கடந்த சில மாதங்களாக கூகிளின் அன்றொயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பேற்படுத்தும் மென்பொருளினால் அதிகரித்த தாக்குதல்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகின்றது.
ஆனால் ஏற்கனவே உளவுபார்க்கும் மென்பொருள் இவற்றில் பொருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
Carrier IQ என்ற மென்பொருளானது அமெரிக்கக் கைத்தொலைபேசி வலையமைப்புகளால் எவ்வாறு தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
மில்லியன்கணக்கான கைத்தொலைபேசிகளில் இக்கண்காணிப்பு மென்பொருள் குறுஞ்செய்திகளை வாசித்து அவற்றைப் பரிமாற்றுகின்றதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது தனிநபர் விடயங்களில் அத்துமீறுகின்றதென்ற கோபத்தை எழுப்பியுள்ளது.
இந்தக் கண்காணிப்பு மென்பொருளானது நியமமாகவே HTC கைத்தொலைபேசிகளிலும் பல அன்றொயிட் மற்றும் சில Blackberries களிலும் காணப்படுகின்றது.
எனினும் இந்த மென்பொருளினைத் தாங்கள் அக்கைத்தொலைபேசியின் செயற்பாடுகளைத் தொகுக்கவே பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது இதனைத் தயாரித்த Eckhart நிறுவனம்.
எனினும் இதன் வாக்குமூலத்தின் மூலம் இது இந்த மென்பொருளினால் தகவல்களைப் பதிவதோடு மட்டுமல்லாது அதனை Carrier IQ இனைத் தயாரித்த நிறுவனத்திற்குத் திருப்பியனுப்பவும் செய்கின்றதென்பது வெளிப்படையாக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment