற்கு மருமகளின் அறியாமைதான் இதுபோன்ற மாயத்தோற்றத்திற்குக் காரணம் என்று தேசிய மருமகள் வாரியத் தலைவி இந்திய தலைமை நீதிபதிக்கே மறுப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி அதற்கு எதுவும் மறுப்பு சொல்லவில்லை. தலைவி சொல்லியதுதான் உண்மை.

Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.(The Times of India, 1Feb 2009)

சரி அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவோரை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் . 

இதுதான் மிகமுக்கியமான கேள்வி.

எந்த மருமகளும் இந்த சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில்லை.

மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை முழுவதும் மருமகள்களுக்காகவே இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டவை.

இந்தியாவில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் சட்டமாமேதைகளின் ஆலோசனைப்படி இயற்றப்பட்டு பிறகு பார்லிமெண்டின் இரு அவைகளிலும் பரிசீலனை செய்யப்பட்டு அகில இந்திய உறுப்பினர்கள் அனுமதித்த பிறகே சட்டமாகிறது. அதனை கடைசியில் ஜனாதிபதி கையெழுத்திட்டு அனுமதி தந்த பிறகே நடைமுறைக்கு வருகிறது.

இப்படி இந்திய மாமேதைகளின் கடினமான பரிசீலணைக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் சட்டம் மருமகள்கள் முறைகேடாகப் பயன்படுத்தும் விதத்திலா இருக்கும்? இந்திய சட்டமேதைகளையும், தலைவர்களைம் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.

இந்த சட்டங்களை நீங்கள் ஒருமுறை கூர்ந்து கவனித்துப் படித்துப்பார்த்தால் இந்திய மருமகள்கள் அனைவரும் அப்பாவிகள், தவறே செய்யத் தெரியாதவர்கள் என்று உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்.

1. 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றினார்கள். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று இந்த சட்டத்தில் எழுதிய சட்டமேதைகள் மருமகள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்திருந்தாலும் மருமகள் மீதோ, அவரது குடும்பத்தார் மீதோ எந்தவித சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அழுத்தமாக எழுதிவைத்திருக்கிறார்கள். அதே சமயம் கணவன் தன்னிடம் வரதட்சணை கேட்டதாக மருமகள் புகார் கொடுத்தால் கணவன்தான் தான் வரதட்சணை கேட்கவில்லை அல்லது வாங்கவில்லை என்று தன்னை நிரபராதி என்று நிரூபித்துக்கொள்ளவேண்டும். மருமகள் எந்தவித ஆதாரத்தையும் காட்டத்தேவையில்லை.

இதிலிருந்து ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். சட்டத்தை இயற்றிய மாமேதைகள் மருமகள்கள் இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். பிறகு உங்களது கேள்வி எப்படி எடுபடும்?

2. கணவன்களின் கொடுமை அதிகரித்துக்கொண்டே போனதால் 1984ல் மீண்டும் நமது சட்ட மாமேதைகளும், பெருந்தலைவர்களும் IPC498A என்ற சிறப்புச் சட்டத்தை இயற்றினார்கள். இந்த சட்டத்திலும் கணவனைச் சார்ந்த யார் மீதுவேண்டுமானாலும் மருமகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி குற்ற வழக்குத் தொடுக்கலாம் என்ற முழு உரிமையும் கொடுத்திருக்கிறார்கள். அதோடுமட்டுமல்லாமல் மருமகள் பொய்வழக்குத் தொடர்ந்தால் அதற்கும் தண்டனை உண்டு என்று இந்த சட்டத்தில் ஒரு வரிகூட எழுதப்படவில்லை என்பதுதான் இந்த சட்டத்தின் சிறப்பம்சம். மருமகள்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள் என்ற நம்பிக்கையினால்தான் இப்படி ஒரு உரிமையைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியத் தலைவர்களின் நம்பிக்கை தவறு என்கிறீர்களா?

3. இந்த சட்டங்கள் இருந்தாலும் கணவன்களின் கொடுமை தாளமுடியாமல் மருமகளின் நலன் விரும்பும் நமது தலைவர்கள் மீண்டும் 2005ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அதிலும் மருமகள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் எளியோர்கள் என்றும், கணவன்கள் அனைவரும் வன்முறை மட்டுமே செய்யும் கொடிய மிருகங்கள் என்றும் வரையரை செய்திருக்கிறார்கள்.

இப்படி எல்லா சட்டங்களிலும் மருமகள்களுக்கு முழுச்சுதந்திரமும், நல்லவர்கள் என்ற முத்திரையையும் நம்நாட்டு சட்டமேதைகளும், தலைவர்களும் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது அவ்வளவு சாதாரண விஷயமா?

நீங்கள் கூறுவது போல மருமகள்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால் 1961 முதல் 2005 வரை எப்படி இதுபோல மருமகள்களுக்கு மட்டுமே சாதகமாக பல சட்டங்களை இயற்றியிருப்பார்கள்? நம்நாட்டுத்தலைவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்துதான் சட்டத்தை இயற்றுவார்கள்.

உண்மை நிலவரம் நாட்டில் இப்படி இருந்துகொண்டிருக்கும்போது மருமகள்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அவர்களை எப்படி தண்டிப்பது என்று அபாண்டமாக கேள்வி கேட்டிருக்கிறீர்களே?

உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன். சிந்தித்துப் பாருங்கள். அப்போதுதான் மருமகள் அனைவரும் அப்பாவிகள், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள், கணவன்கள்தான் தவறு செய்பவர்கள் என்று உங்களுக்கே புரியும்.

1. 1961 முதல் இன்றுவரை மருமகள்களுக்காக அடுக்கடுக்காக பல சிறப்புச் சட்டங்களை இயற்றிய அரசாங்கம் நீங்கள் கற்பனையாகக் கூறும் நிரபராதி மாப்பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தையும் இயற்றவில்லையே? அது ஏன்?

மாப்பிள்ளை வீட்டார் பக்கம் நியாயம் இல்லை. அதனால்தான் அரசாங்கம் இன்றுவரை ஒரு சட்டம் கூட இயற்றவில்லை. ஆனால் மருமகள்கள் அனைவரும் நல்லவர்கள். 1961ல் இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச்சட்டம் முதல் 2005ல் வந்துள்ள குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்வரை 1984ல் வந்த IPC498A உட்பட எந்த சட்டத்தையும் இன்றுவரை தவறாகப் பயன்படுத்தவில்லை. அதனால்தான் மருமகள்களின் பாதுகாப்பிற்காக அடுத்தடுத்து பல சட்டங்கள் வந்துள்ளன.

2. இங்கே இந்த பதிவில் நீங்கள் கேட்டிருப்பதுபோல உண்மையாகவே மாப்பிள்ளை வீட்டார் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் அரசாங்கத்திடம் இதுவரை தங்களுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தையும் கேட்கவில்லை?

மருமகள்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். நிரபராதி கணவன்களை சிறையில் அடைக்கிறார்கள் என்று இந்த பதிவிற்கே நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்கும்போது உண்மையாக பாதிக்கப்பட்டிருந்தால் மாப்பிள்ளை கூட்டத்தார் அரசாங்கத்திடம் என்றோ இந்தக் கேள்வியை கேட்டு தங்களுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தை கொண்டுவந்திருப்பார்களே! அதை இதுவரை யாரும் செய்யவில்லையே? அது ஏன்?

தவறு செய்யாமல் இருந்தால்தானே மாப்பிள்ளை தரப்பினர் தைரியமாக அரசாங்கத்திடம் கேட்கமுடியும்! அதனால் நீங்கள் கூறும் மாப்பிள்ளை கூட்டம் 100% தவறு செய்கிறார்கள் என்று நிரூபணமாகிவிட்டதல்லவா? அதனால்தான் தாங்கள் நிரபராதி என்று சொன்னாலும் யாரும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மாப்பிள்ளை கூட்டத்தை சிறையில் தள்ளுகிறார்கள். இதுதான் உண்மை. இதற்கு மருமகள்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது.

3. ஏதோ சில வழக்குகளில் போனால் போகட்டும் என்று கணவனை மன்னித்து விடுவித்தால் அதை பொய் வழக்கு என்று சொல்வது முறையாகுமா?அப்படியே நீங்கள் கூறுவதுபோல மருமகள் பொய் வழக்குப்போட்டிருந்தால் நீதிமன்ற விசாரணையில் உண்மை தெரிந்துவிடும். அப்படியிருக்கையில் பொய் வழக்குப் போட்டதாக எத்தனை மருமகள்கள் நீதிமன்றத்தால் இதுவரை தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?

4. இந்தியாவில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் முதல், மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வரதட்சணை வழக்குகள் செல்கின்றன. ஆனால், இதுவரை எந்த நீதிமன்றமும் பொய் வழக்கிற்காக மருமகளை தண்டித்து சிறைக்கு அனுப்பியதாக சரித்திரமே கிடையாது. அப்படியென்றால் நீதிமன்றங்கள் என்ன மருமகள்கள் போடும் பொய் வழக்குகளை வேலை வெட்டியின்றி நடத்திக்கொண்டு மருமகள்களே சபாஷ்! நன்றாகப் பொய்வழக்குப் போடுங்கள் என்று பொய் வழக்குகளை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனவா? இந்திய நீதிமன்றங்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? கண்டிப்பாக இந்திய நீதிமன்றங்களை குறைத்து மதிப்பீடு செய்துவிடாதீர்கள்.

5. அப்படியே நீதிமன்றங்கள் பொய் வழக்குப்போட்ட மருமகளை விட்டுவிட்டாலும் அந்த வழக்கிலிருந்து விடுதலையான நீங்கள் சொல்லும் “நிரபராதி கணவன்கள்” எத்தனை பேர் மறுவழக்குத் தொடர்ந்து பொய்யான புகார் கொடுத்த மருமகள் மீதும், அதற்குத் துணையாக பொய் வழக்குப்போட்ட காவல்துறை மீதும், பொய் வழக்கை தங்கள் மீது திணித்து வாழ்வை அழித்து சிறைக்கு அனுப்பிய அரசாங்கத்தின் மீதும் மானநஷ்ட வழக்கு போட்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள்? அல்லது குறைந்தபட்சம் வழக்காவது தொடர்திருக்கிறார்களா?

