குவைத் நாட்டில் உள்ள பிரபல வணிகஸ்தலம் ஒன்றில் உள்ள நகைக்கடையில் இலங்கைப் பெண்கள் துணிகரமகாகக் கொள்ளையடித்துள்ளனர். குறிப்பிட்ட பெண்கள் மிகவும் கவச்சியாக உடை அணிந்து நகைக்கடைக்குள் சென்று, நகைகளைப் பார்வையிட்டதோடு, ஆபாசமாகப் பேசி வியாபாரியின் கவனத்தை திசைதிருப்பியும் உள்ளனர். வியாபாரி ஏமாந்து அசடுவழிந்தவேளை, பெறுமதியான நகை ஒன்றை அந்தரங்க இடத்தில்வைத்து, மறைத்து அதனை அப்பெண் எடுத்துச் சென்றுவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அப் பெண்களைப் பார்த்து தனது கவனம் திசைதிரும்பியது என்னவோ உண்மைதான் ஆனால் நகையை மீட்டுத் தருமாறு வியாபாரி பொலிசாரிடம் கூறியுள்ளார்.
வணிகஸ்தலத்துக்கு விரைந்த பொலிசார், அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற பெண்ணை சிறிது தூரத்தில் வைத்து கைதுசெய்தனர். அப்பெண்ணை சோதனையிட்டபோது அவரிடம் எதுவும் இருக்கவில்லை. இருப்பினும் நகைக்கடையினுள் இருந்த கமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டவேளை, குறித்த பெண் நகையைத் திருடி, தனது சட்டைக்குள் வைப்பது பதிவாகியிருந்தது. இதனை அடுத்து பொலிசார் அப்பெண்னை கைதுசெய்து விசாரித்தவேளை, இதேபோல சுமார் 12 தடவை நகைகளை தாம் வெவ்வேறு இடங்களில் கொள்ளையிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப்பெண்ணோடு சம்பந்தப்பட்ட மற்றொருவரையும் பொலிசார் வலைவீசித் தேடிவருவதாக குவைத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப் பெண் சிங்களவராக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது
|
No comments:
Post a Comment