Thursday, December 23, 2010

இதோ சில பயனுள்ள தொடுப்புகள் (Links), நமது உபயோகத்திற்காக

http://districts.nic.in
இந்தியாவிலுள்ள மாவட்டங்களைப் பற்றிய விவரங்களனைத்தையும் அறிந்துகொள்ள உதவும் ஒரே இடம் இந்த இணைய தளம் ஆகும்.
_________

http://www.indianrail.gov.in
இந்திய ரயில்வேயின் இணைய தளச் சேவை அளிக்கும் தகவல் சேவைகள் பின்வருமாறு: பயணிகள்/பி.என்.ஆர். நிலவரம், முக்கியமான ரயில் நிலையங்களுக்கிடையே ஓடும் ரயில்களைப் பற்றிய விவரங்கள், ரயில்/கட்டணம் மற்றும் தங்கும் வசதி, ரயில் சம்பந்தப்பட்ட விசாரணை, ஒவ்வொரு ரயில் நிலையத்திற்குமான வாராந்தர டிக்கெட் இருப்பு நிலவரம், இந்திய ரயில்வேயின் வரைபடம், இணைய தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தல், பயணிகள் திட்டம்/பட்டியல் ஆகியவற்றில் அவ்வப்போது மாற்றம் செய்தல் மற்றும் ரயில் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) சேவை.
___________
http://www.results.nic.in/
பல்வேறு கல்வி சார்ந்த தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புத் தேர்வுகளின் முடிவுகள் ஓரிடத்தில் இந்த இணைய தள முகவரியில் கிடைக்கும்.
____________
http://goidirectory.nic.in/

இந்திய அரசின் இணையதள முகவரிக் கையேடு ஈடு-இணையற்ற விரிவான ஒரு கையேடு ஆகும்; இவ்விணையதளம் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அமைச்சகங்கள், ஆகியன குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்கும் ஒரு உன்னதமான முகவரி ஆகும்.
_____________
http://passport.nic.in/
பாஸ்போர்ட் மற்றும் விசா சம்பந்தமான உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் இங்கு விடை கிடைக்கும்.
____________
http://www.judis.nic.in/
'ஜூடிஸ்' எனப்படுவது வழக்குவாரியான அனைத்து விவரங்களுமடங்கிய இணைய தள நூலகமாகும். இதில் உச்சநீதி மன்றம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சில தீர்ப்புகளின் விவரங்கள் இங்கு கிடைக்கும்.
____________
https://tin.tin.nsdl.com/pan/
இந்த இணைய தளத்தில் உங்களுக்கு இணைய தளம் மூலம் 'பான்' கார்டுக்கு விண்ணப்பிக்கவும் அது குறித்த பிற தகவல்களைப் பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வரலாறு காணாத ஊழல்!

1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே.

இலவச அழைப்பு தொலைபேசி எண்கள்! TOLL FREE Numbers.

Toll Free Phone Numbers in India, Please forward it to all you know in India. Save a copy of this mail...
Thanks: Information: Mujeeb, Irumeni Friends Group.
Airlines
Indian Airlines -1800 180 1407
Jet Airways - 1800 22 5522
Spice Jet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
Kingfisher - 1800 180 0101
============ ========= ========= =====
Banks
ABN AMRO -1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporation Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655
============ ========= ========= =====
Automobiles
Mahindra Scorpio -1800 22 6006
Maruti - 1800 111 515
Tata Motors - 1800 22 5552
Windshield Experts - 1800 11 3636
============ ========= ========= =====
Computers/IT
Adrenalin -1800 444 445
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
Xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004
========= ========= ========= =====
Indian Railway Enquiries
Indian Railway General Enquiry 131,139
Indian Railway Central Enquiry 139
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9 & 139
============ ========= ========= ========= ========= =====
Couriers/Packers & Movers
ABT Courier -1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171
============ ========= ========= =========
Home Appliances
Aiwa/Sony -1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432
=========== ========= ========= =========
Investments/ Finance
CAMS -1800 44 2267
Chola Mutual Fund - 1800 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180 8000
Franklin Templeton Fund - 1800 425 4255
J M Morgan Stanley - 1800 22 0004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 44 0005
SBI Mutual Fund - 1800 22 3040
Tata Mutual Fund - 1800 22 0101
============ ========= ========= ====
Travel
Club Mahindra Holidays -1800 33 4539
Cox & Kings - 1800 22 1235
God TV Tours - 1800 442 777
Kumarakom Lake Resort - 1800 44 5030
Raj Travels & Tours - 1800 22 9900
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 22 3344
============ ========= ========= ====
Healthcare
Best on Health -1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies - 1800 33 4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708
Varilux Lenses - 1800 44 8383
VLCC - 1800 33 1262
============ ========= ========= ===
Insurance
LIC - 1800 33 4433
AMP Sanmar -1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800 44 5544
HDFC Standard Life - 1800 227 227
Max New York Life - 1800 33 5577
Royal Sundaram - 1800 33 8899
SBI Life Insurance - 1800 22 9090
============ ========= ========= =======
Hotel Reservations
GRT Grand -1800 44 5500
InterContinental Hotels Group - 1800 111 000
Marriott - 1800 22 0044
Sarovar Park Plaza - 1800 111 222
Taj Holidays - 1800 111 825
============ ========= ========= ======
Thanks: Information: Mujeeb, Irumeni Friends Group.

பெட்ரோல் கார்-டீசல் கார்: எது பெஸ்ட் சாய்ஸ்?




கஷ்டப்பட்டு படிச்சு, ஒரு வேலைக்கு சேர்ந்து, கைலே நாலு காசு பார்த்தவுடனேயே நம்ம ஆளூங்களுக்கு வர்ற ஆசைகளில் ஒண்ணா இருக்கிறது கார் வாங்கறது.(பைக்கெல்லாம் அந்த காலம் மாமு!...). காசு இருக்குதேன்னு கண்ணுல பட்ற ஏதாவது கார் வாங்க முடியுமா என்ன? லுக்கா இருக்கிற காரை வாங்கி அப்புறமா மெயிண்டனன்ஸில் நமக்கு ஆப்பு வெச்சா என்ன பண்றது. பல பேர் இந்த மாதிரி தப்பை செஞ்சுகிட்டு இருக்கோம்.ஒரு காரைப் பார்த்தவுடன் அதன் பர்பார்மன்ஸ்,மைலேஜ் பார்த்து,நமக்கு எது சரிபட்டு வரும்னு உறுதி செஞ்ச பிறகு வாங்கனும்.

சரி இதெல்லாம் கடந்து கடைசியா வர்ற கேள்வி, மெயிண்டனன்ஸ்,அதிலும் குறிப்பா பெட்ரோல் காரா இல்ல டீசல் காரா.விஜய் டீவியில் நீயா? நானா? வில் இடம் பெறக்கூடிய தலைப்பு. டீசல் கார்னா-டீசல் செலவு கம்மி.பெட்ரோல் கார்னா-பர்பார்மன்ஸ் நல்லா இருக்கும்னு நம்மள்ள ஒரு மேதாவி சொல்லி குழப்பி இருப்பாங்க


இப்போ வர்ற கார்களின் பர்பார்மன்ஸ்படி டீசலுக்கும் பெட்ரோல் காருக்கும் அதிகம் வித்தியாசமில்லை. டீசல் கார்களின் இன்ஞின்கள் நல்லா ட்யூன் செஞ்சு பெட்ரோல் காரை விட சூப்பரா பர்ஃபார்ம் பண்ணுது

'டேய் வெண்ண ... அப்புறம் எப்படி தாண்ட இதை செலக்ட் செய்யறது.போட்டு குழப்புறியே' என்று திட்டுவது காதில் விழுது.

டீசல் காரா-பெட்ரோல் காரானு செலக்ட் பண்ணுவது அவரவர் தேவை,சூழ்நிலை பொறுத்து மாறும்.எந்த காரை வாங்கபோறோம்;தினமும் எவ்வளவு தூரம் ஓட்டுவோம்;எவ்வளவு வருஷம் அந்த காரை ஓட்டுவோம்னு யோசிச்சு கவனமா வாங்கனும்.

கார் ஷோரும்களில் கார்களை ப்ற்றிய விவரங்களை தரும் Catalogue கில் காரைப் பற்றிய விவரங்கள் இருக்கும். அதை மட்டும் படிச்சு,அதை அப்பிடியே நம்பிட கூடாது.காரை நாமே ஓட்டிப் பார்க்க வேண்டும்.இப்பொழுதுதான் எல்லா கார்களும் டெஸ்ட் டிரைவ் பண்ண தருகிறார்களே.அப்படி ஓட்டிப் பார்க்கும்பொழுது,அந்த கார் நமது தேவையை பூர்த்தி செய்யுதானு தெரிஞ்சுக்கனும்.பர்பார்மன்ஸ் நல்லா இருந்தால் மெயிண்டனன்ஸ் செலவு அதிகமாகி விடும்.

முன்னெல்லாம் டீசல் கார் என்றாலே லாரி சத்தம் கேட்கும்.ஆனால் சத்தமில்லாத வகையில் டீசல் இன்ஞின்கள் வருகின்றன்.என்னயிருந்தாலும் பெட்ரோல் இன்ஞின் போல ஸ்மூத்தா இருக்காது.அதேமாதிரி டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஞின்கள் டீசல் இன்ஞின்களை விட அதிகம் சத்தம் வரும்.

பர்பார்மன்ஸை பொறுத்தவரை ஆரம்ப  வேகத்திலேயே பெட்ரோல்  இன்ஞினின் டார்க் நல்லா இருக்கும்.டீசல் இன்ஞின்,மிதிக்க மிதிக்கதான் வேகம் பிடிக்கும்.இரண்டும் ஒரே நேரத்தில் 0-60 கி.மீயை எட்டி விடும்.ஆனால் அந்த வேகத்தை பெட்ரோல் இன்ஞினும் கார் இன்ஞினும் எப்படி ரீச்சாவதிலேயே வித்தியாசமே தெரியும். 2000-4000 RPM அளவுக்குள்ளாகவே டீசல் இன்ஞின் டாப் வேகத்தை அடைந்துவிடும்.ஆனால் அதுக்குள்ளே நம்ம கியரை மாற்றிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கும்.பெட்ரோல் இன்ஞின்ல இந்த தொல்லை இருக்காது.பவர் டெலிவரியும் கியர்களை மாற்றுவதும் சீராக இருக்கும்.

