பரிட்சைக்கு முன்பதாக நீங்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகுவது, பாடங்களை படிப்பது போன்று இன்றிமையாததாகும். ஆகவே பரீட்சைக்கு முன்பு நீங்கள் நன்றாக உண்டால்தான், பசியிலிருந்தும் தலைசுற்றலையும் தவிர்க்கலாம். அப்போதுதான் வினாக்களுக்கும் பதிலளிக்க முடியும்.
அறிவுறுத்தல்கள்
சத்துக்கள் சமனான உணவை பரீட்சைக்கு முன் உண்ணுங்கள். பரீட்சை காலை நேரமாக இருந்தால், காலை உணவை உண்ண நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். பலத்தை வழங்குவதற்காக புரதச் சத்து நிறைந்த உணவையும் பழங்களையும் உண்ணுங்கள்.
முட்டை, கடலை, தயிர், ஷீஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை மற்றும் மதிய நேர உணவாக உட்கொள்ளுங்கள். அந்த நாள் முழுவதும் அதன் பலனை நீங்கள் பெறலாம்.
உண்ணும் உணவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில் தூக்கம் வருவது போன்று உணர்வீர்கள். சிற்றூண்டிகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். பரீட்சையின் போது தூக்கம் வரும்.
உணவிற்கு பதிலாக கோப்பி அருந்துவதை தவிருங்கள். வழமையாக நீங்கள் கோப்பி அருந்தி பழக்கப்பட்டவராயின் அதை இடைநிறுத்தும் போது தலையிடி ஏற்படலாம். அதிகளவில் கோப்பி மற்றும் உற்சாகபானம் போன்றவற்றை அருந்துவீர்களாயின் பதற்றம் ஏற்படும். கிரீன் டீ அருந்த பழகுவது சிறந்ததாகும்.
பரீட்சையின் போது பதற்றமாக இருக்கும் போது, உணவருந்த முடியாமல் இருக்கும் போது புரதச் சத்து நிறைந்த, மென்மையான, சக்தி வாய்ந்த பானங்களை அருந்துங்கள். இவை நீங்கள் உணவு உண்ணும் வரை உங்களுக்கு சக்தியை வழங்கும்.
பரீட்சை இடைவேளையின் போது உண்பதற்காக உங்கள் பைகளில் சத்துள்ள சிற்றூண்டிகளையும், பழங்களையும் வைத்திருங்கள். சக்தியை எரிக்கக் கூடிய இனிப்புப் பண்டங்களை அதிகளவில் சேர்க்காதீர்கள்.
விட்டமின்களை சேருங்கள். விட்டமின் ‘பி’ போன்றவற்றை எடுத்தீர்களானால் மூலையின் செயற்பாட்டை அதிகரிக்கும். ஆதற்கு முன் வைத்தியரின் ஆலோசனையை பெற மறவாதீர்கள். சகல சத்துக்களும் நிறைந்த உணவை உண்பதால் உங்கள் உடல் ஆரோக்கியமடைகின்றது.
பரிட்சை நேரத்தின் போது சிறிதளவு தூய நீர் அருந்துங்கள். நீர் அருந்தாமல் இருப்பின் ஒரு வரட்சி தன்மை ஏற்பட்டு பரீட்சை மீதான கவனம் குறையும்.
|