இதற்கு உங்களிடம் இருக்கும் பதில் “ஒருவர்கூட இல்லை” என்பதுதான். நான் நிரபராதி என் மீது பொய் வரதட்சணை வழக்குப்போட்டுவிட்டார்கள் என்று சும்மா புலம்பிக்கொண்டிருக்கும் சிலரை பார்த்துவிட்டு நீங்கள் மருமகள்களைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதனால் மருமகள் பொய்வழக்குப்போடுகிறார், அவரை தண்டிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்காமல் கணவன்களையும், அவர்களது குடும்பத்தாரையும் மருமகள்களிடம் சரணடையச் செய்வது எப்படி என்று மாத்தியோசித்தால் கணவன்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

அறிவுப்பூர்வமாக தாங்கள் எழுப்பிய கேள்விக்கு மிக்க நன்றி. இதுபோல தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் தயங்காமல் எழுதுங்கள். தங்களின் கேள்வி மூலம் பல மருமகள்கள் பலன் பெறுவார்கள். நன்றி!

வாழ்த்துக்கள்! 

Tuesday, April 26, 2011

உங்கள் தலைமுடியின் உன்மையான நிறம் !


நமது தலைமுடியின் உன்மையான நிறம் வெள்ளைதான்அதில் மெலனின் என்ற நிறம் கலக்கும்பேது தலைமுடி பல நிறங்களை அடைகிறது. தலை முடியானது சருமத்தின் ரோமக்குழியிலிருந்து தோன்றும் இடத்திலேயே மெலனினும் சேர்ந்துவிடுவதால் முடி கறுப்பாக முளைக்கிறது வயது முதிரும்போது அல்லது  வயதாகி தளரும்போது ரோமக்குழு மெலனின் உற்பத்தியை நிறுத்தி முடியை இயல்பான வெண்மை நிறத்துக்கு விட்டுவிடுகிறது. சிலருக்கு மெலனின் உற்பத்தி சீக்கிரமே சில ரோமக்குழிகளில் குறைந்துவிடுவதால் இளநரை ஏற்படுகிறது. மெலனின் அளவுஅதன் வேதியல் பண்பு ஆகியவற்றுக்கேற்ப ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு விதமான தலைமுடி நிறம் ஏற்படுகிறது

சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது ?


உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். 


'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.



சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது

Sunday, April 24, 2011

அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி: ஆய்வில் தகவல்

 குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), “ஜங்க் புட்’ குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.”ஜங்க் புட்’ எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது.
 இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது. நான்கு வயதுக்குக் குறைந்த நாலாயிரம் குழந்தைகளிடம் அவர்களின் நுண்ணறிவுத் திறன் ஆய்வு செய்யப்பட்டது.அவர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகளுக்கு ஏற்ப, நுண்ணறிவுத் திறன் குறைவது கண்டறியப்பட்டது. சராசரியாக, 1.67 சதவீதம் இயல்பு நிலையில் இருந்து குறைவது தெரியவந்தது. இந்த இழப்பை சரி செய்ய முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்து நார்த்ஸ்டோன் கூறியதாவது:பிரிட்டனில் குழந்தைகள், மோசமான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகளவில் உள்ள உணவுகளை மட்டுமே பெருமளவில் உண்பதால், எட்டரை வயதில் அவர்களின் நுண்ணறிவுத் திறனில் பெரும் குறைபாடு நிகழ்கிறது.ஆனால், ஆரோக்கியமான உணவு முறை, நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கிறது. இந்த வயதில், நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளைக் கொடுத்தால் அவர்களின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.இவ்வாறு நார்த்ஸ்டோன் தெரிவித்தார்.

முகமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ துறையின் ‘புதிய முகம்’


 உலகிலேயே முழுமையான முதல் முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக ஒரு நபருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெவ்வேறு நபர்களின் முக திசுக்கள், தோல், மூக்கு, உதடு, கன்னம் ஆகியவற்றை தானம் பெற்று, இந்த நபருக்கு பொருத்தி சாதனை படைத்துள் ளனர், ஸ்பெயின் டாக்டர்கள். பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி நாம் அதிகமாகவே கேள்விப்பட்டுள் ளோம். குறிப்பாக, திரையுலகில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வோர் அதிகம். முகத்தில் உள்ள மூக்கு உள்ளிட்ட ஏதாவது உறுப்பின் அமைப்பு, தங்களுக்கு பிடிக்கவில்லை எனில், நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, அவற்றின் அமைப்பை சரிசெய்து கொள்வது வழக்கம். விபத்தில் அல்லது பேராபத் தில் சிக்கி, முகம் சிதைந்து போனால், முகமே விகாரமாகி விடும். விகாரத்தை மறைத்து, மீண்டும் முழுத் தோலுடன் முகத்தை மீட்பதற்கென, ‘முக மாற்று அறுவை சிகிச்சை’ செய்யப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் தான், இந்த முகமாற்று அறுவை சிகிச்சைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
கடந்த 2005ல் பிரான்சைச் சேர்ந்த இசபெல்லா (38) என்ற பெண், அவருடைய செல்ல நாய்க் குட்டியை அளவுக்கு அதிகமாக கொஞ்சியதாலோ என்னவோ, அந்த நாய் அவருடைய முகத்தை கடித்துக் குதறி ஒரு வழியாக்கி விட்டது. முகத்தின் ஒரு பக்கம், விகாரமாகி விட்டது. சிதைந்து போன பகுதியைச் சீராக்க, அவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பின், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த அறுவை சிகிச்சைகள் நடந்தன.


தற்போது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, முழு முகத்தையும் மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் பெயர், மிகவும் ரகசிய மாக வைக்கப்பட்டுள்ளது. இவர், சில ஆண்டுகளுக்கு முன், ஒரு விபத்தில் சிக்கிவிட்டார். அவரது முகத்தில் பலமாக அடிபட்டது. முகத்தின் அமைப்பு, முழுவதுமாக மாறி விட்டது. வாய் கோணலாகி, வித்தியாசமாக காட்சி அளித்தது. பற்களையும் காணவில்லை. மூக்கு இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. அந்த இடத்தில் ஒரு சிறிய துளை மட்டுமே இருந்தது. அதன் பின், அவரால் மூச்சு விட முடியவில்லை; உணவு உண்ண முடியவில்லை; பேச முடியவில்லை. இதையடுத்து, டாக்டர் களை அணுகிய இந்த நபர், சிறிய அளவிலான முகமாற்று அறுவை சிகிச்சைகளை மேற் கொண்டார். பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அங் குள்ள, வால் டி ஹெப்ரோன் என்ற மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சமீபத்தில் முகமாற்று அறுவை சிகிச்சை நடந்தது. 30 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர், தொடர்ந்து 22 மணி நேரம் போராடி, அவரது முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண் டனர். அடையாளம் காட்டப்படாத ஒரு நபரிடமிருந்து தானம் பெற்ற முகத் திசுக்கள், மூக்கு, தாடை, பற்கள், கன்னத்தில் உள்ள எலும்புகள், தோல் ஆகியவை இவருக்கு பொருத்தப் பட்டன. பற்கள், கன்ன எலும்புகள் ஆகியவற்றை தாங்கி நிற்பதற்காக சிறிய உலோகத் தகடுகளும் அவரது முகத்தில் பொருத்தப்பட்டன. அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டபோது, உறுப்புகளை தானம் கொடுத்தவரின் முகம் போல், இவருக்கு அமைந்து விடக் கூடாது என்பதில், டாக்டர்கள் கவனமாக இருந்தனர். அறுவை சிகிச்சை முடிந்து, ஒரு வாரம் அவர் ஓய்வில் இருந்தார். பின், டாக்டர்கள், கண்ணாடியில் அவரது முகத்தை காட்டினர். அதில் தனது புதிய முகத்தை பார்த்த அந்த நபர், மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘அறுவை சிகிச்சைக்கு முன், அவரது நெற்றி, கழுத்து ஆகிய இடங் களில் பெரிய தழும்புகள் இருந்தன. தற்போது அதற்கான தடயமே இல்லை’ என்றார். ஸ்பெயினில் நடந்துள்ள இந்த முழுமையான முதல் முகமாற்று அறுவை சிகிச்சை, மருத்துவத் துறையில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தின் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

Thursday, April 7, 2011

தாய்ப்பால் தராதது காரணம் குழந்தை படிப்பில் பின்தங்கியிருக்கிறதா?


ஐக்கிய நாடுகள் ஆதரவில் இயங்கும் யுனிசெப் அமைப்பும், இந்திய பிரஸ் இன்ஸ்டியூட்டும் இணைந்து, சென்னையில் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கில் குழந்தைகள் நலன் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கும் இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது. குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் ஆகியோருக்கு என, யுனிசெப் இலக்குகளை முன்னிறுத்தி தொடர்ந்து செயல்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் ஓரளவு பின்பற்றுகின்றன. மருத்துவத் துறை, சமூகநலத் துறைகள் ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றும் பலர் இதில் பங்கேற்று கூறிய கருத்துக்கள், நாம் சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் குழந்தைகளின் நலனில் மிகவும் பின்தங்கியிருக்கிறோமோ என்று கருத வைக்கிறது. இது தேர்தல் நேரம். இலவசங்களைப் பற்றி அதிகமாக பேசும் அளவுக்கு இவைகளை யார் சிந்திக்கப் போகின்றனர்.
அக்கருத்தரங்கில் கூறப்பட்ட சில தகவல்கள்
*குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் தர வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப் பால் கட்டாயம் தேவை. மூளை செல்கள், குறிப்பாக அறிவுத்திறன் வளர்க்கும் செல்களை வளரச் செய்யும் காலம் அது. அதை வளரச் செய்யும் அபூர்வ இயற்கையின் கொடை இது.
* தாய்ப்பால் தருவதை நிறுத்தி விட்டு, அப்புறம் பள்ளியில் படிப்பும் திறன் குறைவதாக கூறி மருத்துவ ஆலோசனை, கூடுதல் ஊட்டச்சத்து எதற்கு? அதற்காகும் செலவு எவ்வளவு? தவிரவும் மிகவும் ஏழ்மையில் இருக்கும் தாய் கூட முதல் ஆறு மாதங்களுக்கு தன் குழந்தைக்கு தேவைப்படும் பாலை தர திறன் பெற்றவர்.
* ஆரம்ப சுகாதார நிலையங்களில், தற்போது பிரசவ வசதி இருப்பதால், வீட்டில் பிரசவம் என்பது மிகவும் குறைவு. ஆனால், கேரளாவை ஒப்பிடும் போது தமிழகத்தில் குழந்தை பிறப்பிற்கு பின் இறக்கும் தாய் எண்ணிக்கை அதிகம். ஆரம்ப சுகாதார நிலையங்களை முன்னணிப்படுத்தி தமிழக அரசு அக்கறை காட்டுவது நல்லது. ஆனால், தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் சரியாக இயங்குவதில்லை.

