Saturday, March 26, 2011

சூரியனில் இருந்து வற்றாத ஆற்றல்

ஓராண்டில் சூரியனில் இருந்து, இந்த உலகத்திற்கு கிடைக்கும் ஆற்றலின் அளவைக் கணக்கிட்டால், அது தற்போது உள்ள அனைத்து விதமான ஆற்றல்கள், அணு ஆற்றல் இவற்றின் மொத்த அளவை விட 15 மடங்கு அதிகமாகும். மற்ற எல்லா ஆற்றல் மூலங்களை விடவும், சூரியனில் இருந்து கிடைக்கும் ஆற்றல் தொடர்ந்து கிடைக்கக் கூடியதாகும். சுமார் 5 பில்லியன் ஆண்டு களுக்கு இது கிடைக்கும். தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஆற்றலுக்குச் சமமாக, இத்தாலியில் மட்டும் விழும் ஆற்றல் உள்ளது. வேதியியல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் ஒட்டுமொத்த ஆற்றலை விட, ஓராண்டில் ஒளிச் சேர்க்கைக்குப் பயன்படும் ஆற்றல் 10 மடங்காகும்.உலகிலேயே பயன்படுத்தப்படாமல் வீ
ணாகும் ஆற்றலாக, வெயில் ஆற்றலை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெயில் ஆற்றலை முறையாகப் பயன் படுத்துவது குறித்து ஐரோப்பிய நாடுகளை விட, ஆசிய நாடுகள் தான் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஏனெனில் ஆசிய நாடுகளுக்கு தான், அதிக வெயில் விழுகிறது

21 வயதில் மாதம் அரை லட்சம் ரூபாய் சம்பளம் தரும் சி.ஏ., படிப்புகள் : ஆடிட்டர் ஜி. சேகர் தகவல்


 "" பிளஸ் 2 முடித்து, நான்காண்டுகள் சி.ஏ., படித்தால், 21வயதில் மாதம் 60ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்,'' என தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், ஆடிட்டர் ஜி.சேகர் தெரிவித்தார். சி.ஏ., / ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ படிப்புகள் குறித்து ஆடிட்டர் ஜி. சேகர் பேசியதாவது: பத்தாண்டுகளுக்கு முன் கல்லூரி முடித்தவர்கள் மட்டுமே சி.ஏ., படிக்க முடிந்தது. தற்போது பிளஸ் 2 முடித்த உடனேயே சி.ஏ., நுழைவுத் தேர்வு எழுதலாம். இதில் ஏழு பாடங்கள் இருக்கும். மார்ச் 31க்குள் பதிவு செய்ய வேண்டும். அனைத்தும் கொள்குறி வ
கை வினாக்களாக இருக்கும். ஜூன் 19ல் தேர்வு நடக்கும். 200 மதிப்பெண்கள். தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறையும். இதில் தேர்ச்சி பெற்றால் சி.ஏ., படிக்கலாம்.

சி.ஏ., படிப்புக்கென தனியாக கல்லூரி கிடையாது. வீட்டிலிருந்து தான் படிக்க வேண்டும். படிக்கும் போது, ஆடிட்டரிடம் உதவியாளராக சேர்ந்து மாதம் 3000 ரூபாயிலிருந்து உதவித்தொகை பெறலாம். சி.ஏ., முடித்த உடனேயே பி.எச்டி., படிப்பில் சேரலாம். மற்ற படிப்புகளுக்கு இந்த சலுகை கிடையாது. தேர்ச்சி பெற்ற பின், நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்பை வழங்கும். வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் தனியாக பயிற்சி செய்யலாம். இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை. தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. சி.ஏ., போலவே ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ., படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

நான்காண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியானதாக மாற்றிவிடும். 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சொத்து. அதை பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடாமல், படிப்புக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தால், பொழுதுபோக்குகளை தள்ளிவிட வேண்டும். 17 வயதில் படித்து 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளம் கிடைக்கும் ஒரே படிப்பு சி.ஏ., தான், என்றார்.

கடலில் பணி செய்தால் வருமான வரி கிடையாது: நிபுணர் நரசய்யா பேச்சு


மதுரை : "" உலகில் அதிகளவு சம்பளம் பெற்றுத் தரும் கடல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது, என மதுரையில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் கடல்சார் துறை நிபுணர் கே.ஆர்.ஏ., நரசய்யா 
தெரிவித்தார்.கடல்சார் படிப்புகளுக்கான 
வாய்ப்புகள் குறித்து அவர் பேசியதாவது: உலகில் பெரும்பகுதி கடலாக உள்ளது. கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே கடல் வணிகம் செய்யப்பட்டதை, நாம் மறந்து விட்டோம். கடலை தன்வசம் வைத்திருந்தவர்கள் தான் உலகை ஆள்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் வணிகத்தைப் பொறுத்தது. அந்த வணிகத்திற்கு நாடு அளிக்கும்
சேவையைப் பொறுத்து மாறுபடும். பெரிய அளவிலான சேவைகள் அனைத்தும் கடல் வணிகம் மூலமே நடக்கிறது. இதுவே நாட்டின் சக்தியை பெருக்குகிறது.

நாட்டின் பொருளாதாரம் ஐந்து சதவீதம் உயரவேண்டுமெனில், கடல்வழி பொருளாதாரம் 15 சதவீதம் அதிகரிக்க வேண்டும். உலக வரிசையில் இந்தியா, சீனா மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்தாலும், சீனாவில் ஆங்கில மொழியறிவு குறைவு. எனவே, சீனர்களால் கடல் பணிகளில் சேர இயலவில்லை. கடல் பணிகளில் சேருவதற்கு ஆங்கில அறிவு மிக முக்கியம். வெளிநாட்டு கப்பல்களில் மாலுமிகளாக, சேவையாளர்களாக இந்தியர்களே அதிகளவில் பணிபுரிகின்றனர்.

மரைன் இன்ஜினியரிங் படிப்பதற்கு பிளஸ் 2 வில் குறைந்தபட்சம் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் தனித்தனியாக 60 சதவீதமும், மொத்தமாக 60 சதவீத மதிப்பெண்ணும் பெறவேண்டும். நல்ல உடற்திறன், கண்பார்வை வேண்டும். நாட்டிகல் சயின்ஸ் படிப்பில் மூன்றாண்டுகள் கல்லூரியிலும், ஓராண்டு கப்பலிலும் செய்முறை பயிற்சி பெற வேண்டும். மதுரையில் ஆர்.எல்.ஐ.என்.எஸ்., கல்லூரியில் இப்படிப்பு உள்ளது.

இந்தியாவில் மும்பை, கோல்கட்டாவில் உள்ள நான்கு அரசு பயிற்சி மையங்களில் படிக்கலாம். பயிற்சிக்கு பின் இளநிலை பொறியாளராகலாம். பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருந்தால், ஓராண்டு மரைன் பயிற்சி பெற்று மரைன் இன்ஜினியர்களாகலாம். கடல் பணிக்கு சென்ற பின், விருப்பமில்லை என சொல்லக் கூடாது என்பதால் இப்படிப்பிற்கு உளவியல் ரீதியாக மனதை அறிந்து கொள்ளும் "சைக்கோமெட்ரிக்' தேர்வு நடத்தப்படுகிறது.

மாலுமியாவதற்கு எல்லா நிலைகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இந்திய மாலுமிகளையே விரும்புகின்றனர். கப்பலில் ஆறுமாதங்கள் மாலுமியாக பணியாற்றினால், ஆறுமாத விடுப்பு கிடைக்கும். தற்போது மனைவி, இரண்டு குழந்தைகள் கப்பலில் செல்லலாம் என்ற சலுகையும் உள்ளது. ஆனால் கப்பலில் பணிசெய்வது சற்றே கடுமையான விஷயம். கடின உழைப்பிருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

கப்பல் போக்குவரத்து, ஆண்டுதோறும் ஏழு சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் போது சேவையாளர்களின் பணியிடங்களும் அதிகரிக்கும். எனவே பணிவாய்ப்பு அதிகமுள்ள துறையாக உள்ளது. இந்தியாவில் கடல்துறை அலுவலர்கள் 8,900 பேரும், வெளிநாடுகளில் 18 ஆயிரம் பேரும், இந்தியாவில் 21 ஆயிரம் சேவையாளர்களும், வெளிநாடுகளில் 34 ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர். கடலில் பணி செய்பவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கினாலும், வருமான வரி பிடித்தம் செய்வதில்லை. 2015ல் பணியிடத்தின் தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும். பெண்களுக்கு கல்வி கட்டணத்தில் 30 சத சலுகை வழங்கப்படுகிறது. கடல்துறையிலிருந்து வெளியே வந்த பின், பல்வேறு நிறுவனங்களில் தொடர்ந்து பணி வாய்ப்பு பெறலாம், என்றார்.

குமரி முழுவதும் 64 வேட்பாளர்கள்வேட்பு மனு தாக்கல்


குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை 64 வேட்பாளர்கள் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். இந்நிலையில் நேற்று இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத பரவலான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவற்றில் குறிப்பாக ஜாண்ஜேக்கப், விஜயதரணி, ராபர்ட் புரூஸ் ஆகியோர் அடங்குவர். இதைப்போல் கிள்ளியூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் காங்கிரஸ் பிரமுகர் குமாரதாசும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் நாகர்கோவில்
தொகுதி வேட்பாளர் சுரேஷ் தேர்தல் அதிகாரி ராஜேந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு 1.40 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்குகள் ஏதும் இல்லை. வேட்பாளர் சுரேஷ் காரில் அணிவகுத்து வருவதால் பொதுமக்கள், மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் வந்து மனுதாக்கல் செய்ததாக தெரிவித்தார். அவருடன் பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் தங்கவேல், நாகர்கோவில் சட்டமன்ற செயலாளர் மோகனன், மாவட்ட அலுவலக செயலாளர் செல்வமணி, நகர துணை செயலாளர் ரெஜிலின், கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.விளவங்கோடு தொகுதி மா. கம்யூ., வேட்பாளர் லீமாறோஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது பெயரில் 96,195 ரூபாயும், கணவர் சிங்காரன் பெயரில் 51,854 ரூபாயும் அசையும் சொத்து உள்ளது. அசையாசொத்தாக பாகோடு கிராமத்தில் வீடும், 7 லட்சம் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன. வழக்குகள் ஏதும் இல்லை. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். 

