Tuesday, July 12, 2011

பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு

அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்பட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கிறது அந்த ஆய்வு முடிவு.


தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத
ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி.

குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும். அதேபோன்ற நிலைதான் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இருக்குமாம். இப்படிப்பட்டவர்களுக்கு சூடான குளியல் சுகானுபவமாக இருக்குமாம். மேலும் அவர்களை விட்டு வேதனைகள் அகல இது நல்ல உபாயமாகும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரையிலானவர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினர். அதில், சூடான குளியலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமையின் வேதனை பெரிதாக தெரியவில்லையாம். மாறாக புத்துணர்ச்சியுடன் அவர்கள் காணப்பட்டனராம். அதேசமயம், சூடான குளியலைப் போடாதவர்கள் எதையோ பறி கொடுத்தவர்களாக காணப்பட்டனராம்.

சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட்டுப்படுவதாக ஆய்வை மேற்கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக்கத்திற்கு நேர் மாறனதாக இருப்பது குறிப்பிடத்தக்கு. நமது ஊர்களிலெல்லாம் செக்ஸ் உணர்வுகளால் தூண்டப்படும், தனிமையில் தவிக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் அதைத் தணிக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கையும், பழக்கமும் இருந்து வருகிறது.

ஆனால் அமெரிக்காவில் நடந்த இந்த ஆய்விலோ சுடு நீரில் குளித்தால் சுகமாகும் என்ற புதிய முடிவைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஃபீலிங்ஸ் போல!.

சைபர் க்ரைம் - ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்


இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.


இணைய குற்றங்கள் (Cyber Crimes):


1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.
4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]

7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர். 

பாதுகாப்பு வழிகள்:

1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.


4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள். 

7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.

10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள்.http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https://என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும். 

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.

பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு 

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் 

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்]. 

4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் 

5. கடன் அட்டை எண் திருட்டு

6. வலைத்தள ஹேக்கிங்

தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
 Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

கவனிக்க:  இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை. 

இதுவரை காணக்கிடைக்காத வினோத வீடியோ விளம்பரம்

சில விளம்பரங்கள் சிரிக்க வைத்தாலும் ரொம்பவும் சுவாரசியமாக இருக்கும். இந்த விளம்பரமும் அப்படித்தான்… ஆரம்பத்தில் இது எதற்காக என்று யாருக்கும் புரியாது.. இறுதியில் தான் புரியும் இது ஒரு சிமென்ட் விளம்ரம் என்று..


அதிர்ச்சி .மனித குலத்தின் மூளை வளர்ச்சித் திறன் குறைந்து கொண்டு வருகிறது.

மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. இது கடந்த 1 லட்சம் முதல் 1லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப்புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு தற்போது உணவுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதைத் தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளன

பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது எதற்காக

பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல… அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.


செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.

அவற்றில் சில…

ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம்.

ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.
84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம்.

வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு.

ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்… அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு… செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.

அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு!

ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அனாவசிய வதந்திகளைத் தவிர்க்கும் பொருட்டு படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அவ்வப்போது மீடியாவுக்குத் தெரிவிக்க முடிவு செய்துள்ள ரஜினி, மிகுந்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் பூஜை நடக்கிறது.
பின்னர், ஏவிஎம்மில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடர்கிறது. வெளிநாடுகளில், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத அழகிய இடங்களில் இந்தப் பாடல்கள் படமாக்கப்படுகின்றன.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏஆர் ரஹ்மான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்கத்துக்கு ராஜீவன் பொறுப்பேற்றுள்ளார். இயக்கம் கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: ஈராஸ் இன்டர்நேஷனல் கிஷோர் லுல்லா – ஆக்கர் ஸ்டுடியோஸ் சவுந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த்.
தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக வெளியாகும் இருமொழிப் படம் இது!

ராணா படத்தில் ரஜினியுடன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பாரா?

ராணா படத்தில் ரஜினியுடன் 7 கதாநாயகிகள் நடிப்பார்கள் என அப்படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்தார்.


ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு, 'ராணா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் அவருடன் தீபிகா படுகோனே ஜோடியாக நடிப்பதும் தெரிந்ததே. இதைத் தவிர மற்ற தகவல்கள் காற்றுவழிச் செய்தியாகவே இருந்தன.

இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ராணா படத்தை பற்றி கற்பனையான தகவல்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. எந்த படத்துக்கும் இந்த அளவுக்கு தகவல்கள் வந்ததில்லை.
'சுல்தான் தி வாரியர்' படத்தைத்தான் 'ராணா' என்ற பெயரில் தயாரிப்பதாக சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். 'சுல்தான் தி வாரியர்' படத்தை நான் இயக்குவதாக இருந்தது உண்மைதான். பின்னர் அது உறுதி செய்யப்படவில்லை.

