Friday, December 2, 2011

இளம்பெண்ணின் சுடிதாரை பிடித்து இழுத்து, கையை பிளேடால் கிழித்த வாலிபர்களுக்கு தர்ம அடி !!

தாம்பரம் பஸ் நிலையத்தில் இளம்பெண் சுடிதாரை பிடித்து இழுத்து, அவரது கையை பிளேடால் கிழித்த போதை வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தை அடுத்த படப்பை அருகேயுள்ள கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் அழகப்பா. இவரது மனைவி, பெருங்களத்தூர் ராஜீவ்காந்தி சிலை அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார்.

அவருக்கு உதவியாக மகள் இந்திரா (26) இருந்து வருகிறார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் தாயும் மகளும் தாம்பரம் பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து கரசங்கால் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள், அந்த வழியாக சென்ற பெண்களை கேலி, கிண்டல் செய்து கொண்டிருந்தனர். இந்திராவையும் அவர்கள் கேலி செய்தனர்.

வம்பு எதற்கு என நினைத்த தாயும் மகளும் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். பஸ் வர தாமதமானதால் இந்திராவின் அம்மா அருகில் இருந்த கடைக்கு சென்றுவிட்டார். இதை கவனித்த வாலிபர்கள், இந்திராவின் அருகே சென்று மீண்டும் கேலி செய்ய ஆரம்பித்தனர். பதற்றம் அடைந்த அவர், அங்கிருந்து செல்ல முயன்றார். போதை வாலிபர்கள், திடீரென அவரது சுடிதாரை பிடித்து இழுத்தனர்.

அவர் சத்தம் போட்டார். ஆத்திரமடைந்த வாலிபர்கள், மறைத்து வைத்திருந்த பிளேடால் இந்திராவின் வலது கையை அறுத்தனர். கை கிழிந்து ரத்தம் கொட்டியது. இந்திரா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அவரது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். வாலிபர்கள் இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து தாம்பரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து இருவரையும் பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர்கள் கேரளாவை சேர்ந்த டோனி (31), வாலாஜாபாத்தை சேர்ந்த குணசேகரன் (28) என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் ஊடகங்கள்

பீஹா மாநிலம் மதுபானி மாவட்டதில் கடந்த 24ஆம் தேதி ஜமாலி மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகிய இரு இஇளைஞர்களை டெல்லி காவல்துறையினர் அப்பகுதி காவல்துறையினரின் உதவியோடு கைது செய்தனர். அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது? அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை டெல்லி காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில பத்திரிக்கைகள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர். 


பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்று ஒரு சில பத்திரிக்கைகளும், டெல்லி, ஜும்மா மஸ்ஜித் மற்றும் பெங்களூர் கிருஷ்ண சாமி மைதானத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று சில பத்திரிக்கைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளது. மதுபானி மாவட்ட காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஜமாலி என்ற இளைஞர் வைக்கப்பட்டுள்ளார். இவர் மதரஸா பயிலும் மாணவர். பக்ரீத் பண்டிகயை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது தந்தை நஸருல் ஜமால் ஒரு ஹோமியோபதி மருத்துவராவார். ஜமாலி தனது வீட்டில் இருக்கும் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முஹம்மது அஜ்மல் என்ற இளைஞர் சிங்கானிய சவுக் என்ற ஊரில் மதுபானி காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் நஸருல் ஜமால் தன் மகன் ஜமாலி மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறார். "என் மகன் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இவை அனைத்தும் ஆதாரமற்றது. அவனுக்கு வயது 24 தான் ஆகிறது. தர்பங்காவிலுள்ள ஒரு மதரஸாவில் படித்துக்கொண்டிருக்கிறான். என் மகன் சிறந்த மார்க்க பேச்சாளர். அருகிலுள்ள சிறு கிராமங்களுக்குச்சென்று நிறைய மார்க்க சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளான். அரபியிலிருந்து உருதுவிற்கு மொழி மாற்றம் செய்வதில் திறமை வாய்ந்தவன். அவன் ஒரு போதும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதில்லை. அவனது வாழ்க்கையில் பீஹார் மாநிலத்தை விட்டு மும்பையை தவிற வெளியூர் சென்றதே இல்லை. அதற்கும் தனது சொந்தக்காரர்களை பார்ப்பதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு தான் மும்பை சென்றிருந்தான்." என்று ஜமாலியின் தந்தை கூறுகிறார்.
காவல்துறையினர் எனது மகனை கைது செய்ய வந்த போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எனது மகன் பெயரில் பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்டதாக் கூறினர். ஆனால் எனது மகனிற்கு பாஸ்போர்டே கிடையாது. சமீபத்தில் அவன் மதரஸாவிற்கு பேருந்தில் சென்ற போது அவனது பை தொலைந்துவிட்டது. அதில் அவனுடைய பேன் கார்டு, புகைப்படங்கள், முகவரி ஆதாரங்கள் மற்றும் செல்ஃபோன் ஆகியவை தொலைந்து போனது.

அவனை கைது செய்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் ஃபோன் செய்து உனது மகனை இந்த வழக்கிற்காக தேடுகிறோம் என்று கூறினர். நான் உடனே எனது மகனை சிறிது காலம் தலைமறைவாக இருக்கும் படி சொன்னேன். அதற்கு அவனோ " நான் எந்த தவறும் செய்யவில்லை, எதற்காக காவல்துறையினர் என்னை கைது செய்யவேண்டும்" என்று கேட்டுவிட்டு மறுத்துவிட்டான்.

ஒரு நாள் எனது மகன் குளித்துக்கொண்டிருந்த சமயம் ஒரு நபர் வீட்டிற்கு வந்து உங்களது மகனின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதா? என்று கேட்டார். பின்னர் தான் தெரிந்தது வந்தவர் காவல்துறை அதிகாரின் என்று. இவ்வாறு ஜமாலியின் தந்தை நஸருல் ஜமால் கூறினார்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் காவல்துறை அவர்களை எதற்காகை கைதுசெய்துள்ளது என்பதை பத்திரிக்கைகளுக்கு தெரிவிக்கவில்லை. அப்பகுதி காவல்துறையினர் கூறும்போது போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தர்பங்கா மண்டல காவல்துறை அதிகாரி ஆர்.கே மிஸ்ரா கூறும் போது கைதுசெய்யப்பட்ட இருவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என்பதை உறுதியாக கூறமுடியாது. எதுவாயினும் விசாரணைக்கு பின்பே தெரியவரும் என்று கூறினார்.

தர்பங்கா மண்டல டி.ஐ.ஜியும் சுதன்சுவும் இதனையே கூறியுள்ளார். டெல்லி காவல்துறையினர் எங்களுடைய உதவியை நாடினர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருவரையும் கைது செய்ய உதவிசெய்தோம். ஆனால் எதற்காக கைது செய்யப்படுகிறார்கள் என்பதை டெல்லி காவல்துறையினர் வெளியிடவில்லை என்று சுதன்சு கூறினார்.


பீஹார் மாநில உள்துறை அதிகர் அமீர் சுபுஹானி கூறும் போது தர்பங்கா காவல் நிலையத்தில் அவர்கள் மீதான எந்த ஒரு எஃப்.ஐ.ஆர் (தகவல் முன் அறிக்கை) எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. போலி பாஸ்போர்டு விவகாரத்தில் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோன்று பீஹார் டி.ஜி.பி அபயானந்தாவும் கைது செய்யப்பட்டவர்களை தீவிரவாதிகளாக கூறவில்லை. டெல்லி காவல்துறையினர் கொடுத்த தகவலில் பேரிலேயே அவர்களை கைது செய்தோம் என்று கூறினார். இப்படி காவல்துறையினரும் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார்களும் அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதே இல்லை என்று கூற ஊடகங்கள் மட்டும் அந்த இரு இளைஞர்களை தீவிரவாத சக்திகளோடு தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பீஹார் மாநிலத்திற்கே தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.


போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்க ஊடகங்கள் அவர்களை தீவிரவாதிகளோடு தொடர்பு படுத்துகின்றன.
ஆங்கில முன்னோடி நாளிதழான "டைம்ஸ் ஆஃப் இந்தியா" தனது தலைப்பில் கூறும்போது "தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக 2 இளைஞர்கள் கைது" என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதே போன்ற செய்திகளை ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் பாட்னாவில் வெளிவரும் டெய்லி டெலிகிராஃப் போன்ற நாளிதழ்களும் வெளியிட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் குற்றவாளிகளா இல்லையா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது எத்தனையோ அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இன்று கைது செய்யப்படுவதுபோல் அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கலாம். எதுவாயினும் அவற்றை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களில் கைகளில் உள்ளது.


ஆனால் இந்த ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்கின்றனர். இவர்கள் வெளியிடும் இத்தகைய தவறான செய்திகளால் பல அப்பாவி இளைஞர்களில் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது. 
கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று நீதிமன்றங்கள் தெரிவித்தாலும் பெரும்பாலான பத்திரிக்கைகள் அதனை வெளியிடுவதில்லை. அப்படியே வெளியிடும் சில பத்திரிக்கைகள் மறுப்பு என்ற பெயரில் ஓரிரு வரிகளில் முடித்துவிடுவர். ஆனால் அவர்கள் வெளியிட்ட பொய்யான செய்தியால அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை இவர்களால் நிவர்த்தி செய்ய முடியுமா?


பாப்புலர் ஃப்ரண்ட் : முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே தீர்வு!

முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் நவம்பர் 27, 2011 ஆம் தேதி பொன் எழுத்துக்களால் பதியப்படவேண்டிய நாள். புதுடெல்லி புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் 27ஆம் தேதி குவிந்த மக்கள் வெள்ளம் ஆதிக்க சக்திகள் மற்றும் வகுப்புவாத சக்திகளின் முடிவு நாள் நெருங்கிக்கொண்டே வருவதை உணர்த்துவதாக அமைந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய “சமூக நீதி மாநாடு” என்ற நிகழ்ச்சிதான் வட இந்தியாவில் அதுவும் ராம்லீலா மைதானத்தில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும் நிகழ்ச்சி என்ற செய்தி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. தென் இந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற‌ எல்லாதுறைகளிலும் பின் தங்கியே இருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மிகப்பெரும் சவாலாக இருப்பது அரச பயங்கரவாதமும், வகுப்புவாத சக்திகளுமேயாகும்.
ராஜஸ்தான், பீஹார், அஸ்ஸாம், உத்திரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலை கொடுமையானது. நித்தம் நித்தம் கல்வரம், பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்படுவதும், முஸ்லிம் பெண்கள் வயது வித்யாசமின்றி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நடைபெற்ற பெரும்பாலான குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது சங்கப்பரிவார இந்துத்துவ வெறியர்கள் தான் என்று தெளிவாக தெரிந்திருந்த பின்னரும் ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் முஸ்லிம்களே குறிவைக்கப்படுகிறார்கள். எத்துனையோ முஸ்லிம் இளைஞர்கள் போலி எண்கவுண்டர் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இப்படி எல்லா துறைகளிலும் பின் தங்கிய முஸ்லிம் சமூகத்திற்கு கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் சதவீதத்திற்கு ஈடாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கமிஷன்கள் பரிந்துரை செய்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போலவே அரசாங்கங்கள் செயல்பட்டுவருகிறது. முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காவும், அதன் முன்னேற்றத்திற்காகவும் ஒரு வலுவான இயக்கம் இல்லாதது இந்திய முஸ்லிம்களிடத்தில் மிகப்பெரும் குறையாகவே இருந்தது.

முஸ்லிம்களை கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்ற கிரிமினல் அஜண்டாவைக் கொண்ட சங்கப்பரிவாரங்கள் நாடு முழுவதும் பரவிக்கொண்டு நாச வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க முஸ்லிம்களோ சிறு சிறு குழுக்களாக, ஒரு குறிப்பிட்ட வட்டதிற்குள்ளேயே சுற்றித்திரிந்து கொண்டு சக்திகளை வீணடித்துக்கொண்டார்கள். அதிலிருந்து விதிவிலக்காக ஒரு சில இயக்கங்கள் தேசிய தேசிய அளவிலான இயக்கம் என்ற சாயத்துடன் வலம்வந்தாலும் வெறும் பெயரளவில் தானே தேசியம் இருந்ததே தவிற செயல்பாடுகளில் ஒன்றுமில்லாமல் போனது. முஸ்லிம்களின் வலிமைக்காக ஒரு பிரம்மாண்ட தேசிய இயக்கம் உருவாக வேண்டிய இடம் வெற்றிடமாகவே இருந்து வந்தது. அப்பேற்பட்ட ஒரு கூட்டத்திற்காக முஸ்லிம் சமூகம் காத்துக்கொண்டிருந்தது.
இந்தியாவில் செயல்படுகின்ற எந்த தேசிய அமைப்பாக இருக்கட்டும், அவை அனைத்துமே வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி வந்திருக்கிறது. இதனாலேயே பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லிம்களும் அப்பேற்பட்ட ஒரு இயக்கம் உருவாகாதா? என்ற ஏக்கத்துடன் வட இந்திய மாநிலங்களை நோக்கிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால் இறைவனுடைய நாட்டமோ வேறு விதமாக இருந்தது.
1989ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் சமூக சிந்தனை கொண்ட சில இளைஞர்கள் ஒன்று திரண்டு முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காக நாம் பாடுபடவேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அப்போது அவர்களது மனதில் ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தின் கண்ணியம், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு இந்த இரண்டுமே அவர்களுக்கு பெரிதாக தோன்றியது.
கேட்க நாதியில்லாமல் கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்காக நாம் பணியாற்ற வேண்டுமெனில் அதற்காக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும், இன்னும் கூறவேண்டுமென்றால் உயிரையே கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமே? என்று தெரிந்திருந்தும் அந்த இளைஞர்கள் தங்களுக்குள் சபதம் எடுத்துக்கொண்டார்கள். அவர்களுடைய குழுவில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சேர ஆரம்பித்தார்கள். நாளடைவில் அந்தக்குழு பரிணாமம் பெற்று “நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (என்.டி.எஃப்)” ஆக மாறியது. வியாபார நோக்கத்திற்காக கேரள சென்று வந்த ஒரு தமிழக சகோதரருக்கும் அவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு அவரும் அந்த கொள்கையினால் ஈர்க்கப்பட்டு தமிழகத்திலும் இந்த கொள்கைகள் நடைமுறைப்படுத்த எண்ணி பணியாற்றியதன் விளைவாக தமிழகத்தில் “மனித நீதி பாசறை (எம்.என்.பி)” உறுவானது. இதே லட்சிய வேட்கை கர்நாடக மாநிலத்திலும் வரவேற்பை பெற “கர்நாடகா ஃபாரம் ஃபார் டிகினிடி (கே.எஃப்.டி)” உருவானது.
ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டோ, குற்றம் சுமத்திக்கொண்டோ இன்னொரு இயக்கத்திலிருந்து விலகி தனியாக தோன்றிய இயக்கமோ அல்லது ஒரு தனிமனிதனால் ஒரே இரவில் முடிவு செய்து தொடங்கப்பட்ட இயக்கமோ அல்ல என்பதை நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும்.
இம்மூன்று இயக்கங்களும் தென் இந்தியாவில் நன்கு அடித்தளமிட்டு சமூகப்பணிகளை ஆற்றிய போது. தென் இந்தியாவில் தலை தூக்க எண்ணிக்கொண்டிருந்த ஃபாசிஸ சக்திகளுக்கு பேரிடியாய் ஆனது. இம்மூன்று இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றினைந்து முடிவெடுத்து “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” என்ற ஒற்றை குடையின் கீழ் அணிவகுத்தனர். இது தென் இந்தியாவில் மட்டும் அடக்கி வைக்கவேண்டிய ஒரு சக்தி அல்ல, மாறாக வடக்கை நோக்கி பயணிக்க வேண்டிய ஒன்று என்ற அடிப்படையில் தேசத்தின் வடக்கும், மேற்கு, கிழக்கு என நான்கு திசைகளிலும் வேகமாக பரவி இன்று இறையருளால் ஒரு தேசிய இயக்கமாக வலுப்பெற்று செயலாற்றிக்கொண்டிருக்கிறது. கடந்த 2010 பிப்ரவரி தமிழக்த்தின் மதுரையில் “சமூக எழுச்சி மாநாட்டை” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தியது. அப்போது அதில் பாப்புலர் ஃப்ரண்டின் அன்றைய‌ தமிழக தலைவர் முஹம்மது அலி ஜின்னா கூறும்போது
“ஓ ஃபாசிஸ சங்கப்பரிவார கூட்டங்களே! ஹிந்துராஷ்டிரா என்ற உங்களது கிரிமினல் அஜண்டாவை ஒழிக்க இதோ உங்கள் மார்பிடத்தை நோக்கி வருகிறோம்!
என்று முழங்கினார். இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கின்ற இந்த நதி சந்தோஷ செய்தியாக வடக்கு நோக்கி வேகமாக பாய்ந்து வருகிறது.
வலிமையான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லட்சியமாகும். இன்றைய காலச்சுழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு மட்டுமே அந்த ஆற்றல் இருக்கிறது என்பதை நம்மால் உரக்க கூற முடியும். காரணம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான், மணிப்பூர், உத்திர பிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், ஹரியானா, பீஹார் என 20ற்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து மக்கள் அலைஅலையாய் சங்கமித்தனர். இன்றைக்கு கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து இருக்கின்ற முஸ்லிம் சமூகம் மத்தியில் வெவ்வேறு மொழி பேசக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களை இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒன்று திரட்டியுள்ளது. சுதந்திரம், நீதி, பாதுகாப்பு என்பது அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் புதிய பாதையில் புதிய இந்தியாவை உருவாக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புற‌ப்பட்டுவிட்டது.
சமூக நீதியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட சமூகமாய் இருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு சமூக நீதியை பெற்றுத்தருவதற்காக தலைநகர் டெல்லியில் மாபெரும் மாநாட்டை நடத்தியது. மாநாட்டை நடத்திவிட்டால் போதும் நம்மை நோக்கி சமூக நீதி தேடி வரும் என்று அமர்ந்துவிடுபவர்கள் அல்ல மாறாக நீதியை பெறுவதற்கான போராட்ட களத்திற்கு மக்களை தயார்படுத்தும் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து செயல்படும். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

முஸ்லிம்களுக்காக புதிய கையடக்க தொலைபேசி

தினம் தினம் புதுமைகளை சந்தித்து கொண்டிருக்கிறது மொபைல் உலகம். அந்த புதுமைகள் வாடிக்கையாளர்களின் வசதிகளை நாளுக்கு நாள் பெருக்கி வருகிறது. அதன் அடிப்படையில் இப்போது டோல்மோல்.காம் மற்றும் என்மேக் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து என்மேக் குரான் என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது.


இந்த மொபைல் முஸ்லிம் சமுதாய மக்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள ஓர் அற்புதமான வசதியின் மூலம் எங்கிருந்தாலும், குரான் வாசகங்களை எந்த நேரத்திலும் கேட்டு பயன் பெறலாம். இந்த குரான் 29 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் 29 மொழிகளில் குரானை கேட்கலாம்.

இதில் தொழுகை நேரத்தை குறித்துவிட்டால் போதும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த மொபைல் தானாகவே சைலன்ட் மோடிற்கு மாறிவிடும். இதனால் தொழுகை செய்யும்போது இடையூறு ஏற்படாது.


இந்த குரான் என்மேக் மொபைலில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ள உதவும் டியூவல் சிம் தொழில் நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. குரான் என்மேக் மொபைலின் கீப்பேடில் அரபிக் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரபி மொழியிலும் எளிதாக டைப் செய்யலாம்.


இந்த மொபைல் 150 நிமிடங்கள் டாக் டைமினையும், 4 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும். 2.0 இஞ்ச் திரையை கொண்டுள்ள இந்த மொபைலில் கேமராவையும் கொண்டிருக்கிறது. இந்த மொபைல் ஏற்கனவே மலேஷியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

பாம்பை வயிற்றில் சுமந்த பெண்.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள்.
அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாடரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.
உடனடியாக பாடரிசியவுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த அந்தப் பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடியே வெளியே வந்தது. இதைப் பார்த்த நேர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அந்தப் பாம்பு குட்டியாக இருந்தபோதே பாடரிசியாவின் குடலுக்குள் புகுந்து, பாடரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு அதுவும் வளர்ந்திருக்கலாம். எப்படி அந்தப் பாம்பு பாடரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாடரிசியா சுற்றுலாச் சென்றவேளை ஆற்றுநீரை அள்ளிக் குடித்திருக்கிறார்.
அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் சென்று பொரித்து வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாடரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு வெள்ளை நிறமாகவும் , 1.83 மீற்றர் நீளமாகவும் உடலில் கறுப்புப் பட்டைகளுடனும் காணப்பட்டது.
ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.
அதைப் பொறுக்கமுடியாமல் அவர் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போனார். பின்னர் அவரைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து அந்தப் பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என பின்பு தெரிய வந்தது.
இதேபோல 1642 இல் ஜேர்மனியைச் சேர்ந்த காத்ரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஆரோக்கியம் மேம்பட்ட இந்த நவீன காலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியே வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.thanks to riyaslee.wordpress.com

இந்தியாவில் தவறாக சித்தரிக்கப்படும் முஸ்லிம் சமூகம்

இந்தியாவில் செயல்படும் ஊடகங்கள் இஸ்லாமிய பாடசாலையான மதரஸாக்களைப்பற்றி பல்வேறுவிதமான கதைகளை வெளியிடுவது வழக்கம். தீவிரவாதத்தின் பிறப்பிடமே மதரஸாக்கள் தான் என்கிற ரீதியில் பல பத்திரிக்கைகள் சென்ற நாட்களில் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. பெரும்பாலான மதரஸாக்களுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயிடமிருந்து தீவிரவாத தாக்குதலை நிகழ்த்துவதற்காக பணம் வருகிறது என்று கூட செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவ்வாறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் தாங்கள் வெளியிட்ட செய்தி எந்த அளவிற்கு ஆதாரப்பூர்வமானது என்பதை ஆராய்வதில்லை. நமக்கு தெரிந்தவரை மதரஸாக்களில் தீவிரவாதம் பயிற்றுவிக்கப்படுகிறது என்று இதுவரை எந்த நீதிமன்றங்களிலும் நிரூபிக்கப்படவில்லை.


150 மில்லியன் முஸ்லிம் ஜனத்தொகை கொண்ட இந்திய நாடு உலகிலேயே இந்தோனேஷியாவிற்கு பிறகு அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக திகழ்கிறது. இதில் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி அறிவு, பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் சமூகம் வகுப்புவாத சக்திகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வருகிறார்கள். அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட கமிஷன்கள் கடந்த காலங்களிலும் இருமுறை முஸ்லிம்களின் இந்த நிலையை ஆராய்ந்து அறிக்கைகளை சமர்பித்திருக்கின்றனர். இருந்த போதிலும் இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்றுவதற்கான எந்த வாசல்களும் அரசாங்கத்தால் திறக்கப்படவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.
இந்தியாவின் பல மாநிலங்களில் குக்கிராமங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். அடிப்படை கல்வியை கற்றுக்கொள்வதற்கான ஒரு பாடசாலை கூட இயங்காத எத்தனையோ கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஏழை பெற்றோர்களாக இருக்கும் முஸ்லிம்கு வேறு வழியின்றி இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்கப்படும் இடமான மதரஸாவிற்கு தங்களுடை பிள்ளைகளை அனுப்புகின்றனர். பொதுவான கல்வியை கற்றுக்கொள்ள முடியாத தங்களுடைய பிள்ளைகள் இஸ்லாமிய கல்வியையேனும் கற்றுக்கொள்ளட்டும் என்று மதரஸாவிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை, வீட்டு வசதி மற்றும் பிற துறைகளில் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. இந்த பாகுபாடு பல முஸ்லிம்கள் மத்தியில் பெரும் மன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேசத்திலிருந்து இத்தகைய பாகுபாட்டை நீக்கிவிட்டால் இந்தியாவில் வளர்ச்சிக்கு முன்பு போல் முஸ்லிம்களால் பங்காற்ற முடியும்.

மற்ற இந்தியர்களுக்கு வழங்குவது போன்ற வாய்ப்புகள் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டால் நிச்சயம் அவர்களால் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். இந்திய முஸ்லிம்களும் அதையே விரும்புகின்றனர். இப்படியாக எல்லா துறைகளிலும் பிந்தங்கி இருக்கின்ற முஸ்லிம் சமூகம் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக முயற்ச்சித்து வரும் வேலையில் அவர்களை பற்றிய தவறான முறையில் மக்கள் மத்தியில் இந்த ஊடகங்கள் காட்டி வருகிறது. தீவிரவாதம், குண்டுவெடிப்பு என்று வந்தாலே முஸ்லிம்கள் மீது சந்தேகம் எழும் அளவிற்கு ஊடகங்கள் முஸ்லிம்களை தவறாக சித்தரித்து வருகின்றனர். இத்தைக பாகுபாடான நிலையை ஊடகங்கள் கைவிடவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.

பெண் தேடும் இளைஞர்களிடம் இணையம் மூலம் நூதன மோசடி செய்த தம்பதி கைது!

புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய்(29). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு செல்போனில் இருந்து போன் வந்தது. பேசிய பெண், தனது பெயர் அகிலா என்றும், தன்னை பற்றிய விபரங்கள் ‘முதலியார் மேரேஜஸ் டாட்காம்’ என்ற திருமண வெப்சைட்டில் பதிவு செய்திருப்பதாகவும், பார்த்து தெரிந்து கொண்டு பேசலாம் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். விஜய், அந்த வெப்சைட்டை பார்த்தால், அகிலா பற்றிய விவரங்கள் இல்லை.

அந்த செல்போன் நம்பருக்கு போன் செய்து பேசினார். அதில் பேசிய பெண், “நீங்கள் வெப்சைட்டில் உறுப்பினரானால் பார்க்கலாம். முதலில் உறுப்பினர் ஆகுங்கள்’’ என்று கூறினார். அதன்படி உறுப்பினர் ஆனார். அதற்கு கட்டணமாக விஜய் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுக்கப்பட்டது.

அப்படியும் அகிலாவின் விவரங்கள் எதுவும் வெப்சைட்டில் இல்லை. பிறகு விஜய் அதே செல்போன் நம்பருக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் என்று வந்தது.
பின்னர்தான் ஏமாந்து போனதை விஜய் உணர்ந்தார். இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இவரை போல மேலும் 4 பேர் புகார் செய்திருந்தனர்.

துணை கமிஷனர் ராதிகா உத்தரவின் பேரில், கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்பரசன் தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த திருமண வெப்சைட் அலுவலகம் பாண்டிச்சேரியில் செயல்படுவது தெரிந்தது. கணவன் & மனைவியான வெங்கடேசன், சித்ரா நடத்தியுள்ளனர். போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். மோசடி செய்து பலரிடம் பணத்தை திருடியது தெரியவந்தது.

வெங்கடேசன் & சித்ரா ஆகியோரை நேற்று முன்தினம் போலீ சார் கைது செய்தனர்.

இந்த நூதன மோசடி குறித்து போலீசார் கூறியதாவது:

கணவன் & மனைவி இருவரும் ஏதாவது ஒரு திருமண வெப்சைட்டை பார்த்து, விண்ணப்பித்திருக்கும் ஆண்களின் செல்போன் எண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

அந்த செல்போன் எண்ணிற்கு சித்ரா போன் செய்து, “நீங்கள் பெண் தேடி விண்ணப்பித்திருந்ததை பார்த்தேன். என்னை பற்றிய விவரங்கள், முதலியார் மேரேஜஸ் டாட்காம் இணையதளத்தில் இருக்கிறது பாருங்கள்’’ என்று கூறுவார்.

அந்த வெப்சைட்டை ஓப்பன் செய்து பார்ப்பதற்காக ரூ.2 ஆயிரம் கட்டணமாக கட்ட வேண்டும் என்று கூறப்படும். அதன்படி அவர்களும் பணத்தை கட்டி பார்த்தால் போனில் பேசிய பெண் பற்றிய விவரங்கள் எதுவும் இருக்காது. செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டால் லைன் கிடைக்காது. இப்படி மோசடி செய்துள்ளனர்.

ஆனால், எங்களது வெப்சைட்டை பிரபலப்படுத்தவும், உறுப்பினர்களை அதிகரிக்கவும், வருமானத்தை பெருக்கவும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாக இருவரும் தெரிவிக்கின்றனர்.

காதலியை விபச்சார கும்பலிடம் விற்றவர் கைது!!


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பி.கொத்தக்கோட்டா மண்டலத்தை சேர்ந்தவர் தாதா பீர் (33), ஆட்டோ டிரைவர். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதனப்பள்ளியில் நடந்த நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்தார்.

அப்போது அதே திருமணத்திற்கு வந்திருந்த மதனப்பள்ளி ரங்காரெட்டி காலனியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது.

இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 15ம் தேதி இரவு, இளம்பெண்ணுக்கு போன் செய்துள்ளார் தாதா பீர். அதை நம்பிய இளம்பெண்ணும் யாருக்கும் தெரியாமல் புறப்பட்டார்.

நகை, பணத்துடன் மகள் திடீரென மாயமானதால் பெற்றோர் மதனப்பள்ளி போலீசில் மறுநாள் புகார் கொடுத்தனர். அதில், ‘தாதா பீர் எங்களது மகளை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றிருக்கலாம்’ என தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணை திருப்பதிக்கு அழைத்துச்சென்ற தாதா பீர், அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் 2 நாள் தங்க வைத்துள்ளார்.பின்னர், ‘வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டால் நாம் யாருக்கும் பயமின்றி நிம்மதியாக வாழலாம்’ எனக்கூறி இளம்பெண்ணை டெல்லிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு, ஜி.வி. சாலையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில், ஒரு விபச்சார புரோக்கரிடம், தான் அழைத்துச் சென்ற இளம்பெண்ணை விற்க பேரம் பேசியுள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் விபச்சார கும்பலிடம் சிக்கிய இளம்பெண்ணை தாதா பீர், தூக்கிச்சென்று ஒரு அறையில் அடைத்துள்ளார்.

3 நாட்களுக்கு பிறகு அந்த அறைக்குள் சென்ற தாதா பீர், ‘2 ஆண்டுகள் விபச்சார தொழில் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம். அதை வைத்து நாம் சொந்த ஊர் சென்று நிம்மதியாக வாழலாம்’ எனக்கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத இளம்பெண்ணை தாதா பீர் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அந்த அறையில் இருந்து தப்பிய இளம்பெண், கடந்த 28ம்தேதி சொந்த ஊர் வந்தார். தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக அன்றிரவு மதனப்பள்ளி போலீசில் இளம்பெண் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு டெல்லியில் இருந்து திரும்பிய தாதா பீர், அங்கல்லு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

காதலனுக்காக கணவனை காட்டிகொடுத்த ஆசிரியை

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பாலவிளையில் ஒருவீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் வசித்து வந்த ஜெயக்கென்னடி கைதுசெய்யப்பட்டார்.

எனினும் ஜெயக்கென்னடி வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் ஊர் திரும்பியிருந்தார். இதனால் அவரது மனைவி விஜூவிடம் விசாரனை நடத்தப்பட்டது.

தனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று விஜூ கூறியுள்ளார். இதனையடுத்து இவரது செல்போனை பரிசோதித்தபோது குலசேகரத்தை சேர்ந்த ஆஸ்டின் ஜெயெராஜ் என்பவரோடு அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து விசாரித்ததில் அவர் கூறியது “எனது கணவர் ஜெயக்கென்னடி பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தார். இதனால் எனக்கும் ஆஸ்டின் ஜெயராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருப்போம்.

திடீரென 3 மாதங்களுக்கு முன்பு கணவர் ஜெயக்கென்னடி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துவிட்டார். இதனால் ஆஸ்டின் ஜெயராஜை என்னால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.


எங்களின் கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் கணவனை ஏதாவது வழக்கில் சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்பிவிட்டால் நாம் சந்தோசமாக இருக்கலாம் என்று ஆஸ்டின் ஜெயராஜ் என்னிடம் கூறினார்.

நானும் அதற்கு ஒத்துக்கொண்டேன். அதற்கான ஏற்பாடுகளை ஆஸ்டின்ஜெயராஜ் செய்வதாக கூறினார். இதற்கு எனது தாயாரும் உடந்தையாக இருந்தார்.

