Thursday, January 6, 2011

கணிணி திரையை படம் பிடிக்கும் சிறிய இலவச மென்பொருள்

கணிணியை உபயோகிக்கும் போது நடக்கும் மாறுதல்களை அல்லது சில செயல்பாடுகளை படமாக பிடிக்க பல மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன.ஆனால் Liksoft தயாரிப்பான இந்த மென்பொருள் கொஞ்சம் மற்றவற்றோடு வேறுபட்டுள்ளது.


இந்த மென்பொருள் மூலம் எடுக்கப்படும் படங்கள் தரமானதாகவும் முழு சன்னலையும் படம் எடுக்கும் வசதியும் உள்ளது. தற்போது இயக்க நிலையில் உள்ள சன்னல்கள், எந்த ஒரு செவ்வக வடிவ நிலை மற்றும் நீள்வட்ட நிலையிலும் படம் எடுக்க முடியும். மேலும் எதாவது செயல்திட்டம் அமைக்கும் போது நமக்கு பயன்படும். எங்கேயாவது விளக்கக் காட்சி காட்ட வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். மேலும் இதில் எடுக்கப்பட்ட படங்களை பல வடிவங்களில் சேமிக்கலாம்( jpg, gif,png)

தரவிறக்கச்சுட்டி :Download Liksoft Free Screen Capture

ஒரே நேரத்தில் பல படங்களின் அளவை மாற்ற மென்பொருள் BatchBlitz.









நமக்கு ஒரு படத்தின் அளவை மாற்ற வேண்டும் என்று கருதினால் அதன் அளவைக் குறைக்க அல்லது கூட்ட வேண்டும்.மேலும் அதன் மூலைகளின் அளவையும் (Dimension) குறைக்க அல்லது கூட்டச்செய்வோம். இதனால் படங்கள் அழகாக மாறும்.இதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.இந்த வசதி Paint லேயே உள்ளது.

ஆனால் ஒரே நேரத்தில் பல படங்களின் அளவை வேறு ஒரு அளவிற்கு மாற்றும்பணியை இந்த மென்பொருள் செய்கிறது.இந்த மென்பொருளில் படங்களை கையாள்வது எளிது மற்றும் உங்களிடம் படங்களை தேர்வு மட்டுமே செய்ய்ச்சொல்கிறது.

இது மட்டுமின்றி பல கோணங்களில் திருப்ப, வண்ணங்களை திருத்தவும், சொற்கள் சேர்க்கவும் உதவுகிறது. இது ஒரு இலவச மென்பொருளாகும்.நன்றி!
தரவிறக்கச்சுட்டி : http://www.sunlitgreen.com/batchblitz.html

எந்த மென்பொருளையும் பிறர் பயன்படுத்தாமல் செய்ய AppAdmin

கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம். சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் 
செய்யலாம்.









ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து (password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தமுடியும்.






இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்துவிட வேண்டும். பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த மென்பொருளை தடை செய்கிறிர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால் (Drag and drop) கூட போதும். இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை.(No installation) அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.
தரவிறக்கச்சுட்டி : Download AppAdmin

டுவிட்டரிலிருந்து தானாக பேஸ்புக்கில் அப்டேட் செய்ய


Update facebook status via twitter






















இணைய உலகில் டுவிட்டரும் பேஸ்புக்கும் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. இவற்றின் வளர்ச்சி பல நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் பிரபலமாக உதவுகிறது. வலைத்தளம் வைத்திருப்போருக்கும் பதிவுகளை கொண்டு போய் சேர்ப்பதில் இவைகளுக்கும் பங்குள்ளது. பதிவுகளின் சுருக்கத்தையும் இணைப்பையும் மட்டும் டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் போட்டுவிட்டால் நமது நண்பர்கள் மற்றும் பேஸ்புக் பக்கத்தை பார்வையிடுபவர்கள் உடனடியாக நமது தளத்திற்கு வருவார்கள்.


