Tuesday, December 20, 2011

கம்பம் அருகே முற்றுகை போராட்டம்: வைகோ, நெடுமாறன் கைது


முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டிக்கும் வகையில், அம்மாநிலம் மாநிலம் நோக்கி செல்லும் சாலைகளில் இன்று முற்றுகைப் போராட்டம் மேற்கொண்ட பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்க கேரளம் மறுப்பதையும், புதிய அணை கட்டவேண்டும் என பிடிவாதமாக கேரளம் வற்புறுத்துகிறது.

இதைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி செல்லும் 13 சாலைகளிலும் எந்தப் பொருளையும் கொண்டுச்செல்லாமல் தடுக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. 

இதன்படி, இந்த முற்றுகைப் போராட்டம் 13 சாலைகளிலும் இன்று மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கம்பம் லோயர் கேம்ப் பகுதியில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் பழ.நெடுமாறனும், வைகோவும் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அஜித்னா சும்மாவா!!


கொஞ்சநாட்களாகவே தமிழ்நாட்டின் பக்கம்தான் கண்ணையும், காதையும் தீட்டிவைத்துக் கொண்டு திரிகிறார்கள் இந்தி நடிகர்கள். ரஜினியின் வீடு வரைக்கும் வந்து நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துவிட்டு போனார் ஷாருக்கான். இப்போது இவர் நடித்து வரும் டான்-2 படமும் நம்ம அஜீத் நடித்த பில்லா படத்தின் தழுவல்தானாம்.

இந்த படத்தில் ஷாருக்கானின் ஸ்டில்களை பார்த்தவர்களுக்கு இந்த ஹேர் ஸ்டைலை எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றும். ஆனால் அஜீத் ரசிகர்களுக்கு மட்டும் சட்டென்று விளங்கியிருக்கும். யெஸ்... இந்த படத்தில் ஷாருக்கானின் கெட்டப்பும், ஹேர் செட்டப்பும் பரமசிவன் படத்தில் ஒரு அஜீத் வருவாரே, அவரை போலவேதான் இருக்கும். (இந்த படத்தின் நெகட்டிவ்வையே வாங்கி குடோனில் பதுக்கலாம் அஜீத்.
அந்தளவுக்கு அவரது இமேஜை இடியாப்பம் ஆக்கிய தோற்றமல்லவா அது?)
பரமசிவன் படத்தை யதேச்சையாக கவனித்த ஷாருக், அனில்பெம் கிரேக்கர் என்ற தனது மேக்கப் மேனை அழைத்து, அப்படியே அச்சு அசலாக அந்த ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று கேட்டாராம்.

பெண்ணிடம் இப்படியும் ஒரு பால் குடிக்கும் போட்டியா?(வீடியோ இணைப்பு)


வினோதான போட்டிகள் நாளாந்தம் உலகில் ஒவ்வொரு நாடுகளிலும், அந்தந்தப் பிரதேச மக்களின் ரசனைக்கு, பழக்க வழங்கங்களுக்கு ஏற்ப நடத்தப்படுகின்றன.


இங்கு பார்க்கப் போகும் இந்தப் போட்டி பால் குடிக்கும் போட்டி. அதில் என்ன விசேடம் என்று எண்ணுகிறீர்களா?. ஆம், பெண்கள் பால் போத்தலை கைகளுக்கு இடையில் வைத்திருக்க, ஆண்கள் ஓடி வந்து பால் குடிக்க வேண்டும். பால் போத்தலை, ஆணோ, பெண்ணோ கைகளால் பிடிக்கக் கூடாது. இதுதானுங்க போட்டி.



மாணவி தண்டவாளத்தில் தலைவைத்தார். காரணம் காதலனின் S M S!

16 வயதான பள்ளி மாணவியொருவர் காதலன் திரைப்படம் பார்க்க வரமுடியாதென sms மூலம் அறிவித்ததால் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து உயிரை மாயத்துள்ளார், பேஷன் துறையில் கல்வி பயிலும் இந்த மாணவி செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர், இவரின் செயல் மிகவும் முட்டாள் தனமானதென பெற்றோர் வருத்தப்படுகின்றனர் 





மீண்டும் தினமலரை வன்மையாக கண்டிக்கிறோம் ர் |


சுவர்கத்தின் தலைவியான முஹம்மது நபி ஸல்லள்ளாஹூ அலைஹி வஸல்லம்அவர்களின் புதல்வியான பாத்திமா ரலியள்ளாஹூ தஆலா அன்ஹா அவர்கள்தற்கொலை செய்து கொண்டதாக பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கிறதுஇந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான தினமலர். 

 இந்த தவறான செய்தியை வெளியிட்ட தினமலரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.


அத்தோடு அசிங்கமான செய்தியை வெளியிட்ட தினமலர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.

உலக முதல்தர செய்தி தாள் என்று பொய்யுரைக்கும் தினமலர் வெளியிட்ட செய்தி இது.
அந்த தினமல பத்திரிகையில் வெளிவந்த செய்தி இதுதான்…….


கணவன்மார்களே! கண்கலங்காதீர்கள்.....

ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மரணம் வரைக்கும் மட்டுமின்றி, மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே…. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் ஏற்பட நேரிடுகிறது
ஆகையால் மணவாழ்க்கையில் வாழும் கணவன்மார்களுக்கு சில நல் வழிகாட்டல்கள்:

1. மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள். அது நற்செயல்(சதகா) ஆகும்.

2. வீட்டினுள் நுழையும் போது "ஸலாம்" சொல்ல மறந்து விட வேண்டாம். "ஸலாம்" சொல்வது "நபிமொழி" மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.

3.) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம். அதன் தீய விளைவுகளே அதிகமானது.

4. எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.

5. உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும் பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.

6. தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

7. மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தனது மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.

8. நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

9. நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

10. அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.

11. பிள்ளைகளை பராமரிக்கும் விஷயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள். சிலர் பிள்ளை பெறும் வரை தான் நமது கடமை, அதன் பின் மனைவி தான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.

12. இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

13. அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால், வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.

14. குடும்ப விஷயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.

15. நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)

16. குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள்.

17. திரும்பி வரும் பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..

18. திருமணம் முடித்த பின் தனது மனைவியை "அடிமை" என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தனது கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.

19. எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.

20. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.

21. அழகாக காட்சியளிக்கவும், சுத்தமாக இருக்கவும் முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

22. மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்து விடக் கூடியது.

23. வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கிவிடும். அவளது குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்.

24. அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன.

25. மனைவியின் குடும்பத்தார்களை பற்றி மனைவி இருக்கும் போது குறை பேச வேண்டாம்...

நபியவர்கள் நவின்றார்கள்:
பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவர்கள்.அதன் மேற்பகுதி வளைந்திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்துவிடும், அவ்வாறே விட்டோம் என்றால் வளைந்ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்.

ஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் Group Chat செய்ய


இலவசமாக மெயில் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஜிமெயில் முதல் இடத்தில் உள்ளது. ஜிமெயில் பல வசதிகள் வாசகர்களை கவர்ந்துள்ளது அதில் Chat எனப்படும் அரட்டை பகுதியும் ஒன்று. நம் நண்பர்களுடன் எளிதாக அரட்டை அடிக்கும் வசதியை ஜிமெயில் வழங்கி உள்ளது.

ஜிமெயிலில் ஒரு நண்பருடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது இன்னொரு நண்பர் நமக்கு சாட்டில் அழைப்பார் இந்த நண்பர் நாம் ஏற்கனவே அரட்டை அடித்து கொண்டிருப்பவருக்கும் நண்பராக இருப்பார் அப்படியென்றால் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக அரட்டை அடிப்பதை தவிர்த்து ஒரே க்ரூப்பில் மூன்று பேரும் சேர்ந்து விட்டால் அனைவரும் ஒன்றாக அரட்டை அடிக்கலாம். இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மொபைலில் Conference call உள்ளதல்லாவா அதே தான் ஒரே நேரத்தில் பலருடன் பேசி மகிழலாம்.

இந்த வசதியை உபயோகபடுத்த 

இப்பொழுது நீங்கள் ஜிமெயிலில் யாருடனோ அரட்டையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். 
உங்களுக்கு இன்னொரு நபரை உங்கள் குரூப்பில் சேர்க்க வேண்டுமென்றால் உங்கள் சாட் விண்டோவில் மூன்றாவதாக உள்ள Group chat ஐக்கானை க்ளிக் செய்யுங்கள். 
அதை க்ளிக் செய்தவுடன் வரும் சிறிய கட்டத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் மெயில் ஐடியை கொடுத்து invite பட்டனை அழுத்தவும். 

நீங்கள் invite பட்டனை அழுத்தியவுடன் புதிய நண்பருக்கும் ஏற்க்கனவே அரட்டையில் இருப்பவருக்கும் அழைப்பிதழ் செல்லும் அதை இருவரும் ஏற்று கொண்டால் மூன்று பேரும் ஒன்றாக சேட்டிங்கில் ஈடுபடலாம். 
இன்னொரு நண்பரை சேர்க்க வேண்டும் என நினைத்தாலும் இதே முறையில் சேர்த்து அரட்டை அடிக்கலாம்

    அது இப்போது சன் நியூசில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

    அது இப்போது சன் நியூசில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

    சன் நியூஸ் பார்க்க கீழே செல்லவும்


    நடிகை நமீதா தொழிலதிபரோடு

    காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ; இந்நதப் பொன்மொழி யாருக்குப் பொருத்தமோ இல்லையோ நயமான நலமான உடலைக் கொண்ட கும் நடிகை நமீதா வுக்குப் பொருந்தும்

    திரைப்பட வாய்ப்பை இழந்த நமீதா கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழச்சியில் கலந்து கொண்டு கஷ்டப்பட்டு சூப்பர் மச்சான் சூப்பர் என்று அரைகுறை ஆடையுடன் அரைகுறை த் தமழி; பேசி காலத்தை ஓட்டினார். அங்கும் கணிசமான மால் கிடைக்காததால் இப்போது பிரபல தொழிலதிபருடன் தஞ்சம் புகுந்து தினம் மனம் திறந்து பேசுகிறாராம்.

