'ஆடுகளம்' படத்தினைத் தொடர்ந்து தனது அடுத்த பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
'வட சென்னை' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் , ஒளிப்பதிவு செய்ய வேல்ராஜ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
படத்தில் யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் 'வட சென்னை' படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் " வட சென்னை படத்தில் தெலுங்கு நடிகர் ராணா ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சின்ன பாத்திரம் தான் என்றாலும் கதையில் முக்கிய பாத்திரம் என்பதால் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். சிம்பு நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 'வட சென்னை' படம் சிட்டியில் கொலைகள் எப்படி நடக்கின்றன என்பது குறித்து சொல்லப்படும் கதை. " என்று கூறியுள்ளார்.
|
No comments:
Post a Comment