இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகர் விஜய், சின்னத்திரை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன? அதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே இதனை வரவேற்பார்கள்.
வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்று பணம் சம்பாதித்த புத்திசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும்.
இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் தமிழில் நடத்தினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி தோல்வியில்தான் முடிந்தது.
அதன்பின் இதே மாதிரியான நிகழ்ச்சிகளை வெவ்வேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும், முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம்.
அதன்படி, நிகழ்ச்சியை பிரபலமான ஒருவரை வைத்துதான் நடத்த வேண்டும் என்பது நிகழ்ச்சியாளர்களின் ஒரே எண்ணம். நிகழ்ச்சியை நடத்த பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அவர்களின் ஒரே சாய்ஸ் விஜய் மட்டுமே.
எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் என்று விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இறங்கி வந்தாராம் விஜய்.
இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம்.
|
No comments:
Post a Comment