அவருக்கு 1 கோடியே 49 லட்சத்து 23 ஆயிரம் அசையும் சொத்தும், 5 கோடியே 26 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அசையா சொத்தும் உள்ளது. கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜாண் ஜேக்கப் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு அசையும் சொத்தாக 41 லட்சத்து 211 ரூபாயும்,. மனைவி பெயரில் 16 லட்சமும் உள்ளது. அசையாசொத்தாக அவருக்கு 33 லட்சமும், மனைவி பெயரில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் உள்ளது. கார்லோன் 6 லட்சத்து 42 ஆயிரம் உள்ளது.மாவட்டம் முழுவதும் நேற்று 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


குமரி மாவட்டத்தில் 6 போட்டி வேட்பாளர்கள் உடைகிறது காங்.,; புதிய கட்சி உதயம்

மார்த்தாண்டம்  குமரி மாவட்டத்தில் காங்., உடைகிறது. புதிய கட்சி உதயமாகி ஆறு தொகுதிகளிலும் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என்று பரபரப்பாக கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணியில் காங்., சிற்கு குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தமிழக காங்., தலைவர்களிடம் அணி வாரியாக சீட் கேட்டு பலர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட போது அதிர்ச்சி அடைந்தனர். விளவங்கோடு சட்டசபை தொகுதியில் சுப்ரீம் கோர்ட் வக்கீல் விஜயதாரணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு உள்ளூர் நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனை கண்டித்து விளவங்கோடு தொகுதியில்
காங்., சின் ஒரு பிரிவினர் சார்பில் மக்கள் காவல்படை மாவட்ட தலைவர் சேம்கிறிஸ்துகுமாரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதை போல் அணி வாரியாக செயல்பட்டவர்கள் மாவட்டத்தில் ஒன்று சேர முடிவு செய்துள்ளனர். காமராஜர் அல்லது நேசமணியை மையமாக வைத்து புதிய கட்சி உதயமாகி ஆறு தொகுதிகளிலும் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தபடலாம் என்று கூறப்படுகிறது. சீட் கேட்டு சென்னை மற்றும் டில்லி சென்றவர்கள் இன்று ஊர் வந்து சேருகின்றனர். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில் குமரி மேற்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு மாவட்ட தலைவர் வக்கீல் பிரின்ஸ் தலைமையில் குழித்துறையில் நடக்கிறது. இதில் அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று மேற்கு மாவட்ட தலைவர் வக்கீல் பிரின்ஸ் கேட்டு கொண்டுள்ளார்.

ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி


 ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக, அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சை தடுக்கும் முயற்சியில், 700 இன்ஜினியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். கதிர்வீச்சை தடுப்பதற்காக, ஏராளமான தண்ணீரை ஏற்றிக் கொண்டு, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றும் ஜப்பானுக்கு விரைந்துள்ளது. ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்த, அணு உலைகளில் வெடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு, ஜப்பானின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவுகிறது. அங்குள்ள உணவுப் பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை கூட
பயன்படுத்த முடியாத நெருக்கடிக்கு ஜப்பான் மக்கள் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், புக்குஷிமா அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்துவதற்காக, கடல் நீரை அணு உலைகளில் பீய்ச்சி அடிக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கடல் நீரில் உள்ள உவர்ப்பு தன்மையே இதற்குக் காரணம். இதைத் தொடர்ந்து, ஏராளமான தண்ணீருடன் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று, ஜப்பானுக்கு விரைந்துள்ளது. இந்த கப்பலில் உள்ள தண்ணீரை, அணு உலைகள் மீது பீய்ச்சி அடித்தால், ஓரளவுக்கு கதிர்வீச்சு கட்டுப்படுத்தப்படும் என, கூறப்படுகிறது. இதற்கிடையே, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள மேலும் ஒரு அணு உலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அந்த உலையில் எப்போது வேண்டுமானாலும் வெடிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவை தலைமை செயலர் யுகியோ எடனோ கூறுகையில், "அணு உலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், மிகவும் மோசமான நிலை எதுவும் ஏற்படவில்லை. இருந்தாலும், இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கதிர்வீச்சை தடுக்கும் முயற்சியில், 700க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். புக்குஷிமாவில் மொத்தம் உள்ள ஆறு உலைகளில், இரண்டு உலைகள் பாதுகாப்பாக உள்ளன. மற்ற நான்கு அணு உலைகளின் நிலை சற்று மோசமாக உள்ளது' என்றார்.

லாரி லாரியாக உப்பு வாங்கி அவஸ்தை

கதிர்வீச்சு பயத்தால், ஒருவர் லாரி லாரியாக உப்பு வாங்கி அவஸ்தைக்கு உள்ளான வேடிக்கையான சம்பவம், சீனாவில் நடந்துள்ளது.ஜப்பானில் ஏற்பட்ட கதிர்வீச்சு பீதி, சீனாவையும் பிடித்துக் கொண்டு விட்டது. கதிர்வீச்சைத் தடுக்க, அயோடின் கலந்த உப்பு தான் சிறந்த மருந்து என்ற வதந்தி சீனாவில் பரவவே, கடந்த வாரம் அங்கு வரலாறு காணாத அளவுக்கு உப்பின் விலை எகிறிவிட்டது. ஹூபேய் மாகாணத்தின் தலைநகர் வூகானைச் சேர்ந்த குவோ என்பவருக்கு, கதிர்வீச்சு பீதி ரொம்பவே கிலியை உண்டு பண்ணிவிட்டது. பயந்து நடுங்கிப் போன அவர், 260 மூட்டை உப்பை வாங்கி மூன்று லாரிகளில் அவற்றை ஏற்றி, தனது அபார்ட்மென்டுக்கு கொண்டு வந்து விட்டார். இதற்காக அவர் செலவிட்ட தொகை, 1 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரூபாய். இந்நிலையில், இவர் உப்பு வாங்கி வந்து வீட்டில் நிரப்பிய இரண்டு நாட்களில், உப்பு தேவைப்படும் என்ற கருத்து தவறு; அதை யாரும் நம்ப வேண்டாம் என்று அரசு அறிக்கை வெளியிட்டது. இதனால், உப்பின் விலை மளமளவென வீழ்ந்துவிட்டது. வாங்கிய உப்பை விற்றால் சட்ட விரோதம், ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்திற்கு பெருமளவிலான உப்பைக் கொண்டு போகத் தடை என, சிக்கலில் இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறார் குவோ.

"ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் செயற்கை மேகம்


 விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தார் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக
பணியாற்றி வருபவர் சாவூத் அப்துல் கனி. இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயில் மற்றும் வெப்பத்தை தடுத்து, குளுமையாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகின்றனர்.

இது குறித்து, சாவூத் அப்துல் கனி கூறியதாவது:திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயிலை தடுப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகிறோம். இது, 100 சதவீத கார்போனிக் பொருட்களாலானது. இந்த செயற்கை மேகத்தை, "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்க முடியும். இதனால், நாம் விரும்பும் இடத்தில், இந்த மேகத்தை நகர்த்தி வைத்து கொள்ளலாம். 2022ம் ஆண்டில், தோகா நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, இந்த செயற்கை மேகம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், கடற்கரை, கார் நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தும் விதத்தில், செயற்கை மேகங்களை உருவாக்கி வருகிறோம். இதை, மொபைல் போன்கள் மூலம் இயக்கலாம். இதன் துவக்க விலை, 23 லட்ச ரூபாய். எனினும், இது விற்பனைக்கு வரும் போது, இதன் விலை, கூடவோ, குறையவோ செய்யலாம். இவ்வாறு சாவூத் அப்துல் கனி கூறினார்.

இதெ‌ல்லா‌ம் காத‌ல் அ‌ல்ல...

காத‌ல் எ‌ன்பது, இருவரது மனது‌ம் பு‌ரி‌ந்து கொ‌ண்டு, ஒருவரை ஒருவ‌ர் ந‌ன்கு அ‌றி‌ந்து கொ‌ண்டு, அவ‌ருட‌ன் வா‌ழ்‌ந்தா‌ல் நமது வா‌ழ்‌க்கை ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம், அவ‌‌ர் இ‌ல்லாம‌ல் நமது வா‌ழ்‌க்கை இ‌ல்லை எ‌ன்று உண‌ர்வது. ஆனா‌ல் இ‌ப்போது நா‌ம் ஆ‌ங்கா‌ங்கே பா‌ர்‌க்கு‌ம் இள‌ம் ஜோடிகளை‌ப் பா‌ர்‌த்தா‌‌ல் இ‌ந்த உண‌ர்வுகளை அவ‌ர்க‌ள் உண‌ர்‌‌ந்‌திரு‌ப்பா‌ர்களா எ‌ன்ற ச‌ந்தேகமே‌த் தோ‌ன்று‌ம்.

வா‌ழ்‌க்கையை‌ப் ப‌ற்‌றிய எ‌ந்த தெ‌ளிவான கரு‌த்து‌ம் இ‌ல்லாம‌ல், ஒருவரை‌ப் ப‌ற்‌றி ஒருவ‌ர் ந‌ன்கு பு‌ரி‌ந்து கொ‌ள்ளாம‌ல், த‌ன் ‌பி‌ன்னா‌‌ல் சு‌ற்‌றிய ஒரே‌க் கார‌ண‌த்‌தி‌‌ற்காக ஒரு ஆ‌ணி‌ன் காதலை ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம் எ‌த்தனையோ பெ‌ண்க‌ள் உ‌ள்ளன‌ர். பா‌ர்‌க்க ப‌ளி‌ச்செ‌ன்று இரு‌ப்பதாலு‌ம், தனது ந‌ண்ப‌ர்க‌ள் மு‌ன்னா‌ல் அவ‌‌ள் எ‌ன் காத‌லி எ‌ன்று சொ‌ல்‌லி‌க் கொ‌ள்ள பெருமையாக இரு‌க்கு‌ம் எ‌ன்பதாலு‌ம், ஒரு பெ‌ண்ணை துர‌த்‌தி துர‌த்‌தி‌க் காத‌லி‌க்கு‌ம் ஆ‌ண்களு‌ம் எ‌த்தனையோ...


ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளிலு‌ம், பேரு‌ந்து ‌நிறு‌த்த‌‌ங்க‌ளிலோ இது போ‌ன்று ‌மிக‌ச் ‌சி‌றிய வய‌தி‌ல் காத‌ல் கொ‌ண்டிரு‌க்கு‌ம் காத‌ல் ஜோடிகளை‌ப் பா‌ர்‌ப்பவ‌ர்க‌ள் முக‌ம் சு‌ளி‌ப்பது ம‌ட்டு‌ம் உ‌ண்மை. அ‌ந்த வய‌தி‌ல் த‌ங்களு‌க்கு ‌பி‌ள்ளைக‌ள் இரு‌ந்தா‌ல் ஒரு ‌நி‌மிட‌ம் அவ‌ர்களை ‌நினை‌த்து‌ப் பா‌ர்‌க்கு‌ம் பெ‌ற்றோ‌ர்களு‌ம் ஏராள‌ம். ந‌ம்ம ‌பி‌ள்ளை இ‌ப்படி இ‌ல்லை எ‌ன்று ‌நி‌ம்ம‌தி‌ப் பெருமூ‌ச்சு ‌விடு‌ம் பெ‌ற்றவ‌ர்களை ‌விட, ந‌ம்ம ‌பி‌ள்ளை எ‌ங்க சு‌த்‌தி‌க்‌கி‌ட்டிரு‌க்கோ எ‌ன்று ஏ‌க்க பெரு‌மூ‌ச்சு ‌விடு‌ம் பெ‌ற்றவ‌ர்களே அ‌திகமாக உ‌ள்ளன‌ர். 

ப‌ள்‌ளி‌ப் படி‌ப்‌பி‌ன் போதே ஆர‌ம்‌பி‌க்கு‌ம் இவ‌ர்க‌ள் காத‌ல், க‌ல்யாண‌ப் ப‌ரி‌‌ட்சை வரை‌க் கூட செ‌ல்வ‌தி‌ல்லை. காத‌ல் எனு‌ம் வகு‌ப்‌பி‌ல் சேரவே தகு‌தி‌யி‌ல்லாத இ‌ந்த காத‌ல‌ர்க‌ள், க‌ல்யாண‌ப் ப‌ரி‌ட்சையை எ‌ப்படி எழுதுவா‌ர்க‌ள். அ‌ப்படியே எழு‌தினாலு‌ம் அ‌தி‌ல் இவ‌ர்க‌ள் தே‌ர்‌ச்‌சி பெற முடியுமா?

தனது ‌பி‌ள்ளைகளு‌க்கு க‌ல்‌விய‌றிவு ‌கிடை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக ப‌ள்‌ளி‌க்கு அனு‌ப்‌பி, ப‌ள்‌ளி‌யி‌ல் மாணவ‌ர்களுட‌ன் எ‌ந்த வகை‌யிலு‌ம் நமது ‌பி‌ள்ளை தர‌ம் தா‌ழ்‌ந்து ‌விட‌க் கூடாது ‌எ‌ன்பத‌ற்காக உடை முத‌ல் செரு‌ப்பு வரை பா‌ர்‌த்து பா‌ர்‌த்து வா‌ங்‌கி‌த் தரு‌ம் பெ‌ற்றோ‌ர், அவ‌ர்க‌ள் ‌பி‌ள்ளை ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ஒரு பையனுட‌ன் கொ‌ஞ்‌சி கொ‌ஞ்‌சி‌ப் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பதை‌க் க‌ண்டா‌ல் எ‌ப்படி இரு‌க்கு‌ம்...

மேலு‌ம், செ‌ல்பே‌சிக‌ள் இ‌ல்லாத கர‌ங்களே இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்லு‌ம் அள‌வி‌ற்கு எ‌ல்லோ‌ர் கை‌யிலு‌ம் செ‌ல்பே‌சி உ‌ள்ளது. க‌ல்லூ‌ரி மாணவ‌ர் ம‌ட்டும‌ல்லாம‌ல், ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் மாணவ‌ர்க‌ளிடமு‌ம் த‌ற்போது அ‌திக அள‌வி‌ல் செ‌ல்பே‌சிக‌ள் உ‌ள்ளன. இது போதாதெ‌ன்று ப‌ள்‌ளி‌ மாணவ‌ர்களு‌க்கு இலவச ‌சி‌ம் கா‌ர்டுகளை டா‌க் வே‌ல்யூவுட‌ன் அ‌ளி‌க்கு‌ம் தொலை‌த் தொட‌ர்பு ‌நிறுவன‌ங்களு‌ம் ஏராள‌ம்.

இ‌ந்த ந‌வீன யுக‌த்‌தி‌ல் ஒரு பெ‌ண் தலை கு‌னி‌ந்து நட‌க்‌கிறா‌‌ள் எ‌‌ன்றா‌ல் அத‌ற்கு எ‌ன்ன காரண‌ம் எ‌ன்று கே‌ட்டா‌ல்... அவ‌ள் மொபை‌‌லி‌ல் எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். ‌ப்‌ரீ எ‌ன்று அ‌ர்‌த்த‌ம் எ‌ன்‌கிறது பு‌திய பழமொ‌ழி.

இவ‌ர்க‌ள் காத‌ல் எ‌ன்று சொ‌ல்வது உ‌ண்மை‌யி‌ல் காதலே ‌அ‌ல்‌ல.. வெறு‌ம் இன‌க்கவ‌ர்‌ச்‌சி. த‌ன்‌னிட‌ம் ‌சி‌ரி‌த்து‌‌ப் பேசு‌ம், ஆணை/பெ‌ண்ணை தா‌ன் காத‌லி‌ப்பது‌ம், அவ‌ர்களு‌‌ம் த‌ன்னை காத‌லி‌க்‌கிறா‌‌ர்க‌ள் எ‌ன்று எ‌ண்‌ணி படி‌ப்‌பி‌ல் கவன‌‌ம் செலு‌த்தாம‌ல் வா‌ழ்‌க்கையை ‌வீணடி‌க்கு‌ம் மாணவ‌ர்க‌ள் எ‌த்தனையோ பே‌ர்.

ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌திலு‌ம், பேரு‌ந்‌திலு‌ம் பா‌ர்‌த்து காத‌லி‌‌த்து வா‌ழ்‌க்கையை ‌வீணடி‌க்காம‌ல், வா‌ழ்‌க்கை‌க்கு‌த் தேவையான க‌ல்‌வி, ‌திறமை, வேலை வா‌ய்‌ப்‌பினை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ண்டு, க‌ல்யாண வய‌தி‌‌ல், தன‌‌க்கு ஏ‌ற்றவ‌ர் இவ‌ர் எ‌ன்பதை உண‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் காதலே ‌நீடி‌க்கு‌ம். ‌நிலை‌க்கு‌ம். 

அதை ‌வி‌ட்டு‌வி‌ட்டு டியூஷ‌ன் செ‌ன்ட‌ரிலு‌ம், டெ‌லிபோ‌ன் பூ‌த் வாச‌லிலு‌ம் ‌கா‌ல் கடு‌க்க ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்தாலே அவ‌ர் த‌னது வா‌ழ்‌க்கை‌க்கு ஏ‌ற்றவ‌ர் எ‌ன்று எ‌ண்ணு‌ம் எ‌ண்ண‌த்தை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் ‌பி‌ள்ளைக‌ள். ‌‌பி‌ள்ளைக‌ள் ஏமா‌ற்றுவது பெ‌ற்றவ‌ர்களை அ‌ல்ல.. த‌ங்களது வா‌ழ்‌க்கையை. 

வா‌ழ்‌க்கை‌யி‌ல் தட‌ம்புரள எ‌த்தனையோ வ‌ழிக‌ள் உ‌ள்ளன. ஆனா‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ற்ற‌ம் பெற ஒரு ‌சில வ‌ழிகளே உ‌ள்ளன. எனவே காத‌‌ல் எனு‌ம் தவறான பாதை‌யி‌ல் எ‌ன்று பாதாள‌த்‌தி‌ல் ‌வீ‌ழ்வதை ‌விட, க‌ல்‌வி, ‌திறமை எனு‌ம் ச‌ரியான பாதை‌யி‌ல் செ‌ன்று ‌சிகர‌த்தை எ‌ட்டு‌வதே ந‌ல்லது.

இ‌ப்படியு‌ம் ‌சில ம‌னித‌ர்க‌ள்

உன‌க்காக உ‌யிரையே‌க் கொடு‌ப்பே‌ன் எ‌ன்றகாத‌ல் வசன‌ம் பே‌சி, காத‌லி‌த்து,க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ண்டு ‌பிறகு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் அடிதடி ரகளை நட‌ப்பதஇய‌ல்பான ‌விஷய‌ம். ஒரு வேளை,காத‌லி‌த்து க‌னி‌ந்துரு‌கி, இறு‌தி‌யி‌‌ல் ‌ஏதேனு‌மகாரண‌த்தா‌ல் ஒ‌ன்று சேர முடியாம‌லபோனா‌ல், காதலனோ, காத‌லியோ செ‌ய்யு‌ம் ‌விப‌ரீத செய‌ல்களை இ‌ங்கு ‌நினைவூ‌ட்ட ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.