* இங்கே டாக்டர்கள் நியமித்தாலும் அவர்கள் பணியில் இருப்பதில்லை. இந்த நிலையை மாற்றினால் தான், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்க்கப்படும் கர்ப்பிணிகள் அடுத்த கட்ட மேல் சிகிச்சையை அபாயமின்றி மேற்கொள்ள முடியும். இந்த கட்டத்தில் தமிழகத்தில் நிலை பின்தங்கியிருக்கிறது.
* தற்போது கிராமங்களில் குழந்தைகளுக்கு தரப்படும் உணவு போதிய ஊட்டச்சத்து நிரம்பியதாக இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் சராசரி வருமானம் உடைய குடும்பத்தில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு ஏற்பட்டு, அதிக நோய்களுடன் பலர் வாழ நேரிடும்.
* பெரிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் இருப்பதைப் போல, கிராமப்புறப் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை என்பதால், மாணவியர் கல்வி பாதியில் விடுபட்டுப் போகிறது. அது மட்டுமின்றி, பள்ளிகளில் மாணவியருக்கு பாலியல் பலாத்காரம் என்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. பள்ளிக் கழிப்பறையில் ஒரு சிறுமி குழந்தை பிரசவித்த செய்தி, அதன் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இவ்விஷயத்தில் முன்கூட்டியே அக்கறை காட்டாத தன்மையை வெளிப்படுத்துகிறது.
* ஒருங்கிணைந்த அணுகுமுறையால் விழிப்புணர்வு ஏற்படுத்தாவிட்டால், 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் யுனிசெப் இலக்கை அடைவது சிரமம். அது ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாக்கும் செயலுக்கு தடையாகும்.

சிறுநீர் பரிசோதனையின் அவசியம்!


உடல் இயக்கம் சீராக நடைபெற காரணமாக இருக்கும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. நாம் சாப்பிடும் உணவு செரிமானமானவுடன் உருவாகும் கழிவுப்பொருட்களில் இருந்து சிறுநீரையும், கார்பன் டை ஆக்சைடையும் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான வேலையை செய்வது சிறுநீரகம்.
நம் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன வகையான நோய் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
சில நேரங்களில் வலியில்லாமலும் சிவப்பு நிறத்திலும் சிறுநீர் வெளியேறும். அதற்கு காரணங்கள்:
* சிறுநீர் உருவாகும் பாதை அல்லது சிறுநீரகத்தில் நீண்டநாளாக நோய் இருப்பது.
* சிறுநீரகத்தின் சிறுநீர் உருவாகும் பாதையில் உள்ள கிரானுலோமேட்டஸ் பகுதியில் தொற்று நோய் உருவாதல்.
* சிறுநீரகத்தில் பெனின் நியோபிளாஸ்டிக் மற்றும் மாலிக்னன்ட் நியோபிளாஸ்டிக் போன்றவற்றில் புண் உண்டாதல்.
பால் போன்ற சிறுநீர் உருவாதல்:
கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலோ அல்லது நிணநீர் சுரப்பதில் குறைபாடு இருந்தாலோ பால்போன்ற சிறுநீர் வெளியேறும்.
மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற சிறுநீர் உருவாதல்:
இதற்கு காரணம் செரிமானம் சீராக இல்லாமல் இருத்தல், காய்ச்சல் அதிகமாக இருப்பது, பைலிருபின் அதிகரித்து இருப்பது.

மேகம் போன்ற சிறுநீர் உருவாதல்:
பாஸ்பேட், கார்பனேட், யூரேட், லியுகோசைட், ஸ்பெர்மட்டோசோவா மற்றும் பிராஸ்டேட்டிக் திரவத்தில் மாற்றம் உண்டாகி இருந்தால், மேகம் போன்ற சிறுநீர் வெளியேறும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு:
நீரிழிவு நோய் காரணமாக, சிறுநீரில் அதிகளவு கலோரி சத்து வெளியேறுவதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்படும். உடல் மெலிந்து காணப்படுவர்.
நீலம் கலந்த பச்சை நிற சிறுநீர்:
சியுடோமானஸ் என்ற ஒருவகை பாக்டீரியா தொற்றுநோய் ஏற்பட்டு இருந்தால் நீலம் கலந்த பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும்…


விரல் நகங்களை மிக நீளமாக வளர்த்து வைத்திருப்பது நல்லதல்ல. நகங்களுக்கு கீழுள்ள இடத்தில் அழுக்கும், நோயை உண்டாக்கும் கிருமிகளும் தங்கியிருக்கும். நாம் சாப்பிடும் போது, நகத்திலிருந்து சாப்பாட்டுடன் சேர்ந்து இவைகளும் வாய்க்குள் போய் விடும். அதே போல, நகத்தைக் கடிப்பதும் நல்ல பழக்கமல்ல. சிலருக்கு நகத்தைக் கடிப்பது, நிறுத்த முடியாத ஒரு பழக்கமாக ஆகி விடுகிறது. இது தவறு.
நகத்தை வளர வளர வெட்டிக்கொண்டே இருந்தால், நகத்துக்கடியில் கிருமி சேர வாய்ப்பே இல்லை. தினமும் வளர்ந்து கொண்டிருக்கும் நகம், நாம் உயிரோடிருக்கும் வரை வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அதை தடுக்க முடியாது. நாம் தான் அதை ஒழுங்காக, வளர, வளர, வெட்டி விட்டுக் கொண்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் வயல்களில் வேலை செய்பவர்களின் விரல் நகங்களில், வேலை பார்க்கும் போது மண், அழுக்கு முதலியவை உள்ளே போய் சேர்ந்து, கறுப்பாக, பார்க்கவே அசிங்கமாக இருக்கும். இவர்களெல்லாம் வேலையில்லாமல் சும்மா உட்கார்ந் திருக்கும் போது, நகத்துக்கடியில் இருக்கும் அழுக்கை, தென்னங்குச்சியை வைத்து நோண்டி சுத்தம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். வேலை பார்க்கும் போது நகத்துக்கடி யில் மண், அழுக்கு முதலியவை சேருவது மிகவும் சகஜம். இதை தவிர்க்க முடியாது. ஆனால் இவர்கள் முதலிலேயே விரல் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருந்தால், வேலை பார்க்கும் போது மண்ணோ, அழுக்கோ சேர வாய்ப்பில்லை அல்லவா!

கால் விரல்களிலும் நகங்களை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கால் நகங்கள் வாய்க்கு வரவேண்டிய வேலை இல்லை. அதனால் விட்டு விடலாம், எனவே கைவிரல் நகங்களைப் பற்றித் தான் அதிகமாக கவலைப்பட வேண்டும். இடது கை விரலில் நகங்கள் வளர்ப்பது இன்னும் மோசம். காலைக் கடன்களுக்கு இடது கைதான் அதிக மாக உபயோகப்படுகிறது. எனவே இடது கை விரல் நகங்கள் மிக மிக சுத்தமாக எப்பொழுதும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கை, கால் விரல் நகங்களை உரசி விட்டு, ஒழுங்காக, அழகாக, வெட்டி விட்டு சுத்தம் செய்து, நெயில் பாலிஷ் போட்டுவிட்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்படி செய்ய அழகு நிலைங்கள் தற்போது நிறைய இருக்கின்றன. கை விரல் நகங்களுக்கு ரூ.150 லிருந்து ரூ.300 வரையிலும், கால் விரல் நகங்களுக்கு ரூ.250 லிருந்து ரூ.600 வரை யும் வாங்குகிறார்கள். இப்படியிருக்கும் போது, நகத்தை வளர்க்கக் கூடாது. வெட்ட வேண்டும் என்று சொன்னால் நகம் வளர்ப்பவர்களுக்கு கோபம் தான் வரும். என்ன செய்வது! நல்ல விஷயத்தை சொல்லித்தானே தீர வேண்டும். விரல் நகங்கள் நூறு சதவிகிதம் சுத்தமாக இருக்காது என்பதனால் தான், தற்பொழுது வெளிநாடுகளில் உணவு தயாரிக்கும் இடத்திலும், உணவு பரிமாறும் இடத்திலும் ரோபோக்களை பயன் படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதேபோல் அழுக்கான நகம், செத்துப் போன நகம், காய்ந்து போன நகம், நோயினால் பாதிக்கப்பட்ட நகம்- இம்மாதிரி பார்ப்பதற்கு நன்றாக இல்லாத நகம் உடையவர்களுக்காகவே, தற்பொழுது `செயற்கை நகம்’ வந்து விட்டது. இயற்கை நகத்துக்கு மேலே, இந்த செயற்கை நகத்தை `க்ளிப்’ போல மாட்டிக் கொள்கிறார்கள்.
நகங்களை ஒழுங்காகவும், சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண் டும். நகங்களுக்குக் கீழே அழுக்கு சேர விடக்கூடாது. கொஞ்சம் நகம் வளர்ந்தாலே, உடனே வெட்டி விட வேண்டும். நகங்களை வெட்டுவதற்கு `நக வெட்டிகள்’ பலவித மான மாடல்களில் கிடைக்கின்றன. நகத்தை வெட்டுகிறேன் என்று சொல்லி விட்டு, சிலர் நகத்தோடு சேர்த்து சதையையும் வெட்டிக்கொள்வார்கள். அந்த இடம் வீங்கி, சிவந்து, புண்ணாகி ஆறுவதற்கு ஒரு வாரம் ஆகும். அதிலும் சர்க்கரை வியாதி இருக்கிறவர்களுக்கு சில நேரத்தில் விரலையே எடுக்கும்படி ஆகி விடும். ஆகவே கவனமாக வெட்டுங்கள். வெட்டுவதற்கு முன்பும், பின்பும், வெந்நீரில் கைகளையும், நகவெட்டியையும் நன்கு கழுவிவிட்டு, அதற்குப் பின் வெட்டுங்கள்.
`நகச்சுத்து’ என்று சொல்வார்களே, அதுவும் இந்த மாதிரி காரணங்களினால் ஏற்படுவது தான். ஒருவர் உபயோகிக்கும் நகவெட்டியை, இன்னொருவர் உபயோகித்தால் கூட, ஒருவருடைய நகத்திலிருக்கும் `பங்கஸ் நோய்’ அடுத்தவருக்கு மிகச் சுலபமாக வர வாய்ப்புண்டு. வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனியாக நக வெட்டியை வைத்துக் கொள்ள முடியாது. எனவே நகவெட்டியை உபயோகப்படுத்துவதற்கு முன்பு, வெந்நீரில் போட்டு, எடுத்து அதற்குப் பின் உபயோகியுங்கள். அதே மாதிரி நகங்களை வெட்டு வதற்கு முன் கை, கால்களை `டெட்டால்’ போன்ற கிருமி நாசினியை வெந்நீரில் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும்.

