Friday, December 23, 2011

பேஸ்புக், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட 21 இணையத்தளங்களுக்கு நோட்டீசு

இணையத் தளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகள் அதிக அளவில் இணையத் தளங்களை பார்க்கிறார்கள்.

பேஸ்புக், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட பல புகழ் பெற்ற இணையத்தளங்களில் ஏராளமான தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஆனால் இந்த இணையத் தளங்களில் இடையிடையே ஆபாச பதிவுகளும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே குறிப்பிட்ட 21 இணையத்தளங்களை தடை செய்யவேண்டும் என்று டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதேஷ்குமார் கூறியதாவது:- 

பேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட 21 இணையத் தளங்களில் ஆட்சேபத்துக்குரிய பல பதிப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி விளக்கம் அளிக்க 21 இணையத்தள நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன்.

மேலும் மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஜனவரி 13-ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். மேலும் 21 இணையத்தளங்களும் சட்டப்பிரிவு 292, 293 மற்றும் 120-பி ஆகிய பிரிவுகளில் வழக்கை எதிர் கொள்ள நேரிடும்.

இவ்வாறு டெல்லி மாஜிஸ்திரேட் கூறினார்.

மகளைக் கொன்ற தந்தை! குற்றம் காதல் !!

காதல் செய்த தனது 17 வயது மகளை அடித்து, உதைத்து, கண்டித்து கொன்ற தந்தை!

பாடசாலை செல்லும் வயதில் காதல் புரிந்தார் என்பதற்காக தனது சொந்த மகளை பாசமிகு தந்தை அடித்து, உதைத்து கொலை செய்த சம்பவமொன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை - தல்அரம்மல 2ம் பிரதேசத்தில் நேற்று மாலை இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மகள் ஒரு ஆணை காதலிக்கிறார் எனவும் அந்த ஆணுடன் சுத்தித் திரிவதாகவும் அயலவர்கள் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட தந்தை கொதித்து எழுந்து வீட்டுக்கு வந்து தனது மகளை கண்டித்துள்ளார்.

மகள் மீது வைத்துள்ள அதிக பாசத்தால் என்னவோ தெரியவில்லை பரம எதிரி ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதுபோல் மகளை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

நான்கு, ஐந்து பேர் சேர்ந்து தாக்கினால் எப்படி இருக்குமோ அப்படியான அடி, உதைகளை வாங்கிய 17 வயதுடைய முத்து மொஹம்மது ஜமாசா என்ற யுவதி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து நேற்று மாலை 6 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடன் விரைந்த பொலிஸார் சந்தேகநபரான தந்தையை கைது செய்தனர்.

உயிரிழந்த யுவதியின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தியை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு!


பேஸ்புக்கில் விருப்பம் தெரிவிக்க!








வளைக்க.. நெளிக்க.. ஒடிக்க.. முறுக்க...நாடுவீர் சாம்சங் மொபைல்

மிகமிக ஸ்லிம்மான செல்போனை சாம்சங் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. 

அமோலெட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போனை பேப்பர் போல முறுக்க, வளைக்க முடியும்.சுத்தியலால் அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர, உடையாது என்பது இதன் சிறப்பம்சம்.

தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் புதுப்புது வசதிகளுடன் கூடிய செல்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இதுபற்றி சாம்சங் இன்ஜினியர்கள் கூறியதாவது:

வளைத்தாலும் பாதிக்கப்படாத ‘பிளெக்சிபிள்’ செல்போனை உருவாக்க வேண்டும் என்பது சாம்சங் நிறுவனத்தின் நீண்ட கால கனவு திட்டம். அதன் வடிமைப்பு பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஸ்கிரீன் நாலரை இஞ்ச் நீளம் இருக்கும். செல்போனின் தடிமன் வெறும் 0.3 மி.மீ. மட்டுமே இருக்கும். 1 ஜிபி ராம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் திறன் கொண்டது. 8 மெகாபிக்சல் கேமரா வசதியும் உள்ளது. கிராபீன் கார்பன் பயன்படுத்தி ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது. சுத்தியலால் அடித்தாலும் உடையாது. இவ்வாறு சாம்சங் இன்ஜினியர்கள் கூறினர்.

நாகர்கோவிலுக்கு 4 ஜி வந்துவிட்டது

குமரி யில் தற்போது 18,620பேர் அகண்ட அலைவரிசை மூலம் இணையதள இணை ப்பு பெற்றுள்ளனர். எனி னும் சில பகுதிகளில் இந்த சேவை கிடைக்காத நிலை உள்ளது. மேலும் 500 பேர் வரை இணையதள இணைப்பிற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் 4ம்தலைமுறை அதிவேக கம்பியில்லா அதி வேக இணையதள சேவை குமரியில் நேற்று தொடங்கப்பட்டது. 
நிகழ்சிக்கு பிஎஸ்என்எல் பொது மேலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். துணைப்பொது மேலாளர் துரைராஜ் வரவேற்றார். மற்றொரு துணைப்பொது மேலாளர் குசலகுமாரி முன்னிலை வகித்தார். ஹெலன்டேவிட்சன் எம்.பி தொடங்கி வைத்து பேசும் போது, தனியார் நிறுவனங்களைவிட இணை யதள பதிவிறக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு பிஎஸ்என்எல்லில் கட்டணம் குறைவு. தரைவழி இணை ப்பில் இணைப்பு கிடைக்காத பகுதிகளுக்கும் கூட கம்பி இல்லா இணையதளம் மூலம் பயன்பெற முடியும் என்றார். 

பொதுமேலாளர் திருநாவுக்கரசு பேசியதாவது:

ஒரு வைமேக்ஸ் கோபுரம் அமைக்க 2கோடி செலவாகிறது. ஒரு கோபுரத்தின் மூலம் 15 கி.மீ கவரேஜ் செய்ய முடியும். 8 கி.மீ தொலைவிற்குள் உள்ளவர்கள் தெளிவாகவும், முழுமையாக பயன்படுத்தலாம். தொலைவை பொறுத்து மோடம் தேர்வு செய்யவேண்டும். 500 மீக்குள் இருந்தால் 2940 மதிப்புள்ள டேட்டா கார்டு மூலமும், 3 கி.மீவரை 4410 மதிப்புள்ள வீட்டிற்குள் பயன்படுத்தும் மோடத்தையும், அதற்கு மேல் 5250 மதிப்புள்ள மொட்டை மாடியில் பொருத்தக்கூடிய மோடம் மூலம் சேவையை பெறமுடியும். 

200 முதல் 7000 வரை இச்சேவை பல்வேறு திட்டங்களில் கிடைக்கிறது. 750 மாதகட்டணத்தில் 2எம்பி பிஸ் வேகத்தில் லிமிடெட் பிளா னும், இதேகட்டணத்தில் 512 கேபிபிஸ் வேகத்தில் அன்லிமிடெட் ஹோம்பிளானும் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இச்சேவைக்கு ரோ மிங் வழங்கப்பட்டுள்ளது. கம்பியில்லா இணைப்பு என்பதால் பழுது எற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார். கோபாலகிருஷ்ணன் தொகுத்தார். தொலைபேசி ஆலோசனை க்குழு உறுப்பினர் மகேஷ், பி.ஆர்.ஓ கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.

படம் 1

பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் மேஜிக் செய்வதில் பயிற்சி தான் முக்கியம் சிறிய ட்ரிக்ஸ் தான் என்றாலும் அதைப் பயன்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவு முக்கியம் அந்த வகையில் ஒளிவு மறைவு இல்லாமல் மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :
http://easybartricks.com

இந்தத்தளத்திற்கு சென்று பலவகையான மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கின்றனர் இதில் எந்த வகையான ட்ரிக்ஸ் நமக்கு தெரிய வேண்டுமோ அதற்கான வீடியோவை சொடுக்கி நாம் தெரிந்து கொள்ளலாம். Magic Tricks, Bottle Tricks , Coin Tricks ,Bill Tricks,Lighter Tricks Cigarette Tricks, Easy Magic Tricks, All Bar Tricks போன்ற அனைத்தும் தனித்தனி வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேஜிக் ட்ரிக்ஸ் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வீடியோ Chatல் மாயாஜாலம்

Web camera பாவித்து chat செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். webcamல் chat செய்கின்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன? முக்கியமாக நம் குழந்தைகளுடன் web cameraவில் chatting செய்யும் போது அவர்களை சந்தோசப்படுத்த camera மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம். இதற்கு பல softwareகள் இலவசமாகவே உள்ளது.

 

இவ்வாறான மாய வித்தைகளை காட்டக் கூடிய ஒன்று தான் many cam. இந்த மென்பொருளில் உள்ள பல விளையாட்டுக்களை நீங்கள் செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம். Windows Operating System பாவிப்பவர்கள் இதைப் பயன்படுத்த முடியும். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய


rundll32.exe என்றால் என்ன?

Windows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழைச் செய்தி கிடைக்கிறது. 

இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும். Rundll32.exe கோப்பு நம் கணினியில் Task Managerல் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்தக் கோப்பு தங்கி இருந்து மற்றக் கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழைச் செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணினி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. Exe அல்லது com கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. windows system இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அது தான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணினியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் click செய்திடவும் என ஒரு link தரும். இதில் click செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளைப் பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பேனா… சூப்பராக எழுதியது ?

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) 25 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக ஸ்கெட்ச் பேனாவால் நாக்கை அழுத்தி பிடித்தபடி கண்ணாடியில் பார்த்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பேனா வாய்க்குள் சென்று விட்டது. மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்ததிலும் எதுவும் தெரியவில்லை. பேனாவை விழுங்கி விட்டதாக அவர் கூறியதை டாக்டர்கள் நம்பவில்லை. 

இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்றுப்போக்கும் இருந்தது. சி.டி. ஸ்கேன் செய்து பார்த்தபோது குடல் பகுதியில் பேனா இருப்பது தெரிந்தது. உடனே ஆபரேஷன் மூலம் பேனா அகற்றப்பட்டது. பேனா சேதம் அடையாமல் நன்றாக இருந்தது. அதை எடுத்த டாக்டர் எழுதி பார்த்தார். இன்னொரு ஆச்சரியம்.. பேனா சூப்பராக எழுதியது.



செல்போனில் செக்ஸ் படங்களை பார்த்த மாணவன், 5 வயது சிறுமியை பலாத்காரம்

பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் 5 வயது சிறுமியை 15 வயது பள்ளி மாணவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மாணவனை கைது செய்துள்ளனர்.

உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது சக மாணவன் ஒருவனின் செல்போனில் விரும்பத்தகாத படங்களை பார்த்ததன் காரணமாகவே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று, அந்த மாணவன் அதே பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவியை வீட்டில் விட்டுவிடுவதாக அழைத்துச்சென்று அருகில் இருந்த காலி இடத்தில் வைத்து அந்த மாணவியை துன்புறுத்தியுள்ளான். அப்போது அந்த பிஞ்சு மனம் மாறாத சிறுமி, என்ன நடக்கிறது என்று புரியாமல் விடுபட முயலவே, அந்த சிறுவன், அங்கிருந்த கல்லை எடுத்து மாணவியின் தலையில் அடித்துவிட்டு சிறுமி மயக்கமடைந்தபின் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான்.

சுயநினைவிழந்த மாணவி: மாலை வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததை உணர்ந்த உறவினர்கள், அவளை தேடிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிறுமியின் புத்தகப் பை அங்கு கிடந்ததை கண்டுபிடித்தனர். அருகில் இருந்த காலி நிலத்தில் சுயநினைவற்ற நிலையில் இருந்த சிறுமியை கண்ட பெற்றோர்கள் உடனடியாக யஷ்வந்த்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவர்கள் கைகளில் செல்போன்

சிறுமியின் நிலைக்கு காரணமான பள்ளி மாணவன் மீது நெலமங்ளா போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

சிறுவர்களுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்ததன் மூலம் மிகப்பெரிய தவறுக்கு வித்திட்டிருக்கின்றனர் அவனது பெற்றோர், எனவே 19 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்களின் கைகளில் செல்போன் சிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்,

ஆவலைத்தூண்டும் அழகழகான பெண்களின் படங்கள்



ஆனந்தம் இன்று முதல் ஆரம்பம்

வணக்கம் அன்பர்களே!

புதிதாக வந்துள்ள என்னை உங்களுடன் ஐக்கிய்யப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
என்னையும் உங்கடுடன் ஒருவனாய் மனமார ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இப்படிக்கு புதிய பதிவன்

உச்சக்கட்டம்என்பது இதுதானா?(வீடியோ இணைப்பு)

பயம் என்பது பொதுவாக சிறுவயதிலேயே குழந்தைகளிடம் ஏற்பட்டுவிடுகிறது. பய உணர்வு தோன்றுவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. பயம் என்பது ஆழ்மனதில் பதிந்த நிரந்தர பயமாகவும், அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பயமாகவும் இருக்கலாம்.

நம் மூளையிலுள்ள திசுக் கூட்டம்தான் பயம் ஏற்படுவதற்கான காரணமாகும். எதிர்மறை மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இது முக்கியமாகச் செயல்படுகிறது.

தன்னம்பிக்கையின்மையும், மனத் தடுமாற்றமுமே பயத்தின் முதல் அறிகுறியாகும். இங்கு காணப்படும் பெண் தற்காலிக பயத்தை வெளிக்காட்டும் காட்சியைக் காணலாம்.

'பில்லா 2' அப்டேட்ஸ்!

'மங்காத்தா' படத்தினை தொடர்ந்து 'பில்லா - 2' படத்தில் நடித்து வருகிறார் அஜீத், 'உன்னைப்போல் ஒருவன்' படத்தினை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கி வருகிறார். பார்வதி ஒமணக்குட்டன் அஜீத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் இருந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளிவராமல் கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

'பில்லா 2' குறித்து படத்தின் இயக்குனர் சக்ரி டோல்டி தனது டிவிட்டர் இணையத்தில் " 'பில்லா 2' படத்தினை EPIC கேமிரா மூலம் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ஆசியாவில் 'பில்லா 2' படம் தான் முதன் முதலில் அந்த கேமிராவை பயன்படுத்தி உள்ளது.

படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்துமே அஜீத் டூப் இல்லாமல் செய்து இருக்கிறார். அவரது உழைப்பு கண்டிப்பாக அஜீத் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும்.

'பில்லா 2' படத்தில் யுவன் உழைப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'பில்லா 2' படத்தின் பாடல்கள் கண்டிப்பாக வரவேற்பை பெறும் " என்று தெரிவித்துள்ளார்

மாமா என்ன சொல்லப் போனார்? மாப்பிள்ளை என்ன சொல்ல வந்தார்?


படுக்கையில் சுவாதீனமில்லாமல் அம்மா படுத்திருக்கும் காட்சி கண்ணனை மிகவும் வேதனைப்படுத்தியது. சந்தோசமாக வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண்மணி. இளம் வயதில் வெள்ளை சீலையுடுத்தி, திருநீரை நெற்றியில் பூசிக் கொள்ளும் வரம் வாங்கிய அபாக்கியவதி.தனது மகன் நன்கு படித்து முன்னேற தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த தாய். நல்லதொரு பெண்ணை கட்டி வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதை அழகு பார்க்க வேண்டும் எனக் கனாக் கண்ட ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள உள்ளம். ஆனால் தோப்பாக வாழ வேண்டிய அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை. அந்த வேதனை அவரது இதயம் முழுவதும் வியாபித்து பரவி இருந்தது. அதன் வெளிப்பாடு இன்று அவருக்கு நெஞ்சில் மரண வலி. அடுத்து வந்த இரண்டு தினங்களில் வரலக்ஷ்மிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. வலி வந்தால்தான் நமது உடலில் இதயம் என்ற உறுப்பு இருப்பதை அறிவோம் என்று சொல்வார்கள். அந்த இதயம் சீராக செயல்பட, ரத்த ஓட்டம் தடைபடாமல் செல்ல மருத்துவர் மாத்திரை, மருத்துகளை எழுதிக் கொடுத்தார். வரலக்ஷ்மி வலியிலிருந்து மெல்ல மீண்டு இயல்பான நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சேதி அறிந்து அனைத்து உறவினர்களும் வரலக்ஷ்மியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.
முன்னதாக கோவையில் இருந்து கண்ணனின் மாமா சுந்தரம், மாமி சர்மிளா ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து வரலக்ஷ்மியை கவனித்துக் கொண்டனர். விடுமுறைக்காக அழைத்து சென்றிருந்த பேரக்குழந்தைகளையும் சுந்தரம் கையுடன் அழைத்து வந்திருந்தார். ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம், இழப்பு. மற்றொரு புறம் தனது பாசமான தங்கை வரலக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தான உடல் வேதனை.பேரப் பிள்ளைகளின் 'எடுப்பார் கைப்பிள்ளை' நிலை. இவை யாவும் சுந்தரத்தை ஏதோ செய்தது. மனதை வாட்டியது. தலையில் கையை வைத்தவாறு சற்று நேரம் அமர்ந்து கொண்டார். வீட்டுக்கு பெரியவரான தான் ஏதாவது ஒரு நல்ல தீர்வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

சில மருத்துவ அறிவுரைகளுடன் வரலக்ஷ்மியை மருத்துவர் டிஸ்சார்ஜ் செய்தார். சுந்தரமும், சர்மிளாவும் 4 நாட்கள் தங்கியிருந்து ஒத்தாசை செய்தனர். சர்மிளா சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டார்.




சுந்தரம் தனது மகள் பவித்ராவின் பெரிய மாலை போட்ட படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்வில் ஆகட்டும் சரி.. ஒரு ப்ராக்டிகலான மனிதர். சூழலுக்கு எது தேவை, எது சாத்தியம் என்பதை விரைவில் முடிவு எடுப்பவர். ஆனால் அவ்வாறு தான் இப்போது எடுத்திருக்கும் முடிவை எப்படி தான் மனைவி சர்மிளாவிடம் சொல்வது என்பதை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன் மாப்பிள்ளை கண்ணனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்து அவரது அலுவலக அறைக்கு சென்றார்.

"வாங்க மாமா.. நிறைய வொர்க் பெண்டிங் ஆயிடிச்சு. அதை கொஞ்சம் சார்ட் அவுட் செய்துகிட்டே இருக்கேன்.. நீங்களும், மாமியும் வந்து அம்மாவை கவனிசிகிட்டதுக்கு ரொம்ப சந்தோசம். அம்மாவாலே முடியலே.. பாவம்.." என்று கண்ணன் பேசினார். தொடர்ந்து அவரே, "குழந்தைகளோட பியுச்சர் நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் .. இது சரியா வரும் என்று நினைக்கிறேன். எதுக்கும் உங்ககிட்டே ஒரு வார்த்தை நான் சொல்லியே ஆகணும். என்ன இருந்தாலும் நீங்க என்னோட சொந்த தாய் மாமா.. அதோட பசங்களோட தாத்தா, பாட்டி. இந்த மேட்டரா மதியம் உங்ககிட்டே பேசணும்ன்னு இருந்தேன்.. நீங்களே இங்கே வந்துட்டீங்க.. நான் ஏற்கனவே உங்ககிட்டே கூட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கேன்" என்றார்.

தான் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று மாப்பிள்ளையிடம் வந்தால், அவர் தன்னிடம் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று சொல்கிறாரே என்று சுந்தரம் சற்று திகைத்தார்.

இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?

விஜய் இடத்தை பிடித்து விட்டேன் -சிம்பு

ஆனந்த விகடன் பேட்டியில்தான் சிம்பு இப்படி சொல்லியிருக்கிறார்.


விஜய் எல்லாம் மாஸ் நடிப்பை விட்டு இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து நண்பன் படத்தில் நடிக்கிறார்.நீங்க ஒஸ்தியில இப்படி மாஸ் ஹீரோவா பழையபடி நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே..விண்ணை தாண்டி வருவாயா படத்துல நடிச்ச மாதிரி சாஃப்டா நடிக்கலாமே ..? என கேட்டதற்கு சிம்பு இப்படி பதில் சொல்லியிருக்கிறார்.


விஜய் மாஸ் ஹீரோவாக நடிப்பதை விட்டுவிட்டு நண்பனில் சாஃப்டாக நடிக்கிறார்.நான் சாஃப்டாக நடிப்பதை விட்டுவிட்டு மாஸ் ஹீரோவாகிட்டேன்.அவர் அங்க போயிட்டார்.நான் இங்க வந்துவிட்டேன்..!

அதாவது விஜய் இடத்துக்கு இவர் வந்துட்டாராம்…ம்..ஒஸ்தியில பத்து கோடி ரூபா நஷ்டம் ஆகிட்டு அப்பா புலம்பிகிட்டு இருக்கார்.,அவர் கண்ல பட்டுடாதீங்க..சிம்பு!

