Tuesday, December 13, 2011

மொபைலில் பேசினால்… கார் ஓடாது!: கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பு



டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்

மொபைலில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க கோவையிலுள்ள தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் ‘மொபைல் பக்’ என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பல கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வரும் தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் புதியதாக ‘மொபைல் பக்’ என்ற கருவியை கண்டுபிடித்துள்ளனர். இக் கருவியை நான்கு சக்கர வாகனத்தில் பொருத்தினால் வாகனம் சென்று கொண்டிருக்கும் போது மொபைல் போனில் பேச முடியாது.

இது குறித்து புதிய கருவியை கண்டுபிடித்த இறுதியாண்டு இ.சி.இ., படிக்கும் மாணவர்கள் ஹரிபிரசாத், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் தனியார் வாகனங்களை ஓட்டுவோர், மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்தது. மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இச்சூழலில் இது போன்ற கண்டுபிடிப்பை மேற்கொள்ள யோசனை தோன்றியது. ‘மொபைல் பக்’ கருவியை கண்டுபிடித்துள்ளோம். காரிலுள்ள டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் பேசுவதை தடுக்க இக்கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரில் பொருத்திவிட்டால், கார் சென்று கொண்டிருக்கும் போது, ‘போன் ரிங்’ ஆகும். மொபைலிலுள்ள ரேடியோ பிரிக்குவன்சி, காரில் பொருத்தியுள்ள ‘மொபைல் பக்’ கருவிக்கு செல்லும். வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தி, ‘இன்ஜினை ஆப்’ செய்து விட்டு பேச 25 முதல் 30 விநாடி வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குள் வாகனத்தை நிறுத்தி ‘இன்ஜினை ஆப்’ செய்து விட்டு, பேசாவிட்டால், ‘மொபைல் பக்’ கருவிக்கு செல்லும் டைமரில் உள்ள ‘ரிலே’ வேலையை துவங்கி, கருவியிலுள்ள மொபைல் போன் ஜாமருக்கு மின்சாரத்தை செலுத்தும். மொபைல் போனிற்கு வரும் டவர் முழுமையாக கட்டாகிவிடும். மொபைலிற்கு வரும் பிரிக்குவன்சி நின்று போகும்.

தொடர்ச்சியாக மூன்று நிமிடம் போன்பேச முடியாது;பின்னர் பேச லாம்.மொபைல் போனிற்கு ’900 மெகாஹெர்ட்ஸ்’ திறனில் ரேடியோ அதிர்வலை வரும் போது, ஜாமரிலிருந்து 900 மெகாவாட் திறன்கொண்ட ரேடியோ அதிர்வலை வெளியே செல்லும் இரண்டும் மோதி மொபைல் போனிலுள்ள டவரை செயலிழக்க செய்கிறது. இது போன்ற கருவி தயாரிக்க ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மொத்தமாக செய்தால் செலவு குறையும். இதை அரசு பஸ் தனியார் பஸ், கார்களில் பயன்படுத்தலாம்;விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment