Tuesday, December 13, 2011

கேரளா தொலைக்காட்சி மிரட்டல் விடுக்கின்றது.

தமிழர் நல கலை பண்பாட்டியக்கத்தின் தலைவரான இயக்குனருமான- மு.களஞ்சியம் அவர்களுக்கு மாற்று கருத்துடையார் என சந்தேகிக்கும் நபர்களின் கை பேசி எண்களில் குறும் தகவல் வந்தன. அந்த செய்தி அவரை உசுப்பி விடுவது போன்றுதான் இருக்கவேண்டும் என சந்தேகிக்கப்படுகின்றது.

அந்தக்குறும் செய்தி தந்த எண்-9092444111 இந்த இலக்கத்தில் இருந்து வெளிவந்த செய்தி..

''KANDIPPOM''
thamizh patti (NAAI) galukku evvalavu soru pottaalum kadikkathaan seyyum ena nammai izhivu paduththiya KAIRALI tho ka
en;04423749016,9841036673...

என்றொரு குறுஞ்செய்தி மு.களஞ்சம் அவர்களுக்கு வந்தது...

இதை கவனத்தில் எடுத்த இயக்குனரும் புரட்சியாளருமான களஞ்சியத்துடன் தொடர்பினை எடுத்து விசாரித்த போது...

''கைரளி'' மலையாள தொலைகாட்சி தமிழர்களை தவறாக பேசியதாக (தமிழ் நாய்கள் ) வந்த இந்த குறுஞ்செய்தியை அடிப்படையாக வைத்து....

அந்த தொலைகாட்சியின் சென்னை பொறுப்பாளரிடம் பேசினேன்..

அவர் அப்படி ஒரு செய்தி தங்களின் தொலைகச்சியில் வரவே இல்லை என்றனர்...

உங்களால் நிருபிக்க முடியுமா?

எந்த நேர செய்தியில் சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா..?

நாங்கள் அப்பிடியெல்லாம் சொல்லவே இல்லை என்று சொன்னார்கள்...

பிறகு நான் கண்டித்து பேசிவிட்டு வைத்து விட்டேன்.

என்னோடு பேசிய நல்ல தமிழில் என்னுடன் உரையாடினார்.அவர் ஒரு தமிழர் என்றும்..தன்னை அறிமுகம் செய்து கொண்டார்....

அதன் பிறகு நான் சம மனநிலைக்கு வந்து விட்டேன்...

அதன் பின்னர் ....

இன்று கைரளி தொலைக்கச்சி என் மீது புகார் கொடுத்துள்ளது...

அது குறித்து இன்று காவல்துறை விசாரணை வந்து விட்டது.....

தங்களின் தொலைக்காட்சியில் அப்படி ஒரு செய்தி வரவில்லை என்றால்...?

ஏன் புகார் செய்ய வேண்டும்.

என்னை மிரட்டவா..?

காவல் துறை அதிகாரிகள் எனது அலுவலகம் வந்து விசாரித்து விட்டு போனார்களாம்.

பிறகு நான் வெளியில் இருந்து வந்ததும்.

அவர்கள் கொடுத்து விட்டு போன கை பேசி தொடர்பு எண்ணில் பேசினேன்...

அப்போது..

யார் உனக்கு அந்த குறுஞ்செய்தியை அனுப்பியது.?

பொய்யான செய்திய யார் சொன்னாலும் நீ விசாரணை பண்ணிவியா..?

என்பது போல கேட்டார்கள்.

நான் தமிழனுக்கு எதிரா எவன் பேசினாலும்.?

கேட்பேன்.

இனியும் தமிழன் சொறிய முதுக கொடுத்துகிட்டு இருக்க முடியாது.

அடிப்படையில் கேரளா அரசு மக்கள் அரசு எனவே மக்களின் உணவுக்கு செயல் படுகிறது.

நமது அரசு..

மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நசுக்க நினைக்கிறது. தமிழனுக்காக ஒரு தமிழன் பரிந்து பேசுவது கூட தமிழ்நாட்டில் தவறா.?

தமிழ் தேசிய உணர்வு பெற்று நான் நமக்காக களமாட ஒன்றிணைய வேண்டும்..

எதிரியை விட மோசமானவன் கூடவே இருக்கும் துரோகி..

தமிழக அரசு நமக்கு துரோகம் செய்கிறது.

முல்லை பெரியாறு விசயத்தில் ஆர்த்தெழுந்த எம் தமிழ் சகோதர்களை மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி உள்ளது..

அனால் கேரளா அரசு இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்ய வில்லை.

கேரளா அரசு ஆர்ப்பாட்டம் செய்தல் கண்டதும் சுட உத்தரவு தோழர்களே..

வெறி பிடித்த ஓநாய்களும், மதம் கொண்ட யானைகளும், பால் ஊற்றிய கையைக் கொத்தும் பாம்புகளும், அச்சத்தில் பதுங்கி ஆள் பாராத சமயம் பாய தயாராக இருக்கும் புலிகளும், இரவில் வந்து காலைச் சுரண்டும் பெருச்சாளிகளும், கண்ட இடங்களில் எல்லாம் மொய்த்து அருவருப்பை உண்டுபண்ணும் கரப்பான் பூச்சிகளும், காதுக்குள் புகுந்து கொண்டு கடுப்பேற்றும் சிற்றெறும்புகளும் தமிழனை மிரட்டுகின்றன ..

அவைகளை அழிக்க வேண்டும்.

ஆகவே உலகம் முழுவதும் உள்ள எம் தமிழர்களே.

நமது கனவுகள் ஈழம் வெல்ல மட்டும் அல்ல .

எங்கும் எப்போதும் உரிமையோடும் உயிரோடும் வாழவும் .

நமது ஒற்றுமை அவசியம்..

ஒன்றிணைந்து போராடுவோம்.துரோகிகளையும் எதிரிகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் இல்லாமல் அடிப்போம்.

என்று சினத்தால் சிறுத்தை நாம் சீறினால் சிங்கம் அசிங்கம் ஆகும் போல் கொதித்து எரிதணலில் நின்று எம்முடன் பேசினார்.

இந்த செய்திகள் தொடர்பாக நாளை காவல் துறையினரிடம் விசாரணைக்கு எடுத்துச்செல்ல போவதாக தெருவித்தார்.

இந்த தொல்லைக்காட்சியாகத்தான் இருக்கும் என்றால் நாளை வழக்குப்பதிவுகள் தொடரவுள்ளேன் என்று தமிழர் நல கலை பண்பாட்டு இயக்கத்தலைவர் இயக்குனர்- மு.களஞ்சியம் கண்டித்துள்ளார்.

No comments:

Post a Comment