இதையடுத்து எனது வீட்டின் பின்புறம் ஆஸ்டின் ஜெயராஜ் கூறியபடி அவரது நண்பர் ஜெயச்சந்திர பூபதி மற்றும் இன்னொரு நண்பர் சேர்ந்து வெடிபொருட்களை வைத்து உள்ளனர். அதனை போலீசாருக்கும் கூறினர். அவர்கள் சோதனை நடத்தி வெடிபொருட்களை கண்டுபிடித்து கணவரை கைது செய்வார்கள் என்று கருதினேன்.

ஆனால் நான் மாட்டிக்கொண்டேன். போலீசார் எனது செல்போனை சோதித்து பார்த்து எனக்கும், ஆஸ்டின் ஜெயராஜூக்குமான தொடர்பை கண்டுபிடித்துவிட்டனர். இதன் மூலம் வெடிபொருட்கள் வைக்க நாங்கள்தான் காரணம் என்பதையும் தெரிந்து கொண்டனர். கள்ளகாதல் காரணமாக இப்போது நான் சிக்கிக் கொண்டேன்.


இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

விஜூவுடன் அவரது தாயார் ரோஸ்லின், கள்ளக்காதலன் ஆஸ்டின்ஜெயராஜ் அவரது நண்பர் ஜெயச்சந்திர பூபதி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விஜூவும் ரோஸ்லினும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆஸ்டின்ஜெயராஜ், ஜெயச்சந்திர பூபதி இருவரும் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவனை வைத்துத் திருட்டுத் தொழில் செய்யும் பொலிஸார்! (பரிதாபமான வீடியோ இணைப்பு)



இந்தியாவின் பல்வேறுபட்ட தமிழ்ப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் சிறுவன் மூலம் திருட வைத்துப் பிழைப்பு நடத்துகின்றனர் இந்தியப் பொலிஸார்.

இதில் வேடிக்கை என்னவெனில், வாகனம் இறுதியில் உரிமையாளரிடமே போய்ச் சேருகின்றது என்பதுதான்.

அதாவது இச் சிறுவன் மூலம் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டு, உரிமையாளரிடம் தாம் உங்கள் மோட்டார் சைக்கிளை மீட்டு விட்டோம் என்று கூறி அவரிடம் அதனை ஒப்படைத்து விட்டு 5 ஆயிரம் ரூபாய் பணம் வாகன உரிமையாளரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர்.

அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்திலிருந்து திருட்டுப்பணிக்காக நியமிக்கப்பட்ட சிறுவனுக்கு 500 ரூபாயைக் கொடுத்து விடுகின்றனர். மிகுதி 4 ஆயிரத்து 500 ரூபாயைத் தாங்கள் சுருட்டிக் கொள்கின்றனர்.



சம்பளம் கொடுக்காததால் உயரதிகாரிகளை அறையில் பூட்டிய ஊழியர்கள்!!

சென்னை கிண்டில் ஊழியர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஐ.டி. நிறுவன அதிகாரிகள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கிண்டியில் என்எக்ஸ்டி ஜீபோ டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனம் உள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு கடந்த மாதச் சம்பளத்தை இதுவரை தரவில்லை எனக் கூறி, வெள்ளிக்கிழமை முதல் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அத்துடன், நிறுவன உயரதிகாரிகளான பம்மலைச் சேர்ந்த திருமாறன், ஹன்சுமான் மற்றும் முரளி ஆகியோரையும் அறையில் வைத்து பூட்டினர்.
இந்நிலையில், திருமாறனின் மனைவி ஜெயமணி ஷீலா மற்றும் அவரது பெற்றோர், திருமாறனை காணவில்லை என்பதால், இதுகுறித்து நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் சிறை பிடிக்கப்பட்ட செய்தி கேட்டு அதிர்ந்தனர்.
என்எக்ஸ்டி ஜீபோ நிறுவனத்தில் எனது கணவர் வேலைக்குச் சேர்ந்தே ஒரு மாதம் தான் ஆகிறது அவர் இன்னும் சம்பளம் பெறவில்லை என திருமாறனின் மனைவி ஜெயமணி ஷீலா கூறியுள்ளார்.
நிறுவனத்தின் முதலாளி மும்பையில் இருக்கிறார். எனது கணவரும் தொழிலாளி தான்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் விளக்கம் தர முன்வரவில்லை.

ஒரு மாத சம்பளம் தான் பாக்கி உள்ளது. அதற்காக எங்களை பூட்டி வைத்துள்ளனர். எங்களுடைய எம்டி, செவ்வாய் கிழமை பணத்தை கொடுப்பதாக கமிஷனர் ஆபிசில் டெலிகிராம் மூலம் அசூரன்ஸ் கொடுத்துள்ளார் என திருமாறன் கூறியுள்ளார்.
ஆனால், எங்களை சிறைபிடித்துள்ள ஊழியர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பணத்தை கையில் வாங்கிய பின்னர், எங்களை விடுவிப்பதாக சொல்கிறார்கள்.

நாங்கள் பல் துலக்கி 3 நாள் ஆகிறது. சாப்பிடவில்லை என்றார். உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுத்து எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


உஷார‌ம்மா…உஷாரு உங்க‌ பொண்ணுங்க‌ள் எல்லாம் உஷாரு


மார்க்கம் அறியாத பெற்றோர்கள, தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து.., தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்


இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.

சமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி பிளாக் மெயில் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இதுவே பிளாக்மெயில் பேர் வழிகளுக்கு உரமிட்டது போல் ஆகி விடுகிறது. இப்படி பல விஷயங்ககள் அமுக்கப்படுவதால், இன்டர்நெட் குற்றவாளிகளை பிடிப்பது சைபர்கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த 10 வயது பள்ளிச்சிறுமி இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு வலையில் சிக்கி, பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்த சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் அபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயதான இவள் நகரில் உள்ள பிரபல பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் பூரித்துப் போனார்கள்.

இவளது இ.மெயில் முகவரிக்கு தினமும் நிறைய மெசேஜ்கள் வந்தன. அந்த முகவரிக்கு இவளும் பதில் அனுப்புவாள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும்,ஒரு சமயத்தில் அபியுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அந்த முகம் தெரியாத பெண்ணை அபி நண்பராக ஏற்றுக் கொண்டாள். இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர். இப்படியே தொடர்ந்து பழக்கம் சில நாளில் திசை மாறியது. நைசாக பேசி அபியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினாள்.

வெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள். ஆனால், இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை, மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது. இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும்.

மற்ற இணையத்தளங்களிலும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டார். இதனால் போலீசுக்கு செல்ல தயங்கினார். பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அபியின் பெற்றோர், தனியார் துப்பறியும் ஏஜென்சியை அணுகி விபரத்தை தெரிவித்தனர். அவர்கள் சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

இது பற்றி, தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இது போன்று நிறைய புகார்கள் எங்களிடம் வந்துள்ளன. பேஸ்புக்கில் முதியவர்கள் கூட இளையவர் போன்று தோற்றமளிக்கும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்களை ஏமாற்றுகின்றனர். நட்பு விலையில் விழச்செய்து பெண்களை பிளாக் மெயில் செய்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இ-பயங்கர வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெதர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால், இந்தியாவில் போலீசாருக்கு போதிய பயிற்சியும், நுட்பமும் இல்லாததால், சைபர் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இணைய தளத்தில் சாட்டிங்கில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக பெண்கள் முன் ஜாக்கிரதையாக கையாண்டால், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும். வெளிநாடுகள் அல்லது தூரத்தில் இருக்கும் தெரிந்து நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில் மட்டுமே இ-மெயிலில் பேச வேண்டும். முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது, பின்பு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.

முகம் தெரியாதவர்களின் முகவரிக்கு எந்த சூழ்நிலையிலும் போட்டோவை அனுப்ப கூடாது. போட்டோவை வைத்து கூட மார்பிங்” முறையில் ஆபாசமாக சித்தரிக்க முடியும் எச்சரிக்கை மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>> DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’”அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள். கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!! மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள். யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள். தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா? தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள். கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள். இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்.. என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா? என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஒன்றாக பழகிய தோழிகள் தாலி கட்டியதால் திருப்பதியில் பரபரப்பு!!


சிறு வயது முதல் ஒன்றாக படித்து, ஒன்றாக வேலை செய்துவந்த தோழிகள் திடீரென தாலி கட்டி திருமணம் செய்துகொண்டது திருப்பதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை சரமாரியாக அடித்து, உதைத்த பெற்றோர் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் சென்றுவிட்டனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த காத்தாயகுண்டா பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் பிரசன்னா (21), ஜீனா (25). ஆரம்பப்பள்ளியில் ஒன்றாக படிப்பை தொடங்கிய இருவரும் 10-ம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்துள்ளனர். பின்னர், படிப்பை நிறுத்திவிட்டு அங்குள்ள பால் டிப்போவில் வேலை செய்து வருகின்றனர்.

இருவரும் நெருங்கிய தோழிகள். எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்களாம். ஒன்றாகவே வேலைக்கு வருவார்கள். ஒன்றாகவே திரும்பி செல்வார்கள். வெளியில் போவதென்றாலும் சேர்ந்தே சென்று வருவார்கள். சமீபத்தில் ஒருநாள், அவர்கள் பேசும்போது, திருமணம் நடந்தால் வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்குமே என்று கூறி வருத்தப்பட்டுள்ளனர். வேறொருவரை திருமணம் செய்தால்தானே பிரிய வேண்டும். நாம் இருவருமே திருமணம் செய்துகொள்ளலாமே என்றும் பேசியிருக்கின்றனர்.

வீட்டில் இதுபற்றி பேசவும் முடிவெடுத்தனர். அப்பா, அம்மாவிடம் இதுபற்றி சொன்னார் பிரசன்னா. அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். ஜோக் அடிக்கிறியா? என்று கேட்டு, அவர்கள் விட்டுவிட்டனர். ஜீனாவின் பெற்றோரும் இதை பெரிதுபடுத்தவில்லை. இதையடுத்து, மீண்டும் இருவரும் பேசினர். வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். நேற்று காலை இருவரும் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினர்.

திருப்பதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். அங்கு மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர், பிரசன்னாவின் கழுத்தில் ஜீனா தாலி கட்டியுள்ளார். புதுமண தம்பதி முதலில் பிரசன்னாவின் வீட்டுக்கு சென்றனர். இருவரும் மாலையும், கழுத்துமாக வீட்டு வாசலில் நிற்பதை பார்த்து பிரசன்னாவின் அப்பா, அம்மா அதிர்ச்சி அடைந்தனர். தகவல் தெரிந்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வேடிக்கை பார்க்க கூடினர்.

அவமானமாக கருதிய பெற்றோர், நடு வாசலில் வைத்தே பிரசன்னாவை சரமாரியாக அடித்து, உதைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்குள் அடைத்தனர். ஜீனாவையும் அடித்து, உதைத்து அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். வீட்டுக்கு வந்த ஜீனாவை அவரது அப்பா, அம்மாவும் அடித்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் இதுபற்றி மாறிமாறி விசாரித்ததால் வேதனை அடைந்த இரு வீட்டாரும் வீட்டை பூட்டிக்கொண்டு, மகள்களையும் அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டனர். நெருங்கிய பழகிய தோழிகள் திருமணம் செய்துகொண்டது திருப்பதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பேசியில் மென் பொருட்களை செலுத்தி தனிநபர் செயற்பாட்டை உளவு பார்த்த நிறுவனம்

கடந்த சில மாதங்களாக கூகிளின் அன்றொயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பேற்படுத்தும் மென்பொருளினால் அதிகரித்த தாக்குதல்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் ஏற்கனவே உளவுபார்க்கும் மென்பொருள் இவற்றில் பொருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Carrier IQ என்ற மென்பொருளானது அமெரிக்கக் கைத்தொலைபேசி வலையமைப்புகளால் எவ்வாறு தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

மில்லியன்கணக்கான கைத்தொலைபேசிகளில் இக்கண்காணிப்பு மென்பொருள் குறுஞ்செய்திகளை வாசித்து அவற்றைப் பரிமாற்றுகின்றதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது தனிநபர் விடயங்களில் அத்துமீறுகின்றதென்ற கோபத்தை எழுப்பியுள்ளது.

இந்தக் கண்காணிப்பு மென்பொருளானது நியமமாகவே HTC கைத்தொலைபேசிகளிலும் பல அன்றொயிட் மற்றும் சில Blackberries களிலும் காணப்படுகின்றது.

எனினும் இந்த மென்பொருளினைத் தாங்கள் அக்கைத்தொலைபேசியின் செயற்பாடுகளைத் தொகுக்கவே பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது இதனைத் தயாரித்த Eckhart நிறுவனம்.

எனினும் இதன் வாக்குமூலத்தின் மூலம் இது இந்த மென்பொருளினால் தகவல்களைப் பதிவதோடு மட்டுமல்லாது அதனை Carrier IQ இனைத் தயாரித்த நிறுவனத்திற்குத் திருப்பியனுப்பவும் செய்கின்றதென்பது வெளிப்படையாக்கப்பட்டுள்ளது.

பன்றிகளுடன் நிர்வாணமாக வாழும் இளம் பெண்!

கலையார்வம் உள்ள பெண்ணொருவர் நிர்வாணமான நிலையில் பன்றிகள் உள்ள கண்ணாடிக் கூடு ஒன்றில் பூட்டிக் கொண்டுள்ளார்.


விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவுமுறைகளைக் கண்டறிவதற்காக Miru Kim என்ற பெண் பன்றிகளுடன் நான்கு நாட்கள் வாழுகின்றார்.

குறித்த பெண் பன்றிகளுடன் சாப்பிட்டு அதனுடனே உறங்கியும் வருகின்றார். அமெரிக்காவில் இடம்பெற்ற Miami's Art Basel என்ற திருவிழாவின் போது தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பன்றிகளுடன் நான்கு நாட்கள் வாழ்ந்த பெண் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் பன்றிகளை விரும்பினேன், பன்றிகள் என்னை விரும்பின.

பன்றிகளின் உடற்கூறியல் மற்றும் தோல் என்பன நமக்கு நெருக்கமானவையாக உள்ளதை நான் அவதானித்தேன். இப்படிக் கூறினார் அந்த மாணவி.



நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?


நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.


“தொடரும்” என்றார் மன்னர்.


“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.


“சரி அடுத்து”


“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”


“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”


"அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”


மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.


நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.


ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.


“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.


“சரி எங்கே முதலாவது முட்டாள்?”


அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான ப்ளாக்கிற்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் கொண்டிருக்கும் இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

இந்தியாவை கூறுபோட்டு விற்கிறார்கள்

இந்திய சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை 51 சதவிகிதம் அனுமதிக்கிறார்களாம்! நாம் விளைவித்து, வேலைசெய்து, அறுவடைசெய்து கொடுக்கும் விளைபொருளை ஒரு அமெரிக்கக் கம்பெனி நமக்கே விற்று லாபத்தை அவர்கள் நாட்டுக்குக் கொண்டு போவார்களாம்! - இதை நிறைவேற்ற ஒரு கட்சி துடியாய்த் துடிக்கிறது.நாட்டைத் திரும்பவும் ஆங்கிலேயரிடம் நாட்டை ஒப்படைக்கப் போகிறார்களா?

தற்போது இந்தியாவில் சில்லறை வணிகர்கள் மற்றும் அதன் மூலம் வேலைவாய்ப்பில் ஏறக்குறைய4-கோடி பேர் உள்ளனர். இவர்களின் கதி? இந்த சட்டம் மட்டும் நிறைவேறப்பட்டால் குறைந்தது 2-கோடி பேர் மூன்று வருடங்களுக்குள் வேலை இழக்க நேரிடும்!

தற்பொழுது நாம் விளைவிற்கும் பொருள் பல சில்லறை முதலீட்டாளர்கள் மூலம் மக்களைச் சென்றடைகிறது! முக்கிய விஷயம் - இவர்கள் அனைவரும் இந்தியர்கள்,
உழைப்பவர்கள். நம்முடைய உழைப்பை நாம்தான் அனுபவிக்கிறோம்! வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதித்தால் அவர்கள் ஒன்றும் இங்குவந்து வேலை செய்யப் போவதில்லை, ஆனால் லாபத்தை எடுத்துக்கொள்வார்கள்!

எவன் செத்தால் எனக்கென்ன?


இதை அனுமதித்தால் மூன்று வருடங்களுக்குள் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு சொல்கிறது. - இரண்டு கோடி வேலைகளை அழித்துவிட்டு அதில் பாதி வேலைவாய்ப்பைக் கொடுத்தால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? - வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் பெருகும்..


இன்று தேவையின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது! இனி அவர்கள் (வெளிநாட்டுக் கம்பெனிகள்)சொல்லுவதுதான் விலை என்ற நிலை உண்டாகும், தான் ஏமாற்றப்படுகிறோம் என்றுகூட அறியாத அப்பாவி விவசாயி வெளிநாட்டு நிறுவன முதலாளிகளுக்காக உழைத்துக் கொண்டிருப்பான்!.



வெளிநாட்டு நிருவனங்களுடன் கூட்டு சேர்ந்து கடைகளைத் திறக்கும் மிகப்பெரிய இந்திய நிறுவனங்கள் இன்னும் வளரும் - ஏழை இன்னும் ஏழையாவான்!. பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆவான்!




வால் மார்ட் அல்லது டெஸ்கோ போன்ற நிறுவங்கள் அடர்ந்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் சில்லறை வணிகங்கள் ஏறக்குறைய 5-சதவிகிதம்தான் உள்ளது. அவற்றின் வளர்ச்சிகூட நின்றுபோய்விட்டது.. ஏனெனில் அவர்களால் மிகப்பெரிய நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாத நிலை.



அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் வேண்டுமானால் இந்த நிறுவனங்களால் பயன் இருக்கும், ஏனெனில் அவர்கள் எதையும் உற்பத்தி செய்வதில்லை. அனைத்தும் இறக்குமதி மட்டும்தான். பெரிய நிறுவனங்களால் மட்டுமே அதிக பொருட்களைக் குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். ஆனால் இந்தியாவில் நாம் செய்வது உற்பத்தி, அதை நமக்கே விற்பதற்கெதற்கு அந்நிய கம்பனி?



இப்படித்தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு விலையை நிர்ணயிக்கும் உரிமையைக் கொடுத்தார்கள், அதிலிருந்து அதன் விலை வீங்கிக்கொண்டே போகிறது!, ஏன் அரசாங்கத்திலும் 100 சதவிகித அமெரிக்கர்களை உட்கார வைத்துவிட்டு இவர்கள் விலகிவிட வேண்டியதுதானே! 


சில்லரை வணிகத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு எல்லாவற்றையும் அவர்கள் (அந்நிய முதலீட்டாளர்கள்) பார்த்துக்கொள்வார்கள் என்பது கையாலாகாத்தனம். உழவர் சந்தை போன்றதோர் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவந்து விவசாயத்தை மேம்படுத்தலாம்!


ஏன் இந்த திட்டத்தை இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற அரசு முயற்சிக்கிறது?? ஜன லோக்பாலை மறந்துவிட்டார்களா?? எல்லோருக்கும் சிதம்பரத்தின் மறதி வியாதி தொற்றிக்கொண்டதோ? அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு தெரிவித்து சில பத்திரிகைகள் வாய்கிழிய பிரசாரம் நடத்துவதின் பின்னணி என்ன?

நோக்கியா என்-9 போனில் முகம் பார்த்து அடையாளும் காணும் வசதி!

சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும் நோக்கியா நிறுவனத்தை பற்றி அனைவரும் அறிந்த விஷயமே. இத்தகைய பெயர் பெற்ற நோக்கியாவின் என்-9 மொபைலில் பிஆர்1.1 தொழில் நுட்பத்தை அப்கிரேட் செய்ய உள்ளது.

இந்த புதிய தொழில் நுட்பத்தை பற்றி வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதால் , நிறைய பேர் இந்த தொழில் நுட்பத்தினை அப்டேட்டும் செய்துவிட்டனர்.
மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த போனில் பிஆர்1.1 அப்கிரேடு மூலம் உரிமையாளரின் முகத்தை பார்த்து அடையாளும் காணும் வசதியை இந்த போனில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புதுமையான உணர்வை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும். இந்த மொபைலை பயன்படுத்தும் போது இந்த புதிய வசதியின் அருமையை புரிந்துகொள்ள முடியும்.

இதன் உயர்ந்த தொழில் நுட்பம், என்-9 மொபைலுக்கு ஒரு பொலிவான தோற்றத்தை கொடுக்கும். இந்த மொபைலின் முன்புறம் மேனேஜிங் அப்ளிக்கேஷன் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் தொழில் நுட்பத்தில் இன்னும் சில மாறுதல்கள் செய்ய இருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. அந்த மாறுதல்கள் நிச்சயம் கூடுதல் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக இருக்கும். அதற்கு உண்டான செயல்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றது.

'தங்கச்சியா நெனைச்சா, ஆசையை எப்படித் தீர்த்துக்கிறது?'

காக்கிகளிடம் மாட்டிய இருளர் பெண்கள்

கற்பழிப்புப் புகாரில் காக்கிகள் மாட்டுவது புதிதல்ல. ஆனால் இந்த முறை நான்கு இருளர் இனப் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் விவகாரம் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறது. 

