Saturday, June 11, 2011

இந்தமாதிரியும் தமிழில் வலைப்பக்கங்கள் உள்ளதா? சொல்லவே இல்லே


 
 இந்த பதிவில் அனைவரையும் கவரும் வகையில் விளங்கும் ஐந்து தமிழ் வலை தளங்களை பகிர்கின்றேன் .

முதலில்சாப்பாடு. நீங்கள் காணப்போகும் இத்தளத்தில் எண்ணற்ற சமையல் குறிப்புகளை சிறந்த சமையல் நிபுணர்களை கொண்டு வழங்கியிருக்கிறார்கள் .சைவம் ,அசைவம் ,டயட் என அனைத்து பிரிவுகளும் உள்ளன .இவை அனைத்தையும் ருசித்து மகிழ இங்கே சுட்டுங்கள்

அடுத்தபடியாக அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளை உள்ளடக்கிய தளம் .மேலும் பல்வேறு விஷயங்கள் இங்குள்ளன .திரை நாயகர்கள் ,நாயகிகள் படங்கள் நல்ல தரத்தில் பார்த்து மகிழ இங்கே சுட்டவும் .

அடுத்தபடியாக ஒரு மிகச்சிறந்த செய்தி பகிர்வுத்தளம் .இந்த தளத்திற்கு சென்றால் செய்தி தாள்களுக்கான இணைய தளங்களை தேடி அலையவேண்டியது இல்லை .அனைத்து பத்திரிகைகளுக்குமான இணையதள இணைப்பு இத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது .இதற்கு இங்கே சுட்டவும் .

அடுத்து தமிழ் நாவல் பிரியர்களுக்கு ஓர் பயனுள்ள வலைப்பூ .தமிழில் பிரபலமான அத்தனை நாவல்களையும் இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும் .மேலும் பல்வேறு பயனுள்ள தகவல்கள் உள்ளன .வலைபூவிற்கு செல்ல இங்கே சுட்டவும் .
அடுத்து செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஒரு சிறந்த தளம் இங்கே.

WINDOWS 7 பற்றிய மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.

கண்களுக்கு பாதிப்பில்லாமல் கணினியை பயன்படுத்த விண்டோஸ் 7 ல் ஒரு அருமையான வசதி உள்ளது .

கணினி முன்பாக வெகுநேரம் உட்கார்ந்து பணியாற்றும்போது கண்களில் வலி ஏற்படலாம் .முக்கியமாக பதிவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது .நாள் முழுவதும் கணினி முன் உட்காருவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண்ணாடி அணியக்கூடிய சூழ் நிலை வரலாம் .

கீ போர்டில் Shift+Left Alt+Print Screen ஆகிய கீகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் கணினி திரை கருப்பாக மாறிவிடும் . தேவையான பகுதிகள் மட்டும் கண்ணுக்கு தெரியும்.இதன் மூலம் நமது கண்களை பாதுகாக்கலாம் .இதை disable செய்ய மீண்டும் அதே கீகளை அழுத்தவும் .

Windows 7 ல் இன்னொரு அருமையான வசதி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு புரோகிராமுக்கும் நாம் விரும்பிய short cut key அமைக்கலாம் .

உதாரணமாக போட்டோஷாப்புக்கு ஷார்ட்கட் கீ அமைக்க வேண்டுமெனின் போட்டோஷாப் ஷார்ட் கட் ஐகானில் ரைட் கிளிக் செய்து properties தேர்வு செய்யவும் .இப்போது shortcut tab ல் shortcut key என்னுமிடத்தில் Ctrl+Alt+E இது போல வேறு எழுத்துக்களை பயன்படுத்தியும் ஷார்ட் கட் அமைக்கலாம் .அல்லது Function கீகள் அதாவது F1 F6 இது போன்ற கீகளை பயன்படுத்தியும் ஷார்ட் கட் அமைக்கலாம் .


விண்டோஸ் 7 ல் பலரும் விரும்பாத ஒரு வசதி டாஸ்க் பாரில் அனைத்து விண்டோக்களும் ஒரே டேபில் இணைந்துவிடும் .


இவை தனி தனி TAB ஆக அமைய ஒரு SETTING .TASK BAR PROPERTIES தேர்வு செய்து Task bar buttons ல் never combine ஐ தேர்வு செய்து வெளியேறவும் .இப்போது அனைத்து விண்டோக்களும் தனி தனி டேபில் வந்திருப்பதை காணலாம் .


