Saturday, November 26, 2011

சன் டிவியின் GRP , TRP தகிடுதத்தம்

சன் செய்திகளை விட புதிய தலைமுறை செய்திகள் சேனல் முன்னிலை வகிப்பதாக ஏ.சி.நீல்சன் சர்வேயின் அடிப்படையில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துக்கொண்டார்கள். அதாரமாக GRP புள்ளிகளை காட்டியிருந்தார்கள்.

பொதுவாக டிஆர்பி என்ற ஒன்றே அதிகம் கேள்விப்பட்டிருப்போம், அது என்ன GRP ?

ஒரு நிகழ்ச்சி அல்லது விளம்பரம் அதிகம் பார்க்கப்படுகிறதா என்பதை டீஆர்பி புள்ளிகள் மூலம் கண்டுப்பிடிப்பார்கள்.

இது எப்படி எனில்,

சேனல் A, சேனல் B இரண்டு சேனல்கள் ஒரு பகுதியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், அப்பகுதியில் 100 வீடுகள், 100 டீ.விகள் இருக்கு. எத்தனைப்பேர் எந்த சேனல் எப்பொழுது பார்க்கிறார்கள் எனப்பார்க்க ஒரு மீட்டர் இருக்கு(மக்கள் மீட்டர்). அத்தனை வீட்டிலும் மீட்டர் வைப்பது சாத்தியம் இல்லை என்பதால் 10 வீட்டுக்கு ஒன்று என 100 வீட்டுக்கு 10 வீட்டில் மட்டும் வைப்பார்கள். இங்கே சாம்பிளிங் ரேட் 10 சதவீதம், எனவே கிடைக்கும் டீஆர்பி புள்ளிகளை 10 ஆல் பெருக்கினால் எத்தனைப்பேர் பார்த்தார்கள் என தெரிந்து விடும்.
சேனல் A, 

10 மீட்டர் வீடுகளில் 8 பேர் பார்க்கிறார்கள் எனீல் 

டீஆர்பி = 8*10=80%

இங்கே ஒரு துணைக்கேள்வியாக ஒவ்வொருவரும் எத்தனைமுறைப்பார்க்கிறார்கள் எனக்கேட்தாக வைத்துக்கொண்டால் GRP வந்து விடும்.

உ.ம்,
ஒவ்வொருவரும் ஒரு முறை என்றால்,8 பேருக்கும் சராசரி= 1+1+1+1+1+1+1+1/8=1

GRP =8*1*10=80 % என்றே வரும்.

சேனல் B :

10 மீட்டர் உள்ள வீடுகளில் 4 பேர் மட்டும் பார்ப்பதாக காட்டினால்,

டீஆர்பி= 4*10=40%

துணைக்கேள்வியாக எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்று கேட்பதற்கு ஒவ்வொருவரும் தலா இரு முறை பார்ப்பதாக கூறுகிறார்கள்,
எனவே, சராசரி 4 பேருக்கு =2+2+2+2/4=2

GRP =4*2*10=80% என வரும்.

8 பேர் பார்க்கும் சேனலுக்கும் GRP 80, 4 பேர் மட்டுமே பார்க்கும் சேனலுக்கும் GRP 80,ஆனால் டீஆர்பியில் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும்!

அதாவது ஒரு சேனல், நிகழ்ச்சியை எத்தனைப்பேர், பார்க்கிறார்கள் என்பதை விட எத்தனை முறை என்ற ,பிரிகுவென்சியை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடுவது தான் GRP புள்ளிகள் ஆகும்.

TRP= TARGET (TELEVISION) RATING POINT,

GRP= GROSS RATING POINT

இதன் அடிப்படையில் நம்பர் 1 என சொல்லிக்கொள்வது ஊரை ஏமாற்றும் தந்திரம்.

பதிவுகளிலேயே பார்த்திருக்கலாம், நல்லப்பதிவர்களின் தரமான பதிவுக்கு பத்து பேர் படித்து பத்து பின்னூட்டம் போட்டு இருப்பார்கள், சில அடாசுப் பதிவுகளுக்கு நான்கு பேர் தான் படித்து இருப்பார்கள் அவர்களே வளைத்து வளைத்து ,மாமா, மாப்ஸ்,மச்சான் என்று பல பின்னூட்டங்கள் போட்டு 100 தாண்டி இருப்பார்கள். பின்னூட்டங்கள் எண்ணிக்கையில் பார்த்தால் 100 க்கு மேல வாங்கியதை தான் தரமானது என்று சொல்ல வேண்டியது இருக்கும், அது தான் சூடான இடுகையிலும் இருக்கும்.ஆனால் தரமான பதிவோ பத்து பேர் படித்து 10 பின்னூட்டம் மட்டுமே வாங்கி இருக்கும், அது முன்னிலையில் இராது.

வெறும் நான்கு பேர்ப்படித்து 100 பின்னூட்டம் சரியா , 10 பேர் படித்து பத்து பின்னூட்டம் சரியா? அப்படிப்பட்ட சர்வே தான் புதிய தலைமுறை நம்பர் 1 என்பதும்.

இது புதிய தலைமுறை சேனலை குறைத்துக்காட்ட சொல்லவில்லை, சன் ஆதிக்கம் தகர்ந்தால் நல்லது தான் ,ஆனால் உண்மையில் அப்படி இல்லை என தெளிவுப்படுத்தவே சொல்கிறேன்.

கமல் அசத்திய 10 படங்கள் - கமல் பைத்தியங்களுக்கு சமர்ப்பணம்

களத்தூர் கண்ணம்மாவில் 1960-ல் அறிமுகம் ஆன கமல் அடுத்த மூன்று வருடங்களில் ஐந்து படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் . பின் ஏழு வருடங்கள் கழித்து 1970-ல் ஜெய்சங்கர் நடித்த மாணவனில் ஒரு பாட்டுக்கு ஆடியவர், 1973 முதல் (அரங்கேற்றம்) - இன்று வரை தொடர்ந்து நடித்து கொண்டுள்ளார். இதில் குறிப்பிட்ட பத்து படங்களை பட்டியலிடுவது சற்று சிரமமான காரியம் தான்.


இந்த படங்கள் நடிப்புக்காக மட்டுமல்லாது இன்னும் பல காரணங்களால் பலரது நெஞ்சில் நிற்பவை. 

1. சலங்கை ஒலி (சாகர சங்கமம்) 

கமலின் படங்களில் எனது All time favourite. இந்த படத்திற்கு பின் தான் கமலை ரசிக்க ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே வயதான கமல் ஷைலஜாவிற்கு அத்தனை வகை நடனங்களையும் ஆடி காட்டுவார்.. அதில் துவங்கி கமலின் கேரக்டர் மீதான பிரமிப்பு கடைசி காட்சி வரை நீடிக்கும். ஒரு காட்சியில் கமல் வழக்கம் போல் குடித்து விட்டு, தான் தங்கியிருக்கும் நண்பன் சரத் பாபு வீட்டுக்கு வருவார். கிருஷ்ண ஜெயந்தி என வாசலிலிருந்து கிருஷ்ணர் கால் வரைந்திருக்க, உள்ளே வர மனம் இன்றி வாசலிலேயே அமர்ந்து விடுவார். அழகான காட்சி இது. போலவே எத்தனை முறை பார்த்தாலும் " தகிட ததிமி" பாடலில் ஜெய பிரதா நெற்றியில் குங்குமம் வைக்கும் காட்சி.. கிளாசிக். 

2. நாயகன்

கமலின் சிறந்த படங்கள் பட்டியலிடும் எவரும் தவற விட முடியாத படம் . ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக இளம் வயது முதல் இறப்பு வரை சொன்னது. கமல் வழக்கமான நடிப்பிலிருந்து பெரிதும் வேறு பட்ட நடிப்பை இந்த படத்தில் காணலாம். ஒவ்வொரு வயது மாறும் போதும் கெட் அப் மாற்றி மேனரிசம் மாற்றி அற்புதமாய் நடித்திருப்பார். மணி ரத்னம் இயக்கம் , இளைய ராஜா இசை, PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து இந்த படத்தை எங்கோ கொண்டு சென்று விட்டது. கமலுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மிக பொருத்தமே. 

படத்தில் எனக்கு பிடித்த காட்சி: இவர் மகன் நிழல்கள் ரவி, இவரை போலவே தாதாவாக மாறும் போது, கமல் அவரிடம் " நாயக்கரே வெத்திலை எடுத்துக்குங்க" என்பார். நிழல்கள் ரவி வெட்கத்தோடு வெற்றிலை எடுத்து கொள்வார். திரை கதை, நடிப்பு அனைத்தும் அசத்திய இடம் இது. 

3. அபூர்வ சகோதரர்கள்

ஒரு சிறந்த மசாலா & entertaining படம் என்றால் இதனை சொல்லலாம். அப்பாவை கொன்றவரை பழி வாங்கும் சாதாரண கதை. ஆனால் இது வரை இந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் ( குறைந்தது நான்கு) .. ஆயினும் அலுக்கவே அலுக்காத படம் இது. குள்ள கமலுக்காக எடுத்த முயற்சிகள், உழைப்பு, அந்த கேரக்டரில் தெரிந்த புத்திசாலித்தனம் (நன்கு யோசியுங்கள் : குள்ள கமல் தான் Actual ஹீரோ; இன்னொரு கமல் பெரும்பாலும் பாட்டுக்கு தான் பயன் பட்டிருப்பார்) கிட்ட தட்ட நிறைவு பகுதியில் வந்தாலும் மறக்கவே முடியாத ஜனகராஜ் காமெடி. கமலின் படங்களில் செமையாய் ஹிட் ஆகி ஓடிய படங்களில் இதுவும் ஒன்று.

4. தேவர் மகன் 

இந்த படத்தை கமலின் நடிப்பு என்பதற்காக இல்லாமல் கமலின் சிறந்த திரைக்கதை, எழுத்தாற்றல் இதற்காக பிடிக்கும். கதையில், அவசியம் இல்லாமல் எந்த காட்சியும் இருக்காது. சிவாஜி, ரேவதி போன்றோர் நடிப்பில் அசத்தினர். கமல் மிக underplay செய்த படம் என சொல்லலாம். வன்முறை வேண்டாம் என வலியுடன் சொன்ன படம்.

