கண்களை மூடினால் உடல் எடை எப்படி குறையும்? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். ஆனால் இது மனோதத்துவ முறை சிகிச்சையில் சாத்தியமாகும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்.
இப்படி ஒரு புது மருத்துவ தெரபி, மும்பை, பெங்களூர், டெல்லி என பரவி, தற்போது சென்னையில் கால் பதித்துள்ளது.
மனோதத்துவ ரீதியான பயிற்சியினால், கண்களை மூடும்போது உள்ளத்தில் மாற்றம் நிகழும். அதுவே உடலில் வெளிக்காட்டப்பட்டு, எடை தானாக குறையும்.
மனதின் இயல்பான நிலைக்கு ஹிப்னோசிஸ் என்று பெயர். நாம் விழித்திருக்கும்போது மனது ஒரு மாதிரியாகவும், தூங்கும்போது வேறு மாதிரியாகவும் இருக்கும். ஆனால் மெய்மறந்த நிலையில் நாம் ஆழ்நிலையில் இருக்கும்போது உடலில் பல மாற்றங்கள் நிகழும்.
மருத்துவ ரீதியாக செய்யப்படும் இந்த ஹிப்னோதெரபியில் மனிதனின் இயல்பான மனம் விசுவரூபம் எடுக்கும்போது, அதன் விளைவுகளால் உடலில் பல கோளாறுகள் குணமாகின்றன.
இதை நான்கு முதல் ஆறு வாரம் வரை செய்ய வேண்டும். மன அழுத்தம் குறையும்போது உடல் சீராகி, எடையும் சீராகும்.
|