Tuesday, December 13, 2011

நாகர்கோவிலில் நேற்று மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா:

உடல் நலக்குறைவுக்காக ஒரு போதும் ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை என உறவினர்கள் பெருமிதம்

 கணவன்- மனைவி இடையே பாச பிணைப்பு இருந்தால் 100 ஆண்டுகளை தாண்டினாலும் இளமை யோடு வாழலாம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் வடசேரியைச் சேர்ந்த ராமன்ஆசாரி- வள்ளி யம்மாள் தம்பதி. நாகர்கோவில் வடசேரி யைச் சேர்ந்த ராமன்ஆசாரி மர வேலைகள் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளியம்மாள். 

கணவருக்கு உதவியாக இருக்கிறார். ராமன்ஆசாரிக்கு 5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஆனால் ராமன்ஆசாரியும், வள்ளியம்மாளும் இன்றும் அந்த பகுதியில் இணை பிரியாத தம்பதிகளாக வலம் வருகி றார்கள். ராமன்ஆசாரிக்கு நேற்று 104 வயது பிறந்தது. இதை சிறப்பாக கொண்டாட அவரது கொள்ளுபேரன்கள் முடிவு செய்தனர். 

இதையடுத்து வடசேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் பிரமாண்ட கேக் செய்து வைக்கப்பட்டிருந்தது. ராமன் ஆசாரி கேக் வெட்டி அதனை அன்பு மனைவிக்கு ஆசையுடன் ஊட்டினார். உறவுகளும், சொந்தங்களும், இதைப்பார்த்து மகிழ்ந்தனர். இது போன்ற வாழ்க்கையை தாங்களும் வாழ்ந்திட அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

இது பற்றி ராமன்ஆசாரியின் மகன் கூறும் போது, எங்களின் தந்தை இதுவரை பல விபத்துக்களில் சிக்கி உயிர் பிழைத்து உள்ளார். மோட்டார் சைக்கிள், பஸ், ரெயில் விபத்தில் கூட சிக்கி இருக்கிறார். இதற்காக மட்டும் ஒரிருநாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் உடல் நலக்குறைவுக்காக ஒரு நாள் கூட அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. மூலிகை மருந்து தான் அவரது உடல் நலனுக்கு காரணம். 

தனது உடல் சோர்வுக்கு மூலிகை மருந்துகளையே பயன்படுத்துவார். அதையும் அவரே தேடி கண்டு பிடித்து மருந்தாக்கி அருந்துவார். அவரது வாழ்க்கை எங்களுக்கு உதாரணம். அது எதிர்கால சந்ததிக்கும் தெரிய வேண்டும் என்று விரும்பியதால் இந்த விழாவை எடுத்தோம். இதில் தந்தையின் கொள்ளு பேரன்கள் பேத்திகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அவரிடம் வாழ்த்து பெற்றோம் என்றார். 

இன்றைய விஞ்ஞான உலகில் ஒவ்வொருவரின் வாழும் காலம் குறைந்து கொண்டே வருகிறது. இதில் பழைய பழக்க வழக்கங்களையும், மூலிகை மருந்து களையும் பயன்படுத்தி இன்னும் சிலர் இது போல வாழ்க்கையை வென்றெடுத்து நீண்ட நாள் வாழ்வது இளைய தலைமுறைக்கு பிரமிப்பூட்டும் நிகழ்வுதான். இதை அனைவரும் பின்பற்றினால் வாழ்க்கை இனிப்பாகும். இதை எடுத்து சொல்ல இந்த குடும்பத்தினர் இன்று அப்பகுதி மக்கள் அனை வருக்கும் அன்னதானமும் வழங்கி மகிழ்ந்தனர். 


சீதை ராவணனால் கற்பழிக்கப்பட்டாளா? ஒரு அருவருக்கத்தக்க ஆராய்ச்சி..

சீதை கற்புடையவளாக எப்படி இருக்கக்கூடும்" என்று ஒரு பகுத்தறிவாளர் ஆராய்ச்சி செய்து இருக்கிறார். தேவையா இந்த ஆராய்ச்சி. சாதாரண ஆராய்ச்சி அல்ல அது, அருவருக்கத்தக்க ஆராய்ச்சி. ஒரு பெண் கற்புடையவளாக இருக்கிறாள் அல்லது இல்லாமல் போகிறாள். அது அவள் பிரச்சனை. பெரிய பெரிய கிரிமினல்களையே கண்டும் காணாமல் வாழ்கிற சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்.
கற்பு அவளது சொந்த விஷயம். நாம் அந்த பெண்ணிற்கு உறவாக இருந்தாலும் கூட, இந்த ஆராய்ச்சி செய்ய யாருக்கும் உரிமை இல்லை. வேலை வெட்டி இல்லாதவர்கள் இப்படி சிந்திப்பது அவர்களது வக்ர தன்மையை காட்டும். நாம் அவர்களை பற்றி பேச வரவில்லை.

"கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது" என்று சொன்னவர், "கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலை மீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண் மக்களை உலகம் முன்னேற்றமடையச் செய்ய முடியாது" என்றும் சொன்னவர். "கற்பு என்பன கூட பெண் அடிமைத்தனத்தை உறுதி செய்யும் கருத்தாக்கங்களே" என்றவர் தான் சீதை எப்படி கற்புடன் இருக்க முடியும் என்று யோசிக்கிறார். சொல்வது ஒன்று, சிந்தனையில் இருப்பது வேறொன்றா.
ஆத்திகம் சீதையின் கற்பை விவாதப்பொருள் ஆக்கி இருந்தால், நாத்திகம் என்ன சொல்லி இருக்க வேண்டும். "போய் வேலைய பாருங்கடா வெட்டி பயல்களா. நாட்டுக்கு இது தான் தேவையா" என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்லவில்லை.

ஒரு பட்டிமன்றம் வைப்பார்கள். "கற்பில் சிறந்தவள் கண்ணகியா... மாதவியா... " என்று. இதில் ஒரு விந்தை என்னவென்றால், தாசியாக சொல்லப் பட்டவரையும், உயர்குடியில் பிறந்தவரையும் ஒப்பிட்டு விவாதம் செய்வார்கள். தாசி குலத்தில் பிறந்தவர் கற்புடனேயே வாழ்ந்தார் என்று கண்ணகியோடு ஒப்பிட்டு உயர்த்தி பிடிப்பார்கள். அதை தமிழரின் மாண்பு, பெண்மை மீது கண்ணியம் போற்றுதல் என்று சொல்லலாம். அதே விவாதத்தை இவர்கள் செய்திருந்தால், "கற்போடு இருந்தவள் கண்ணகியா.. மாதவியா.." என்று விவாதம் செய்திருக்கக்கூடும். அதான் அளவாய் சிந்திப்பவருக்கும், அதிகமாய் சிந்திப்பவருக்குமுள்ள வித்தியாசம் போலும். 

சீதையின் கற்பை பற்றிய ஆராய்ச்சியில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா, "சீதையை ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின்பு ராமன் அந்த மீட்பை அரசியல் காரியத்தை உத்தேசித்து சீதையை மீட்டதாகவும் ராவணன் அனுபவித்ததை தான் அனுபவிக்க முடியாதென்றும் சொல்லி அவளை தனது மனைவியாக ஏற்க மறுத்த சமயத்தில்" சீதை தைரியமாக விளக்கமாக தன்னை ராவணன் அனுபவிக்கவில்லை என்று சொல்லவே இல்லை.

மற்றபடி என்ன சொன்னாள் என்றால் "நான் ஒரு பெண், அபலை, ராவணன் மகா பலசாலி அவனிடம் எனது சரீரம் சுவாதீனமாய் விட்டது. நான் என்ன செய்ய முடியும்? சரீரம் அவனுக்கு சுவாதீனமாய் இருந்தாலும் என் மனம் உன்னிடத்திலேயே தான் இருந்தது" என்று தான் சொன்னாளே ஒழிய மற்றபடி சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்லவே இல்லை. (இது வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.) ஆகவே அந்த முறையில் பார்த்தால் சீதை கற்புடையவளாய் இருந்திருக்க முடியுமா என்பது தான் இந்த வியாசத்தின் கேள்வியாகும்.

சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையை கற்பிப்பதற்கு ஆக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள். "

ராமாயணம் பொய், ராமர்,சீதை எல்லாமே கற்பனை என்போர், ஏன் அந்த கற்பனைக்கு இவ்வளவு உயிர் கொடுக்க போராட வேண்டும்.

தனக்கே தெரியாமல் ஒரு முடிவை சொல்லி விடுகிறார் - இந்த கற்பின் விஷயத்தில். ராவணனை வதம் செய்த ராமனை பழிக்கும் பகுத்தறிவாளர்களுக்கு ஒரு கேள்வி. சீதை கற்பழிக்கப்பட்டாள் என்றால், "ராவணனால் சீதை கெடுக்கப்பட்டார் என்று உறுதியாக நம்பி விவாதம் செய்வதால் - கேட்கிறோம். தன் மனைவியை கெடுத்த ராவணனை அழித்தது எப்படி தவறாகும். தன் மனைவியை கற்பழித்தவனை கொன்றது நியாயமா. நியாயமில்லையா. கற்பழித்தவனை கொல்லுதல் பாவம் என்று, எந்த மதமும் சொல்லவில்லை(பகுத்தறிவாளர்களுக்கு பிடித்த மதமும்). மனிதனும் சொல்ல மாட்டான்..'

நமக்கு ராமனும் தேவையில்லை. ராவணனும் தேவையில்லை. ஒரு பெண்ணின் கற்பு குறித்து எதற்கு அதீத ஆராய்ச்சி என்ற கேள்வியின் பலனாக, பெண்மையின் குரலாக பதிவானது இந்த பதிவு.

கடைசியாக, இந்த வருஷமும் திராவிடத்தின் சின்னத்தம்பி கன்னடம், காவிரியில் நீரை விடாது பகுத்தறிவாளர்களுக்கே பட்டை நாமம் சாத்தியுள்ளது. திராவிடத்தின் மீட்சிக்காக உழைக்கும் திராவிடர்களே, தமிழகத்தின் விவசாயிகளின் மீட்சிக்காகவும் உழையுங்கள். அதை தான் தமிழகம் எதிர்பார்க்கிறது. சீதையின் கற்போடு இருந்தாளா இல்லையா என்பதை பற்றி அல்ல.

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு

இந்தப்படத்தின் நோக்கம்
நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினை.

முதலில் இந்த குறும் படத்தை எழுதி,இயக்கிய நமதூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

படம் தரும் படிப்பினை
பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் தஸ்லீமா.இந்த இருவர்தான் கதையின் கதாபாத்திரங்கள்.

அந்நிய ஆண்களுடன் பழகுவதினால் ஏற்படும் விளைவுகள் மிக கொடுரமானதாக இருக்கும் என்பதை மிக அருமையாக காட்டி உள்ளார் இயக்குனர் ரபீக் அவர்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் என்ற பெயரில் அதிக சுதந்திரம் கொடுப்பதினால் ஏற்படும் விளைவுகள், மிஸ்ஸிடு கால்களினால் மிஸ்ஸாகி போகும் பெண்களின் வாழ்க்கை என பெற்றோருக்கு அறிவுரை கூறும் படமாக உள்ளது

2011 இல் ஹிட்டான பாடல்கள்-தரவரிசை


டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்


புத்தாண்டிற்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் இந்த வருடத்து சிறந்த பாடல்களின் தொகுப்பு இது. 

பத்து பாடல்கள் மட்டுமே என்பதால் பிறை தேடும் இரவிலே ( மயக்கம் என்ன) டியோ டியோ டோலே (அவன் இவன்) உள்ளிட்ட பாடல்கள் லிஸ்டில் இடம் பெறாமல் போகிறது. 1 , 2 , 3 என எந்த ரேங்கிங்கும் இன்றி இந்த வருடத்தின் சிறந்த பத்து பாடல்கள் இதோ.. 

நீ கோரினால் (180 )

மதன் கார்க்கியின் பாடல் வரிகளுக்கு புது இசை அமைப்பாளர் ஷரத் இசை அமைத்துள்ளார். அட்டகாசமான மெலடி தந்தமைக்கு வெல்டன் ஷரத் !

நீ கோரினால் வானம் மாறாதா?
தினம் தீராமலே மேகம் தூறாதா? என்று ஆண் துவங்க 


தீயே இன்றியே நீ என்னை வாட்டினாய் 
உன் ஜன்னலை அடைத் தடைத்து ஓடாதே 

என்று பெண் தொடருவார். 

"நநநநநந " என பாட்டின் துவக்கத்திலும் இறுதியிலும் வரும் ஹம்மிங் Very catchy !

இந்த பாடலின் சிறப்பே மிக வித்யாசமான மெட்டு தான். மெதுவாகவும், பின் திடீரென்று வேகமாகவும் போகும் இந்த பாட்டு.

எனக்கு தெரிந்த பல யூத்துகளின் ரிங் டோனாக இந்த பாடல் இருந்ததே இந்த பாடலின் வெற்றிக்கு சாட்சி !

கேட்க மட்டுமன்றி பார்க்கவும் இந்த பாட்டு நன்றாகவே இருக்கும். Thanks to ஹீரோயின் ப்ரியா ஆனந்த் !




சொட்ட சொட்ட நனைய வைத்தாய் / மாசமா (எங்கேயும் எப்போதும்)

இந்த இரண்டு பாடல்களையும் சேர்த்தே தான் சொல்ல வேண்டி உள்ளது. மாசமா பாட்டு மிக எளிமையான மெட்டு, இசை, பாடல் வரிகள். But very attractive and effective ! தோள் அசைப்பை வைத்தே இந்த பாட்டை மிக மிக ரசிக்கும் விதத்தில் படமாக்கிய குழுவிற்கு ஒரு பூங்கொத்து !

சொட்ட சொட்ட நனைய வைத்தாய் ரொம்ப அழகிய மெலடி. கேட்கும் போதே மனதை என்னமோ செய்கிறது. இவை தவிர "கோவிந்தா..கோவிந்தா" என இன்னொரு ஹிட் பாடலையும் தந்த புது இசை அமைப்பாளரிடம் அடுத்தடுத்த படங்களில் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் !

யாரது (காவலன்)

விஜய் நடித்து இவ்வருடம் வெளி வந்த இரு படங்களிலும், படம் பார்த்த பிறகு பாடல்கள் ரொம்பவே பிடித்தது. அவற்றில் ஒரே பாட்டை சொல்ல வேண்டுமெனில் இந்த பாட்டை தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜனவரியில் வந்த இப்பாட்டை வருடக்கடைசி வரை, தொடர்ந்து மிக அடிக்கடி கேட்கிறேன். அப்படி ஏதோ இந்த பாட்டில் இருக்கிறது. குறிப்பாக மெட்டு ....Beautiful ! படமாக பார்க்கும் போதும் விஜய் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் படி உள்ளது. 



ஏழாம் அறிவு - இன்னும் என்ன தோழா 

படம் வெளியாகும் முன்பே அனைவர் மனதிலும் இடம் பிடித்த பாடல் இது. உலகெங்கும் உள்ள ஈழ தமிழர்களுக்கு இந்த பாட்டை சமர்ப்பிப்பதாக ஹாரிஸ் ஜெயராஜ் சொல்லியிருந்தார். பாடல் வரிகளும் அவர்களுக்கு மிக பொருந்துவதாகவே இருந்தது. "வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே" என்கிற வரிகளோடு அனைவராலும் ஒன்ற முடிந்தது.

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!


விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?



படமாக்கிய விதத்தில் சற்று ஏமாற்றம் தான் எனினும், இத்தகைய நல்ல பாடலை தந்தமைக்கு ஹாரிஸ் ஜெயராஜ், பா. விஜய் மற்றும் முருக தாசுக்கு நன்றி !!

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ (எங்கேயும் காதல்)

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
பாடல் வரிகள்: மதன் கார்க்கி

ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான மெலடி. டிபிகல் ஹாரிஸ் பாட்டு தான் என்றாலும், ஹாரிஸ் எப்படி மியூசிக் போட்டாலும் அநேகமாய் எனக்கு பிடித்து விடுகிறது.

இந்த பாட்டின் மெட்டு ஒரு ஊஞ்சல் போல் அங்கும் இங்கும் ஊசலாடும். அது தான் பாட்டின் அழகே. பாட்டிற்கு பின்னணி இசையில் தபேலா போன்ற வாத்தியங்கள் உபயோகம் செய்துள்ளது சற்று வித்யாசமாக உள்ளது. ஹரீஷ் ராகவேந்திரா மற்றும் சின்மயி பாடிய இந்த அருமையான பாட்டை கேட்டு பாருங்கள்



விழிகளிலே விழிகளிலே (குள்ள நரி கூட்டம்)

இசை செல்வகணேஷ்
பாடல் ஆசிரியர்: நா. முத்து குமார்
பாடியவர்கள் சின்மயி & கார்த்திக்

இந்த பாடல் கேட்க கேட்க தான் பிடிக்க ஆரம்பித்தது. குறிப்பாய் படம் பார்த்ததும் ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது. ஹீரோயின் ரம்யா நம்பீசனின் கண்களும், குட்டி குட்டி சிரிப்பான சம்பவங்களும் சேர்ந்து இப்பாடலை நன்கு என்ஜாய் செய்ய வைக்கிறது



அமளி துமளி (கோ)

மற்றொரு ஹாரிஸ் ஜெயராஜ் மெலடி. இந்த பாட்டின் மெட்டு ஒரே கோட்டில் இல்லாமல் வெவ்வேறு விதமாய் செல்வது தான் பாடலை மிக ரசிக்க வைக்கிறது. KV ஆனந்த் இந்த பாடலை இது வரை நாம் பார்த்திராத, மிக அரிதான, eye catching லொகேஷன்களில் படமாக்கியிருந்தார். இதே படத்தின் என்னமோ ஏதோ தான் பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். எனக்கும் அந்த பாடல் பிடிக்கும் என்றாலும், இந்த பாடலில் இருக்கும் ஏதோ ஒரு அழகு இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது !




ஆரிரோ.. ஆராரிரோ (தெய்வ திருமகள்) 

இந்த படமே ஒரு "Copy cat" படம் என நிறையவே கோபம் உள்ளது. ஆனாலும் இந்த பாட்டை ரசிக்காமல் இருக்க முடிய வில்லை. காரணம் பாட்டு அப்பா -பெண் உறவை பற்றி சொல்வதால்.  ! வெறும் டூயட்களே வரும் திரை உலகில் இத்தகைய பாடல்கள் மிக அபூர்வம் தான் ! எனக்கும் என் பெண்ணுக்கும் மிக பொருந்துவதால் இந்த பாடல் ரொம்பவே ஸ்பெஷல். 

அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

கேட்கும் போதே சில நேரம் நமக்கும் விழிகளில் ஈரம் வர வைக்கும் வரிகள் !



இதே படத்தில் வரும் "விழிகளில் ஒரு வானவில்  " கேட்க அல்ல, பார்க்க மிக பிடித்த பாடல். :))

சார காத்து (வாகை சூட வா)

இந்த வருடம் தேர்ந்தெடுத்துள்ள பத்து பாடல்களில், இந்த பாடலையும் சேர்த்து எத்தனை பாடல் சின்மயி பாடியது பாருங்கள் ! உண்மையில் வரிசை படுத்தும் போது தான் சில பாடல்கள் சின்மயி பாடியது என்பதையே அறிந்தேன். தமிழில் டாப் பாடகிகளில் சின்மயி நிச்சயம் செம உயரத்தில் இருக்கிறார் ! இந்த பாட்டும் சரி படமாக்கிய விதமும் சரி செம அழகு. குறிப்பாக ஒளிப்பதிவு.. மீன் துள்ளி நீரில் விழுவதை ரொம்ப அழகாய் காட்டிய ஒளிப்பதிவாளர் யார்னு தெரியலை. Very Well done !



அய்யய்யோ நெஞ்சு அலையுதடி / யாத்தே, யாத்தே (ஆடுகளம்)

இசைக்கு வயது கிடையாது என்பதை SPB இந்த வருடம் இரண்டு பாடல்கள் மூலம் மீண்டும் உறுதி படுத்தினார். தன் மகன் SPB சரணுடன் இணைந்து பாடிய இந்த பாட்டு அட்டகாசம். பாட்டில் மெட்டு, மென்மையான குரல், உறுத்தாத இசை என அனைத்துமே அற்புதமாக உள்ளது. ஆண் குரலில் எது SPB , எது சரண் என்று பிரித்து அறிய முடியா விட்டாலும், பாடலை ரசிப்பதை அது தடை செய்ய வில்லை. பாடலை வெற்றி மாறன் படமாக்கிய விதமும் செம கியூட். தனுஷ் சாப்பிட்டு முடித்து விட்டு தன் சட்டையில் ஈர கையையும், வாயையும் துடைத்து கொள்ள, அதை பார்க்கும் ஹீரோயினும் தயங்கியவாறு தன் உடை மேல் கையை துடைத்து கொள்வது கவிதை.



