உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் சமீபத்தில் அபான்ஸ் நிறுவனத்தினால் இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த சலவை இயந்திரம் அதனை பயன்படுத்துபவர்களுக்கு இலகுவில் புரியக் கூடிய விதத்தில் உங்களுக்கு விளக்கம் கொடுக்கும். “சலவை இயந்திரமான என்னை நீங்கள் நான் சொல்வது போன்று இயக்கினால், உங்களுடைய உடைகள் மற்றும் ஏனைய துணிகளை தூய்மையாக சலவை செய்வதற்கு நான் உதவி செய்வேன்” என்று முதலில் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்.
“நீங்கள் எனது யோசனைகளை சரியான முறையில் நிறைவேற்றினால், என்னை இயக்குவதற்காக விரயம் செய்யப்படும் மின்சாரத்தையும் உங்களுக்கு சாதுரியமாக சிக்கனப்படுத்திக் கொள்ள முடியும்” என்று, சொல்லும் இந்த பேசும் சலவை இயந்திரம் தன்னை எவ்விதம் இயக்க வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களையும் படிப்படியாக ஒவ்வொன்றாக எடுத்துரைக்கும்.
நீங்கள் என்னை இயக்குவதில் ஏதாவது, சிறு தவறிழைத்து விட்டீர்கள் என்றாலும், அதனையும் நான் உடனடியாக திருத்துவதற்கான ஆலோசனைகளை உங்களுக்கு தருவேன் என்ற அந்த சலவை இயந்திரம் சொல்லும். தன்னிச்சையாக இயங்கும் இந்த சலவை இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 7 கிலோகிராம் நிறைவுடைய ஆடைகளையும், துணிகளையும் பளீச் என்று வெள்ளையாக்க கூடிய முறையில் சலவை செய்ய முடியும்.
ஆடைகளிலும், துணிகளிலுமுள்ள கறைகள், அழுக்குகளையும் ஒரே நொடிப்பொழுதில் இந்த சலவை இயந்திரம் துவைத்து சுத்தமாக்கி விடும். இதில் துணிகளை போடுவதற்கு முன்னர் சலவைத் தூளை இயந்திரம் கூறும் அளவுக்கு போட்டபின்னர், தண்ணீரை கலந்துவிட்டால், சலவை இயந்திரம் தண்ணீரை கொதிக்க வைத்து, துணிகளை சுத்தமாக சலவை செய்துவிடும்.
டேர்போடிறம் என்னும் தொழில்நுட்பத்தின் மூலமே இந்த பேசும் சலவை இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆடைகளையும், துணியையும் சுத்தமாக சலவை செய்த பின்னர், அவற்றில் ஈரலிப்பு தன்மையின்றி சூடேற்றி காயவைத்து, சலவை இயந்திரம் ஆடைகளை வெளியேற்றி விடும். பின்னர், அதன் பாவனையாளர்கள் ஆடைகளை ஸ்திரி செய்யும் பணியை மாத்திரமே கையால் செய்ய வேண்டியிருக்கும்.இந்த பேசும் சலவை இயந்திரம் இப்போது கொள்ளுப்பிட்டியில் இருக்கும் அபான்ஸ் காட்சிசாலைகளில் விற்பனைக்கு இருக்கிறது.
|
No comments:
Post a Comment