திருக்கோவிலூர் அருகேயுள்ள தி.மண்டபம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை, 'ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும்’ என்று, கடந்த 22-ம் தேதி மதியம் போலீஸார் அழைத்துப் போனார்கள். மீண்டும் இரவு 8 மணியளவில் காசி வீட்டுக்கு வந்த போலீஸார், காசியின் அப்பா முருகன், அம்மா வள்ளி, மனைவி லட்சுமி, சகோதரிகள் ராதிகா, வைகேஸ்வரி, தம்பி வெள்ளிக்கண்ணு, தம்பி மனைவி கார்த்திகா ஆகிய ஏழு பேரையும் வம்படியாக ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். விசாரணை முடிந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், சங்கராபுரம் ரோட்டில் உள்ள தைலம் தோப்புக்குள் வண்டியை விட்டிருக்கிறார்கள். அங்கு வள்ளி மற்றும் ஆண்களைத் தவிர்த்து மற்ற நான்கு பெண்களையும் கீழே இறங்கச் சொல்லி தோப்புக்குள் இழுத்துப் போய், நான்கு காவலர்களும் பலாத்காரம் செய்ததாக செய்தி பரவி உள்ளது. இதில் லட்சுமி 3 மாத கர்ப்பிணி. இந்த விவகாரம்தான் தமிழகத்தைச் சூடாக்கி இருக்கிறது.

நான்கு பெண்களையும் புகார் கொடுக்க அழைத்து வந்த பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கச் செயலாளர் பூபதியிடம் பேசினோம். ''தோப்புல இறக்கி விட்டு, தவறான நோக்கத்துல நெருங்கின போலீஸிடம், 'நாங்க உங்க தங்கச்சி மாதிரி. எங்கள விட்டுடுங்க’ன்னு எவ்வளவோ கெஞ்சி இருக்காங்க. அதுக்கு போலீஸ்காரங்க, 'உங்கள தங்கச்சியா நெனைச்சா எங்க ஆசையை எப்படித் தீர்த்துக்கிறது. வந்து படுங்கடி’னு மோசமா பேசி இருக்காங்க. அரை மணி நேரம் மிருகம் மாதிரி நடந்து... அவங்கள நாசமாக்கிட்டுத்தான் ஓய்ஞ்சிருக்காங்க. ராத்திரி முழுக்க அவங்களை அங்கேயே வைச்சிருந்து மறுநாள் விடியகாலம் அஞ்சு மணிக்குத்தான் வீட்டுல விட்டுருக்காங்க. மறுநாள் நான்கு பெண்களும் இல்லாதப்ப போலீஸ்காரங்க வந்து, வீட்டில இருந்த பொருட்களை எல்லாம் உடைச்சிருக்காங்க. 10 பவுன் நகையையும், 2,000 பணத்தையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க. வீட்டுக்குத் திரும்பி வந்தவங்க, போலீஸுக்கு பயந்துக்கிட்டு, உளுந்தூர்பேட்டையில இருக்கிற லட்சுமியோட அப்பா வீட்டுக்குப் போயிட்டாங்க. அதுக்குப் பிறகுதான் என்னைப் பார்த்தாங்க'' என்றார்.

அடுத்துப் பேசிய பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் விழுப்புரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ''நாங்க புகார் கொடுத்ததும், அந்த நான்கு பெண்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பச் சொன்னோம். ஆனா, அவங்க அதைச் செய்யாம, அந்தப் பெண்களை ராத்திரி முழுக்க ஒரு தனி அறையில வைச்சு மிரட்டியிருக்காங்க. அதனால, 'எங்க உறவினர்களை வெளியே விடணும்னுதான் நாங்க அப்படி பொய் சொன்னோம்’னு சொல்லிட்டாங்க. அப்புறம் எங்க சங்க செயலாளர் பூபதி அந்தப் பெண்களிடம் தனியா பேசின துக்கு அப்புறமாதான், போலீஸ்காரங்க மிரட்டினது எங்களுக்குத் தெரிய வந்தது. இந்த வழக்கு சம்பந்தமா சி.பி.ஐ. விசாரணை வேணும்னு போராட இருக்கிறோம்'' என்றார்.

இருளர் சங்கத்தின் திண்டிவனம் வட்ட ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் பிரபா கல்விமணியிடம் பேசினோம். ''போலீஸ்காரங்களுக்கு ஒரு கேஸும் இல்லைன்னா, இருளரில் ஒருத்தரை பிடிச்சுட்டுப் போய், 'பொய் கேஸ்’ போடுறது வழக்கம். 1996-ம் ஆண்டு 'அத்தியூர் விஜயா’ பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு, அந்த நிலைமை கொஞ்சம் குறைஞ்சது. ஆனா, இப்போ திரும்பவும் இருளர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிடுச்சு. அந்த நான்கு பெண்களில் ஒருவருக்கு 17 வயசுதான். அந்த பெண்ணிடம் மட்டும் மூணு போலீஸ்காரங்க மிருகத்தனமாக நடந்திருக்காங்க. அனைத்துக் கட்சியினரையும் அழைச்சு ஒரு கூட்டம் போட்டோம். அதில், டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் போட்டு இருக்கிறோம். அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.
விழுப்புரம் எஸ்.பி. பாஸ்கரனிடம் பேசினோம். ''லட்சுமியோட கணவன் ஒரு பெரிய திருடன். ஒரு டாக்டர் வீட்டுலேயும் கலெக்டர் ஆபீஸ்ல வேலை செய்கிற ஒருத்தரோட வீட்டுலேயும் நகை திருடி இருக்கார். அதோட மதிப்பு ஐந்தரை லட்ச ரூபாய். அதோட, ஒரு கோயில் உண்டியலிலும் பத்தாயிரம் ரூபாய் திருடி இருக்கிறான். அதனாலதான் அவரை கைது செஞ்சாங்க. புகார் சொன்ன பெண்களிடம் நான் பேசினப்ப... 'கணவரை மீட்கத்தான் பொய் சொன்னோம்’, 'எங்களை போலீஸ்காரங்க பாலியல் பலாத்காரம் செஞ்சாங்க’ என்று மாத்தி மாத்திப் பேசுறாங்க. இப்போ திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் விசாரணை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. மத்தபடி நாங்க யாருமே அந்தப் பெண்களை மிரட்டவில்லை'' என்றார்.

போராட்டம் தீவிரம் அடைந்தபிறகே, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெண் தலைமையில் நடக்கும் ஆட்சியிலும், தமிழகப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே!

குற்றமற்றவர் என நிரூபிப்பேன்: சென்னை திரும்பும் கனிமொழி பேட்டி

: "2ஜி ஸ்பெக்டரம் வழக்கில், நான் குற்றமற்றவர் என நிரூபிப்பேன்," என்றார் திமுக எம்.பி. கனிமொழி. 

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி இன்று காலை 9 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். 

டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு திரும்புவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். ஜாமீன் கிடைத்திருப்பது முதல்படி. ஆனால், ஜாமீனில் செல்வதை விட, இந்த வழக்கில் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டுச் செல்வதையே முக்கியமானதாக கருதுகிறேன்," என்றார் கனிமொழி.

திமுக எம்.பி. கனிமொழி மதியம் 1 மணியளவில் சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவரை விமான நிலையத்தில், அவருடைய தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி வரவேற்பார் எனத் தெரிகிறது. 

சென்னை வரும் கனிமொழிக்குத் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுக்கக் காத்திருக்கின்றனர். 

கனிமொழியின் குடும்பத்தாரும், திமுகவின் முன்னாள் அமைச்சர்களும் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்கத் திட்டமிட்டுள்ளனர். 

திமுக மகளிரணியினர் கனிமொழியை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து அறிவாலயத்துக்கு வந்து, அங்கிருந்து வீட்டுக்குச் செல்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் வரையில் கனிமொழியை வரவேற்பதற்கான போஸ்டர்கள், பேனர்கள் சாலையில் இரு மருங்கிலும் வைக்கப்பட்டுள்ளன.

"இனி நீ... பூங்கொடி அல்ல; போர்க்கொடி", "பொறுத்தார் பூமியாள்வார்", "ஏழைகளின் தோழி," "கழகத்தின் தியாகமே", குடும்ப விளக்கே", 'சூரியக் கதிரே" என்றெல்லாம் வாசகம் பொறிக்கப்பட்ட பேனர்கள் சாலையில் நிரம்பி வழிகின்றன.

வாடகைக்காரை வீட்டில் அமுக்கிய விபச்சார வழக்கு நாயகி

விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் சினிமா மற்றும் பத்திரிகை துறையில் பெரும் புகைச்சலைக் கிளப்பியவர் புவனேஸ்வரி.

கொஞ்சநாள் அமைதியாக இருந்த இவர் மீது இப்போது மீண்டும் புகார் கிளம்பியுள்ளது. இந்த முறை வடிவேலு பாணியில், வாடகைக்கு எடுத்த வண்டிக்கு பணமும் கொடுக்காமல், வண்டியைத் திருப்பியும் தராமல் 10 மாதங்களாக இழுத்தடிப்பதாக புகார் தரப்பட்டுள்ளது.

தியாகராய நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (40). பைனாசியர். இவருக்கு சொந்தமான ரூ. 9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகைக்கு எடுத்துள்ளார் புவனேஸ்வரி.

முதல் மாதம் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அதன் பிறகு 10 மாதங்களாக வாடகை பணம் தராமல் காரை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார் அசோக்குமார்.

காரை திருப்பி தருமாறு கேட்டதற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் மனு தியாகராய நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நடிகை புவனேஸ்வரியை விசாரிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் நேரில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

நடிகை புவனேஸ்வரி மீது மடிப்பாக்கம், வடபழனி, கே.கே.நகர் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் மோசடி புகார்கள் உள்ளன. எனவே அதுபற்றியும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்டாலின் சவால்: முடிந்தால் கைது செய்யட்டும் |

அதிகாரத்தைப் பயன்படுத்தி, வீட்டை அபகரித்துக் கொண்டதாக, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்டாலின் எந்நேரமும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று திடீரென டி.ஜி.பி., அலுவலகத்தில் ஆஜராகி, "என் மீது போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, என்னை கைது செய்யுங்கள் எனக் கேட்பதற்காக வந்தேன்' என, சவால் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் சேஷாத்ரி குமார், 64. இவர், சில நாட்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு மனு அளித்திருந்தார். அதில், "தனக்குச் சொந்தமான 2.5 கிரவுண்டு நிலத்தில் உள்ள வீட்டை, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், அவரது நண்பர்கள் ராஜாசங்கர், சீப்ராஸ் மற்றும் ரெயின் ட்ரீ ஓட்டல்கள் அதிபர் சுப்பா ரெட்டி, வேணுகோபால் ரெட்டி மற்றும் சீனிவாசன் ஆகியோர் மிரட்டி, வேணுகோபால் ரெட்டி பெயரில் பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக, ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் ராஜாசங்கர் உள்ளிட்ட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுத்து, வீட்டை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரியிருந்தார்.

நள்ளிரவில் பரபரப்பு: விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியதால், நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டது. திருச்சியில் இருந்து விமானத்தில் வந்த ஸ்டாலின், விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார் என்ற செய்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். ஆனால், ஏதும் நடக்கவில்லை.


