Tuesday, December 20, 2011

ஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் Group Chat செய்ய


இலவசமாக மெயில் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஜிமெயில் முதல் இடத்தில் உள்ளது. ஜிமெயில் பல வசதிகள் வாசகர்களை கவர்ந்துள்ளது அதில் Chat எனப்படும் அரட்டை பகுதியும் ஒன்று. நம் நண்பர்களுடன் எளிதாக அரட்டை அடிக்கும் வசதியை ஜிமெயில் வழங்கி உள்ளது.

ஜிமெயிலில் ஒரு நண்பருடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது இன்னொரு நண்பர் நமக்கு சாட்டில் அழைப்பார் இந்த நண்பர் நாம் ஏற்கனவே அரட்டை அடித்து கொண்டிருப்பவருக்கும் நண்பராக இருப்பார் அப்படியென்றால் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக அரட்டை அடிப்பதை தவிர்த்து ஒரே க்ரூப்பில் மூன்று பேரும் சேர்ந்து விட்டால் அனைவரும் ஒன்றாக அரட்டை அடிக்கலாம். இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மொபைலில் Conference call உள்ளதல்லாவா அதே தான் ஒரே நேரத்தில் பலருடன் பேசி மகிழலாம்.

இந்த வசதியை உபயோகபடுத்த 

இப்பொழுது நீங்கள் ஜிமெயிலில் யாருடனோ அரட்டையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். 
உங்களுக்கு இன்னொரு நபரை உங்கள் குரூப்பில் சேர்க்க வேண்டுமென்றால் உங்கள் சாட் விண்டோவில் மூன்றாவதாக உள்ள Group chat ஐக்கானை க்ளிக் செய்யுங்கள். 
அதை க்ளிக் செய்தவுடன் வரும் சிறிய கட்டத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் மெயில் ஐடியை கொடுத்து invite பட்டனை அழுத்தவும். 

நீங்கள் invite பட்டனை அழுத்தியவுடன் புதிய நண்பருக்கும் ஏற்க்கனவே அரட்டையில் இருப்பவருக்கும் அழைப்பிதழ் செல்லும் அதை இருவரும் ஏற்று கொண்டால் மூன்று பேரும் ஒன்றாக சேட்டிங்கில் ஈடுபடலாம். 
இன்னொரு நண்பரை சேர்க்க வேண்டும் என நினைத்தாலும் இதே முறையில் சேர்த்து அரட்டை அடிக்கலாம்

    No comments:

    Post a Comment