Sunday, April 24, 2011

தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு


தூக்கத்தை தொலைத்து எதையெதையோ தேடி பெறுவதாகத்தான் அமைகிறது பலருக்கும் இந்த வாழ்க்கை. பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தும் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாததாக தூக்கம் சிலருக்கு கண்களுக்கெட்டாத தூரத்திற்கு போய்விடுவதும் உண்டு. எது எப்படியோ ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. தூக்கம் முறையாக இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும். இது தொடர்பாக, மனநல ஆரோக்கிய அமைப்பை சேர்ந்த மருத்துவர் ஆன்ட்ரூ மேக்கல்லோச் கூறும்போது, உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கம் தொடர்பானவையாகவே அமைந்துவிடுகிறது என கூறினார். மேலும் இவ்வமைப்பினர் தூக்கம் குறித்து சுமார் 5,300 பேரிடம் ஆய்வு
மேற்கொண்டனர். அதில் 39 சதவீதம் பேர் மட்டுமே நல்ல முறையில் தூங்குவதாக தெரியவந்துள்ளது. எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவான வரைமுறை இல்லை. ஐந்து மணி நேரம், எட்டு மணி நேரம் என சரியான தூக்க அளவுகளாக பல்வேறு நேரங்களைக் குறிப்பிடுகின்றனர். உண்மையில் மறு நாள் காலையில் எழுகையில் சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.

No comments:

Post a Comment