ரஜினிகாந்த் என்னிடம் வேறு ஒரு கதை சொன்னார். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 'சுல்தான் தி வாரியர்' கதைக்கும், 'ராணா' படத்தின் கதைக்கும் சம்பந்தம் கிடையாது. 'சுல்தான் தி வாரியர்,' சௌந்தர்யாவின் படம். அந்தப் படத்தை அவர்தான் டைரக்டு செய்கிறார். 'ராணா' படத்தில், அவர் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரிகிறார்.

ரேகாவுடன் பேசவே இல்லை!

'ராணா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ரேகா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க மறுத்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் வெளியான தகவல், முற்றிலும் தவறானது. சத்தியமாக நான் ரேகாவுடம் பேசவில்லை. அதுபோல் ஹேமாமாலினியுடனும் பேசவில்லை.

அசினுடனும் நான் பேசவில்லை. அவர் என் டைரக்ஷனில் 2 படங்களில் நடித்துள்ளார். அவர் சென்னை வந்தால், என் அலுவலகத்துக்கு வருவார். நான் மும்பை சென்றால், அவருடைய வீட்டில் போய் சாப்பிடுவேன். அவ்வளவு நட்பானவர், அசின். அவருடன் பேசியதாக வெளியானதும் தவறான தகவல்தான்.

சரித்திர படம்

நிறைய கதாநாயகிகளுடன் பேசி வருகிறோம் என்பது உண்மை. படத்தில் அவ்வளவு கதாபாத்திரங்கள் உள்ளன. 'ராணா,' ஒரு சரித்திர படம். வேறு எந்த படத்துடனும் இந்த படத்தை ஒப்பிட விரும்பவில்லை.

12 வருடங்கள் கழித்து நான் ரஜினி படத்தை டைரக்டு செய்கிறேன். என்றாலும் இடையில் நாங்கள் இருவரும் பேசாமல் இல்லை. அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம்.

7 கதாநாயகிகள்... மூன்று ஜோடிகள்!

'ராணா,' 17-ம் நூற்றாண்டில் நடக்கிற கதை. இந்த படத்தில், ரஜினியுடன் ஆறு அல்லது ஏழு கதாநாயகிகள் இணைந்து நடிப்பார்கள். அத்தனை பேரும் அவருக்கு ஜோடி அல்ல. மூன்று கதாநாயகிகள்தான் அவருக்கு ஜோடி. தீபிகா படுகோனே மட்டும் 'மெயின்' கதாநாயகியாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறார். வித்யாபாலனுடன் நான் போனில் பேசியது உண்மைதான். ஆனால், அவர் உறுதி செய்யப்படவில்லை.

ரஜினியுடன் இந்த படத்தில் கமல்ஹாசன் இணைந்து நடிப்பாரா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக, கமல்ஹாசன் இந்த படத்தில் நடிக்கவில்லை. அதுபோல் அமிதாப்பச்சனும் இந்த படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

ரூ.100 கோடி செலவில்...

'ராணா' படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டும். படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் லண்டனில் தொடங்கும். சுமார் ஒரு வருட காலம் படப்பிடிப்பு நடைபெறும்,'' என்றார் ரவிக்குமார்.

போதையில் இருந்த மாணவனுடன் செக்ஸ் உறவு – இங்கிலாந்து ஆசிரியை கைது

 போதையில் இருந்த மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக ஆசிரியை ஒருவர் கைதாகியுள்ளார்.

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் ஹன்னா கிளின்ட்ரி (25). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இவர் பள்ளியில் படிக்கும் 16 வயது மதிக்கத்தக்க 3 மாணவர்களை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து அவர்களுக்கு மது பானம் கொடுத்தார். மது அருந்திய மயக்கத்தில் மாணவர்களுக்கு, ஆசிரியை ஹன்னா மீது மோகம் பிறந்துள்ளது. ஆசிரியையை முத்தமிடுவது என முடிவு செய்து போட்டி வைத்தனர்.

யார் முதலில் முத்தமிடுகிறார்களோ அவர்களுக்கு பரிசும் வைத்துக் கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் திடீரென பயமும், தயக்கமும் வந்தது. இருப்பினும், ஒரு மாணவன் துணிச்சலுடன் ஆசிரியைக்கு முத்தம் கொடுத்தான்.

