Showing posts with label சைபர் கிரைம். Show all posts
Showing posts with label சைபர் கிரைம். Show all posts

Tuesday, July 12, 2011

சைபர் க்ரைம் - ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்


இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.


இணைய குற்றங்கள் (Cyber Crimes):


1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.
4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]

7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர். 

பாதுகாப்பு வழிகள்:

1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.


4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள். 

7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.

10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள்.http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https://என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும். 

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.

பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு 

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் 

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்]. 

4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் 

5. கடன் அட்டை எண் திருட்டு

6. வலைத்தள ஹேக்கிங்

தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
 Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

கவனிக்க:  இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை. 

Thursday, April 21, 2011

சாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்


ஆன்லைன் “சாட்டிங்’ மூலம் நண்பராகும் நபர்களுக்காக வங்கியில் புதிய கணக்கை துவங்கி, ஆன்லைன் மோசடி நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“”வாழ்த்துக்கள். உங்களுக்கு ஆன்லைன்  லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. உங்களது முகவரி, மொபைல் எண், வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள். மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்”
இந்த வாசகங்களைக் கொண்ட இ}மெயில் பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது.
ஆர்வக்கோளாறும், ஆசையும் இருப்பவர்கள் தொல்லையை விலை கொடுத்து வாங்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இ}மெயிலுக்கு பதில் அனுப்பினும் தொடருவது தொல்லை இ}மெயில்கள் தான். “பண பரிவர்த்தனை செய்வதில் சில சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கு சில ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் பணத்தை உடனே செலுத்தி, சில கோடிகளில் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்’ எனத் தெரிவிக்கப்படும். இதை நம்பி, பணத்தை செலுத்துவோருக்கு கோடிக்கணக்கில் பணமும் கிடைக்காது. மீண்டும் இ}மெயிலும் வராது.
கோவையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் வேலையைத் துவங்கியுள்ளது ஆன்லைன் மோசடிக் கும்பல். கோவையில் உள்ள முக்கியமான
5 ஹோட்டல்களுக்கு “அல்-கொய்தா’ பயங்கரவாத அமைப்பின் பெயரில் மிரட்டல் இ -மெயில் வந்தது.

அந்த இ-மெயில் முகவரிக்கு பதில் அனுப்பிய கோவை போலீஸôர், அவர்கள் கேட்கும் பணத்தை தருவதாகத் தெரிவித்தனர். ஒரு வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்து, அதில், பணத்தை டெபாசிட் செய்யச் சொல்லி மீண்டும் இ}மெயில் வந்தது.
இ-மெயிலில் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கு யாருடையது என போலீஸ் விசாரித்தது, கோவையில் தங்கிப் படிக்கும் ஒரு நைஜீரியா இளைஞர் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு அது என்பது தெரியவந்தது.      மேலும், அந்த இ}மெயில் தில்லியில் இருந்து அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த மாணவனை போலீஸôர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், “தனக்கு “சாட்டிங்’ மூலம் தில்லியில் உள்ள ஒருவர் நண்பரானார். வங்கிக் கணக்கை துவங்கி, அந்தக் கணக்கு எண்ணை அனுப்பினால், ரூ.10 ஆயிரம் பணம் தரப்படும் என்றார். இதை நம்பி, நான் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, பணம் பெற்றுக் கொண்டேன். வெடிகுண்டு மிரட்டல் இ}மெயிலுக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது’ எனத் தெரிவித்துள்ளார்.
மோசடிக் கும்பல் பெரும்பாலும், “சாட்டிங்‘ இணையதளங்களை பயன்படுத்தி, புதிய நண்பர்களை உருவாக்குகின்றனர். அவர்களிடம் நைசாகப் பேசி, வங்கிக் கணக்கை துவக்க வைக்கிறார்கள். பிறகு வங்கிக் கணக்கு எண், ஆன்லைன் பரிவர்த்தனை ஐடிரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை வாங்கிக் கொள்கிறார்கள். மிரட்டி பணம் பறிக்கும்போது, அந்த வங்கிக் கணக்கை கொடுத்து, அதில் பணத்தை டெபாசிட் செய்யச் சொல்கிறார்கள் மோசடி நபர்கள்.
பணம் கொடுக்காமல், போலீஸôருக்கு தகவல் கொடுத்தாலும், வங்கிக் கணக்கு  அவர்களது பெயரில் இல்லாததால், சட்டப்படி அவர்கள் மீது போலீஸôரால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
“சாட்டிங்’ மூலம் அறிமுகமாகும் நபர்களை நம்பி, வங்கிக் கணக்கு விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம்’ என எச்சரிக்கிறது சைபர் சொசைட்டி ஆப் இந்தியா.
ஆன் லைனில் நடைபெறும் மோசடிகள் குறித்து இந்த விழிப்புணர்வை அது ஏற்படுத்தி வருகிறது.
“லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறும் “பிஸ்ஸிங்’ இ}மெயில்களை நம்ப வேண்டாம். அத்தகைய இ}மெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். முடிந்த அளவிற்கு வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண் ஆகியவற்றை ரகசியமாக வைக்க வேண்டும். அவற்றை இ}மெயிலில் சேகரித்து வைக்கக் கூடாது’ என்கின்றனர் சைபர் சொசைட்டி நிர்வாகிகள்.