வழக்கறிஞர்கள் புடை சூழ...: இந்நிலையில், நேற்று முற்பகல் 11.30 மணிக்கு, ஏராளமான வழக்கறிஞர்கள் புடை சூழ, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு ஸ்டாலின் வந்தார். அங்கு, டி.ஜி.பி., ராமானுஜம், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் இல்லாததால், நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் இரண்டு புகார் மனுக்களை அளித்தார். வெளியில் வந்த ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில், பொய் வழக்கு போடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் கைது செய்யப்பட்ட பின் தான் எப்.ஐ.ஆர்., போடப்படுகிறது. எப்.ஐ.ஆர்., என்பது முதல் தகவல் அறிக்கை என்று தான் எங்கள் ஆட்சியில் இருந்தது. இந்த ஆட்சியில் அது, பொய் தகவல் அறிக்கை என்றாகிவிட்டது. எங்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, டி.ஜி.பி.,யை சந்திக்க வந்தேன். அவர் இல்லாததால், கூடுதல் டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளேன். புகார் அளிக்கப்பட்டுள்ள சொத்துக்கும், எனது குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உதயநிதியின் திரைப்பட நிறுவனத்துக்காக வாடகை ஒப்பந்தம் போடப்பட்ட இடத்தில், என் மகளும், மருமகனும் குடியிருந்து வருகின்றனர். எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கைது செய்யாதது ஏன்? என் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டிருப்பதால், கைது செய்திருக்க வேண்டும். நான் என்னை கைது செய்யுங்கள் என்று கேட்கத்தான் வந்தேன். நில மோசடி என்று யார் புகார் கொடுத்தாலும், உடனடியாக வழக்கு போடுகின்றனர். என் மீதும், தி.மு.க.,வினர் மீதும் உள்ள வழக்குகளை தைரியமாக எதிர்கொள்வோம். சிறுதாவூர் மற்றும் கொடநாடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மீது எப்.ஐ.ஆர்., போட வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார். டி.ஜி.பி., அலுவலகத்திற்கு ஸ்டாலின் வருவதாக வந்த தகவலையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


முதல்வர் மீது நடவடிக்கை எப்போது? டி.ஜி.பி., அலுவலகத்தில் ஸ்டாலின் கொடுத்த இரு புகார் மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது: என் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளதாக, பத்திரிகைகளின் மூலம் தெரிந்து கொண்டேன். அரசியல் ஆதாயத்துக்காக அந்த எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொதுமக்கள் மத்தியில் என் மதிப்பை சீர்குலைப்பதற்காக கொடுக்கப்பட்ட பொய் புகார் இது. அதிகாரத்தில் இருப்பவர்களால், காவல் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. புகாரின் உண்மைத் தன்மையை ஆராயாமல் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டிய காவல் துறை, ஆளும் அ.தி.மு.க.,வின் கருவியாகச் செயல்படுகிறது. என்னை தொந்தரவு செய்வதற்காக, தவறான புகார் கொடுத்தவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அவர் கொடுத்த மற்றொரு மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இரு சொத்துகள், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக கொடநாட்டிலும், சிறுதாவூரிலும் உள்ளன. கொடநாட்டில் மிகப் பெரிய நிலப்பரப்பை தற்போதைய முதல்வர் பெற்றுள்ளார். இதுவரை அவர் மீது, நில ஆக்கிரமிப்பு வழக்கு பதியப்படவில்லை. சிறுதாவூரைப் பொறுத்தவரை, தனக்கு நெருக்கமானவர்கள் பெயரில் பெருமளவு நிலத்தை, தற்போதைய முதல்வர் ஆக்கிரமித்துள்ளார். இது தொடர்பாகவும், அவர் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடரப்படவில்லை. ஏற்கனவே, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் கொடுத்த புகார் கிடப்பில் உள்ளது. எனவே, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது நில ஆக்கிரமிப்பு, மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

செருப்படி வாங்கிய 10 பிரபலங்கள் : ஒரு பிளாஷ்பேக்

சமீபத்தில் ஹர்விந்தர் சிங் எனும் வாலிபர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமை தாக்கியதும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவாரை தாக்கியதும் பரபரப்பாய் பேசப்பட்டது. இச்சூழலில் இந்நேரம் வாசகர்களுக்காக சமீப காலங்களில் பொதுமக்களிடத்தில் தாக்குதலுக்குள்ளான பிரபலங்களை பற்றிய ஒரு பிளாஷ் பேக்...

ஜார்ஜ் புஷ்

பொதுமக்களிடம் செருப்படி வாங்கிய கலாச்சாரத்தை துவக்கி வைத்த பெருமை அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷையே சாரும். தன்னுடைய ஆட்சிகாலத்தில் பொருளாதார தடை எனும் பெயரில் 6 இலட்சம் ஈராக்கிய குழந்தைகளை கொன்ற புஷ் செல்வாக்கிழந்திருந்தார். அச்சூழலில் விடை பெறும் பயணமாக டிசம்பர் 2008 ல் ஈராக் வந்த புஷ் பத்திரிகையாளர்களிடம் பேசி கொண்டிருந்த போது புஷ்ஷின் தவறான ஈராக்கிய கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த முந்ததர் அல் ஜைதி எனும் பத்திரிகையாளர் புஷ்ஷை நாய் என்று திட்டியதோடு தன் 10 அளவு ஷூவை புஷ்ஷை நோக்கி வீசினார். குறி தவறிய போதும் நேரடி ஒளிபரப்பாக இருந்ததால் ஜைதி உலக புகழ் பெற்றதோடு ஈராக்கிய மக்களின் விடை கொடுக்கும் முத்தம் தான் தன் செருப்படி என்றார்.

ப.சிதம்பரம்

உலக அளவில் செருப்படி கலாசாரத்தை துவக்கி வைத்த பெருமை புஷ்ஷுக்கு என்றால் இந்தியாவில் நம்ம உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு அப்பெருமை சாரும். பத்திரிகையாளர்கள் சிபிஐ 1984 சீக்கிய கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லருக்கு எப்பங்குமில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்ததை பற்றி கேட்ட போது பதிலளிக்க மறுத்ததால் ஜர்னைல் சிங் எனும் பத்திரிகையாளர் தன் பாதணிகளை சிதம்பரத்தை நோக்கி வீசினார்

மன்மோகன் சிங்

அஹமதாபாத்தில் ஏப்ரல் 2009 தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் பேசி கொண்டிருந்த போது 21 வயது கணிப்பொறி இஞ்சினியரிங் படிக்கும் மாணவன் ஷூவை வீசினான். எவ்வித நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்று பிரதமர் பெருந்தன்மை காட்டியதும் பிஜேபியின் வெறுப்பு கலாசாரத்தை மோடி தூண்டி விட்டார் என்று காங்கிரஸ்காரர்கள் குறை கூறியதும் சுவையான காட்சிகள்.

பி.எஸ்.எடியூரப்பா

ஏப்ரல் 2009ல் கர்நாடகாவிலுள்ள ஹசன் எனும் இடத்தில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அவரை நோக்கி வீசப்பட்ட செருப்பு குறி தவறி அவரின் மேடையில் விழுந்தது. செருப்பு வீசிய 34 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

எல். கே. அத்வானி

அதே ஏப்ரல் 2009ல் மத்திய பிரதேசத்தில் ஒரு பொது கூட்டத்தில் பிஜேபி மூத்த தலைவர் அத்வானி பேசிய போது முன்னாள் பிஜேபி நிர்வாகி ஒருவர் அத்வானியின் மீது மர செருப்பை வீசினார். மேலும் வீசியவர் அத்வானி ஒரு போலி இரும்பு மனிதர் என்றும் பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றும் கூறினார்.

ஒமர் அப்துல்லா

2010 ஆம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்றத்தின் போது காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா உரையாற்றிய போது பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் துறையை சார்ந்த ஒருவர் தன்னுடைய ஷூவை ஒமர் அப்துல்லாவை நோக்கி வீசினார். பின்னர் அவர் மன நிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது.

சுரேஷ் கல்மாடி

மற்றவர்கள் பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்ட போது காமென்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி தில்லியில் உள்ள சிபிஜ கோர்டில் ஷூவால் தாக்கப்பட்டார். மேலும் தாக்கியவர் இரும்பு கம்பியை கொண்டு கல்மாடியை தாக்க திட்டமிட்டார் என்றும் குற்ற பிண்ணணி உடையவர் என்றும் காவல்துறை கூறியது

எஸ்.பி.எஸ். ரத்தோர்

ருசிகா மானபங்க வழக்கில் குற்றவாளியான ஹரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர் நீதிமன்றத்தில் இருந்து தன்னுடைய காரை நோக்கி சென்று கொண்டிருந்த போது 29 வயது மாணவர் உத்சய் சர்மா மூன்று முறை அவர் முகத்தை குறு கத்தியால் கீறியது பரபரப்பை ஏற்படுத்தியது

பிரசாந்த் பூஷன்

நடத்தப்பட்ட சம்பவங்களிலேயே ஜனநாயக உரிமையான பேச்சுரிமை குறித்த விவாதத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியது. காஷ்மீரின் நிலை குறித்து முடிவெடுக்க காஷ்மீரிகளுக்கே உரிமை உண்டு என்று கருத்து தெரிவித்தமைக்காக இந்து வலது சாரி குழுக்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.

அர்விந்த் கேஜ்ரிவால்

பிரசாந்த் பூஷன் தாக்குதலுக்கு பின் சில நாட்கள் கழித்து அன்னா ஹசாரேவின் குழுவிலுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் லக்னோவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்தும் போது ஊழல் விவகாரத்தில் மக்களை தவறாக திசை திருப்புகிறார். என்று கூறி செருப்பை வீசினார். இது குறித்து கருத்து தெரிவித்த அன்னா ஹசாரே செருப்பை மட்டுமல்ல குண்டுகளை தாங்க தம் குழு தயார் என்றார்.

நடிகர் விஜய் டிவி தொகுப்பாளர் ஆகிறார்.


இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகர் விஜய், சின்னத்திரை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன? அதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே இதனை வரவேற்பார்கள்.

வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்று பணம் சம்பாதித்த புத்திசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும்.
இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் தமிழில் நடத்தினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி தோல்வியில்தான் முடிந்தது.

அதன்பின் இதே மாதிரியான நிகழ்ச்சிகளை வெவ்வேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும், முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம்.

அதன்படி, நிகழ்ச்சியை பிரபலமான ஒருவரை வைத்துதான் நடத்த வேண்டும் என்பது நிகழ்ச்சியாளர்களின் ஒரே எண்ணம். நிகழ்ச்சியை நடத்த பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அவர்களின் ‌ஒ‌ரே சாய்ஸ் விஜய் மட்டுமே.

எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் என்று விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இறங்கி வந்தாராம் விஜய்.

இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம்.

பெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள்–ஓர் அபாய எச்சரிக்கை!.