    >தொழிலதிபர் பட்டியலில் முதலில் இருப்பவர் பல மருத்துவக் கல்லூரிகளின் உரிமையாளரும் புதிய நீதிக் கட்சியின் தலைவருமான A.C. …. ம் தானாம். . திருவண்ணாமலயில் இருக்கும் ACS இன் குழு குழு பங்களாவில் தான் தினமும் டிஸ்கஸன் பண்ணுராங்களாம்.


    இந்ந விடயம் ACS இன் மனைவிக்குத் தெரிய வர குடுமபத்தோட திருவண்ணாமலை போயிருக்கிராங்க. அங்க போய்ப் பார்த்தா ACS இன் மடியில நமீதா மச்சாள் தூங்கீட்டு இருந்தாங்களாம். அதைப்பபார்த்த ACS மனைவி நமீதாக்கு நல்ல சாப்பாடு கொடுத்து வீட்டைவிட்டே கலைச்சிட்டாங்களாம்

    இதால ACS குடும்பத்துக்குள்ள பாரிய பிரச்சனை முற்றி ஏகப்பட்ட பிரச்சனைகளாம்.

    ஆனா நமீதா செல்லம் ACS போனா என்ன இன்னொரு BCS ஐ தேடுகிறாரம்..

    டி.ஆரின் ஒஸ்தி ஆசை “நாஸ்தி” ஆன கதை!


    தன் மகன் எஸ்.டி.ஆர் அலைஸ் சிம்பு நடித்து சமீத்தில் வெளிவந்த “ஒஸ்தி” படத்தை அடித்து பிடித்து., அடம் பிடித்து வாங்கி வெளியிட்டதன் மூலம் டி.ஆருக்கு சுமார் பத்து கோடி ரூபாய்க்கு மேலாக நஷ்டமாம். 

    கிட்டத்தட்ட மிரட்டாத குறையாக ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.22 கோடிக்கு ஒஸ்தி படத்தை வாங்கி தனது குறள் டி.வி.,கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளியிட்டார் டி.ஆர்.

    படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தாலும் கூட்டம் இல்லாமல் வாடிக் கொண்டிருப்பதால் வசூல் இல்லையாம்! இதனால் ரூ.பத்து கோடி நஷ்டத்தில் டி.ஆர்., தவிக்கிறாராம். படத்தை அவருக்கு விற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தின் சிட்டி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வினியோக உரிமையை 22 கோடிக்கு டி.ஆருக்கு கொடுத்து விட்டு. சேட்டிலைட் உரிமையை 6 கோடிக்கும், எஃப்.எம்.எஸ்., எனப்படும் வெளிநாட்டு உரிமையை 3 கோடிக்கும் வேறு வேறு பார்டிகளிடம் கொடுத்து சுமார் ஐந்தாறு கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளது. 

    ஒஸ்தி படத்தை முதலில் தயாரித்த பாலாஜி பில்ம் மீடியா ரமேஷூக்கு ஐந்து கோடி லாபம் இருக்கும் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

    ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாதாதால் டி.ஆரோ அம்மாடி, அய்யோடி, ஆத்தாடி… என புலம்பி வருகிறாராம் பாவம்! டி.ஆர்., பேராசைக்கு கிடைத்த நெத்தியடி., ரூ. 10 கோடி நஷ்டம்!

    ஜெ.வும், கருணாநிதியும் வரலாற்று சிறப்புமிக்க ஊழல்வாதிகள் - விஜயகாந்த்

    ஜெயலலிதாவும், கருணாநிதியும் வரலாற்று சிறப்புமிக்க ஊழல்வாதிகள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு,

    முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. அதற்கு கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் பற்றி தான் கவலை. பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி அல்ல. மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் இரு மாநில மக்களைப் பற்றி கவலையில்லை, தேர்தல் பற்றிய கவலை தான் பெரிதாக உள்ளது.

    கேரளாவுக்கு சென்ற தமிழக ஐயப்ப பக்தர்களையும், அங்கு வசித்த தமிழர்களையும் பாதுகாக்க தேரள அரசு தவறிவிட்டது. கேரளாவில் வாழும் தமிழர்களை சமூக விரோதிகள் தாக்குவதை அம்மாநில அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

    எந்த அரசியல் கட்சியின் தூண்டுதலும் இல்லாமல் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக போராடுகின்றனர். திமுக, அதிமுக அரசுகள் இந்த பிரச்சனையை பல ஆண்டுகளாக தீர்க்கமால் உள்ளன என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

    மக்களின் போராட்டம் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டில் நம்பிக்கை இல்லை என்பதையே உணர்த்துகிறது. முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து நமது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை. அணையை பாதுகாக்க ராணுவத்தை கொண்டு வர வேண்டும்.

    அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. தமிழக அரசின் தீர்மானங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த லட்சணத்தில் சும்மா தீர்மானம் மற்றும் நிறைவேற்றி என்ன பயன்? ஜெயலலிதாவும், கருணாநிதியும் வரலாற்று சிறப்புமிக்க ஊழல்வாதிகள்.

    கூடங்குளம் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து பிரதமர் அந்த மக்களை சந்தித்து அவர்கள் அச்சத்தைப் போக்காமல் ரஷ்யாவில் இருந்து கொண்டு இன்னும் ஓரிரு வாரங்களில் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கும் என்று கூறியிருப்பது முறையன்று. கூடங்குளம் அணுமின் நிலையத்தை ராணுவத்தின் பாதுகாப்பில் விடுமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் கூறியதை அமல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. ஆனால் அதே கலாம் முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் பொறுப்பை ராணுவத்திடம் விடுமாறு கூறியதை மத்திய அரசு ஏற்காமல் இரட்டை வேடம் போடுகிறது.

    தமிழக அரசு எதிர்கட்சிகள் கூறுவதை காது கொடுத்து கேட்பதே இல்லை. தேர்தல் மூலம் ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளது, ஆள் மாறவில்லை. முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக நடந்த சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கு நான் தாமதமாக வந்ததற்கு சென்னையின் போக்குவரத்து நெரிசல் மட்டுமே காரணம். வேறு ஒன்றும் கிடையாது என்றார்.

    இன்றைய செய்தித்தாள்களின் தலைப்புச்செய்திகள்

    இன்றைய செய்தித்தாள்களின் தலைப்புச்செய்திகள் 













    உங்கள் அந்தரங்கங்களை விற்றுக் காசாக்கும் பேஸ்புக் பரபரப்புத் தகவல்!!


    மக்கள் காலையில் எழுந்தவுடன் குளிக்கிறார்களோ இல்லையோ கட்டாயம் பேஸ்புக் பார்க்காமல் இருக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு பேஸ்புக் நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இப்படி நம்மோடு ஒன்றிப்போயுள்ள பேஸ்புக் எமது ரகசியங்களை விளம்பரதாரர்களுக்கு விற்கிறது என்றால் எத்தனைபேர் நம்புவீர்கள்…

    பேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களை பற்றி பொதுவாக தெரிவித்துள்ள பெயர், வேலை, கல்வி தகுதி, வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்கள் தொடங்கி, பெழுதுபோக்கு வரையிலான தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி விற்றுவிடுகிறதாம் பேஸ்புக்.

    இப்படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவரை பற்றிய விவரங்களை தனித்தனியாக அலசி ஆராயும் விளம்பர நிறுவனங்கள், அவர்களது வாழ்க்கை தரம் மற்றும் இதர விருப்பு வெறுப்புகளை அறிந்து, யார் யாரிடம் எது எதை விளம்பரப்படுத்தலாம் என தீர்மானிக்கின்றனவாம்.

    சமூக வலைத்தளம் என்ற அளவில் பேஸ்புக் மீது இருக்கும் நம்பிக்கையில், பலர் தங்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை அளவுக்கு அதிகமாகவே தெரிவித்துவிடுகின்றனர். இதை வகையாக பயன்படுத்திக் கொள்கிறது பேஸ்புக்.
    உதாரணமாக ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாக தமது பேஸ்புக் வலை தளத்தில் தெரிவித்திருந்தால்,அந்த தகவலை உடனடியாக அந்த நபர் வசிக்கு உள்ளூர் திருமண மண்டபங்கள், சமையல்காரர்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், மேடை அலங்கார நிபுணர்கள், சிகை அலங்கார நிபுணர்கள், நகைக்கடைக்காரர்கள், இசைக்குழு நடத்துபவர்கள் போன்றவர்களின் விளம்பரங்களை கையாளும் விள்ம்பர நிறுவனங்களுக்கு தெரிவித்துவிடுகிறது பேஸ்புக்.

    அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு, திருமணத்திற்கு தேவையான நகை முதல் கல்யாண மண்டபம் வரை தங்களை அணுகுமாறு மொய்க்கும் விளம்பரங்கள் வந்துகுவியத் தொடங்குகின்றன.

    இது ஒரு வகையான விளம்பர யுக்தி என்றால், ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் தொலைந்துவிட்டதாகவும், வேறு ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கப்போவதாகவும் தமது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ளார்.

    அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நபர் வசிக்கும் உள்ளூர் மோட்டார் சைக்கிள் விற்கும் ஷோர் ரூம் குறித்த விளம்பரம், அவரது தளத்தில் கண்ணை சிமிட்டி அழைக்கிறது.

