இந்தியாவின் தெற்கு முனையான குமரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தின் மளிகை கடையில் சென்று மளிகை பொருள் வாங்கினால் கூட பிளாஸ்டிக் பையில் பொருள் கிடைக்காது .
பொருள் வாங்க பை எடுத்து செல்லவில்லை என்றால் பை எடுத்து வர சொல்லி கடைகாரர் திருப்பி அனுப்பிவிடுவார் .சாதாரண பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை எங்கு சென்று பொருள் வாங்கினாலும் இதே நிலைதான் .உண்மையிலேயே இது ஒரு பெரிய விஷயம்தான் .
பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்து பல மாதங்களாகியும் அதற்க்கான செயல் பாட்டை எங்குமே காண முடியவில்லை .ஆனால் விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது .
இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜேந்திர ரத்னு அவர்களின் அதிரடி நடவடிக்கை .அது மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களும் முக்கிய காரணம் .குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் மக்களிடம்கூட பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நன்றாக உள்ளது .எந்த ஒரு நல்ல திட்டமும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் .
எனினும் பேருந்துகளில் பயணிக்கும்போது குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகள் தென்படுகின்றன .இது குறித்து அங்குள்ளவர்களிடம் வினவியபோது ,கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது .ஆனால் அருகிலுள்ள நெல்லை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதால் அங்கிருந்து வருபவர்கள் மூலமாக இங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் வந்துவிடுகின்றன என்று கூறினார்கள் .
எனவே தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பொது மக்கள் குமரி மாவட்டத்தை பின்பற்றி தமிழகத்தின் சுற்றுசூழலை வளப்படுத்தவேண்டும் .
பலே கன்னியாகுமரி மாவட்டம்!
|
No comments:
Post a Comment