நகம் வெட்டுவதற்காக அழகு நிலையங்களுக்கெல்லாம் போக வேண்டிய தேவை யில்லை. வீட்டிலேயே பொறுமையாக அழகாக வெட்டிக் கொள்ளலாம். நன்கு நீளமாக வளர்ந்த பிறகு வெட்டலாம் என்று நினைப்பதை விட, ஞாயிற்றுக்கிழமைகளில், வாரத் திற்கொரு முறை எவ்வளவு அதிகமாக வளர்ந்திருக்கிறதோ, அவ்வளவு நகத்தையும் வெட்டி விடுங்கள். வலது கையால், இடது கைவிரல் நகங்களை வெட்டுவது சுலபம். அதே நேரத்தில் இடது கையால், வலது கை விரல் நகங்களை வெட்டுவது சற்று கடினம். பார்த்து செய்யுங்கள்.
நகங்களை வெட்டிய பின், வெட்டிய பாகங்களை நன்றாக தேய்த்து பாலீஷ் செய்து விடுங்கள். அடுத்தவர்களை விட்டு நகங்களை வெட்டச் சொல்லாதீர்கள். அவர்கள் நகத்தோடு, சதையையும் சேர்த்து வெட்டிவிட வாய்ப்புண்டு.
சிறிய குழந்தைகளுக்கு நகத்தை வெட்டிவிடும்போது, மிகவும் ஜாக்கிரதையாக செய்யுங்கள். கைகளை அடிக்கடி கழுவும் பழக்கமுள்ளவர்கள், அதிக ஸ்ட்ராங் இல்லாத லோஷன் அல்லது சோப்பில் கழுவ வேண்டும். அதிக நேரம் துணியுடனும், சோப்புடனும், பாத்திரத்துடனும் இருப்பவர்கள், கையில், கையுறை போட்டுக் கொள்ள வேண்டும். அதே மாதிரி சமையல்காரர்கள், பெயிண்ட் அடிப்பவர்கள் கையுறை போட்டுக் கொள்வது நல்லது. நெயில் பாலிஷ் போடுவது நல்லது என்று சிலர் சொல் வதுண்டு. நகங்கள் உடைவதற்கு நெயில் பாலிஷ்தான் காரணம். இயேசு பிறப்பதற்கு முன்பிருந்தே, நகங்களுக்கு பாலிஷ் போடும் பழக்கம் இருந்ததாக கூறுவதுண்டு. நெயில் பாலிஷ் ரிமூவர் உபயோகிப்பதும் நல்லதல்ல.
இதைப் படிப்பவர்களில் சிலருக்கு, கையால் சாப்பிடுவதை விட்டு விட்டு, ஸ்பூனில் சாப்பிடலாமே என்று தோன்றும். கையில் சாப்பிடும் திருப்தி, ஸ்பூனில் கிடைக்குமா!
சற்று நீள நகங்கள், தொழில் ரீதியாக சிலருக்கு உபயோகப்படத்தான் செய்கிறது. இருப்பினும் அந்த நகங்களுக்கு உள்ளே, அழுக்கும், கிருமியும் வேண்டாதவைகளும் சேர வாய்ப்பு அதிகம் என்பதால், நகம் வளர்ப்பதை விட, வளர்க்காமல் இருப்பதே நல்லது.
சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் நன்றாக கைகளை கழுவுங்கள். சோப்பை உபயோகித்து, அடிக்கடி விரல்களையும், நகங்களையும் கழுவுங்கள். பச்சைக்காய்கறி கள், பழங்கள், கேரட், பால், மீன் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நகங்கள் ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய அனைத்தும் நல்லவையே.
கின்னஸ் சாதனைக்காக சிலர் நகங்களை வளர்க்கிறார்கள். இது சாதனைக்கு மட்டும்தான் உபயோகப்படுமே தவிர, வேறு எதற்கும் உபயோகப்படாது. ஹோட்டல்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கையுறை எதுவும் போடாமல்தான் மாவைப் பிசைகிறார்கள். காய்கறிகளை வெட்டுகிறார்கள். இன்னும் சமையலறையில் நிறைய வேலைகளில், கரண்டிக்குப் பதிலாக, கைகள்தான் உபயோகத்தில் இருக்கின்றன. அவர்கள் இவ்வாறு வெறும் கைகளை சமையலுக்கு உபயோகிக்கும் போது, அந்த கைவிரல் நகங்களுக்கு உள்ளேயிருக்கும் அழுக்கும், கிருமியும், அந்த சமையலிலும் போய்ச் சேருமல்லவா! இது நல்லதா! எங்கெல்லாம் வெறும் கையில் உணவு தயாரிப் பதை நீங்கள் பார்க்கிறீர்களோ, அங்கெல்லாம், நீங்களே உடனடியாக அவர்களை `கையுறை’ போட்டு வேலை பார்க்கச் சொல்லுங்கள். நகம் வளர்ந்திருந்தால் உடனே வெட்டச் சொல்லுங்கள். அடுத்தவர்களை சொல்வதற்கு முன்பு, முதலில் நீங்கள் விரல் நகங்களை சுத்தமாக வைத்திருங்கள். வீட்டில் உள்ளவர்களையும் வாரா வாரம் நகத்தை வெட்டச் சொல்லுங்கள். குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்தே இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அதிகமாக வளர்க்கப்படும் விரல் நகங்கள், நோய்க்கிருமிகளை சுமந்து கொண்டிருக்கும் ஒரு வேண்டாத பொருள் தானே தவிர, அழகுப் பொருள் அல்ல.

உப்பு… சில சிறப்புத் தகவல்கள்!



முற்காலத்தில், உப்பெடுக்கும் உப்பளங்கள் நிறைந்த `ஒஸ்டியா’ என்ற பகுதியில் இருந்து ரோமுக்கு உப்புக் கொண்டுவர ஒரு பெரிய சாலையையே ரோமானியர்கள் அமைத்திருந்தனர். அந்தச் சாலைக்கு `வயசாலரியா’ என்று பெயர். மேலும், முன்பு ரோமானியப் படை வீரர்களுக்கு ஊதியமாக உப்போ அல்லது அதை வாங்கத் தகுந்த அளவு பணமோதான் கொடுத்தனர். அந்தப் பணத்துக்கு `சாலரியம் அர்ஜெண்டம்’ என்று பெயர். அது மருவித்தான் `சாலரி’ (சம்பளம்) ஆயிற்று.
நட்புக்கு உப்பை அடையாளமாகக் கொண்டிருந்தனர் அரேபியர்கள். உப்பே கிடைக்காத நாடுகளில் உப்பு வைத்திருப்பவர்கள் பணக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். இஸ்ரேலில் உப்பு வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. நம் நாட்டிலும் நவக்கிரகங்களில் ஒன்றுக்கு உப்பு நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது.
சீனர்களும், இந்தியர்களும், எகிப்தியர்களும் நீண்ட காலத்துக்கு முன்பே உப்பைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தனர். டிராய் நகரில் கி.மு. 13-ம் நூற்றாண்டில் மீன்களை உப்புப் போட்டுக் காயப்போடும் வழக்கம் இருந்திருக்கிறது.
உப்பு, உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று. உணவு செரிக்க, நரம்புகளின் செயல்திறனை அதிகரித்து உமிழ்நíர் சுரக்க உப்பு உதவி செய்கிறது. உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் உப்பு தேவைப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இது அவசியமாகிறது.
நமது உடலை `உப்புக் கடல்’ என்று சொல்வது பொருத்தமாகவே இருக்கும். நமது உடல் சுரக்கும் சில நீர்களிலும், ரத்தத்திலும் உப்பு கலந்திருக்கிறது. கண்ணீர், வியர்வை, சிறுநீர், மலம் ஆகியவற்றிலும் உடலுக்குப் போக மீதியாகும் உப்பு கலந்து வெளியேறுகிறது. உடலில் உள்ள நீரோட்டத்தையும், ரத்த ஓட்டத்தையும் ஒழுங்குபடுத்துவது இதுதான்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல உடலில் உப்பு அதிகமானால் வியாதி வரும். அதேபோல் உப்பின் அளவு குறைந்தாலும் நோய் தோன்றும்.

Sunday, April 3, 2011

மருந்து... மாத்திரை... உணவு!




சில நோய்களுக்கான மருந்துகளை சாப்பிடும் காலகட்டத்தில் மிகுந்த ஆரோக்கியம் தருவதாக நம்பும் உணவு வகைகளைக்கூட சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் எதிர்விளைவுகள் ஏற்பட்டு விடும்.

* தொற்றுநோயின் பாதிப்பிற்காக `ஆன்டிபயாடிக்' மருந்துகள் சாப்பிடுவோர், பாலையும், `யோகர்ட்' உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இறைச்சியையும் ஒதுக்கி விடலாம்.

* வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு'களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் வயிற்றுப் போக்கு இன்னும் மோசமாகி விடும்!

* ஒவ்வாமைக்காக மருந்து சாப்பிடும்போது, நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்ளும்போது, கால்சியம் செறிந்த உணவுகள், முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்திடுங்கள். வேறு வழியின்றி சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

* நீங்கள் வலிநிவாரணி மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும்.

* மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம்.

* மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம்.

