Sunday, April 24, 2011

விஞ்ஞான கண்டுபிடிப்புகள்

(1) மின் குமிழைக் கண்டு பிடித்தவர்.

*தோமஸ் அல்வா எடிசன்

(2) கணணியைக் கண்டு பிடித்தவர்

*சாள்ஸ் பபேஜ்

(3) விமானத்தைக் கண்டு பிடித்தவர்

*ரைட் சகோதரர்கள்

(4) கொதி நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர்

*ஜேம்ஸ் வார்ட்

(5) உட்தகன எஞ்சினைக் கண்டு பிடித்தவர்

*நிக்கலஸ் ஏ. ஓட்டோ

(6) வானொலியைக் கண்டுபிடித்தவர்

*மார்க் கோணி

(7) தொ¨லைக்காட்சிப் பெட்டியை கண்டுபிடித்தவர்

*ஜோன் லொகி பெயார்.

(8) தொலைக்காட்டியை கண்டுபிடித்தவர்

*கலிலியோ கலிலி

(9) அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர்

*ஜோனல் டுடன் பார்க்

(10) ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர்

*சேர் ஐசன் நியுற்றன்

(11) முதல் முதல் உலகப் படத்தை வரைந்தவர்

*தொலமி

(12) முதல் முதலில் வின்வெளிக்கு சென்ற பெண்மணி

*கல்பனா செளலா

(13) முதன் முதலில் சந்திரனில் காலடி வைத்தவர்

*நீல் ஆம் ஸ்ரோங்

(14) தந்தி முறையைக் கண்டுபிடித்தவர்

*சாமு வேல் போர்ஸ்

(15) தொலை பேசியைக் கண்டுபிடித்தவர்

*கிரகாம் பெல்

(16) இனையத்தைக் கண்டு பிடித்தவர்

* டிம் பெர்னஸ் லீ

(17) தொலை நகலைக் கண்டுபிடித்தவர்

* ஆர்த்தர் கோர்ண்

(18) உயிரங்கிகளின் தோற்றப்பாட்டை கண்டுபிடித்தவர்

*சாள்ஸ் டார்வின்

(19) அணுக் கொள்கையைக் கண்டு பிடித்தவர்

*ஜோன் தாற்றன்



(20) முதன் முதலில் கற் பாதைகளை அறிமுகப் படுத்தியவர்

*ஜோன் மெகடம்

ஆபத்தான நேரங்களில் சிறந்த முடிவுகள் எடுக்கும் யானைகள்!


யானைகளுக்கு நீண்டநாட்களுக்கான ஞாபக சக்தி உள்ளது. அதிலும் ஆபத்தொன்று வருகின்றபோது அவற்றுக்கு இந்த ஞாபக சக்தி துணை நிற்கின்றது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.
வயது முதிர்ந்த யானைகள் இக்கட்டான கட்டங்களில் சிறந்த முடிவுகளை எடுக்கின்றன.
முன்னைய அனுபவங்களைக் கொண்டே அவை இந்த முடிவுகளை எடுக்கின்றன. ஆபிரிக்க யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் முடிவில் இந்த விவரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

கூட்டமாக வாழும் யானைகளுள் மிகவும் வயதான யானையே இக்கட்டான கட்டங்களில் மிகச் சிறந்த முடிவுகளை எடுக்கின்றது. தன்னுடைய ஞாபகத்தில் உள்ள முன்னைய அனுபவங்களின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
கூட்டமாக வாழும் யானைகள் மத்தியில் தலைமைத்துவத்துக்கு வயது மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அதன் நீண்ட ஆயுள் அதற்கேற்ற மூளை வளர்ச்சி என்பன இங்கு பிரதான இடம் பிடிக்கின்றன.
யானைக் கூட்டமொன்று பொதுவாக 12 யானைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. உணவு தேடல், ஓய்வெடுத்தல் என இவை கூட்டமாகவே செயற்படுகின்றன. இதில் ஒன்று இன்னொன்றுக்குப் பாதுகாப்பாகச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சிங்கங்களுள் நன்கு வளர்ந்த சிங்கங்கள் யானைகளை வேட்டையாடி இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடியவை.
இந்த சிங்கங்களின் கர்ச்சனை சத்தம் கேட்டவுடன் அதைக் கூர்ந்து அவதானித்து கூட்டத்தின் தலைமை யானை தனது முன்னைய அனுபவங்களின் அடிப்படையில் செயற்பட்டு சிறந்த முடிவுகளை எடுத்து பதுங்குவதற்கு வழிகாட்டி தனது கூட்டத்தைக் காப்பாற்றுகின்றது.
கென்யாவின் காட்டுப்பகுதிக்குள் யானைகளின் செயற்பாடுகளை இரண்டு வருடங்களுக்கு மேல் நன்கு அவதானித்துள்ள சஸெக்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொக்டர். மெக்கொம்ப் தலைமையிலான குழுவினர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்