அதே மாதிரி காடு,மலை போல உள்ள இடங்களில் ஒட்டுவதற்க்கு டீசல் இன்ஞினே கரெக்ட்.ஏன்னா டீசல் இன்ஞினின் புல்லிங் பவர் அதிகம்.அதனால் டீசல் கார்கள் ஈஸியாக மலை,மேடுகளில் ஓட்டலாம்.

அடுத்ததாக பட்ஜெட்.பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறதால டீசல் கார்தான் பட்ஜெட் கார்னு நினைக்ககூடாது.டீசல் கார்ல மெயிண்டனன்ஸ் செலவு அதிகம்.ஆனால் Road Tax,Insurance செலவுகள் டீசல்களுக்கு கம்மி.பெட்ரோல் காரை விட டீசல் காரின் விலை 20% மேலாகும். இதற்கு காரணம் பெட்ரோல் இன்ஞினை விட டீசல் இன்ஞின் பாடியும் ஸ்பேர் பார்ட்ஸும் ஸ்ட்ராங்காக இருக்கும்.ஏனென்றால் இன்ஞினுக்குள் அதிகபட்ச ப்ரஷரில் டீசல் எரியரதால கூடுதல் Metal உபயோகபடுத்தி செஞ்சு இருப்பாங்க.இதனால் இன்ஞின் எடை கூடும்.எடை கூட,அதற்கேற்ற சஸ்பென்ஷனும்,பாடியும் ஸ்ட்ராங்காக இருக்குனும்.அதேபோல் கிளட்ச்,கியர் பாக்ஸீம் அதிகப்படியான டார்க்கை சமாளிக்கப்படி இருக்கும்.
இன்ஞின் சவுண்டு குறைப்பதற்காகவும்,எக்ஸாஸ்ட் சிஸ்டமும் விலை உயர்வுக்கு காரணமாகின்றன.

மைலேஜில் டீசல் கார் பெட்ரோல் காரை விட கிட்டத்தட்ட லிட்டருக்கு 4 கி.மீ அதிகம்.டீசல் காருக்கு ஒருவர் கொடுக்கும் விலை பெட்ரோல் காரை விட சுமார் 80 ஆயிரம் வரை அதிகம்.இந்த விலையை டீசல் காரை சுமார் 4 வருடங்களுக்கு மேல் ஓட்டினால் தான்,ஆரம்பத்தில் அவ்ர் கொடுத்த 80 ஆயிரம் ரூபாயை டீசல் செலவில் சரிகட்ட முடியும்.

டீசல் கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை பெட்ரோல் கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் விலையைவிட அதிகம்.ரேடியேட்டர் விலையும் சுமார் 3,000 ரூபாய் அதிகம்.டீசல் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும்.

டீசல் காரின் விலை அதிகமாக இருப்பதால் காரில் வசதியும் குறைவு.அலாய் வீல்,ABS,க்ளைமேட் கண்ட்ரோல் இருக்காது.

அதனால் டீசல்,பெட்ரோல் செலக்ட் பன்னுவதற்க்கு முன் இதையெல்லாம் யோசிச்சு முடிவெடுங்கள்.

வீடு, அலுவலகம்- மொபைல் வழியாக உலகின் எந்த பகுதியிலிருந்தாலும் கண்காணிக்கலாம்!


தங்கள் வீடு அலுவலகம் இவைகளை கண்காணிக்க அங்கு SAMSUNG IP CCTV கண்காணிப்பு காமிராக்களை பொருத்தியிருந்தால், நீங்கள் உலகின் எந்த பகுதியிலிருந்தாலும், அதை உங்கள் மொபைல் (அலைபேசி) வழியாக காண முடியும்!
இந்த சேவையை, SAMSUNG வழங்கும் iPOLiS என்கிற இலவச மென்பொருளை தங்கள் மொபைலில் டவுன்லோட் செய்தால் போதும். 
iPOLiS mobile app lets you to view the live video and control pan/tilt/zoom functions from your network cameras anywhere with your smartphone if you use Samsung Techwin's security system. iPOLiS mobile is a free application designed specifically for Samsung Techwin's security network product.


Supported models will be updated continuously.
• Current compatible with such models as :

SNB-5000, SND-5080/5080F, SNV-5080, SNV-3120, SNP-3120/3120V/3120VH, SNV-5010  மாடல்கள் மூலம் இந்த சேவை இப்போது கிடைக்கிறது.

ஆண்கள் கண்டுபிடித்தது என்ன தெரியுமா?