    பேஸ்புக் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையில் செய்யப்படும் இந்த விளம்பரத்திற்கு, நல்ல பலன் கிடைப்பதால் விளம்பர நிறுவனங்களும், நுகர் பொருள் விற்கும் நிறுவனங்களும், பேஸ்புக் தளத்தை ஒரு சக்திமிக்க மார்க்கெட்டிங் கருவியாகவே பார்க்கின்றனர்.

    அதே சமயம் பேஸ்புக் வலைதளத்தில் தங்களைப் பற்றிய தகவலை தெரிவிப்பவர்கள், அவற்றை தமது நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துடையவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகத்தான்.அவ்வாறு நண்பர்களுக்காக தெரிவிக்கப்படும் தகவலை விளம்பர நிறுவனங்களிடம் விற்று பேஸ்புக் காசாக்கிக் கொள்வது ஏற்புடையதல்ல என்று கூறுகிறார்கள் ‘பிரைவசி வாட்ச்டாக்” எனப்படும் அந்தரங்க உரிமை கண்காணிப்பாளர்கள்.

    இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் துணை தலைவர் டேவிட்,விளம்பர விடயத்தில் தாங்கள் மிகவும் எச்சரிக்கையக இருப்பதாகவும், தங்களது வலை தளத்தின் பயன்பாட்டார்களுக்கு உபயோகமான விளம்பரங்களைத்தான் நாங்கள் கொடுக்கிறோமே தவிர, அநாவசியமான மற்றும் எரிச்சலூட்டக்கூடிய விளம்பரங்களை போடுவதில்லை என்கிறார்.

    ஆனால் அந்த விளம்பரங்கள் உபயோகமானதா இல்லை எரிச்சலூட்டக்கூடியவையா என்பதை முடிவு செய்பவர்கள் பேஸ்புக் பதிவர்கள்தான் என்பதால், அவர்கள்தான் விவரங்களை தெரிவிப்பதில் உஷாராக இருந்துகொள்ள வேண்டும்.

    ஜெயலலிதாவின் உயிர்த்தோழி.. சசிகலா - தெரியாத நிஜம்


    சசிகலாவுக்கு காலத்துக்கும் மாறாத கௌரவ அடையாளம் இது. மற்றபடி, சசிகலா எப்படி? அவருக்குப் பிடித்த & பிடிக்காத விஷயங்கள் என்ன? அவற்றையெல்லாம் எந்தக் கணத்திலும் அவர் சொன்னதில்லை. யாரும் (தைரியத்தோடு) கேட்டதும் இல்லை. சசிகலா என்கிற பெயரைத் தவிர பிரத்யேக விஷயங்கள் அத்தனையுமே பரம ரகசியம்தான்.

    சசிகலாவின் பிறந்த ஊரான திருத்துறைப் பூண்டி வடக்குச் செட்டித் தெருவை தேடிப்போய் பேச்சு கொடுத்தால்.. நம் ‘மல்லிகை மகளை’ அட்டை டூ அட்டை புரட்டிவிட்டுத் தான் வாய் திறக்கிறார்கள். அவ்வளவு ஜாக்கிரதை!

    ‘‘இந்த மண்ணுல பொறந்த மகராசி, மாரியம்மா புண்ணியத்துல நினைச்சுப் பார்க்க முடியாத உசரத்துக்கு போயிட்டாங்க. ஆனா, ‘பவர்’ல இருந்தாலும் இல்லாட்டியும் பொறந்த மண்ணையும் தன்னோட இந்த சொந்தங்களையும் மறக்கவே மாட்டாங்க. பங்குனி மாச உற்சவம் வந்துட்டாலே மகா மாரியம்மனைக் கும்பிட வருஷம் தவறாமல் வந்திடுவாங்க.. மதுரை வீரன்தான் அவங்க குலசாமி. ஆனாலும், இங்கே இருக்கிற மகா மாரியம்மன்தான் அவங்களுக்கு இஷ்ட தெய்வம். ஆரம்ப காலத்தில் பெரிசா வசதி இல்லாத குடும்பம். அதனாலேயே நல்ல படிப்பு படிக்கக்கூட நாலு பேரோட உதவி ஒத்தாசையை எதிர்பார்க்கவேண்டிய நிலை. அதெல்லாம் தடாலடியா மாறினதே இந்த மகா மாரியம்மனோட புண்ணியத்தால தான்னு இன்னிக்கும் நம்புறவங்க அவங்க. படியளந்த தெய்வத்துக்கு பெரிசா கோயில் கட்டி ஜெயலலிதாம்மாவையே அழைச்சுக் கிட்டு வந்து திருவிழா கொண்டாடினாங்க.. அப்போ ஜெயலலிதாம்மா இந்தக் கோயிலுக்கு வெள்ளிக்கவசம் உபயம் கொடுத்தாங்க.
    இப்பல்லாம் எப்பவாவதுதான் சசியம்மாவால ஊருக்கு வரமுடியுது. அந்த சமயத்துல யாரு என்ன உதவி கேட்டாலும், ‘செய்யறேன்’ ‘செய்யலை’னு எந்த பதிலும் சொல்ல மாட்டாங்க. ஆனா, அவங்க கிளம்பிப் போன பின்னாலேயே ‘அம்மா அனுப்பினாங்க’னு யாராச்சும் ஒருத்தர் வந்து, உதவி கேட்டவங்களுக்கு உரியதை செஞ்சுட்டு போவார். அந்தளவுக்கு எதையுமே வெளிக்காட்டிக்காத ஆளு அவங்க..’’ - அந்த செட்டித் தெருவே சிலிர்க்கிறது.

    ‘‘என் பேரைப் போட்டுடாதீங்க.. சசியம்மாவுக்கு என்னைய நல்லா தெரியும்..’’ என்றபடியே சசிகலாவின் பள்ளிக்கால நிகழ்வு ஒன்றை சொன்னார் ஒரு பெண்மணி.

    ‘‘திருத்துறைப்பூண்டியில் இப்பவும் இருக்கற போர்டு ஹைஸ்கூல்லதான் சசியம்மா படிச்சாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க.. சின்ன வயசுல அவங்க ரொம்ப பயந்த சுபாவம். யாரும் சாதாரணமா திட்டினாக்கூட ‘ஓ..’ன்னு அழுதுடுவாங்க. ஒரு தடவை ஸ்கூல்ல நடந்த ஓட்டப்பந்தயத்துல கலந்துகிட்டு ரெண்டாவது பரிசு வாங்கினாங்க. இந்த விஷயம் அவங்க வீட்டுக்கு எப்படியோ தெரிஞ்சுப் போச்சு. அப்புறமென்ன.. ‘வயசுக்கு வந்த பொண்ணு.. கால் தூக்கி ஓடுறதா’னு கேட்டு, ஒரு நாள் முழுக்க வீட்ல முட்டிப் போட வெச்சுட்டாங்க..’’ சிரிப்பு தாளாமல் சிரித்தார் அந்தப் பெண்மணி.

    ‘‘ஓட்டப்பந்தயத்தில மட்டுமில்லை.. மாணவர் மன்றம் நடத்துற இலக்கிய விழாக்களிலுமே சசிகலாவின் பங்களிப்பு தவறாமல் இருக்கும்’’ என்றபடி தொடர்கிறார் சசிகலாவின் பள்ளி சீனியரான அப்பாத்துரை.

    ‘‘இங்கிலீஷ் மருந்துக்கார வீடுனு சொன்னாத்தான் சசிகலா வீடு தெரியும். ஆரம்பத்தில் சந்திரசேகரன் பிள்ளைதான் திருத்துறைப்பூண்டி ஏரியாவுலயே இங்கிலீஷ் மருந்துக்கடை நடத்தியவர். அவரோட பையன்தான் விவேகானந்தன். இவருக்கு நாலு பையன், ரென்டு பொண்ணு. அதில மூத்த பொண்ணுதான் சசி. பந்த பாசத்துக்கு பஞ்சமில்லாத குடும்பம். ஆரம்பத்தில் செட்டித் தெருவில இருந்த புகையிலைக் கடைக்கார செட்டியார் வீட்டுலதான் சசிகலா ரொம்பப் பிரியமா இருப்பாங்க. சின்ன வயசு பிரியம் மாறாம இன்னிக்கும் அந்த செட்டியார் குடும்பத்தில் என்ன ஒரு விஷயம்னாலும் முதல் ஆளா ஆஜராகிடுவாங்க. கோயில் விசேஷத்துக்கு சசி வந்திருப்ப, ‘நம்மள எல்லாம் ஞாபகம் இருக்கோ இல்லியோ’னு நினைச்சு, ஒரு ஓரமா நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனா, முகத்தைப் பார்த்த உடனேயே ‘அண்ணே..’னு அவ்வளவு ஆசையா கூப்பிட்டாங்க. அப்படி பழசை மறக்காத மனசு அவங்களோடது!

    எட்டாவது வரைக்கும் இங்கே படிச்ச சசி, அதுக்கப்புறம் மன்னார்குடிக்கு போயிட்டாங்க. அண்ணன்கள் தலையெடுத்த பிறகு அவங்க குடும்பம் ஓஹோனு முன்னேறிடுச்சு. அதுக்கப்புறம்தான் சசிக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இன்னிக்கும் அவங்க குடும்பத்துல என்ன விசேஷம் நடந்தாலும் யாருக்கு அழைப்பு போகுதோ இல்லையோ எங்களை மாதிரியான பொறந்த ஊர் ஆளுங்களுக்கு அவசியம் அழைப்பு வந்துடும்...’’ பெருமையோடு சொல்கிறார் அப்பாதுரை.