அதிவேக ‘ஹைப்பர்சொனிக்’ ஜெட் விமானங்கள் : நாஸா உருவாக்கம்


அதிவேக ‘ஹைப்பர்சொனிக்’ (Hypersonic Jets) ஜெட் விமானங்களை உருவாக்கவுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது.
‘ஹைப்பர்சொனிக்’ என்பது ஒலியின் வேகத்தினை விட 5 மடங்கு வேகமாகசெல்லுதலாகும். ஒலியின் வேகம் ஈரப்பதம் இல்லாத காற்றில் செக்கனுக்கு 343.2 மீட்டர்களாகும்.
விண்வெளிக்கென தயாரிக்கப்பட்ட போதிலும் இவ்விமானம் பயணிகள் விமான சேவைக்கு உபயோகப்படுத்தப்படுமாயின் நியூயோர்க்கிலிருந்து சிட்னிக்கு 2 1/2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
இதற்கென நாஸா அடுத்த 3 வருடங்களுக்கும் தலா 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஒதுக்கீடு செய்யவுள்ளது. _

100 மைல் தொலைவில் இருந்து எதிரிகளை தாக்கும் நவீன துப்பாக்கி: அமெரிக்கா கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் கப்பற்படையில் புதிய வகை துப்பாக்கி ஒன்று சேர்க்கப்பட இருக்கிறது. இதில் இருந்து வெளிப்படும் துப்பாக்கி குண்டு ஒலியை விட எட்டு மடங்கு வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 20 பவுண்டு எடை கொண்ட இந்த துப்பாக்கி குண்டு சிறிய வகை ராக்கெட் போல் காணப்படுகிறது.அமெரிக்காவின் விர்ஜினியாவில் அமைந்துள்ள கப்பற்படை மையத்தில் இந்த துப்பாக்கி சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்பட்டது. அப்போது அது 33 மெகா ஜூல்கள் அளவு ஆற்றலை வெளிப்படுத்தி சீறி பாய்ந்து சென்றது. (ஒரு மெகா ஜூல் என்பது ஒரு டன் எடையுள்ள கார், மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்வதற்கு சமம்). ஒரு சில நிமிடங்களிலேயே 100 மைல்கள் தூரம் செல்ல கூடிய இந்த ராக்கெட் மற்ற சாதாரண வகை துப்பாக்கிகளை விட அதிக துல்லியம் வாய்ந்தது.
தற்போது அமெரிக்காவின் கப்பற்படையில் 13 மைல்கள் தூரம் சென்று தாக்கும் திறன் வாய்ந்த துப்பாக்கிகளே உள்ளன. இவ்வகை துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்த பின் பாதுகாப்பான இடத்தில் இருந்தே எதிரி படைகளை தாக்க இயலும். அதற்கு இன்னும் 5 அல்லது 10 வருடங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. வரும் 2025-ஆம் ஆண்டில் இருந்து 6 நிமிடங்களில் 200 மைல்கள் சென்று தாக்கும் தன்மை வாய்ந்த நவீன தொழில்நுட்பம் வாய்ந்த துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்

குடி தண்ணீரை சுத்தமாக்க வாழைப்பழ தோல் உதவும்


குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். ஆம், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:

இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில், தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதாவது, தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும், அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் உட்புற காந்த சக்தி மைய வலிமையின் அளவு முதன்முதலாக ஆய்வில் கண்டுபிடிப்பு


நாம் வாழும் பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசைக்கு முழு காரணம் காந்த சக்தி மையமே இந்த காந்த சக்தி மைய வலிமையை பற்றி கலிபோர்னிய பல்கலைகழக பூமி மற்றும் கோள் அறிவியல் துறை பேராசிரியர் புரூஸ் ஏ. பபெட் என்பவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன்படி பூமியின் உட்புறம் ஏறத்தாழ 1800 மைல்கள் (2,896 கி.மீ.) ஆழத்தில் இந்த காந்த சக்தி மையம் அமைந்திருக்கிறது என கண்டறிந்துள்ளார். இது பூமியின் மேற்பரப்பில் காணப்படும் காந்த சக்தி மையத்தை விட 50 மடங்கு வலிமை வாய்ந்தது குறிப்பிடத்தக்கது. வெப்பமானது பூமிக்கு 3 விதமான வழிகளில் கிடைக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அவை
1) சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவானபோது ஏற்பட்ட வெப்பம்
2) பூமிக்குள் காணப்படும் தனிமங்கள் வெளியிடும் புவியீர்ப்பு ஆற்றல் வழியாக கிடைக்கும் வெப்பம் மற்றும்