அடக்கி வாசித்து ஆண்களை உள்ளது உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொள்ளும் திறன், உறவின் ஆரம்பத்தில் பார்வையை தாழ்த்தி, அவனை ஊக்கு வித்தல், பிறகு சிரிப்பாலேயே ஒரு அழைப்பிதழ் விரித்தல் ஆகிய ஆரம்ப அஸ்திரங்களை நீங்கள் வெற்றிகரமாக கையாள கற்றுக்கொண்டிருந்தீர்கள் என்றால், லெட் அஸ் மூவ் ஆன் டூ அஸ்திரம் நம்பர் 5, அதாகப்பட்டது, கண்டுஃபிகேஷன்.
இந்த அஸ்திரத்தை பற்றி சொல்வதற்கு முன்னால், ஆண்பாலின இயல்பை பற்றி உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். உங்களை சுற்றி இருக்கும் விலங்கினங்களை ஒரு முறை நன்றாக உற்று பாருங்களேன். அதே ஆடு, மாடு, நாய் , பூனை, கோழி, சேவல், கொசு, ஈ, எறும்பு, கரப்பாண்பூச்சி, தானே, இதில் புதிதாக பார்க்க என்ன இருக்கிறது? என்று அலுத்துக்கொள்ளாதீர்கள்....நீங்கள் அன்றாடம் பார்க்கும் இந்த விலங்குகளில் ஆண் எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். உதாரணத்திற்கு பேடை கோழிக்கு தலைக்கு மேல் அழகான அந்த சிகப்பு கொண்டை இருக்காது, ஆனால் சேவலுக்கோ பளிச்சென்று ஒரு கொண்டை இருக்கிறதே. ஆண் அடுக்கு தான் தாடியும், வளைந்த வணப்பான கொம்புகளும் இருக்கும். காலை மாட்டுக்கு தான் முதுகில் பெரிதான அந்த வளைவு இருக்கும். ஆண் கரப்பாண்பூச்சு பெரிய ஆண்டனாவோடு திரியும்.....ஆக, யானை, சிங்கம், மான், மயில் என்று நீங்கள் எந்த விலங்கை எடுத்தாலுமே ஆண் பெண்ணை விட கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியாக இருக்கிறதே, அது ஏன் என்று யோசித்தீர்களா?
இந்த ஆண் விலங்குகள் இவ்வளவு கவர்ச்சியாக இருப்பது, யாரை கவர? இவை இப்படி கவர்ச்சியாக இருந்து தொலைப்பதினால் தானே வேடர்களின் கையில் சுலபமாக மாட்டிக்கொள்கின்றன. ஆக இந்த விலங்குகள் இவ்வளவு கவர்ச்சியாக இருப்பது அதுகளுக்கே ஆபத்தாகியும் போவதுண்டு. அப்படி இருந்தும் இந்த விலங்குகள் எல்லாம் இத்தனை எக்ஸ்டிரா ஃபிட்டிங்ஸ்ச்சுடன் சுற்றி வருகிறதென்றால், இதெல்லாம் யாரை கவர்வதற்கான முயற்சி?
இந்த கேள்வி தான் சார்லஸ் டார்வினுக்கும் வந்தது. அவரும் பல தரப்பட்ட விருகங்களை பரிசோதித்து பார்த்து விட்டு, கடைசியில் கண்டு பிடித்த உண்மை என்ன தெரியுமா? இந்த ஆண் விலங்குகள் எல்லாம் இப்படி ஓவராய் ஷோ காட்டியதே பெண் மிருகங்களை கவரத்தானாம்!
பெண் மிருகங்களை ஆண் மிருகங்கள் ஏன் கவர வேண்டும் என்று பார்த்தால், மிருக ஜாதியில் இப்படி ஒரு நடை முறை இருந்ததை கவனித்தார்கள். பெண் மிருகம் தேமே என்று மேய்ந்துக்கொண்டிருக்கும். இனபெருக்க காலம் வரும் போது அதன் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்களை மோப்பம் பிடித்துக்கொண்டு, ஆண் மிருகங்கள் அந்தப்புறம் வந்து சேர, பெண் மிருகமோ, உடனே ஆணோடு கூடிவிடாது. வந்து சேர்ந்த அத்தனை ஆண்களுக்குள் முதலில் ஒரு பல பரிட்சை நடக்கும். கொம்புள்ள மிருகங்கள் தலையோடு தலை மோதி, யார் பெரிய கொம்பன் என்று போட்டியிடும். இதை ரட்டிங் (Rutting) என்போம்.
மயில், குயில் மாதிரி ஆண் பறவைகளோ, தோகையை விரித்து ஆடி காட்டி, அல்லது, தேன்மதுர குரலில் பாடி காட்டி, தன் திறமையை வெளிபடுத்தும்.
இப்படி ஆண்பால், மோதலில் ஜெயித்து, தன் அருமை பெருமைகளை எல்லாம் கடை பரப்பி, தன் பராக்கிரமத்தை எல்லாம் பரைசாற்றியதும், தான், பெண்பால் அதனோடு கூடவே இசையும்.
ஆக ஆண் பாலின் அனைத்து பிரையாசைகளுமே, பெண் பாலின் பார்வையில் தான் , “பெரியவன்” என்று காட்டிக்கொள்ளவே செய்யபடுகின்றன. இப்படி எல்லாம் விஞ்ஞானிகள் புட்டு புட்டு வைக்க, சே சே, அதெல்லாம் மிருக நடத்தையாக இருக்கலாம், ஆனால் மனித ஆண்கள் போயும் போயும் பெண்ணை கவருவதற்காக இப்படி எல்லாம் நடந்துக்கொள்ளவே மாட்டார்களாக்கும் என்று பல பேர் ஆட்சேபனை தெரிவித்தார்கள்.
ஆனால் மானுடவியல்காரர்கள் உலகம் முழுக்கும் இருக்கும் எல்லா விதமான மனித நாகரீகங்களையும் போய் பார்த்து, மனித நடத்தையை ஒரு விசாலமான பார்வையில் ஆராய்ந்துவிட்டு, கடையில் கண்டுபிடித்தது என்ன தெரியுமா? மனிதர்களிலும் ஆண், தன் கவர்ச்சிகளை கடைபரப்புவது பெண்ணின் கவனத்தை ஈர்க்கத்தான்! பல ஆண்கள் இதை தெரிந்தே செய்கிறார்கள், சில ஆண்கள் தங்கள் அறியாமலேயே செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
நீங்களே உங்களை சுற்றி இருக்கும் ஆண்கள் அனைவரையும் கவனித்து பாருங்களேன். கதை கவிதை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, வர்த்தகம், வணிகம், அறிவியல், ஆண்மீகம், பென்பொருள், என்று எத்துறையை சேர்ந்த ஆணாக இருக்கட்டுமே, அவர்களின் எல்லா பிரயர்த்தனைகளுமே கடைசியில் பெண்களுக்காக தான் என்பது புரியும்! வயதிற்கு வந்த அந்த தருணம் முதல், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆண்ணில் பெருபாண்மை பொழுதும், பெண்ணிடம் எப்படி நன்மதிப்பு பெருவது என்ற போராட்டத்திலே தான் போகிறது.
இதற்க்காக, அவன் கல்வி கற்று அறிவாளி ஆகிறான், பொழுதுபோக்குகள் பல கொண்டு திறமைசாலி ஆகிறான், நேர்த்தியாக, நாகரீகமாக, தன் நடை உடை பாவனைகளை மெருகேற்றிக்கொள்ள பாடுபடுகிறான், வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்க முயல்கிறான். நான் எவ்வளவு சம்பாதித்திருக்கிறேன் பார், என்று காட்டிக்கொள்வதறக்காக விலை உயர்ந்த பொருட்களையும் வாகனங்களையும் வாங்கி, பிரயோகித்து, தன் அந்தஸ்த்தை அதிகரிக்க பார்க்கிறான்....எல்லாம் எதற்க்காக? பெண்களிடம் நற்சான்றிதழ் பெருவதற்க்காக தானே!
அதனால் ஸ்நேகிதிகளே, ஆண்களின் இந்த அவஸ்த்தைகளை புரிந்துக்கொள்ளுங்கள். அவன் இத்தனை பாடுபட்டு, தன் கவர்ச்சி விகித்தை கூட்டிக்கொள்ள முயலும் போது, நீங்கள் அவனை சட்டை செய்யாமல் போனீர்கள் என்றால், அவனுக்கு எவ்வளவு வலி உண்டாகும். ஒரு மனிதனின் மனம் புண் பட நீங்கள் காரணமாக இருக்கலாமா? அதனால் உங்களை கவர முயலும் ஆண், உங்கள் எதிரில் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள செய்யும் நடவடிக்கைகளை கவனியுங்கள். அவனை நீங்கள் ஒரு பெரிய ஹீரோவாக நினைக்க வேண்டும், உங்கள் மனதில் வேறு யாருக்குமே தராத பிரத்தியேக இடத்தை அவன் ஒருவனுக்கு மட்டுமே தர வேண்டும் என்றெல்லாம் அவன் ஆசை படுவதை புரிந்துக்கொள்ளூங்கள்.
வேறு எதையும் கவனிப்பதை நிறுத்திவிட்டு, அவனுக்கு உங்கள் முழு undivided attention னையும் கொடுங்கள். அவனை ஆசையாய் பாருங்கள். அவன் பேசுவதை கவனமாய் கேட்டு, அவன் காரியங்களை ஊக்குவித்து, உம் கொட்டு வையுங்கள். இப்படி நீங்கள் அவனை கண்டுக்கொண்டே இருந்தால் தான், “அப்பாடா, கடைசியில என்னை கவனிச்சிட்டா!” என்று அவன் பட்ட பாட்டிற்கெல்லாம் பலன் கிடைத்த ஆனந்தம் அவனுக்கு கிடைக்கும். இன்னும் இன்னும் உங்களை மகிழ்வித்து பார்க்கும் ஆசை அவனுக்கு அதிகரிக்கும்.
நீங்கள் நேசிக்கும் ஆணை இப்படி கண்டுஃபை செய்தீர்கள் என்றாலே போதும், சூரியன் பட்டதும், போஷாக்கேற்பட்டு, செழிப்பாய வளரும் மரம் மாதிரி, அவன் தன்நம்பிக்கையும், சுய மரியாதையும் அதிகரிக்கும். சந்தோஷம் பெருகும். உங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் ஆசையும் அதிகரிக்கும்!
ஆனால் ஒரு எச்சரிக்கை. பார்க்கும் எல்லா ஆண்களையும் கண்டுஃபை பண்ணி வைத்துவிடாதீர்கள். பிறகு உங்கள் மேல் மையல் கொண்டு, “நீ என்னோட இல்லைனா என்னால உயிர் வாழவே முடியாது” என்று ஓவர் செண்டிமெண்டில் உருக ஆரம்பித்துவடுவார்கள் நீங்கள் கண்டுஃபை செய்த அத்தனை ஆண்களூம். இதுவே அநாவசிய பிரச்சைனைகள ஏற்படுத்தி விடுமே.
அதனால் இந்த கண்டுஃபிகேஷன் எல்லாம் நீங்கள் விரும்பும் ஆண்களுக்கு மட்டும் தான். பிற ஆண்களை கண்டுஃபை பண்ண இந்தியாவில் மட்டும் நூறு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் தந்தாக வேண்டுமே, அதனால் உங்கள் காதலன், கணவன், மகன், நண்பன், மருமகன், பேரன் மாதிரியான ஆண்களை மட்டும் கண்டுகொண்டு வையுங்கள். மீதமுள்ள மற்ற ஆண்களை கண்டுக்கொள்ள தான் அவரவர்க்கு என்று தாய் குலங்கள் இருப்பார்களே. அதனால் பேட்டை மாறி பரோபகாரம் செய்யாமல் உங்கள் எல்லைகளை உணர்ந்து இந்த கண்டுஃபிகேஷன் என்கிற அஸ்திரத்தை உபயோகித்து பாருங்கள்! ஆண்களை ஹாண்டில் செய்வது எவ்வளவு ஈஸி என்பது புரியும்!

பெண்ணின்அந்த நான்கு குணங்கள்.....



