எனினும் ஜெயக்கென்னடி வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் ஊர் திரும்பியிருந்தார். இதனால் அவரது மனைவி விஜூவிடம் விசாரனை நடத்தப்பட்டது.
தனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று விஜூ கூறியுள்ளார். இதனையடுத்து இவரது செல்போனை பரிசோதித்தபோது குலசேகரத்தை சேர்ந்த ஆஸ்டின் ஜெயெராஜ் என்பவரோடு அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரித்ததில் அவர் கூறியது “எனது கணவர் ஜெயக்கென்னடி பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தார். இதனால் எனக்கும் ஆஸ்டின் ஜெயராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருப்போம்.
திடீரென 3 மாதங்களுக்கு முன்பு கணவர் ஜெயக்கென்னடி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துவிட்டார். இதனால் ஆஸ்டின் ஜெயராஜை என்னால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
எங்களின் கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் கணவனை ஏதாவது வழக்கில் சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்பிவிட்டால் நாம் சந்தோசமாக இருக்கலாம் என்று ஆஸ்டின் ஜெயராஜ் என்னிடம் கூறினார்.
நானும் அதற்கு ஒத்துக்கொண்டேன். அதற்கான ஏற்பாடுகளை ஆஸ்டின்ஜெயராஜ் செய்வதாக கூறினார். இதற்கு எனது தாயாரும் உடந்தையாக இருந்தார்.
இதையடுத்து எனது வீட்டின் பின்புறம் ஆஸ்டின் ஜெயராஜ் கூறியபடி அவரது நண்பர் ஜெயச்சந்திர பூபதி மற்றும் இன்னொரு நண்பர் சேர்ந்து வெடிபொருட்களை வைத்து உள்ளனர். அதனை போலீசாருக்கும் கூறினர். அவர்கள் சோதனை நடத்தி வெடிபொருட்களை கண்டுபிடித்து கணவரை கைது செய்வார்கள் என்று கருதினேன்.
ஆனால் நான் மாட்டிக்கொண்டேன். போலீசார் எனது செல்போனை சோதித்து பார்த்து எனக்கும், ஆஸ்டின் ஜெயராஜூக்குமான தொடர்பை கண்டுபிடித்துவிட்டனர். இதன் மூலம் வெடிபொருட்கள் வைக்க நாங்கள்தான் காரணம் என்பதையும் தெரிந்து கொண்டனர். கள்ளகாதல் காரணமாக இப்போது நான் சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
விஜூவுடன் அவரது தாயார் ரோஸ்லின், கள்ளக்காதலன் ஆஸ்டின்ஜெயராஜ் அவரது நண்பர் ஜெயச்சந்திர பூபதி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விஜூவும் ரோஸ்லினும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆஸ்டின்ஜெயராஜ், ஜெயச்சந்திர பூபதி இருவரும் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
|
No comments:
Post a Comment