3) நீண்ட காலமாக பூமியில் உள்ள பொட்டாசியம், யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் சிதைவுகளால் வெளிப்படும் வெப்பம் என வெப்பமானது பூமிக்கு கிடைக்கும் காரணிகளாக கூறப்படுகிறது.
மேலும், பூமியின் உட்புறம் உள்ள காந்தபுலம் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நீடித்து வருகிறது. அதற்கு பூமியில் காணப்படும் இந்த வெப்பமே அடிப்படை ஆகும். உற்பத்தியாகும் வெப்பமானது தொடர்ந்து காந்தபுலத்தை தோற்றுவிக்கும் ஒரு சிறந்த சக்தியாக விளங்கி வருகிறது. ஏறத்தாழ 1,400 மைல்கள் (2,253 கி.மீ.) அளவிற்கு அடர்த்தி மிகுந்த பூமியின் வெளிப்புற அடுக்கு வெப்பத்தின் உதவியால் கொதிப்படைகிறது. இதனால் உள்ளே உள்ள தனிமங்கள் ஆற்றலை உற்பத்தி செய்து பின்னர் சிறிது சிறிதாக அவற்றை மின்னாற்றலாக மாற்றுகிறது. அந்த மின்னாற்றல் காந்த சக்தி மையம் பூமியில் தொடர்ந்து நீடிக்க உதவுகிறது. இந்த காந்த சக்தி மையம் பின்னர் பூமியின் மேற்புறம் வரை பரவுகிறது. இது பற்றிய தகவல்களை கண்டறிந்துள்ள அறிவியலாளர் புரூஸ் பூமியின் உட்புறம் காணப்படும் அரிய விசயங்கள் பற்றிய தனது ஆராய்ச்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

30 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது மனித இனம்


அமெரிக்காவின் மிசவுரி பல்கலைகழக பேராசிரியர் கேரல் வார்டு தலைமையில் மனித இனம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியில், உலகின் மிக பழமையான மனித மூதாதையர்கள் என ஹோமோ எரக்டஸ் இனம் கருதப்பட்டது.அவர்கள் வாழ்ந்த காலம் 1.8 மில்லியன் முதல் 70 ஆயிரம் வருடங்களுக்கு இடைப்பட்டவை ஆகும். தற்போது எத்தியோப்பியா நாட்டில் மனித கால் எலும்பு ஒன்று புதைபொருளாக கண்டெடுக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வில் அதன் காலம் 3.2 மில்லியன் வருடங்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. இது கடந்த 1974-ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்ட லூசி என்ற பெயரிடப்பட்ட எலும்பு கூடுடன் பொருந்துகிறது. மேலும் அந்த இனம் ஆஸ்டிராலொபிதிகஸ் அபாரென்சிஸ் வகையை சேர்ந்தது. மரத்திலிருந்து கீழிறங்கி தரையில் கால் பதித்து நடப்பதற்கு ஏற்ற கால் எலும்புகள் மற்றும் பழங்கள், பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றை நன்கு கடித்து உண்பதற்கு ஏற்ப அமைந்த பெரிய தாடைகள் ஆகியவை இந்த இனத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். எனவே இதனடிப்படையில் பார்க்கும் போது, மனித இனத்தின் மூதாதையர்கள் சுமார் 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க கூடும் என பேராசிரியர் கேரல் தெரிவித்துள்ளார்

கண்களை மூடினால்… எடை குறையும்!


கண்களை மூடினால் உடல் எடை எப்படி குறையும்? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். ஆனால் இது மனோதத்துவ முறை சிகிச்சையில் சாத்தியமாகும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்.
இப்படி ஒரு புது மருத்துவ தெரபி, மும்பை, பெங்களூர், டெல்லி என பரவி, தற்போது சென்னையில் கால் பதித்துள்ளது.
மனோதத்துவ ரீதியான பயிற்சியினால், கண்களை மூடும்போது உள்ளத்தில் மாற்றம் நிகழும். அதுவே உடலில் வெளிக்காட்டப்பட்டு, எடை தானாக குறையும்.
மனதின் இயல்பான நிலைக்கு ஹிப்னோசிஸ் என்று பெயர். நாம் விழித்திருக்கும்போது மனது ஒரு மாதிரியாகவும், தூங்கும்போது வேறு மாதிரியாகவும் இருக்கும். ஆனால் மெய்மறந்த நிலையில் நாம் ஆழ்நிலையில் இருக்கும்போது உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

மருத்துவ ரீதியாக செய்யப்படும் இந்த ஹிப்னோதெரபியில் மனிதனின் இயல்பான மனம் விசுவரூபம் எடுக்கும்போது, அதன் விளைவுகளால் உடலில் பல கோளாறுகள் குணமாகின்றன.
இதை நான்கு முதல் ஆறு வாரம் வரை செய்ய வேண்டும். மன அழுத்தம் குறையும்போது உடல் சீராகி, எடையும் சீராகும்.

உயிர் தோன்றி எவ்வளவு காலமாகிறது?


பூமி தோன்றி எவ்வளவு காலம் ஆகியிருக்க வேண்டும் என்பதற்குத் துல்லியமான கணக்கு இல்லை. என்றாலும் ஏறத்தாழ 500 கோடி ஆண்டு களுக்கு முன்னால் பூமி தோன்றியிருக்கக்கூடும் என்று அறிவியல் முறைகளைக் கொண்டு அறிஞர்கள் ஊகிக்கிறார்கள்.
பூமி தோன்றிய உடனே அதில் உயிரினங்கள் தோன்றிவிடவில்லை. பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிரினங்கள் தோன்றிஇருக்க முடியும் என்று கணித்துள்ளனர்.

அதிலும் எடுத்த எடுப்பிலேயே இன்று உள்ளது போன்ற உயிரினங்கள் தோன்றி விடவில்லை. ஏறத்தாழ நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீரில் பாசி போன்றவை தோன்றின. இம்மாதிரி தோன்றியதற்கு அக்காலத்தில் கார்பன் கூட்டுப் பொருட்கள் அதிகமாக இருந்ததே காரணமாகும்.

சுமார் 50 கோடி ஆண்டுகள் கடந்தபிறகுதான் உயிர்த் தோற்றங்கள் பலவித மாறுதல்களை அடைந்தன. கிளிஞ்சல்கள் போன்ற கெட்டியான கூடுகளில் அவை வசிக்க ஆரம்பிக்க, மேலும் ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகின. பின்னர்தான் படிப்படியாக முறைப் படியான உயிரினங்கள் தோன்றி வளர்ந்தன.

செல்போனை அதிகம் பயன்படுத்தினால் கழுத்து வலிக்கும்!


தற்போது எந்நேரமும் செல்போனும் கையுமாக (காதுமாக?) இருப்பவர்களை அதிகம் காண முடிகிறது. செல்போன்களையோ, ஐ-பாடுகளையோ அதிகம் பயன்படுத்தினால் கழுத்தில் வலி ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
`டெக்ஸ் நெக்’ என்ற இந்தப் பாதிப்பு, செல்போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள் அவர்கள்.

குனிந்து செல்போனையே பார்த்துக் கொண்டிருப்பதால் அந்தத் தோற்றத்துக்கு ஏற்ப முதுகுத் தண்டுவட எலும்புகளும், தசைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. கழுத்து வளைவு, ஆதரவுத் தசைகள், மெல்லிய இணைப்புகளில் ஏற்படும் மாற்றம், கடைசியில் தசைகளில் வீக்கத்தையும், வலியையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இன்றைய நவீன யுகத்தில் செல்போன் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது என்றபோதும், அவற்றால் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்ள முயற்சிக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அதாவது கையில் உள்ள உபகரணத்தை நாம் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தலையைக் குனிந்து செல்போனைக் கேட்கவோ, குறுந்தகவல்களைத் தட்டி அனுப்பவோ செய்யாமல் முகத்துக்கு நேராகப் பிடித்தபடி அவற்றைச் செய்ய வேண்டும். அதிக நேரம் தலை குனிந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே இருந்தாலும் இடையிடையே கழுத்தை நிமிர்த்தி `ரிலாக்ஸ்’ செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். கையடக்க எம்பி 3 பிளேயர், ஈ- ரீடர் எனப்படும் மின்னணு புத்தகம் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
“சிற்சில மாற்றங்கள் மூலம் நீங்கள் உங்களின் ஆரோக்கியம், முதுகுத் தண்டுவடம், கழுத்து எலும்பு மற்றும் தசைகளின் ஆயுட்காலத்தைக் காத்துக்கொள்ளலாம்” என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பொதுவாக செல்போன் பித்தர்கள் தங்களை மறந்து அதில் மூழ்கிவிடுகிறார்கள். அவர்கள் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது!

தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு


தூக்கத்தை தொலைத்து எதையெதையோ தேடி பெறுவதாகத்தான் அமைகிறது பலருக்கும் இந்த வாழ்க்கை. பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தும் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாததாக தூக்கம் சிலருக்கு கண்களுக்கெட்டாத தூரத்திற்கு போய்விடுவதும் உண்டு. எது எப்படியோ ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. தூக்கம் முறையாக இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும். இது தொடர்பாக, மனநல ஆரோக்கிய அமைப்பை சேர்ந்த மருத்துவர் ஆன்ட்ரூ மேக்கல்லோச் கூறும்போது, உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கம் தொடர்பானவையாகவே அமைந்துவிடுகிறது என கூறினார். மேலும் இவ்வமைப்பினர் தூக்கம் குறித்து சுமார் 5,300 பேரிடம் ஆய்வு
மேற்கொண்டனர். அதில் 39 சதவீதம் பேர் மட்டுமே நல்ல முறையில் தூங்குவதாக தெரியவந்துள்ளது. எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவான வரைமுறை இல்லை. ஐந்து மணி நேரம், எட்டு மணி நேரம் என சரியான தூக்க அளவுகளாக பல்வேறு நேரங்களைக் குறிப்பிடுகின்றனர். உண்மையில் மறு நாள் காலையில் எழுகையில் சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.

மலர்கள் மணம் பரப்புவது எப்படி ?


எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது. சில செடிகளில் வெண்ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.
மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான்! சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.
பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்துக்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.
மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் என்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.

சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின்போது உற்பத்தி செய்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது.
எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும்.

`மைக்ரோவேவ் ஓவன்’!


இன்று நம்மூர் சமையலறைகளில் `மைக்ரோவேவ் ஓவன்’கள் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. மைக்ரோவேவ் ஓவன் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்று தெரியுமா? இரண்டாம் உலகப் போரின்போது நடந்தது அது.

விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் `மேக்னட்ரான்’ என்ற பொருள் பயன்படுத்தப்படும். அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார்.
ஒரு பெரிய பல்பில் இருந்துவரும் வெப்பம் அந்த `மேக்னட்ரானில்’ இருந்து வரும். ஒருநாள் ஸ்பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது. அப்போதுதான் அவருக்கு, `இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே!’ என்று தோன்றியது. உடனே `மைக்ரோவேவ் ஓவன்’ பிறந்தது.

ஸ்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். பாப்கார்ன், பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள். ஓவனுக்குள் வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, வர்த்தகரீதியாக மைக்ரோவேவ் ஓவன்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது.
1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது `மைக்ரோவேவ் ஓவன்’. பெர்சி ஸ்பென்சரின் கவனிக்கும் திறனும், ஆர்வமும் ஒரு கண்டுபிடிப்பாக மலர்ந்து, இன்று பலரது சமையல் வேலையை எளிதாக்கி இருக்கிறது.

`தூக்கத்தில் நடக்கும் வியாதி’க்குக் காரணம்!


ஒரு விந்தையான வியாதி- `சோம்னாம்புலிஸம்’ எனப்படும் தூக்கத்தில் நடக்கும் நோய். `குரோமோசோம்’ குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் `மரபணு சங்கேதக் குறியீட்டை’ அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

அந்த சர்வதேச ஆய்வுக் குழு, தூக்கத்தின்போது ஒருவரின் இதுபோன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறு கிறது. ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் குறைபாடான டி.என்.ஏ.யின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும். தற்போது, அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியிருக் கிறார்கள். அதன்மூலம், தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய் வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள். அவர்கள், பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறிவிடுவதை வழக்கமாக (!) கொண்டிருந்தாள்.
அந்தக் குடும்பத்தினரின் உமிழ்நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில், `குரோமோசோம் 20′-ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டது. அது, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த `ஜீன்’ இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தங்களின் கண்டுபிடிப்பு, தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

`ரப்பரின்’ கதை!


`ரப்பர்’ இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் முக்கியத்துவம் புரியும்! `ரப்பர்’, பல்வேறு தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தக்கூடியதாக வளர்ந்தது, அதன் தன்மையைப் போலவே `நீ…ளமானது’. 1800-களின் தொடக்கத்தில் நி இங்கிலாந்தில் வாழ்ந்தவர் சார்லஸ் குட் இயர். மரத்திலிருந்து கிடைக்கும் `ரப்பர்’ என்ற பொருளைப் பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்தார் அவர். நன்கு இழுக்கக்கூடியதாகவும், மீண்டும் பழைய நிலையை அடையக்கூடியதாகவும் ரப்பர் இருப்பது சார்லஸ் குட்இயருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

ரப்பரால் `வாட்டர் புரூப்’ செய்யப்பட்ட புதுவகை பூட்ஸ்களையும், மழை கோட்களையும் அந்தக் காலத்தில் பலரும் வாங்கினார்கள். ஆனால் அந்தப் பொருட்கள் எல்லாம் கோடை காலத்தில் ஒட்டக் கூடியதாகவும், மழைக்காலத்தில் விரிசல் விடக்கூடியதாகவும் இருந்தன. எனவே ஆரம்பத்தில் அவற்றில் ஆர்வம் செலுத்தியவர்களும்கூட பின்னர் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

சார்லஸ் குட்இயருக்கு மட்டும் ரப்பர் மீதான ஆர்வம் குறையவே இல்லை. சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ரப்பரில் உண்டாகும் பிரச்சினைகளைத் தீர்த்து, அதை எப்போதும் பயன்படுத்தும் வகையில் உருவாக்க அவர் உழைத்தார். ரப்பரை மென்மையாக்க அதனுடன் டர்பன்டைன் கலக்கப்படுவதை குட்இயர் அறிந்தார். அதனால் வெவ்வெறு மென்மையாக்கும் பொருள்களைப் பயன்படுத்தி ஆராய்ந்தார். புதுவித ரப்பர் தயாரானவுடன் சுருட்டி வைத்துவிட்டுக் காத்திருப்பார். குளிர் காலம் வந்தவுடன் விரிசல் விழுகிறதா என்று சோதிப்பார். தோல்வி மேல் தோல்வி. அதனால் குட்இயர், பணத்தையெல்லாம் இழந்து ஏழையாகிப் போனார்.
குட்இயர் ஒருநாள் ரப்பரில் நைட்ரிக் அமிலத்தைக் கலந்தார். காத்திருந்தார். வெற்றி கிடைத்தது போல் இருந்தது. அவருடைய `அமில வாயு’ முறைக்கு காப்புரிமை கிடைத்தது. அமெரிக்க தபால்துறைக்கு புதிய ரப்பர் பைகள் தயாரிப்பதற்கான ஆர்டரும் கிடைத்தது. சில மாதங்களியே அந்தப் பைகள் ஒட்டிக்கொள்கின்றன என்று திருப்பி அனுப்பப்பட, குட்இயர் நொந்துபோய்விட்டார்.
குட்இயர் ஒருநாள் ரப்பரை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது கொஞ்சம் கந்தகமும், வெள்ளை காரீயமும் அதில் விழுந்துவிட்டன. அப்போது அவர் அதைக் கவனிக்கவில்லை. மறுநாள் எடுத்துப் பார்த்தபோது அந்த ரப்பர், தோல் போல மென்மையாக இருந்தது. நன்றாக வளைந்தது. ஒட்டவும் இல்லை.
அந்த விபத்து, குட்இயரின் ஆராய்ச்சியை சரியான திசையில் திருப்பியது. வெப்பமும், வேதிப்பொருட்களும் சேர்ந்துதான் ரப்பரை பயன்படுத்தக்கூடியதாக மாற்றும் என்று அவர் அறிந்துகொண்டார். 1844-ல் அந்த முறைக்கு `வல்கனைசேஷன்’ என்று குட்இயர் காப்புரிமை பதிவு செய்தார். ரோமானிய நெருப்புக் கடவுளின் பெயர் `வல்கன்’ என்பதாகும்.

அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி: ஆய்வில் தகவல்

 குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), “ஜங்க் புட்’ குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.”ஜங்க் புட்’ எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது.
 இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது. நான்கு வயதுக்குக் குறைந்த நாலாயிரம் குழந்தைகளிடம் அவர்களின் நுண்ணறிவுத் திறன் ஆய்வு செய்யப்பட்டது.அவர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகளுக்கு ஏற்ப, நுண்ணறிவுத் திறன் குறைவது கண்டறியப்பட்டது. சராசரியாக, 1.67 சதவீதம் இயல்பு நிலையில் இருந்து குறைவது தெரியவந்தது. இந்த இழப்பை சரி செய்ய முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்து நார்த்ஸ்டோன் கூறியதாவது:பிரிட்டனில் குழந்தைகள், மோசமான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகளவில் உள்ள உணவுகளை மட்டுமே பெருமளவில் உண்பதால், எட்டரை வயதில் அவர்களின் நுண்ணறிவுத் திறனில் பெரும் குறைபாடு நிகழ்கிறது.ஆனால், ஆரோக்கியமான உணவு முறை, நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கிறது. இந்த வயதில், நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளைக் கொடுத்தால் அவர்களின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.இவ்வாறு நார்த்ஸ்டோன் தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் புகைப் பழக்கத்தை விட முடியுமா?