மங்காத்தா படத்தில் அஜீத் அறிமுகம் ஆகிற ஜீப் சீனை ஒஸ்தியில் படமாக்கிய எஸ்.டி.ஆர் தீவிர அஜித் ரசிகர் என்பது தெரிந்ததே.முன்பு இவர் ரஜினி ரசிகராக இருந்தார்.இப்போது விஜய் மீது இன்னும் கொஞ்சம் கொளுத்திப்போடலாம் என்று ,2011 ஆண்டின் சிறந்த படம் மங்காத்தா தான்.அதுக்கு அடுத்து காஞ்சனா அப்புறம் வேலாயுதம் என சொல்லியிருக்கிறார்.

மேட்டர் என்னன்னா தனுஷ் தான் தனக்கு போட்டியாளர்னு சொல்றாங்க.அஜீத்,விஜய் லெவெலுக்கு தன்னை மீடியாக்கள் உயர்த்த மாட்டேங்குதே என்ற கடுப்பில்தான் சிம்பு இப்படியெல்லாம் தத்துவம் பொழிகிறாரா என்னவோ.

சில சினிமா ரகசியங்கள் டுவிட்டரில் உடைக்கும் திவ்யா : இயக்குனர் டென்ஷன்

சஸ்பென்சாக வைத்திருக்கும் சினிமா பற்றிய தகவல்கள், போட்டோக்களை நடிகை திவ்யா டுவிட்டரில் வெளியிடுவதால் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர் மீது கோபத்தில் உள்ளனர். ‘கட்டாரி வீர சூர சுந்தராங்கி’ என்ற படத்தை கன்னடத்தில் இயக்கி வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா. 

இதில் உபேந்திரா ஹீரோ. திவ்யா ஹீரோயின். தற்போதைய நவீன காலம் மற்றும் தேவலோக காலம் ஆகிய இரண்டையும் இணைத்து இப்படம் உருவாகிறது. இதனால் படத்தின் கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, காஸ்டியூம் போன்றவற்றை வெளியிடாமல் இயக்குனர் ரகசியம் காத்து வருகிறார்.
ஆனால் ஹீரோயின் திவ்யா அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் படம் பற்றிய கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார். படத்தில் அணிந்து நடிக்கும் புதுவித காஸ்டியூம், பின்னணி அரங்கு ஆகியவற்றின் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சஸ்பென்சாக வைத்திருக்கும் தகவல்களை திவ்யா அம்பலப்படுத்தி வருவதால் இயக்குனரும் தயாரிப்பாளரும் அவர் மீது கோபத்தில் உள்ளனர். படம் சம்பந்தமாக எந்த தகவல், போட்டோவையும் வெளியிட கூடாது என்று திவ்யாவுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜனவரி 1ம் தேதி - ஒரு வரலாற்றுபார்வை


ஜனவரி 1ம் தேதி என்றால் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது புத்தாண்டை ஜாலியாக கொண்டாடுவது, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை, நண்பர்கள், குடும்ப நபர்களுடன் சேர்ந்து மகிழ்வது, டூர் செல்வது என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

சிலர் புத்தாண்டு அன்று கோவில், சர்ச், மசூதி என்று பக்தி பரவசமாகவும், சிலர் புத்தாண்டை கொண்டாடுவதாக கூறி 'புல்' போதையில் கவிழ்ந்து கொண்டு, கிடக்கும் சம்பவங்களை தற்காலத்தில் பார்க்க முடிகிறது. ஆனால் வரலாற்றில் இந்த ஜனவரி 1ம் தேதிக்கு பல சிறப்புகள் உள்ளன. இந்த தேதியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்துள்ளன.

ஜனவரி- 1 பிறந்தது எப்படி?

ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் கொண்ட நாட்கள் காட்டியை அறிமுகப்படுத்தியவர் கிறிஸ்தவ தலைமை மதக் குருவான போப் கிரிகோரி XIII. இவர் கடந்த 1582ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த கால அட்டவணையை வெளியி்ட்டார். அதன்பிறகு அந்த கால அட்டவணை பிரபலமாகி உலகம் எங்கும் பரவியது.

