எனக்கு ஒரே மகன். அவனுக்கு பெண் தேட ஆரம்பித்தபோது... உறவுகள், தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்தோம். கூடவே, செய்தித்தாளிலும் விளம்பரம் கொடுத்தோம். அவ்வளவுதான்...
அதைப் பார்த்துவிட்டு படையெடுத்து வந்தவர்கள் பெண் வீட்டார் அல்ல... புரோக்கர்கள். ''நான் நல்ல ஜாதகமா கொண்டுட்டு வர்றேன்...'' என்று ஆசை வார்த்தைகள் கூறி, ஒவ்வொருவரும் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை பெற்றுச் சென்றனர்.
ஆனால், பெண் எதுவும் அமைந்தபாடில்லை. இதில் கொடுமை என்னவென்றால், அப்படி வந்தவர்களில் ஒருவர்... புரோக்கரே இல்லை என்பதுதான். அவர்,
செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட விளம்பரத்தைப் பார்த்ததுமே, புரோக்கர் என்று ஆஜராகிப் பணத்தைக் கறக்கும் ஏமாற்றுப் பேர்வழி என்று தெரிந்தபோது, அதிர்ந்துவிட்டோம்.
திருமணத்துக்கு வரன் தேடி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பவர்கள், இந்த புரோக்கர்கள், போலி புரோக்கர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க, வீட்டு முகவரியைத் தவிர்த்து, போஸ்ட் பாக்ஸ் நம்பர் அல்லது வேறு ஏதாவது உபாயத்தைக் கையாள்வதே நல்லது!
- ஏமாந்த ஒரு பெற்றோர்
|
No comments:
Post a Comment