இதே ஆடு களத்தில் " யாத்தே யாத்தே" பாட்டும் கேட்க மட்டுமன்றி பார்க்கவும் அழகாக இருந்தது.
***
உங்களுக்கு பிடித்த பாடல் இதில் இருந்தால் சொல்லுங்கள். இல்லா விடினும், உங்களுக்கு பிடித்த விடுபட்ட பாடல் எது என்பதை குறிப்பிடலாம் !

கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி


டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி, கள்ளக் காதலன் ஆகிய இருவரையும், போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாண்டியன் (32). அவருக்கு, மனைவி வெண்ணிலா (27), மகள்கள் பிரியா (11), கலைவாணி (9), தர்ஷினி (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

புத்திரகவுண்டன்பாளையம் வாரச்சந்தை அருகில் உள்ள நீரோடையில், ரத்தக் காயங்களுடன், பாண்டியன் இறந்து கிடந்தார். தகவலறிந்த ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், பாண்டியனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாண்டியனின் மனைவி வெண்ணிலாவுக்கும், உறவினர் பாலா (எ) பாலமுருகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்த பாண்டியன், மனைவியை தட்டிக் கேட்டுள்ளார். அதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவி திட்டமிட்டுள்ளார். பின், கள்ளக்காதலன் பாலமுருகனுடன் சென்று, பாண்டியன் மீது கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்து, ஓடையில் வீசியது தெரியவந்தது.

ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெண்ணிலா, கள்ளக் காதலன் பாலமுருகன் (30) இருவரையும் கைது செய்தனர். பின், ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

நடிகைக்கு முத்தம் கொடுக்க ரத்தம் வர கன்னத்தைக் கடித்து எடுத்த நடிகர்

டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்

கன்னத்தில் ரத்தம் வரும் அளவுக்கு ஹீரோயின் கன்னத்தில் ஹீரோ கடித்ததால் ஷூட்டிங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


ஜே.கே.கிரியேஷன் தயாரித்துள்ள படம் ஈசா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு குற்றாலம் பகுதியில் நடந்தது. ஹீரோ விக்னேஷதிம் ஹீரோயின் லக்ஷணாவும் காதலிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அன்பு மிகுதியால் ஹீரோயின் கன்னத்தை ஹீரோ கடிப்பது போன்ற காட்சி. ணுஇந்த காட்சி இயற்கையாக வரவேண்டும். அதனால் ஹீரோ நிஜமாகவே கடிக்க வேண்டும் இல்லையென்றால் இந்த காட்சியையே இன்று முழுவதும் எடுப்பேன்து என்று டைரக்டர் பாலகணேஷா கூறினார்.
இதனால் ஹீரோ விக்னேஷ் ஹீரோயின் கன்னத்தை நிஜமாகவே கடிக்க லக்ஷணா அலறி துடித்தார். இந்த அலறலை நடிப்பு என்ற நினைத்து ஹீரோ மேலும் வலுவாக கடிக்க பல் பதிந்து ரத்தம் கொட்டியது. இதனால் விக்னேஷதிடன் லக்ஷணா சண்டை போட்டார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை படப்பிடிப்பு குழுவினர் சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து லக்ஷணாவிடம் கேட்டபோது, “நடந்த சம்பவம் உண்மைதான். காட்சியை இயக்குனர் சொன்னவுடன் ஹீரோ கடிப்பது போல நடிக்கட்டும். நான் வலிப்பது போன்று நடிக்கிறேன் என்றேன். அவரோ நிஜமாகவே கடித்துவிட்டார். வலியால் துடித்துவிட்டேன். பல் பதிந்து ரத்தம் கசிந்தது. ஐஸ் ஒத்தடம் கொடுத்தனர். ரத்தம் வரும் அளவுக்கு கடித்து வைத்ததால் ஹீரோவை திட்டினேன். யூனிட்காரர்களும் திட்டினார்கள். ஹீரோ என்பதால் பெரிதுபடுத்தி அவமானப்படுத்தக் கூடாது என்பதால் விட்டுவிட்டேன்து என்றார்.

ரத்தம் வரும் அளவுக்கு நடிகையின் கன்னத்தில் ஹீரோ கடித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அளவுக்கு அருவருக்கத்தக்க படம்.

டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்

சில மாதங்களுக்கு முன்னால் மீண்டும் படுத்து விட்ட சர்க்குலேஷனை உயர்த்த - பத்திரிகை அலுவலகத்தில் மீண்டும் ஒரு மீட்டிங் போட்டார்கள். "பாலியல் சம்பந்தமான மருத்துவ கேள்வி-பதில்கள் போடலாமே" என்கிற யோசனை முன் வைக்கப்பட்டது. பேருக்கு தான் அவை மருத்துவ கேள்வி-பதில்கள். வாசித்தால் தெரியும் அதிலிருப்பது பாலுறவு கதைகள். அதற்கான படங்களை தேர்வு செய்யும் போது பார்க்க வேண்டுமே.
"மார்பக புற்றுநோய்" குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு - ஒரு நடிகையின் முக்கால்வாசி மார்பு தெரியும் படம். வாசகர்களுக்கு மார்பு என்றால் எங்கே இருக்கிறது என்று தெரியாதில்லையா? அதனால் தான் அவ்வளவு பெரிய படம் - வண்ணத்தில்.​கேள்வி கேட்ட சகோதரிக்கு அந்த பக்கத்தை விரித்து வைத்து வாசிக்க இயலாது - அந்த அளவுக்கு அருவருக்கத்தக்க படம்.

"அதெல்லாம் வேணாம் சார். நடிகைகளின் கதைகள் போட்டு ரெம்ப நாளாச்சு.. போட்டி பத்திரிகையாளர்கள் - ஹீரோக்களின் தொடர் போட்டு தான் கல்லா கட்டுறாங்க. நாம ஹீரோயின்களின் கதை போடுவோம்" என்று நாக்கை தொங்கப்போட்டு சொன்னதும் - பத்திரிகை தலைமை "ஹீரோயின்களின் கதை"யை போடுவது என்கிற சமூகத்திற்கு சேவையாக அமையக்கூடிய மிக உன்னதமான முடிவை எடுத்தது.

நிச்சயம் விற்பனை உயர்ந்திருக்க வேண்டும். இணையத்திலேயே - பல தளங்களில் ஹீரோயினிகளின் கதை - COPY -> PASTE செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருமானம் வருகிறது என்கிற ஒரே நோக்கத்துக்காக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கும், பத்திரிகை விற்பனையை அதிகரிக்க, வருமானத்தை பெருக்க இம்மாதிரியான வக்கிர கதைகளை வெளியிடுவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது.

டாஸ்மாக்கால் உடம்பு கெடுகிறது என்றால், இம்மாதிரியான வக்ர கதைகளை வாசிப்பதனால் - உடம்பும், மனசும் பாழாய் போகிறது. போதை வஸ்துகளை உபயோகிக்க பதினெட்டு வயது என்று பெயரளவுக்கேனும் ஒரு சட்டம் உள்ளது. இம்மாதிரியான பாலுறவு கதைகளை தாங்கி வரும் பத்திரிகைகள் - பல்வேறு செய்திகளையும் தாங்கி வரும் ஊடகங்கள் ஆயிற்றே. ஒரு பக்கத்தில் இம்மாதிரியான உணர்ச்சியை தூண்டும் கதைகளை போட்டுவிட்டு - மறுபக்கத்தில் அதன் தொடர்ச்சியாக ஆண்மைக்குறைவுக்கு வைத்தியம் பார்க்க அழைக்கும் மருத்துவர்கள்.

சும்மா சொல்லக்கூடாது - நமது ஊடகங்களை... பாவம் செய்தாலும் - அதற்கு பரிகாரமும் செய்யத்தான் செய்கிறார்கள். ஏதாவது ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டால் - அனைத்து பத்திரிகையாளர்களும் ஒன்று கூடி கண்டனம் தெரிவிக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஒருவன் அருவருக்கத்தக்க செய்திகளை வெளியிடும்போது - ஒன்று கூடும் ஊடகங்கள் கண்டிக்க வேண்டாமா?

"போராளி" படத்திற்கு சென்று இருந்தேன். எனக்கு பின் வரிசையில் இரண்டு பள்ளி மாணவர்கள். தொண தொணவென்று பேசி கொண்டிருந்தார்கள். திரும்பி பார்த்தபோது - அவர்கள் கையில் "ஹீரோயின்களின் கதையை" தாங்கி வரும் பத்திரிகை. இனி : அவர்கள் பேசி கொண்டதில் சில பகுதிகள். "டேய், இது அவ தாண்டா நான்கெழுத்து நடிகைன்னு போட்டிருக்கு"... "இல்லடா இவ கேரளா. ஆனா அவ பம்பாய்க்காரிடா" "சரி. அந்த டைரக்டர் யாருடா. மூன்றெழுத்து நடிகரின் தந்தைன்னு போட்டு இருக்குடா" என்று பேசி கொண்டவர்கள் - தங்கள் வால்யூமை குறைத்து கொண்டார்கள்.

இருவரும் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு விஷயத்தை படித்து முடித்ததும் - அதை பற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்றால் அது ஆரோக்கியமான விஷயமாக இருத்தல் வேண்டும். மாணவர்கள் விவாதித்தது ஆரோக்கியமான விஷயமா? இன்று முழுக்க "அவளா... இவளா?" மற்றும் "அவனா... இவனா? " என்கிற சிந்தனையிலேயே இன்றைய பொழுது ஓடிவிடும். அவன் படிப்பில் கவனம் செலுத்துவது எங்ஙனம்.

அவனுக்கு பாடத்திற்கு தேவையான புக் வாங்குகிறனோ இல்லையோ - நாளை சரியாக ஹீரோயின்களின் கதையை தாங்கி வரும் இதழை வாங்கி விடுவான். முக்கியமான இடத்தில் "தொடரும்" போட்டு இருக்கிறானே.

PenDrive USB) தகவல் திருட்டு : எச்சரிக்கை ரிப்போர்ட்


டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்

மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல் பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை எப்படி திருடுகின்றனர். இதை எவ்வாறு தடுப்பது.

மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் Portable Hard disk பற்றிய சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது 0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும்.

இதில் சேமிக்கப்படும் எந்த தகவலும் அழிவதே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை.

ஆரம்ப காலத்தில் நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும். நம் மெமரி கார்டு அல்லது பென்டிரைவ் களை ரிப்பேர் செய்ய கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணணியில் இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் அவர்களிடம் இருக்கும்.

மென்பொருள் துணை கொண்டு அந்த கணணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான எந்த அறிவிப்பும் அந்த கணணியின் திரையில் தெரியாது. கணணி பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.