என் கல்லூரியில் ஒரு வழக்கம் இருந்தது. யாருக்காவது பிறந்த நாள் என்றால் ஒரு பெரிய வாழ்த்து மடலை வாங்கி, எல்லோருமே அதில் கையெழுத்திட்டு தருவார்கள். எனக்கு அப்படி ஒரு அட்டை தரப்பட, அது ஏதோ ஒரு பரணையில் தலைமறைவாய் கிடந்து வந்தது. ஒரு நாள் வேறு எதையோ தேடி பரணைக்கு ஒரு சாப விமோட்சனம் தந்து சுத்தம் செய்யும் போது தற்செயலாய் கையில் சிக்கியது. மஞ்சலும் பழுப்புமாய் மங்கிபோயிருந்த அந்த வாழ்த்து அட்டையை எடுத்து அசட்டையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் இனிய கல்லூரிக் கிறுக்குகள் எல்லாம் கிறுக்கியிருந்ததைப் படித்து சிரித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கிறுக்கல்களில் ஒன்றில், "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - கிலோ எவ்வளவு? பெண்ணின் பெருமையைக் கெடுக்காதே..." என்று என்னைத் திட்டித் தீர்த்திருந்தான் கையெழுத்துப்போடாத ஒரு தைரியசாலி.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
எல்லோரையும் போல நானும் பெண்களின் இந்த நான்கு உயரிய குணங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த அச்சம், நாணம், மடம், பயிற்ப்பு என்றால் என்ன என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. அதை தெரிந்துக்கொள்வது அவ்வளவு முக்கியம் என்று தோன்றாததால் நான் பாட்டிற்கு என் வேலைகளின் மும்முரமாய் இருந்தேன். இப்படி வேலை நிமித்தமாக தான் டாக்டர் ரெஜீனா பாப்பாவை சந்திக்க நேர்ந்தது. டாக்டர் ரெஜீனா மகளிரியல் வித்தகர். தமிழகத்தில் மகளிரியலுக்காகத் தனியாக கல்லூரிப் படிப்புகளை உருவாக்கிய முன்னோடி. சதா சர்வகாலமும் அவர் பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாம் பெண்களின் நிலை பற்றியேதான். என்னைப் பார்க்கும்போதெல்லாம், "பெண் என்ற பிரக்ஞையே இல்லாமல் இருக்கியே! பெண்ணினத்தோடு ஒன்ற மாட்டேங்கிறியே!" என்று கண்டிப்பார்.
நான் என்ன செய்வது - என் தொழில் அப்படி! வெறும் ஒரு மருத்துவருக்கே ஆண்-பெண் பேதம் கிடையாது என்கிறபோது நானோ உளநலவியல் மருத்துவர். அன்றாடம் பெண்களால் அவதிப்படும் ஆண்கள், ஆண்களால் அவதிப்படும் பெண்கள்... என்று சமுதாயத்தின் நேரெதிர் துருவங்களுக்கு ஆறுதல் அளித்து, சிகிச்சை தருவது என் வேலையான பிறகு... எனக்கென்று ஒரு பாலினப் பற்றுதல் ஏற்படுத்திக்கொள்ளும் சொகுசுக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. ஆண், பெண் என்ற பாகுபாட்டைக் கடந்து, என் சொந்த விருப்பு வெறுப்புகள், என் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் ஆகியவற்றை மறந்து, பாலினமற்ற ஒருவகை பிறவியாக இயங்குவது என் தொழில் தேவையாகிவிட்டது. இதனாலேயோ என்னவோ, உண்மையிலேயே, அச்சம், நாணம், மடம், பயிர்ப்பா, அதெல்லாம் கிலோ எவ்வளவு? என்று கேட்கும் அளவில் தான் அடியேளுக்கு அவற்றோடு பரிச்சயம்!
எப்படியோ, நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இந்த அச்சம் நாணம் இத்யாதி இத்யாதியை பற்றி பேச நேர்ந்த்து. "இந்த அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம் என்ன மேடம்?" டாக்டர் ரெஜீனாவைக் கேட்டேன்.
"உக்கும்!" என்று சலித்துக்கொண்டார் ரெஜீனா. "நால்வகைப் பெண்டிர் குணம் என்பார்கள். எல்லாப் பெண்களுக்கும் இருக்க வேண்டியதாகக் கருதப்படும் குணங்கள்."
"ஆமாமா, நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன், ஆனா மேடம், எனக்கு ஒண்ணு மட்டும் புரியல... அச்சம்னா பயந்தாங்கொளித்தனம், மடம்னா மடத்தனம்... ஏன் நம்ம சமுதாயம் தாய்க் குலத்துக்கிட்ட இந்த மாதிரி வெட்டி விஷயங்களை எதிர்பார்க்குது?"
"அப்படியில்ல. அச்சம்னா பயம், தயக்கம். மடம்னா மடமை, அதாவது அறியாமை. நாணம்னா வெட்கம், கூச்சம். பயிர்ப்புன்னா ஆண் தொட்டதும் மயிர்கூசிப் புல்லரிச்சுப் போறது..."
"ஓ, தொட்டால் பூ மலரும் மாதிரியா! அடடா - ரொம்ப செக்ஸியா இருக்கே!" என்று ஆச்சரியப்பட்டேன். காரணம் இந்த நால்வகைப் பெண்டிர் குணம் கலவி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களாய் இருக்கும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவேயில்லை.
"ஆமாமா, அந்த நால்வகைப் பெண்டிர் குணமும் முழுக்க முழுக்கப் பெண்களின் கலவியல் கவர்ச்சி, அதாவது செக்ஸ் அப்பீல் பற்றியதுதான். மிரண்ட, ஒண்ணும் தெரியாத, கூசி சிலிர்க்கிற பெண்ணைத்தான் எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்ங்கிறதுனால இந்த குணங்களைத்தான் பெண்கள்கிட்ட எதிர்பார்த்தாங்க."
"ஆனா இப்படி மிரண்டு முழிச்சுக்கிட்டு இருந்தா, சொந்தமா சிந்திச்சு செயல்படுற அறிவோ ஆற்றலோ இல்லாத வடிகட்டுன பேக்குனு இல்ல அர்த்தம்! எவன் தொட்டாலும் ஊ, ஆன்னு கூசி சிணுங்குகிற தொட்டாச் சிணுங்கியா இருக்கிறதுல என்ன பிரயோஜனம் மேடம்!"
"இங்கதான் ஒரு விஷயத்தை நாம் புரிஞ்சுக்கணும் ஷாலினி. அந்தக் காலத்துப் பொம்பளைய யாரும் மனுஷியாகவே மதிக்கல. ஆணுக்கு சுகம் தர்றது, பெத்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குறது - இதைத் தவிர வேறு எதுக்கும் பிரயோஜனமில்லாதவர்களாகத்தான் நடத்தப்பட்டாங்க. சொன்னா ஆச்சரியப்படுவே - ஒண்ணுமே தெரியாதவளா இருக்குறதைத்தான் நல்ல பெண்ணுக்கு அழகுன்னு நெனைச்ச காலம் அது. காரணம், ஆய கலைகள் அறுபத்திநாலையும் தெரிஞ்சு வெச்சிக்குறது ஒரு பரத்தையோட தொழில் தேவை - அது நல்ல குடும்பத்துப் பொண்ணுங்களுக்கு வேண்டாத வேலைனு கருத்து இருந்தது. அதனாலதான் வீட்டுப் பெண்களுக்கு எழுதப் படிக்கக்கூடச் சொல்லித் தராம இருந்தாங்க. தப்பான வழில போகிற பொண்ணுக்குத்தான் எழுதப் படிக்க வேண்டிய அவசியமாம். தனக்குன்னு ஓர் ஆம்பிளை இருக்குற பொண்ணுக்கு எழுதப் படிக்கிறது மாதிரியான வெட்டி வேலைக்கு அவசியமே இல்லையேன்றது அந்தக் கால லாஜிக்."
"அடக் கண்றாவியே! ஜமக்காளத்துல வடிகட்டின அடிமைத்தனமா இருக்கே!"
"அதுதானே அந்தக் காலத்து நிலவரம்! உனக்குத் தெரியுமா? இந்த நூற்றாண்டுக்கு முன் வரைக்கும் நம்மூர் பொம்பளைங்க யாருக்குமே மேலாடை அணிய அனுமதியே இல்லாமதான் இருந்தது. அரச குடும்பம், புரோகிதக் குடும்பம் தவிர மற்ற எல்லாப் பொதுப் பொம்பளைக்கும் மாராப்பு சட்டவிரோதமா இருந்தது..."
"என்னது! நிஜமாவா?"
"ஆமா. ஆடை அணியுற அளவிற்கு மரியாதைக்குரிய நபர்களாகப் பெண்கள் மதிக்கப்படலை. என்ன... ஆடு, மாட்டை விடக் கொஞ்சம் மேலானவர்கள் என்கிற மாதிரி நடத்தப்பட்டதனால கீழாடை மட்டும் அணிய அனுமதிச்சாங்க. அதனாலதான் நம்ம கோயில் சிற்பங்கள்ல எல்லாம் பெண் சிலைகள் வெற்று மார்பா இருக்கு. அதனாலதான் இன்னைக்கும் நம்ம கிராமத்துப் பாட்டிகள் மேலாடை போட்டுக்குறதில்ல..."
யோசித்துப் பாருங்கள் - அத்தனை பெண்கள் - எல்லாம் நமது மூதாதையர்கள் - அரை நிர்வாணமாக வலம் வந்தார்களா! "என்ன அநியாயம். பொம்பளைங்களை இப்படியா நடத்துறது!" என்னை மறந்து ஆட்சேபித்தேன்.
"ஏதோ இந்த ஒரு நூற்றாண்டாத்தான் பொம்பளைங்களுக்குக் கொஞ்சமாவது கரிசனம் காட்டுறாங்க. இந்தக் காலத்துப் பெண்களால படிக்க முடியுது, வீட்டை விட்டு வெளியே வேலைக்குப் போக முடியுது, சொத்துரிமை இருக்கு, யாரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு சுதந்திரமா முடிவெடுக்க முடியுது... ஆனா இந்த சுதந்திரமெல்லாம் சுலபமா வந்துடல. நம்மோட பாட்டி, கொள்ளுப் பாட்டி எல்லாம் எவ்வளவோ அவமானம், அநியாயம், அக்கிரமத்தை சகிச்சுக்கிட்டாங்க... ஆனா உங்களை மாதிரி நாகரீக சிறுசுங்க, இந்த வரலாறே தெரியாத சுத்த மண்டுகளாய் இல்ல இருக்கீங்க. பெண் சுதந்திரம் என்பது என்னவோ நியூட்டனோட ஆப்பிள் மாதிரி அப்படியே தானா வந்து மடியில விழுந்தா மாதிரி இல்ல அசால்ட்டா இருக்கீங்க!"
என் பாலினப் பற்றற்ற நிலையை மீறி அவர் சொன்னது என்னைச் சிந்திக்கவைத்தது. காச் மூச் என்று கொதித்து பேசினாலும், இந்தப் பெண் விடுதலைப் போராளிகள் சொல்வதிலும் சமாச்சாரம் இருக்கத்தான் செய்கிறதோ என்று தோன்றிவிட அன்றிலிருந்து நான் ரொம்பவே சமர்த்தாய் மனிதப் பெண்களின் வரலாற்றைப் பற்றித் துப்புத் துலக்குவதில் மும்முரமாய் இறங்கிவிதட்டேனாக்கும்.
அதென்ன 'மனித'ப் பெண்கள் என்று புருவம் உயர்த்துகிறீர்களா?
ஜீவராசிகளிலேயே மனித குலம் மட்டும்தான் 'தன் மேலான பாதி'களை இவ்வளவு மோசமாய் நடத்துகிறது என்பது தெரிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். மற்ற மிருகங்களைப் பொறுத்த வரை பெண்தான் ஆணை விடவும் உஷாராய் இருக்கும். ஆண் புலியை விடப் பெண் புலி சிறந்த வேட்டைக்காரி. ஆண் சிலந்தியை விடப் பெண் பெரியது. ஆண் பாம்பை விடப் பெண் பாம்பு அதிக விஷமமானது. அவ்வளவு ஏன்? மழை காலம் வந்தாலே நம்மை எல்லாம் கடித்தே பாடாய் படுத்துகிறதுகளே கொசு, அதில் கூட ஆண் கொசு அப்புரானி, கடிக்காது. பெண் கொசு தான் கடித்து மலேரியா கிருமிகளை மனிதர்களுக்கு விண்ணியோகம் செய்யும்!
இப்படியாக எல்லா உயிரினங்களிலும் பெண் இவ்வளவு உஷாராக இருந்தாலும் மனித வர்கத்தில் மட்டும் பெண் ஏன் ஆணை விட வீரியம் குறைந்தே காண்ப்படுகிறாள்? வீரியம் உண்மையிலேயே குறைந்தவளா, அல்லது காரணத்தோடு தான் அப்படி காணப்படுகிறாளா?
இத்தனைக்கும் மனித வர்க்கத்திலும் கூட ஆணை விடப் பெண் பலசாலி. உடலால் மட்டுமல்ல, மரபணுவாலும். பெண்களுக்கு இருக்கும் அந்தக் கொசுறு X குரோமோசோம் அவளை சுலபமாகப் பிறக்கவும் சீக்கிரமாய் நடக்க-பேசவும், குறைவாக நோய்வாய்ப்படவும், கொஞ்சமாய் ரிஸ்க் எடுக்கவும் வைக்கிறது. பொதுவாய் ஆணை விட அதிக காலம் வாழ வைக்கிறது. அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், வெறும் பெண்களை வைத்தே உலக ஜீவனத்தைத் தொடரச் செய்ய முடியும்... குழந்தைகளை உருவாக்க இனி ஆணின் விந்தணு அவசியமில்லை என்கிற கருத்துக்கள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன.
இத்தனை சக்தி. இவ்வளவு இன்றியமையாத தன்மை. இருந்தும் ஆண்கள் பெண்களைக் கேவலமாய்த்தான் நடத்துகிறார்கள். அதை பெண்களும் அனுமதிக்கிறார்கள்....இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் கூட. ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?
எல்லாம் காரணத்தோடுதான். சாதாரணக் காரணங்கள் அல்ல. சில சுவாரசியமான, நியாயமான காரணங்கள்...

TEENAGE பெண்களின் பிரச்சினைகள்

குழந்தைகளாய் இருக்கும் வரை அப்பா அம்மா என்றாலே அடங்கிப்போய் அன்பாய் பழகியவர்கள் எல்லாம் இந்த பதின் பருவத்தை தொட்டு விட்டாலே போதும், புது புது பிரச்சனைகள் பல தலை தூக்கிவிடுகின்றன. இப்படி பலதரப்பட்ட பதின் பருவ பிரச்சனைகள் இருந்தாலும், மிக அதிகமாய் ஆலோசனை மையத்திற்கு வருபவை எவை தெரியுமா?
1. படிப்புல் வீக்”அஞ்ஜாம் கிளாஸ் வரைக்கும் அவ்வளவு சூப்பரா படிச்ச பிள்ளை தான், என்னனே தெரியல, வர வர படிப்புல ரொம்வ வீக்காயிட்டே போய், மார்க்கெல்லாம் சொல்லிக்கிறா மாதிரியே இல்லை” என்ற புகாருடன் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். குழந்தையை அழைத்து விசாரித்தால், “எவ்வளவு படிச்சாலும் மறந்து போயிடுது” என்கிறார்கள், அல்லது, “புக்கை திறந்தாலே, பகல் கனவா வருது” என்கிறார்கள். பரிசோதித்து பார்த்தால் அநேக குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருந்தாலும், வெறுமனே மக் அடித்து, அர்த்தமே புரியாமல் படிக்கும் பாணி தெரியவரும். இந்த “டப்பா அடிக்கும்” பாணி எல்லாம் சின்ன கிளாஸ் சிம்பிள் பாடங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய கிளாஸ் போக போக, பாடங்களின் ஆழம் அதிகம், புரிந்துக்கொள்ள வேண்டிய மேட்டரின் அகலமும் அதிகம் என்பதால் இந்த மனப்பாட யுத்தி அதற்கு மேல் பிரயோஜனமே படாது.
முழு பாடத்தையும் அப்படியே முறுக்கி பிழிந்து வெறும் முக்கியமான சாரை மட்டும் கரந்தெடுத்து, கரைத்து குடிக்கும் யுத்திகள் பல உள்ளன. நியாயமாய் பாடம் நடத்தும் ஆசிரியர்களே இந்த யுத்திகளையும் சேர்த்து மாணவர்களுக்கு சொல்லித்தந்தால் தான் கற்றவை நிற்கும் அதற்கு தக. ஆனால் என்ன செய்வது, இந்த யுத்திகளை எல்லாம் சொல்லித்தர ஆசிரைய பெருமக்களுக்கு நேரம் இல்லா காரணத்தினால், இதையெல்லாம் தனியாக சொல்லித்தர வேண்டியுள்ளது. இப்படி புரிந்து, படித்து, கிரகித்துக்கொள்ளும் யுத்திகளை தெரிந்துக்கொண்டாலே, அநேக மாணவர்கள் படிப்பில் முன்னேறி விடுகிறார்கள். அப்படியும் கொஞ்சம் முன்னே பின்னே என்று இருக்கும் மாணவர்களுக்கு மூளையை கூராக்கும் சில ஊக்க மாத்திரைகளை கொடுத்து முன்னேற்ற பார்க்கலாம்.
2. ஓவர் டென்ஷன்:அணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாய் எல்லா பதின்பருவக்கார்ர்களை பற்றியும் வரும் அடுத்த புகார், இந்த முன்கோபம். அது வரை சொல் பேச்சை கேட்டு, அமைதியாய் வளைய வந்த பிள்ளைகள், பருவ வயதை தொட்ட உடனே, “எல்லாம் எனக்கு தெரியும், நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்”. என்று பெற்றோரையே எதிர்த்து பேசிவிடுகிறார்கள். சரி பிள்ளை தான் ஏதோ மனநிலையில் ஏடா கூடமாக பேசுகிறதே, நாமாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போவோமே என்கிற விவஸ்த்தையில்லாமல் பெற்றோர், “உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு, பெத்து வளர்த்து, இவ்வளவி பெரியா ஆளாக்கினேன், என்னையே நீ....” என்று முழம் முழமாய் லெக்சர் அடிக்க ஆரம்பித்து விட, பொருத்து பொருத்து பார்த்து விட்டு, “உங்களை யாரு பெக்க சொன்னா?” என்று பொறித்து தள்ளிவிடுகிறார்கள் பிள்ளைகள். உடனே தாய் மார்கள் எல்லாம் மனமுடந்து போய், இந்த பிள்ளைக்காக நான் என்னவெல்லாம் செய்திருப்பேன், என் அருமை புரியாமன் என்னையே இப்படியெல்லாம் ...” என்று இன்னும் நொந்துப்போகிறார்கள்.
இந்த வயதில் இந்த இளைஞர்களின் ரத்த்தில் எக்கசெக்க ஹார்மோன்கள் பிரவாகமாய் சுரக்கின்றன. அதனால், தொட்டதிற்கெல்லாம் டென்ஷன், எரிச்சல், மூடி அவுட் என்று இள ரத்தம் எப்போதுமே ஒரு சல சலப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். எதையும் சகித்துக்கொள்ளும் தன்மை, பொருத்துபோகும் பக்குவம், அடங்கி போகும் லாவகம் எதுவுமே இந்த வயதில் ஏற்படுவதில்லை. இதை புரிந்துக்கொண்டு, பெரிசுகள் நாம் மிக பக்குவமாய், ஹாசியமாய், தோழமையாய் முக்கியமாய், பொறுமையாய் இவர்களை கையாண்டால் தான் ஹார்மோன்களின் ஆக்ரோஷம் தணிந்து அமைதியாவார்கள். இதை விட்டு விட்டு, “முளைச்சி மூணு இலை விடலை, அதுக்குள்ள இவ்வளவு திமிரா, உனக்கே இவ்வளவுனா, எனக்கு எவ்வளவு இருக்கும்” என்று போட்டிபோட்டுக்கொண்டு, அவர்களை விட அதிக முதிர்ச்சியின்மையை பெரிசுகள் வெளிபடுத்தினால், பிரச்சனை பெரிதாகிவிடும். அதனால் சிறியவர்கள் சினம் கொள்ளும் போது இந்த மாதிரி கோபதாபங்களை எப்படி நேர்த்தியாய் சமாளிப்பது என்பதை கற்றுத்தர இதையே ஒரு சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டு, பெரியவர்கள் சாந்தமாய் விஷயத்தை கையாண்டாலே போதும். மனிதர்கள் இயல்பிலேயே மற்றவர்களை பார்த்து காப்பியடித்து தான் பலதும் பற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்பதால், முன் மாதிரி சரியாக் இருந்தால், இளைஞர்களும் தங்களை திறித்திக்கொள்வார்கள்,
3. ஓவர் கூச்சம்:”விருந்தினர் வந்தால் ஒரு வணக்கம் சொல்வதில்லை, கடைக்கு போனால், எல்லாரும் பார்க்குறாங்க, நான் இந்த பையை தூக்கீட்டு வந்தா சிரிப்பாங்கனுறது, மத்தவங்க முன்னாடி என்னை பத்தி ஏன் சொன்னேனு எல்லாரும் போன பிறகு திட்டுறது...” இப்படியாக, பதின் பருவ சிறுசுகளின் வெட்க உணர்வை பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு. என்ன செய்வது, இந்த வயதில் நேரும் உடல் மாற்றங்கள் இவர்களை பிறர் எதிரில் கூசி போக செய்கிறது. போக போக இந்த கூச்சமெல்லாம் குறைந்து, முதிர்ச்சி வர வர தன்னம்பிக்கையும் தானே அதிகரித்து, “ஆமா, நான் இப்படி தான், எனக்கு என்னை பிடிச்சிருக்கு, வேறு யாருடைய அபிப்ராயமும் எனக்கு முக்கியமில்லை” என்று சுயமதிப்புக்கொள்ளவும் இவர்கள் முடிகிறது. என்ன இந்த அளவு சுவாபிமானம் வர குறைந்தது நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன- அதுவரை இந்த வெட்கத்தை பெரிது படுத்தாமல் விட்டாலே, தானாய் தெளிந்து விடுகிறார்கள் இளையவர்கள்.
