Friday, December 2, 2011

கோக கோலா குடித்த சிறுவன் பலி

சீனாவின் ஜிலின் பகுதியில் கோக கோலா நிறுவனத்தின் பால் பொருளை குடித்த 10 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகி உள்ளான்.


இதில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாய் உள்ளிட்ட மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடித்த பால் பொருள் விஷ தன்மை வாய்ந்தது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மினிட் மெய்ட் பல்பி சூப்பர் மில்லிக்கி எனப்படும் பால் பொருளை குடித்ததால் அவர்கள் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கோக கோலா நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புக்களில் ஒன்றாகும். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment