மார்த்தாண்டம் குமரி மாவட்டத்தில் காங்., உடைகிறது. புதிய கட்சி உதயமாகி ஆறு தொகுதிகளிலும் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என்று பரபரப்பாக கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணியில் காங்., சிற்கு குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தமிழக காங்., தலைவர்களிடம் அணி வாரியாக சீட் கேட்டு பலர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட போது அதிர்ச்சி அடைந்தனர். விளவங்கோடு சட்டசபை தொகுதியில் சுப்ரீம் கோர்ட் வக்கீல் விஜயதாரணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு உள்ளூர் நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனை கண்டித்து விளவங்கோடு தொகுதியில்
காங்., சின் ஒரு பிரிவினர் சார்பில் மக்கள் காவல்படை மாவட்ட தலைவர் சேம்கிறிஸ்துகுமாரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதை போல் அணி வாரியாக செயல்பட்டவர்கள் மாவட்டத்தில் ஒன்று சேர முடிவு செய்துள்ளனர். காமராஜர் அல்லது நேசமணியை மையமாக வைத்து புதிய கட்சி உதயமாகி ஆறு தொகுதிகளிலும் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தபடலாம் என்று கூறப்படுகிறது. சீட் கேட்டு சென்னை மற்றும் டில்லி சென்றவர்கள் இன்று ஊர் வந்து சேருகின்றனர். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில் குமரி மேற்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு மாவட்ட தலைவர் வக்கீல் பிரின்ஸ் தலைமையில் குழித்துறையில் நடக்கிறது. இதில் அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று மேற்கு மாவட்ட தலைவர் வக்கீல் பிரின்ஸ் கேட்டு கொண்டுள்ளார்.

|
No comments:
Post a Comment