நாம் பிளாக்கரில் பதிவிட்டதும் டுவிட்டரில் தனியே, பேஸ்புக்கில் தனியே நுழைந்து பதிவைப்பற்றிய குறிப்பைச்சேர்ப்போம். பின்னர் தான் இவைகளின் Status இல் பதிவைப்பற்றிய குறிப்பு தெரியும். ஆனால் இந்த மாதிரி செய்வது நேரமில்லாதவர்களுக்கு சிரமமான வேலையாக இருக்கும்.

ஏற்கனவே எழுதிய பதிவொன்றில் டுவிட்டரில் நுழையாமலே பதிவிட்டதும் தானாகவே பதிவின் சுருக்கம் அப்டேட் ஆகும் என்பதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதைப்போல பேஸ்புக்கிலும் நுழையாமல் தானாகவே Status இல் பதிவின் சுருக்கம் அப்டேட் ஆக என்ன வழி என்று தேடினேன். அப்போது தான் பேஸ்புக்கிலேயே இதற்கு ஒரு பயன்பாடு ( Application ) உள்ளது என்று அறிந்தேன்.



இந்த பயன்பாடு டுவிட்டரை பேஸ்புக்கில் இணைக்கிறது. நீங்கள் டுவிட்டரில் இடும் அத்தனை கருத்துகளும் வேறு செய்திகளும் பேஸ்புக்கில் தானாகவே அப்டேட் செய்யப்படும். இதனால் நீங்கள் தனித்தனியே இரண்டிலும் நுழைந்து நேரத்தை வீணாக்கத்தேவையில்லை.

1. முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் கணக்கில் நுழைந்துகொள்ளவும்.
பின்னர் இந்த இணைப்பை கிளிக் செய்து பேஸ்புக்கின் டுவிட்டர் செயலிக்கு செல்லவும்.
http://apps.facebook.com/twitter/

Update facebook status via twitter
2. பின்னர் உங்கள் டுவிட்டர் கணக்கிற்கான பயனர் பெயர், கடவுச்சொல்லை கொடுத்து Allow என்பதை கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் உங்கள் டுவிட்டரின் புகைப்படமும் பேஸ்புக்கின் புகைப்படமும் அருகருகே காட்டப்படும். App Permissions பகுதியில் Allow Twitter to post updates to Facebook Profile என்பதில் டிக் செய்து கொள்ளவும்.

Update facebook status via twitter
3. இனிமேல் நீங்கள் டுவிட்டரில் செய்திகளை, தகவல்களைக் குறிப்பிட்டால் தானாகவே பேஸ்புக்கில் தெரியும்.


வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு எனது முந்தைய பதிவின் படி பதிவிட்டதும் டுவிட்டரில் அப்டேட் ஆக செய்திருந்தால் பதிவுகள் தானாகவே டுவிட்டரிலிருந்து பேஸ்புக்கில் அப்டேட் செய்யப்படும்.

பிரம்மமுனி சொன்ன சித்த மருத்துவத்தின் ரகசியம்!



          பிரம்ம முனி என்னும் சித்தர் பல சித்த மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். அதில் பிரம்மமுனி வைத்திய சூத்திரம்-390 என்னும் நூல் மிக முக்கியமானது. சித்த மருத்துவத்தின் சிறப்பான மருந்துகளான அமுரி, முப்பு, பூநீறு போன்றவற்றை பற்றிய குறிப்புகள் இந்நூலில் ஏராளமாக அடங்கியுள்ளன. அது மட்டுமின்றி, சிறப்பு மருந்துகளான கட்டு, கற்பம், குளிகை, களங்கு, உருக்கு போன்றவற்றை பற்றியும், அவற்றின் சிறப்புகளைப் பற்றியும் பிரம்மமுனி விளக்கியுள்ளார்.