போதை அதிகமாகிப் போனதால் மூன்று பேரும் ஆசிரியை வீட்டிலேயே இரவு தங்க முடிவு செய்தனர். அப்போது தனக்கு முத்தமிட்ட மாணவனை அழைத்து அவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் ஆசிரியை ஹன்னா.

இது வெளஇயில் தெரிய வரவே பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவே இல்லை என்று மூன்று மாணவர்களும் மறுத்து விட்டனர்.

ஆனால் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதை தனது தாயாரிடம் சொன்னான் அந்த மாணவன். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஹன்னா கைது செய்யப்பட்டார். அவரை பள்ளி நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது.


கையசைத்தால் பேசலாம் வருகிறது புதிய தொழில் நுட்பம்

எதிர் காலத்தில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியுமாம். இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர் வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இன்னும் சில ஆண்டுகளில் கை, கால்களில் முறிவுகள் ஏற்பட்டால் இலகுவில் கண்டறிந்து விட முடியும் எனக் கூறப்படுகிறது. கோடைகாலங்களில் இளஞ்சிறார்களும் பனிக்காலங்களில் வயது முதிர்ந்தோரும் முறிவுகளைச் சந்திப்பது மேலைத்தேய நாடுகளில் சாதாரணமாக நடைபெறுவதாகும்.


இவ்வாறான வேளைகளில் மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுப்பதற்கு அவசர அவசரமாக ஓட வேண்டிய தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் போகலாம். நாம் எங்கள் குடும்ப வைத்தியரிடமே சென்று முறிவைப் பரிசோதித்து பத்துப் போட்டுக் கொள்ளலாம்.
இப் புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐ போனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்துப் படி குறுகிய தூரத்திருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன எனவும் எக்ஸ்ரே கருவிக்கு துணைக் கருவியாகப் இதனைப் பயன்படுத்தலாம் எனக் கூறுப்படுகிறது.

இப்புதிய கண்டு பிடிப்பானது எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது குறுந்தூர அலைகளை உள்வாங்குவதால் பரிசோதனைகளின் தரத்தை மேம்படுத்தவும் செம்மையாக்கவும் உதவுகின்றது. இது தவிர இக்குறுந்தூரஅலைவாங்கியின் தொழிநுட்பம் எக்ஸ்ரே, அல்ரா ஒலிசோதனை மற்றும் எம் ஆர் சோதனைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது இப்புதிய கண்டுபிடிப்பானது பக்கவிளைவுகளையோ கதிர்கள் கலங்களை ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளைக் கொண்டிருக்காவிட்டாலும் எக்ஸ்ரே படப்பிடிப்பின் போது பெறப்படும் துல்லியமான படங்களை வழங்காது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள நிலைமையில் ராடர்கள் நீண்ட தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கி சமிக்கைகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்படுகின்றன. இதன் மூலம் எல்லைக் காவலாளிகள் தமது எல்லைகளுக்குள் அந்நிய கப்பல்கள்இ விமானங்கள் நுழைகின்றனவா எனக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப் புதிய வரவான குறுந்தூர ராடரானது இது வரை கடினமாக இருந்த குறுகிய தூரத்தில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை, சமிக்கைகளை கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதில் உதவலாம் என நம்பப் படுகிறது.

ஒரு ராடர் சமிக்கை ஒளி அலையின் வேகத்துடன் அசைகிறது. அதாவது 300,000 கிலோ மீற்றர் செக்கனுக்கு எனும் வேகத்தில். தற்போதைய தொலை தூர ராடர் மிகச் சரியாக அளக்க கூடிய தூரம் சில சென்ரி மீற்றர்கள், ஆனால் இப்புதிய கண்டு பிடிப்பான குறுந்தூர ராடரானது ஒரு மில்லி மீற்றரைக் கூட துல்லியமாக அளவிடக்கூடியது.

இக் குறுந்தூர ராடர் தனியே மருத்துவ துறையில் மட்டுமல்லாது கட்டிடங்களின் சேதங்கள், கட்டிடங்களை உறுதியாக பேணுவதற்கு உள்ளே வைத்துக் கட்டப்படும் உலோக்கம்பிகள்இ மின் கடத்தும் வயர்கள் போன்றவற்றைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தலாம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ”கருணையால் ” புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளைக் கண்டறியவும் இக் குறுந்தூர ராடர் உதவ முடியும்.

இது மட்டுமல்லாது இத் தொழிநுட்பத்தை தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்த முற்படும் போது தற்போது தொடுகை மூலம் இயக்கப்படும் கைத்தொலைபேசிகள் எதிர்காலத்தில் கையை காற்றில் வீசுவதன் மூலம் இயங்கச் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றனவாம்.