தான் கற்ற க‌ல்‌வியையு‌ம், பெற்ற அனுபவ‌த்தையு‌ம், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வது‌ம் உ‌ண்டு, ‌சில‌ர் அதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ‌தீமை செ‌ய்வது‌ம், பழிவா‌ங்குவது‌ம் உ‌ண்டு. 

இ‌தி‌ல் இர‌ண்டா‌ம் ரக‌ம் ம‌னி

த‌ர்க‌ளிட‌ம் நா‌ம் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டியத‌ன் அவ‌சிய‌த்தை வ‌லியுறு‌த்துவது தா‌ன் இ‌ந்த க‌ட்டுரை‌யி‌ன் நோ‌க்க‌ம். 

WD
காதல‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ந‌ண்ப‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ஒரு ‌சில ‌விஷய‌ங்களை த‌வி‌ர்‌ப்பது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். இது எ‌தி‌ர்மறையான ‌சி‌ந்தனையாக இரு‌ந்தாலு‌ம், நே‌ர்மறையாக ம‌ட்டுமே எ‌ல்லாமு‌ம், எ‌ல்லாரு‌ம் நட‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்பதை அடி‌ப்படையாக‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

எ‌ந்த அ‌த்து‌மீற‌ல்களு‌‌ம் நட‌க்காம‌ல் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்வது‌ம், யா‌ரிடமு‌ம் சொ‌ல்ல‌க் கூடாத ‌சில ரக‌சிய‌ங்களை எ‌ப்போது‌ம் யா‌ரிடமு‌ம் சொ‌ல்லாம‌ல் இரு‌ப்பது‌ம்தா‌ன் முத‌ல் எ‌ச்ச‌ரி‌க்கையாகு‌ம்.

அதாவது காதல‌ர்களாக இரு‌க்கு‌ம்ப‌ட்ச‌த்‌தி‌ல், ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வது எ‌ன்று இருவரு‌ம் மன‌ப்பூ‌ர்வமாக ஒ‌ப்பு‌க் கொ‌ண்டாலு‌ம், எ‌ந்த‌த் தவறான கா‌ரிய‌த்‌திலு‌ம் ஈடுபடாம‌ல் இரு‌ப்பது இருவரது வா‌ழ்‌க்கை‌க்கு‌ம் ந‌ல்லது. ஏதோ ஒரு காரண‌த்தா‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ள இயலாம‌ல் போகு‌ம் 
WD
போது, பெ‌ண்ணை, ஆ‌ண் ‌மிர‌ட்டுவது‌ம், ஆ‌ண் கெ‌ட்டவ‌ன் எ‌ன்று தெ‌ரி‌ந்தாலு‌ம், தவறு செ‌ய்து ‌வி‌ட்ட ஒரே காரண‌த்‌தி‌ற்காக அவனை‌க் க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டிய ‌சூ‌ழ்‌நிலையு‌ம் ஏ‌ற்படலா‌ம். இ‌தே‌க் காரண‌த்தை‌க் கொ‌ண்டு ஒரு ஆணை பெ‌ண் ‌பிர‌ச்‌சினை‌க்கு‌ள்ளா‌க்குவத‌ற்கு‌ம் வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு. 


ந‌ண்ப‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம், காதல‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம், த‌ன்னை‌ப் ப‌ற்‌றிய ஒரு ரக‌சிய‌த்தை, யா‌ரிடமு‌ம் சொ‌ல்ல‌க் கூடாத ஒரு ரக‌சிய‌த்தை தயவு செ‌ய்து சொ‌ல்ல வே‌ண்டா‌ம். உ‌ங்களு‌க்கு ம‌ட்டுமே‌த் தெ‌ரி‌ந்தா‌ல் தா‌ன் அது ரக‌சிய‌ம். இ‌ன்னு‌ம் ஒருவரு‌க்கு அது தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டாலு‌ம் அது செ‌ய்‌திதா‌ன். எனவே, ‌நீ‌ங்க‌ள் ரக‌சியமாக வை‌த்‌திரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்பு‌ம் ஒரு ‌விஷ‌ய‌த்தை முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் ர‌க‌சியமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது உ‌ங்க‌ள் கடமையா‌கிறது.

காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய ‌சில கால‌த்‌திலேயே ‌சில‌ர் புகை‌ப்பட‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்வது, காத‌ல் கடித‌ம் கொடு‌ப்பது போ‌ன்றவ‌ற்றை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ந‌ண்ப‌ர்களாக இரு‌ப்‌பி‌ன் ந‌ண்ப‌‌ர்க‌ளி‌ன் கூ‌ட்ட‌த்‌துட‌ன் புகை‌ப்பட‌ம் எடு‌க்கலா‌ம், ஒரு ஆணு‌ம், பெ‌‌ண்ணு‌ம் த‌னியாக புகை‌ப்பட‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம், காதல‌ர்களாக இரு‌ப்‌பினு‌ம் இதனை‌த் த‌வி‌ர்‌ப்பது எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌‌ச்‌சினையை‌த் த‌வி‌ர்‌க்கு‌ம்.

WD
காத‌ல் வசன‌ங்க‌ள் அட‌ங்‌கிய வா‌ழ்‌த்து அ‌ட்டைகளாக இரு‌‌ப்‌பி‌ன் வெறு‌ம் இ‌னிஷ‌ிய‌ல்களை ம‌ட்டு‌ம் போ‌ட்டு‌க் கொடு‌க்கலா‌ம். காத‌ல் கடித‌ங்க‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்படலா‌ம். அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்ட ஆதார‌மி‌ல்லாத பல ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.

தா‌ங்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் முகவ‌ரி‌யி‌ன் கடவு‌ச் சொ‌ல்லை (பா‌ஸ்வே‌ர்‌ட்) ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வது‌ம், வ‌ங்‌கி ஏடிஎ‌ம் கா‌ர்டி‌ன் கடவு எ‌ண்ணை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வது‌ம் கூட ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் முடிய‌க் கூடு‌ம்.

WD
எனவே, காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம் இருவரு‌ம் ஒரு எ‌ல்லை‌க்கு‌ள் இரு‌ப்பது இருவரு‌க்குமே ந‌ல்லது. அது ஆணாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, பெ‌ண்ணாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி. ஒருவரை ஒருவ‌ர் ந‌ன்கு பு‌ரி‌ந்து கொ‌ண்ட ‌பி‌ன்ன‌ர்தா‌ன் காதல‌ர்களு‌க்கான அ‌ங்‌கீகார‌த்தை‌ வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ல் தெ‌ளிவாக இரு‌ங்க‌ள். 

நா‌ம் எ‌த்தனையோ செ‌ய்‌திகளை ‌தினமு‌ம் நா‌ளித‌ழ்க‌ளிலு‌ம், இணைய தள‌ங்க‌ள் மூலமாகவு‌ம் படி‌க்‌கி‌ன்றோ‌ம். கே‌ட்‌கி‌ன்றோ‌ம். அதுபோ‌ன்ற அச‌ம்பா‌வித‌ங்க‌ள் ந‌ம் வா‌ழ்‌க்கை‌யிலு‌ம் நட‌க்காம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக‌த்தா‌ன் இ‌‌ந்த எ‌ச்ச‌ரி‌க்கை ப‌ட்டிய‌ல்..

கணவ‌ன் அ‌ல்லது மனை‌வியா‌ல் ம‌ற்றவ‌ர் உ‌யிரு‌க்கு‌த் தொட‌ர்‌ந்து அ‌ச்சுறு‌த்த‌ல்


கணவ‌ன் - மனை‌வி‌க்கு இடையே ஏ‌ற்படு‌ம் ஒரு ‌சில ச‌ண்டைகளு‌க்காக ‌‌திருமண‌த்தையே ர‌த்து செ‌ய்யு‌ம் ‌விவாகர‌த்தை தர முடியாது எ‌ன்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வழ‌க்கு ஒ‌ன்‌றி‌ல் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.
ப‌ஞ்சா‌ப் மா‌நில‌ம் அ‌மி‌ர்தரச‌ஸ் நகரை‌ச் சே‌ர்‌ந்த க‌ல்லூ‌ரி முத‌ல்வ‌ர் குருப‌க்‌ஸ் ‌சி‌ங், அரசு க‌ல்‌வி ‌நிலைய‌த்‌தி‌‌ல் நூலகராக ப‌ணியா‌ற்று‌ம் தனது மனை‌வி ஹ‌‌ர்‌மீ‌ந்த‌ர் கெள‌ர் ‌மீது ‌விவாகர‌த்து வழ‌‌க்கு தொடு‌த்தா‌ர்.
தனது மனை‌வி‌யிட‌ம் இரு‌ந்து ‌விவாகர‌த்து‌க் கோருவத‌ற்காக அவ‌ர் கூ‌றிய காரண‌த்‌தி‌ல், லோ‌ரி ப‌ண்டிகை‌யி‌ன் போது த‌ன்னுடைய பெ‌ற்றோரை ந‌ண்ப‌ர்க‌ள், ‌விரு‌ந்‌தின‌ர்க‌ள் எ‌தி‌ரி‌ல் அவம‌தி‌க்கு‌ம் ‌வித‌த்‌தி‌ல் பே‌சினா‌ர் ஹ‌ர்‌மீ‌ந்த‌ர், எனவே எ‌ன்னா‌ல் அவருட‌ன் சே‌ர்‌ந்து வாழ முடியாது, அவ‌ரிட‌ம் இரு‌ந்து ‌விவாகர‌த்து வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி இரு‌ந்தா‌ர்.
இதனை ‌நிராக‌ரி‌த்த ‌நீ‌திப‌திக‌ள் ‌பி, சதா‌‌சிவ‌ம், ‌பி.எ‌ஸ். செளஹா‌ன் அட‌ங்‌கிய அம‌ர்வு‌, எ‌ப்போதாவது நட‌க்கு‌ம் இதுபோ‌ன்ற ச‌ம்பவ‌ங்களை சா‌க்காக வை‌த்து‌க் கொ‌ண்டு ‌விவாகர‌த்து கோர‌க் கூடாது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.
மேலு‌ம், கணவ‌ன் அ‌ல்லது மனை‌வியா‌ல் ம‌ற்றவ‌ர் உ‌யிரு‌க்கு‌த் தொட‌ர்‌ந்து அ‌ச்சுறு‌த்த‌ல் இரு‌ந்தாலோ, ‌விரு‌ப்ப‌த்து‌க்கு மாறாக பாலுறவு கொ‌ள்ள அடி‌க்கடி வ‌ற்புறு‌த்‌தினாலோ, குரூரமாக‌த் தொட‌ர்‌ந்து நட‌ந்து கொ‌ண்டாலோதா‌ன் ‌விவாகர‌த்து கோ‌ரி‌ப் பெற முடியு‌ம் என ‌‌தீ‌ர்‌ப்‌பி‌‌ல் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர். 

இலவச அறிவிப்பில் கழகங்கள் "காமெடி': ஓட்டாக மாறுமா கிரைண்டரும், மிக்சியும்?


தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில், அரிசி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், மானியம் என, இலவசங்களை அள்ளி விட்டுள்ளன. ஆனால், இலவசங்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றனவா?

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சிகளாக, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கருதப்படுகின்றன. ஆனால், அந்தக் கட்சிகளே, தங்களை நம்பாமல், இலவசங்களை நம்பித் தான் களமிறங்குகின்றன. கடந்த வாரம் தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.,வும் சரி, நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க.,வும் சரி, தங்கள் தேர்தல் அறிக்கையில், பொதுமக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கும் வகையில், பல்வேறு இலவசத் திட்டங்களை வாரி இறைத்துள்ளன. இதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து திரட்டப்படும் என்ற கேள்விக்கு, இரு தரப்பிலுமே, "வழவழ' பதில் தான் கிடைக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆரம்பம், 2006ம் ஆண்டு தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கை தான். அதுவரை வெறும் சம்பிரதாயமாகவே இருந்த தேர்தல் அறிக்கை, சுனாமியைப் போல, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரேஷனில் கிலோ அரிசி இரண்டு ரூபாய், விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசம், ஏழைகளுக்கு இலவச, "டிவி' என, அறிவித்தது. வழக்கம் போல் தேர்தல் அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க., பதறியடித்து, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் என, தன் பங்குக்கு இலவச அறிவிப்பை வெளியிட்டது.

கடந்த, 2006 தேர்தலில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. அதற்கு காரணம், அக்கட்சியின் இலவச அறிவிப்பு தான் என்ற பேச்சு எழுந்தது. பிரதான கட்சிகளும் அப்படித் தான் நினைக்கின்றன என்பதை, அவ்விரு கட்சிகளின் தற்போதைய தேர்தல் அறிக்கை உணர்த்துகிறது. உண்மை அது தானா? இலவசங்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன என்றால், 2006 சட்டசபை தேர்தலில், 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., "வீடு தேடி ரேஷன் பொருட்கள், அனைவருக்கும் வேலை, வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிதி, ஒவ்வொரு வீட்டிற்கும் குடும்பச் செலவிற்கு ரொக்கம்' என, வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் தான், "ஹிட்'டாகி, அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தியிருக்க வேண்டும். அக்கட்சியோ 8.32 சதவீத ஓட்டுகளைப் பெற்று, ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. "டிவி'யை விட அதிக விலை கொண்ட கம்ப்யூட்டர், தாலிக்குத் தங்கம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்ட அ.தி.மு.க., வெற்றி பெற்று, அந்தக் கட்சி ஆட்சி அமைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. மாறாக, 69 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்றது. மறுபக்கம், தி.மு.க., 26.4, காங்கிரஸ் 8.38, பா.ம.க., 5.55, மார்க்சிஸ்ட் 2.64, இந்திய கம்யூனிஸ்ட் 1.59 சதவீத ஓட்டு என, வலுவான கூட்டணியுடன் போட்டியிட்ட தி.மு.க., அணி 44.56 சதவீத ஓட்டுகளைப் பெற்று, 163 தொகுதிகளை அள்ளியது. இந்தக் கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்துமே, வலுவான அடித்தளமும், ஆள்பலமும் கொண்டவை.

அ.தி.மு.க., அணியில், அக்கட்சியைத் தவிர, சொல்லிக் கொள்ளும்படியாக ம.தி.மு.க., மட்டுமே இருந்தது. "இதிலிருந்தே, தேர்தல் வெற்றிக்கு காரணம் கூட்டணி பலம் தானே தவிர, இலவச அறிவிப்பில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்' எனக் கூறும் அரசியல் பார்வையாளர்கள், மேலும் கூறியதாவது: இலவசங்கள் தான் வெற்றி, தோல்வியை தீர்மானித்திருக்கும் என்றால், குறைந்தபட்சம், தி.மு.க., வாவது அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும்; அதுவும் நடக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளை நம்பியே ஐந்தாண்டு கால ஆட்சியை ஓட்ட வேண்டியிருந்தது. கடந்த ஆண்டு பீகார், அதற்கு முந்தைய ஆண்டு குஜராத் மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் தி.மு.க.,வைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி, இலவச அறிவிப்புகளை வெளியிட்டது. குஜராத் முதல்வர் மோடியோ, "ஓசி டிவிக்கு வரி விதிப்பேன்' என, அதிரடியாக மிரட்டினார். நிதிஷ் குமாரோ, "வளர்ச்சி அரசியலைத் தவிர வேறு பேச்சில்லை' என்றார். அந்தத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி காணாமல் போனது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்தல் அறிக்கையா...லஞ்ச அறிக்கையா?

கருணாநிதி இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்ஸி தருகிறேன் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தால், அதற்கு தான் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்பதுபோன்று, திமுக அறிவித்துள்ள இலவசங்களுக்கு ஒருபடி மேலே சென்று கிரைண்டர், மிக்ஸி மற்றும் ஃபேன் ஆகியவை பெண்களுக்கு தரப்படும் என்று அறிவித்து தமிழக வாக்காளர்களை திகைக்க வைத்துள்ளார் ஜெயலலிதா. 

கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் ஜெயலலிதா இந்த தடவைப்போன்றல்லாமல், சுறு சுறுப்பாக கூட்டணியை முடிவு செய்து, தொகுதிப் பங்கீட்டையும் விரைவாக முடித்துக்கொண்டு,தேர்தல் பிரச்சாரத்தையும் முதல் ஆளாக தொடங்கினார். 

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மட்டுமே குறிப்பிடத்தக்க தோழமை

கட்சிகளாக இருந்ததும், தொகுதி பங்கீடு விரைவாக முடிவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

அத்தகைய நிலையில் ஜெயலலிதா முதல் ஆளாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியபோது, வாக்காளர்களிடம் காணப்பட்ட மனநிலையை வைத்து பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், அதிமுக மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. 

இவ்வாறு கருத்துக் கணிப்பு வெளியிட்ட முன்னணி தமிழ் வார ஏடு ஒன்றை, ஜெயலலிதாவிடம் 'சூட்கேஸ்' வாங்கிவிட்டதாக திமுகவினர் விமர்சித்தனர். 

இதுபற்றி அந்த வார ஏட்டின் கேள்வி-பதில் பகுதியில் வாசகர் ஒருவர், திமுகவினர் கூறும் இந்த குற்றச்சாட்டை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு,"2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று நாங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டபோது திமுகவினர் எவ்வளவு சூட்கேஸ்கள் தந்தார்கள்? என்று கேட்டு சொல்லுங்கள்" என சூடாக பதிலடி கொடுத்திருந்தது அந்த ஏடு. 

அப்படியான ஒரு நிலையில்தான் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பிரச்சனைகளை நீண்ட இழுபறிக்கு பின்னர் தீர்த்துக்கொண்டு, பிரச்சாரத்தில் தாமதமாக களமிறங்கியது திமுக. 

ஆனால் தாமதமாக களமிறங்கினாலும், பிரச்சாரத்தின் தொடக்க நாளிலேயே கருணாநிதி வெளியிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையும், தமிழக தொலைக்காட்சி ஆடியன்ஸ்களை தமது பிடியில் வைத்துள்ள மாறன் குடும்ப தொலைக்காட்சி, அதனை மக்களிடம் கொண்டு சேர்த்த பிரமாண்ட பிரச்சார யுக்தியும் வாக்காளர்களின் மனதை புரட்டி போட்டது

ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை நாமே குறைத்துக் கொள்ளலாமா?


TRANS FAT என்றால் என்ன? இது நம்மை எப்படி பாதிக்கிறது?

நாம் உபயோகிக்கும் சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் போது TRANS FAT என்ற கெட்ட கொழுப்புகள் உற்பத்தியாகின்றன. இவை L.D.L.,என்னும் கெட்ட கொழுப்பை, குறிப்பாக "ஸ்மால் டென்ஸ் எல்.டி.எல்.' என்ற கெட்ட கொழுப்பை அதிகரிக்கின்றன. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன.எந்த தரமான எண்ணெயையும் மீண்டும், மீண்டும் நாம் சமையலுக்கு
பயன்படுத்தினாலும், இவ்வகை கொடூரமான டிரான்ஸ்பேட் என்னும் கொழுப்புகள் உருவாகின்றன.இவற்றை பெரும்பாலும், ஓட்டல்கள், விடுதிகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, நம் வீட்டிலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

எனக்கு மூன்று ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. அதற்கு என் டாக்டர் இரு மாத்திரைகளை தந்துள்ளார். ரத்த அழுத்தத்தால் எனது உடலில் எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், மாத்திரையை எடுக்கும் போது மிகவும் சோர்வாக உள்ளது. எனவே, அதை நிறுத்தி விட்டேன். தற்போது ரத்த அழுத்தம் 150/100 என்ற அளவில் உள்ளது. நான் என்ன செய்வது?

ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்காவிட்டால் பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தி விடும். ரத்தக்கொதிப்பு இருப்பதால் ஒருவருக்கு அறிகுறி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த நேரத்திலும் 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும்.உங்களுக்கு தந்துள்ள மாத்திரையால் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். எனவே, உங்கள் டாக்டரிடம் சென்று கலந்து பேசி, அதை மாற்றி அமைத்தால் பாதிப்பை நீக்கலாம். தற்போது ரத்தக்கொதிப்புக்கு பக்கவிளைவு இல்லாத மாத்திரைகள் உள்ளன.

உடல் மெலிவாக இருப்பது அழகா? ஆரோக்கியமா?

இந்தியாவில் மிகச்சாதாரணமாக ஏற்படும் தொற்றாக, டைபாய்டு உள்ளது. மூன்று அல்லது அதற்கு மேலான நாட்களில் காய்ச்சல் தொடர்ந்தால், அது டைபாய்டாக இருக்கும் என முடிவு செய்யப்படுகிறது. "சல்மோநெலா' என்ற வகை பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது. கழிவுநீர் மூலமும், இந்நோய் தாக்கியுள்ள ஒருவர் அளிக்கும் உணவை சாப்பிடுவதன் மூலமும் இந்நோய் ஏற்படுகிறது.நம்மூர் அனைத்திலும் கழிவுநீர் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்ற சிறந்த
முறை பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் டைபாய்டு தொற்று ஏற்படுவது இயற்கையே. அதிர்ஷ்டவசமாக, டைபாய்டை தவிர்க்க தடுப்பு மருந்துகள் உள்ளன. 2 வயது நிறைந்தவுடன், ஒரு ஊசி போடலாம்.
பின், ஒவ்வொரு 3 வயது கூடும்போதும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து உட்கொள்ள வேண்டும். வாய் வழியே சாப்பிடும், நோய் தடுப்பு மருந்தும் உள்ளது. மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இதை சாப்பிட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு நோய் வராமல் தடுக்கலாம்.நோய் தடுப்பு மருந்தை, அரசு இலவசமாக வழங்குவதில்லை. எனவே, பெரும்பாலான மக்களுக்கு, இம்மருந்தின் அவசியமும், முக்கியத்துவமும் புரிய வில்லை. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இந்த மருந்து கிடைக்கிறது.ஒரு டோஸ் மருந்தின் விலை 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இம்மருந்தை உட்கொண்டால், லேசான காய்ச்சலும், உடல் வலியும் ஏற்படும். பின் தானாகவே சரியாகி விடும்.டைபாய்டை ஏற்படுத்தும் பாக்டீரியா, உடலில் நுழைந்தவுடன், கடுமையான காய்ச்சலும், இரண்டு வாரங்களில், உடல் முழுவதும் சிவந்த கீறல்களும் ஏற்படும். நாக்கில் மேல்படலம் படிந்து, வெண்மையாகி விடும். அடிவயிறு வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். நாளமில்லா சுரப்பிகள், கல்லீரல் வீங்கி விடும்.ரத்தப்பரிசோதனை செய்தால், வெள்ளை அணுக்களின் அளவு குறைந்திருக்கும். கிருமி, ரத்தம், மலம், சிறுநீர் ஆகியவற்றிலும் காணப்படும்.முன்பு, டைபாய்டுக் கென தனியான பரிசோதனை முறை கிடையாது."விடால்' என்றழைக்கப்படும் இந்த பரிசோதனை, பல நோய்களுக்கும் பொதுவானபரிசோதனை யாக மட்டு மே அமைந் தது.இரண்டு வாரங்கள் வரை காத் திருந்து, பிறகு மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வளவு நாள் எப்படி காத்திருக்க முடியும்?இப்போது, அட்டை முறை உட்பட பல பரிசோதனை முறைகள் வந்து விட்டன. டைபாய்டை கண்டறியாவிட்டால், மூன்றாவது வாரத்தில், மூளை, நுரையீரல், எலும்புகளில் தொற்று பரவி, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.இத்தகைய நோயாளி களில் 10 சதவீதம் பேருக்கு, நோய் திரும்ப ஏற்படவும் வாய்ப்பு உண்டு. 1 முதல் 4 சதவீதத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிருமிகள் மலம் வழியே தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இதனால், பலருக்கும் நோய் தொற்றும் ஆபத்து ஏற்படும். எனினும், பரிசோதனை செய்யாமல், சந்தேகத்தின் அடிப்படையிலேயே டைபாய்டுக்கு மருந்து கொடுப்பது நல்லதல்ல.இதற்கு பல ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளன. 7 முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். சிகிச்சை காலம், சிகிச்சை முறை, மருந்து சாப்பிட வேண்டிய அளவு, இடைவெளி ஆகியவை சரியான முறையில் அமைதல் வேண்டும்.இல்லையெனில், மருந்துகளுக்கு, கிருமிகள் கட்டுப்படாத நிலை ஏற்படும்; நிலைமை சிக்கலாகும். கிருமி உடலில் தங்கும் நிலை ஏற்படும்.



இந்தியாவின் சிறந்த சில்லறை வணிக வங்கியாக எச்டிஎப்சி வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.


தனியார் துறையில் மிகப் பெரிய வங்கியாகக் கருதப்படுகிறது எச்டிஎப்சி வங்கி. ஆசியன் பேங்கர்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந் வங்கிகளைக் கண்டறிந்து அறிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஆப்ரிக்க பகுதிகளின் சிறந்த வங்கிகளைத் தேர்வு செய்து அறிவித்தது ஆசியன் பேங்கர்ஸ்.

இதில் இந்தியாவின் சிறந்த சில்லறை வர்த்தக வங்கியாக எச்டிஎப்சி தேர்வு பெற்றுள்ளது. 29 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 150 நிதி அமைப்புகளை இதற்காக பரிசீலனை செய்தது ஆசியன் பேங்கர்ஸ் அமைப்பு.

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதிகள்! - தங்கர் பச்சான் கண்டனம்

இலவசங்கள் எதுவாக இருந்தாலும் அவை மனிதனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல். அதைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவிட்டிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது என தங்கர் பச்சான் கூறியுள்ளார்.


சினிமா ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

"அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை ஆளக்கூடியவர்களை தேர்வுசெய்யக்கூடிய பொறுப்பும், கடமையும் வாக்காளர்களாகிய நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. சரியானவர்களை தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு பின்னர் குறைசொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.

மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது அரசியல் கட்சிகளின் வேலை. ஆனால், ஏலம் போடுவது மாதிரி உங்களை விட நான் என்னவெல்லாம் தருகிறேன் பாருங்கள் என்று சொல்லி மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இலவசங்கள் எதுவாக இருந்தாலும் அவை மனிதனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல்கள்தான். அவரவர்கள் சொந்த காலில் நின்று உழைத்து பொருளாதாரத்தை உயர்த்தி தன் உழைப்பில் குடும்பத்தை நடத்திக் கொள்வதற்கான எந்த திட்டமும் இந்த வாக்குறுதிகளில் இல்லை.

ஏற்கனவே தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ சிந்திக்காமல் உழைக்கத் தயங்கி மாதத்திற்கு 10 நாட்கள் வேலைசெய்தால் போதும் என அந்த பணத்தில் முக்கால்வாசியை டாஸ்மாக் கடைக்கு செலவழித்துவிட்டு கால்வாசியைக்கூட தன்னையே நம்பி இருக்கிற குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பெற்றோருக்கும் தராமல் சோம்பேறியாக அலைந்து கொண்டிருக்கும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.

இந்த நிலையில், அவனுக்கு எல்லாவற்றையுமே அரசாங்கம் வீட்டுக்கு வந்து இலவசமாக கொடுத்துவிட்டால் அவன் உழைத்து முன்னேற வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் பிச்சைக்காரன் போல் எல்லா தேவைக்கும் அரசாங்கத்தையே நம்பியிருக்கக்கூடிய காலம் வந்துவிடும்.

தங்கள் பொருட்களை மக்களிடத்தில் விற்பனை செய்ய வியாபாரிகள் மேற்கொள்ளும் விளம்பர தந்திரங்களைத்தான் இப்போது ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் போல மேற்கு வங்காள மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

35 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுகொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் மம்தா பானர்ஜியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், எந்த ஒரு இலவச திட்டமும் இல்லை. எல்லா திட்டங்களுமே வேலைவாய்ப்பு, தொழில்நிறுவனங்கள், விவசாயம் தொடர்பான, மக்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் திட்டங்கள்தான்.

தமிழகத்தில் சாராய கடைகளை மூடாமல் எத்தனை திட்டங்கள் கொண்டுவந்தாலும் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறாது. எனவே, மதுவிலக்கை அறிவிக்கப்போகும் கூட்டணிக்குத்தான் பெண்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள்."

ஜெயலலிதாவின் ஈயடிச்சான் காப்பி தேர்தல் அறிக்கை: - முக அழகிரி கிண்டல்

மதுரை: ஜெயலலிதாவுக்கு சொந்தமாக யோசிக்கும் திறனே கிடையாது. அதனால்தான் அவர் திமுக தேர்தல் அறிக்கையைக் கூட அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல காப்பியடித்துள்ளார் என்றார் மத்திய அமைச்சர் முக அழகிரி.


மதுரையில் மு.க.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதா காரில் அமர்ந்தும், பொதுக் கூட்டத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததையும்தான் படிப்பார்.

அதே போல் அவருடைய தேர்தல் அறிக்கையும் அப்படித்தான் உள்ளது. முதல்வர் கருணாநிதியின் அறிக்கையை அப்படியே காப்பியடித்துள்ளார். பரீட்சையில் நன்றாக எழுதும் மாணவனைப் பார்த்து ஈயடிச்சான் காப்பியடிப்பதைப் போலத்தான் இதுவும்.

இதற்கெல்லாம் காரணம் அவருக்கு தோல்வி பயம் தெரிந்து விட்டது. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி சொன்னதை எல்லாம் செய்தார். சொல்லாததையும் செய்தார். 2011-ம் தேர்தல் அறிக்கையிலும் பல திட்டங்களை சொல்லி இருக்கிறார்.

அவை அனைத்தையும் கருணாநிதி செய்வார். இது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஜெயலலிதா 2001-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க.வின் திட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டார். அதே போல் இனிமேலும் ஆட்சிக்கு வந்தால் 2006-ம் ஆண்டின் அனைத்து திட்டங்களையும் நிறுத்துவார்.

குறிப்பாக திருமண உதவியாக நாங்கள் ரூ.25 ஆயிரம் தந்து கொண்டு இருக்கிறோம். ரூ.30 ஆயிரம் தருவோம் என அறிவித்துள்ளோம். ஆனால் அவர் அதனை நிறுத்திவிடுவார். அதே போல் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக கூறி உள்ளோம்.

அவர் இந்த திட்டத்தையும் மக்களுக்கு கிடைக்காத வண்ணம் செய்து விடுவார்.ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தங்கம் தருவதாக சொல்லி இருக்கிறார்.

உண்மையில் கலைஞர் வசனத்தில் `எங்கள் தங்கம்' படத்தில்தான் அவர் நடித்துள்ளார். மற்றபடி அவருக்கு தங்கத்தை பற்றி எல்லாம் தெரியாது. அவர் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, தங்கம் தரப் போவதுமில்லை, என்றார்

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளில், தேர்தல் ஆணையம் தலையிட முடியாது! - பிரவீண்குமார்

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. இது அவர்களது கொள்கை முடிவு என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.


வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டுப் போட வேண்டும். அச்சமில்லாமல், மனசாட்சிப்படி ஓட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரசார வீடியோ சி.டி. மற்றும் போஸ்டர்கள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டையில் நேற்று நடந்தது.

இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கலந்து கொண்டு சி.டி.யையும், போஸ்டர்களையும் வெளியிட்டார். அதனை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் டி.ராஜேந்திரன், பி.அமுதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தேர்தலில் மக்கள் அவசியம் ஓட்டுப் போட வேண்டும். பணத்திற்காக ஓட்டுப் போடாமல் மனசாட்சிப்படி ஓட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் இன்று வீடியோ சி.டி. வெளியிட்டுள்ளோம்.

இதில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, நடிகைகள் சுஹாசினி, ரோஹினி, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பத்திரிகையாளர் கோபிநாத் ஆகியோர் விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளனர்.

ஒவ்வொருவரின் பேச்சும் 10 வினாடிகள் முதல் 20 வினாடிகள் வரை இடம்பெற்றுள்ளது. இந்த பிரசாரத்தில் நானும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதாவும் பேசி இருக்கிறோம்.

வாக்கை பணத்திற்காக விற்பதா?

வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'விலை மதிப்பில்லாத உங்கள் வாக்கை பணத்திற்காக விற்பதா? உங்கள் வாக்கினை சரியாக பயன்படுத்துவீர்' என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட 10 வகையான போஸ்டர்களும் வெளியிட்டுள்ளோம். ஒரு மாவட்டத்திற்கு 2 ஆயிரம் போஸ்டர்கள் வீதம் மொத்தம் 65 ஆயிரம் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு உள்ளன.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக போஸ்டர்கள் தேவைப்பட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அச்சிட்டுக் கொள்ளலாம்.

பொது இடங்களில்...

வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பிரசார ஆடியோ, வீடியோ சி.டி.யை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வீடியோ வேன் மூலம் பொது இடங்களில் இந்த சி.டி. திரையில் ஒளிபரப்பப்படும். 'யு டியூப்' இணையதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது.

அதுபோல வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொது இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், வாக்குச்சாவடி அமைக்கப்படும் பகுதிகள் ஆகிய இடங்களில் ஒட்டப்படும்.

இலவச அறிவிப்புகள்

அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவதில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது. அது அவர்களது கொள்கை முடிவு ஆகும். அரசியல்வாதிகள் வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்பது வழக்கம்தான். அதுபற்றி மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்கு அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலோ, அரசியல்வாதிகள் பணம் கொடுத்தாலோ அதை தடுப்பதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலையாகும்.

வாக்காளர்கள் பணம் கொடுப்பதை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சரியான ஆவணங்கள் வைத்திருப்பவர்களிடமோ, அவசரமாக மருத்துவமனைக்கு செல்பவர்களிடமோ பணம் பறிமுதல் செய்யக்கூடாது என்று அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். அதனால் சிறு வணிகர்கள் இப்போது துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை

வாகன சோதனையாலும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாலும் இதுவரை ரூ.20 கோடி ரொக்கப் பணமும், ரூ.7 கோடி மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக மதுரையில் ரூ.3 கோடியே 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பணம் பட்டுவாடா நடக்கிறது என்று புகார் வந்தவுடன் பறக்கும் படையினர் அங்கே விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கிறார்கள். சாலைகள் மட்டுமல்லாமல், கடற்கரை என எந்த இடத்தில் பணம் பட்டுவாடா நடந்தால், அதுபற்றி குறிப்பிட்டு புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

11-ந் தேதி மாலைக்குள் கருத்து கணிப்பு

ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் தேர்தல் தொடங்கும் நாளான ஏப்ரல் 4-ந் தேதியில் இருந்து தேர்தல் முடியும் நாளான மே 10-ந் தேதி வரை கருத்து கணிப்போ, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்போ வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஏப்ரல் 11-ந் தேதி மாலை 5 மணி வரை கருத்து கணிப்பு மட்டும் வெளியிடலாம். ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர், நடிகைகள் நடித்துள்ள திரைப்படங்களை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

கார்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான டிரைவிங் டிப்ஸ்

எகிறி வரும் எரிபொருள்களின் விலை உயர்வால், குதிரை வாங்கியும், சாட்டை வாங்காத குறையாக பலர் காரை வாங்கி வீட்டில் அழகு பொருளாக நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக கருதப்பட்ட கார்கள் இன்றைக்கு அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.


எரிபொருள் விலை உயர்வு அதிகரித்தாலும், அலுவலகம், வர்த்தக தேவைகள், சுற்றுலாக்களுக்கு காரை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, காரில் செல்லும்போது சில எளிய நடைமுறைகளை கடைபிடித்தால், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

எரிபொருள் சிக்கனத்திற்கான சில டிரைவிங் டிப்ஸ்

1. தேவையில்லாமல் கிளட்சை அடிக்கடி மிதிப்பதை தவிர்க்க வேண்டும். கியரை மாற்றும்போது மட்டும் கிளட்சை மிதிக்க வேண்டும். கிளட்சை அடிக்கடி பயன்படுத்துவதால் கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதை நினைவில் கொண்டு டிரைவிங் செய்யவும்.

2. நிறுவனங்கள் கூறியுள்ளபடி, வேகத்திற்கு தக்கவாறு சரியான கியரில் காரை இயக்க பழகிக்கொள்ள வேண்டும். சிலர் கார் ஓட்டுவதில் நான் சூரப்புலி என்பதை காட்டுவதற்காக வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் உடனுக்குடன் கியரை மாற்றி வேகமெடுத்து திறமையை பறைசாற்றுவர். இது தவறான டிரைவிங் என்பது மட்டுமல்ல, எரிபொருள் செலவு கூடுதல் செலவாவதற்கு முக்கிய காரணமே இதுவாகத்தான் இருக்கும்.

3.நகரங்களில் டிரைவிங் செய்பவர்கள் சிக்னல்களில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்படுகையில், 20 வினாடிகளுக்கு மேல் தாமதம் ஏற்படும் என்றால் மட்டுமே எஞ்சினை ஆப் செய்யவும். 20 வினாடிகளுக்குள் எஞ்சினை ஆப் செய்து, திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது சிறிது கூடுதலாக எரிபொருள் செலவாகும்.

4.புதிய காராக இருந்தால்,தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்த கால அளவிலும், பழைய காராக இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்து விடுவது புத்திசாலித்தனம். இதேபோன்று, அடிக்கடி எஞ்சின் செக்கப் செய்வதும் 50 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும்.

5.காரை எடுப்பதற்கு முன் டயர்களில் காற்றின் அழுத்தம் சரியான அளவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கிளம்புங்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது, டயர்களில் சரியான அளவில் காற்று பிடிப்பது நல்லது. டயர்களில் காற்றின் அழுத்தம் குறைந்தால், எஞ்சினுக்கு கூடுதல் பளு ஏற்பட்டு 5 சதவீதம் எரிபொருள் கூடுதல் செலவாகும்.

6.சுற்றுலா அல்லது வெளியூர் பயணங்கள் செல்லும்போது, தேவையில்லாத பொருட்களை கேரியர் தலையில் ஏற்றாதீர். கேரியரில் ஏற்றப்படும் பொருட்களின் எடை காரணமாக எஞ்சின் கூடுதல் சிரமத்தை ஏற்பதால் அதிக எரிபொருள் செலவாகும்.

