பள்ளியில் மாணவ, மாணவிகள் சில்மிஷங்களில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப் பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி உள்ளது .
இங்கு 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு ஐந்து மாணவர்கள், 2 மாணவிகள் வந்துள்ளனர். ஊர்க்காரர்கள் கேட்டபோது, ஸ்பெஷல் கிளாஸ் நடக்கிறது. இதற்காக வந்துள்ளோம் என கூறியுள்ளனர்.
ஆனால் பள்ளியில் ஆசிரியர்கள் ஓருவர்கூட இல்லை. இதனால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மறைமுகமாக கண்காணித்துள்ளனர். அப்போது மாணவர்களும் மாணவிகளும் பள்ளியின் முதல் மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து, போட்டு பார்த்து ரசித்துள்ளனர்.
இது பற்றி அறிந்த தலைமை ஆசிரியர், சம்பவ இடத்துக்கு வந்தார். தவறாக நடந்துகொண்ட மாணவ, மாணவிகளை பிடித்து விசாரித்தார். பின்னர் மாணவர்கள் ஐந்து பேருக்கும் உடனே டிசி கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், இன்று காலை பள்ளியில் பெற்றோர்கள் குவிந்தனர்.
பள்ளியில் தவறாக நடந்த மாணவிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
|
No comments:
Post a Comment