         அவர் எதிர்காலத்தையும் தன் மெய்ஞான அறிவால் புரிந்திருந்தார். ஆகையால்தான் தனது நூலில் சித்த மருத்துவ வாத, வைத்திய மருந்து செய்முறைகளை பல நூல்களை பார்த்து தெரிந்துகொள்வதுடன், குருவின் துணையுடன், செய்முறைகளை பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் நூல்களில் கூறப்பட்டவற்றை தவறு என்று சொல்பவர்கள் அசுத்தத்தை தங்கள் மேல் பூசிக் கொள்வதற்கு சமமாவார்கள். 


ஏனெனில் பண்டைய மருத்துவ நூல்கள் அனைத்தும் குருவுக்கு தொண்டு புரிந்து, வேதாந்த நூல்களை ஆய்ந்தறிந்து, கைமுறை, செய்முறை மற்றும் பாரம்பரிய முறைகளின்படியாக இறைவனை வணங்கி செய்யப்பட்டவை. இவற்றில் மறைக்கப்பட்ட சில குறிப்புகளை உணராமல், பஸ்பம், செந்தூரம், சுண்ணம் போன்ற மருந்துகளை பற்றிய கருத்துகளையும், ஆய்வுகளையும் வெளியிடுபவர்கள் சித்த மருத்துவத்தை கற்றுத் தேர்ந்தவர்கள் அல்ல. ஆகையால்தான் பெரும்பாலான மூலிகை உலோக மருந்துகள் பற்றிய பிற கருத்துகள் அனுபவ பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

ஒரு நோயை குணப்படுத்துவதுடன், மீண்டும் வராமல் காக்கும்

           பெரும்பாலான சித்த மருந்துகள், உணவாக உட்கொள்ளும்படியே கசாயம், அடை, புட்டு, பொடி, லேகியம், மணப்பாகு, நெய், எண்ணெய் போன்ற வடிவங்களில் காணப்படுகின்றன. உணவாக பயன்படும் ஒரு பொருளை, குறைந்தளவில் பக்குவப்படுத்தி சாப்பிடும்போது அது மருந்தாகவும், அதே பொருள் அளவுக்கு மிஞ்சி சாப்பிடும்போது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. ஒரு பொருளின் உள்ளேயே சத்துகுணம் என்னும் மருத்துவ தன்மையும், ராஜ குணம் என்னும் உணவுத்தன்மையும், தாமச குணம் என்னும் நச்சுத்தன்மையும் நிரம்பியுள்ளது. 


             ஆகவேதான், அனுபவத்தின்படியும் அறிவியல் கருத்துகளின்படியும் உணவை மருந்தாக மாற்றிக்கொள்கிறோம். மருந்து என்பது ஒரு நோயை குணப்படுத்துவதுடன், மீண்டும் வராமல் காக்கும் தன்மையுடனும் அதை உட்கொள்ளும்போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாததாகவும், அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும். இதுவே மருந்தின் இலக்கணம். ஆனால், நாம் உட்கொள்ளும் பெரும்பாலான மருந்துகள் இவ்வாறு இருப்பதில்லை. கிடைப்பதற்கு அரிதான அல்லது விலை மதிப்புள்ள உணவுகளில் பல்வேறுவகையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றை அன்றாடம் சாப்பிட முடியாவிட்டாலும், அவ்வப்போதாவது சாப்பிட்டுவந்தால் பல்வேறு வகையான மருத்துவ பலன்களை பெறலாம். பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியதுடன் பெருமளவு மக்களால் விரும்பி உட்கொள்ளப்படும் அற்புத பழம்தான் நோனி. நோனி பழச்சாறாகவும், நோனி பொடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பழங்களில் கரிநீரகங்களும், நார்ச்சத்தும் ஏராளமாக காணப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி3, வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகளும், பிளேவனாய்டுகள், ஸ்கோபோலெட்டின், டம்னகாந்தல், இரிடாய்டுகள் போன்ற தாவர வேதிச்சத்துக்களும் ஏராளமாக காணப்படுகிறது. இவை மார்பக புற்றுநோய் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளை கட்டுப்படுத்துவதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோனி பழச்சாற்றை உட்கொண்டுவர, மாதவிலக்கு கோளாறுகள், வயிற்று உபாதைகள், நாட்பட்ட சளியில் தோன்றும் தொண்டை அழற்சி ஆகியவை நீங்கும். பழச்சாறு மட்டுமின்றி, நோனிப்பட்டையிலுள்ள அலிசாரின் மற்றும் கிளைக்கோசைடுகள் மூட்டுவாதத்தில் தோன்றும் வீக்கம் மற்றும் தூக்கமின்மையை நீக்கி, புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. இதன் பட்டையிலுள்ள ரூபிக்குளோரிக் அமிலம் குடற்பாதையில் தோன்றும் நுண்கிருமிகளின் தேவையற்ற வளர்ச்சியை நீக்குகின்றன.