பதிவு பிடித்திருந்தால் கருத்திடவும் வாக்களிக்கவும் தயங்காதீர்கள் .

இந்தியாவிலே முதன்முதல் பிளாஸ்டிக்கை தடை செய்த மாவட்டம் கன்னியாகுமரி

இந்தியாவின் தெற்கு முனையான குமரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தின் மளிகை கடையில் சென்று மளிகை பொருள் வாங்கினால் கூட பிளாஸ்டிக் பையில் பொருள் கிடைக்காது .
 
 பொருள் வாங்க பை எடுத்து செல்லவில்லை என்றால் பை எடுத்து வர சொல்லி கடைகாரர் திருப்பி அனுப்பிவிடுவார் .சாதாரண பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை எங்கு சென்று பொருள் வாங்கினாலும் இதே நிலைதான் .உண்மையிலேயே இது ஒரு பெரிய விஷயம்தான் .
பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்து பல மாதங்களாகியும் அதற்க்கான செயல் பாட்டை எங்குமே காண முடியவில்லை .ஆனால் விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது .
இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜேந்திர ரத்னு அவர்களின் அதிரடி நடவடிக்கை .அது மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களும் முக்கிய காரணம் .குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் மக்களிடம்கூட பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நன்றாக உள்ளது .எந்த ஒரு நல்ல திட்டமும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் .
எனினும் பேருந்துகளில் பயணிக்கும்போது குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகள் தென்படுகின்றன .இது குறித்து அங்குள்ளவர்களிடம் வினவியபோது ,கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது .ஆனால் அருகிலுள்ள நெல்லை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதால் அங்கிருந்து வருபவர்கள் மூலமாக இங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் வந்துவிடுகின்றன என்று கூறினார்கள் .
எனவே தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பொது மக்கள் குமரி மாவட்டத்தை பின்பற்றி தமிழகத்தின் சுற்றுசூழலை வளப்படுத்தவேண்டும் .

பலே கன்னியாகுமரி மாவட்டம்!

கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கப் போறீங்களா? கீழே உள்ள எண்களை கவனித்தீர்களா?

நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலானஎண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.
கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .


குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .

ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி???