வைரஸை நீக்க சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்ன தான் நாம் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக Recover செய்து கொடுக்க பல மென்பொருள் உள்ளது. நாம் திரையை பார்த்து கொண்டு தான் இருப்போம்.

ஆனாலும் நம் மெமரி கார்டின் ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்று வரை உள்ள அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும். உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வைரஸை நீக்கலாம்.

வைரஸ் பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore என்பதை சொடுக்கி வரும் திரையில் இடது பக்கத்தில் Memory Card க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை காப்பி செய்து நம் கணணியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி செய்து முடித்த பின் Memory Card ஐ Format செய்து பயன்படுத்தலா

பார்வையற்றோர்கள் இனி நாவினால் பார்க்கலாம்:


ஆஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ‘ பார்க்கும்’ வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி‘ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ‘ ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.

சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது.
இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது.

இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும்.

இந்த கருவி பற்றிய மேலதிக தொழிலில் நுட்ப தகவல்கள் Click Here

இந்த கருவியை ஒரு பார்வையற்றவருக்கு பரிசோதனை செய்யும் வீடியோ Click Here

ஒரு திரைப்படம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது? PAPER TO CELLULOID

 ஒரு திரைப்படம் கதையாக காகிதத்திலிருந்து 'செல்லுலாய்ட்' படமாக மாற இடையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வை. 

கதையை முடிவு செய்தவுடன் நண்பர்களோடோ அல்லது தன் குழுவோடு அமர்ந்து விவாதித்து திரைக்கதையும்,வசனமும் ஒரு இயக்குனர் எழுதிவிடுகிறார். பின்பு நீங்கள் கற்பனைக் கூட செய்யமுடியாத அளவில் அலைந்து திரிந்து எப்படியோ ஒரு தயாரிப்பாளரையும் நடிகரையும் பிடித்துவிடுகிறார் என்று வைத்துக்கொண்டு, அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

தன் கதைச்சார்ந்து, ரசனைச்சார்ந்து படத்திற்குத் தேவையான சக தொழில்நுட்பாளர்களைத் தேர்வு செய்கிறார் இயக்குனர். பின்பு 'லொக்கேஷன்' பார்த்தல், 'அரங்கம்'(set) அமைத்தல், உடைகள் தேர்ந்தெடுத்தல், 'சக மற்றும் துணை' நடிகர்கள் தேர்ந்தெடுத்தல், 'Shooting Script' தயாரித்தல், 'Break Down' போடுதல், 'Set Property' எழுதுதல் என நிறைய வேலைகள் இருக்கிறது. இதை எல்லாம் முடித்து ஷூட்டிங் போவோம். 

ஷூட்டிங் என்றால், இயக்குனர் 'Sound,Camera, Action,Cut' சொல்லி நடிகர்களை நடிக்கவைத்து படம் பிடிப்பார் என்பது ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்திருந்தாலே தெரியும். இப்படி படம்பிடிக்கப்பட்ட 'நெகட்டிவ்கள்'(Negative) தான் ஒரு படத்தின் ஆதாரம். அந்த 'நெகட்டிவ்' அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பதுதான் இந்த கட்டுரை விவரிக்கப் போகிறது.
'லேப்:

படம் பிடிப்பதிற்கு முன்பு உள்ள 'நெகட்டிவ்களை' 'ரா ஸ்டாக்'(Raw Stock) என்கிறார்கள். படம் பதிவுசெய்யப்பட்ட 'நெகட்டிவை' 'எக்ஸ்போஸ்ட்'(Exposed) என்கிறார்கள். இந்த 'எக்ஸ்போஸ்டுகள்' அனைத்தும் படம்பிடிக்கப்பட்ட அன்று மாலையே லேபிற்கு(Lab) கொண்டுச்செல்லப்படுகிறது. இது மிக அவசியம், எக்ஸ்போஸ் செய்யப்பட்ட நெகட்டிவை உடனுக்குடன் 'டெவலப்'(Develope) செய்துவிட வேண்டும். லேபில் ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்ட எக்ஸ்போஸ்ட் நெகட்டிவுகளை மறுநாள் டெவலப் செய்துவிடுவார்கள்.

லேபில் அந்த நெகட்டிவுகளின் தன்மையை ஆராய்ந்து,அதாவது சரியாக எக்ஸ்போஸ் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஒளிப்பதிவாளருக்கு தெரிவிப்பார்கள். அதற்கு 'LAD'(Lab Aimed Density) என்கிற அளவை லேபில் பரிசோதிப்பார்கள். ஒளிப்பதிவாளர் விருப்பப்பட்டால் நேரம் கிடைக்கும் போது அவர் லேபிற்குச் சென்று அந்த நெகட்டிவுகளை 'அனலைசர்' என்கிற கருவியில் பார்ப்பார். அந்த கருவி நெகட்டிவில் இருக்கும் பிம்பங்களை படமாக திரையில் காட்டும். மேலும் நெகட்டிவில் பதிவாகிருக்கும் பிம்பங்களின் 'RGB' மதிப்புகளைக்காட்டும். இந்த மதிப்புகள் எண்ணில் இருக்கும். இந்த எண்களை 'பிரிண்டர் வேலிவ்'(Printer Value) என்கிறார்கள். இந்த பிரிண்டர் வேலிவைக் கொண்டுதான் திரையரங்கில் காட்டும் 'பாஸிட்டிவ் பிரிண்ட்'(Positive Print)-ஐ போடுகிறார்கள். அதனால் இந்த பிரிண்டர் வேலிவ்கள் சரியாக இருக்கவேண்டியது அவசியம். 

(நாம் புகைப்படம் எடுக்க உபயோகிப்பது நெகட்டிவ், பின்பு அதை லேபில் கொடுத்து பிரிண்ட் போட்டுப் பார்ப்போம் அல்லவா அந்த பிரிண்ட்தான் 'பாஸிட்டிவ் பிரிண்ட்'. அதேப்போல்தான் திரைப்படத்திற்கும்)

இந்த 'பிரிண்டர் வேலிவ்கள்' என்பது R,G,B முறையே 1-50,1-50,1-50 என்ற மதிப்புகள் கொண்டது. இதில் நம்முடைய நெகட்டிவின் மதிப்புகள் 25,25,25 என்று வந்தால், அது மிகச்சரியாக எக்ஸ்போஸ் செய்யப்பட்ட நெகட்டிவ். 25-லிருந்து மதிப்புகள் கிழே குறைந்தால் 'Under Expose' செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். 25-லிருந்து மதிப்பு மேலே சென்றால்(30,35,40,50) 'Over Expose' செய்யப்பட்டிருக்கிறது என்று புரிந்துக்கொள்ளவேண்டும். 

இப்படி நெகட்டிவின் 'பிரிண்டர் வேலிவ்'-ஐ தெரிந்துக்கொள்வது ஒளிப்பதிவாளர் தன் அடுத்தநாள் ஷூட்டிங்கில் தேவையான மாற்றத்தை செய்துக்கொள்ள உதவும். 

முன்பெல்லாம் அன்றன்னைக்கு எடுத்ததை அன்றே பிரிண்ட் போட்டுப் பார்ப்பார்கள். அதை 'டெய்லிஸ்'(Dailies) என்பார்கள். அதை மாலையில் அல்லது இரவில் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் திரையிட்டுப்பார்ப்பார்கள். இப்போது அது நடைமுறையில் இல்லை. எடுத்ததை மொத்தமாக ஒவ்வொரு 'ஷெடியுல்' முடிந்தபிறகு 'டெலிசினி'(Telecine) செய்துதான் பார்க்கிறார்கள்.

இப்படி லேபில் வரும் நெகட்டிவுகளை, டெவலப் செய்து, தரம் சோதித்து பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். 

'டெலிசினி'(Telecine):

ஒரு ஷெடியுல் படபிடிப்பு முடிந்த உடனேவோ அல்லது மொத்த படத்தின் படபிடிப்பு முடிந்த உடனோ, டெவலப் செய்யப்பட்டிருக்கும் நெகட்டிவைகளை 'டெலிசினி' செய்யவேண்டும். ஏனெனில் அப்போதுதான் படத்தை 'படதொகுப்பு'(Edit) செய்யமுடியும்.

டெலிசினி செய்வதிற்கு மொத்த நெகட்டிவுகளையும் 'ரீல்களாக'(Reel) பிரித்து எண் கொடுக்கவேண்டும். நாம் படப்பிடிப்பில் பயன்படுத்தும் நெகட்டிவுகள் 400 அடி நீளம் கொண்டவைகள், அவற்றை 800 அடி அல்லது 2000அடியாக இணைப்பார்கள். இப்படி இணைக்கப்பட்ட நெகட்டிவ் பெட்டியை 'ரீல்' என்கிறார்கள். இந்த ரீல்களுக்கு 1,2 என்று எண்ணிக்கையில் எண் தருகிறார்கள். இந்த எண்ணிக்கைதான் இனி அந்த நெகட்டிவுகளுக்கு அடையாளம். 

இப்படி ரீல் பிரித்து எண் கொடுப்பது 'படத்தொகுப்பாளரின்' வேலை. அவர் தன் உதவியாளர்களின் மூலம் இதைச்செய்கிறார். மேலும் இப்படி எண் கொடுக்கப்பட்ட ரீல்களில் முன்னும் பின்னும் 'ஓட்டைகள்'(Punch) செய்து அடையாளம் இட்டு அந்த ரீலின் மொத்த அடி(ft) கணக்கை குறித்துக்கொள்கிறார்கள். இதை வரிசைப்படி அனைத்து ரீல்களுக்கும் தொடர்ச்சி கொடுத்து குறித்துக்கொள்கிறார்கள். இந்த வேலையை 'நெகட்டிவ் பன்சிங்'(Negative Punching) என்கிறார்கள்.

இப்படி 'நெகட்டிவ் பன்சிங்' செய்யப்பட்ட ரீல்களை 'டெலிசினி'க்கு அனுப்பிவைக்கிறார்கள். இந்த ரீல்களை 'டெலிசினி' கருவியைக்கொண்டு வீடியோவாக மாற்றுகிறார்கள்.( டெலிசினியைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை இருக்கிறது அதைப் படித்துவிட்டு மேலே தொடரவும்)

படத்தொகுப்பு(Editing):

டெலிசினி செய்யப்பட்ட 'வீடியோ டேப்'(Video Tape) மற்றும் 'Datas' அடங்கிய CD படத்தொகுப்பாளருக்கு வருகிறது. மேலும் படப்பிடிப்புத்தளத்தில் நடிகர்கள் நடிக்கும் போது பேசிய ஒலிநாடாவும்(Pilot Track) அவரிடம் கொடுக்கிறார்கள்.அதை அவர் 'ஆவிட்'(Avid) அல்லது 'FCP' போன்ற படதொகுப்பு செய்ய உபயோகப்படும் மென்பொருளில் ஏற்றி படதொகுப்பு செய்கிறார். மொத்த படத்திற்கான படதொகுப்பு முடிந்தபிறகு 'EDL' எடுக்கப்படுகிறது. இந்த 'EDL' கொண்டு 'நெகட்டிவ் கட்டிங்'(Negative Cutting) செய்யலாம் அல்லது 'D.I' கணினிக்கு இந்த 'EDL' அப்படியே கொடுத்துவிடலாம். இந்த இரண்டு முறைகளில் படத்திற்கு தேவையான 'பிச்சர் நெகட்டிவ்'(Picture Negative) தயார் செய்யப்படுகிறது. 
(இதைப்பற்றி விரிவாக 'டெலிசினி' மற்றும் 'எடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை' கட்டுரைகளில் காண்க) 

பின்பு ரீல் கணக்கில் பிரிக்கப்பட்டு 'டப்பிங்' அனுப்புகிறார்கள். 

டப்பிங்(Dubbing):

இப்படி படத்தொகுப்பு முடிந்தவுடன், அந்த காட்சிகளுக்கு 'டப்பிங்' பேசப்படுகிறது. திரைப்படம் எடுக்கும் போது அங்கே படபிடிப்புத்தளத்தில் நடிகர்கள் நடிக்குபோது பேசிய வசனங்கள் பதிவுசெய்யப்பட்டு படதொகுப்பு செய்யும்போது உபயோகப்படுத்தப்படுகிறது. அந்த ஒலிநாடாவை 'Pilot Track' என்கிறார்கள். இப்போது 'டப்பிங்'-இல் அந்த 'பைலட் டிராக்கு' களுக்கு தகுந்தமாதிரி, ஏறக்குறைய அதை ஒட்டி அல்லது சில சமயங்களில் வசனங்களை மாற்றியோ 'டப்பிங்' குரல்கள் எடுக்கப்படுகின்றன. அதாவது அங்கே படபிடிப்புத் தளத்தில் இரைச்சலோடும் தெளிவில்லாமலும் இருந்த வசனங்கள் இங்கே ஒலிப்பதிவுக் கூடத்தின் அமைதியில் தெளிவாக பதிவுசெய்யப்படுகிறது. இந்த வசனங்களையே நாம் திரையரங்குகளில் கேட்கிறோம். இப்படி முழுபடத்திற்கும், அனைத்து நடிகர்களுக்கும் பதிவுசெய்யப்படுகிறது.

'எஃபக்ட்ஸ்'(Effects):

டப்பிங் முடிந்தவுடன், மொத்த ரீல்களையும் 'எஃபக்ட்ஸ்'(Effects)-க்கு அனுப்புகிறார்கள். 'எஃபக்ட்ஸ்' என்பது வேறு ஒன்று இல்லை, படத்தில் வசனம் தவிர்த்து நாம் பயன்படுத்தும் மற்ற சத்தங்கள், கார் சத்தம்,குதிரை, நடப்பது, குரைப்பது, ஓடுவது,தட்டுவது, அடிப்பது,சுடுவது போன்ற சத்தங்களும், டிஸ்யும்,டும்மு, சரக்,புராக் என்று வரும் சத்தங்களையும் இட்டு நிரப்புவதுதான் 'எஃபக்ட்ஸ்' எனப்படுகிறது. 

'ஃபைனல் டிரிமிங்'(Final Trimming or Final Editing): 

படத்தொகுப்பு முடிந்தபோது மொத்தபடத்தின் நீளமும், கடைசியாக திரைக்குவரும் அளவில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. சிலசமயங்களில் அதிகமான 'சீன்கள்' இருக்கும். அதனால் படத்தின் நீளம் அதிகமாக இருக்கும், அதாவது படம் ஓடும் நேரம் அதிகமாக இருக்கும். டப்பிங் முடிந்தபிறகு படத்தொகுப்பாளர் மொத்தப்படத்தின் நீளத்தை நிர்ணயிப்பார். இந்த வேலை பெரும்பாண்மையான படங்களுக்கு டப்பிங்க்கு முன்பே முடிந்துவிடும். சில படங்கள் டப்பிங் வசனங்களையும் எஃபக்ட்ஸையும் கொண்டு முடிவுசெய்கிறார்கள். இந்த கடைசி கத்தரித்தலைத்தான் 'பைனல் டிரிமிங்' என்கிறார்கள். 

'ரஃப் மிக்ஸ்'(Rough Mix):

'டப்பிங்'-கில் பேசிய வசனம் மற்றும் எஃபக்ஸ் ஒலியையும் இணைத்து 'ஃபைனல் டிரிமிங்'-க்காக கொடுப்பார்கள். 

பின்னணி இசை(RR - Rerecording):

ஒருபுறம் 'எஃபக்ட்ஸ்' நடந்துக் கொண்டிருக்கும்போதே பின்னணி இசைகோற்பு வேலையும் நடந்துக்கொண்டிருக்கும். 


'ஃபைனல் மிக்ஸ்'(Final Mix):

பின்னணி இசைக்கோற்பு முடிந்தவுடன், அந்த ஒலியோடு 'டப்பிங்' மற்றும் 'எஃபக்ஸ்' ஒலிகளியும் ஒன்றிணைத்து நாம் திரையரங்கில் கேட்குபோது தெளிவாக கேட்கும் படி ஒலி திருத்தம்(Sound Processing) செய்வார்கள். அதாவது வசனம், எஃபக்ஸ், இசை எல்லாம் ஒரே அளவில் ஒலித்தால் இரைச்சலாக அல்லவா இருக்கும். அதனால் காட்சிக்கு தகுந்த படி இந்த மூன்று ஒலிகளின் அளவை கூட்டியும் குறைத்தும் சரியான படி நாம் திரையரங்கில் ஒலியைக் கேட்க வழிவகைச் செய்கிறார்கள். இந்த வேலைத்தான் 'ஃபைனல் மிக்ஸ்' என்கிறோம். 


D.T.S / Dolby:

இப்போதைய படங்கள் பெரும்பாலும் D.T.S / Dolby ஒலிகளில்தான் வருகின்றன. படத்தில் D.T.S / Dolby உபயோகிக்கப்பட்டால், 'ஃபைனல் மிக்ஸ்' என்பது இந்த வசதியோடுதான் செய்யப்படுகிறது. இதற்கென்று தனியாக ஒலி அமைப்புக்கூடங்கள் உண்டு. இந்த D.T.S / Dolby 'Track'-ஐ தனியாக 'CD'யில் கொடுக்கிறார்கள். இதை D.T.S / Dolby வசதிகொண்ட திரையரங்கில் அதற்கென இருக்கும் கருவிகள் மூலம் கேட்டு மகிழ்கிறோம்.

சவுண்டு நெகட்டிவ்(Sound Negative):

'ஃபைனல் மிக்ஸ்' செய்யப்பட்ட ஒலியை 'Mono Track'ஆக சவுண்டு நெகட்டிவில் பதிகிறார்கள். இந்த சவுண்டு நெகட்டிவ் என்பது 'Black and White' படமெடுக்கப்பயன்படும் நெகட்டிவ். அதில்தான் சவுண்டை பதிகிறார்கள். பின்பு அந்த நெகட்டிவை 'டெவலப்' செய்து திரைப்படத்திற்கான 'சவுண்டு நெகட்டிவ்' தயார்செய்கிறார்கள். D.T.S / Dolby ஒலிக்கான குறியீடையும்(Code) இதில் பதிகிறார்கள். திரையரங்கில் இந்த குறியீடை அடையாளமாகக் கொண்டுதான் அந்தக்காட்சிக்கான D.T.S / Dolby ஒலியை 'CD'-யில் இருந்து எடுத்துக்கொள்ள முடிகிறது. 

'ஆப்டிக்கள்ஸ்'(Opticals works):

திரைப்படத்தில் 'fade-in','fade-out','dissolves' போன்றவை உபயோகித்திருந்தால் அதை 'ஆப்டிகள் ஒர்க்ஸ்' என்ற தனித்தவமான வேலையை பயன்படுத்தி செய்கிறார்கள். அந்த 'ஆப்டிகள் ஒர்க்ஸ்'-ஐயும் நெகட்டிவாக பதிவுசெய்து அதை படத்தின் நெகட்டிவோடு இணைத்துவிடுகிறார்கள்.
இப்போதெல்லாம் 'D.I' செய்யும் படங்களில் இந்த 'ஆப்டிகள் ஒர்க்ஸ்'-ஐ 'D.I'கணினியிலேயே செய்துவிட முடிகிறது.

C.G (Computer Graphics):

படத்திற்கு தேவையான 'C.G' வேலைகள் இருந்தால் அதையும் செய்து நெகட்டிவாக மாற்றி படத்தின் பிக்சர் நெகட்டிவோடு இணைத்துவிடுகிறார்கள்.

'பிக்சர் நெகட்டிவ்'(Picture Negative):

'நெகட்டிவ் கட்டிங்' மூலம் ஒன்றிணைக்கப்பட்ட நெகட்டிவ், 'ஆப்டிகள் ஒர்க்ஸ்' மூலம் பெறப்பட்ட நெகட்டிவ், 'C.G' மூலம் பெறப்பட்ட நெகட்டிவ் இவை அனைத்தையும் ஒன்றிணைத்து படத்தொகுப்பு செய்யப்பட்ட விதத்தில் ஒரு திரைப்படத்திற்கான 'பிக்சர் நெகட்டிவை' உறுவாக்கிறார்கள்.

'நெகட்டிவ் பேரலிங்'(Negative Paralleling):

'பிக்சர் நெகட்டிவ்' மற்றும் 'சவுண்டு நெகட்டிவ்' ஆகிய இரண்டையும் சரிச்சமமாக இணையாக இருக்கும்படி அமைக்கவேண்டும், அதாவது அந்த அந்த காட்சிக்கான ஒலி அதற்கு நேராக இருக்கவேண்டும் அல்லவா? அப்போதுதானே அந்த காட்சிக்கான ஒலி வரும், தனித்தனியாக இருக்கும் இரண்டும் நெகட்டிவுகளையும் 'Paralle'(இணையாக)-ஆக இருக்கும்படி சீரமைப்பதே 'நெகட்டிவ் பேரலிங்' என்கிறார்கள். இந்தச் செய்வது படத்தொகுப்பாளரின் வேலை.

