கதிர்வீச்சு பயத்தால், ஒருவர் லாரி லாரியாக உப்பு வாங்கி அவஸ்தைக்கு உள்ளான வேடிக்கையான சம்பவம், சீனாவில் நடந்துள்ளது.ஜப்பானில் ஏற்பட்ட கதிர்வீச்சு பீதி, சீனாவையும் பிடித்துக் கொண்டு விட்டது. கதிர்வீச்சைத் தடுக்க, அயோடின் கலந்த உப்பு தான் சிறந்த மருந்து என்ற வதந்தி சீனாவில் பரவவே, கடந்த வாரம் அங்கு வரலாறு காணாத அளவுக்கு உப்பின் விலை எகிறிவிட்டது. ஹூபேய் மாகாணத்தின் தலைநகர் வூகானைச் சேர்ந்த குவோ என்பவருக்கு, கதிர்வீச்சு பீதி ரொம்பவே கிலியை உண்டு பண்ணிவிட்டது. பயந்து நடுங்கிப் போன அவர், 260 மூட்டை உப்பை வாங்கி மூன்று லாரிகளில் அவற்றை ஏற்றி, தனது அபார்ட்மென்டுக்கு கொண்டு வந்து விட்டார். இதற்காக அவர் செலவிட்ட தொகை, 1 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரூபாய். இந்நிலையில், இவர் உப்பு வாங்கி வந்து வீட்டில் நிரப்பிய இரண்டு நாட்களில், உப்பு தேவைப்படும் என்ற கருத்து தவறு; அதை யாரும் நம்ப வேண்டாம் என்று அரசு அறிக்கை வெளியிட்டது. இதனால், உப்பின் விலை மளமளவென வீழ்ந்துவிட்டது. வாங்கிய உப்பை விற்றால் சட்ட விரோதம், ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்திற்கு பெருமளவிலான உப்பைக் கொண்டு போகத் தடை என, சிக்கலில் இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறார் குவோ.
|
No comments:
Post a Comment