Wednesday, December 1, 2010

நவீன வசதிகளுடன் உள்ள வீடியோ-ப்ளேயர்

        வீடியோபிளேயர்கள் பல நம்மிடம் இருந்தாலும் மற்றவற்றை காட்டிலும் சிறப்பானதாக இது உள்ளது.அனைத்து வீடியோ பார்மெட்டுக்களையும் இது ஏற்றுக்கொள்கி்ன்றது.மணிரத்னம் போன்ற சில இயக்குனர் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். இந்த சாப்ட்வேரில் நாம் வீடியோவில் Bridness  & Contrast கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம். அதைப்போல வீடியோவில் ஓடும் பாடலோ - படமோ முடிந்ததும் அதுவே Shutdown ஆவது போல் செட்செய்துவிடலாம். 6 எம்.பி.உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  

        இதில் அனைத்து ப்ரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் கீ-உள்ளது. கீ- களிலேயே நாம் அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

வீடியோவினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.
ஆப்ஷன்ஸ்ஸிலும் வேண்டிய செட்டிங்ஸ் செய்து கொள்ளலாம்.
வீடியோவில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது.
இங்கு இன்று மின்தடை காரணமாக இந்த சாப்ட்வேரை பற்றி நான் இங்கு 10 சதவீதம் தான் விளக்கமாக சொல்லியுள்ளேன். விளக்கமாக விளக்கம் அளிக்காமைக்கு மன்னிக்கவும். ஒவ்வொரு செயலையும் செய்துபார்த்து பயன்அடையுங்கள்.

யுஎஸ்பி-யில் கோப்பை மறைக்க பார்ட்டீசியன் உருவாக்கலாம்

                இந்த பதிவின் வழியாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெண் டிரைவில் ஒரு பார்ட்டிசியன் உருவாக்கி நம் ரகசிய கோப்புகளை மறைத்து வைக்கலாம் இதனால் என்ன பயன் நீங்கள் உபயோகப்படுத்தும் பெண் டிரைவை நண்பர்கள் அல்லது அலுவல் வேலையாக யாரிடமாவது பகிர்ந்துகொள்ள நேரிடலாம் அந்த நேரத்தில் உங்கள் கோப்புகள்...... திறந்த வெளியில் இருக்குமானால் அதை யாரும் எளிதாக திறந்து பார்க்கலாம் அதே நேரத்தில் நாம் பெண் டிரைவை யாரிடமாவது கொடுக்கும் போது நாம் மறைத்துள்ள கோப்புகள் வெளியே தெரியக்கூடாது அதே நேரத்தில் மற்ற கோப்புகளை நாம் பகிர்ந்துகொள்ளவும் முடியும் அதற்காக நான் இரண்டு வித மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.


               முதலாவதாக SafeHouseExplorer இதை கணினியில் நிறுவி விடுங்கள் மிக எளிமையாக இருக்கிறது இதில் என்ன ஒரு விஷேசம் இருக்கிறதென்றால் நீங்கள் பார்ட்டிசியன் செய்து முடித்து கோப்புகளை மறைத்ததும் எப்போது நீங்கள் கணினியில் பெண் டிரைவை இனைக்கிறீர்களோ அப்போது இரண்டு பெண் டிரைவ் ஐகான் வந்திருக்கும் அதில் ஒன்று நாம் பார்ட்டிசியன் உருவாக்கியது இது எந்த கணினியில் இந்த மென்பொருளை நிறுவியிருக்கிறீர்களோ அந்த கணினியில் மட்டுமே இந்த பார்ட்டிசியன் தெரியும் அல்லாத கணினிகளில் இந்த பார்ட்டிசியன் வெளியே தெரியாது.



                இரண்டாவதாக Remora USB File Guard இது கொஞ்சம் வித்யாசம் இருக்கிறது இதைப் பொருத்தவரை இப்படியான ஒரு பார்ட்டிசியன் இருப்பதை வெளியே காண்பிக்கும் ஆனால் அதை அவர்கள் அனுகி திறக்க முடியாது பயன்படுத்தி பாருங்கள் எது உங்கள் தேவையை சரியாக தீர்க்கிறதோ அதையே பயன்படுத்துங்கள் ஆனால் இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் கோப்புகளை திறக்க முடியும் காரணம் இதற்கான நிறுவல் உங்கள் யுஎஸ்பியில் தான் நிறுவுகிறீர்கள் ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது நாம் நமது கோப்புகளை திறக்க ஒவ்வொரு முறையும் நாம் பயன்படுத்தும் கணினியில் எக்ஸ்ட்ராக்ட் செய்யவேண்டி வரும் அதை கவணமாக அழித்துவிடுங்கள் இல்லையென்றால் நீங்கள் பாதுக்காப்பாக வைக்க நினைத்த கோப்புகள் மற்றவர்கள் காணக்கூடும்.



                மேலும் தங்களின் உபயோகத்திற்காக இன்னும் இரண்டு வகையான மென்பொருளையும் உங்கள் கவணத்திற்கு தருகிறேன் ஆனால் இந்த இரண்டு மென்பொருளும் எதை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் எனபதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை இனி USB True crypt மற்றும் USB True crypt இரண்டையும் சோதித்து பார்க்க விரும்பும் நபர்கள் முயற்சித்து பாருங்கள் அது பற்றியதான தகவலை நம் தளத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

                 நான் ஏற்கனவே நம் தளத்தில் இனைந்திருக்கும் நண்பர்கள் என்ன காரணத்தால் வெளியேறி விடுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை நான் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தேன் அதன் பின் தான் நான் நம் தளத்திற்காக புரியாத கிறுக்கல்கள் வழிகாட்டி என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நான் நினைத்தேன் இதைப்பற்றி தெரியாத நண்பர்கள் தான் வெளியேறுகிறார்கள் என்று ஆனால் மிக சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன் சில பதிவர்கள் தான் நம் தளத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் அவர்களின் சரியான நோக்கத்திற்கு நன்றி. இதை நான் இன்டிலியில் இருந்து தான் கண்டுபிடித்தேன் இன்டிலியில் என்னை ஒரு பதிவர் பின் தொடர்ந்தார் அவர் ஏற்கனவே நான் பதிவு எழுத தொடங்கிய காலத்திலேயே நம் தளத்தில் பாலோவராகவும் இனைந்திருந்தார் அவரை போன்ற பதிவர்கள் தான் காழ்ப்புணர்ச்சி அல்லது நம்மிடம் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்து கிடைக்காததால் வெளியேறியிருக்கிறார்கள் அவர்களை போன்ற நண்பர்களுக்கு மிக்க நன்றி நீங்கள் வெளியேறியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை இதை நான் இங்கு எழுத காரணம் நான் உங்களை புரிந்துகொண்டேன் என்பதை உணர்த்துவதற்காக தான்.

                 இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இன்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.