'வண்ணம் சீர்செய்தல்'-'கிரேடிங்'(Grading or Timming):

'நெகட்டிவ் பேரலிங்' முடிந்தபிறகு 'பிக்சர் நெகட்டிவையும்' 'சவுண்டு நெகட்டிவையும்' லேபில் கொடுத்துவிடுவார்கள். 'பாஸிட்டிவ் பிரிண்டு' போடுவதிற்கு முன்பாக 'பிக்சர் நெகட்டிவில்' இருக்கும் 'RGB' மதிப்புகளை நாம் சீரயமைக்கவேண்டும். அதாவது ஒவ்வொரு 'ஷாட்டுக்கு'-மான வண்ணத்தை நிர்ணயிக்கவேண்டும். மேலும் இந்த 'RGB' மதிப்புகளைக் கொண்டே பிரிண்ட் போடமுடியும். இதைச்செய்ய 'அனலைசர்'(Analyser) என்னும் கருவி பயன்படுகிறது. 'D.I' செய்யும் படங்கள் கணினியில் 'கிரேடிங்' செய்யப்படுகிறது.

'பாஸிட்டிவ் பிரிண்டு'(Positive Print):

இந்த இரண்டு நெகட்டிவுகளையும் கொண்டு நாம் திரையரங்கில் பார்க்கும்படியாக 'பாஸிட்டிவ் பிரிண்டு' தயார்செய்யவேண்டும். இந்த 'பாஸிட்டிவ் பிரிண்டு'-இல் காட்சி மற்றும் ஒலி இரண்டும் இணைந்தே இருக்கும். 

'பிக்சர் நெகட்டிவ்' மற்றும் 'சவுண்டு நெகட்டிவ்' இரண்டையும் பிரிண்டு போடும் கருவியில் இணையாக இணைத்து 'பாஸிட்டிவ் ஸ்டாக்கில்'(Positive Stock) ஒளி மூலம் பதிகிறார்கள், பின்பு அதை 'டெவலப்' செய்து 'பாஸிட்டிவ் பிரிண்டை' உருவாக்குகிறார்கள்.

ஒளி மற்றும் ஒலி இணைத்திருப்பதினால் இதை 'மேரிட் பிரிண்ட்' என்றும் சொல்லுவார்கள். இதை அப்படியே திரையரங்கில் திரையிடலாம்.

இத்தனை கட்டங்களைத் தாண்டிதான் காகித்தில் இருக்கும் ஒரு கதை திரைப்படமாக உருமாறி திரையரங்கை வந்தடைகிறது. இதற்கு பின்னால் பல நூறுபேருடைய பல மணிநேர உழைப்பு இருக்கிறது. பல கலைஞர்களின் திறமையும் கற்பனையும் கொண்டு உருவாக்கப்படுகிறது. 

இது எல்லா திரைப்படங்களுக்கும் பொருந்தும், நல்ல படம், கெட்டபடம், ஓடுகிறபடம், ஓடாதபடம், வெளிவந்தபடம், வெளிவராதபடம் என எல்லா படங்களுமே இப்படித்தான் உருவாகிறது.

நாம் இதைத்தான் ஒரு நொடியில் விமர்சணம் செய்துவிட்டு வந்துவிடுகிறோம்.

‘SCARLET-X’ - கேமெராவில் புது புரட்சி



டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்

Canon நிறுவனத்தின் ‘EOS C300’ அறிவிக்கப்பட்ட அதே நாள் அதன் தற்போதைய போட்டி ஆளராக கருதப்படும்RED ONE நிறுவனத்தின் அடுத்த கேமரா அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்புதிய கேமராவிற்கு ‘Scarlet-X’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

“The future is dependent on those who push… not those who react,”
- Jim Jannard, founder of RED Digital Cinema.

RED ONE கேமராவின் அறிமுகமே ஒரு புதிய புரட்சியாக அப்போது பார்க்கப்பட்டது. அக்கேமரா ஆகஸ்டு 2007-இல் நடைமுறைக்கு வந்தபோது அதன் தொழில்நுட்பம் எல்லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. சிறிய வடிவில் இருந்த அக்கேமராவின் தரம்(4K) பிரமிப்பைக் கொடுத்தது. ஃபிலிமையே(Film) மையமாக கொண்டிருந்த திரையுலகம் டிஜிட்டலை நோக்கி தன் கவணத்தை திருப்பியது. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன.

முதல் காரணம், இச்சிறிய கேமராவில் கிடைத்த 4K விடியோ தரம். அதுநாள் வரை ஒரு விடியோ கேமராவினால் இத்தகைய தரத்தை கொடுக்க முடியும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஒருவேளை ‘ரெட் ஒன்’ அப்போது வெளியாகி இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் வேறொரு கேமராவில் அது சாத்தியமாகி இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாலும் ரெட் ஒன் அதை காலத்தே முந்தியது.

இரண்டாவது காரணம், இத்தகைய தரம் வாய்ந்த கேமரா யாரும் எதிர்பாராதவிதத்தில் குறைந்த விலையில் கிடைத்தது. ஒப்பீட்டளவில் அதுநாள் வரை சந்தையில் இருந்த கேமராக்களைவிட ரெட் ஒன்னின் விலை மிக குறைவானதாக இருந்ததும், அக்கேமரா மிகுந்த வரவேற்பைப் பெறக் காரணமாகியது. குறைந்த விலையில் தேவையான தரம் என்பதே டிஜிட்டலை (ரெட் ஒன்) நோக்கி திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்தது.

அதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் திரைப்படம் என்னும் கருத்தோட்டம் வலுவடைந்தது. ரெட் ஒன் அதன் சமகால போட்டியாளர்களைத் தாண்டி தன் கேமராவைப் பிரபலமாகியது. தொடர்ந்து அது தன் திறனை 4K -விலிருந்து 5K என மேம்படுத்திக்கொண்டிருந்த அதே வேளையில் யாரும் எதிர்ப்பாராத திசையிலிருந்து ஒரு வில்லன் அதற்கு முளைத்தான்.

அந்த வில்லனுக்கு 'Canon EOS 5D Mark II' என்றுப் பெயர். ஆமாம் 5D ரெட் ஒன்னுக்கு வில்லனாக அமைந்தது இத்துறையில் நிகழ்ந்த இன்ப ஆச்சியங்களில் ஒன்று. உண்மையில் 5D ஒன்றும் ரெட் ஒன்னின் தரத்திற்கு இணையானது அல்ல, என்றாலும் 5D மிகுந்த வரவேற்பைப் பெற்றது. காரணம் அதன் விலை மற்றும் உருவமைப்பு. விலையே மிக மிக குறைவு(ரூ.ஒன்னறை லட்சம்) உருவமும் மிகச் சிறியது. ரெட் ஒன்னை விடச் சிறியது.

5D-இன் வளர்ச்சியும் அதற்கு பதிலடியாய் ரெட் ஒன் தன் நிறுவனத்தின் சார்பில் ‘Epic’ மற்றும்‘Scarlet’ கேமராக்களை கொண்டுவந்ததும், இப்போட்டியை சமாளிக்க ‘ARRI’ தன் ‘Alexa’-வை களத்தில் இறக்கியதும் நாம் அறிந்ததுதான். அதேச் சமயம் Sony, Panavision, Thomson Grass Valley, Panasonic போன்ற மற்ற கேமரா நிறுவனங்களும் தன் புதிய கேமராக்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன என்பது உண்மையானாலும், போட்டி என்பது இம்மூன்று கேமராக்களிடையேதான் நிகழ்ந்தது. இந்தியாவில்/தமிழ்நாட்டில் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் இம்மூன்று கேமராக்கள் மட்டுதான் சமபலம் வாய்ந்தவைகளாக களத்தில் இருக்கின்றன.

Canon நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்தது, Red One வட அமெரிக்க நிறுவனம், ARRI-யோ ஜெர்மன் நாட்டுத் தயாரிப்பு. இதுவும் இம்மூன்று நிறுவனங்களுக்கிடையே போட்டி உருவாக காரணமாயிற்று. தனக்கான வாடிக்கையாளர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க மூன்று நிறுவனங்களுமே பெரும் முயற்சிகளை மேற்கொண்டன.

அதுநாள் வரை கேனான் நிறுவனம், புகைப்படத்துறையில்தான் செல்வாக்கு பெற்றிருந்தது. திடீரென்று திரைத்துறைக்குள்ளும் நிகழ்ந்த அதன் பிரவேசம் யாருக்கு அதிர்ச்சி கொடுத்ததோ இல்லையோ, ரெட் ஒன்னுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனாலயே அதனுடைய நேரடி எதிரியாக கேனானை கொள்ள வேண்டியதாயிற்று. அதேவேலை ரெட் ஒன்னின் சந்தையைத்தான் கேனான் பிடிக்க வேண்டியதாகவும் இருந்தது.

இந்நிலையில்தான் கேனான் தன் ‘EOS C300’ கேமராவை இம்மாதம் (3,நவம்பர்/2011) அறிவித்தது நாம் அறிவோம். அதே நாளில் ரெட் ஒன் நிறுவனமும் தன் புதிய கேமரா ‘Scarlet-X’ அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இவ்விரண்டு நிறுவனங்களின் போட்டி சூடுபிடித்திருக்கிறது.

இம்முறை ரெட் ஒன் பல சவால்களை கேனானுக்கு முன் வைத்திருக்கிறது. ‘Scarlet-X’ கேமரா 5K தரம் கொண்ட 'Still Image'-களைக் எடுக்கும் தரம் கொண்டது. 4K தரத்தில் விடியோவை பதிவுசெய்யும். ஆனால் கேனான் ‘EOS C300’ அப்படி அல்ல 4K தரத்திற்கு ஈடானது என்று சொல்லப்பட்டாலும் அது வெறும் 1080p விடியோவைத்தான் கொடுக்கும்.


Lens Mount-ஐப் பொருத்தமட்டில் ‘EF’ மற்றும் ‘PL’ ஆகிய இரண்டு Mount-லும் ‘Scarlet-X’ கிடைக்கிறது.

புகைப்படத்துறையிலிருந்து திரைத்துறைக்குள் கேனான் நுழைந்ததுப் போல், ரெட் ஒன் திரைத்துறையிலிருந்து புகைப்படத்துறைக்குள் நுழைந்திருக்கிறது. ‘Scarlet-X’ கேமராவைப் பயன்படுத்தி 5K REDCODE RAW-வில் புகைப்படங்களை எடுக்க முடியும் என்ற வசதியை அளித்ததின் மூலம் கேனானின் அடிமடியில் ரெட் ஒன் கைவைத்திருக்கிறது. பழிக்குப்பழி. நீ என் சந்தையை பிடித்தால் நான் உன் சந்தையைப் பிடிப்பேன். எப்பூடி!?