4. பியர் பிரஷர்.பதின் பருவத்தினருக்கு தங்கள் சமவயதுக்காரர்களின் அபிப்ராயம் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. இந்த சமவயதுக்காரர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படி விஷயங்களை அனுகுகிறார்கள் என்பதை எல்லாம் மிக மும்முரமாக நோட்டம் விட்டு, அதை போலவே தானும் இருந்தால் தான் தன்னை “செட்டில் சேர்த்துக்கொள்வார்கள்” என்று அரும்பாடுபட்டு, மந்தையோடு மந்தையாய் கலந்துவிட முயல்கிறார்கள். “உன் ஃபிரெண்டு சொன்னா தான் கேட்பியா? நான் சொன்னா கேட்க மாட்டியா?” என்று பெரிசுகள் என்ன தான் தலை பாடாய் அடித்துக்கொண்டாலும் இளையவர்களின் இந்த பழக்கத்தை மாற்ற முடியாது. காரணம் பெற்றவர்களை விட இந்த மாதிரி சமவயதுக்கார peersசிடமிருந்து அதிக விஷயங்களை கற்றுக்கொள்ளூம் படியாகத் தான் மனித மூளையின் டிசைனே அமைந்திருக்கிறது. இந்த இயற்கை ஏற்பாட்டை மீறி அவர்களால் செயல் படமுடியாது. “அப்படினா, கண்டவங்களோட சேர்ந்து கெட்டு குட்டிசுவரா போயிட்டா?” என்று பெற்றவர்கள் பதைபதைக்கத் தான் செய்வார்கள். இதற்கு ஒரே வழி, உங்கள் குழந்தையின் பியர்களை பரிச்சையபடுத்திக்கொள்ளுங்கள். எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் என்பதை நேரடியாக க்ண்காணித்தால் தானே, அவர்கள் போக்கு எப்படி என்பதை நீங்கள் சதா கண்காணிக்க முடியும்.
5. வயதிற்கு வருதல்:
பெண்களூக்காவது பரவாயில்லை, புட்டு சுற்றுகிறேன் பேர்வழி என்று ஏரியா பெண்கள் எல்லாம் கூடி, தங்கள் வயதிற்கு வருதல் அனுபவத்தை பற்றி பேசி பகிர்ந்துக்கொள்கிறார்கள், அதனால் பெண்களுக்கு தங்கள் வயதிற்கு வரும் சமாசாரம் பற்றி தெளிவு ஏற்படிகிறது. பாவம், ஆண் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை. இவன் வயதிற்கு வந்தால், அம்போ என்று அப்படியே விடபடுகிறான். என்ன ஏது என்று சொல்லித்தர நாதியே இருப்பதில்லை. விளைவு, விந்து வெளியேறும் வயதுக்கு வருதல் அறிகுறியை இவன் ஏதோ பெரிய விபரீதம் என்று எண்ணி கலவரம் கொள்கிறான். இருக்கவே இருக்கிறார்கள் போலி டாக்டர்கள், இந்த சாதரண உடலியக்கத்தை பெரிய வியாதி மாதிரி பில்ட் அப் கொடுத்து இவர்கள் அச்சுறுத்த, “அய் நான் வயதுக்கு வந்துட்டேனே,” என்று எண்ணி பெருமை கொள்ள வேண்டிய வாலிவன், “அய்யோ, எனக்கு வியாதி வந்துவிட்டது” என்று தவறாக எண்ணி கவலை கொள்கிறான்.
”விந்து வெளியேறி விட்டது, அதனால் சாக்க்கிடக்கிறேன்” என்ற வகை புகாருடன் ஆலோசனை பெற வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நல்ல வேலையாக இப்போதெல்லாம் குறைந்துக்கொண்டு வருகிறது. தமிழ் நாட்டு ஆண் சிங்கங்கள் எல்லாம் அறிவியலை புரிந்துக்கொண்ட அறிவாளிகள் ஆகிவிட்டார்கள் போல. அப்படியே, தப்பித்தவறி, ஒன்றிரண்டு ஆண்கள் இந்த பிரச்சனையோடு வந்தாலும், அவர்களது பயத்தை கிளப்பும் மூட நம்பிக்கைகளை தெளிவு படுத்தி, அநாவசிய பதட்டத்தை தணிக்கும் மருந்துகளை கொடுதாலே போதும், ”இதெல்லாம் ஒரு மேட்டருனு யாராவது கவலைபடுவாங்களா!” என்று மாறிவிடுகிறார்கள் ஆண்கள் எல்லாம்.
6. சுய இன்பம்: என்ன தான் வேற்று கிரகத்தில் கொண்டு போய் வைத்து எவர் சவகாசமும் இல்லாமல் குழந்தையை மஹா பவித்திரமாக வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முயன்றாலும் பருவ வயது வந்ததுமே பாலுணர்வும் தலை தூக்கிவிடும். நூறு ஆண்டுகளுக்கு முன் என்றால் இந்த பருவம் வந்த உடனே திருமணம் என்று ஒன்றை நடத்தி, ஒரு கலவியல் துணையை பெற்றோரே ஏற்பாடு பண்ணித் தந்திருப்பார்கள், தாபம் தோன்றும் போதெல்லாம் தாம்பத்தியம் கொள்ள ஏதுவாக இருந்துருக்கும். ஆனால் இந்த நூற்றாண்டிலோ, வயதிற்கு வந்து பல வருடங்கள் கழித்து தான் திருமணம் என்று நிலைப்பாடுகள் மாறிவிட்டன. இதை பற்றி எல்லாம் சட்டையே செய்யாமல் இயற்க்கை இன்னமும் அதே பதிமூன்று – பதினேழு வயதிற்குள் எல்லோரையும் வயதிற்கு வர வைக்க, கூடவே தலையெடுக்கும் உடல் ரீதியான தேவைகளை எப்படி சமாளிப்பது என்று யாருமே சொல்லி தருவதில்லை. தாபம் ஏற்படும் போதெல்லாம் தன்னை தானே சாந்தப்படுத்திக்கொள்ளும் டெக்னிக்கை அநேகமாக எல்லா ஆண்களும் சுயமாகவே தெரிந்துக்கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய குற்றம் என்று சிலருக்கு தோன்றுவதால், கவலை பட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் இதில் பெரிய ஆட்சரியம் என்ன தெரியுமா? அமெரிக்கா, ஐரோபா, ஆஸ்திரேலியா, ஸ்காண்டினேவியா மாதிரியான பகுத்தறிவு அதிகம் உள்ள நாடுகளில் எந்த ஆணும் சுயஇன்பத்தை பெரிய தவராகவே நினைப்பதில்லை. பாலில்லாத குறையை போக்க, குழந்தை கையை சுவைப்பது போல, துணையில்லா சமயத்தில் தாபத்தை தணிக்க இது ஒரு சிம்பிள் டெக்னிக், இதில் பெரிதாக ஃபீல் பண்ண என்ன இருக்கிறது என்பது இவர்களது மனப்பான்மை. ஆனால், இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் தான், அதுவும் படிக்காத ஆண்களிடம் தான் சுய இன்பத்தை பற்றின அநாவசிய பயங்களும் குற்ற உண்ர்வும் இருக்கிறது. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இதே இந்தியாவில் தான் அந்த காலத்தில் ’ஜீவ காருண்யம்’ என்ற பெயரில், பொது இடங்களில் நடுகல்லை நிறுத்திவைக்கும் வழக்கம் ஒரு தர்ம காரியமாய் கருதப்பட்டு, பலரால் பின்பற்ற பட்டது. நடு கல்லை நடுவதில் என்ன பெரிய ஜீவ காருண்யம் என்று யோசிக்க தோன்றூகிறதா? போகிற வருகிற மிருகங்களுக்கு மதம் பிடித்தால், இந்த கல்லில் உராய்து சாந்தபடுத்த உதவுவது, புண்ணியங்களில் சிறந்த புண்ணியமாய் கருதப்பட்ட்து. ஆக, மிருகங்கள் சுய இன்பம் புரிய கூட சாதனங்களை ஏற்பாடு செய்து கொடுத்த கலாச்சாரத்தில், மனிதன் சுய இன்பம் கொள்வதை பற்றி இத்தனை மூட நம்பிக்கைகள் தோன்றியது வேடிக்கை தான்! ஆக, மனிதர்கள் உட்பட, எல்லா ஜீவராசிகளிலும் தகுந்த துணை இல்லாத போது சுய இன்பம் கொள்வது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையே. என்ன, நடுகல்லே கதி என்று இதே வேலையாய் இருக்காமல், விளையாட்டு, படிப்பு, பாட்டு, கூத்து, கேளி, கும்மாளம் என்று வேறு பல வழிகளிலும் சுகம் காணும் தன்மையை வளர்த்துக்கொண்டால், இன்பம் கொள்ளை கொள்ளையாகுமே!
7. முதல் காதல்:
மூளை சுரக்கும் ஹார்மோன்கள் ஏற்கனவே எதிர் பாலின கவர்ச்சியை தூண்டிவிட, கூடவே உடகங்களும், அதன் ஊக்கத்தால் நண்பர்களும் ”சூப்பரா இருக்கும் செய்து பார்”, என்று காதலை பெரிதும் சிபாரிசு செய்ய, கேட்க வேண்டுமா! காதல் என்கிற போதை இளமனதுகளை ஈர்க்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் “எட்டாவது தான் படிக்கிறா, அதுக்குள்ள காதல் என்ன வேண்டி கிடக்குது. வயசுக்கு மீறுன வேலையெல்லாம் செய்யுறாளே” என்று பதறும் தாய்மார்கள் பலர்.
உண்மை என்ன தெரியுமா? பதிமூன்று வயதில் ஒரு பெண் காதல் வயப்படுவதென்பது வயதிற்கு மீறிய செயலே இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல் பெண்களுக்கு முதல் காதல் ஏற்படும் வயதே இது தான். முதல் காதல் என்றால், இன்னும் நிறைய முறை வேறு காதல் வருமோ என்கிறீர்களா? ஆமாம். உயிர் உள்ள வரை எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பும் அவ்வப்போது காதலும் ஏற்படும் படியாக தான் இயற்கை மனிதர்களை வடிவமைத்துள்ளது. அதனால் மகள் காதல் கொண்டு விட்டாளே என்று ஓவராய் பதராதீர்கள். அந்த வயதில் முதல் காதல் கொள்வது அவள் உடம்பில் ஹார்மோன்கள் நார்மலாய் ஊருகின்றன, அவள் ஒரு நார்மல் பெண் என்பதற்கான அறிகுறி.
