Thursday, January 6, 2011

டுவிட்டரிலிருந்து தானாக பேஸ்புக்கில் அப்டேட் செய்ய


Update facebook status via twitter






















இணைய உலகில் டுவிட்டரும் பேஸ்புக்கும் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. இவற்றின் வளர்ச்சி பல நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் பிரபலமாக உதவுகிறது. வலைத்தளம் வைத்திருப்போருக்கும் பதிவுகளை கொண்டு போய் சேர்ப்பதில் இவைகளுக்கும் பங்குள்ளது. பதிவுகளின் சுருக்கத்தையும் இணைப்பையும் மட்டும் டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் போட்டுவிட்டால் நமது நண்பர்கள் மற்றும் பேஸ்புக் பக்கத்தை பார்வையிடுபவர்கள் உடனடியாக நமது தளத்திற்கு வருவார்கள்.


நாம் பிளாக்கரில் பதிவிட்டதும் டுவிட்டரில் தனியே, பேஸ்புக்கில் தனியே நுழைந்து பதிவைப்பற்றிய குறிப்பைச்சேர்ப்போம். பின்னர் தான் இவைகளின் Status இல் பதிவைப்பற்றிய குறிப்பு தெரியும். ஆனால் இந்த மாதிரி செய்வது நேரமில்லாதவர்களுக்கு சிரமமான வேலையாக இருக்கும்.

ஏற்கனவே எழுதிய பதிவொன்றில் டுவிட்டரில் நுழையாமலே பதிவிட்டதும் தானாகவே பதிவின் சுருக்கம் அப்டேட் ஆகும் என்பதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதைப்போல பேஸ்புக்கிலும் நுழையாமல் தானாகவே Status இல் பதிவின் சுருக்கம் அப்டேட் ஆக என்ன வழி என்று தேடினேன். அப்போது தான் பேஸ்புக்கிலேயே இதற்கு ஒரு பயன்பாடு ( Application ) உள்ளது என்று அறிந்தேன்.



இந்த பயன்பாடு டுவிட்டரை பேஸ்புக்கில் இணைக்கிறது. நீங்கள் டுவிட்டரில் இடும் அத்தனை கருத்துகளும் வேறு செய்திகளும் பேஸ்புக்கில் தானாகவே அப்டேட் செய்யப்படும். இதனால் நீங்கள் தனித்தனியே இரண்டிலும் நுழைந்து நேரத்தை வீணாக்கத்தேவையில்லை.

1. முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் கணக்கில் நுழைந்துகொள்ளவும்.
பின்னர் இந்த இணைப்பை கிளிக் செய்து பேஸ்புக்கின் டுவிட்டர் செயலிக்கு செல்லவும்.
http://apps.facebook.com/twitter/

Update facebook status via twitter
2. பின்னர் உங்கள் டுவிட்டர் கணக்கிற்கான பயனர் பெயர், கடவுச்சொல்லை கொடுத்து Allow என்பதை கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் உங்கள் டுவிட்டரின் புகைப்படமும் பேஸ்புக்கின் புகைப்படமும் அருகருகே காட்டப்படும். App Permissions பகுதியில் Allow Twitter to post updates to Facebook Profile என்பதில் டிக் செய்து கொள்ளவும்.

Update facebook status via twitter
3. இனிமேல் நீங்கள் டுவிட்டரில் செய்திகளை, தகவல்களைக் குறிப்பிட்டால் தானாகவே பேஸ்புக்கில் தெரியும்.


வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு எனது முந்தைய பதிவின் படி பதிவிட்டதும் டுவிட்டரில் அப்டேட் ஆக செய்திருந்தால் பதிவுகள் தானாகவே டுவிட்டரிலிருந்து பேஸ்புக்கில் அப்டேட் செய்யப்படும்.

No comments:

Post a Comment