    சந்தானகிருஷ்ணன், சசிகலாவுக்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தவர். அவர், ‘‘படிக்கிற காலத்திலேயே சசி ரொம்ப அமைதியான பொண்ணு. சுந்தரவதனம், வினோதகன், ஜெயராமன், திவாகரன்னு நாலு அண்ணன் தம்பிகளும் சசியை கண்ணுக்குள்ள வச்சுதான் பார்த்துக்கிட்டாங்கனு சொல்லணும். கண்டிப்பும் அந்த மாதிரி இருக்கும். பாசமும் அந்த மாதிரி இருக்கும். ஊர்ப்பக்கம் வர்றப்ப சித்தப்பா, பெரியப்பா, மாமானு எல்லா சமுதாய ஆட்களையும் உறவுமுறை சொல்லித்தான் சசி அழைப்பாங்க.

    எனக்கு விவரம் தெரிஞ்சு அவங்க ஆறாவதோ ஏழாவதோ படிச்சப்ப, ஏதோவொரு வேஷம் போட்டு பள்ளிக்கூட நாடகத்துல நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்ல ஆர்வம் அதிகம். இருந்தாலும், வீட்டுக்குப் பயந்து படிப்பில் மட்டுமே தீவிரம் காட்டினாங்க.

    இப்போ அடிக்கடி ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு பிஸியாகிட்டாங்க. ஆனாலும், யார் மூலமாவது ஊர்ல நடக்கிற நல்லது கெட்டதுகளைப் பற்றி தெளிவா தெரிஞ்சுக்குவாங்க. சம்பந்தப்பட்ட விசேஷ வீடுகளுக்கு சர்ப்ரைசா வந்து கதவைத் தட்டி, அவங்களை திக்குமுக்காட வெச்சிடுவாங்க.

    பள்ளியில படிக்கறப்ப, அவங்ககிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயம்னா, மத்தவங்களை ஆத்மார்த்தமா மதிக்கிற குணம்தான். இன்னிக்கும் மத்தவங்களை மதிக்கிற குணத்தை அவங்க கைவிட்டுடலை. அதேமாதிரி, இந்த ஊர் மேலயும் உறவுங்க மேலயும் அவங்க வெச்சிருக்கிற வாஞ்சையும் குறையலை..’’ என்கிறார் வியப்பு மேலிட!

    சசிகலாவை தமிழ்நாட்டை விட்டே துரத்த jeyalalaitha முடிவு ?

    சசிகலா, அவரது கணவர் நடராஜன், இவர்களது குடும்பத்தினர் என, 14 பேரை அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன் மூலம், ஆட்சி மற்றும் கட்சியில் சசிகலா குடும்பம் போட்ட ஆட்டம் குளோசானது. ஜெயலலிதாவின் இந்நடவடிக்கையை, அ.தி.மு.க., தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். 
    கலைஞர் தான் பாவம் கதி கலங்கி இருக்காராம், ஜெ மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டே சசிகலா ஆதிக்கம் தான், அதுவும் உடைஞ்சுடுச்சேன்னு அய்யா கலக்கமாம்...

    அரசு நிர்வாகத்திலும், கட்சி நிர்வாகத்திலும் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து தலையிட்டு வந்தனர். இதன் மூலம், அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வந்தனர். இதையடுத்தே, இந்த அதிரடி நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில், சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட, ஏ.பன்னீர்செல்வம், கடந்த வாரம், அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார்;

    ராஜினாமா செஞ்சாரா? செய்ய வைக்கப்பட்டாரா?நம்மாளுங்க உயிரை விட்டாலும் பதவியை விட மாட்டானுங்களே? 

    இதிலிருந்து பிரச்னைகள் வெளிப்படத் துவங்கின. பன்னீர்செல்வம், நடராஜனுக்கு மிகவும் நெருக்கமாவனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், சிறப்பு அலுவலராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.கோட்டையில், அதிகார மையமாக விளங்கிய இவர், அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்தல் என, அனைத்திலும் தலையிட்டு வந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், கோட்டையில் உள்ள இவரது அறைக்கு வந்து, இவரை சந்தித்து விட்டு செல்லும் நிலையில் இவர் இருந்தார்.

    அதாவது வர்ற வருமானத்துல 10% எடுத்துக்கிட்டு மீதி 90% ட்டை மேலிடத்துக்கு குடுத்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது, அண்ணன் 90 %ட்டை ஆட்டையை போட்டுட்டு `10%ட்டை மட்டும் தள்ளி விட பார்த்திருப்பார்.. உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதை ஆகிடுச்சு

    இத்தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைச்சாமி மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது போன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கையில், சசிகலா போயஸ் தோட்டத்தில் தங்குவதில்லை என்றும், இளவரசியின் வீட்டில் அவர் தங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியானது.இதனால், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகமாகி, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பரபரப்பாகப் பேசப்பட்டது. 

    பரபரப்பா பேசப்படுதோ இல்லையோ, இப்படி நியூஸ் போட்டே பர பரப்பு பண்ணிடுவாங்க, நம்மாளுங்க 

    அதன் எதிரொலியாக, சசிகலா, நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 14 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.முதல்வரின் நடவடிக்கை மூலம், இனி மன்னார்குடி கும்பலின் அட்டூழியம் முடிவுக்கு வந்ததாக, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

    அதை காலம் தான் முடிவு செய்யும், எப்போ வேணாலும், எப்படி வேணாலும் ஜெ மனசு மாறிடும், அதுக்கு வரலாற்றில் சான்று இருக்கு.. 

    கட்சியிலிருந்து, சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதை வரவேற்று, அ.தி.மு.க.,வினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அப்போது, அவர்களில் சிலர் கூறும் போது, "சசிகலா கும்பலை விரட்டியடித்து ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம், அவருக்கு ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

    ஒரு சின்ன கரெக்‌ஷன், ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது என்பது தவறு, ஏற்பட்ட அவப்பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பதே சரி.. ஆல்ரெடி அம்மா பேரு சசிகலாவால கெட்டுப்போச்சே..

    24 மணி நேரம் கெடு?சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் சென்னையிலிருந்து, 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ராவணன், மோகன் ஆகியோர் வீடுகளில் போலீசார் நடத்திய ரெய்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

    சென்னைல இருந்து ஏன் வெளியேறனும்? மன்னர் காலத்துல நாடு கடத்தும் திட்டம் இருந்துச்சு, இப்போ மம்மி ரிட்டர்ன்?ஒரு வேளை ஜெ வே நாடகம் போட்டு இன்கம்டாக்ஸ் ரெயிடு, சொத்துகுவிப்பு வழக்குல இருந்து தப்பிக்க இப்படி ஒரு டிராமா போடராறோ என்னவோ?

    கட்சியில் இருந்தாரா நடராஜன்? : ஜெயலலிதாவுக்கு, முதன் முதலில்மனைவி சசிகலாவை அறிமுகம் செய்த நடராஜன், பிற்காலத்தில் பின்புலத்தில்இருந்து சசிகலாவையும் கட்சியையும்இயக்க ஆரம்பித்தார்.இதனாலேயே 1992ல், நடராஜனுடன்கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என ஜெயலலிதா அறிவித்தார். 

    ஆமா, ஜெவைத்தவிர வேற யாரும் தொடர்பு வெச்சுக்கக்கூடாது ஹி ஹி

    அப்போதே அவர் கட்சியில்உறுப்பினராக இருந்தாரா இல்லையா, எனகட்சியினருக்கே தெளிவாக தெரியவில்லை.1996ல் கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது, சசிகலாவையும் நடராஜனையும் கட்சியை நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். மூன்று மாதங்களில் சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டார். அப்போதும்நடராஜனின் நிலைமை தெரியவில்லை.பின், சசிகலாவுக்கு தலைமை செயற்குழுஉறுப்பினர் பதவி தரப்பட்டபோது கூட,நடராஜனுக்கு பதவி தரப்படவில்லை. இருப்பினும் அவர் கட்சியில், "நிழல்'மனிதராகவே வலம் வந்தார். 

    இதுல என்ன மர்மம் வேண்டிக்கிடக்கு? ஜெவுக்கு சசி பிடிக்கும், ஆனா நடராஜனை பிடிக்கலை, அவரை 100 % விரட்ட வழி இல்லை, அது சசிக்கு பிடிக்காது ஹி ஹி இதான் சிக்கலே..

    சசிகலாவும்நடராஜனும் ரகசியமாக சந்தித்துக்கொள்வதாக அவ்வப்போது தகவல்கள் வந்தன.

     அட விடுங்கப்பா பாவம் சொந்த சம்சாரத்தை சந்திச்சதை என்னவோ சீக்ரெட் ஏஜண்ட் ஜேம்ஸ்பாண்ட் வில்லியை ஹோட்டல்ல சந்திச்ச மாதிரி பில்டப் குடுக்கறீங்க? 

    கட்சிக்காரர்கள் பலரும் நடராஜனுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தனர். இந்நிலையில் சசிகலாவின் கூட்டத்துடன்சேர்த்து, நடராஜனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் வினோதம் என்னவென்றால், கட்சியில் இருக்கிறாரா இல்லையா என கட்சியினருக்கு தெரியாமலேயே,நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். 

    தங்கமலை ரகசியம் கூட கண்டு பிடிச்சுடலாம், போயஸ் தோட்ட மர்மத்தை கண்டுபிடிக்கவே முடியாது.. 

    டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், முதல்வரின் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டது. அந்த பைலை, வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதன் பின்னர் தான் சசிகலாவின் ஆதரவர்களாக வலம் வந்த அதிகாரிகள், ஒவ்வொருவராக, "கழற்றி' விடப்பட்டுகின்றனர்.

    அதென்ன ஃபைல்? கடைசி வரை ரகசிய ஃபைலாவே இருந்துடுமோ?

    "எம்.ஜி.ஆர்., கூட இந்தளவிற்கு தனி மெஜாரிட்டியில் ஜெயிக்கலைங்க... இந்தம்மாவிடம் (ஜெயலலிதா) பொதுமக்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க' என்ற பேச்சு, தமிழகத்தின் அடிமட்ட அரசியல் தொண்டனிடம் இருந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பேசப்பட்டது.

    ஜெ ஜெயிச்சதே எம் ஜி ஆர் செல்வாக்க்குலதான் என்பதை யாரும் மறந்துடக்கூடாது.. விதை விதைச்சவர் எம் ஜி ஆர் , அறுவடை பண்றது ஜெ

    முதல்வரின் நிழலாக பின் தொடரும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தில் நடப்பது எங்கள் ஆட்சி' என்ற தோரணையில் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தனர்.தற்போது நீக்கப்பட்ட, 14 பேரில் ராகவன் என்பவர், தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்தில், சி.எம்.டி.ஏ., பிரின்சிபல் செக்ரடரி தயானந்த கட்காரியை போனில் அழைத்து, "நாங்கள் சொல்லும் பைலில் கையெழுத்து போடா விட்டால் நடப்பதே வேறு' என மிரட்டியுள்ளார்.

     மிரட்டியவர்கள் விரட்டப்பட்டுள்ளனர் ம் ம் குட்

    அந்த நபர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை என, தலையிட்டு, கடைசியாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையிலும் தலையை நீட்டினார். "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் ஆசியுடன், கடந்த ஆட்சியில் சென்னையில் பணியாற்றி வந்த, "ஜிம் பாடி பில்டர்' ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கார்டன் அதிகார நபரை பிடித்தார்.அடுத்த சில நாட்களில் அந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, மேற்கு மண்டலத்தில் உள்ள வளமான மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இது போன்ற ஏகப்பட்ட தலையீடுகள், போலீஸ் துறையில் அரங்கேறின.

    என்னைக்கேட்டா கவர்னர் தலையிட்டு ஜெ மேல கேஸ் போட வைக்கனும். ஒரு அரசாங்கமே தனி நபர் பிடில சிக்கிட்டு இருந்ததை வேடிக்கை பார்த்துட்டு நிர்வாகத்தை பலவீனம் ஆக்குனதே ஒரு குற்றம் தான்.

    கார்டன் அதிகார மையத்தினரால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து ரகசிய, "பைல்' முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அந்த பைலை முதல்வரின் பார்வையில் படாமல் கார்டனில் உள்ள சிலர் மறைத்து விட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், ஒரு மாதத்திற்கும் மேலாக கார்டனில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, அந்த பைலை ஜெயலலிதா படித்துள்ளார்.அதில், சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் ஒவ்வொருவரை பற்றியும், வசூல் வேட்டை பற்றியும் விலாவாரியாக, "புட்டு புட்டு' வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கார்டன் அதிகார மையத்தினரால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் தகவல், நியாயமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் முதல்வரிடம் தயக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.

    எல்லாம் ஜெவுக்கு தெரிஞ்சே தான் நடந்திருக்கும், பங்கு பிரிக்கும்போது சண்டை வந்திருக்கும்

    அதன் பின் தான், முதல்வர் சாட்டையை சுழற்றினார். தலைமைச் செயலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, சிறப்பு திட்ட செயலரான பன்னீர்செல்வம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

    அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் தீவிர விசுவாசி. பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ்., ஆனதற்கு, நடராஜன் உதவியதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, திருமலைச்சாமி, கார்டனில் இருந்து விரட்டப்பட்டார்.இவர், கார்டன் அதிகார மையத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கார்டனில் நடக்கும் விஷயங்களை கேட்டு முகம் சிவந்த ஜெயலலிதா, திருமலைச்சாமியிடம் நேரடியாக விசாரித்த போது, பல தகவல்கள் முதல்வரை அதிர்ச்சியடை செய்தன.

    கூட இருந்த ஜெவுக்கே அதிர்ச்சின்னா மக்கள்க்கு எப்படி இருக்கும்? அதெல்லாம் என்னா மேட்டர்னு கண்டு பிடிச்சு வெளீல விடுங்கப்பா. 

    திருமலைச்சாமியின் வாக்கு மூலத்தை, அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரித்து, நூறு சதவீதம் உறுதி செய்தார் ஜெயலலிதா. இனிமேலும் தாமதித்தால் எல்லாம் வீணாகிப் போய்விடும் என்ற எண்ணத்தில், கழக தலைமைக் செயற்குழு குழு உறுப்பினர் சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் உட்பட, 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், மற்ற பொறுப்புகளில் இருந்து ஜெயலலிதா விடுவித்து உத்தரவிட்டார்.

    எலக்‌ஷனுக்குப்பிறகு ஜெ எடுத்த பல வெட்டி அதிரடி அறிவிப்புகளூக்கிடையே , இருப்படியான உத்தரவு இது ஒண்ணுதான்.. அவர் இமேஜ் இதனால மக்கள் மத்தியில் உயரும் என்பதில் ஐயம் இல்லை.. கீப் இட் அப்.. 

    கார்டன் அதிகார மையத்திற்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் பலர், செய்தித் துறையில் பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள், "எம்.என்., - எம்.ஆர்.,' வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்துள்ளனர். நேற்று, ஜெ., வின் அதிரடியால், செய்தித் துறையில் பணியாற்றி வந்த ஆதரவு அதிகாரிகள் சிலர், மொபைல் போனை, "ஆப்' செய்து விட்டு, "எஸ்கேப்' ஆகி விட்டனர். முதல்வரின், "ஹிட் லிஸ்டில்' உள்ளவர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

    மேடம், யாரையும் விடாதீங்க, அவங்க வெச்சிருந்த பணத்தை எல்லாம் கைப்பற்றிடுங்க.. ஆனா அந்த விபரம் எல்லாம் ரகசியமா நடக்கட்டும் ஹி ஹி 

    சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    ஜெ கோர்ட் விசாரணைக்காக பெங்களூர் போனப்பவே சசி குரூப் செமயா குஷில இருந்திருப்பாங்க.. ஆல்டெர்நேட் சி எம் ஆகலாம்னு பிளான் பண்ணி இருப்பாங்க.. 

    சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.

    எவ்வளவு சுருட்டுனாரோ யாருக்குத்தெரியும்? எல்லாம் மக்கள் பணம் தான் அவ்வ்வ்

    அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு

    Youtube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை மட்டும் தேட

    இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது ஆன்லைனில் வீடியோக்கள் பகிரும் தளமாகும். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும்.
    நாம் ஏதேனும் வீடியோவை ஆவலுடன் தேடினால் இதில் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். ஒரு சில வீடியோக்கள் ஆரம்பத்தில் சரியாக போகும் நடுவில் பிரச்சினையை ஏற்ப்படுத்தும். ஆகையால் நாம் தேடும் போதே தரம் மிகுந்த வீடியோக்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என்று இங்கே பார்ப்போம். 

    இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்க தேவையில்லை.

    முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள்.

    உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும்.
    இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். 
    இதில் தரம் மிகுந்த(High Quality) வீடிக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் '&fmt=18' (Stereo, 480 x 270 resolution) இந்த வரியை கொடுக்கவும். 
    அல்லது '&fmt=22' (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.



    (OR)



    உங்கள் வார்த்தைக்கும் இந்த வரிகளுக்கும் இடைவெளி விடவேண்டாம். தொடர்ந்து டைப் செய்யவும். 
    நீங்கள் தேடும் வீடியோக்களில் இந்த தரங்களில் வீடியோ இருந்தால் மட்டுமே உங்களுக்கு வரும் இல்லையேல் NO VIDEOS FOUND என்ற செய்தி தான் வரும். அதற்க்கு கீழே தரம் குறைந்த வீடியோக்கள் வரும் அதில் பார்த்து கொள்ளவும்.

      அவன், இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டான்.

      என் வயது 22. என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினர்; நில புரோக்கர் வேலையும் செய்கிறார். என் அம்மாவுக்கு ரத்தகுழாய் அடைப்பு உள்ளது. மாத்திரை சாப்பிட்டு வருகிறார். நான், பத்தாம் வகுப்பு படித்து முடித்து, தையல் வேலை செய்கிறேன். அக்காவுக்கு திருமணமாகி, ஏழு வருடம் ஆகிறது; ஆனால், குழந்தையில்லை.

      எங்களுடைய பிரச்னை, என் அண்ணன். அவன் ஒரு குடிகாரன்; ஒரு வேலைக்கும் செல்ல மாட்டான். இவனுக்கு திருமணமாகி, இரண்டு வருடமாகிறது. இப்போது அவன் மனைவி, இரண்டு மாத கர்ப்பமாக இருக்காங்க. என் அப்பா வீட்டை விட்டு வெளியே போனவுடன் இவன் வந்து, என் அம்மாகிட்டேயும், என்கிட்டேயும் சண்டை போடுவான். நாங்களும், இவன் இப்படித்தான் என்று விட்டு விட்டோம். ஆனால், இப்ப இரண்டு மாதமாக ஞாயிற்றுக்கிழமை வந்தால் விடமாட்டேங்கிறான். "உன் மகள் மலடி. வாரிசு இல்லாம சாகப் போறீங்க. உன் மகளுக்கு நீ திருமணம் முடிப்பியா பார்ப்போம்...' என்று பேசுவான். பதிலுக்கு நாங்க அழுதுகிட்டே, "ஏண்டா... அடுத்தவங்க பேசுனா, கூட பிறந்தவங்க கிட்ட சொல்லலாம்... நீயே இப்படி சொல்றே...' என்று கேட்டால், அசிங்க அசிங்கமாக பேசுவான். நாங்க வாடகைக்கு குடியிருக்கோம். 