                         கை விரல்களிலுள்ள நகங்களை கடித்து சாப்பிடுகிறான். அவன் உடல் மெலிந்து காணப்படுகிறான். இதற்கு என்ன செய்வது?

                வயிற்றில் கிருமிகள் இருப்பதாலும், இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் சத்து குறைபாட்டாலும், ரத்தசோகையினாலும் இவ்வாறு தோன்றலாம். பால், பழச்சாறு, அரிசி கழுவிய நீர், இளநீர் ஆகியவற்றை அடிக்கடி வழங்குவது நல்லது. அசுவகந்தி லேகியம் -5 கிராம் இரண்டு வேளை தினமும் சாப்பிட்டுவர உடல் தேறும்.



              

அறிவுரை வேண்டாம்; எச்சரிக்கை போதும்

கவின்கேர் நிறுவனர் ரங்கநாதன்: அனுபவக் கல்வியை, எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏட்டுக் கல்வி, அடிப்படைகளைக் கற்றுத் தரும்; அனுபவக் கல்வி, வாழ்க்கையை கற்றுத் தரும். சில சோதனையான காலகட்டங்களில், துணிச்சலான முடிவெடுக்க வேண்டும். அதற்கு அனுபவம் தேவை; 






எந்த புத்தகமும் கற்றுத் தராது. ஒரு சமயம், சிறு தொழில் நிறுவனங்களுக்கு கலால் வரி, சுங்க வரி கட்டுவதில் இருந்து, அரசு விலக்கு அளித்திருந்தது. ஆனால், திடீரென ஒருநாள், சிறுதொழில், பெரிய தொழில் என்றெல்லாம் பார்க்காமல், அனைத்து நிறுவனங்களும் வரி செலுத்த வேண்டும் என, அரசு ஆணை பிறப்பித்தது. அப்போது, எங்களுக்குப் போட்டியாக 49 நிறுவனங்கள், ஷாம்பு தயாரிப்பதில் போட்டியிட்டன. அன்றைய காலகட்டத்தில், பல நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆனால், நான் மேலும், புதிய திறமையான நபர்களைக் கொண்டு வந்தேன். அவர்களை ஊக்கப்படுத்தினேன். அவர்கள் கொடுத்த உழைப்பு, நிறுவன வளர்ச்சிக்கு உரமேற்றியது. இது நடந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எங்களுக்கு போட்டியாக இருந்த 49 நிறுவனங்களும், இருந்த இடம் தெரியவில்லை. இதற்குக் காரணம், பணப் பற்றாக்குறை அல்ல; ஐடியா பற்றாக்குறை. இந்த ஐடியா பற்றாக்குறை, அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளாததால் தான் ஏற்படுகிறது. அனுபவசாலிகள், இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லாமல், சில முன் எச்சரிக்கைகளைச் சொல்லலாம். கிடைக்கும் வாயப்புகளை, இளைஞர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாம் சரியானால், மாற்றங்கள் நிகழும்.