5. இந்தியன் 

இந்தியன் தாத்தா ஹீரோ. படத்தில் ரெண்டு ஹீரோயின்களுடன் பெரும்பாலான டூயட் பாடும் சின்ன கமல் தான் வில்லன். இறுதியில் இந்த சின்ன கமலை தந்தையே கொல்கிறார். எத்தனை முரண்கள் பாருங்கள். ஷங்கர் மிக அழகாய் பேக்கேஜ் செய்த படம். கதை, காமெடி, நடிப்பு, பாட்டு என அனைத்தும் சேர்ந்து இப்படி ஒரு படம் அமைவது ரொம்ப கடினம். ஷங்கர் மற்றும் கமல் இருவருக்காகவும் ரசித்த படம் இது. 

6. 16 வயதினிலே 

கமல், ஸ்ரீதேவி ரஜினி மூவரையும் மிக வேறுபட்ட முறையில் பாரதி ராஜா காட்டிய படம். அதிலும் அழகான கமலை எவ்வளவு அசிங்கமாய் காட்டியிருப்பார் !! வெற்றிலை ஒழுகும் வாயும், நடையும், தலை முடியும் இன்னும் மறக்க முடிய வில்லை. பாடல்களும் பின்னணி இசையும் .. ராஜா ராஜா தான்!!

ஆனந்த விகடன் இத்தனை வருட விமர்சனங்களில் இது வரை அதிக மதிப்பெண் தந்தது 16வயதினிலேக்கு தான்; இது வரை எந்த படமும் அதனை முந்த வில்லை. இந்த ஒரு தகவலே போதும் இந்த படம் பற்றி சொல்ல. 

7. மகா நதி 

நிஜத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு கதை. யாருக்கு வேண்டுமானாலும் இப்படி நடக்கலாம். இன்றும் நடந்து கொண்டு தானிருக்கிறது. இது தான் இந்த படத்தோடு நம்மை ஒன்ற வைத்தது. 

இந்த படத்தில் அந்த குழந்தைகள் இருவரும் பிரிந்து ஆளுக்கு ஒரு விதமாய் கஷ்ட படுவதும், குறிப்பாய் பெண்ணை மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் கமல் கண்டெடுத்து கூட்டி வருவதும் நம் மனதில் ஆழமாய் தழும்பை ஏற்படுத்தி போயின. 

" ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பேரும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குதே ஏன்" என்ற கமலின் கேள்விக்கு இன்னமும் நம்மிடம் பதில் இல்லை..( படம் வந்து 20 ஆண்டுகள் ஆகிறது!!)

8. பேசும் படம் 

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல் தான். வசனங்களே இன்றி ஒரு படம்!! யப்பா நினைக்கவே ஆச்சரியமாய் இருக்கும் இந்த ஐடியாவை நிஜமாக்க நிறைய தைரியம் வேண்டும். அது இயக்குநர்க்கும் கமலுக்கும் இருந்தது. படத்தில் யாரும் வேண்டுமென்றே பேசாமல் இருக்க வில்லை. காட்சி அமைப்புகள் அப்படி இருக்கும். சில காட்சிகள் மனிதர்கள் பேசினாலும் அது தூர இருக்கும் ஹீரோவுக்கு கேட்காது. இப்படி போகும் படம். 

அமலா மிக மிக அழகாய் இருந்த காலம் அது. படத்தில் வசனம் தான் இல்லையே ஒழிய சத்தங்கள் நிறைய உண்டு (குறிப்பாய் கமல் குடியிருக்கும் ரூமுக்கு அருகே உள்ள சினிமா தியேட்டர் சத்தம்). நீங்கள் இதுவரை பார்க்கா விடில் இந்த கிளாசிக் படத்தை அவசியம் ஒரு முறை பாருங்கள். படம் முழுதும் சிரித்து விட்டு இறுதியில் மனம் கனத்து போகும். 

9. தசாவதாரம் 

ஒரு முறை பார்த்தால் புரியாத படம். குறைந்தது ரெண்டு முறை பார்த்தால் ஓரளவு புரியும். தனிபட்ட முறையில் எனக்கு கமலை விட அவரது மேக் அப் தான் துருத்தி கொண்டு தெரிந்தது. என்றாலும் கமல் மிக அதிகம் உழைத்த, அதே சமயம் கமர்சியல் வெற்றியும் பெற்ற படம் என்பதால் இந்த லிஸ்டில் சேர்த்துள்ளேன். 

10. அன்பே சிவம் 

இந்த படத்தின் கரு அற்புதம். லியோ டால்ஸ்டாய் சொன்ன மாதிரி " பக்கத்தில் உள்ளவனை நேசி; அது தான் அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" என்பதே இந்த படத்தின் அடி நாதமாயிருந்தது. கமல் விபத்தில் சிக்கி முகம் விகாரமாக காரணமான நாய் மீது கமல் சிறிதும் கோப படாமல் மிகுந்த அன்பு காட்டுவார். கமல் -மாதவன் இடையே நடக்கும் சில உரையாடல்கள் அசத்தும்! டைட்டிலில் இயக்கம் சுந்தர். சி என போட்டார்கள் :)))

முகத்தை மறைக்கும் கண்ணாடி போட்டாலும் கமல் நடிப்பிலும் திரை
கதையிலும் மனதை நெகிழ்த்தினார். அன்பு தான் கடவுள் என்று சொல்லிய அருமையான படம்.

விடு பட்ட படங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கவை : 

மைக்கேல் மதன காமராஜன் 
மூன்றாம் பிறை 

சிப்பிக்குள் முத்து
ஏக் துஜே கேலியே (மரோ சரித்ரா) 
பஞ்சதந்திரம் 

கமலின் எந்த படம் உங்களை ரொம்ப கவர்ந்தது? இந்த பட்டியலில் இருந்தாலும் , இதை தாண்டி இருந்தாலும் பகிருங்கள்! நன்றி !!

ரஜினி நடிக்கும் ராணா - காமெடி கும்மி

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட அடுத்த படம் கே எஸ் ரவிக்குமார் டைரக்‌ஷன்ல ஏ ஆர் ரஹ்மான் இசைல, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்க வரப்போவதா ஒரு நியூஸ் வந்திருக்கு.இதை நியூஸா போட்டா ஏம்ப்பா நீ என்ன நியூஸ் சேனலா நடத்தறே?ன்னு கேப்பாங்க.ஏற்கனவே ஆ ராசா கைது மேட்டரை போட்டதுக்கு கடும் எதிர்ப்பு.அதனால நியூஸை காமெடியாக்கி போட்டிருக்கேன். என்ஜாய்


.1.தலைவர் ரொம்ப அப்பாவின்னு எப்படி சொல்றே?

ரஜினியோட புதுப்படம் ராணா ஷூட்டிங்க் ஈரோடு ராணா கல்யாண மண்டஃபத்துலயா நடக்கும்?னு கேட்டாராம்.
--------------------------------------------------------------------------------------

2. ரஜினியின் ராணா படத்துல 3 கெட்டப்ஸ் அவருக்கு இருக்காம்.

அட, அதை விடுங்க..அந்த 3 செட்டப்ஸ் யாரு..? ( ஜோடிகள்)

--------------------------------------------------

3. ரஜினி ரசிகர்களிலேயே நல்ல நேரம் சதீஷ் ரொம்ப தீவிரமானவர்னு எப்படி சொல்றே?

ராணா படம் இன்னும் பூஜையே போடலை.. அதுக்குள்ள எனக்குப்பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 -ன்னு ஒரு பதிவு போட்டு அதுல ராணாவையும் சேர்த்திருக்காரே,,,
-----------------------------------------------------

4.ரஜினி படங்களுக்கு எப்பவும் யூ சர்ட்டிஃபிகேட்தானே குடுப்பாங்க.?ராணா படத்துக்கு மட்டும் ஏ சர்ட்டிஃபிகேட்டா? ஏன்?

படத்தோட ஹீரோயின் தீபிகா படுகோனே ஆச்சே?

-------------------------------------------------------------

5. பெண்ணுரிமை இயக்கங்கள் எதுக்கு போராட்டம் பண்றாங்க?

தீபிகா படுகோனே தன்னோட பெயரை தீபிகா உட்கார் கோனே என மாத்தனுமாம்.
--------------------------------------------------


6.ராணா படத்துல ரஜினியோட பஞ்ச் டயலாக்கை நெட்ல ரிலீஸ் பண்ணீட்டாங்களாம்.

அப்படியா? என்ன பஞ்ச்?

என் பேரு ராணா.... என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா?பகைச்சுக்காதே வீணா...
------------------------------------

7.ராணா படத்துல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நீக்கிட்டு வேற ஆளை போடனும்னு ரஜினி ரசிகர்கள் போராட்டம் பண்றாங்களா? ஏன்?


அவரு வேலு நாயக்கர் ஃபேமிலினு நாயகன் கமல் ரசிகர்கள் கட்டுக்கதை கிளப்பி விட்டுட்டாங்களாம்.
---------------------------------------------------

8.ரஜினி அரசியலுக்கு வருவார்னு எப்படி உறுதியா சொல்றே?

அரசாங்கமே எனக்கு எதிரானா.... அரசியல் வாழ்வு ஒரு புதிரானா...கலங்க மாட்டான் இந்தராணா... அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசி இருக்காராம் ரஜினி.

-------------------------------------------------------

9 ராணா படத்தோட டைரக்டர் கே எஸ் ரவிக்குமாராமே..?

அப்போ படையப்பா நீலாம்பரியா ரம்யா கிருஷ்ணனை நடிக்க வெச்சது மாதிரி
பச்சையாம்பசு வா ரம்யா நம்பீசனை நடிக்க வெச்சுடுவாருன்னு சொல்லு...

----------------------------------------------

10. என்னய்யா இது படம் இன்னும் பூஜையே போடலை ,அதுக்குள்ள படத்தோட கதை என்னுதுதான்னு ஒரு பன்னாடை கேஸ் போட்டிருக்கு?


தவளைங்கறதுக்கு விலங்கியல் பெயர் (ZOOLOGICAL NAME) ரானா ஹெக்ஸாடாக்டைலா. அந்தாளு RANA HEXADACTYLA அப்படிங்கற டைட்டில்ல ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை சப்மிட் பண்ணி இருக்காரு..சும்மா அவர் பாப்புலர் ஆக அப்படி கேஸ் போட்டிருக்காரு.

பஸ் கட்டண உயர்வும் பதிவு செய்யப்பட வேண்டிய உணர்வுகளும்!

சம்பவம் 1:


சென்னை - ராயப்பேட்டை மருத்துவமனை பேருந்து நிறுத்தம்.. எண் 13 பஸ்சில் ஏறினார், ஒரு நடுத்தர வயதுப் பெண். ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி, தாம் இறங்கும் நிறுத்ததைச் சொல்லி டிக்கெட் கேட்டார். '9 ரூபா குடும்மா' என்றார் கண்டக்டர். 'பஸ்சை நிறுத்துங்க.. உங்ககிட்ட 9 ரூபா குடுக்குறதுக்கு நடந்தே போய்க்கிறேன்,' என்றார் சத்தமாக. அடுத்த நிறுத்தமான உட்லண்ஸ் தியேட்டரில் பஸ் நின்றது. விறுவிறுவென இறங்கிச் சென்ற அந்தப் பெண்ணைக் கண்ட சக பயணிகளிடையே நிசப்தம். முணு முணுப்புகள் தொடங்க சில நொடிகள் ஆனது.

சம்பவம் 2:
கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்த தினம். மாலை 6 மணியளவில் 27டி-யில் ஒரு துப்புறவு தொழிலாளி ஏறினார். காசை நீட்டி, ஸ்டாப் பெயர் சொல்லி டிக்கெட் கேட்டார். டிக்கெட்டை கொடுத்த கண்டக்டர், '11 ரூபாய் கொடுப்பா' என்றார். அதிர்ச்சியுற்ற அந்தத் தொழிலாளி 'இன்னாப்பா இவ்ளோ கேட்குற?' என்று கேட்டபோது, கண்டக்டர் நிதானமாக விளக்கினார். "இன்னாப்பா அநியாயமா இருக்கு. இந்தா இதப்புடி. நாளைக்கு மீதி தர்றேன்," என்று தனக்கு நன்கு தெரிந்த ரூட் கண்டக்டரிடம் உரிமையுடன் கடன் சொன்னார், அந்தத் தொழிலாளி. 

அண்மைக்காலமாக இதுபோன்ற நிகழ்வுகளை பேருந்தில் பயணிக்கும் பலரும் தினம் தினம் கடந்து வருகிறோம். 

கட்டையாகப் பிறப்பதற்கு என்ன காரணம் ?

ஒருவரது கட்டைத் தன்மைக்குக் காரணம் அவரது மரபணுக்களின் போதாமை தான் என ஓர் ஆய்வு கூறுகின்றது. உயரமென்பது குடும்பங்களில் வழிவழியாகத் தோன்றும் ஒரு மரபணு விடயம். ஒருவரின் உயரத்தில் வேறுபாடு இருப்பதற்கு 10 வீதமான குறிப்பிட்ட மரபணுவின் அம்சங்களையே இதுவரை விஞ்ஞானிகள் காரணங்காட்டி வந்தனர்.

ஆனால் மரபணுக்களின் அல்லது DNA இன் வேறு பிரிவுகளின் தவறவிடப்பட்ட விடயங்கள்தான் ஒருவரது உயரத்தில் அரைவாசியளவு தாக்கம் விளைவிக்கின்றன என ஆய்வாளர்கள் தற்போது நம்புகின்றனர்.

மரபணு அசாதாரண நிலைகளே இவ்வாறான மாற்றங்களைக் குறோமோசோம்களிற்கிடையில் செய்கின்றன.

இந்த குறோமோசோம்களில் தான் எங்களது மரபு இணைப்பைக் கொண்டுள்ள அமிலமான DNA இன் ஒன்று அல்லது பல பிரதிகள் காணப்படும்.

சில இடங்களில் இது குறோமோசோம்களிற்கு இடையிலேயே ஒரு தொடர்பினை ஏற்படுத்திவிடும்.

ஆனால் சிலவற்றில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மரபணுப் பிரதிகளின் ஒரு பகுதி அல்லது அதன் முழுப்பிரதியுமே தவறப்பட்டுவிடலாம் அல்லது அதனைப் போன்ற இன்னொன்றைப் போலியாக உருவாக்கிவிடலாம்.

சில மரபணு அசாதாரண நிலைகள் பொதுவானவையாக இருந்தாலும் ஏனையவவை குறிப்பிட்டளவு பேரில் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன.

இவ்வாறான வழமைக்குமாறான அசாதாரண மரபணு மாற்றங்கள் அழிந்த நிலையிலுள்ளவர்களில் மரபணுவின் ஒரு பாகமும் தவறுப்பட்டுவிடும். இவர்கள் தான் உருவத்தில் கட்டையாக வருகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அனைவரிலும் இவ்வாறான சில நூற்றுக்கணக்கான தனித்தனியான மரபணுக்கள் அழிந்த நிலை இருந்தாலும் கட்டையானவர்களில் பல மில்லியன் கணக்கானவை காணப்படுமென்றனர்.

ஒவ்வொரு மில்லியன் அழிவுகளும் ஒருவரின் உயரத்தில் 1/8 அங்குலத்தைக் குறைக்கின்றதென 12,000 பேரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளைக் கொண்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.

மரங்களுக்கு மரணதண்டனை கொடுக்கும் மாநகராட்சி...!



இந்த இரண்டு புகைப்படங்களையும் பாருங்கள்... முதல் படம், 2008-ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அடுத்தப் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டுமே கோயம்புத்தூரிலிருக்கும் அவினாசி சாலைதான். 'எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்' என்று சொல்வது போல் இருக்கிறதல்லவா!

ஆம்... மேடை ஏறினால்... 'மரம் வளர்ப்போம்...' என்று வாய்கிழிய கதறும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும், கீழே இறங்கியதுமே கோடரியைத்தான் கையில் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். 'நான்கு வழிச் சாலை', 'ஆறு வழிச் சாலை', 'சிறப்புப் பொருளாதார மண்டலம்' என்றெல்லாம் ஏதாவது ஒரு பெயரை வைத்துக் கொண்டு... மரங்களைக் கபளீகரம் செய்வது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
இதோ... 'பட்டுப்போன மரங்கள்’ என்று காரணம் காட்டி, கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல நூறு மரங்களை சமீபத்தில் வெட்டிச் சாய்த்திருகிறார்கள். இந்த விஷயம் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கொதிக்க வைக்கவே... வீதியில் இறங்கி போர்க்குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு பசுமை இயக்க அமைப்பாளர் 'கோவை’ மோகன்ராஜ், ''பத்து வருஷத்துக்கு முன்ன கோயம்புத்தூர் மாநகரத்துல பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள், அரசாங்க அலுவலகங்கள், சாலைகள்னு எல்லா இடத்துலயும் ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்துது. வேம்பு, புளி, வாகை, வேங்கை, அரசு, ஆல், பூவரசுனு குளுமை தர்ற மரங்கள்தான் அத்தனையும். அதுல 70% மரங்கள் இப்போ இல்ல. கொஞ்சம் கொஞ்சமா வெட்டி சாய்ச்சுக்கிட்டே இருக்காங்க.

கொஞ்சநாளைக்கு முன்னதான் அவினாசி ரோட்டை அகலப்படுத்துறதுக்காக ஏகப்பட்ட மரங்களை நெடுஞ்சாலைத்துறைக்காரங்க வெட்டினாங்க. மின்சார வாரியத்துக்காரங்களும் தங்களோட பங்குக்கு ஏகப்பட்ட மரங்களைக் காலி பண்ணியிருக்காங்க. கிளைகளை மட்டும் வெட்டத்தான் மின்வாரியத்துக்கு அனுமதி இருக்கு. ஆனா, மரத்தையே காலி பண்ணிடறாங்க.

இப்படி ஆளாளுக்கு வெட்டி... மொத்த ஊரையும் மொட்டையடிச்சுட்டாங்க. இந்த நிலையில மாநகராட்சிக்காரங்களும், 'பட்டுப்போன மரத்தை வெட்டுறோம்’னு சொல்லிக்கிட்டு கோடரியோட வலம் வர்றாங்க. நல்லா இருக்குற மரங்களையும்கூட வெட்டி எடுத்துக்கிட்டுப் போறாங்க'' என்று ஆதங்கப்பட்டார்.

கோவை நீர் நிலைகள் பாதுகாப்பு அமைப்பின் செயலர் சிவகுமார், ''பொது இடங்கள்ல இருக்குற மரத்தை வெட்டணும்னா... கோட்டாட்சியர்கிட்ட அனுமதி வாங்கணும். ஆனா, கோயம்புத்தூர்ல யாருமே அதைக் கடைபிடிக்கிறதே கிடையாது. கலெக்டர் ஆபீஸுக்குள்ள இருந்த ஏகப்பட்ட மரங்களை காரணமே இல்லாம வெட்டியிருக்காங்க. அதுல 100 வயசான பழைய மரமெல்லாம் காலியாகிடுச்சு. அதேமாதிரி பிருந்தாவன் பூங்காவில் இருந்த மரங்களையும் அவசியமே இல்லாம மாநகராட்சிக்காரங்க வெட்டிட்டாங்க. இதுபத்தியெல்லாம் கலெக்டர்கிட்ட மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கலை.

பெங்களூரு, புனே மாதிரியான பெரிய நகரங்கள்ல 'மர பொறுப்பு உரிமைக் குழு’ (ட்ரீ அத்தாரிட்டி கமிட்டி) அமைச்சிருக்காங்க. அதுல வனத்துறை, காவல்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களெல்லாம் உறுப்பினரா இருக்காங்க. யார் மரத்தை வெட்டினாலும் சரி, இந்தக் குழுகிட்ட அனுமதி வாங்கித்தான் வெட்ட முடியும். தகுந்த காரணத்தைச் சொன்னாத்தான் அனுமதி கிடைக்கும். அதுமாதிரி கோயம்புத்தூர்ல மட்டுமில்ல... தமிழ்நாட்டுல இருக்கற எல்லா நகரங்கள்லயும் குழுக்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும். அப்போதான்... இருக்குற மரங்களையாவது காப்பாத்த முடியும்'' என்ற அருமையான யோசனையை முன் வைத்தார்.

இதைப் பற்றியெல்லாம் மாநகராட்சி மேயர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ''பட்டுப்போன மரங்கள் மட்டும்தான் வெட்டப்படுகின்றன. நன்றாக இருக்கும் மரங்களை வெட்டுவது கிடையாது. தேவையில்லாமல் இதுபோல பிரச்னைகளைக் கிளப்புகிறார்கள். அவர்களைவிட இந்த ஊர் மீதும்... இங்குள்ள மரங்கள் மீதும் நூறு மடங்கு அக்கறை எங்களுக்கும் இருக்கிறது'' என்றார்.

ஆனால், செயலில்தான் அந்த அக்கறை வெளிப்படுவதே இல்லை!

DAM 999 டவுன்லோட் செய்ய

DAM 999 டவுன்லோட்  செய்ய கீழே

லிங்க் தரப்பட்டுள்ளது.

பைத்தியம் பிடிக்க வைக்கும் வீடியோ


மனதைப் பைத்தியமாக்கச் செய்துவிடும் அனிமேசன் வீடியோ காட்சிகள் இது. இதனை பார்க்கும் போது நீங்கள் ஒரு நொடி கண்ணிமைத்துவிட்டால் அதற்குள்ளேயே எத்தனை படங்கள் என்று தெரியாமல் மாறிவிடும்.

பிரெஞ்சு அசையும் கிராபிக் கலைஞர் மைக்கல் றெனோட்டினால் இந்த அதிவேகமாக மாறும் கறுப்பு வெள்ளைப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த GIF (Graphics Interchange Format) கோப்பு வடிவமானது 1987இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

இது 1.24 நீளமான வீடியோவின் ஒரு பகுதியாகும். இவை சிறிய சிறிய அனிமேசன்களுக்காகப் பிரபல்யமாகப் பயன்படுத்தப்படுவதாகும்.

1983 இல் உள்ளூர்த் தொலைக்காட்சியின் காலநிலை அறிவிப்புச் செய்தியாளர்களிற்காகப் போட்டியிட்டவர்களின் படங்கள் முதலில் கலங்கலாக ஆரம்பித்துத் தொடர்கின்றன.
இவற்றில் இளையவர்கள்-பெரியவர்கள், சிரிப்பவர்கள்-சிரிக்காதவர்கள், தலைமுடியுள்ளவர்கள்-இல்லாதவர்களெனப் பலதரப்பட்டவர்கள் காணப்படுகின்றனர்.

மென்மையான பெண்கள் பெரிய மீசையுள்ள ஆண்களாக மாறுகின்றனர். இதுபோலவே வயோதிபர்கள் இளைஞர்களாகின்றனர்.

Morphing என்ற தொடர்ச்சியாக மாறும் முறையை இன்னொரு Morphing செய்யப்பட்ட GIF மாதிரியுடனான படத்திற்குள் புகுத்தி இதனை உருவாக்கியுள்ளார்.

இதனை இவர் ஓர் இணையத்தளத்தில் வெளியிட்டபோது அது 12,000 தடவை பார்க்கப்பட்டிருந்தது.

அத்துடன் Reddit மற்றும் Imgur போன்ற இணையத்தளங்களில் இது 8000 வாக்குகளைப் பெற்றதோடு 1 மில்லியன் தடவைகள் பார்வையிடப்பட்டுப் பிரபல்யமாகியுள்ளது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கு - வெளிவராத மர்மங்கள்- வை .கோ திகில் பேட்டி

சென்னை - டெல்லி - குமாரபாளையம் - டெல்லி - கோவை - சென்னை - ஆத்தூர்... நித்தமும் வேறு வேறு ஊர்கள். மூன்று தமிழர்களின் உயிர் காப்பு, முல்லைப் பெரியாறுக்காக உண்ணாவிரதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு, போர்க் குற்ற விசாரணை... வைகோவுக்கு நித்தம் நித்தம் யுத்தம்தான்!


1. ''ஜெயலலிதா, தனது 100 நாட்கள் ஆட்சியைச் சாதனை விழாவாகக் கொண்டாடிவிட்டார். இந்த 100 நாட்கள்பற்றிய உங்களது கருத்து என்ன?''
''இலங்கையைப் போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது, இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும் எனக் கேட்டது, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்றது, மூன்று தமிழர்களின் உயிர் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது என வரவேற்கத் தக்க பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் இந்த 100 நாட்களில் செய்து காட்டிவிட்டார். 

ஆனால், சமச்சீர்க் கல்வி விவகாரத்தில் அவரது அணுகுமுறை தவறானது. ஒருமுறை உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகும், தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் மறுபடியும் டெல்லிக்கு ஓடியது, அவரது பிடிவாதக் குணத்தையே காட்டியது. இது சரியான ஜனநாயக அணுகுமுறை அல்ல!




பொதுவாகவே, இலவசங்களை அறிவித்து ஆட்சியைத் தக்கவைப்பது சரியானது அல்ல. 'உழைப்பே உயர்வு தரும்’ என்று சொல்லி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் உழைக்கும் மனோநிலையைக் குறைக்கும் இத்தகைய இலவசத் திட்டங்களை முதலமைச்சர் குறைக்க வேண்டும். கருணாநிதி இத்தகைய திட்டங்களைக் கொண்டுவந்தபோது விமர்சித்த இன்றைய முதல்வரும், அதையே பின்பற்றுவது தவறானது.


இத்தகைய திட்டங்களால்தான் தமிழகத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், பீகார், ஒடிஷாவில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வேலைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.



தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே நாசமாக்கும் டாஸ்மாக் மது விற்பனையை ஓர் அரசாங்கம் தனது சாதனையாகச் சொல்வது அருவருப்பானது. உழைக்கும் வர்க்கமான இளைய தலைமுறையின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாத அக்கறையற்ற போக்கு எனக்குக் கவலையைத் தருகிறது!''





2. ''திருச்சி மேற்கு தேர்தலைப் புறக்கணிக்கும் ம.தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா?''





''நிச்சயம் போட்டியிடுவோம்! 'ஊழலற்ற உண்மையான உள்ளாட்சி நிர்வாகத்துக்கு உறுதி அளிக்கும் ம.தி.மு.க.’ என்ற முழக்கத்தோடு வரப்போகிறோம். அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு நாங்கள் முயற்சிக்கவும் இல்லை. தி.மு.க - வுடன் கூட்டும் கிடையாது. எங்களை மட்டுமே நம்பி நாங்கள் இருக்கிறோம். 


பண பலம், அதிகார பலம், விளம்பர பலம் மூன்றுமே இல்லாமல், மக்களின் நம்பிக்கையைக் கடந்த ஐந்து மாதங்களில் அதிகமாகப் பெற்றுள்ளோம். ஊழல் கறை படியாதவர்கள் என்ற தகுதி எங்களைத் திரும்பிப் பார்க்கவைக்கிறது. மாற்றுச் சக்தியாக ம.தி.மு.க. வரும். அதை இந்த உள்ளாட்சித் தேர்தல் சொல்லும்!''





3.''ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகளை ஆதரித்து நீங்கள் பேசுவது, அந்தக் கொலையைவிடக் கொடூரமானது என்று காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிக்கிறார்களே?''



''ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தை நியாயப்படுத்தி நான் எந்த இடத்திலும் பேசவே இல்லை. மேலும், அந்தச் சம்பவத்துக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் துளி அளவும் சம்பந்தம் இல்லை. நாங்கள் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றத் துடிப்பது கொலையாளிகளை அல்ல... அப்பாவிகளை. அசைக்க முடியாத ஆதாரங்களைவைத்து, அந்த வழக்கு போடப்பட வில்லை. 


ஜோடிக்கப்பட்ட கதைகளை வைத்து புனையப்பட்ட நாடகம் இது. ஒரே ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன்... பேட்டரி செல்களை வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றச்சாட்டு. பேட்டரி செல் வாங்கினால், எந்தக் கடையிலாவது பில் கொடுப்பானா? அதுவும் 21 ஆண்டுகளுக்கு முன்னால் கொடுப்பானா? சரி, கொடுத்தான் என்றே வைத்துக்கொள்ளுங்கள். மே மாதம் 21-ம் தேதிக்கு முன்னால் தரப்பட்ட அந்த பில்லை, ஜூன் மாதம் 10-ம் தேதி வரை யாராவது சட்டைப் பையில் வைத்திருப்பாரா? கொலைச் சதியில் உடந்தையாக இருந்தவர் என்றால், அவருக்கு இதுவே முக்கிய ஆதாரமாக மாறும் எனத் தெரியாதா? கிழித்துப்போட்டு இருக்க மாட்டாரா? போலீஸ் கைதுசெய்ய வரும்போது, எடுக்க வசதியாக மேல்சட்டையில் வைத்து இருப்பாரா? இப்படி எத்தனையோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட அப்பாவிகளுக்காகத்தான் பேசுகிறோம். இவர்களுக்குக் கொலையிலும் சம்பந்தம் இல்லை.


கொலைச் சதியிலும் பங்கேற்பு இல்லை. இதுதான் உண்மை!





இவர்களைத் தூக்கில் போடக் கூடாது என்று நாங்கள் சொல்வது கொலைக்கான ஆதரவு என்றால், 'இவர்களைத் தூக்கில் போடக் கூடாது’ என்று சோனியா சொன்னாரே, அவர் மீதும் இதையே சொல்வார்களா? 'எனக்கோ, என்னுடைய குடும்பத்துக்கோ, எனது பிள்ளைகளுக்கோ இவர்கள் நால்வரையும் தூக்கில் போட வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை’ என்று 99-ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியிடம், சோனியா சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம்!





நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், தூக்குத் தண்டனைக்கு எதிராக இப்போது கருத்துச் சொல்லி இருக்கிறார். நீதிபதி சொல்வதைத்தான் நாங்கள் சொல்கிறோம். பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி, சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கண்காணித்த அதிகாரி வி.ஆர்.கார்த்திகேயன். அவரும் தூக்குத் தண்டனை அவசியம் இல்லை என்கிறார். கார்த்திகேயன் சொல்வதைத்தான் நாங்கள் சொல்கிறோம். சோனியா உள்ளிட்ட இவர்களையும் கொலைகாரர்கள் என்பார்களா காங்கிரஸ்காரர்கள்?''







4.''ஸ்ரீபெரும்புதூர் தாக்குதலில் இறந்த ராஜீவ் நீங்கலான 16 பேரின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். 'மூன்று பேரையும் தூக்கிலிட்டே தீர வேண்டும்’ என்று அவர்கள் சொல்வதற்கு உங்கள் பதில் என்ன?''





''அவர்களது துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். 'போன உயிர் திரும்பி வரப்போவது இல்லை’ என்று அவர்கள் பேட்டி அளித்து இருப்பதையும் நான் பார்த்தேன். அவர்களைத் தங்களது அரசியல் சுய லாபங்களுக்காக காங்கிரஸ்காரர்கள் தூண்டி விட்டுக் குளிர்காயப் பார்க்கிறார்கள். உச்ச நீதிமன்றம் வழங்கிய தனது தீர்ப்பில், 'இது தனிப்பட்ட ஒரு நபரைக் கொலை செய்ய நடந்த தாக்குதல்தான். 


மற்ற 16 பேர் இறந்தது தற்செயலானது. எனவே, இதை 17 பேர் இறப்புக்குக் காரணமான கொலையாகக் கருத முடியாது. அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இல்லை’ என்று கூறிஉள்ளது. இதை காங்கிரஸ்காரர்கள் படிக்க வேண்டும்.





மும்பையில் 93 பேர் கொலையான சம்பவத் துக்குக் காரணமானவராகச் சொல்லப்படும் அபுசலீம், போர்ச்சுக்கல் நாட்டில் மறைந்து இருந்தார். இந்தியா அவரை ஒப்படைக்கச் சொன்னது. 'உங்கள் நாட்டிடம் ஒப்படைத்தால், அவரைத் தூக்கிலிட்டுக் கொல்வீர்கள்’ என்று தர மறுத்தார்கள். 'நாங்கள் தூக்கில் போட மாட்டோம்’ என்று போர்ச்சுக்கல் அரசுக்கு வாக்குறுதி கொடுத்தது இந்தியா. அது எந்த அடிப்படையில்?





பாகிஸ்தான் அரசு சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்று எந்த அடிப்படையில் இந்தியா சொல்கிறது?





இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்காரர்கள், லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டபோது, ஒரு நிமிடம் கண்ணீர் சிந்தியது உண்டா? இலங்கைப் படுகொலைகளுக்கு காங்கிரஸ் அரசும் பதில் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நெருங்கிக்கொண்டு இருப்பதால், அதைத் திசை திருப்ப மூன்று தமிழர்களைத் தூக்கிலிடத் திட்டமிட்டார்கள். அது நடக்காது.





மக்கள் மன்றம் இதை ஏற்காது என்பதற்கு ஆதரவாக எத்தனையோ போராட்டங்கள் நடந்தன. இதை ஏற்று சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் மகத் தான சாதனையை முதல்வர் செய்துகாட்டிவிட்டார். இனி இருப்பது நீதிமன்றம் மட்டும்தான். ஏராளமான முன்னுதாரணத் தீர்ப்புகளைவைத்து, சட்டரீதியான வாதங் களிலும் வென்று எடுப்போம். தூக்குமரம் முறியும். இவர்கள் மூவருக்காக மட்டும் அல்ல... நிரந்தரமாகவே முறிய வேண்டும்!''




நன்றி விகடன்






சில சந்தேகங்கள், சில கேள்விகள்

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்? 


2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 


3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 


4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன? 


5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்? 


6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா? 


7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?


8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்? 


9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?


10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?








11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா? 




12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.




13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை? 


14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? 




15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை? 




16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு. 

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை? 


18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.


20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?






21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா? 


22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?


23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. 'விசேஷ' இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?


25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? 

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது? 


29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?


30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது? 



31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது. 


32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?


33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்? 


34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?


35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?


36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?


37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை? 


38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?


39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?


40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா? 


41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?


42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா? 


43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?

தூக்கு? - அதிர்ச்சி அரசியல்... திகில் விவரங்கள்

http://www.enayamthahir.com/
''அம்மா, மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் சாவின் மடியில் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள். இத்தனை வருடங்களாக வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும்!'' - கடந்த ஜூ.வி. இதழ் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேரறிவாளன் வைத்திருந்த கண்ணீர்க் கோரிக்கை இது. ஆனால், இந்தக் கண்ணீர் இன்னமும் அரசுத் தரப்பை அசைக்கவில்லை என்பதுதான் துயரம்! 

ஆம்; நடக்கக் கூடாது என நினைத்தது, நடந்தேவிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக்கு ஆளாகி வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய கருணை மனுக்களும் சமீபத்தில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து மூவருக்கும் தூக்கு வேளை நெருங்கிவிட்டதாகப் பரபரப்புக் கிளம்ப, தமிழகம் முழுக்க உருக்கமான கோரிக்கைப் போராட்டங்கள் நடந்தன. இலங்கையின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கண்ணீர்க் கரங்கள் நீண்டன. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிரான சட்ட வடிவத்தை ஜெயலலிதா இயற்றுவார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது.
ஆனால், அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக, சிறைத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதிரவைத்திருக்கிறது தமிழக அரசு. கடந்த 25-ம் தேதி மாலை உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா மூலமாக வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், ''நடவடிக்கை எடுப்பதற்கான கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். நடவடிக்கை எடுத்த பின் உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்பவும்!'' என மிகச் சுருக்கமான முறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மூவருடைய தூக்குத் தண்டனைக்கும் எதிராக நிச்சயம் தமிழக அரசு குரல் கொடுக்கும் என உறுதியாகப் பலரும் நம்பி இருந்த வேளையில், அதிர்ச்சிகரமான இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது?

இது குறித்துப் பேசும் அரசுத் துறையில் உள்ள உணர்வாளர்கள், ''கருணை மனு நிராகரிக்கப் பட்ட கடிதம், கடந்த 16-ம் தேதியே தமிழக அரசுக்கு வந்துவிட்டது. உடனே அரசுத் துறை செயலாளர்கள் அந்தக் கடிதம் குறித்து ஆலோசனை நடத்தி, முதல்வரிடம் தகவல் சொன்னார்கள். 'கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் இது குறித்து எந்த முடிவு எடுப்பதும் சரியில்லை.

அதனால், கூட்டத் தொடர் முடிந்த பிறகு இதுபற்றிப் பேசலாம்!’ என்றார் முதல்வர். அதனால், இப்போதைக்கு இந்த விவகாரத்தில் பயப்பட வேண்டியது இல்லை என்கிற நிலை நிலவியது. இதற்கிடையில், கிருஷ்ணசாமி, சரத்குமார், ஜவாஹிருல்லா, தனியரசு உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் பேச முயற்சித்தார்கள். சீமான் மூலமாகவும் முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை வைக்க முடிவானது. 'முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைப்போம்’ என எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்தில் நெடுமாறன் பகிரங்கமாகவே அறிவித்தார். ஆனால், இதற்கிடையில் எங்கிருந்து உத்தரவு வந்ததோ... அரசுத் தரப்பு அதிகாரிகள் 25-ம் தேதி காலையில் இருந்தே பரபரப்பாக இந்த விவகாரம் குறித்துப் பேசத் தொடங்கினார்கள். முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஃபைல் முதன்மைச் செயலாளர் சாரங்கியின் டேபிளுக்குக் கொண்டுவரப்பட்டது.


'இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உடனே மத்திய அரசின் கடிதத்தை சிறைத் துறைக்கு அனுப்பிவிடுங்கள்’ எனச் சொல்லிவிட்டாராம் சாரங்கி. 'அரசு உத்தரவு வந்த ஏழு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம்’ என சிறைத் துறை அதிகாரி டோக்ரா ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், அரசுத் தரப்பின் இந்த வேகம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. 26-ம் தேதி காலையில் கடிதம் சிறைத் துறைக்குக் கிடைக்க, அடுத்த ஏழு தினங்களுக்குள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றக் கூடும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படாவிட்டாலும், அந்தக் கடிதத்தைக் கிடப்பில் போட்டு வைக்கலாம் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் சிலர் திட்டமிட்டு மத்திய அரசின் பெயரைச் சொல்லி இந்த விவகாரத்தை விரைவுபடுத்திவிட்டார் கள். முதல்வர் நல்லது செய்ய நினைத்தும் அதிகாரிகள் சிலரால் நிலைமை கைமீறிப் போய்விட்டது தமிழக அரசு கைவிரித்துவிட்ட நிலையில், முறைப்படியான சட்டப் போராட்டங்களால் மட்டுமே மூவருக்குமான தூக்குத் தண்டனையைத் தடுக்க முடியும். ஐந்து நாட்களுக்குள் சட்ட ரீதியான தடை உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியாமல் போனால்... மூவருக்கும் எந்த நேரத் திலும் தூக்குக் கயிறு விழும்!'' என்கிறார்கள் ஆதங்கமாக.

அரசுத் தரப்பில் பேசும் அதிகாரிகளோ, ''கொலையானவர் முன்னாள் பிரதமர் என்கிற நிலையில் ஒரு மாநில அரசால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. கொலையாளியை நியாயப்படுத்தும் செயல்பாடாகக் கருதப்பட லாம் என்பதற்காகவே, முறைப்படி கடிதம் சிறைத் துறைக்கு அனுப்பப்பட்டது!'' என்கிறார்கள்.

இதற்கிடையில் சீமான் மூலமாக தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன், முருகன் சாந்தன் மூவரின் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை களம் இறக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட உணர்வாளர்கள் பலரும் ஒன்றுகூடி சட்டப் போராட்டம் நடத்தவும் தீவிர வேலைகள் நடக்கின்றன. 'தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல விவகாரங்களில் நீதிமன்றம் மூலமாக தடை வாங்கிய பல தீர்ப்புகளை முன் உதாரணமாக வைத்து மூவருடைய உயிர்களையும் காப்பாற்ற முடியும்’ என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.

கைவிடப்பட்ட இந்த மூவரின் உயிரை அடுத் தடுத்த சட்டப் போராட்டங்களாவது மீட்டுக் கொடுக்குமா? கண்ணீரோடு காத்திருக்கிறார்கள், கவலைப்பட மட்டுமே தெரிந்த தமிழர்கள்!

தூக்கத்திலும் எஸ் எம் எஸ் அனுப்பும் பெண்கள்

நித்திரையில் குறுஞ்செய்தி அனுப்பும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாகக் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ணைச் சேர்ந்த நித்திரை பற்றி ஆராயும் நிபுணர் ஒருவரினால் கூறப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வானது, நவீன தொழினுட்பத்தில் இளைய தலைமுறையின் தங்கியிருப்பை அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


இருப்பினும், நித்திரையில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்புவது என்பது சாத்தியம் என்பதனை விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லைத்தான்.

அமெரிக்காவின் நித்திரைக்கான சிகிச்சைக் கல்லூரியின் நிபுணர் ஒருவர் குறிப்பிடுகையில் சில இளையோர்களுக்கு இது வாகனம் ஓட்டுவதைப்போல ஊறியிருக்கும் என்றார்.


கைத்தொலைபேசிகள் பல இளையோர்களின் விரல்களைப் போன்ற ஒன்றாகவே ஒன்றிப்போய்விட்டது என பிறிதுதொரு நிபுணர் தெரிவித்துள்ளார். இத்தன்மையை ஒரு தட்டச்சுப் பணியாளரிடமும் காணலாம் என்றார்.


தனது ஆண்நண்பனுக்குத் தான் நித்திரைசெய்த பின்னும் இரண்டு மல்ரிமீடியா குறுஞ்செய்திகளை அண்மையில் ஒரு பெண் அனுப்பியிருந்தார்.


இதற்காக அவர் 11 வித்தியாசமான படிகளைத் தாண்டிச்சென்று அனுப்பியிருந்தார் என்பதும் அதிசயமே.

முக்கிய சேனல்கள் தெரியாததால் முணுமுணுப்பு... - பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு!

- நமது நிருபர்கள்
முதல்வர் ஜெயலலிதா சொன்னது போலவே, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தொடங்கி விட்டார். 'இது அரசின் மிகப்பெரிய வெற்றி’ என்று சொல்லப்பட்டாலும், மக்கள் மத்தியில் ரியாக்ஷன் எதிர்மறையாகத்தான் இருக்கிறது. காரணம், இத்தனை ஆண்டுகளாக மக்கள் பார்த்து பழக்கப்பட்ட... இன்னும் சொல்லப்போனால், பார்க்காமல் இருக்க முடியாது என்றாகிவிட்ட பிரபலமான சில சேனல்கள் இந்த அரசு கேபிள் மூலமாக மக்களுக்குக் கிடைக்கவில்லை.

குறிப்பாக சன் குழுமத்தின் சேனல்கள், விஜய் டி.வி., ஆங்கில செய்தி சேனல்கள், சமீப காலமாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள தமிழ் டிஸ்கவரி உள்ளிட்ட எந்த கட்டண சேனலும் அரசு கேபிளில் ஒளிபரப்பு ஆகவில்லை. இதுதான் மக்களின் அதிருப்திக்குக் காரணம் என்பதை பொதுமக்களிடம் எடுத்த திடீர் கருத்துக் கேட்பு மூலம் நாம் அறிய முடிந்தது. ஆக, அ.தி.மு.க. அரசுக்குத் துவங்கிவிட்டது அடுத்த தலைவலி . இனி மக்களின் மனதைப் பார்ப்போம்... 

அனுராதா ரமணன், சேலம்

''என்னுடைய மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால், அடுத்து வீட்டில் பெரியதாக வேலை ஒன்றும் இல்லை. சன் டி.வி-தான் என்னுடைய ஒரே பொழுதுபோக்கு. காலை 10.30-க்கு 'மகள்’ சீரியலில் ஆரம்பித்து இரவு 10 மணிக்கு 'இதயம்’ சீரியல் வரை விடாமல் பார்ப்பேன். நடுவில் சன் செய்திகள் பார்த்து உலக நடப்புகளையும் தெரிந்து கொள்வேன். இப்போது அந்த சேனல் தெரியவில்லை. பைத்தியம் பிடித்த மாதிரி உள்ளது. எங்களிடம் 100 கூட வாங்கிக் கொள்ளட்டும். எங்களுக்கு பழையபடி அனைத்து சேனல்களும் தெரிய வேண்டும்.''

சூரிய கலா, சேலம்

''எங்கள் குழந்தைகள் டிஸ்கவரி சேனல், அனிமல் பிளானெட் சேனல்களை விரும்பிப் பார்ப்பார்கள். இந்த சேனல்கள் இப்போது ஒளிபரப்பு ஆவது இல்லை. நாங்கள் சன் டி.வி., சன் மியூசிக், ராஜ் டி.வி மற்றும் விஜய் டி.வி. சேனல் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போம். மேலும், இந்த சேனல்களில் தான் புதிய தமிழ்ப் படங்கள் உட்பட நிறைய சினிமாக்கள் போடுவார்கள். ஆனால், இப்போது அதை எல்லாம் பார்க்க முடியவில்லை. மொழி புரியாத வெளி மாநிலச் சேனல்கள் மட்டுமே ஓடுகின்றன. இதை எல்லாம் பார்த்து என்ன பண்ணப் போறோம்?''

தேன்மொழி, கோவை

''கோயமுத்தூர்ல சில இடங்கள்ல எல்லாச் சேனலும் தெரியுது... சில இடங்கள்ல தெரிய மாட்டேங்குது. எங்களுக்கு அரசு கேபிள் நிறுவனம் வரணும்ங்கிறதுல மாற்றுக் கருத்து கிடையாது. ஆனா, அதுல எல்லா சேனலும் தெரியுற மாதிரி வழி பண்ணணும்...''

யசோதா, ஈரோடு.

''இங்க பல இடங்களில 'பே சேனல்கள்’ எதுவும் தெரியலை. இலவச சேனல்கள் எல்லாம் மொக்கை போடுதுங்க. எவ்வளவு நேரத்துக்கு இதையே பார்த்துக்கிட்டு இருக்க முடியும். ஒரு வாரமா எதைத் திருப்பினாலும் மொழி புரியாத அரபு சேனலும், சங்கரா சேனலும்தான் வருது. கட்டண சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அனைத்து சேனல்களும் பார்க்க அரசு வழி பண்ணணும்.''

வள்ளி, கடலூர்.

''எவ்வளவு நேரம்தாங்க பொதிகையையே பார்த்துட்டு இருக்க முடியும்? அரசு கேபிள் நிறுவனம்... குறைந்த கட்டணம் என்பது எல்லாம் சரிதான். அதுக்காக பிடித்த விஷயங்களை பார்க்காம இருக்க முடியுமா? அவசரகதியில முடிவு எடுத்து இருக்காங்க. எல்லாச் சேனலும் பார்க்குற மாதிரி ஏற்பாடு செய்யணும்...''

மாலதி, கடலூர்.

''எங்க ஏரியாவுல சன் டி.வி., கே டி.வி., ஆதித்யா டி.வி., விஜய் டி.வி., சுட்டி டி.வி. எதுவுமே வரலை. வெறும் பொட்டியை வெச்சிக்கிட்டு என்​னாங்க பண்ணுறது? முதல்வரம்மா நல்லது செய்யறேன்னு நினைச்சிட்டு இப்படி பண்ணிட்டாங்கனு நினைக்கிறேன். இதனால மக்கள் அதிருப்திதான் அடைவாங்க... பார்த்துக்கோங்க!''

ஜப்ரூல் ஹக், வேலூர்

''காலையில எழுந்த உடனே சி.என்.என், டைம்ஸ் நவ் சேனல், டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபி சேனல்கள்தான் பார்ப்பேன். என் ரூம்ல நைட் 12 மணி வரைக்கும் எஸ்.எஸ். மியூசிக் ஓடிட்டு இருக்கும். இப்போ எதுவுமே இல்லை. வீட்டுக்கு போகவே கடுப்பா இருக்கு. டிஷ் வாங்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்...''

கனிமொழி, காட்பாடி

''ரெண்டு நாளா தென்றல், நாதஸ்வரம் பார்க்காம இருக்கேன். திருமதி செல்வத்துல செல்வம் என்ன ஆனார்னு தெரியலை. வெளியூர்ல இருக்குற ஃப்ரண்ட்ஸ்கிட்ட போன் போட்டு கேட்குறேன். அவங்களுக்கும் தெரியலையாம். இப்படி திடீர்னு நிறுத்திட்டா என்ன பண்ணுறது? எங்களுக்கு அரசு கேபிளே வேண்டாம். பழையபடி இருந்தா போதும்...''

கவிதா, வேலூர்

''இப்ப 70-க்கு ஹிந்தி, மலையாளம், தெலுங்கு... போதாக்குறைக்கு டி.டி-யின் அத்தனை மொழி சேனலும் வருது. இதை எல்லாம் யார் பார்க்குறது? வீட்டுல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு உர்ர்ன்னு உட்கார்ந்து இருக்கோம். அரசாங்கம் இதே கட்டணத்தில் பழையபடி எல்லா சேனலையும் கொண்டு வரணும். அதுலதான் முதல்வர் ஜெயலலிதாவின் சாமர்த்தியம் இருக்குது!''

குறிப்பு: திருச்சி, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி. தொடங்கப்பட்டாலும் இன்னும் நடைமுறைக்கு வராததால் மக்கள் நிம்மதியுடன் அனைத்து சேனல்களையும் பார்த்து வருகிறார்கள். பிள்ளையார் பிடிக்கப் போய் ஏதோ ஒன்றாக மாறிய கதையாகத்தான் நடக்கிறது.

கார்டு கிரிமினல்களின் புதிய அவதாரங்கள்! - உஷார் ரிப்போர்ட்

ஏ.டி.எம். மையங்களைக் குறிவைத்து நடக்கும் மோசடிகளால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஏற்கெனவே கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எஃப்.சி. போன்ற வங்கி களின் கார்டுகளை வைத்து இருந்தவர்களிடம் நூதன மோசடி செய்த, ஷார்ட்டி என்கிற உமேஷ் என்பவன் தலைமையில் செயல்பட்ட கும்பலை போலீஸ் பிடித்துவிட்டது.

http://www.enayamthahir.com/
ஆனாலும், அவர்கள் திருடிய கார்டுகளின் ரகசியத் தகவல்களை வெளி நாடுகளில் உள்ள கிரிமினல்களிடம் விற்பனை செய்துவிட்டனர். அதனால் இங்கு இருப்பவர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை ஆன்-லைன் டிரான்ஸ்ஃபர் மூலம் கொள்ளை அடிப்பது தொடர்ந்து நடக்கிறது. அதனால் யாரும் பணத்தை இழந்துவிடாமல் இருக்க, 'உடனே பின் நம்பரை மாற்றுங்கள்' என்ற அவசர வேண்டுகோளை சென்னை போலீஸார் விடுத்தனர். கார்டு மோசடி எப்படி எல்லாம் நடந்துள்ளது என்பதை அறிந்து பதறிப் போயிருக்கிறார்கள் போலீஸார்! 
சென்னையைச் சேர்ந்த ஒரு பிரமுகர், 'நான் புதிய கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். கார்டு எனக்கு வந்து சேரவில்லை. ஆனால், எனது கணக்கில் இருந்து 2.5 லட்சம் எடுக்கப்பட்டு இருக்கிறது!’ என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

உடனே அந்த வங்கியை போலீஸ் அணுகியபோது, 'புதிய கார்டை நாங்கள் அந்த வாடிக்கையாளருக்கு கூரியர் தபாலில் அனுப்பிவைத்தோம்' என்றனர். கூரியர் நிறுவன ஊழியர்களிடம், 'ஸ்பெஷல்’ விசாரணை நடத்தவே, உண்மையைக் கக்கிவிட்டனர் அவர்கள். ''கிரெடிட் கார்டை இவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்பது அப்போதுதான் எங்களுக்கு முழுமையாகத் தெரிய வந்தது...'' என்கிறார்கள் போலீஸில்.

''கூரியரில் அனுப்ப கிரெடிட் கார்டு வந்தால், உடனே பாலாஜி என்பவருக்குத் தகவல் சொல் வோம். அவர் நேரில் வந்து, 'ஹாட் ஏர் கன்' எனப் படும் சாதனம் மூலம் தபாலின் கீழ் பாகத்தைப் பிரிப்பார். உள்ளே இருக்கும் கார்டை எடுத்து இன்னொரு மிஷினில் 'ஸ்வைப்' செய்வார். எங்க ளுக்கு ஒரு கார்டுக்கு 1,000 தருவார். மற்றபடி வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது!'' என்று உண்மையைக் கக்கி இருக்கிறார் கூரியரைக் கொண்டுபோய் கொடுக்கும் ஊழியர் ஒருவர். அதையடுத்து கூரியர் ஊழியர்களான ஸ்ரீதர், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். தபால்களைப் பிரித்துக் கொடுக்கும் பாலாஜி, வினோத் ஆகியோர் பிடிபட்டு இருக்கிறார்கள். இவர் களுக்குத் தலைவனாக செயல்பட்ட மனோஜ்குமார் ராஜசேகர் தப்பிவிட்டான். இவனைத் தேடும் பணி நடக்கிறது.

இது தவிர, வேறு ஒரு திருட்டுக் கும்பல் முக்கிய மான இடங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளையும் இதற்குப் பயன்படுத்தி இருக்கிறது. 'ஸ்கிம்மர்' மிஷினை இந்த திருட்டுக் கும்பல் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சில ஊழியர்களிடம் ரகசியமாக கொடுத்து இருக்கிறார்கள். வாடிக்கையாளர் கிரெடிட் கார்டை பங்க் ஊழியர் பயன்படுத்தும்போது, திருட்டுத்தனமாக ஸ்கிம்மர் கருவியிலும் 'ஸ்வைப்' பண்ணிவிடுவார். இந்த வகையில் மோசடி செய்த கும்பலும் இப்போது பிடிபட்டு இருக்கிறது.
கார்டு மோசடி குறித்துப் பேசும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, ''சமீபத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் சில வங்கிகளின் உயர் அதிகாரி களை அழைத்து கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் முன்னிலையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. ஏ.டி.எம். மையங்களில் ரகசிய கேமரா, உரிய பயிற்சி முடித்த இளம் வயது செக்யூரிட்டிகள் நியமனம், சர்ப்ரைஸ் விசிட் போன்றவற்றை அறிவுறுத்தி இருக்கிறோம். மேலும், பணத்தை வாடிக்கையாளர் எடுத்ததும் எஸ்.எம்.எஸ். முறையில் தெரிவிப்பது, போட்டோ ஒட்டிய கார்டுகள் மற்றும் 'சிப்' கார்டுகளைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கி இருக்கிறோம். புதிதாக அனுப்பப்படும் கார்டு, சரியானவாடிக்கையாளரிடம் போய்ச் சேர்ந்ததா என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் அந்த கார்டை ஆக்டிவேட் செய்யவேண்டும். மேலும் ஒரு திருட்டு நடந்துவிட்டால் அடுத்த நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விளக்க வேண்டும். இதை வங்கி தரப்பினரிடம் நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். அதே போல், வாடிக்கை யாளர்களும் உஷாராக இருக்க வேண்டும். அடிக்கடி பின் நம்பரை மாற்ற வேண்டும். கார்டு சம்பந்தப்பட்ட தகவலை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது ஏதாவது சிக்கல் என்றால், சம்பந்தம் இல்லாத நபர்களிடம் உதவி கேட்கக் கூடாது. கார்டு நுழைக்கும் இடத்தில் ஏதாவது ஸ்டிக்கர் போன்ற ஏதாவது புதிய பொருள் தென்பட்டால், அந்த மிஷினைத் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளிலும் கார்டைப் பயன்படுத்தும் வசதியைத் தேவை இல்லாமல் வைத்திருக்க வேண்டாம். ஆன்-லைன் பண பரிமாற்றத்தை உங்களுக்கான வங்கியின் அதிகாரபூர்வ வெப்-சைட்டில் மட்டுமே செய்ய வேண்டும். யாராவது போனிலோ, இ-மெயில் மூலமாகவோ உங்கள் கார்டின் விவரங்களைக் கேட்டால், தரவே கூடாது!'' என்றார்.

வங்கிக் கொள்ளைத் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர், ''பணம் அச்சடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், அதில், மூன்று பாதுகாப்பு அம்சங்களே இருந்தன. இப்போது 13 அம்சங்கள் இருக்கின்றன. ஏனென்றால், கிரிமினல்கள் புத்திசாலித்தனமாக ஒவ்வொரு பாதுகாப்பு அம்சத்தையும் பிரேக் செய்கிறார்கள். அதனால், புதுவிதப் பாதுகாப்பு அம்சங்களை அரசாங்கம் அடிக்கடி அமல்படுத்துகிறது. இப்போது இந்த கிரடிட் கார்டு மோசடியிலும் அதே பாணியில்தான் கிரிமினல்களுக்கும் போலீஸுக்கும் போட்டி நடக்கிறது. வங்கிகளும், வாடிக்கையாளர்களும் எங்களுடன் ஒத்துழைத்தால் எப்படிப்பட்ட கிரிமினலையும் பிடித்து உள்ளே தள்ளிவிட முடியும்...'' என்கிறார்.

வங்கி மற்றும் காவல் துறையுடன் இணைந்து செயல்பட்டால்தான், வாடிக்கையாளர்களது பணம் தப்பும்!

ஏ.டி.எம். உங்கள் அக்கவுன்டில் பணம் குறைகிறதா? - உஷார்!

முன்பெல்லாம் ரொக்கமாகப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள பயப்படுவார்கள். ஆனால் இப்போது டெபிட் கார்டுகளை வைத்திருக்கதான் அதிகம் பயப்பட வேண்டிருக்கிறது! காரணம், சமீப காலமாக பலருடைய பேங்க் அக்கவுன்டில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணம் சூறையாடப்பட்டு விடுவதுதான்!

ஏ.டி.எம். கார்டில் இருக்கும் தகவல்களை 'ஸ்கிம்மர்’ எனும் கருவி மூலம் அபகரித்து, அதைக் கொண்டு போலி கார்டுகளை உருவாக்கி, பணத்தை எடுத்து விடுகிறார்கள் சில சமூக விரோத சக்திகள். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இத்தகைய நவீன கொள்ளைகள் அதிகமாக நடந்து வந்தாலும், மற்ற இடங்களிலும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அதனால் பணத்தைப் பறிகொடுப்பதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இழப்பைச் சந்திக்க வேண்டியதிருக்காது.
கவனிக்க வேண்டியவை..!

வழக்கத்திற்கு மாறாக ஏ.டி.எம். இயந்திரத்தின் முன்பக்கத்திலிருந்து ஏதாவது வயர்கள் வெளியே செல்வதைப் பார்த்தால் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாதீர்கள்.

பின் நம்பரை டைப் செய்யும்போது, அதை யாரும் பார்க்காதபடி மறைத்துக் கொள்ளுங்கள்.

பரிமாற்ற ரசீதுகளை ஏ.டி.எம். இயந்திர அறையிலோ அல்லது அருகிலோ தூக்கி எறியாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.

ஏ.டி.எம். இயந்திரத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு வங்கியைத் தவிர, அறிமுகம் இல்லாத வெளிநபரிடம் எந்த உதவியையும் கோர வேண்டாம்.

ஏ.டி.எம். சென்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மெஷின்கள் இருந்து ஏதாவது ஒன்று வேலை செய்யாமல் இருந்தால், மற்றதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், மற்ற மெஷின்களை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து, 'ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப் பட்ட மெஷினை பயன்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் நமக்கு வலை விரித்திருக்கலாம்.

ஏ.டி.எம். இயந்திரத்தைச் சுற்றி சந்தேகப்படும்படியான விஷயங்கள் அல்லது நடமாட்டங்கள் ஏதேனும் இருந்தாலோ அல்லது உங்களது கணக்கில் நீங்கள் செய்யாத பரிமாற்றங்கள் இருந்தாலோ உங்களது வங்கிக்கும், காவல் துறைக்கும் முதலில் தெரியப்படுத்துங்கள்.

ஓட்டல்கள், கடைகள் போன்ற இடங்களில் பில்லை டெபிட் கார்டு மூலம் செலுத்தும் போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஏனெனில், நீங்கள் கார்டை கொடுத்து விட்டு உட்கார்ந்துவிட்டால், அதை ஸ்கிம்மர் பொருத்திய மெஷினில் ஸ்வைப் செய்தாலும் தெரியாமல் போய்விடும். அதன் மூலம் நம் ஏ.டி.எம். கார்டு தொடர்பான விஷயங்கள் நமக்கே தெரியாமல் திருடு போக வாய்ப்பிருக்கிறது. 

உங்களது செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் உங்களது வங்கி பரிமாற்றங்களை அறிவிக்கும் எஸ்.எம்.எஸ். அல்லது மெயில்களைப் பெறும் வகையில் வங்கியுடன் தொடர்புபடுத்தி வையுங்கள்.

தொலைபேசி மூலம் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு வரும் அழைப்புகளை ஏற்று, விவரங்களைத் தராதீர்கள்.

ஏ.டி.எம். பயன்பாடுகளில் ஏற்படும் இழப்புக்கு உச்சவரம்பு உண்டு. அதுபற்றி வங்கியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதுவரை நாம் பார்த்தது, நம் ஏ.டி.எம். கார்டை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி. இனி பார்க்கப் போவது, ஏ.டி.எம். கார்டால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி.

நமது கார்டின் மூலம் பணம் திருடு போகாமல் இருக்க, ரகசிய எண்ணை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஏ.டி.எம். மெஷின் மூலமாகவே நம்பரை மிக எளிதாக எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். உங்களது பிறந்த தேதி, மாதம், வருடம், மற்றும் வாகன எண்களை பின் நம்பராக கட்டாயம் வைக்காதீர்கள்.

ஏ.டி.எம்-ல் இருந்து நீங்கள் பணம் எடுப்பதை வேறு யாரேனும் உற்றுக் கவனிப்பதாக உங்களுக்குத் தோன்றினால், ஏ.டி.எம். சென்டரில் இருந்து வெளியே வருவதற்கு முன்பு உங்களது பின் நம்பரை மாற்றி விட்டு வெளிவருவது நல்லது.

பணம் வராமல் போனால்..!

ஏ.டி.எம். சென்டருக்குச் சென்று ரகசிய எண்ணை சரியாகப் பதிவு செய்தவுடன், பணம் வந்துவிடும். அப்படி வராமல் கணக்கில் எடுக்கப் பட்டதாக காண்பித்தால், பதற்றப்படாமல் உங்களது வங்கிச் சேவைப் பிரிவிற்கு உடனே போன் செய்து, உங்கள் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண், நீங்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். நம்பர், ஏ.டி.எம். சென்டர் இருக்கும் இடம், பணப் பரிவர்த்தனை நடந்த நேரம், தேதி மற்றும் நீங்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். எந்த வங்கியினுடயது என்ற முழுத் தகவலையும் தெரிவியுங்கள். முடிந்தால் பணம் எடுக்கப் பட்டதாக காட்டும் ரசீதை வங்கியில் கொடுத்தால் உங்களது பிரச்னை இன்னும் வேகமாக தீர வாய்ப்பிருக்கிறது.

ஏ.டி.எம். இயந்திரங்களில் தவறாக கழிக்கப்பட்ட தொகையை, ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏழு நாட்களைத் தாண்டிச் செல்லும் பட்சத்தில் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும் என கூறியுள்ளது.

கார்டு மாட்டிக் கொண்டால்..?

உங்கள் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை மூன்று முறைக்கு மேல் தவறாக டைப் செய்தால், கார்டு மெஷினுக்குள்ளேயே மாட்டிக் கொள்ளும். இப்படி நடந்தால் பதற்றப்படாமல், உங்களது வங்கிச் சேவைப் பிரிவுக்கு உடனே போன் செய்து நடந்ததைச் சொல்லுங்கள். உங்கள் புகாரின் அடிப்படை யில், அந்த கார்டை வேறு யாரும் தவறாகப் பயன் படுத்தாதபடி 'பிளாக்’ செய்து விடுவார்கள். அதன் பின்னர், நீங்கள் வங்கிக்குச் சென்று நடந்த விஷயத்தை விவரமாக எழுதித் தரலாம்.

நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்-ல் உங்கள் கார்டு மாட்டியிருந்தால் ஓரிரு நாட்களி லேயே புதிய கார்டு திரும்பவும் கிடைக்க வாய்ப்புண்டு. மற்ற வங்கியின் ஏ.டி.எம். எனில் குறைந்தது பதினைந்து நாட்களாவது ஆகும். கார்டு தொலைந்தாலும் ஏறக்குறைய இதே நடைமுறைதான். புதிய கார்டு தரும்போது அதற்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன.

ஆன்லைன் பிரச்னையின்போது..!

பொதுவாக ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யும்போது, கார்டு நம்பர், பெயர், கார்டின் முடிவுக் காலம், சி.வி.வி. நம்பர் போன்ற தகவல்களும், பணம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயரும் ஆன்லைனில் உள்ள படிவத்தில் கேட்கப்படும். அதைச் சரியாகப் பூர்த்தி செய்தால் மட்டுமே பணப் பரிமாற்றம் ஒழுங்காக நடைபெறும். தவறான தகவல்களைத் தந்திருந்தாலோ, மாற்றித் தந்திருந்தாலோ பணப் பரிமாற்றம் நடக்காமல் போவதுடன், வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை இழப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.


ஏ.டி.எம். வரலாறு!

ஏ.டி.எம். இயந்திரத்தை உருவாக்கியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்டு பேரோன் (John Shepherd Barron). ஒருமுறை வங்கியிலிருந்து தனது பணத்தை எடுக்க முடியாமல் திணறினார் ஜான் ஷெப்பர்டு. வங்கியின் அலுவலக நேரம் முடிந்ததே இதற்கு காரணம். வங்கியிலிருக்கும் நம் பணத்தை, நாம் விரும்பும்போது எடுக்கும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஜான் ஷெப்பர்டு நினைத்தார். காசு போட்டால் சாக்லேட் தரும் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பணத்தை வழங்கும் ஏ.டி.எம். இயந்திரத்தின் மாதிரியை உருவாக்கினார். அவர் உருவாக்கிய ஏ.டி.எம். இயந்திரம் 1967-ல் வடக்கு லண்டனில் வைக்கப்பட்டது. அதன் பெயர், டிலாரூ (De La Ru) ஆட்டோமேட்டிக் கேஷ் சிஸ்டம்!

அன்றைய ஏ.டி.எம். மெஷினில் பணத்திற்கு விஷேச காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக 14 இலக்கம் கொண்ட ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டும். 14 இலக்க எண்ணை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருப்பதாக ஷெப்பர்டின் மனைவி கரோலின் தெரிவிக்க, எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும்படி நான்கு இலக்க ரகசிய எண்ணை உருவாக்கினார். இன்றுவரை அந்த முறையே தொடர்கிறது.


சமீபத்தில் சென்னையில் நடந்த ஏ.டி.எம். பண அபகரிப்பு குறித்து வங்கி மோசடித் தடுப்பு பிரிவின் உதவி கமிஷனர் ஜான்ரோஸிடம் கேட்டோம். ''சென்னையில் மட்டும் இதுவரை தங்களது ஏ.டி.எம். கார்டிலிருந்து பணம் திருடு போயிருப்பதாக 212 பேர் புகார் செய்துள்ளனர். போலி ஏ.டி.எம். கார்டுகளின் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மூலம் கொள்ளையடிப்பவர்கள் பெரும்பாலும் பெட்ரோல் பங்க், ஓட்டல் மற்றும் பொருள் வாங்கக்கூடிய இடங்களையே குறி வைத்து மோசடி செய்கிறார்கள். அங்கிருக்கும் பணியாளர்களிடம் இவர்கள் தயாரித்த 'ஸ்கிம்மர்’ இயந்திரத்தைக் கொடுத்து, அந்த மெஷினிலும் கார்டை தேய்க்கச் சொல்கிறார்கள். இதற்கு இவர்கள் கொடுக்கும் கூலி கார்டு ஒன்றுக்கு 1,000 ரூபாய். இப்படி தேய்க்கும்போது பின் நம்பர் உள்பட கார்டு குறித்த தகவல்கள் அனைத்தும் அந்த மெஷினில் பதிவாகிவிடுகிறது. இதை வைத்து போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்து பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். ஏ.டி.எம். கார்டின் பின் நம்பரை அடிக்கடி மாற்றினால், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்'' என்றார்.

இப்படியும் ஒரு வழியா!

முறைகேடு செய்ய நினைப்பவர்கள் முன்னதாகவே, ஏ.டி.எம். மெஷினில் கார்டு வெளிவரும் துவாரத்தில், மடித்த துண்டுக் காகிதம் அல்லது பிளாஸ்டிக் அட்டையைக் கொண்டு செயற்கையாக அடைப்பை ஏற்படுத்தி விடுவார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் உள்ளே செலுத்தும்போது சுலபமாகச் சென்ற ஏ.டி.எம். கார்டு வெளியே வராமல் உள்ளேயே தங்கிவிடும். செயற்கை தடையை கவனிக்க இயலாத வாடிக்கையாளர்கள், கார்டு உள்ளே சிக்கிக் கொண்டதாக நினைத்து விடுவார்கள்.

அப்போது வெளியிலிருக்கும் ஒருவர் உதவிக்கு வருவதுபோல வந்து நமது பின் நம்பரை மீண்டும் டைப் செய்யச் சொல்வார்கள். அதன்பிறகு சிறிது நேரம் ஏதேதோ முயற்சிப்பதுபோல நடித்து கார்டு வரவில்லை என்று கைவிரித்து நம்மை அனுப்பிவிடுவார். பின்னர் அவர் நமது கார்டை வெளியே எடுத்து பணத்தை உருவி விடுவார்!


- நாணயம் விகடன்