என் வயது 47. என் மனைவி, என்னை விட, ஐந்து மாதம் பெரியவள். எங்களுக்கு, 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். திருமணமான வேகத்தில் பிறந்தவர்கள். உறவில் நாட்டமில்லாமல், என் கட்டாயத்தின் பேரில், எப்போதாவது ஒருமுறை, மாதத்தில் இரண்டு தடவை மட்டும் சம்மதிப்பாள்; அதுவும் விருப்பம் இல்லாமல். எப்போதுமே பிள்ளைகள் கூடவே படுத்துக் கொள்வாள். இரவில் நான் எழுப்பினாலும் கூட, அவளுக்கு விருப்பம் இல்லாத காரணத்தால், இரவென்றும் கூட பார்க்காமல், சப்தமாக பேசுவாள்.
 அவள் போடும் சப்தத்தில் பிள்ளைகள் விழித்துக் கொள்வர்; அவ்வளவு தான். இப்படியே, 14 வருடங்கள் பட்டும், படாமலும் வாழ்க்கை கழிந்து விட்டது.
மே 2008ல், அவளுக்கு மார்பில் ஒரு கட்டி வந்து விட்டது. பரிசோதித்த போது, அது, மார்பக புற்றுநோய் என்று சொல்லி விட்டனர். சிகிச்சையில் அவளது ஒருபுற மார்பகம் வெட்டி எடுக்கப்பட்டு விட்டது. உயிர் பிழைத்தால் போதும், பிள்ளைகளுக்கு தாய் என்று ஒருத்தியாய் வாழ்ந்தால் போதும் என்று, நான் எவ்வளவோ பணம் செலவழித்து, காப்பாற்றி வைத்திருக்கிறேன்.
அவளும் மாத்திரை, மருந்து என சாப்பிட்டு, எப்போதும் போல வேலைக்கு செல்வதும், பிள்ளைகளை கவனிப்பதுமாக இருக்கிறாளே தவிர, கணவனின் கஷ்டம் பற்றி இதுவரை கவலைப்படவில்லை. அவளைத் தொட்டே, பல வருடங்கள் ஆகிறது.
பகலெல்லாம் பள்ளிக்கூடம், பிள்ளைகள், மாலை நேர டியூசன் இப்படியே கழிந்தாலும், இரவில் நானுறங்கி நாளாகிறது மேடம். எத்தனையோ பேருக்கு கவுன்சிலிங் செய்யும் நான் படும் அவஸ்தையை சொல்ல வார்த்தை இல்லை.
என் மனைவிக்கு கேன்சர் என்பது என்னைப் பெற்ற தாய்க்கோ, என் உடன்பிறப்புகளுக்கோ நான் இதுவரை சொல்லவில்லை; சொல்லியிருந்தால், அவர்களாவது எனக்கு ஆறுதல் கூறியிருப்பர். என் மனைவி வழி உறவினர்களுக்குத் தெரியும். ஆனால், நன்கு படித்து டாக்டர், இன்ஜினியர்களாக இருக்கும் அவர்கள், இதுவரை ஒரு பேச்சுக்குக் கூட எனக்கு ஆறுதலோ, தேறுதலோ சொன்னதில்லை.
ஐந்து வருடமாய் நான் தனிமையில்தான் படுத்துக் கொள்கிறேன். நடை பிணமாய் இருந்து வருகிறேன். பள்ளிக் கூடத்திலும் கூட, மாணவர்களைத் தவிர யாரிடமும் சரியாக பேச மாட்டேன்; சுபாவம் அப்படி. என்னைப் பிடிக்காத தலைமையாசிரியர், என்னை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து விட்டார்; அதனால், மன உளைச்சல் வேறு. இதுவரை நான் நடத்திய பாடத்தில் ஒருவரும் தோல்வி அடைந்ததில்லை. அப்படியிருக்க, எனக்கேன் இந்த தண்டனை?
கிராமத்தில், ஐந்து உடன் பிறப்புகளுடன் பிறந்து வளர்ந்தவன் நான். கல்லூரிப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி எல்லாம் சென்னையில் தான். என் துரதிருஷ்டம் வேறு ஒரு மாநிலத்தில் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். நான் படித்த படிப்புக்கு என்னைத் தேடி வந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, இந்த வேலையில் வந்து சிக்கலில் மாட்டிக் கொண்டேனோ என நினைக்கத் தோன்றுகிறது.
இப்பெண்ணை மட்டும் மணக்காமல், வேறொரு பெண்ணை பெற்றோர் விருப்பப்படி மணந்திருந்தால், என் வாழ்க்கை நான் எதிர்பார்த்தது போல அமைந்திருக்குமோ என எண்ணுகிறேன். காரணம், என் வழி உறவினர்கள் யாரும் அவ்வளவாய் படிக்காதவர்கள். அதனால், அவர்கள் என் வீட்டுக்கு வந்தால், என் மனைவி அவர்களை சரியாக கவனிப்பதோ அல்லது பேசுவதோ கூட கிடையாது. அதனால், அவர்களும் வந்த சுவடு தெரியாமல் கிளம்பி விடுவர்; பிள்ளைகளும் அவர்களிடம் பேச மாட்டார்கள்.