Sunday, March 27, 2011

ஹெல்த் டிப்ஸ் - மலச்சிக்கல்


நம் மூதையர் காலத்தில் இருந்து தற்காலம் வரையுள்ள அநேக பேர்களுக்கு உள்ள பிரச்சனை மலச்சிக்கல் பிரச்சனை ஆகும். தற்போது எடுத்துள்ள சர்வேயின்படி உலகத்திலுள்ள 10 % க்கும் மேலே உள்ளவர்கள் மலச்சிக்களால் அவதிப்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதற்கு 70 க்கும் மேற்ப்பட்ட மருந்துக்கள் உள்ளன. டாக்டர்கள் எப்போதுமே மருந்துக்கள் எழுதி தருவார் அல்லது நிறைய காய்கறிகள், பழம். தண்ணீர் & உடல் பயிற்ச்சி செய்ய கூறுவார்கள்.




மருந்துக்கள் முலம் சரி செய்வது ஒகே என்றாலும் அது இயற்கையான வழியாகாது. இதை மனதில் வைத்து வலையில் மேய்ந்த போது சில நல்ல பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அந்த குறிப்புகள் நல்ல உபயோகமாக இருக்கும் என்று தோன்றியதன் விளைவே இந்த ஹெல்த் டிப்ஸ் பக்கம். இதை நம் தமிழ் உலக மக்களுக்கு பயன் பட வேண்டுமென்று அதை நான் இங்கு தருகின்றேன்.


ஒவ்வொரு நாளும் காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். எப்போது மலம்வரும் போல இருக்கும் போது உடனே கழித்துவிட வேண்டும். அடக்கி கொண்டு பிறகு போகலாம் என்று நினைக்க கூடாது. 


டாய்லெட்டில் எப்படி உட்காரவேண்டும் என்பது மிக முக்கியம். கீழேயுள்ள படத்தை பாருங்கள்.

படத்திலுள்ள படி முன்புறமாக 45-50 டிகிரி சாய்ந்த படி உட்கார்ந்தால் மலவாய் தளர்வாகவும், நேவாகவும் இருப்பதால் எந்த வித முயற்ச்சியில்லாமல் எளிதாக மலம் போகலாம். காலை படத்தில் உள்ளபடி வைக்கவும்.. இது மலம் கழிப்பதற்கு மிகவும் குட் பொஸின் ஆகும்.


ரொம்ப மலச்சிக்கல் உள்ளவர்கள் எனிமா முறையை கடைப் பிடிக்கலாம்.. இதற்கு என மருத்துவ கடையில் எனிமா சிரின்ஸ் விற்ப்பார்கள் அதை வாங்கி உபயோகிக்கலாம்.எனிமா சிரின்ஸ் படம் கிழேயுள்ளது.


சிம்பிள் சால்ட் வாட்டர் எனிமா எளிதானது. மிதமான வார்ம்முள்ள 4 கப் வாட்டரில்( 8 oz = 1 cup) 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கரைத்து உபயோகிக்கவும். நெட்டில் நீங்கள் வேறுவிதமான முறைகளையும் காணலாம்.




இது உபயோகமாக இருக்கும் என்று தோன்றினால் இதை தேவைப்படுபவர்களுக்கு சொல்லுங்கள் Download As PDF

1 ரூபாயில் உங்கள் கிட்னியை சுத்தம் செய்ய?

நமது இரத்தத்தில் உள்ள உப்பையும், விஷத்தன்மையையும் பில்டர் செய்து சுத்தம் செய்யும் வேலையை நமது கிட்னி செய்து வருகின்றது. அப்படிபட்ட மகத்தான வேலையை நமது கிட்னி இராப்பகலாக செய்து வருகின்றது. அப்படிபட்ட கிட்னியை அவ்வப்போது நாம் தனிப்பட்ட கவனம் செலுத்தி கவனித்து வந்தால் அதன் ஆற்றல் நீண்ட நாள் இருப்பதுடன் ஸ்லோவாக இல்லாமல் வெகு தரத்துடன் இயங்கும். இதற்கு நாம் செய்யவேண்டியது மிகவும் எளிது அதற்கு தேவை 1 ரூபாய் மட்டுமே. 



இந்த ஒரு ரூபாய் கொண்டு நான் கொத்தமல்லிதழை என்னும் இலையை வாங்கி அதை சிறிதாக நறுக்கி சுத்தமான நீரில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு அதன் பிறகு அதை வடிகட்டி ஆற வைத்து தினமும் ஒரு க்ளாஸ் குடித்து வந்தால் நமது கிட்னி மிகவும் சுத்தமாக்கபட்டு நன்றாக வேலை செய்யும். சால்ட் & விஷக் கழிவுகள் யூரின் மூலம் வெளி வருவதை நீங்கள் கவனிக்கலாம் அதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடம்பில் ஒரு வித புது மாற்றத்தை உணரலாம்.

இது ஒரு இயற்கையான கிட்னியை சுத்தம் செய்யும் முறையாகும். 

கொத்தமல்லி தழையை ஆங்கிலத்தில் Coriander (Coriandrum sativum) என்றும், ஹிந்தியில் இதை Dhania என்றும் அமெரிக்காவில் இதை Cilatro என்றும். இதையையே வெஸ்டர்ன் உலகத்தில் Chinese parsley or Mexican parsley என்றும் அழைப்பார்கள்.

Saturday, March 26, 2011

ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை நாமே குறைத்துக் கொள்ளலாமா?


TRANS FAT என்றால் என்ன? இது நம்மை எப்படி பாதிக்கிறது?

நாம் உபயோகிக்கும் சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் போது TRANS FAT என்ற கெட்ட கொழுப்புகள் உற்பத்தியாகின்றன. இவை L.D.L.,என்னும் கெட்ட கொழுப்பை, குறிப்பாக "ஸ்மால் டென்ஸ் எல்.டி.எல்.' என்ற கெட்ட கொழுப்பை அதிகரிக்கின்றன. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன.எந்த தரமான எண்ணெயையும் மீண்டும், மீண்டும் நாம் சமையலுக்கு
பயன்படுத்தினாலும், இவ்வகை கொடூரமான டிரான்ஸ்பேட் என்னும் கொழுப்புகள் உருவாகின்றன.இவற்றை பெரும்பாலும், ஓட்டல்கள், விடுதிகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, நம் வீட்டிலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

எனக்கு மூன்று ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. அதற்கு என் டாக்டர் இரு மாத்திரைகளை தந்துள்ளார். ரத்த அழுத்தத்தால் எனது உடலில் எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், மாத்திரையை எடுக்கும் போது மிகவும் சோர்வாக உள்ளது. எனவே, அதை நிறுத்தி விட்டேன். தற்போது ரத்த அழுத்தம் 150/100 என்ற அளவில் உள்ளது. நான் என்ன செய்வது?

ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்காவிட்டால் பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தி விடும். ரத்தக்கொதிப்பு இருப்பதால் ஒருவருக்கு அறிகுறி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த நேரத்திலும் 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும்.உங்களுக்கு தந்துள்ள மாத்திரையால் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். எனவே, உங்கள் டாக்டரிடம் சென்று கலந்து பேசி, அதை மாற்றி அமைத்தால் பாதிப்பை நீக்கலாம். தற்போது ரத்தக்கொதிப்புக்கு பக்கவிளைவு இல்லாத மாத்திரைகள் உள்ளன.

உடல் மெலிவாக இருப்பது அழகா? ஆரோக்கியமா?

இந்தியாவில் மிகச்சாதாரணமாக ஏற்படும் தொற்றாக, டைபாய்டு உள்ளது. மூன்று அல்லது அதற்கு மேலான நாட்களில் காய்ச்சல் தொடர்ந்தால், அது டைபாய்டாக இருக்கும் என முடிவு செய்யப்படுகிறது. "சல்மோநெலா' என்ற வகை பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது. கழிவுநீர் மூலமும், இந்நோய் தாக்கியுள்ள ஒருவர் அளிக்கும் உணவை சாப்பிடுவதன் மூலமும் இந்நோய் ஏற்படுகிறது.நம்மூர் அனைத்திலும் கழிவுநீர் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்ற சிறந்த
முறை பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் டைபாய்டு தொற்று ஏற்படுவது இயற்கையே. அதிர்ஷ்டவசமாக, டைபாய்டை தவிர்க்க தடுப்பு மருந்துகள் உள்ளன. 2 வயது நிறைந்தவுடன், ஒரு ஊசி போடலாம்.
பின், ஒவ்வொரு 3 வயது கூடும்போதும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து உட்கொள்ள வேண்டும். வாய் வழியே சாப்பிடும், நோய் தடுப்பு மருந்தும் உள்ளது. மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இதை சாப்பிட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு நோய் வராமல் தடுக்கலாம்.நோய் தடுப்பு மருந்தை, அரசு இலவசமாக வழங்குவதில்லை. எனவே, பெரும்பாலான மக்களுக்கு, இம்மருந்தின் அவசியமும், முக்கியத்துவமும் புரிய வில்லை. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இந்த மருந்து கிடைக்கிறது.ஒரு டோஸ் மருந்தின் விலை 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இம்மருந்தை உட்கொண்டால், லேசான காய்ச்சலும், உடல் வலியும் ஏற்படும். பின் தானாகவே சரியாகி விடும்.டைபாய்டை ஏற்படுத்தும் பாக்டீரியா, உடலில் நுழைந்தவுடன், கடுமையான காய்ச்சலும், இரண்டு வாரங்களில், உடல் முழுவதும் சிவந்த கீறல்களும் ஏற்படும். நாக்கில் மேல்படலம் படிந்து, வெண்மையாகி விடும். அடிவயிறு வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். நாளமில்லா சுரப்பிகள், கல்லீரல் வீங்கி விடும்.ரத்தப்பரிசோதனை செய்தால், வெள்ளை அணுக்களின் அளவு குறைந்திருக்கும். கிருமி, ரத்தம், மலம், சிறுநீர் ஆகியவற்றிலும் காணப்படும்.முன்பு, டைபாய்டுக் கென தனியான பரிசோதனை முறை கிடையாது."விடால்' என்றழைக்கப்படும் இந்த பரிசோதனை, பல நோய்களுக்கும் பொதுவானபரிசோதனை யாக மட்டு மே அமைந் தது.இரண்டு வாரங்கள் வரை காத் திருந்து, பிறகு மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வளவு நாள் எப்படி காத்திருக்க முடியும்?இப்போது, அட்டை முறை உட்பட பல பரிசோதனை முறைகள் வந்து விட்டன. டைபாய்டை கண்டறியாவிட்டால், மூன்றாவது வாரத்தில், மூளை, நுரையீரல், எலும்புகளில் தொற்று பரவி, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.இத்தகைய நோயாளி களில் 10 சதவீதம் பேருக்கு, நோய் திரும்ப ஏற்படவும் வாய்ப்பு உண்டு. 1 முதல் 4 சதவீதத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிருமிகள் மலம் வழியே தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இதனால், பலருக்கும் நோய் தொற்றும் ஆபத்து ஏற்படும். எனினும், பரிசோதனை செய்யாமல், சந்தேகத்தின் அடிப்படையிலேயே டைபாய்டுக்கு மருந்து கொடுப்பது நல்லதல்ல.இதற்கு பல ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளன. 7 முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். சிகிச்சை காலம், சிகிச்சை முறை, மருந்து சாப்பிட வேண்டிய அளவு, இடைவெளி ஆகியவை சரியான முறையில் அமைதல் வேண்டும்.இல்லையெனில், மருந்துகளுக்கு, கிருமிகள் கட்டுப்படாத நிலை ஏற்படும்; நிலைமை சிக்கலாகும். கிருமி உடலில் தங்கும் நிலை ஏற்படும்.

Thursday, March 24, 2011

கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது



உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆம். பெண்கள் அழுவதற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண்களே.

லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீதுதான். மனைவியோ, காதலியோ… அழ விட்டுப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக வெடித்தனர் பெண்கள்.

ஆய்வின்படி, மனைவி, காதலி மட்டுமின்றி தாயைக் கூட அழவிடும் ஆண்கள் 63 சதவீதம் என்று தெரிய வந்தது. இப்படிச் செய்யும் ஆண்கள் தப்பி விட முடியுமா என்ன…? அவர்கள் ஆபீசில் பாஸ் கடிக்கும்போதும், வேலையைச் சுமத்தும்போதும் அழுகின்றனராம். இங்கிலாந்து பெண்களில் 32 சதவீதத்தினரும், ஆண்கள் 22 சதவீதத்தினரும் வேலையில் மனஅழுத்தம், பிரச்னையால் கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர்.
கடந்த 6 மாதங்களில் ஒருமுறையாவது அழுததாக ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்தனர். எனினும், அலுவலக பிரச்னைகள், டென்ஷனால் கண்ணீர் விட்டு அழும் ஆண்கள் குறைவே. மற்றபடி மனதுக்குள் அழுதாலும், பெண்களால் என்ன பிரச்னை வந்தாலும் மனதுக்குள் கூட அழுவதில்லை. ஸ்டிராங்காக எதிர்கொள்கின்றனர். மாறாக, பெண்களை டென்ஷனாக்கி அழ விடுகின்றனர் என்கிறார் ஆய்வு நடத்திய டாக்டர் சாரா ப்ரூவர்.

அழுவது சோகமானதுதான் என்றாலும், கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது என்கிறார் அவர்.நவீன உலகில் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன் கழிக்கிறோம். அதனால், கண்கள் காய்ந்து ஈரத்தன்மையை இழக்கின்றன. கண்ணீர் வெளியானால் கண்கள் சுத்தமாகும் என்றார் சாரா.

சாரே… பொஞ்சாதி, கேர்ள் பிரண்ட அழ விடுறதே அவங்க கண்கள் நல்லா இருக்கணுங்கற நல்ல நோக்கத்துலதான்னு அவங்க புரிஞ்சிக்கணும் தானே சாரே… என்கிறார் தினமும் மனைவியை அழ விடும் ஒரு கணவர்.



Tuesday, March 8, 2011

உடல்நலம் கேள்விகள் பதில்கள்


கண்களில் மஞ்சள் நிறம்
1. கண்களில் எல்லோருக்கும் இருக்கும் வெள்ளைப்பகுதி எனக்கு மட்டும் மஞ்சள் நிறமாக (லேசாக) இருக்கிறது. சிலர் லிவர் பிரச்சினை இருக்கலாம் என்று பயமுறுத்துகிறார்கள். என்ன செய்வது?
உங்கள் கண்களில் அந்த நிறம் ஏற்கனவே வெள்ளையாக இருந்து, இப்போது மஞ்சள் நிறமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றால் இது மஞ்சள் காமாலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று பொருள். லிவர் என்கிற கல்லீரலில் பிரச்சினை இருக்கலாம் என்று சொல்லப்படுவது உண்மையாக இருக்கலாம்.
மஞ்சள் நிறம் உருவாகக் காரணம் ‘பிலிரூபின்’ என்கிற நிறமி. முதிர்ந்த சிவப்பு அணுக்களில் இருந்து உருவாகிற ஒரு பை-ப்ராடக்ட் இது. தினமும் 1 சதவிகித இரத்த சிவப்பு அணுக்கள் புதியவற்றால் மாற்றப்படுகின்றன. பழைய செல்கள் கல்லீரலில் மாற்றம் செய்யப்பட்டு டிஸ்போஸ் செய்யப்படுகின்றன. இதனால் உருவாகிற பிலிரூபின் உடலில் இருந்து மலம் வழியாக வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் தனக்கு வழக்கமாக வருகிற சிவப்பணுக்களைவிட அதிகமாக வரும்போது சமாளிக்க முடியாமல் மஞ்சள் நிறமிகளை விட்டுவிடுவதால் உடலில் இது அதிகம் சேருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஹெப்படைடிஸ், சிர்ரோனிஸ், கல்லீரல் மற்ற நோய், பைல் குழாய் அடைப்பு, சில நேரங்களில் இரத்தக் குறைபாடுகள்...

இதுதவிர சில க்ளோரம்பெனிகால், எரித்ரோமைசின், கிளின்டாமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் மஞ்சள்நிற கண்களை உருவாக்கும்.
கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் இருக்கட்டும் என்று விட்டுவிடக்கூடாது. நிச்சயம் பரிசோதனைகள் அவசியம். கவனியுங்கள்.

நாக்கில் படியும் வெள்ளை 
2. எனது வாயில் இருந்து எப்போதும் வழவழப்பான திரவம் சுரந்துகொண்டே இருக்கிறது. நான் என்ன செய்தாலும் இதைத் தடுக்க முடியவில்லை. கூடவே நாக்கில் அழுத்தமாக வெள்ளை படிந்து விடுகிறது. ஜீரம், சளி போன்ற தொல்லைகள் ஏதும் இல்லை. என்ன செய்வது?
நீங்கள் இரண்டு முறை பல் துலக்கவும், அடிக்கடி வாய் கொப்பளிக்கவும் பழகிக் கொள்வது நல்லது. மென்மையான டங் கிளினரால் (நாக்கு வழிப்பான்) இரண்டு முறை நாக்கில் படிகிற வெள்ளையை துடைத்து எடுங்கள். இப்படி தொடர்ந்து செய்தும் இந்த பிரச்சினை இருந்தால் உங்களுக்கு தொண்டையில் ஏதேனும் நீண்டநாள் தொற்று இருக்கலாம். அல்லது ‘போஸ்ட் நேஸல் ட்ரிப்’ என்கிற பிரச்சினை இருக்கலாம். இதற்கு நீங்கள் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகுவது அவசியம். தவிர உணவுக்குழாயில் பின்னோக்கி வருகிற அமிலத்தால் ஏற்படுகிற ‘ரிகர்ஜிடேஷன்’ என்கிற பிரச்சினை கூட காரணமாக இருக்கலாம். உடனே நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுங்கள்.

இதய பலவீனம்: கடைபிடிக்க வேண்டியவை 
3. எனக்கு வயது 47. சமீபத்தில் ‘ஹார்ட் பெயிலியர்’ இருப்பது கண்டறியப்பட்டது. நான் என்னவிதமான தற்காப்பு செய்யவேண்டும்?
கடுமையான உடல் உழைப்பைத் தவிருங்கள். உணவுக் கட்டுப்பாடு உங்களுக்கு உங்கள் மருத்துவரால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும். அதை அலட்சியப்படுத்தாமல் பின்பற்றுங்கள். நீர் மற்றும் நீராலான பானங்களை கட்டுப்பாடான அளவில் பயன்படுத்துங்கள். இது தவிர உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இருதயக் குறைபாடு இடதுபக்கமா, வலதுபக்கமா அல்லது இரண்டிலுமா என்பதைப் பொறுத்து இருக்கிறது. உடல் உழைப்பு அளவு உங்களுக்கே சில நாட்களில் தெரிந்துவிடும். பிரச்சினை என்றவுடன் அடிக்கடி படுக்கையில் படுத்திருப்பது நல்லது அல்லது. தவிர வான்வெளிப் பயணம், நீண்டதூர ரயில் பிரயாணம் போன்றவற்றை செயல்படுத்தும்போது அடிக்கடி காலை மடக்கி நீட்டுவது நல்லது. தேவைப்பட்டால் உங்கள் டாக்டரின் உதவியோடு இம்மாதிரிப் பிரயாணங்களுக்கு முன் ஹெப்பாரின் என்ற மருந்தை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த முடிவு நிச்சயம் உங்கள் டாக்டரால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

முட்டியில் கரகரக் சத்தம் 
4. நான் படிகளில் ஏறும்போது அடிக்கடி முட்டியில் ஏதோ கரகரக் என்று சில சப்தங்கள் கேட்கிறது. இதை விட்டுவிடலாமா? அல்லது கவலைப்பட வேண்டுமா?
நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பொதுவாக மூட்டுகள் இம்மாதிரி சத்தங்களை எந்தப்பிரச்சினையும் இல்லாமல் உருவாக்குவது இயல்புதான். இந்த சத்தங்கள், வலி, வீக்கம், மூட்டு அசைக்கமுடியாமை போன்ற விஷயங்களோடு சம்மந்தப்பட்டிருந்தால் நிச்சயம் கவனிக்கவேண்டும். மூட்டில் உள்ள கார்டிலேஜ் அல்லது லிக்மெண்ட் என்கிற இணைப்புத் திசுக்களில் பிரச்சினை இருக்கலாம். மூட்டுத் தேய்மானம் கூட இம்மாதிரி பிரச்சினைகளை உருவாக்கலாம்.

கிட்னி பிரச்சினையில் டயலிஸிஸை தவிர்க்க என்ன வழி? 
5.  எனக்கு டயாபடிஸ் இல்லை. சமீபத்தில் கிட்னி பாதிக்கப்பட்டிருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்தது. தேவைப்பட்டால் டயாலிஸிஸ் செய்ய வேண்டி இருக்கும் என்று டாக்டர் சொல்கிறார். இதைத் தவிர்க்க முடியுமா?
உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் வாய்ப்பு இருப்பது பற்றி ஒரு ஆய்வில் உறுதி செய்யப்பட்டு அந்த ஆய்வு முடிவு “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிட்னி டிஸிஸிஸ்” என்கிற டாக்டர்களுக்கான புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. குறைந்த புரோட்டின், நிறைய காய்கறிகள், மிருக புரோட்டின் கலக்காத உணவுப் பொருட்கள், அமீனோ அமிலங்கள், வைட்டமின்  காம்ப்ளக்ஸ் போன்ற சப்ளிமென்ட்டுகள் கவனமாக ஒரு டயட்டீசியன் உதவியுடன் எடுத்துக் கொள்ளப்பட்டால் டயலிஸிஸை தடுக்கவோ, தள்ளிப்போடவோ முடியும் என்று உறுதி செய்திருக்கிறார்கள். முயற்சி செய்வதை நிபுணர்களின் உதவியோடு செய்யுங்கள். கிட்னி பிரச்சினையில் விளையாடக் கூடாது.

உங்கள் நலம் கேள்விகள் பதில்கள்


மாதவிலக்கின் முன்பாக தோன்றும் அறிகுறிகளும் கருத்தரித்தலும்
1. ஒவ்வொரு முறை எனக்கு பீரியட்ஸ் வரும்போதும், அதற்குமுன் நான் கருத்தரித்தது போலவே தோன்றுகிறது. இரண்டுக்கும் என்னால் வேறுபாட்டை உணரமுடியவில்லையே?
பீரியட்ஸ் வரும்முன் தோன்றுகிற பிரச்சினைகளை பிரிமென்ஸ்ட்சுரல் சின்ட்ரோம் என்று சொல்கிறோம். அந்த நேரத்தில் தேவையில்லாத, காரணமற்ற மன அழுத்தம் தோன்றலாம். ஒரு சின்ன எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். மூட் இப்படியும் அப்படியும் மாறிக் கொண்டிருக்கலாம். வயிறு லேசாக உப்பினமாதிரி தோன்றலாம். மார்புகளில் லேசான வலி இருக்கலாம். உணவின் மேலான க்ரேவிங் அதிகரிக்கலாம். முகப்பருக்கள் வரலாம். ஒரு குழப்பமான மிக்ஸ்ட் ஃபீலிங் இருக்கலாம். இந்த மாதிரியான பிரச்சினைகளை மாதவிலக்கு வருவதற்கு ஏழு முதல் பத்து நாட்களுக்கு முன்பு சந்தித்தீர்களானால் இவற்றை பிரி மென்ஸ்ட்ருரல் சின்ட்ரோம் என்று எடுத்துக் கொள்ளவும். கூடவே அடுத்த முடிவாக மாதவிலக்கு ஏற்பட்டு விடும். ஒருவேளை இதெல்லாம் வந்து பீரியட்ஸ் வராமல் ஐந்து நாட்களுக்கு மேல் தள்ளிப்போனால் உடனே யூரின் டெஸ்ட் வீட்டிலேயே எடுத்துப் பாருங்கள்.
தேவைப்பட்டால் டாக்டரை அணுகுங்கள்.
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லை
2. என்னுடைய 7 வயது குழந்தைக்கு வயிற்றில் பூச்சி பிரச்சினை இருக்கிறது. நிறைய சிரமப்படுகிறான். என்ன செய்வது?
வயிற்றில் பூச்சிகளால் குழந்தைகள் நிறைய தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். நிறைய அரிப்பும், மலத்துவாரத்திற்கு அருகில் ஒரு அன்கம்பர்டபிள் நிலையும் தொடர்ந்து நீடிக்கும். குழந்தைகளை பெரும்பாலும் ‘பின்வார்ம்’ வகைகள்தான் பாதிக்கின்றன. அடிக்கடி, தொடர்ந்து பூச்சி தொந்தரவு இருந்து கொண்டே இருக்கிற நிலை, உங்கள் குழந்தை விளையாடும் மற்ற குழந்தைகளுக்கு இருப்பதால் வரலாம். இதனை ‘க்ராஸ் இன்பெக்ஷன்’ என்கிறோம். இதற்கான மருந்தை உங்கள் குழந்தை மட்டுமல்லாது, வீட்டில் எல்லோரும் உட்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தையின் தோழர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த பூச்சி தொற்றும் சுழற்சி உடைந்து மறுபடியும் வராமல் தடுக்க முடியும். தொற்றி இருக்கிற குழந்தை அரிப்பு தாங்காமல் சொரிந்த கொள்வதால் பூச்சியின் முட்டைகள் குழந்தையின் விரல் நகங்களில் இருக்கும். இதன்மூலம் மற்றவர்களுக்கு பரவும். ஆக விரல் நகங்களை கட் செய்யுங்கள். பச்சைக் காய்கறிகளில் இருந்துகூட சிலநேரம் பரவலாம். தடுக்க நல்ல கொதிநீரில் காய்கறிகளை சிறிது நேரம் போட்டு கட் செய்யலாம்.
தொடரும் முதுகுவலி
3. முதுகுவலி எப்படி வருகிறது?
இதற்கு நேரடி பதிலை ஒரு நிபுணரால் கூட சொல்ல முடியாது. ஏனென்றால் நம்முடைய அனாடமியில் முதுகுதான் மிக சிக்கலான நுட்பங்களைக் கொண்டது. ஆக முதுகுவலி வருவதற்கான காரணங்களும் மிக சிக்கலானது. எண்பத்தைந்து சதவிகித முதுகுவலிக்கு காரணம் தெரியமுடியவில்லை என்பதுதான் நிறைய நிபுணர்களின் கருத்து. தவறான எடை, தவறாக நிற்பது, தவறாக உட்காருவது, உட்பட நாம் செய்யும் இயல்பான தவறுகளிலேயே முதுகுவலிக்கு காரணங்கள் நிறைய இருக்கிறது. மருத்துவரின் உதவியுடன் சரியான சிகிச்சை அவசியம்.
சிறுநீரகக் கல் வராமல் தடுக்க வழி
4. எனக்கு 40 வயது. சமீபத்தில்தான் கிட்னி ஸ்டோன் எடுக்கப்பட்டது. திரும்ப வந்து விடுமோ என்று கவலைப்படுகிறேன். நான் நிறைய தண்ணீர் குடிக்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவர் லெமன் ஜுஸ் குடிக்கச் சொல்கிறார். வேறு என்ன செய்வது?
‘ரீனல் கால்குலஸ்’ என்கிற இந்தப் பிரச்சினை திரும்ப வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு ஆய்வின்படி 66 சதவிகிதம் திரும்ப வருகிறது அடுத்த ஒன்பது வருடங்களுக்குள் என்கிறார்கள். ஏற்கனவே நிறைய தண்ணீர் குடிக்கிறீர்கள். இது சரியான விஷயம். நிறைய பேருக்கு இந்தக் கற்கள் திரும்ப வருவதற்கு முக்கியக் காரணம் சரியான தண்ணீர் குடிக்காமல் விடுவதுதான். நிறைய நார்ச்சத்துள்ள பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுங்கள். தவிர உங்களுக்கு ஏற்பட்ட கல்லை பரிசோதனை செய்திருந்தால் அதற்கேற்ப தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒரு டயட்டீசியன் உதவியுடன் முடிவெடுங்கள். இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் டீ, கோகோ கோகோ கோலா போன்ற பானங்கள், டோடி போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் இருக்கும் மற்றபடி லெமன் ஜுஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
ரக்கு அடித்தால் வரும் முகவீக்கத்தை தவிர்க்க வழி
5. எனக்கு 25 வயதாகிறது. கடந்த மூன்று வருடங்களாக குடிக்கிற பழக்கம் இருக்கிறது. ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து பெக். மாதத்திற்கு மூன்று முறை குடிக்கிறேன். அந்த நாட்களில் காலையில் எழுந்தால் முகம் வீங்கி, சிவப்பாகி விடுகிறது. இந்தப் பிரச்சினை சமீபமாக அதிகமாக இருக்கிறது. என்ன செய்வது?
உங்களுக்கு ஆல்கஹால் அலர்ஜி ஏற்படுகிறது என்று தோன்றுகிறது. உங்கள் பிரச்சினையை ஆன்ஜியோ எடிமா என்கிறோம். குடிப்பதால் இது வருவதால் அதை நிறுத்துவதுதான் நல்லது. நீங்கள் குடிக்கிற கம்பெனியின் பானத்தை வைத்து அலர்ஜி டெஸ்ட் கூட எடுத்துப் பார்க்கலாம். சிலருக்கு விஸ்கியில் இருக்கிற சிவப்பு நிறத்தால் அலர்ஜி வரலாம். அப்படி என்றால் நிறமற்ற பானங்களை பயன்படுத்திப் பாருங்கள். ஆனால் சரியான அட்வைஸ் குடிப்பதை நிறுத்துவதுதான். சில நேரம் இந்த அலர்ஜி பெரிய பிரச்சினையில் கொண்டு போய் விடலாம்.
கண்ணில் உண்டாகும் பிரச்சினை
6. கண்ணில் ஏற்படுகிற மஸ்குலர் டிஜெனரேஷன் என்கிற பிரச்சினை எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க முடியுமா?
வயதாவதால் ஏற்படுகிற இந்த ஏஜ்லேடட் மஸ்குலர் டிஜெனரேஷன் என்கிற பார்வையை இழக்க வைக்கிற பிரச்சினையை தடுக்க முடியாது. மெல்ல மெல்ல முகம் தெரிந்து கொள்வது, படிக்க முடியாமல் தடுப்பது போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். இந்த நிலை வராமல் தடுக்க எதுவும் வழிகள் இல்லை. ஆனால் உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்டிரால் போன்றவை இருந்தால் இந்தப் பிரச்சினை சீக்கிரம் வரலாம். புகைபிடிப்பதால் மூன்று மடங்கு இந்த பிரச்சினை வருகிற ரிஸ்க் அதிகரிக்கும். உணவில் ஒமேகா 3 ஃபேட்டிஆரிட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது பிரச்சினையை சீக்கிரம் வராமல் தடுக்க உதவும். அதிகமான சூரிய ஒளியில் செல்லாதீர்கள். இந்தப் பிரச்சினை வந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வருடத்திற்கு மூன்று முறை உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சீக்கிரமாக கண்டறிவதின்மூலம், பிரச்சினையை கட்டுக்குள் வைக்கலாம். இதனைத் தெரிந்து கொள்ள இப்போது CT ஸ்கேன் மாதிரி ஒரு ஸ்கேன் வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை ட்ரை, வெட் என்று இரண்டு வகையில் வரலாம். புதிய மருந்துகள் தற்போது இதற்காகக் கிடைக்கின்றன. கண் மருத்துவரின் உதவி தேவை.

உடலைக் குளிர்ச்சிபடுத்தும் பொன்னாங்கண்ணி

natpu
“காசம், புகைச்சல், கருவிழிநோய், வாதமனல்,
கூசும் பிலிகங்கு தாங்குரநோய், - பேசில் ஐயா!
என்னங்காண் இப்படிவம் ஏம்மாம், செப்பலென்னாப்
பொன்னாங் காணிக் கொடியைப் போற்று.”
இதன் பொருள் :  பொன்னாங்கண்ணியினால் விழியைப் பற்றிய வாதகாசம், தும்பிர ரோகம், கிருஷ்ண மண்டல ரோகம், வாத தோஷம், தேகச்சூடு, பீலிகம், மூலரோகம் இவை போகும். உடலில் பொன்னிறம் உண்டாகும்.

வளரும் இடம்: இதில் பல வகைகள் உண்டு. வயல் பொன்னாங்கண்ணி, சீமைப் பொன்னாங்கண்ணி, குரோட்டான்ஸ் பொன்னாங்கண்ணி எனப் பல வகைகள் உண்டு.
இவைகளில் வயல் பொன்னாங்கண்ணியே மிகவும் சத்து நிறைந்த ஒன்று. வயல்வரப்புக்களில், நீர் சூழ்ந்த இடங்களில் நிறைய முளைத்துக் கிடக்கும். சிறு கொடியாய் ஒரு அடி ஒன்றைரை அடி தூரம் ஓடித் தரையோடு ஒட்டிக் கிடக்கும். இலைகள் கத்தி போல் அரை அங்குலம் முதல் ஒரு அங்குல நீளம் கொண்டதாய் இருக்கும்.
விளக்குமாற்றுக் குச்சியின் தடிப்புடன் இதன் தண்டுகள் இருக்கும்.
இலைகளின் இடையில் நெல் பொரி மலர்ந்த்து போல் பூக்கள் நிறைய பூத்து இருக்கும். இது வயல் வரப்புகளில் நிறைய காணப்படும்.
சமையல் பொன்னாங்கண்ணி. குத்துச்செடி போல் அரை அடி முதல் முக்கால் அடி உயரம் வரை வளர்ந்து இருக்கும். இது சமைத்துச் சாப்பிட மிக மதுரமான சுவையுடன் இருக்கும்.
இதையே பெரும்பாலும் காய்கறிக் கடைகளில் விற்கின்றனர். இதன் இலைகளின் இடையில் வயல் பொன்னாங்கண்ணியில் பூ உள்ளது போல் இருக்காது.
வயல் பொன்னாங்கண்ணியைவிடப் பயிர் செய்ய இதுவே உகந்தது.
பயிர் செய்யும் முறை :natpu வல்லாரைக்கு எரு இடுதல் போல் இதற்கும் இட வேண்டும்.
கரும்பு நடும் வரப்புபோல் வல்லாரைக்கு வரப்பு எடுக்க வேண்டும், ஆனால் பொன்னாங்கண்ணிக்கு நிலம் சமதரையாகவே இருக்க வேண்டும். வல்லாரைக்கு விடுவது போல் தண்ணீர் விட வேண்டியது இல்லை.
ஆரம்பத்தில் அரை அடிக்கு ஒரு பொன்னாங்கண்ணிக் கொடியை நட வேண்டும். இரண்டு மூன்று கணு உள்ளதாய்க் கொடி இருக்க வேண்டும்.
ஒரு கணு தரையின் உள்ளும். ஒரு கணுவோ இரண்டு கணுக்களோ தரையின் மேலும் இருக்க வேண்டும். ஒரு மாதத்தில் செழித்து வளர ஆரம்பிக்கும்.
இந்தக் கொடியை வேரோடு பிடுங்காமல் அறுத்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
இதைச் சாம்பார் செய்து சாப்பிட மிக நன்றாய் இருக்கும். வாரத்திற்கு இரண்டு முறையாவது சாம்பார் செய்து சாப்பிடுவது மிக நல்லது. கூட்டாகவும் செய்து சாப்பிடலாம்.
மருந்து செய்முறைகளும் – நீங்கும் நோய்களும் :
     1. சூரணம் : வல்லாரை இலையைப் பறிப்பது போல் பறித்து மண், தூசு போக மென்மையாக அலச வேண்டும். தண்டுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நிழலில் பரவலாகப் போட்டுக் காய வைக்க வேண்டும். தினம் இரண்டு மூன்று முறை புரட்டி விடவேண்டும்.  ஒரு வாரத்தில் காய்ந்து விடும்.
பிறகு இடித்துத் தூளாக்க வேண்டும். இதனுடன் வேறு மூலிகைகளையோ, கடைச் சரக்குகளையோ சேர்க்க வேண்டியது இல்லை. காலை 6 மணிக்கும், மாலை 4 மணிக்கும் அரை தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை சாப்பிடலாம். உடன் பால் குடிப்பது மிகவும் நல்லது.
உடல் குளிர்ச்சி அடையும். கண்பார்வை தெளிவடையும். நீண்ட நாட்கள் சாப்பிடக் கண்ணில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும். கைகால்களில் உள்ள எரிச்சல் சுத்தமாய் நீங்கும். உடல் பொன்னிறம் அடையும்.
தேவையான அளவு பருப்பு வேக வைக்கவும். தக்காளி தேவையான அளவு அரிந்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் தேவையான அளவு நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை எண்ணெயில் நன்கு வதக்கவும். பின் தக்காளியும் போட்டு வதக்கவும். சிவந்ததும், அதில் தேங்காய், சீரகம் அரைத்த விழுதைக் கலக்கவும். மிளகாய்ப்பொடி, உப்பு தேவையான அளவு கலந்து கொள்ளவும்.
கடுகு தாளித்து அனைத்தையும் கொட்டி நன்கு கொதிக்க விடவும். நல்ல சாம்பார் தயாராகி விட்டது. சாப்பிட வேண்டியதுதான்.
2. பொன்னாங்கண்ணித் தைலம் :
natpu1. பொன்னாங்கண்ணி இலைச்சாறு
2. தாமரைக் கிழங்குச்சாறு
3. நிலப்பனங் கிழங்குச்சாறு
4. விலாமிச்சம் வேர்ச்சாறு
5. எலுமிச்சம் பழச்சாறு
6. செவ்விளநீர்
7. பசும்பால்
8. நல்லெண்ணெய்
வகைக்குப் படி ஒன்று; இவைகளை ஒன்று கூட்டி இருப்புச் சட்டியில் விடவும். இதில், 1. சந்தனம், 2. நெல்லி வற்றல், 3. சீரகம், 4.ஏலம், 5.கோஷ்டம், 6. அதிமதுரம் வகைக்கு 5 கிராம் பொன்வறுவலாகத் தனித்தனியே வறுத்து ஒன்று கூட்டிப் பால்விட்டு அரைத்துக் கலக்கவும்.
இளந்தீயாக எரித்து நான்காம் நாள் எண்ணெயை இறக்கவும். இதைத் தலையில் தேய்த்துக் குளித்து வரவும்.
பித்தசுரம், பித்த மயக்கம், வாந்தி, எரிச்சல், தலை பாரம் நீங்கும். பித்த ரோகங்களைச் சமனப்படுத்தும்.
நிலப்பனங்கிழங்குச் சாறு, விலாமிச்சம் வேர்ச்சாறு கிடைக்கவில்லை என்றால் கடையில் காய்ந்து உள்ளதை வாங்கிக் கஷாயம் வைத்துச் சேர்த்துக் கொள்ளலாம். எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
மேலே கூறிய சாறுகள் சேர்க்க இயலவில்லை என்றால்
1. பொன்னாங்கண்ணிச்சாறு    
2. தாமரைக் கிழங்குச்சாறு
3. இளநீர்                     
4. பசும்பால்
மட்டும் சேர்த்துக் கொண்டு இத்துடன் கடைச் சரக்குகளை அரைத்துப் போட்டும் எரித்துக் கொள்ளலாம். இதுவும் வேலை செய்யும்.
3. பொன்னாங்கண்ணிக் கிருதம் :
natpu1. பொன்னாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்
2. பொற்றலைக் கையாந்தகரைச் சாறு 1 லிட்டர்
3. பசும்பால் 1 லிட்டர்
4. பசுநெய் 1 லிட்டர்
இவைகளை ஒன்று சேர்த்து இரும்புப் பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைக்கவும்.
இதில் 75 கிராம் அதிமதுரத்தை அரைத்துக் கலக்கவும். நான்கு நாள் வரை சிறு தீயாக ஒவ்வொரு மணி நேரம் எரிக்கவும். ஐந்தாம் நாள் சிறு தீயாக எரித்துத் தண்ணீர்ப் பசை முற்றும் நீங்கியதும் இறக்கவும்.
அப்போது ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கோரோசனை, சீனாக்கற்கண்டு வகைக்கு ஐந்து கிராம் அரைத்து எண்ணெயில் போட்டு மூடி வைக்கவும். பின்பு வடிகட்டி அடைத்து வைக்கவும்.
இதில் தினம் காலை மாலை ஒரு சிறு கரண்டி வீதம் அதாவது 10 மில்லி கிராம் வீதம் சாப்பிடவும்.
அரை மண்டலம் அல்லது ஒரு மண்டலம் சாப்பிடவும். இதனால் பெண்களுக்கு உண்டாகும் வெட்டைச் சூடு உடன் நீங்கும். வெட்டைச் சூட்டால் குழந்தைகட்கு உடல் காங்கை, உடல்எரிவு, கணச்சூடு நீங்கும்.
இந்த நெய்யைக் குழந்தைகட்குத் தந்து வந்தால் காங்கை, உடல்எரிவு நீங்கிக் கணச்சூடு குறைந்து குழந்தை உடல் நன்கு பலப்படும். இது ஒரு அருமையான நெய்.