DSLR என்றால் என்ன என்று கேள்விப்பட்டிரிப்பீர்கள்!. DSMC என்றால் என்ன என்றுத் தெரியுமா? 
இப்போது புதியதாக உயிர்த்தெழுந்திருக்கும் தொழில்நுட்பத்தின் செல்லப் பெயர் அது.

DSLR-ஐக் கேள்விப்படாதவர்களுக்கு Digital-SLR(single lens reflector) என்பதின் சுருக்கம் அது.

DSMC என்பது Digital Still & Motion Camera என்பதின் சுருக்கம். அதாவது ஒரே கேமராவில் டிஜிட்டல் புகைப்படம் மற்றும் திரைப்படத்திற்கு தகுதியான விடியோ எடுக்கும் தொழில்நுட்பத்தைக் குறிப்பது.

‘Scarlet-X’ ஒரு DSMC வகைக் கேமரா. இக்கேமராவைப் பயன்படுத்தி தொழில்முறை புகைப்படக்காரர்கள்(Professional photographers) புகைப்படங்களை மிகுந்த தரத்தோடு எடுக்க முடியும். கேனானின் பேட்டைக்குள் ரெட் ஒன் நுழையும் முயற்சி இது.

மேலும் மிக முக்கியமான ஒரு கேடயத்தை ரெட் ஒன் நிறுவனம் கேனானுக்கு முன் பிடித்திருக்கிறது. அது விலை.

கேனானின் ‘EOS C300’($20,000) விட ரெட் ஒன்னின் ‘Scarlet-X’($9,750) விலை குறைவு. குறைந்த விலை என்பது கேடயமாகப் பயன்படும் அதே நேரம், கேனானின் மீது ஏவப்படும் பலமான ஆயுதமாகவும் மாறிவிட வாய்ப்புகள் இருக்கிறது!. பொருத்திருந்து பார்ப்போம்.

‘Scarlet-X’ கேமராவிற்கு தேவையான துணைப்பாகங்கள் ரெட் ஒன்னின் முந்தயக் கேமராவான Epic-இன் பாகங்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் பலம்.


“ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பார்கள், அதுபோல இங்கே இரண்டு நிறுவனங்கள் ரெண்டுபட்டு, ஆளாலுக்கு தான் பிஸ்தா என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் கூத்தாடிக்கு இல்லை.. இல்லை சினிமாக்காரர்களுக்கு கொண்டாட்டம். இந்த கொண்டாட்டம் எதுவரை போகிறது என்றுப் பார்ப்போம்.

ஆஹா! எப்பேர்பட்ட கேமரா! வாங்கினால் இதுபோல் ஒன்று வாங்கணும்


'ALEXA' என்னும் புதிய 'HD' கேமரா:




வருங்காலங்களில் 'Digital' தொழில்நுட்பம் ஆட்சி செலுத்தும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது திரைப்படம் தயாரிப்பிலும் பிரதிபலிக்கிறது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டேபோகிறது. அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாமும் நம்மை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம். நம்மை 'update' செய்துக்கொள்வது என்பது இன்றைய சூழலில் மிக ஆதார செயலாகிறது.

புதிய தொழில்நுட்பங்களையும் புதிய கருவிகளையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன். அதன் வரிசையில் 'ARRI' நிறுவனத்திலிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'ALEXA' என்கிற 'HD' தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராவைப்பற்றிய கட்டுரை இது.


'ALEXA' எடை குறைந்த, சிறிய, செலவு குறைந்த 'டிஜிட்டல்' கேமரா, 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தை அடுத்த தளத்திற்கு அழைத்துச்செல்லும், சுலபமான 'Workflows', 35mm தரத்திற்கு இணையானது. திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரப்படங்கள் மற்றும் இசை தொகுப்புகள் என எதையும் குறைந்த செலவில் இந்தக் கேமராவைக்கொண்டு எடுக்கலாம் என்பது 'ARRI' நிறுவனத்தின் அறிமுகம். 

இந்த கேமரா 'ARRI' தொழில்நுட்பத்தை மட்டுமல்லாமல் இந்தத்துறையில் இருக்கும் மற்ற பிரபல நிறுவனங்களின் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. உதாரணமாக 'Apple' நிறுவனத்தின் 'Apple QuickTime' தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது.


இந்த கேமரா பிம்பங்களை 'SxS memory card'-ல் சேமிக்கிறது. இந்த 'cards'-கான இடம் கேமராவிலேயே இருக்கிறது. (Apple ProRes 4444 or Apple ProRes 422 (HQ) encoded images onto on-board SxS memory cards)


'ALEXA' கேமராவின் தரம் '35mm ஃபிலிமின்' தரத்தோடு ஒத்திருக்கும் என சொல்லுகிறார்கள். காரணம் இந்த கேமரா வழக்கமாக 35mm கேமராக்களில் பயன்படுத்தப்படும் லென்சுகளைப் பயன்படுத்த 'PL Mount'-ஐ கொண்டுள்ளது. அந்த லென்சுகளைப் பயன்படுத்தும் போது ஒரு ஒளிப்பதிவாளன் காட்சியின் 'Focus'-ஐ கட்டுப்படுத்துவதின் மூலம் தனக்கு தேவையான 'Depth of Field'-ஐ உருவாக்கமுடியும், இதனால் பார்வையாளனை திரைப்பட பாணி கதை சொல்லலில் ஒன்றிணைக்க முடிகிறது.


'Digital' பிம்பத்தின் தரத்தை உயர்த்த இந்த கேமரா '35mm' ஃபிலிமின் அளவில் உள்ள 'CMOS' சென்சரை(sensor) உபயோகப்படுத்துகிறது. இதன் மூலம் 35mm' ஃபிலிமில் கொண்டுவரமுடியும் அதே 'Depth of Field'-ஐ பெறலாம்.


(பிம்பம் பதியப்படும் ஊடகத்தின் அளவைப்(size) பொருத்து பிம்பத்தின் 'Depth of Field' மாறும்.(உ.ம்) ஒரே 'Focal Lenght' லென்ஸைக்கொண்டு படம் எடுத்தாலும் '35mm' ஃபிலிமிலும் '16mm' ஃபிலிமிலும் 'Depth of Field' மாறும். அது தனி தலைப்பு. அதை வேறு கட்டுரையில் பார்க்கலாம்)




இங்கே நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது மற்ற 'டிஜிட்டல் கேமராக்கள்' பயன்படுத்தாத இந்த 35mm அளவு 'CMOS' சென்சாரினால் பிம்பமானது 35mm ஃபிலிமின் தரத்திலிருக்கும் என்று அவர்கள் சொல்லுவதைத்தான்.


இந்த கேமரா '800 EI' சென்சிட்டிவ்(sensitive) உடையது, அதாவது '800 ISO' திறன் கொண்ட 'ஃபிலிமை' பயன்படுத்துவதிற்கு சமம்.


13.5 'Stop' வித்தியாசத்தில் பிம்பத்தை பதிவு செய்யக்கூடிய 'latitude' கொண்டது.


இயல்பான வண்ண மறு உறுவாக்கத்தை தருகிறது, வண்ணங்களிலிருக்கும் வித்தியாசத்தை சிறப்பாக பதிவுச்செய்கிறது இதனால் 'compositing' போது சுலபமாக வேலைசெய்யமுடிகிறது.


குறைந்த வெளிச்சத்திலும் 'Very low noise'-யே கொடுக்கிறது.


குறைந்த எடை, சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வடிவம் போன்றவை 'ALEXA' கேமராவை 'Handheld shots'-க்கு பயன்படுத்தும்போது எளிதாக இருக்கிறது. அதனுடைய அமைப்புகள் அனைத்தும் சுலபமாக கற்றுக்கொள்ள கூடிய வகையில் இருக்கிறது. நீங்கள் கேமராவில் extra கருவிகள் (உ.ம்: சிறிய விளக்கு, follow focus) பொருத்தினால் அதற்கு தேவையான மின்சாரத்தை பெற கேமராவிலேயே இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 


முக்கியமான அம்சம், நமக்கு தேவையான வண்ண மாறுபாட்டில்(color management) காட்சிகளை சேமிக்கமுடியும். அல்லது இயல்பாக காட்சிகளை சேமித்துக்கொள்ளும் அதே நேரத்தில், வண்ணமாறுபாட்டோடும் காட்சியை சேமிக்கமுடியும். அதாவது இரண்டு வித வண்ணத்தில் காட்சிகளை சேமிக்கமுடியும். இது பின்னால் 'Post Prodution'-னின் போது வண்ண நிர்ணயித்தலில் பயன்படும். 




எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்த கேமரா ஓடும் என்கிறார்கள். அது இமயமலையோ, விண்வெளியோடமோ எங்கே வேண்டுமானாலும் இயங்கும். ( RED-ONE போன்ற கேமராக்கள் விரைவில் வெப்பம் அடைந்து நின்று விடுகின்றன, வெப்பம் தனியும் வரை காத்திருக்கவேண்டியதாகிறது)


மற்ற எந்த டிஜிட்டல் கேமராவும் செய்யாத வகையில் இந்த கேமரா 'Post Prodution'-இல் உதவுகிறது. உதாரணமாக 'Apple ProRes 4444 or Apple ProRes 422 (HQ) encoded' பிம்பங்களை பதிவுசெய்வதின் மூலம் நாம் இங்கே பயன்படுத்திக்கொண்டிருக்கும் 'editing' கருவிகளையே பயன்படுத்தலாம். 'Apple’s Final Cut Pro editing software'-ஐ பயன்படுத்தி எடிட்டிங் செய்யலாம். இதனால் புதிய கருவிகள் வாங்க வேண்டிய செலவுகள் தவிர்க்கப்படுகிறது.


'Apple ProRes 4444' கோடக்கை(Codec) பயன்படுத்தி 15 நிமிடமும், 'Apple ProRes 422 (HQ)' கோடக்கை பயன்படுத்தினால் 20 நிமிடமும் 32GB Card-ல் பதிவுசெய்ய முடியும். இந்த Card-ஐ அப்படியே நேரடியாக 'Apple’s MacBook Pro' போன்ற மடிகணினியில் பயன்படுத்த முடியும். உலகமுழுவதும் பயன்பாட்டிலிருக்கும் 'HD' பிம்பங்களை பதிவுசெய்வதினால் 'Direct to Edit' (DTE) தொழில்நுட்பத்தில் நம்மால் நேரடியாக எடிட் செய்ய முடிகிறது. அதாவது படபிடிப்பு தளத்திலேயே நம்முடைய காட்சிகளை பார்க்கவும், எடிட் செய்யவும் முடியும். இதனால் உங்களின் தவறுகளை உடனுக்குடன் சரி செய்துக்கொள்ள முடியும்.


'Uncompressed HD or ARRIRAW' கோடக்கை பயன்படுத்தி பிம்பத்தை பதிவுச்செய்தால் 'off-line/on-line workflow' முறையில் வேலைச்செய்ய வேண்டும். 'full resolution' பிம்பங்களை 'Editing System'-தில் ஏற்றி வேலைச்செய்ய அதிக திறன் வாய்ந்த கணினி தேவைப்படும், நேரமும் அதிகரிக்கும் அதனால் செலவும் கூடும் என்பதினால் அதை தவிர்க்க off-line/on-line workflow-வை கொண்டுவந்தார்கள். அதாவது 'low resolution' பிம்பங்களை கொண்டு எடிட் செய்வது பின்பு அந்த பிம்பங்களிலின் பதியப்பட்டிருக்கும் தகவல்களைக்(datas: Timecode ) கொண்டு நாம் பயன்படுத்திய காட்சிகளை மட்டும் 'full resolution' பிம்பங்களாக எடுத்துக்கொள்வது. இதனால் தேவையற்ற நேர விரையம், கணினியில் அதிக சேமிப்பு இடம் தேவைப்படுதல் போன்றவை தவர்க்க முடியும்.




இந்த கேமரா அதற்கான 'off-line/on-line பிம்பங்களை தனித்தனியாக கேமராவிலேயே பதிவுச்செய்து தந்துவிடுகிறது. இதனால் எடிட்டிங்கின் போது இரண்டுவிதமாக பிம்பங்களை பிரிக்க வேண்டிய தேவையில்லாமல் போகிறது. நேரமும் செலவும் சேமிக்கப்படுகிறது. 


(off-line என்பது குறைந்த resolution கொண்ட பிம்பங்கள், அதாவது நாம் படம்பிடித்த 'high resolution' பிம்பங்களை 'compress' செய்துக்கொள்வார்கள், இதனால் கணினியில் இடம் அதிகம் தேவைப்படாது மற்றும் குறைந்த RAM போன்றவை இருந்தாலும் இலகுவாக வேலைச் செய்ய முடியும்.

எடிட் செய்து முடித்த பிறகு, 'Time-code' or EDL -ஐ கொண்டு நாம் பயன்படுத்திய காட்சிகளை மட்டும் 'High Resolution'-ல் ஏற்றிக்கொள்ள முடியும். இந்த முறையை 'Online' என்கிறார்கள்.) 



இந்த கேமரா 16:9 'ஆஸ்பெக்ட் ரேசியோவில்'(Aspect Ratio) '2880 x 1620 pixal' என்ற கணக்கில் பிம்பத்தை சேமிக்கிறது. அதாவது 2K Resolution. இது ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட போதுமான தரம்.


கேமராவின் வேகம் நொடிக்கு குறைந்தது 0.75 frame-ஆகவும், அதிக பட்சிமாக நொடிக்கு 60 frame-ஆகவும் இருக்கிறது(0.75 – 60 fps)


இதன் shutter : Electronic shutter, 5.0° to 359.0° கோணங்களின் மாற்றியமைக்க முடியும். (shutter-இன் கோணங்களை மாற்றியமைப்பதின் மூலம் சில சுவாரசிமான பிம்பங்களை உருவாக்க முடியும். இதுவும் தனி கட்டுரைக்கான களம்)






மற்ற 'ARRI' டிஜிட்டல் கேமராக்களில் இருப்பதைப்போலில்லாமல் இதில் 'ARRI Electronic Viewfinder EVF-1' இணைக்கப்பட்டுள்ளது. மற்ற D20, D21 டிஜிட்டல் கேமராக்கலில் 'Optical Viewfinder' உள்ளது. இதில் இந்த வசதி குறை என நான் நினைக்கிறேன். 'Optical Viewfinder' தான் காட்சியின் தரத்தை கட்டுப்படுத்துவதில் அதிக பயன்படும் என்பது என் நடைமுறை அனுபவம். இந்த கேமராவை பயன்படுத்தி பார்த்தால் தான் இதைப்பற்றி மேலும் அறிந்துக்கொள்ள முடியும்.


இப்போதெல்லாம் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாளே அதனுடைய அடுத்த 'version' கருவிகள் வந்து விடுகின்றன. அப்படியிருக்க புதிய கருவிகளின் மீது பணம் போட தயக்கம் காட்ட வேண்டியதாக இருக்கிறது. நீங்கள் 'mobile phone' வாங்கினீர்கள் என்றால் அடுத்த வாரமே அதைவிட தறம் மிகுந்த விலை குறைந்த போன்கள் வந்துவிடுவதை அறிவீர்கள். அதேபோல் தான் தொழில்நுட்ப கருவிகளிலும் நிகழ்கிறது. இதை சமாளிக்க இந்த கேமராவின் பாகங்கள் மாற்றி அமைக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய கருவி பாகங்கள் வரும்போது அதை மட்டும் வாங்கி மாற்றி அமைத்துக்கொள்ளலாம். முழு கேமராவையும் வாங்க வேண்டியது இல்லை.


இந்த கேமராவில் 1.'பிம்பங்களை சேமிக்கும் பகுதி'(Storage Interface Module)
2.'மின்னனு இயந்திரப்பகுதி'(Electronics Interface Module) மற்றும்
3.'லென்ஸ் இணைப்பு பகுதி'(Exchangeable Lens Mount (ELM)) போன்றவைகளை விஞ்ஞான வளர்ச்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.


முடிவாக இந்த கேமரா இப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இதனுடைய துணைக்கருவிகள அனைத்தும் ஏற்கனவே உலகமுழுவதும் பயன்பாட்டில் இருப்பவைதான். அதனால் இந்த கேமராவை பயன்படுத்துவது எளிதாகிறது. உலகின் எந்த மூலையிலும் இந்த கேமராவை பயன்படுத்தலாம் என்பது 'ARRI' நிறுவனத்தின் உறுதிமொழி. இதை நாம் நம்பலாம் ஏனெனில் 'ARRI' நிறுவனம் நம்ப தகுந்த தரமான் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பது உலகமுழுவதும் நம்பப்படுகிற ஒன்று.







நீங்கள் ஓட்டு போடுவதால் இந்த கட்டுரை அதிக நபர்களைப் போய் சேரும் என்றால், நீங்கள் ஏன் ஓட்டுப்போடக்கூடாது..!?

செல்போன் ரீசார்ஜ் செய்ய புதிய வழி – சாதித்த தமிழர்!

சூரியஒளி மூலம் ஒரே நேரத்தில் 4 செல்போன்களை ரீசார்ஜ் செய்யும் புதிய கருவியை சென்னையை சேர்ந்தவர் வடிவமைத்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் நந்தகுமார் (64). பியூசி வரை சென்னையில் படித்தவர். ரேடியோ மற்றும் டி.வி டெக்னாலஜி 2 வருட படிப்பையும் முடித்திருந்தார். தனியார் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணியாற்றினார்.

இதை தொடர்ந்து மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக டி.வி டெக்னிக் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


இவர் சூரியஒளி மூலம் செல்போன்களை ரீசார்ஜ் செய்யும் புதிய கருவியை வடிவமைத்துள்ளார். Ôமொபைல் ரீசார்ஜ்Õ என்ற இந்த கருவி மூலம் ஒரே நேரத்தில் 4 செல்போன் களை ரீசார்ஜ் செய்ய முடியும்.

முழுமையாக ரீசார்ஜ் ஆக 2 மணிநேர சூரியஒளி போதும். அனைத்து வகையான செல்போன்களை ரீசார்ஜ் செய்ய முடியும்.

இதுகுறித்து டி.எஸ்.நந்தகுமார் கூறுகையில்,
‘‘சூரியஒளி மூலம் செல்போன் களை ரீசார்ஜ் செய்யும் கருவியை வடிவமைக்க 3 மாதமாக முயற்சி மேற்கொண்டேன். ரூ.1500 முதலீடு செய்துள்ளேன்.

மின்சாரத்தை சேமிக்க இது ஒரு நல்ல வழி. இந்த கருவியை கண்காட்சிகளில் வைத்து விளக்க உள்ளேன். ஒரு கருவி ரூ.180க்கு விற்க முடிவு செய்துள்ளேன் அடுத்தகட்டமாக சூரியஒளியை பயன்படுத்தி, குறைந்த செலவில் வீடுகளுக்கு மின்விளக்கு தர முயற்சி செய்கிறேன்’’ என்றார்.

கமல் நம் காலத்து நாயகன்


டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்


18.12.2011 உயிர்மை நூல் வெளியீட்டரங்கு கமல் நம் காலத்து நாயகன்
உயிர்மை நூல் வெளியீட்டரங்கு - 4கமல்நம் காலத்து நாயகன்
எழுத்தாக்கம் - தொகுப்புமணா
நாள் : 18.12.2011, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை மணி
இடம் : தேவநேயப் பாவாணர் அரங்கம்,


            மாவட்ட மைய நூலகம் (( L.L.A. Building),
            735, அண்ணா சாலைசென்னை-2

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு மகத்தான கலைஞனைப்பற்றிய பதிவு இது.ஒரு கலாச்சாரத்தின் உணர்வுகளைத் தீவிரமாகத் தொட்டுத் தழுவி தனது பன்முகத்தன்மைகொண்ட படைப்பாற்றலால் யாராலும் நகல் எடுக்க முடியாத ஒருதனித்துவமான அழகியலை உருவாக்கியவர் கமல்ஹாசன்மணாவின் கடும்உழைப்பினால் உருவான இந்த அரிய தொகுப்பில் கமல் நம்மோடு பேசுகிறார்,கமலைப்பற்றி தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் நம்மிடம் பேசுகிறார்கள்இதுகமலின் சரித்திரம் அல்லகமலின் வழியே உருவான ஒரு கலையின் சரித்திரம்.
வரவேற்புரை
மனுஷ்ய புத்திரன்
தலைமை 
மாலன்
நூல் வெளியீடு
பாலு மகேந்திரா
பெற்றுக்கொள்பவர்
பேராகு.ஞானசம்பந்தன்
கருத்துரை
ரா.பார்த்திபன்
சார்லி
சண்முகராஜா
ரோஹிணி
நா.முத்துக்குமார்
நிகில் முருகன்
நன்றியுரை 
மணாநூல் விலை
ரூ.350/- 
வெளியீட்டு அரங்கில்
ரூ.300/-
மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளலாம்.044-24993448
அலைபேசி எண்: 9444366704மின்னஞ்சல்uyirmmai@gmaill.com