மருத்துவ சிகிச்சை மூலம் புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என, மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புகைப் பிடிக்கும் பழக்கம் காரணமாக, உலகளவில் ஆண்டுதோறும், 50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.இவர்களில் 90 சதவீதம் பேர், நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயின் காரணமாக பலியாகின்றனர். சிலர், அந்த பழக்கத்தை எளிதாக விட்டு விடுகின்றனர். சிலரால், என்ன செய்தும் அந்த பழக்கத்தை விட முடிவதில்லை. இந்நிலையில், புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கும், மூளைக்கும் உள்ள தொடர்பு குறித்து, மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். எலிகள் மற்றும் சுண்டெலிகளை, சிகரெட்டிலிருந்து வெளியாகும் நிகோடின் புகையை சுவாசிக்க வைத்தும், அவற்றின் மூளையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டும், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் மூலம், சிகரெட் பிடிப்பதற்கும், மனிதனின் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையின் மேற்பரப்பிலுள்ள நுண்ணிய மரபணுக்கள், புகை பிடிப்பதற்கு தூண்டுகின்றன. “ஆல்பா 5′ என்று அழைக்கப்படும், இந்த செல்கள் சிறியதாக இருப்பவர்கள், எளிதாக புகைப் பழக்கத்தை கைவிட முடிகிறது. பெரிதாக உள்ளவர்களுக்கு, புகைப் பழக்கம், மது உள்ளிட்ட எந்த பழக்க வழக்கங்களையும் எளிதாக விட முடியாமல் தவிக்கின்றனர். மூளையின் இந்த பகுதிக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம், புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என்று மருத்தவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

முத்துகள் உருவாவது எப்படி?


இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.
முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.
அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.
இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

`பகல் கனவு’ காணும் குழந்தைகள்!

 வளர்ந்த மனிதர்களைப் போல குழந்தைகளும் பகலில் கனவு காண்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் `எம்.ஆர்.சி. கிளினிக்கல் சயன்சஸ் சென்டர்’ ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.

அப்போது, நடந்தவற்றை யோசித்து மீளாய்வது செய்வது மற்றும் விழிப்பு உணர்வுக்கான மூளைப் பகுதிகள், பிறந்த குழந்தைக்கு முழுமையாக வளர்ச்சியடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூளையின் செயல்பாடு, வளர்ச்சி குறித்த தற்போதைய கருத்துகளுக்குச் சவாலாகத் திகழ்கிறது புதிய கண்டுபிடிப்பு.
இம்பீரியல் கல்லூரியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 29 வாரங்கள் முதல் 43 வாரங்கள் வரையிலான 70 குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களின் `மூளை ஓய்வுநிலை வலைப் பின்னல் அமைப்பு’ எவ்வாறு இருக்கிறது என்று `எம்.ஆர்.ஐ. ஸ்கேன்’ எடுத்துப் பார்க்கப்பட்டது. இந்த ஓய்வுநிலை வலைப்பின்னல் அமைப்பானது ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்தாதபோதும் அல்லது தூக்கத்தின்போதும் செயல்பாட்டு நிலையில் உள்ள நிரான்களின் இணைப்பாகும். கருவில் உள்ள சிசுவானது பிறக்கும் நிலையை எட்டும்போது, இந்த வலைப்பின்னல் அமைப்பு, பெரியவர்களுக்கு உள்ளதைப் போல முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறது.

இந்த வலைப்பின்னல் அமைப்புகளில் ஒன்றான `டீபால்ட் மோட் நெட்வொர்க்’, நடந்தவற்றைத் திரும்பிப் பார்ப்பது, பகல் கனவு காண்பது ஆகியவற்றில் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யாதபோது மேற்கண்ட நெட்வொர்க்கானது `ஆக்டிவ்’ ஆகவும், ஒரு பணியில் கவனமாக ஈடுபடும்போது குறைவான `ஆக்டிவ்’ உடனும் இருப்பதை எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் உறுதிப்படுத்தியுள்ளன. குழந்தைகள் தூங்கும்போது இந்த `நெட்வொர்க்’, செயல்பாட்டில் இருக்கிறது.
ஆய்வுக் குழுவின் முக்கிய உறுப்பினரான பேராசிரியர் டேவிட் எட்வர்ட்ஸ், குழந்தைகளின் மூளைச் செயல்பாடு குறித்த முந்தைய கருத்துகளை எங்களின் கண்டுபிடிப்புகள் நிராகரிப்பதாக அமைந்திருக்கின்றன என்கிறார்.

`பால் பாயிண்ட் பேனா’வின் கதை


இன்று `இங்க்’ பேனாக்களை விட, பால் பாயிண்ட் பேனாக்களே அதிகம் பயன்படுத்தபடுகின்றன. இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த `லேடிஸ்லோ பிரோ’ என்பவர். இவர் அச்சுபிரதிகளில் உள்ள பிழைகளைத் திருத்துபவராக பணியாற்றி வந்தார். அவரிடம் பழங்கால பேனா ஒன்று இருந்தது. அந்தபேனாவை அவ்வப்போது இங்க் பாட்டிலில் தோய்த்து எழுத வேண்டும். அது அவருக்கு பெரும் சுமையாக இருந்தது. தவிரவும், திருத்தும் சமயங்களில் தாளின் பல இடங்களில் மை கொட்டிவிடும் அபாயமும் இருந்தது. இதனால், இங்க்கில் தோய்க்காமல் எழுதக்கூடிய புதுபேனாவைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் அவர் இறங்கினார்.