என் மகள் என்னிடம் மிகவும் பாசமாக இருப்பாள். அவளே என்னிடம் பேசி, இரண்டு வருடமாகிறது. பிளஸ் டூ படிக்கும் என் மகனும், என் பேச்சைக் கேட்பதில்லை. என்ன செய்வது? மாற்று வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்; நான் கொள்கைவாதி. எந்த கெட்டப் பழக்கங்களுக்கும் அடிமையாகாதவன். எனக்கென்று ஒரு நற்பெயர் உள்ளது; அதை சிதைக்க விரும்பவில்லை. இருந்தும், உலக ஆசைகள் அத்தனையையும் துய்க்க வேண்டும் என என் மனமும், உடலும் விரும்புகிறது. வாழ்க்கை என்பது ஒருமுறை தானே?
எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ஏதாவதொன்றை படிப்பது, பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை திருத்துவது, என, என்னை ஈடுபடுத்தியும், என்னால், என் வீட்டைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. யோசித்து, யோசித்து தூக்கமில்லாது போனதாலோ என்னவோ, எனக்கு வயதான தோற்றம் வந்துவிட்டதாக என் நண்பர்கள் சொல்கின்றனர்.
என் வயது, 47 தான் என்றால், யாரும் நம்புவதில்லை; அது, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. தற்கொலை முடிவுக்கு வரும் போதெல்லாம், என் வயதான அம்மாவும், என் இரண்டு பிள்ளைகளும்தான் நினைவுக்கு வருகின்றனர். என்ன செய்வது?
மாடி வீட்டு ஏழையாய் வாழ்ந்து வருகிறேன். கடவுள் மீதும் கோபம். அதனால், கோவிலுக்கு செல்வதும், வேதப் புத்தகம் வாசிப்பதும் நின்று, மூன்று வருடமாகின்றன. "என்னைப் போல உத்தமமாய் வாழ்ந்தவன் அல்லது வாழ்கிறவன் யார்? எனக்கேன் இந்த சோதனை?' என, கடவுளையே கேள்வி கேட்கிறேன். கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால், என்னை இப்படி ஏங்க வைப்பாரா? என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற லட்சியவாதியை, வேறொரு இடத்துக்கு மாற்றம் செய்த தலைமை ஆசிரியரை தண்டிக்காமல் இருப்பாரா?
இன்னும் சொல்ல மறந்த கதை ஏராளம் மேடம்... எனக்கு எத்தகைய கவுன்சிலிங் கொடுத்தால் நல்லது என உங்களுக்கு தோன்றுகிறதோ அதை தயவுடன் தாருங்கள்.
— இப்படிக்கு,
பெயர் சொல்ல விரும்பாத உங்கள் சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு —
உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் சம வயது. உங்களிருவருக்கும், 17 வயதில் மகனும், 15 வயதில் மகளும் இருக்கின்றனர். நீங்கள், பிளஸ் 2 ஆசிரியர். உங்களது மனைவியின் பணி பற்றி, கடிதத்தில் தகவல் இல்லை; இருந்தாலும், அவரும் ஒரு ஆசிரியை என யூகிக்கிறேன். உங்களின் மனைவி, "செக்ஸ்'க்கு ஒத்துழைக்க மறுக்கிறார். மகள் உங்களுடன் பேசி, இரண்டு வருடங்கள் ஆகின்றன. மகனோ உங்கள் பேச்சை கேட்பதில்லை. நேர்மையான, ஒழுக்கமான, பிளஸ் 2 ஆசிரியருக்கு, "செக்ஸ்' கிடைக்க வில்லையெனில், இந்த ஜெகத்தை அழித்து விடுவோம் என ஆர்ப்பரிக்கிறீர்கள்.
தனக்கு விருப்பமில்லா விட்டாலும், மாதத்திற்கு இரு தடவை, செக்ஸ் வைத்துக் கொள்ள உங்கள் மனைவி அனுமதிப்பது நார்மலான விஷயம். திருமணமாகி, 18 வருடங்களான தம்பதியர், 
இந்த கோட்டாவில் தான் தாம்பத்யம் மேற்கொள்கின்றனர்.
குழந்தைகள் வளர்ப்பில் முழு ஈடுபாடு உள்ள தாய்மார்கள், உங்கள் மனைவி மாதிரிதான் இருப்பர். சில கணவர்களின் தாம்பத்யம், உணர்வுகளை தூண்டிவிட்டு, முன்னதாகவே அடங்கி விடும். அது எட்டு இட்லி சாப்பிடுவோருக்கு, ஒரு விள்ளல் இட்லி மட்டும் ஊட்டி விடுவது போன்றது. விள்ளல் இட்லி சாப்பிட்டுவிட்டு, அசுர பசியுடன் அல்லல் படுவதற்கு பதில், முழு உண்ணாவிரதமே இருந்து விடலாம் என்று இருந்து விடுகின்றனர் சில பெண்கள்.
மார்பக புற்றுநோயால் ஒற்றை மார்பகத்தை இழந்து, உயிர் தப்பி வந்திருக்கிறார் உங்கள் மனைவி. அவருக்கு செலவு செய்ததை, "பணம் செலவழித்து காப்பாற்றி வைத்திருக்கிறேன்...' என்கிறீர்கள். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பெண், தன்னுடைய நோயை பற்றி வருந்தாமல், உங்களின், "செக்ஸ்' கஷ்டம் பற்றி கவலைப்பட வேண்டும் என்றிருக்கிறீர்கள்.
மனைவிக்கு புற்றுநோய் என்பதை, உங்கள் வீட்டாருக்கு தெரியப்படுத்தவில்லை. தெரியப்படுத்தி இருந்தால், உங்களுக்கு வந்து ஆறுதல் சொல்லியிருப்பர் என்று கூறுகிறீர்கள். ஆறுதல், உயிர்கொல்லி நோயிலிருந்து மீண்ட உங்கள் மனைவிக்கா, அகால நேரத்திலும் காமப் பித்து பிடித்து அலையும் உங்களுக்கா? மனதை தொட்டு சொல்லுங்கள், யாருக்கு தேவை?
மனைவியின் புற்றுநோய், மனைவி வீட்டாருக்கு தெரியும். அவர்களும் உங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்றிருக்கிறீர்கள். இந்த நினைப்பு, சுயநலத்தின் உச்சக்கட்டம்.
உங்கள் மனைவியை மட்டும் மணக்காமல், வேறொரு படிப்பறிவு குறைந்த பெண்ணை மணந்திருந்தால், வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்கிறீர்கள். யார் யாருக்கு, யார் யாரை ஜோடி சேர்க்க வேண்டும் என்பதை கணித்துதான் இறைவன் திருமண முடிச்சுகளை போடுகிறான். நமக்கு வாய்த்திருக்கும் மனைவி, நமக்கு மிக, மிக பொருத்தமானவள் என்ற மனதிருப்தி தேவை.
நீங்கள் சிறந்த ஆசிரியர், கொள்கைவாதி, கெட்ட பழக்க, வழக்கங்கள் இல்லாதவர், உத்தமர்; ஒத்துக் கொள்கிறேன். இந்த மாதிரியான குணாதிசயங்கள் கொண்டவர்கள், ஒரு நாளைக்கு நான்கு தடவை, "செக்ஸ்' வழக்கப்பட வேண்டும் என்ற விதியா உள்ளது?
உங்கள் முசுடுத் தன்மை தான், உங்களிடமிருந்து மகன், மகளையும், பள்ளி மக்களையும் பிரிக்கிறது. கெட்ட பழக்க, வழக்கங்கள் இல்லாதவர் நல்லவர்; கெட்ட பழக்க, வழக்கம் உள்ளவர் கெட்டவர் என்பது அறிவீனம்.
மொத்தத்தில் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்ன தெரியுமா சகோதரரே...
சுயநலத்தை விட்டு, மனைவியுடன் மனம் விட்டு பேசுங்கள். தொடுதல், சீண்டுதல், முத்தமிடுதல் பழைய நிகழ்வுகளை அசை போடுதல் கூட, "செக்ஸ்'தான். இருவரும் ஹோமியோபதி மருத்துவரை அணுகி, மருந்துவ ஆலோசனை பெறுங்கள்.
சதா புலம்பிக் கொண்டிருந்தால், 47 வயது முகம், 67 வயது முகமாகி விடும். எது வந்தாலும், எது போனாலும் சந்தோஷமாய் இருந்து, 27 வயது முகம் பெறுங்கள். கடவுள் ஒன்றை கொடுப்பதும், ஒன்றை தட்டி பறிப்பதும், மனித ஈசனுக்கு புரியாத திருவிளையாடல்கள்.
மகன், மகளுடன் செய்தி தொடர்பை, தந்தைக்குரிய பொறுப்புடன் வடிவமையுங்கள். செக்ஸ் தொந்தரவு செய்யாது, மனைவி, மக்களுடன் சேர்ந்து படுங்கள்.
ஆசிரியர் பணி இறுக்கங்களை, வீட்டுக்கு கொண்டு வந்து கொட்டாதீர்கள் சகோதரரே...
என் ஆலோசனை உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள். என் ஆலோசனையின் நோக்கம், அடுத்த தலைமுறைக்கு நிவாரணம் தேடுவதே!

உருகுதே மருகுதே கனியை (மொழி) கண்டதாலே...?


என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார். வழக்கு நடந்து கொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை.

கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான். பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.

அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் கனிமொழியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்படமாட்டேன்.

இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப்பெற்றிருக்கின்றோம்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு சுறுங்கி 30 ஆயிரம் கோடி என்று வந்து இப்போது யார் குற்றவாளி என்று கேள்வி எழுந்து,யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவேண்டும் என்று கனிமொழியை அடையாளம் காட்டியிருக்கிறது சிபிஐ.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்கா பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். இங்கே கூடியிருக்கின்ற உங்களிடம் என் வேதனையை பகிர்ந்துகொண்டேன்’’ என்று பேசினார்.