      நாங்க அழறதை அவன் ரசிக்கிறான். அவன் குடியிருக்கும் வீட்டுக்கு நாங்க ஒரு வருடம், வீட்டு வாடகை கொடுத்தோம். அவனுக்கு பெண் எடுத்த வீடு வசதியில்லாதவங்க என்று வாடகை கொடுத்தோம். ஆனா, தன் மருமகளுக்கு மூன்று பவுன் நகை போட்டாங்க என் அம்மா. அவங்க அதை வாங்கி வித்து, அவங்க கடனை அடைச்சுட்டாங்க. நாங்க இவன் சரியில்லை என்று அதை கேட்காம, "அப்ப நீங்க வாடகை கொடுங்க...' என்று சொல்லி விட்டோம். 

      அவங்க நான்கு மாதம், 400 ரூபாய் வாடகை தந்து, அப்ப அப்ப அவங்க மகளுக்கு, 100 - 200 ரூபாய் கொடுத்து, இப்போது, உனக்கு சீர் செய்ய வேண்டும். எங்களால வாடகை தர முடியாது. உன் மாமனாரிடம் கேட்டு வாங்கிக்கொள்...' என்று கூறினர். நானும், என் அப்பாவும் தான் வேலை செய்கிறோம். ரியல் எஸ்டேட் பிசினசில் என் அப்பாவுக்கு எப்போதாவதுதான் பணம் கிடைக்கும். என் சம்பள பணம் ஓரளவு கைக்கொடுக்கும். மற்ற செலவு எல்லாத்தையும் என் அப்பா கடன் வாங்கி செலவு செய்வார். 

      என் அண்ணனின் நடவடிக்கை, என் அம்மாவின் மனதை ரொம்ப காயப்படுத்துகிறது. 

      உங்கள் மூலம் என் குடும்பத்துக்கு ஒரு நல்வழி பிறக்க வேண்டும். என் அம்மா, என் அப்பா என்று சொல்லும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. என் அப்பா நிலைமையில் வேற யாராவது இருந்தா, எங்களை விட்டு போயிருப்பாங்க. என் அப்பா எனக்காகவும், என் அக்கா, என் அம்மாவுக்காகவும் இருக்காங்க. என் அண்ணனுக்கு நீங்கதான் புத்தி சொல்லணும். ஆனால், போலீசுக்கு போக சொல்லாதீங்க. அவன், இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டான். எனக்கு வேற வழி தெரியவில்லை. எனக்கும், என் குடும்பத்திற்கும் நல்வழி காட்டுங்க.

      அன்புள்ள மகளுக்கு—

      உன் அண்ணனுக்கு வயது, 25 - 27 இருக்கும் என அனுமானிக்கிறேன். ஏறக்குறைய உன் அண்ணன், 10 வருடங்களாகவே குடித்து வருகிறான் என நம்புகிறேன்.

      நீண்ட நாள் குடிநோயாளிகளுக்கு கைகால் நடுக்கம், பதட்டம், இல்லாதது போன்ற மாயத் தோற்றம், பிரமை, உருவெளித் தோற்றம் ஏற்படும். இவர்கள் செய்யும் காரியங்களில் புத்திசாலித்தனமும், விவேகமும் இராது. உடல்பலம் இழந்திருப்பர். அன்றாட பிரச்னை களுக்கு தீர்வு காண முடியாமல் திண்டாடுவர். சமுதாயத்தோடு ஒட்டி ஒழுக மாட்டார்கள். பசி இருக்காது. ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். வயிற்றில் புண்ணும், ஈரலில் வீக்கமும் ஏற்படும். ஆண்மைக் குறைபாடு ஏற்படும். பல் பராமரிப்பு இல்லாது பல் நோய் பீடித்திருக்கும். திருமணமானவர்களுக்கு மனைவி மேல் சந்தேகம் கூடும். இவர்கள் குடிபோதையில் வெறியாட்டம் ஆடும் போது, மற்றவர்கள் அருவருப்புடன் விலகுவர். அதை பயம் கலந்த மரியாதை என சந்தோஷப்பட்டுக் கொள்வர். இவர்களுக்கு இதயநோய், நரம்பு தொடர்பான வியாதி, சிறுகுடல் அழற்சி நோய் பாதிப்பு வரும். மிதமிஞ்சி குடிக்கும் போது, ரத்தத்தில் ஆல்கஹால் அளவு கூடி, கோமா நிலை வரும். கோமாவைத் தொடர்ந்து மரணம். இவை அனைத்தும் உன் அண்ணனுக்கு இருக்கும் என நம்புகிறேன்.

      உன் அண்ணன் போன்ற இளம் குடிகாரர்கள், தெருவுக்கு நாலு பேர் உள்ளனர். இவர்கள், டாஸ்மாக் பாரில் சக குடிகாரர்களோடு சண்டை போட மாட்டார்கள். வீட்டிலிருக்கும் அபலைப் பெண்களான அம்மா, அக்கா, தங்கையோடுதான் சண்டை போடுவர். ஏனெனில், இந்த மூன்று பெண்களும் எதிர்த்து பேச மாட்டார்கள், தாக்க மாட்டார்கள்.

      பொதுவாக, ஒரு ஆணோ, பெண்ணோ மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி விட மாட்டார்கள்; வார்த்தைகளை தணிக்கை செய்வர். எந்த உறவுக்கு, என்ன மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்ற அறிவு இருக்கும். குடிபோதையில் தடைக்கட்டு போய் விடும். மிருகத்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக இதயத்தில் குருதி வழியும் அளவுக்கு, சாக்கடை வார்த்தைகளை அள்ளி வீசுவர். இவர்களை திருத்துவது மிகக் கடினம்.

      உன் தந்தை லோக்கல் அரசியலில் ஈடுபட்டு, மகனை ஒழுக்கமாக வளர்க்காமல் போய் விட்டாரோ! தந்தையின் மிதமான குடிப்பழக்கம், மகனுக்கு கடுமையான குடிப்பழக்கமானதோ?

      உன் அக்கா கணவன் துணிச்சல் இல்லாதவர் அல்லது மச்சினனின் துர்நடத்தையை கண்டு வெறுத்து ஒதுங்கியவர் என நினைக்கிறேன்.

      காவல்துறைக்கு போகச் சொல்லாதீர்கள் என எழுதியிருக்கிறாய். நீயோ, அக்காவோ காவல் நிலையம் போக வேண்டாம். உன் அம்மாவை விட்டு, மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொல். உங்களுக்கு சொத்து என்று ஏதாவது இருந்தால், அவனது பங்கை கொடுத்து, தனிக்குடித்தனம் போகச் சொல்லுங்கள். தனிக்குடித்தனம் போவதை எழுத்துபூர்வமாய் எழுதி வாங்குங்கள். அதை மீறி நடந்தான் என்றால், அம்மா, அக்கா, தங்கையை கொல்ல முயற்சிக்கிறான் என புகார் கொடுங்கள். அடியாத மாடு படியாது. தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால், தாங்காமல் ஓடி விடுவான் உன் அண்ணன்.

      உன் அக்காவையும், மாமாவையும் மருத்துவரிடம் அனுப்பி, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள சொல். குணப்படுத்தக் கூடிய குறைபாடு இருவரில் யாரிடம் இருந்தாலும், குணப்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

      நீ தபாலில் பவுண்டேஷன் கோர்ஸ் படி; அதன்பின் பட்டப்படிப்பு படி. அப்பாவை விட்டு நல்ல வரன் பார்க்கச் சொல்லி, நான்கு ஆண்டுகளுக்குப் பின் கல்யாணம் செய்து கொள்.

      உன் தந்தையை அரசியலை உதறிவிட்டு முழு நேர ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகச் சொல்; வருமானம் பெருகும். குடும்பத்தில் சந்தோஷம் பரவும்.

      ஜெயா டிவியை சசி குடும்பத்திடமிருந்து மீட்க ஜெயலலிதா திட்டம்

      அதிமுகவின் எந்த ஒரு மூலையிலும் சசி குடும்பத்தாரின் நிழல் கூட இருக்கக் கூடாது என்ற முடிவில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு அவர்களை துரத்தி விட்டு விட்ட ஜெயலலிதா, அடுத்த இந்தக் கும்பலிடமிருந்து ஜெயா டிவியை மீட்டு அதை சுத்தப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் பல அதிரடி நடவடிக்கைகளில் அடுத்தடுத்து இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

      ஜெயலலிதா லைம்லைட்டுக்கு வந்து முதல் முறையாக முதல்வரான போது அப்போது திமுகவுக்கு பெரும் பக்கபலமாக இருந்தது சன் டிவிதான். இதை உணர்ந்த ஜெயலலிதா அதிமுகவுக்கும் ஒரு டிவி வேண்டும் என்பதற்காக சசி குடும்பத்தார் மூலம் தொடங்கிய டிவிதான் ஜெஜெ டிவி. பின்னர் இது ஜெயா டிவியாக உருமாறியது. 

      ஜெயா டிவியின் நிர்வாகத்தை ஆரம்பத்திலிருந்தே சசிகலா குடும்பத்தினர்தான் கவனித்து வருகின்றனர். ஜெயா டிவியின் அனைத்து நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் அனுராதா. இவர் டிடிவி தினகரனின் மனைவி ஆவார். 

      இந்த டிவியின் கணக்கு வழக்கு, நிர்வாகம், என்ன செய்கிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு எதுவுமே தெரியாது என்கிறார்கள். தனது பெயரில் டிவி வருகிறது, அதில் அதிமுக செய்திகளையும் காட்டுகிறார்கள் என்ற அளவுக்குத்தான் ஜெயலலிதாவுக்கும், இந்த டிவிக்குமான தொடர்பு என்றும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு சசி குடும்பத்தாரின் நாட்டாமை ஜெயா டிவியில் அதிகம் என்பது அதிமுகவினரின் கருத்தாக உள்ளது. 