இந்த நாள் காட்டியானது, கிரிகோரியன் காலண்டர் என்றும், கிறிஸ்டியன் காலண்டர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜூலியன் காலாண்டரை தழுவி தயாரிக்கப்பட்ட இந்த காலண்டரில் ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் 5 மணிநேரம் 49 நிமிடங்கள் 12 நொடிகளை கொண்டது. கிரிகோரி காலண்டர் கணக்குபடி ஜனவரி 1ம் தேதி ஒரு ஆண்டு துவங்கும் நாள் என்றும் டிசம்பர் 31ம் தேதி ஆண்டின் கடைசி நாள் என்றும் குறிப்பட்டு உள்ளது.


அந்த காலண்டர் வழக்கத்துக்கு வரும் முன் கடைப்பிடிக்கப்பட்ட சில காலண்டர்களின் படி மார்ச் 21ம் தேதியை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். கிரிகோரியன் காலண்டர் வெளியான பிறகும் ரஷ்யா, கிரேக்கம் உள்ளிட்ட சில நாடுகள் பழைய முறையை தான் பின்பற்றி வந்தன.


இதுதவிர ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இனத்தினரும் ஒரு வகையான ஆண்டு முறையை கடைப்பிடித்து வருகின்றனற். எடுத்துக்காட்டாக தமிழகத்தில் சித்திரை மாதம் 1ம் தேதியை (ஏப்ரல் 14ம் தேதி) தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர்.


கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக்க சபையில் இருந்து 15ம் நூற்றாண்டில் பிராட்டஸ்டன்டு சபை பிரிந்தது. இதனால் பிராட்டஸ்டன்டு பிரிவினர் கிரிகோரியன் காலண்டரை பின்பற்ற மறுத்து, வேறு பல முறைகளை பின்பற்றி வந்தனர். 20ம் நூற்றாண்டில் தான் இந்த பிரிவிணைகள் நீக்கப்பட்டு, உலகம் முழுவதும் பொதுவாக கிரிகோரியன் காலண்டர் முறையை பின்பற்றும் வழக்கம் தோன்றலாகியது.


இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகளில் 1752ம் ஆண்டில் இருந்து ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் வழக்கம் துவங்கியது. மேலும் அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆங்கிலேய ஆட்சி உள்ள எல்லா நாடுகளிலும், கிரிகோரியன் காலண்டர் முறை பயன்பாட்டிற்கு வந்தது.


சரி இனி, ஜனவரி 1ம் தேதி நடந்த சில முக்கிய சம்பவங்களைப் பார்ப்போம்...


வரலாற்றில் ஜனவரி 1ம் தேதி பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. கிமு 42ம் ஆண்டின் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஜூலியன் காலாண்டர் பின்பற்று முறை வழக்கில் வந்தது. அதன்பிறகு அதே நாளில் 1522ல் வெனிஸ் குடியரசு, 1544ல் ரோம பேரரசு, 1556ல் ஸ்பெயின், போர்ச்சுகல் அரசுகள் ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக கொண்டாட துவங்கின.


மேலும் பெர்சியா, சுவீடன் நாடுகளில் 1559லும், பிரன்சு குடியரசில் 1564லும், ஸ்வாட்லாந்தில் 1600லும், ரஷ்யாவில் 1700லும், இங்கிலாந்து பேரரசின் பகுதிகளில் 1752ம் ஆண்டு முதல் ஜனவரி 1ம் தேதியை ஆண்டின் முதல் தேதியாக அங்கீகரிக்கப்பட்டது.


1800ம் ஆண்டு டச்சுக்காரர்களின் கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது. 1804ம் ஆண்டு பிரஞ்சுக்காரர்களிடம் இருந்த ஹைதி சுதந்திரமடைந்தது. மேலும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சூடான் 1956ம் ஆண்டிலும், ப்ரூனை நாடு 1984லும் வந்த ஜனவரி 1ம் தேதிகளில் சுதந்திர நாடுகளாக மாறின.


இந்தி சினிமா நடிகர் நானா படேகர் 1951ம் ஆண்டும், இந்திய நடிகை சோனாலி பிந்த்ரே 1975ம் ஆண்டும் இதே நாளில்தான் பிறந்தனர்.


இதே ஜனவரி 1ம் தேதிதான் அமெரிக்காவின் சீல் கடற்படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள்தான் சில மாதங்களுக்கு முன்பு ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து போட்டுத் தள்ளினார்கள் என்பது நினைவிருக்கலாம்.


இப்படி ஜனவரி 1ம் தேதியின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்...