தன் சகோதரனுடன் இணைந்து பல சோதனைகளைச் செய்து பார்த்தார். ஒன்றுகூட சரியாக வரவில்லை. இறுதியாக பேனாவின் முனையில் ஒரு உலோக உருளையை வைத்து, பேனாவுக்குள் பசை போன்ற இங்க்கை செலுத்தி எழுதி பார்த்தார். இன்றைய பால் பாயிண்ட் பேனாக்களுக்கான அடிபடை அதுதான். ஆனால், இதைத் தயாரிப்பதற்கு அதிக செலவானது. அதேசமயம் இதன் பயனை ஒருசிலர் மட்டுமே உணர்ந்தனர்.

இரண்டாம் உலகபோரின்போது தான் பால் பாயிண்ட் பேனாக்களுக்கு மவுசு அதிகரித்தது. விமானங்களில் செல்லும்போது பவுடன் பேனாக்களில் உள்ள இங்க் கசிய, விமானப்படை அதிகாரிகள் தங்களுடைய பைலட்டுகளுக்காக பால் பாயிண்ட் பேனாக்களை வாங்கிக் கொடுத்தனர். `மிக உயரத்திலும் எழுதும் குச்சிகள்’ என்று அதற்கு பெயர் சூட்டபட்டது. இதன் பின்னர் தான் பால் பாயிண்ட் பேனாக்கள் அதிகமாக புழக்கத்துக்கு வந்தன.

பறவைகளின் தூக்கம்!


பறவை இனத்தில் பல, வித்தியாசமான முறையில் தூங்குகின்றன. அப்படி விந்தையாகத் தூங்கும் சிற பறவைகள்…
* `வவ்வால் கிளி’ என்ற பறவை ஒரு காலால் ஏதாவது கிளையைப் பிடித்துக் கொண்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தூங்குகிறது.
* `ஸ்விப்ட்’ என்ற பறவை, பெரிய பந்து போல ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கூட்டமாகச் சேர்ந்து தூங்கும்.
* துருவப் பிரதேசங்களில் காணப்படும் ஒருவகை வாத்து, பனிக்கட்டியில் ஓட்டை செய்து அதில் படுத்துத் தூங்கிவிடுகிறது.

* நியூசிலாந்தில் உள்ள கிவி பறவை, பகல் நேரங்களில் பூமிக்கடியில் காணப்படும் விரிசல் வளைவுகளில் நுழைந்துகொண்டு தூங்கும்.
* `கிரீப்பா’ என்ற பறவை மரப்பொந்துகளில் மல்லாந்து படுத்துக் கொண்டு தூங்கு
கிறது.

* `த்ரஷ்’ என்ற பறவை குளிர்காலத்தில் தினமும் 15 மணி நேரம் தூங்கும். ஆனால் கோடை காலத்தில் இரவு இரண்டு மணிக்கே விழித்துவிடும். பின்னர் மறுநாள் இரவு 10 மணிக்குத்தான் தூங்க ஆரம்பிக்கும்.
* ஆஸ்திரேலியாவில் காணப்படும் `தவளை வாயன்’ (பிராக் மவுத்) என்ற பறவை சரியான கும்பகர்ணன். அதைக் கையில் எடுத்தாலும் தூக்கம் கலையாது.
பொதுவாகப் பறவைகள் உறங்கும்போது தமது இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு உப்பலாக வைத்துக்கொள்ளும். அதனால் இறகுகளுக்குள் காற்றுப் புகுந்து கொண்டு அவற்றின் உடல் வெப்பம் வெளியேறி விடாமல் தடுக்கும். இதன் காரணமாகவே சில பாலூட்டிகளும் தமது உடலைப் பந்து போலச் சுருட்டிக்கொண்டு தூங்குகின்றன.

“பிரபஞ்ச’ ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்


பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் “செர்ன்’ என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் “டெவட்ரான்’ என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

சுவிஸ் – பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் “ஜீரோ’ டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது. 27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் “எலக்ட்ரான் ஓல்ட்’ ஆற்றல் ஏற்பட்டது. “செரன்’ அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், “பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி.
இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து “செரன்’ தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த “இயற்பியல் உயர் சக்தி’ என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.
தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். “செரன்’ சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்’ என்றார்.
“கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.

மனித ரத்தம் -தகவல்கள்


ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு
சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்

ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு
அணுக்களைச் செலுத்துவார்கள்.
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு
இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும்
சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப்
போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம்
வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா
காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத
அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள்,
தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும்
நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில்
மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு
நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு
250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது,
அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து
நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப்
பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை
ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.