ஆனால் இது அவளுக்கு முதல் அனுபவம் என்பதால் சினிமாவில் வருவது போல காதல் மஹா அழகான, புனிதமான உணர்வு என்றெல்லாம் அவள் தவறான கற்பனையில் மிதக்கக்கூடும். உடனே அத்தை, மாமி என்று யாராவது ஒரு பெண் உறவினரை பிடியுங்கள். அல்லது ஒரு கவின்சிலரை அனுகுங்கள். முதல் காதல் சொதப்பல்களை பற்றி விளையாட்டாக பேசி புரியவைத்தாலே, ’ஓகோ, இது இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒரு மிக சாதாரண் உணர்ச்சி தான்’, என்பதை புது இளைஞி புரிந்துக்கொள்வாள். இந்த புரிதலே அவள் முதல் காதலின் புனிதத்துவத்தை குறைத்து விடும் என்பதால், கொஞ்ச நாள் கழித்து இந்த உணர்வு அவளுக்கே போரடிக்க ஆரம்பித்துவிடும். சினிமாவில் சொல்வது போல காதல் அவ்வளவு ஒன்றும் ஸ்வாரசியமான உணர்வு இல்லை என்று புரிந்த்துமே, அதன் போதையிலிருந்து அவள் வெளி வந்துவிடுவாள்.
8. மூட் அவுட்
பதின் பருவத்தினர் பலரும் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவதால், திடீர் கோவம், திடீர் அழுகை, திடீர், “என்னை கண்டாலே யாருக்கு பிடிக்கல!” மாதிரியான உணர்ச்சிவெடிப்புக்கள் ஏற்படுகின்றன. மூளையின் நரம்புகள் இந்த வயதில் அதிகமாக வளருவதால் அடிக்கடி சிக்காகி விடுவதாலும், புதிதாய் ரத்ததில் ஓடும் ஹார்மோன்கள் இன்னும் ஒருனிலைபடாததாலும் இந்த வயதுக்காரர்களுக்கு அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆவது சகஜம். பெண் குழந்தைகள் “என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க!” என்று புலம்பி அழுவதும், ஆண்கள் “என்னை கவனிக்கிறதே இல்லை” என்றி எரிந்துவிழுவதும் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, ரசாயண ஸ்ருதிபேதத்தினால். அதனால் சிறுசுகளோடு சரி சம்மாய் கத்தி சண்டையை பெரிதாக்காமல், அந்த நேரத்திற்கு அமைதி காத்து, பிறகு விளக்கம் தந்து புரியவைக்க முயன்றால் தான் குடும்ப நிம்மதியை காப்பாற்ற முடியும்.
9. ஆக்ரோஷம்.
குறிப்பாக நிறைய இளைய ஆண்களை அவர்களது பெற்றோர்கள் இந்த காரணத்திற்காக தான் சிகிச்சைக்கை அழைத்து வருகிறார்கள். “முன்னெல்லாம் அவன் உண்டு அவன் வேலை உண்டுனு குட் பாயா இருந்த பையன் தான். பெரியவங்கன்னா அவ்வளவு மரியாதையா இருந்த பிள்ளை, இப்ப எல்லாம், நீ சொன்னா, நான் கேட்கணூமானு எதிர்த்து பேசுறான். அடிக்க கைய ஓங்குனா, பதிலுக்கு அடிக்க வர்றான். நேத்து ஏதோ திட்டினேனு ரிமோட்டை தூக்கிஎரிஞ்சதுல அது ஒடஞ்சே போச்சு. எங்கிருந்து தான் அவனுக்கு இவ்வளவு ஆத்திரம் வருதோ?”
வேறெங்கும் இல்லை. அதே ஹார்மோன்கள் தான். ஆண் குழந்தை வயதிற்கு வருவதே டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனின் சுரத்தலால் தான். இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து விட்டால், ஆக்ரோஷம் ததும்ப அரம்பித்துவிடும், உடல் பலம் அதிகரித்து விடும், எதிலுமே வேகம், வீரம், அவசரம் என்கிற போக்கு ஏற்படும். பழக பழக டெஸ்டோஸ்டீரானின் இந்த தன்மையை எப்படி சாமார்தியமாய் கையாள்வது என்பதை இவர்கள் காலப்போக்கில் கற்றுக்கொள்வார்கள் தான் என்றாலும் வயதிற்கு வரும் போதே இந்த உணர்ச்சி மேலாண்மை எதுவும் சாதியமாவதில்லை தானே. அதனால் தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை ஓவராய் மிரட்டி அவன் “நானும் ஆம்பிளை தான்” என்கிற ஆக்கிரோஷத்தை கிளறாமல் முடிந்த மட்டும் அன்பாய் பேசி, தண்டத்தை எடுக்காமல் வெறும் சாம, தான, பேத முறைகளிலேயே இளம் ஆண்களை கையாள்வது தான் புத்திசாலி தனம்.
10. தீயவை தீய பயத்தலால்.....குழந்தை பருவம் போய் வாலிய வயதை அடைய போகும் எக்களிப்பில், எதை எதையோ பரிட்சை செய்து பார்க்க தோன்றும் இள மனம். புகை, மது, மாது, பிற போதை வஸ்துக்கள் என்று களவும் கற்றுமறக்க முயலும் வயது இது தான். இந்த போதை வஸ்துக்கள் கூட ஒரு வகையில் மனிதர்களை தரம் பிரித்து யார் பிழக்க தோதானவர்கள் என்று சோதித்து பார்க்கும் ஒரு test for survival தான். இத்தனை வகை போதை பொருட்கள் இருந்தும் யார் இதில் எதுவும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து பதின் பருவத்தை தாண்டி வருகிறார்களோ, அவர்களே வாழ்வை ஜெயிக்க லாயக்கான புத்திசாலிகள் ஆகிறார்கள். ஏன் தெரியுமா? பெட்டிக்கடையில் சின்ன சின்ன பாக்கெட்டில் தொங்கும் வாசனைமிக்க பான் ரக பொருளானாலும், ஃபாரின் சரக்கு, ஒஸ்தி சரக்கு, லோக்கல் சரக்கு என இந்த வகை மது பானமானாலும், அவ்வளவு ஏன், சட்டம் போட்டு தடுக்கப்படும் மிக மோசமான போதை பொருட்களானாலும், அவை எல்லாமே அடிப்படையில் வேலை செய்கின்ற விதம் ஒன்று தான். மூளையின் இன்ப மையத்தை தூண்டி, மதி மயக்குகின்றன. அத்தோடு, ஆண்மை/பெண்மை திசுக்களை அழித்து விடுகின்றன. ஆக, போதை வயப்பட்ட மனிதர்கள் இனபெருக்க வாய்ப்பை இழப்பது தான் இயற்கையின் ஏற்பாடு. இந்த விவரங்கள் எல்லாம் சிறுசுகளுக்கு தெரியாதென்பதால் விளையாட்டு தனமாய் போதை பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு முறை மட்டுமே உபயோகித்தாலும், உடனே தொற்றிக்கொள்ளூம் தன்மை இருப்பதனால் தானே அதை போதை பொருள் என்றே சொல்கிறோம். ஆக சர்வைவலுக்கு ஃபிட் ஆன புத்திசாலிகள் அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்று இந்த பழக்கதுக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டு ஜகா வாங்கிவிடுவார்கள்.
எவ்வழி பெரிசுகள்...
என்ன இருந்தாலும் பதின் பருவம் என்பது காற்றாற்று வெள்ளம் மாதிரி ஹார்மோன்கள் எந்த பதபடுத்தலும் இன்றி பச்சையாய் ஓடும் வயது. இந்த வெள்ளத்தை எப்படி அனைகட்டி அமோக விளைச்சலுக்கு ஆட்படுத்துவது என்று சொல்லித்தர யாரவது தேவை. அப்பா அம்மா, அண்ணன் அக்கா, ஆசிரியர், மதகுரு ஆகிய பெரிசுகள் எல்லாம் மொக்கை போடுங்கள், பெரிதாய் லெக்சர் அடிப்பார்கள். இப்படி இல்லாமல் தம்முள் ஒருவராய் இருந்து கேலிபேச்சு, சிரிப்பு, கலகலப்புடனே ”சரக்கு வேண்டாம் மச்சி, இனிக்கு கிரவுண்டு பக்கம் போய் கலாய்சிட்டு வரலாம்” என்று வாழ்வியல் வித்தைகளை சுலபமாக சொல்லித்தரும் ஒரு சீனியரின் ஜாலி டிப்ஸ் இருந்தால் இளைஞர்கள் எப்போதுமே சரியான தடத்தில் இருக்க உதவும்.
இளைஞர்களுக்கு விளையாட்டாய் விவரங்களை சொல்லித்தர எப்போதுமே ஒரு மூத்த ஸ்நேகிதர் தயாராக இருப்பது அவசியம். சும்மா இளைஞர்களை குறை சொல்லிக்கொண்டில்லாமல் நம்மை போன்ற பெரிசுகள் எல்லாம் இப்படிப்பட்ட ஜாலியான சீனியர்களாய் மாறினாலே போதும், பதின் பருவ பிரச்சனைகளை தாண்டி பிரமாதமாய் வெளிவந்துவிடுவார்கள் நம் இளைஞர்கள்.

