Sunday, April 24, 2011

ஏப்ரல் முதலாம் திகதி, கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

ஏப்ரல் முதலாம் திகதி, முட்டாள்கள் தினமாக யாரும் அறிவர். கூகிள் தனது பங்கிற்கு முட்டாள் தினத்தில் பல சுவாரஸ்யமான விடயங்களை தன் பங்கிற்கு செய்து மக்களின் கவனத்தை உலகளவில் ஈர்த்துக் கொள்ள 2000 ஆம் ஆண்டிலிருந்து மறப்பதேயில்லை. இன்று ஏப்ரல் முதலாம் திகதி, கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

ஒவ்வொரு வருடமும் முட்டாள் தின பல நகைச்சுவைகளை உருவாக்குவதில் கூகிளுக்கு நிகர் கூகிள் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, இந்த நகைச்சுவைகளை உருவாக்குவதில் வெறுமனே Google.com இணையத்தளம் பங்கு கொள்ளாது, பிராந்தியங்களுக்குப் பொறுப்பான Google.co.uk, Google.com.au போன்ற பல நாடுகளுக்குப் பொறுப்பான தளங்களும் தன் பங்கிற்கு மிகச் சுவாரஸ்யமான விடயங்களை வழங்க தயாராகியிருக்கும்.

இதோ விரிகிறது இந்த ஆண்டின் கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

உயிர் எழுத்துக்களுக்குப் பஞ்சமான ஜிமெயில் தளம்.

இன்றைய ஜிமெயில் தளத்தில் காணப்பட்ட சொற்களில் ஆங்கில உயிர் எழுத்துக்கள் எதுவும் காணப்படவில்லை.



விலங்கின் மொழியை மொழிபெயர்க்கும் கையடக்கத் தொலைபேசி செய்நிரல்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்குடன் கூகிள் விலங்குகளின் மொழிகளை மொழிபெயர்த்து மனிதர்களுக்குச் சொல்லக்கூடிய கையடக்கத் தொலைபேசி செய்நிரலொன்றை தயாரித்துள்ளது.



அந்தச் செய்நிரல் எப்படி இயங்குகின்றதென்பதைச் சொல்லுகின்ற வகையில் காணொளியொன்றையும் கூகிள் அந்தத் தளத்தில் இணைத்திருந்தது.

புத்தகங்களை முப்பரிமாணத்தில் வாசிக்கலாம்

Google Books தமது இணையத்தளத்தில் காணப்படும் புத்தகங்களை முப்பரிமாண முறையில் (3D) வாசிக்கக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.



முப்பரிமாண முறையில் பாதையில் பயணம் செய்யலாம்

Google Street View என்பது பலராலும் விரும்பப்படுகின்ற ஒரு சேவையாகும். ஒரு இடத்தில் அமைவைத் துள்ளியமாகக் காட்டக்கூடிய தகவை இந்தத்தளம் கொண்டுள்ளது. இன்று அந்தத் தளத்தில் காணப்படும் படங்களை முப்பரிமாண முறையில் பார்க்கக் கூடிய வாய்ப்பை கூகிள் ஏற்படுத்தித் தந்திருந்தது.



YouTube செலவீனங்களைக் குறைக்க உதவுங்கள்

இன்றைய தினம் காணொளி பகிர்வுத் தளமான YouTube இன் இலட்சணையை (Logo) கூகிள் மாற்றம் செய்திருந்தது.



இதற்கான காரணத்தையும் அது தெளிவுற அதன் வலைப்பதிவில்குறிப்பிட்டிருந்தது. வீடியோக்களை textP என்ற நிலையில் பார்க்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.



இந்த text-only mode இன் மூலம் காணொளிகளை காண்பதால், செக்கனுக்கு ஒரு டொலரை YouTube சேமித்துக் கொள்ள உதவுவதாக கூகிள் கூறுகின்றது.



எல்லாவற்றையும் சேமிக்கும் Google Docs சேமிப்பகம்

ஆம். எல்லாவற்றையும் உங்கள் திறப்பு, வீட்டிலுள்ள பொருட்களைக் கூட சேமித்து வைக்கக்கூடிய கூகிள் டொக்ஸ் கட்டமைப்பு கூகிள் இன்றுஅறிமுகம் செய்து வைத்தது.



தேடலிற்கான நேரம் செக்கனில் இல்லை

கூகிளில் ஒரு தேடலை மேற்கொள்ளும் போது, தேடலிற்காக எடுத்துக் கொண்ட நேரத்தை வழமையாக செக்கனிலேயே தெரிவிக்கும். இன்று அவ்வாறில்லை. பல அளவீடுகளை இதனைத் தெரிவிக்கும் பொருட்டு பயன்படுத்திக் கொண்டது.



கூகிள் தனது தளத்தில் பயன்படுத்திய சில அளவீடுகள் பின்வருமாறு.

1.21 gigawatts
11.90 parsecs
0.30 centibeats
0.32 centons
0.33e+43 Planck times
0.97 times the velocity of an unladen swallow
0.17 microfortnights
at warp 8.96
0.07 nanocenturies
0.03 femtogalactic years
72.10 jiffies
0.41 microweeks
23.00 skidoo
1.56e-15 epochs
2.00 shakes of a lamb’s tail
3.49 hertz

இவ்வாறாக பல சுவாரஸ்யங்களை கூகிள், இன்றைய தினத்தில் அரங்கேற்றியது.

No comments:

Post a Comment