      தொடங்கி 14 ஆண்டுகளாகியும் இதுவரை மக்கள் மத்தியில் ஜெயா டிவிக்கு என்றொரு நல்ல பாப்புலாரிட்டி இல்லை. மேலும் அதிமுகவினர் மத்தியிலும் கூட இந்த டிவியால் பெரிய அளவில் லாபம் இல்லை என்றும் கூறப்படுகிறது. காரணம், அந்த அளவுக்கு கோக்குமாக்கான நிர்வாகம், சரியில்லாத நிகழச்சிகள், நடுநிலையுடன் கூடிய நிகழ்ச்சிகள் அதிகம் இல்லாதது, ஒளிபரப்பில் தரமில்லாதது என ஏகப்பட்ட குறைகள் ஜெயா டிவியில் உள்ளன. 

      சன் டிவிக்கு இதுவரை ஒரு நொடி கூட கடுமையான போட்டியையோ, பீதியையோ எழுப்பியதில்லை ஜெயா டிவி என்பதிலிருந்தே அந்த டிவியின் தொழில்துறை தரத்தைப் புரிந்து கொள்ளலாம். ஜெயா டிவி இப்படி பொலிவிழந்து கிடக்க முக்கியக் காரணமே சசி கலா குடும்பத்தார் அதை தங்களுக்கு சாதகமான ஒரு பணம் கறக்கும் கருவியாக மட்டுமே பார்த்து நடத்தி வந்ததுதான் என்கிறார்கள் அதிமுகவினர். 

      மேலும் ஜெயா டிவியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் சசி குடும்பத்துடன் கை கோர்த்துக் கொண்டு பெருமளவில் விளையாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அனுராதவும், ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகி ஒருவரும் இணைந்து தனியாக விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள். 

      இதேபோல அதன் செய்திப் பிரிவிலும் கூட ஜெயலலிதா குறித்த செய்திகளை பெருமளவில் குழப்பவே ஒரு தரப்பு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாம். அதாவது ஜெயலலிதா தொடர்பான செய்திகளை குழப்பமாகவே காட்டி மக்களைக் குழப்பி, ஜெயலலிதாவுக்கு மோசமான இமேஜை உருவாக்குவது என்ற சசி குருப்பீன் அஜென்டாவை இவர்கள் நீக்கமற நிறைவேற்றி வருகிறார்களாம். 

      இப்படி ஏகப்பட்ட குழப்பங்களுடன் நடந்து வரும் ஜெயா டிவி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, தரமான டிவியாக மாற்ற ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

      யாரும் இல்லாத நேரத்தில் பள்ளியில் மாணவிகள் சில்மிஷம்!!

      பள்ளியில் மாணவ, மாணவிகள் சில்மிஷங்களில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப் பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி உள்ளது .

      இங்கு 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு ஐந்து மாணவர்கள், 2 மாணவிகள் வந்துள்ளனர். ஊர்க்காரர்கள் கேட்டபோது, ஸ்பெஷல் கிளாஸ் நடக்கிறது. இதற்காக வந்துள்ளோம் என கூறியுள்ளனர்.

      ஆனால் பள்ளியில் ஆசிரியர்கள் ஓருவர்கூட இல்லை. இதனால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மறைமுகமாக கண்காணித்துள்ளனர். அப்போது மாணவர்களும் மாணவிகளும் பள்ளியின் முதல் மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து, போட்டு பார்த்து ரசித்துள்ளனர்.

      இது பற்றி அறிந்த தலைமை ஆசிரியர், சம்பவ இடத்துக்கு வந்தார். தவறாக நடந்துகொண்ட மாணவ, மாணவிகளை பிடித்து விசாரித்தார். பின்னர் மாணவர்கள் ஐந்து பேருக்கும் உடனே டிசி கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், இன்று காலை பள்ளியில் பெற்றோர்கள் குவிந்தனர்.

      பள்ளியில் தவறாக நடந்த மாணவிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

      இளைய தளபதிக்கு ஒரு கடிதம்

      எதிர்கால தமிழக முதல்வரும் , அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மிக கடினமான சோதனைகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்து முனைவர் படம் பெற்று அதை பெருமையாக தன் பெயருக்கு பின்னால் எப்பொழுதும் போட்டு கொள்ளும் இளையதளபதி டாக்டர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, 
      உங்களை பற்றி ஏதாவது எழுதினால் உங்கள் அடி பொடிகள் ஏதோ நாங்கள் பொறாமையில் எழுதுவதாக பிதற்றுகிறார்கள். உங்கள் மேல் பொறாமை படும் அளவுக்கு நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. நீங்கள் ஒரு சினிமா நடிகனாக மட்டும் தங்களை அடையாளபடுத்தி இருந்தால் உங்களை புறக்கணித்து விட்டு நாங்கள் எங்கள் வேலையை பார்த்து கொண்டிருப்போம். ஆனால் ஒரு சமூக ஆர்வலராக , எதிர்கால அரசியல்வாதியாக மாற முயலும் உங்கள் நடவடிக்கைதான் உங்களை பற்றி இப்படியெல்லாம் எழுத தூண்டுகிறது. 

      எனக்கு உங்களின் சினிமாக்கள் பெரும்பாலும் பிடிக்காது (கில்லி ,சிவகாசி மட்டும் விதிவிலக்கு) ,ஆனால் இந்த பதிவு அதை பற்றியது இல்லை. உங்களின் மற்ற இரண்டு பரிமாணங்களான சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆகியவற்றை பற்றிதான் எழுதபோகிறேன். அஜீத் இந்த இரண்டு பரிமானங்களிலும் தன்னை வெளிபடுத்திக்கொள்வதில்லை என்பது எனக்கு சாதகமான விஷயம்தான் என்றாலும் அதற்காக மட்டும் இதை எழுதவில்லை ,சினிமாவில் நடித்து விட்டு ,தனக்கு பின்னால் ஒரு கூட்டம் கூடியவுடன் முதல்வர் கனவுடன் எந்தவிதமான தகுதியும் இல்லாமல் அரசியலில் இறங்க துடிக்கும் உங்களை போன்ற சமூகத்தை கெடுக்கும் கிருமிகளை பார்க்கும் போது சூடு சுரணையுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் எழும் ஆதங்கம் என்னுள்ளும் எழுந்ததே முக்கிய காரணம். 
      நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது மற்ற போராட்டங்களை போல இது ஒரு அரசியல்வாதியின் தலமையிலோ , இல்லை கார்ப்பரேட் முதலாளிகளின் ஸ்போன்சர்ஷிப்பிலோ , ஜாதி தலைவரின் பெயரை கொண்டோ , உங்களை போன்ற சினிமா நடிகனின் சுயநலத்துக்காகவோ இந்த போராட்டம் நடைபெறவில்லை. மக்களே முன்னின்று இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். நம்முடைய காலகட்டத்தில் இவ்வளவு மக்கள் ஒரு பிரச்சனைக்காக ஒன்று கூடி நாம் பார்திருக்க இயலாது.

      நீங்கள் நாகபட்டினத்தில் உங்கள் சுயநலத்திர்க்காக கூட்டிய கூட்டத்தை விட அதிகமான கூட்டம் ஒவ்வொரு நாளும் தேனியில் கூடுகிறது. விஷயம் அதுவள்ள,  இலங்கையில் தமிழன் மீது தாக்குதல் நடந்த போது உண்ணாவிரதமும் , மீனவன் சுடபடுவதற்க்கு கண்டன கூட்டமும் நடத்தி தமிழனின் மீது அக்கறை இருப்பதை போல காட்டி கொண்டீர்கள். அன்னா ஹசாரே மீடியாக்களின் துணையோடு ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்திய பொழுது ஒரு மணிநேரம் மட்டும் அந்த மேடையில் அவரோடு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து போட்டோவுக்கும் ,வீடியோவுக்கும் போஸ் கொடுத்துவிட்டு வந்தீர்கள் . உங்கள் பட வெளியீட்டு நாளிலும் ,உங்கள் பிறந்த நாளிலும் ஏழைகளுக்கு தையல் மெசினும் . கறவை மாடும் இலவசமாக கொடுத்து அதை பேப்பரிலும் ,டிவியிலும் விளம்பரபடுத்தி கொண்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்தீர்கள். ஒன்று உங்கள் அரசியல் பிரவேசத்திர்க்கு ஏழை பங்காளன் என்ற விளம்பரம் , இன்னொன்று இதையே காரணம் காட்டி கள்ளக்கணக்கு எழுதி வருமான வரியில் கொஞ்சம் விலக்கு… அப்பொழுதெல்லாம் மக்களின் நலனை விட மீடியாக்களில் உங்கள் பெயர் பரபரப்பாக அடிபடபட வேண்டும் , மக்கள் மத்தியில் ஒரு சமூக ஆர்வலராக
      உங்களை காட்டி கொள்ள வேண்டும் என்ற முனைப்பில்தான் நீங்கள் இதையெல்லாம் செய்தீர்கள் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டிருந்தது … அதுதான் உண்மையும் கூட. 

      பக்கத்து நாட்டில் தமிழன் அடிபட்ட பொழுது , கூட்டத்தை கூட்டி நான் அடிச்சா தாங்க மாட்ட , உலக வரைபடத்திலிருந்து உன் நாட்டையே தூக்கிடுவேன் என்று சிங்களவனை பார்த்து வீராவேசமாக வசனம் பேசினீர்களே , இன்று சொந்த நாட்டிலேயே தமிழன் உரிமை பிரச்சனைக்காக போராடி கொண்டிருக்கிறானே ,  அவனுக்காக இறங்கி போராடாமல் , அமைதி காப்பது
      ஏன்? சிங்களவனை கண்டித்து நாகபட்டினத்தில் கூட்டம் கூட்டியதை போல ,நமக்கு தண்ணீர் தர மறுக்கும் மலையாளியை கண்டித்து தேனியில் ஒரு கண்டன ஆர்பாட்டம் நடத்த வேண்டியதுதானே?அதில் மலையாளியை பார்த்து நான் அடிச்சா தாங்க மாட்ட ,இந்திய வரைபடத்திலிருந்து உங்க மாநிலத்தையே தூக்கிடுவேன் என்று வாய் சவாடல் விட வேண்டியதுதானே. 

      கண்டிப்பாக முடியாது ,காரணம் சிங்களவனை எதிர்ப்பதால் உங்களுக்கோ உங்கள் படத்துக்கோ எந்த பாதகமும் நேர்ந்துவிட போவதில்லை மாறாக இலங்கை தமிழர்களின் ஆதரவு உங்களுக்கும், உங்கள் படத்துக்கும் அதிகமாகும் . ஆனால் மலையாளியை பகைத்து கொண்டால் உங்கள் படத்தை கேரளாவில் வெளியிட தடை விதிப்பார்கள் , மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யாரும் உங்கள் படத்தை பார்க்கமாட்டார்கள். இப்படி இழப்பு உங்களுக்கு என்னும் பொழுது நீங்கள் எப்படி தமிழனுக்கு ஆதரவாக களம் இறங்குவீர்கள். கண்ணுக்கு தெரியாத ஊழல்வாதிகலையும் , உங்களை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத சிங்களவனையும் எதிர்த்த உங்களால் இப்பொழுது தமிழனுக்காக மலையாளியை எதிர்க்க முடியுமா? அது விளம்பரதுக்கு ஆசைப்பட்டு உயிரையே விட்ட கதையாகி விடும் என்று உங்களுக்கு தெரியாதா? உங்கள் படங்கள் கேரளாவில் அதிகபட்சம் மூன்று கோடி வசூலை கொடுக்குமா? தமிழனுக்காக அந்த மூன்று கோடியை புறந்தள்ளிவிட்டு இறங்கி போராட முடியுமா? அரசியலுக்கு வருவதற்க்கு முன்னரே ஒவ்வொரு விசயத்திலும் சுயநலமாக செயல்படும் நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்துவிட முடியும்? இப்படிபட்ட உங்களை பற்றி நல்லாவிதமாக மட்டுமே எழுத வேண்டும் என்று நீங்களும் உங்கள் அடிபொடிகளும் எப்படி எதிர்பார்க்கலாம்? 

      கடைசியாக இன்று அரசியலில் இருந்து கொண்டு ஊழல் செய்து நாட்டை குட்டி சுவாராக்கி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை விட தன்னுடைய சுயநலத்துக்காக தனக்கு பின்னால் இருக்கும் கூட்டத்தை பயன்படுத்தி எந்த தகுதியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியலில் இறங்க துடித்து கொண்டிருக்கும் உங்களை போன்றவர்கள் தான் மிகவும் அபாயகரமானவர்கள். இவர்களை போன்றவர்களை நம்மால் எல்லாம் திருத்த
      முடியாது,இவர்களுக்கு பின்னால் இருந்து கொண்டு ,இவர்களின் சுயநலதிர்க்கு பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் இவர்களின் தொண்டர்கள் தான் இவர்களை புறக்கணிக்க வேண்டும். ஆனால் சினிமா மாயையில் மூழ்கி கிடக்கும் அவர்கள் இதையெல்லாம் சிந்திக்கவா போகிறார்கள்? 

      சினிமாவும் அரசியலும் அனைவருக்கும் பொதுவானவை, அதில் நுழைய எப்படி ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளதோ , அதை போல அதில் இருப்பவர்களையே விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நான் விஜயை பற்றி விமர்சிப்பதில் ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். நான் அஜீத் ரசிகனாக இருப்பதால்தான் விஜயை விமர்சிகிறேன் என்று சொல்லுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் , விஜய் அந்த அளவுக்கு வொர்த் இல்லை பாஸ்…

      இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர் ?


      இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி ஜெர்சி (30) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பம்மலில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக ஜெர்சி வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. 

      அதே பகுதியில் வசிக்கும் ஆவடி சிறப்பு காவல்படை காவலர் அருண்குமார் (28), ஜெர்சி மீது காதல் கொண்டுள்ளார். ஜெர்சியிடம் இதுபற்றி ஜாடைமாடையாக பேசியுள்ளார். பலமுறை அவரை செல்போனில் படம் பிடித்துள்ளார்.


      கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் அருண்குமார் வீட்டில் இருந்தார். ஜெர்சி வீட்டிலும் யாரும் இல்லை. இதையறிந்த அருண்குமார், ஜெர்சி பாத்ரூமில் குளிக்கும்போது எட்டிப்பார்த்ததோடு, செல்போனில் படம் எடுக்கவும் முயன்றுள்ளார். ஜெர்சி கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அருண்குமாரை அடித்து உதைத்தனர். தடுக்கமுயன்ற அவரது மனைவிக்கும் அடி விழுந்தது.

      தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் அருண்குமாரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்வதை விட்டு விட்டு ‘‘அருண்குமாரை ஏன் அடித்தீர்கள்? அவரது மனைவியை எதற்காக தாக்கினீர்கள்? உடனடியாக எங்களுக்குதானே தகவல் கூறியிருக்க வேண்டும். அருண்குமாரின் மனைவி காயம் அடைந்துள்ளார். எனவே உங்கள் மீதுதான் வழக்கு தொடர வேண்டும்’’ என்று பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதனால் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

      7 ஆம் அறிவு திரைப்பட இயக்குனருக்கு சில கேள்விகள்


      சமூகப் பிரச்சனைகளைத் தொட மறுக்கும் தொடை நடுங்கி திரைப்பட உலகத்தினைக் கடந்து துணிவுடன் விமர்சித்த தமிழன் முருகதாசுக்கு முதலில் வீர வணக்கத்தை செலுத்தி விட்டு இயக்குநர் முருகதாசுக்கு வருவோம்.

      முதல் இருபது நிமிட திரைப்படம் … கடைசி பத்து நிமிட திரைப்படம் .. இரண்டுக்கும் சேர்த்து இயக்குநருக்கு 90/100 வழங்கி விடலாம். இடையில் ஒரு ஒண்றரை மணி நேர திரைப்படத்திற்கு நாம் மைனஸ் 30 தரலாம்.

      90/100 - 30/100 = 60/100



      ஆக மொத்தம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற திரைப்படம் என்ற போதும் இயக்குநர் முன்பு நாம் வைக்கும் கேள்விகள்...



      1. படத்தின் விறுவிறுப்பை உருவாக்கிய சீன உளவாளி நம் தேசத்திற்குள் வருவதற்கு முன் 1 மணி நேர திரைப்படம் ஓடி விடுகிறதே...?




      2. சீன உளவாளி ஒரு காவல்நிலையத்தையே சுக்கு நூறாக்கி விட்ட பின்பும் காவல்துறை அவரை துரத்தாமல் இருப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதே...?




      3. போதி தர்மன் எனும் கனமான பாத்திரத்தை உருவாக்கி விட்டு, சராசரி காதல்... சராசரி காதல் தோல்விப் பாடல்... சராசரி டூயட் ... என்று ஒரு மணி நேர விரயத்தை தவிர்த்து சீன உளவாளியை முன்பே களமிறக்கி... தோழா! தோழா! பாடல் தவிர்த்து அனைத்துப் பாடலையும் நீக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடி இருக்குமே...?




      4. ஊடகங்களும் விமர்சனங்களும் ஆஹா ஓஹோ வென சுருதிஹாசனை உயர்த்தி பிடிக்கும் போது நமக்கு ஓர் விசயம் நினைவுக்கு வருகிறது.




      “சலங்கை ஒலி” திரைப்படத்தில் நடன கலைஞர் (எஸ்.பி.சைலஜா) நடனத்திற்கு கமல் ஒரு விமர்சனத்தை தனது பத்திரிகையில் பதிவு செய்திருப்பார். அந்த விமர்சனத்தைப் பார்த்து எஸ்.பி.சைலஜா கொதித்துப் போய் கமலின் பத்திரிகை அலுவலகம் வந்து பேயாட்டம் போடுவார். பஞ்ச பூதங்களும் முகவரி காட்டும்... என்ற வரியினை சுட்டிக்காட்டி கமல் விளக்கும் காட்சி … திரையரங்கே அதிரும்….




      சுருதிஹாசனின் நிலையும் அதே நிலை... ஆரம்பம் முதல் கடுமையான முயற்சி செய்து பார்த்தும் நடிப்பு வரவில்லை இருந்தும் பார்வையாளர்கள் அறியா வண்ணம் கமல் மீதுள்ள நேசத்தில் இயக்குநர் முழுவதும் வெளியில் தெரியா வண்ணம், சுருதிஹாசன் பாத்திரத்தை சூர்யாவுக்கு நிகராக இயக்குநர் கட்டமைத்து மறைத்து விட்டாரே..?




      5. போதி தர்மனாக எழும் போது சூர்யாவின் கண்களில் உள்ள ஈர்ப்பு, இதர காட்சிகளில் இல்லையே…?




      எது எப்படி இருந்த போதும் ! ஒரு புதுமையான திரைப்படத்தை தமிழருக்கு அளித்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் திரைப்பட கலைஞர்களையும் உச்சி முகர்ந்து பாராட்டியே தீர வேண்டும். குறிப்பாக தமிழ் சார்ந்த வசனங்களில் திரையரங்கே அதிர்கிறது.




      “ஈழத்தமிழர் பிரச்சனை” தேசிய இன கண்ணோட்டம்.




      மொழிவழி தேசியம்...! என தமிழ் திரையுலகம் கண்டிராத புதிய வழியை .. இப்படம் காட்டியுள்ளது. முதுகெலும்பு இருந்தும் தொடை நடுங்கி தமிழ் இயக்குநர்கள் மத்தியில் இயக்குநர் முருகதாஸ் தமிழ் தேசியத் தலைவனின் தம்பியாய் காட்சியளிக்கிறார்