விண்டோஸ் - வினாக்களும் விளக்கங்கங்களும்

விண்டோஸ் இயக்கத்தில் பணியாற்றுபவர்களுக்கு, எப்போதும் ஏதாவது சந்தேகங்களும்,
இப்படிச் செய்தால் சரியாக வருமா என்ற வினாக்களும், ஏன் இப்படிச் செய்து
பார்த்தால் என்ன என்று எதிர்பார்ப்புகளும் இருந்து கொண்டே இருக்கும்.  பல
கடிதங்கள் இந்த சந்தேகங்களையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கி நம்
அலுவலகத்திற்கு வந்துள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. கமாண்ட் ப்ராம்ப்ட் வண்ணத்தை மாற்றலாமா? வண்ணமயமான விண்டோஸ் சிஸ்டத்தில்
டாஸ் கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கும் போது, அது பழைய டாஸ் சிஸ்டம் தரும் வகையில்

கருப்பு பின்னணியில், வெள்ளை எழுத்துக் களுடன் காட்சி அளிக்கும். ஏன் இப்படி?
விண்டோஸ் தான் உள்ளதே, வண்ணத்தில் இது இருந்தால் என்ன என்ற வினா நம் மனதில்
எழலாம். வண்ணத்தைத் தானே, தாரளமாக மாற்றலாம்.
கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் கட்டளைக்குக் காத்திருக்கும் அந்த துடிக்கும்
புள்ளி கிடைத்தவுடன், color  என்று கட்டளையை டைப் செய்து, ஏதேனும் இரண்டு இலக்க
எண்ணைத் தரவும். எடுத்துக் காட்டாக, color 97  என்று தரவும். இப்போது வெள்ளை
எழுத்துக்கள், ஊதா வண்ண பின்னணியில் இருக்கும். இந்த எண்ணை மாற்றி வேறு
எண்களைக் கொடுக்க கொடுக்க, வண்ணங்கள் மாறி மாறி வருவதனைப் பார்க்கலாம். இவ்வறாக
14 வண்ணங்கள் கிடைக்கும். உங்கள் கண்களுக்கு எது பிரியமோ, அதனை வைத்துக்
கொள்ளலாம். சரி, வண்ணம் வேண்டாம் என்று எண்ணினால், கட்டளைப் புள்ளியில், color
என்று டைப் செய்து என்டர் அழுத்தவும். எந்த வண்ணத்திற்கு எந்த கோட் எண் என்று
அறிய color/? என டைப் செய்து என்டர் அழுத்தவும்.
கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைத்து, பின் இந்தக் கட்டளையைத் தர வேண்டும் என்பதில்லை.
உங்களுக்கு கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோ கிடைக்கும் போதே வண்ணத்தில் கிடைக்க,
விண்டோஸ் ரன் கட்டத்தில் cmd /t:97  என டைப் செய்து என்டர் அழுத்தவும்.
2. விண்டோஸ் 7–ல் பழைய புரோகிராம்கள்: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு
மாறிய பலரின் சிக்கல் இது. சில பழைய புரோகிராம்கள் இதில் இயங்குவது இல்லை.
குறிப்பாக வாசகர் ஒருவர் தன் பெயிண்ட் ஷாப் புரோ 6 இயங்க மறுப்பதாக எழுதி
இருந்தார். இயக்க முயற்சிக்கையில் Failed to update the system Registry’
என்று  எர்ரர் மெசேஜ் வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  இதற்கு
ரிஜிஸ்ட்ரியைத் திருத்துவது எல்லாருக்கும் உகந்த செயலாக இருக்காது. கீழே
குறித்துள்ளபடி செயல்படுத்தலாம். முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம்
பெயிண்ட்ஷாப் புரோ 6 அல்லது திறக்க மறுக்கும் புரோகிராமின் எக்ஸிகியூடபிள்
புரோகிராமினைக் கண்டறியவும். இது அநேகமாக C:\Program Files\Jasc Software
Inc\Paint Shop Pro 6\   என்ற வகையில் இருக்கலாம். இதில் ரைட் கிளிக் செய்து
வரும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் General
என்னும் டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின்னர் ‘Run this program in
compatibility mode for:’  என்று இருக்கும் இடத்தில் ஒரு டிக் அடையாளத்தினை
ஏற்படுத்தவும். அடுத்து குறிப்பிட்ட புரோகிராம் எந்தவிதப் பிரச்னையும் இன்றி
இயங்கும்.
3.விண்டோஸ் 7 இயக்கத் திலிருந்து எக்ஸ்பிக்கு மீண்டும் மாறலாமா?
தங்களின் எதிர்பார்ப்புக் கேற்ப விண்டோஸ் 7 இயங்கவில்லை என்ற அவசர முடிவிற்கு
வந்த சிலர், மீண்டும் அதிலிருந்து எக்ஸ்பிக்கு மாறத் துடிக்கின்றனர். அதுவே
நமக்குப் போதும் என்ற முடிவிற்கு வந்தவர்கள், தாராளமாக மாறிக் கொள்ளலாம்.
வழக்கமாக இந்த முடிவிற்கு வருபவர்கள், பழைய எக்ஸ்பி சிஸ்டம் சிடி மூலம்
இன்ஸ்டால் செய்திட முயற்சிப்பார்கள். அப்போது  The Windows version you are
trying to install is older. Setup cannot continue’   என்ற எர்ரர் செய்தி
நிச்சயம் கிடைக்கும்.  எக்ஸ்பி சிடியினை ட்ரைவில் செருகிவிட்டு, கம்ப்யூட்டரைத்
தொடங்குங்கள். பயாஸ் செட்டிங்ஸ் பெற்று, அதில் சிடி மூலம் கப்ம்யூட்டரை
இயக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் தானாக, எக்ஸ்பி சிடியிலிருந்து
பூட்டிங் தொடங்கும். இனி விண்டோஸ் எக்ஸ்பி எந்த பார்ட்டிஷனில் பதிந்து தொடங்க
என்ற  ஆப்ஷன் கேட்கப்படும். எக்ஸ்பிக்கு சி ட்ரைவ் மற்றும் விண்டோஸ் 7க்கு டி
ட்ரைவ் எனக் காட்டப்படும். இரண்டு ட்ரைவில் இருக்கும் பைல்கள் அனைத்தையும்
நீக்கி, பார்ட்டிஷனையும் நீக்கிவிட்டு, புதிய பார்ட்டிஷன்களை உருவாக்கி, சி
ட்ரைவில் எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பதியவும். இதற்கு முன்னர், அனைத்து முக்கிய
பைல்களையும் பேக் அப் செய்திருக்க வேண்டும்.
4. யு.எஸ்.பி. ட்ரைவில் அழித்த புரோகிராம்கள்: போர்ட்டபிள் பயர்பாக்ஸ் இயக்க
பைல்களை, யு.எஸ்.பி. ட்ரைவில் வைத்து இயக்கிப் பார்த்த பின், அதனை நீக்கும்
முயற்சியில் மற்ற பைல்களையும் அழித்து விட்டார் ஒரு வாசகர். அவற்றைத் திரும்பப்
பெற முடியுமா என்று கேட்கிறார். எக்ஸ்டர்னல் ட்ரைவில் அழிக்கப்படும் பைல்கள்
ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது. எனவே ஹார்ட் டிஸ்க்கிலிருந்து நீக்கிய
பைல்களைத் திரும்பப் பெறும் வழிகளில் இந்த பைல்களை மீண்டும் பெற முடியாது.
5.படங்கள் இருக்கும் போல்டர்களை அழிக்கத் தடையா? டிஜிட்டல் கேமராக்களில்
எடுக்கும் படங்களை, கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்து வைக்கிறோம். படங்களை சிடியில்
காப்பி செய்த பின்னர், போல்டர்களை நீக்க முற்படுவோம்.   பைல்கள் பயன்பாட்டில்
இருப்பதாகவும், போல்டரை அழிக்க முடியாது என்றும் செய்தி கிடைக்கும். ஆனால்
போல்டரே காலியாகத்தான் இருக்கும். ஏன் இந்த தவறு ஏற்படுகிறது?
இது தவறே இல்லை. இது ஒரு எரிச்சல் தரும் சிக்கல்தான்.  ஆனால் இதனை எளிதாகச் சரி
செய்துவிடலாம். போட்டோக் கள் இருக்கும் ஒரு போல்டரைத் திறக்கையில், விண்டோஸ்
அவற்றை தம்ப்நெயில் என்று சொல்லப்படும் சிறிய அளவில், அவற்றைக் காட்ட
முயற்சிக்கும். இவை தானாகவே உருவாக்கப்பட்டு, Thumbs.db  என்ற பெயரில் உள்ள
பைலில் வைக்கப்படும். இந்த பைல் மறைக்கப் பட்டதாக போல்டரில் இருக்கும்.
சாதாரணமாகக் காட்டப்பட மாட்டாது. இந்த பைல் இருப்பதால் தான், போட்டோ பைல்கள்
இருந்த போல்டர் காலியாக இருப்பதாக எண்ணி, நீக்க நினைத்தால், பைல் உள்ளது நீக்க
முடியாது என்ற செய்தி கிடைக்கிறது. இந்த பைல் தானாகவே உருவாக்கப்பட முடியாத
நிலையை ஏற்படுத் தினால், இந்த சிக்கல் தீரும்.    Tools  கிளிக் செய்து  Folder
Options  செல்லவும். கிடைக்கும் விண்டோவில் View  டேப் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு ‘Do not cache thumbnails’  என்ற வரி இருக்கும் இடத்தைத் தேர்ந்
தெடுத்து, அதன் முன் உள்ள பாக்ஸில் சிறிய டிக் அடை யாளத்தை ஏற்படுத்தவும்.
பின்னர் Apply என்பதில் கிளிக் செய்து, அடுத்து  OK  கிளிக் செய்திடவும்.