7.நெடுஞ்சாலை பயணங்களின்போது, 60 கி.மீ., வேகத்தில் சென்றால் அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்கும். அதற்கு மேல் செல்லும்போது 5 முதல் 10 சதவீதத்திற்கும் கூடுதலான எரிபொருளை எஞ்சின் விழுங்கும்.

8.தேவையில்லாமல் அடிக்கடி பிரேக் பிடிப்பது, காரை நிறுத்துவது போன்றவற்றை தவிர்ப்பதாலும், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். தவிர, அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்ப்பதால், டயர்கள் மற்றும் பிரேக்குளின் ஆயுட்காலம் நீடிக்கும்.

9.குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசியை ஆப் செய்துவிட்டு காரின் கண்ணாடி கதவுகளை திறந்துகொள்ளுங்கள். குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசி இயங்கும்போது எஞ்சின் கூடுதல் எரிபொருளை எடுத்துக்கொள்ளும்.

10. காரின் வேகத்தில்தான் எரிபொருள் சிக்கனத்திற்கான சூட்சுமம் அடங்கியுள்ளது. எனவே, சராசரியான வேகத்தில் காரை இயக்க பழகிக்கொண்டாலே போதும். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறமுடியும்.

மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை நினைவில்கொண்டு டிரைவிங் செய்தால், அடிக்கடி பெட்ரோல் பங்க் கியூவில் அடிக்கடி நிற்பதை நிச்சயம் தவிர்க்கலாம்.

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை (இலவசத்திட்டமுன்னா இதுதான்யா)


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை இன்று திருச்சியில் ஜெயலலிதா வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

* குடும்ப ரேஷன் அட்டைதா ரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
 
* விலைவாசி கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வரப்படும்.  
 
 * “எத்தனால்” எரிபொருள் உற்பத்தியை பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும்.
 
* நலிந்த கரும்பு ஆலைகள் புதுப்பிக்கப்பட்டு, சர்க்கரை மற்றும் எத்தனால் எரிபொருள் தயாரிப்பு விரிவாக்கப்படும்.
 
 *அத்மீறி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
 
* விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக் கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
 
 * ஆண்டிற்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும்.
 
* குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.   வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும் பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவச மாக வழங்கப்படும்.
 
* இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.
 
* புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
 
* இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.   குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
 
* அனைத்து மாவட்டங் களிலும் மாவட்ட மருத்துவ மனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
 
* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்திற்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.
 
* 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
 
* நவீன பசுமை வீட்டு வசதித் திட்டம் - அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
 
* வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும்.
 
* வீடில்லா ஏழை குடும் பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.
 
* கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் கடனாளிகளின் பிரச்சனைகள் களையப்படும்.  
 
 * வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.
 
* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
 
* மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத் தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப்படை அமைக்கப்படும்.
 
* தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும். விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்கி, மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களின் உற்பத்தியால் 9 சதவீத விவசாய வளர்ச்சியை அடைவோம்.
 
* தற்போதைய 8.6 மில்லியன் டன் அரிசி உற்பத்தியை 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவோம்.
 
* விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
 
 * 30,000 ஹெக்டேர் நிலப் பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.
 
* விவசாய கருவிகளை அ.தி.மு.க. அரசு இலவசமாக வழங்கும்.
 
* மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு - உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.
 
* அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும். விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப் படுத்துவோம்.
 
* விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செய்யப்படும்.
 
* கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப் பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப் பாளர்களுக்கும், விவசாயி களுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* ஒரு லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உற்பத்தி இரண்டு மடங்காகப் பெருக்கப்படும்.  
 
 * 2012ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மொகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
 
* 2013ஆம் ஆண்டுக்குள் பத்து 300 மெகாவாட் சூரிய சக்தி பூங்கா உருவாக்கப்பட்டு 3000 மெகாவாட் மின்சாரம் அதன் மூலம் தயாரிக்கப்படும்.
 
 * தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 200 கிலோ வாட் உயிரிதிரள் இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
 
* வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.
 
* கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சா ரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* தமிழ் நாட்டை பன்முக சமூக, பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1,20,000/- கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத, அமைதியான, பாதுகாப்பான, ஒட்டு மொத்த வளர்ச்சி அடைந்த சமத்துவ தமிழகத்தை அமைப்போம்.
 
* நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும்.
 
 * பருத்தி உற்பத்தியை மற்றும் விளைச்சலை இரண்டு மடங்காக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 
* 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
 
* 10 ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும்.
 
* மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும்.
 
* 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
* பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.
 
* 2015க்குள் 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
 
 * அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு இதன் மூலம் கிராமப் புறங்களில் சுய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
 
* வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
 
* 30லிருந்து 40 கிராமங்கள் வரை இணைக்கப்பட்டு, அவற்றிற்குத் தேவையான அடிப்படை சாலை மற்றும் கட்டமைப்புகள், தொலைத் தொடர்பு இணைப்புகள், அறிவுசார் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
* மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும்.
 
 * மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.
 
 * அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.
 
* பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
 
* பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க மாணவர் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்.
 
* மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.
 
 * பல்கலைக்கழகங்களின் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டு, சீர்படுத்தப்படும்.
 
* மாணவர்களின் பன்முக திறனை ஊக்குவிக்க தனித் திறமை மற்றும் அறிவுசார் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்படும்.
 
* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும்.
 
* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.
 
* இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும். * 13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும்.
 
* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். * பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும்.
 
 * கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும்.
 
* மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாவட்டம் தோறும் மண்பாண்ட தொழிற்கூடங்கள் அமைத்துத் தரப்படும்.
 
   * படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் பல்வேறு தொழில் பூங்காக்களில் 25 சதவிகிதம் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
 
* வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.  
 
 * சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.
 
* பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறச் சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு, பிளாஸ்டிக் கழிவு இல்லாத கிராமங்கள், நகரங்கள் உருவாக்கப்படும்.
 
* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
 
  * தாய்மார்களுக்கு ஒரு காற்றாடி, ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
 
 * குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.
 
  * 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
 
 * முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய ஆண்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.
 
* அங்கு அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும்.
 
* இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
 
 * இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும்.
 
* தமிழ் நாட்டு நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.
 
* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* தமிழ் மொழியின் பெருமையை மற்ற மொழியினரும் உணர்ந்து அதைப் பற்றி அறிய, திருக்குறள், தமிழ் காப்பியங்கள், இலக்கண இலக்கியங்கள், புராண, இதிகாச நூல்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பல்வேறு வரலாற்று புகழ் பெற்ற நூல்களை பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இணைய தளத்தில் இடம்பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.
 
* தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப் பில் முன்னுரிமை கொடுக்கப் படும். அரசு ஊழியர் நலன்
 
* அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது உடல் நலம், மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் இந்தி யாவிலேயே திறம்பட பணியாற்றும் சூழல் உருவாக்கப்படும்.
 
 * அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன் முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் அவ்வப் போது நிறைவு செய்யப்படும்.
 
* அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.
 
* மாற்றுத் திறனாளிகளுக் கென 3 சதவீத இட ஒதுக் கீடு அரசுப் பணியில் ஒதுக் கப்படும். * அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில் உடனடியாக மாற்றம் செய்யப்படும்.
 
* தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமை யாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
 
* அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
 
* டி.டி.எச். சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
 * கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* மொபைல் மின்அணு ஆளுமை திட்டம் செயல் படுத்தப்படும்.
 
* சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
 
 * தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
 
* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
 
* காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
 
 * புலனாய்வு மற்றும் சைபர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு நவீனபடுத்தப்படும்.
 
* சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, வி.ஐ.பி. மற்றும் பாதுகாப்பு படைகள் தனியாக பிரிக்கப்பட்டு, அவர்களது எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வழிவகை செய்யப்படும்.
 
 * பணியில் மரணமடையும் காவலர்களுக்கு - கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும்.
 
 * காவல் துறையினருக்கு சிறப்பு மன வளக்கலை பயிற்சி நடத்தப்படுவதோடு, அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஒவ்வொரு வருடமும் இலவசமாக நடத்தப்படும்.
 
* ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
 
 * நடைமுறையில் உள்ள மதுரை - தூத்துக்குடி - அருப்புக்கோட்டை காரிடார் - “தன்னிறைவு கொண்ட இன்டஸ்டிரியல் காரிடார்” ஆக அறிவிக்கப்பட்டு அதற்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
 
* கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீடு ஈர்க்கப்படத் தேவையான பல்முனை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அதன் மூலம் தமிழகத்தை கப்பல் கட்டும் துறையில் முன்னோடியாக்குவோம்.
 
* தென் தமிழகத்தில் “ஏரோ பார்க்“ ஏற்படுத்தத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 
 * திருப்பூர் சாயக் கழிவு பிரச்சனையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்தி கரிக்கத் தேவையான தொழில் நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.
 
  * முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.
 
* அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* கிராம நிர்வாக அலு வலர்கள் தேர்வு முடிவுகள் உட்பட அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட ஆவன செய்யப்படும்.
 
  * மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல் படுத்தப்பட மாட்டாது.
 
* உழவர் பாதுகாப்புத் திட்டம் மீண்டும் நவீன காலத்திற்கு ஏற்ற வடிவில் புதிய பொலிவுடன் சிறப்பான முறையில் செயல் படுத்தப்படும்.
 
 * 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
 
  * ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும்.
 
* சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பாக பிரச்சனைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
 
* போக்குவரத்து தொழி லாளர் நலன் பேணப்பட சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.
 
 * சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடை முறைபடுத்தப்படும்.