நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட அடுத்த படம் கே எஸ் ரவிக்குமார் டைரக்ஷன்ல ஏ ஆர் ரஹ்மான் இசைல, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்க வரப்போவதா ஒரு நியூஸ் வந்திருக்கு.இதை நியூஸா போட்டா ஏம்ப்பா நீ என்ன நியூஸ் சேனலா நடத்தறே?ன்னு கேப்பாங்க.ஏற்கனவே ஆ ராசா கைது மேட்டரை போட்டதுக்கு கடும் எதிர்ப்பு.அதனால நியூஸை காமெடியாக்கி போட்டிருக்கேன். என்ஜாய்
.1.தலைவர் ரொம்ப அப்பாவின்னு எப்படி சொல்றே?
--------------------------------------------------------------------------------------
2. ரஜினியின் ராணா படத்துல 3 கெட்டப்ஸ் அவருக்கு இருக்காம்.
அட, அதை விடுங்க..அந்த 3 செட்டப்ஸ் யாரு..? ( ஜோடிகள்)
--------------------------------------------------
3. ரஜினி ரசிகர்களிலேயே நல்ல நேரம் சதீஷ் ரொம்ப தீவிரமானவர்னு எப்படி சொல்றே?
ராணா படம் இன்னும் பூஜையே போடலை.. அதுக்குள்ள எனக்குப்பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 -ன்னு ஒரு பதிவு போட்டு அதுல ராணாவையும் சேர்த்திருக்காரே,,,
-----------------------------------------------------
4.ரஜினி படங்களுக்கு எப்பவும் யூ சர்ட்டிஃபிகேட்தானே குடுப்பாங்க.?ராணா படத்துக்கு மட்டும் ஏ சர்ட்டிஃபிகேட்டா? ஏன்?
படத்தோட ஹீரோயின் தீபிகா படுகோனே ஆச்சே?
-------------------------------------------------------------
5. பெண்ணுரிமை இயக்கங்கள் எதுக்கு போராட்டம் பண்றாங்க?
தீபிகா படுகோனே தன்னோட பெயரை தீபிகா உட்கார் கோனே என மாத்தனுமாம்.
--------------------------------------------------
6.ராணா படத்துல ரஜினியோட பஞ்ச் டயலாக்கை நெட்ல ரிலீஸ் பண்ணீட்டாங்களாம்.
அப்படியா? என்ன பஞ்ச்?
என் பேரு ராணா.... என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா?பகைச்சுக்காதே வீணா...
------------------------------------
7.ராணா படத்துல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நீக்கிட்டு வேற ஆளை போடனும்னு ரஜினி ரசிகர்கள் போராட்டம் பண்றாங்களா? ஏன்?
அவரு வேலு நாயக்கர் ஃபேமிலினு நாயகன் கமல் ரசிகர்கள் கட்டுக்கதை கிளப்பி விட்டுட்டாங்களாம்.
---------------------------------------------------
8.ரஜினி அரசியலுக்கு வருவார்னு எப்படி உறுதியா சொல்றே?
அரசாங்கமே எனக்கு எதிரானா.... அரசியல் வாழ்வு ஒரு புதிரானா...கலங்க மாட்டான் இந்தராணா... அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசி இருக்காராம் ரஜினி.
-------------------------------------------------------
9 ராணா படத்தோட டைரக்டர் கே எஸ் ரவிக்குமாராமே..?
அப்போ படையப்பா நீலாம்பரியா ரம்யா கிருஷ்ணனை நடிக்க வெச்சது மாதிரி
பச்சையாம்பசு வா ரம்யா நம்பீசனை நடிக்க வெச்சுடுவாருன்னு சொல்லு...
----------------------------------------------
10. என்னய்யா இது படம் இன்னும் பூஜையே போடலை ,அதுக்குள்ள படத்தோட கதை என்னுதுதான்னு ஒரு பன்னாடை கேஸ் போட்டிருக்கு?
தவளைங்கறதுக்கு விலங்கியல் பெயர் (ZOOLOGICAL NAME) ரானா ஹெக்ஸாடாக்டைலா. அந்தாளு RANA HEXADACTYLA அப்படிங்கற டைட்டில்ல ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை சப்மிட் பண்ணி இருக்காரு..சும்மா அவர் பாப்புலர் ஆக அப்படி கேஸ் போட்டிருக்காரு.
|
No comments:
Post a Comment