டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்
கன்னத்தில் ரத்தம் வரும் அளவுக்கு ஹீரோயின் கன்னத்தில் ஹீரோ கடித்ததால் ஷூட்டிங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஜே.கே.கிரியேஷன் தயாரித்துள்ள படம் ஈசா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு குற்றாலம் பகுதியில் நடந்தது. ஹீரோ விக்னேஷதிம் ஹீரோயின் லக்ஷணாவும் காதலிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அன்பு மிகுதியால் ஹீரோயின் கன்னத்தை ஹீரோ கடிப்பது போன்ற காட்சி. ணுஇந்த காட்சி இயற்கையாக வரவேண்டும். அதனால் ஹீரோ நிஜமாகவே கடிக்க வேண்டும் இல்லையென்றால் இந்த காட்சியையே இன்று முழுவதும் எடுப்பேன்து என்று டைரக்டர் பாலகணேஷா கூறினார்.
இதனால் ஹீரோ விக்னேஷ் ஹீரோயின் கன்னத்தை நிஜமாகவே கடிக்க லக்ஷணா அலறி துடித்தார். இந்த அலறலை நடிப்பு என்ற நினைத்து ஹீரோ மேலும் வலுவாக கடிக்க பல் பதிந்து ரத்தம் கொட்டியது. இதனால் விக்னேஷதிடன் லக்ஷணா சண்டை போட்டார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை படப்பிடிப்பு குழுவினர் சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து லக்ஷணாவிடம் கேட்டபோது, “நடந்த சம்பவம் உண்மைதான். காட்சியை இயக்குனர் சொன்னவுடன் ஹீரோ கடிப்பது போல நடிக்கட்டும். நான் வலிப்பது போன்று நடிக்கிறேன் என்றேன். அவரோ நிஜமாகவே கடித்துவிட்டார். வலியால் துடித்துவிட்டேன். பல் பதிந்து ரத்தம் கசிந்தது. ஐஸ் ஒத்தடம் கொடுத்தனர். ரத்தம் வரும் அளவுக்கு கடித்து வைத்ததால் ஹீரோவை திட்டினேன். யூனிட்காரர்களும் திட்டினார்கள். ஹீரோ என்பதால் பெரிதுபடுத்தி அவமானப்படுத்தக் கூடாது என்பதால் விட்டுவிட்டேன்து என்றார்.
ரத்தம் வரும் அளவுக்கு நடிகையின் கன்னத்தில் ஹீரோ கடித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
No comments:
Post a Comment