பெண்களின் மானம் சார்ந்த தகவல் என்பதால், நீண்ட பதிவாக எழுதி இருகிறோம். குறிப்பாக பெண்களே!, உங்களின் மானத்திற்கும், பாதுகாப்பிற்கும் இந்த கட்டுரை முக்கியம் என்பதால் சிரமம் பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெற வேண்டும், மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் நம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதே வேலையில், மறுபுறம் நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன் படுத்தினால் மனித குலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும்.ஆனால் இன்றைய உலகின் எதார்த்தம் அப்படியே தலைகீழாக இருக்கிறது. தன் சக மனிதனுக்கு கேடு விளைப்பதையே தன் தினத் தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கி விட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தொலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்கு தெரியாமல் உங்களின் ஒவ்வொரு அசைவையும் ஒருவன் கண்காணிக்கிறான் என்றால் உங்களால் சாதாரணமாக இருக்க முடியுமா.. ? .. ம்ம முடியும்.. என்னென்றால் அவன் கண்காணிப்பது உங்களுக்கே தெரியாதே…!!. ஒரு அதிர்ச்சியான உண்மை நீங்கள் பெண்களாய் இருந்தால் இந்த கட்டுரை உங்களை பற்றியது தான் கவனமாக படியுங்கள்.
கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. இதை எத்தனை பேர் நல்லவிஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியே மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்குபெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதை தடுக்கும் ,தவிர்க்கும் வழிமுறையையும் இக்கட்டுரையில் இன்ஷாஅல்லாஹ் விரிவாக காண்போம்.

ரகசிய கேமராக்கள் :

ரகசிய கேமராக்களில் பலவிதங்கள் இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எந்த பொருளை நினைகிரீர்களோ அதை எடுத்துகொல்லுங்கள் அதில் கேமராவை பொருத்தி கண்காணிக்க முடியும் ! என்றால் பார்த்துகொல்லுங்களேன்.

பொது இடங்களில் கேமிராக்கள் :

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கேமராவுடன் உள்ள அலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியா வண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் பெரும் அளவில் பெருகிவிட்டனர்.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சில மாணவிகளே தன் சக மாணவிகளின் அந்தரங்க விஷயங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. எனவே விடுதியில் தங்கும் மாணவிகள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும். சமீபத்தில் ஒரு கல்லூரி விடுதியில் தன் காதலனுக்கு காண்பிப்பதற்காக விடுதி கழிவறையில் கேமரா பொருத்தி ஒரு பெண் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :


பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

அதுமட்டுமின்றி தேன்நிலவு செல்லும் ஜோடிகளை குறிவைத்து ஹோட்டல் ரூம்களில், கழிவறையில் கேமராக்கள் பொருத்தும் கும்பலும் அதிகரித்துள்ளது.ஆதலால் முதலில் வெளி இடங்களில் எங்கு தங்கினாலும் ,நம்மை யாரும் திருட்டுத்தனமாக கண்காணிகிறார்களா என்பதை நாம் முதலில் கண்காணிக்க வேண்டும். ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும்விடுதியா என்று முடிந்தவரை உறுதிசெய்து கொள்ளவேண்டும். மேலும் அதை போல் குற்றால சீசனுக்கு குளிக்க செல்லும் குடும்ப பெண்களை செல்போன், கேமரா மூலமாக படமெடுக்கும் சம்பவங்களுக்கும் நடைபெற்றுவருகிறது.குற்றாலத்தை பொருத்தவரை அது பெண்கள் குளிக்க பாதுகாப்பான இடமல்ல என்பதை ஆண்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.


பாதுகாப்பு காரணம் என்று கூறிக்கொண்டு உயர்ந்த இடத்தில் உட்காந்து கொண்டு போலீசாரே குளிக்கும் பெண்களை பார்த்து ஜொள்ளுவிடும் கொடுமையும் குற்றாலத்தில் நடக்கிறது. நெடுந்தொலைவு பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பேருந்துப் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பேருந்துப் பயணம் செய்யும் போது அந்தப் பேருந்துகள் ஊருக்கு வெளிப்புறங்களில் உள்ள உணவங்களில் நிறுத்தப்படுகின்றன அல்லவா?. பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் அக்தகைய உணவங்களில் உள்ள கழிவறையைப் பயன் படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிப் பட்ட உணவகங்களில் உள்ள கழிவறைகளில் வீடியோ கேமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர் இந்தக் கோணல் புத்திக்காரர்கள்.

கழிவறைகளின் மேலே உள்ளே விளக்குகிலோ அல்லது சுவற்றில் இருக்கும் குழாயிலோ அல்லது கழிவறையின் கதவிலோ இந்த வீடியோக் கேமராக்களைப் பொருத்தி விடுகின்றனர் இந்தக் கொடூரர்கள். இந்தப் படு பாதக சதிச் செயலைப் பற்றி ஏதும் அறியாமல் பேருந்தில் வந்த பெண்கள் தங்கள் இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ள அந்தக் கழிவறையை பயன்படுத்தி விடுகின்றனர். அங்கே மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் கேமராக்கள் மூலமாக அந்தப் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்த அந்தக் கும்பல் அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர்.

பெண் பித்தும், பணத்தாசையும் பிடித்த இந்தக் கொடுரக் கூட்டம் பெண்களின் ஆபாச வீடியோவை சிடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம்வரை கொண்டு சென்றும் பணம் பார்த்து விடுகின்றனர். கழிவறைக்குள் வைத்து திருட்டுத் தனமாக படம் பிடிக்கப் படும் இந்த ஆபாசக் காட்சிகளை எந்த அருவருப்பும் இல்லாமல் பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருப்பது அதை விட வேதனையான விஷயம். இந்த ஆபாசக் காட்சிகளை தங்கள் அலைபேசிகளில் ஏற்றிக் கொண்டு அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது.

இப்படிக் கூட அசிங்கமான காரியங்களில் ஈடுபடுவார்களா என்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த அவலச்செயல் எப்படிக் கண்டு பிடிக்கப் பட்டது என்றால், திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் கார்ப்பரேஷன் பாத்ரூமில் ஓணம் பண்டிகைக்கு பாத்ரூமை வெள்ளை அடித்து சுத்தம் செய்யும்போது பெண்கள் பாத்ரூமில் 9 இடத்தில் கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேமராவை கழிவறையின் மேலே தொங்கும் மின்விளக்கில் பொருத்தி படம் பிடித்து வந்து உள்ளனர்.

இதை அறிந்த கேரளா பிரஜா என்ற பெண்கள் அமைப்பினர் அந்தக் கழிவறையைப் பூட்டி பெரும் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய அந்தப் பரபரப்பினால் தான் இத்தகைய ஒரு கொடுஞ்செயல் வெளியில் தெரியவந்து உள்ளது. இது கேரளாவில் தானே நடந்தது என்று நாம் சாதாரணமாக எண்ணிக் கொள்ளக் கூடாது, இந்தப் பேருந்து நிலைய சம்பவம் நமக்கு ஒரு உதாரணம்தான், அங்கே செய்தவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள், இன்னும் அகப்படாதோர் எத்தனையோ.

நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் இது போல கழிவறையில் கேமரா வைத்துப் படம் பிடிக்கப்பட்ட சம்பவம் வெளியில் தெரிந்து பரபரப்பை ஏற்படுத்த வில்லையா?. இது போல இன்னும் எத்தனை இடங்களில் எத்தனை வக்கிரர்கள் இந்த செயலை செய்து வருகின்றனரோ?. எத்தனை அப்பாவிப் பெண்களின் அந்தரங்கங்கள் கொடூரர்களின் கண்களுக்கு விருந்தாக்கப் பட்டதோ?. இந்தப் படுபாதக செயல்களுக்கு யார் யார் உடந்தையாக இருக்கின்றனரோ? தெரியவில்லை.

இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல பொது இடங்களில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்துவதை அறவே தவிர்த்து விடலாம் அல்லவா?. அப்படியே அந்தக் கழிவறையைப் பயன் படுத்த வேண்டிய காட்டாய சூழல் என்றாலும் கூட இது போன்ற வக்கிரங்கள் எதுவும் கழிவறையினுள் இருக்கின்றனவா என்பதை சோதித்து நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு பின்னர் பயன்படுத்தலாம்.

மருத்துவமனைகள் கவனம் தேவை :

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்கதுணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடைமாற்றும் அறைகளும் அங்கு பொருத்தப் பட்டிருக்கும் கேமிராவும் ,கண்ணாடிகளும்:

நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக் கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்கப் பொறுத்தப் பட்டிருக்கும். வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

1) TRAIL ROOM CAMERAக்களை கண்டறியும் முறை :

TRAIL ROOMல் இருந்துகொண்டு செல்போன் மூலமாக யாருகாகவாவது CALL செய்து பார்க்கவேண்டும். உங்கள் அழைப்பு நீங்கள் அழைத்தவரை சென்றடைந்தால் அந்த ரூமில் ரகசிய கேமராக்கள் இல்லை. ஒருவேளை உங்கள் அழைப்பு நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும் CALL செல்லவில்லை என்றால் அங்கு ரகசிய கேமரா இருப்பது உறுதி என்று ELECTRONIC பொறியாளர்கள் கூறுகிறார்கள்.

2) TRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை ….

இவைகளைகப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும் போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறு பக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும்.

இவைகளை சுலபமாக கண்டறியும் முறை :

உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவேளை தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி, ஒரு வேலை இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்துகொள்ளலாம்.

வேவுபார்க்கும் கண்ணாடி..!
FACEBOOK புகைப்படங்களும் PHOTOSHOP உக்தியும் :

இது போதாது என்று FACEBOOK-TWITTER-ORKUT போன்ற தளங்களில் பல பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOAD செய்து இருகிறார்கள் அதை தேடி டவுன்லோட் செய்துகொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போஸ்டரோடு இணைத்து ,அதை இன்டர்நெட்டில் விற்று காசு பார்கிறது மற்றொரு வக்கிர சைகோ கூட்டம்…

பெண்களிடம் facebook போன்ற பொதுத்தளங்களில் PHOTOக்களை UPLOAD செய்ய வேண்டாம் என்றால்.. அதற்க்கு பல பெண்கள் இது எங்கள் உரிமை அப்படி இப்படி என்று பேசிக்கொண்டு நாம் சொல்வதை கேட்பதில்லை.. இறுதியில் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறிவைத்தே நடந்து வருகிறது.அப்பாவியான பலபெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள்.

இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப்- பர்தா அணியும் இஸ்லாமிய பெண்கள் 80% இந்த பிரச்சினையில் இருந்து இயல்பாகவே பாதுகாக்கபடுவார்கள் இன்ஷாஅல்லாஹ் இருப்பினும் இவை பற்றிய விழிப்புணர்வு முழுமையாக தேவை ஏனெனில் ஹோட்டல், தங்கும் விடுதியில் இருக்கும் படுக்கை அறை,கழிவறை போன்ற இடங்களில் இந்த கயவர்களின் கைவரிசை இருக்கலாம் ஆதலால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…

எல்லா இடங்களிலும் நாம் சந்தேகபடமுடியாது, எல்லா இடங்களையும் இது நம்பகமானது என்று நம்பவும் முடியாது. ஆதலால் முடிந்தவரை நம்பகத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆண்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுப் பெண்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மிக அத்தியாவசிய தேவை, அவசரம் என்றால் மட்டுமே பொது குளியலறை ,கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும்


ரகசிய கேமராக்களை கண்டறியும் கருவி :