ரஷ்யா மாஸ்கோ நகரில் ஜான் ராற்றஸ்ட் என்பவர் கம்ப்யூட்டர் வாங்குவதற்காக ஒரு பேங்கை சமீபித்துள்ளார். ஆனால் அந்த வங்கியில் அவருக்கு அக்கௌன்ட் இல்லாததால் கடன் தர மறுத்த வங்கி, வேண்டுமானால் உங்கள் தாயின் பெயரில் வாங்கிக்கொள்ளுங்கள் என்றது.
தன்னுடைய தாயின் பெயரில் கடன் வாங்கிய அவருக்கு அதை வங்கி அவகாசத்துக்குள் திருப்பிச் செலுத்த முடியவில்லை. உடனே அவருடைய தாயாரை தொடர்பு கொண்டு உங்கள் பெயரில் உங்கள் மகன் வாங்கிய கடனுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று சொல்லி மிரட்டியிருக்கிறது.
கோபம் பொறுக்காமல் வந்து கேட்ட அந்த தாய்க்கு மகனிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்காதது மட்டுமல்லாமல், கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். மாறி மாறி வாக்குவாதம் முற்றி, கோபம் தலைக்கேறிய அந்த தாய், ஒரு முடிவுக்கு வந்தார்.
எப்படியாவது இவனை கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆனால் எப்படி? கூலிக்கு ஆள் வைத்து கொல்ல துணிந்தார். அன்று இரவே கூலிப் படையினரிடம் பேரம் பேசினார். அதற்கு கூட பணமில்லாத அந்த தாய் வேறொரு வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார்.
அதாவது தன்னுடைய பெயரில் வங்கியில் கடன் வாங்கிய மகனைக் கொல்வதற்கு கூலிப்படைக்கு கொடுக்க வேறொரு வங்கியிலிருந்து கடன் வாங்கிய நவீன தாய்.
கூலிப்படைக்கு பேசிய தொகை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் யூரோக்கள். தமிழ்நாட்டிலுள்ள தாயார்கள் அதே பணத்தை வைத்து மகன் வாங்கிய கடனை அடைத்திருப்பார்கள்.
சம்பவம் என்னவோ விநோதமாக இருந்தாலும், க்ளைமாக்ஸ் தமிழ் பட ஸ்டைலிலேயே இருந்தது. கூலிப்படையிலும் அங்கே ஸ்பை இருக்கிறார்கள் போலும். இறுதி செட்டில் மென்ட் கொடுக்கும்போது கையும் களவுமாக பிடித்து விட்டார்கள் போலீசார். மகன் தப்பித்தான்.
|