‘why this கொல வெறிடி..’ பாடலுக்கு ரஜினியை நடனம் ஆட கேட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா இயக்கும் ‘3′ படத்தில் தனுஷ் நடிக்கிறார்.
இப்படத்துக்காக தனுஷ் எழுதி பாடிய, ‘why this கொல வெறிடி’ பாடல் சூப்பர் ஹிட்டாகி விட்டது. இப்பாடலை சிரித்தபடி கேட்டு ரசித்தார் ரஜினிகாந்த்.
பாடலுக்கான சூழல் மற்றும் அதற்கான அர்த்தம் என்ன என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டார். அதை அவர் விளக்கினார்.
ஏற்கனவே ‘3′ படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினியை நடிக்க கேட்க எண்ணி இருந்தார் ஐஸ்வர்யா. இந்நிலையில், ‘why this கொல வெறிடி’ பாடல் பிரபலமாகிவிட்டதால் அந்த பாடலுக்கு வலு சேர்க்கும் விதமாக ரஜினியை நடனம் ஆட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ரஜினியும் ஓ.கே. சொல்லி இருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி நடிப்பது உறுதியானால் படத்தில் 2 முறை இப்பாடலை இடம்பெற செய்ய ஐஸ்வர்யா திட்டமிட்டிருக்கிறார்.
சோலோவாக தனுஷ் பாடுவதுபோல் ஒரு முறையும், ரஜினியுடன் சேர்ந்து மற்றொரு முறை பாடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.
|
No comments:
Post a Comment