இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி ஜெர்சி (30) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பம்மலில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக ஜெர்சி வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
அதே பகுதியில் வசிக்கும் ஆவடி சிறப்பு காவல்படை காவலர் அருண்குமார் (28), ஜெர்சி மீது காதல் கொண்டுள்ளார். ஜெர்சியிடம் இதுபற்றி ஜாடைமாடையாக பேசியுள்ளார். பலமுறை அவரை செல்போனில் படம் பிடித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் அருண்குமார் வீட்டில் இருந்தார். ஜெர்சி வீட்டிலும் யாரும் இல்லை. இதையறிந்த அருண்குமார், ஜெர்சி பாத்ரூமில் குளிக்கும்போது எட்டிப்பார்த்ததோடு, செல்போனில் படம் எடுக்கவும் முயன்றுள்ளார். ஜெர்சி கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அருண்குமாரை அடித்து உதைத்தனர். தடுக்கமுயன்ற அவரது மனைவிக்கும் அடி விழுந்தது.
தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் அருண்குமாரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்வதை விட்டு விட்டு ‘‘அருண்குமாரை ஏன் அடித்தீர்கள்? அவரது மனைவியை எதற்காக தாக்கினீர்கள்? உடனடியாக எங்களுக்குதானே தகவல் கூறியிருக்க வேண்டும். அருண்குமாரின் மனைவி காயம் அடைந்துள்ளார். எனவே உங்கள் மீதுதான் வழக்கு தொடர வேண்டும்’’ என்று பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதனால் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.
|
No comments:
Post a Comment