அடுத்த ஆண்டு மத்தியில் டேப்லெட் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்த நோக்கியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்போன் தயாரிப்பில் நோக்கியா நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது.
இந்த நிலையில், பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் டேப்லெட் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கையடக்க கணினியை அறிமுகம் செய்ய நோக்கியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு மத்தியில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் புதிய டேப்லெட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய நோக்கியா திட்டமிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், டேப்லெட்டை அறிமுகப்படுத்துவது குறித்து நோக்கியா நிறுவனம் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துள்ளது.
இந்த நிலையில், நோக்கியா அறிமுகப்படுத்த உள்ள புதிய டேப்லெட் ஆப்பிள் ஐபேடுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும் என மார்க்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
|
அடுத்த ஆண்டு மத்தியில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் புதிய டேப்லெட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய நோக்கியா திட்டமிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ReplyDeletevumoo
कुछ गुप्त कोड मिले है जो
ReplyDeleteDownload Grow Castle Mod Apk