Saturday, April 30, 2011

பிராட் பேன்ட் கனெக்ஷன் இல்லாமல் இன்டர்நெட் எடுக்க

 இணைய  சேவை சில மொபைல் போன்கள் வழங்குகின்றன. அதன் தரவரிசையில் நோக்கியா நிறுவனம் சிறப்பாகவும் எளிமையாக வழங்குகிறது.

இந்த அறிய வாய்ப்பை பெற தாங்கள் இணையம் வசதி உள்ள நெட்வொர்க்கை பெற்று இருக்கு வேண்டும்.
Mobile Networks
தற்போது எனக்கு தெரிந்து...முதலில் ஏர்செல்டோக்கோமோஏர்டெல்வோடோவோன்,ரிலைன்ஸ்விடியோகான், மேலும் சில நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்குகின்றன.
முதலில் கீழே உள்ள நோக்கியா பிசி சூட்டை பதிவிறக்கி கொள்ளுங்கள்.
 NOKIA PC SUITE DOWNLOAD CLIKE DOWN:
Nokia Pc Suite Download

     பின்னர் டேட்டா கேபிள் மூலம் தங்களின் மொபைல் போனை கணினியுடன் இணைக்கவும். அருகில் இருக்கும் மொபைல் கடைகளில் தங்களின் மொபைல் மாடலை தெரிவித்து டேட்டா கேபிளை பெற்று கொள்ளுங்கள்.  
     இதன் விலை 150 இருக்கும். தங்கள் கணினியுடன் இணைக்கும் முன்னர் தாங்கள் கணினியில் நோக்கியா பிசி சூட்டையை இன்ஸ்டால் செய்துயிருக்க வேண்டும். 
     நீங்கள் கேபிள் மூலம் தங்களின் மொபைல் போனை இணைத்தவுடன், தங்களின் போனில் NOKIA MODEPRINTING&MEDIADATA STORAGE மூன்று ஆப்சன்கள் காட்டப்படும் இதில் தாங்கள் NOKIA MODEஎன்பதை தேர்வு செய்யவும். இதனை மேற்கொண்ட பின்னர் தங்களின் கணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற நோக்கியா பிசி சூட்டை மென்பொருளை தங்களின் கணினியில் இயக்கவும்.
     மேலே உள்ள படத்தில் தோன்றும் விண்டோ போன்று தங்களுக்கு தோன்றும். அதில் என்பதைCONNECT TO THE INTERNET கிளிக் செய்யவும்.பின்னர் தோன்றும் திரையில் CONFIGURE யை மேற்கொள்ளவும். பின்னர் கிழே உள்ள படத்தில் உள்ள மாதிரி செயல்படுங்கள். 
      பின்னர் ACCESS POINT என்பதில் தங்களின் நெட்வொர்கான ACCESS POINTயை டைப் செய்யவும். பின்னர் கீழே உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யவும். சிறிது நேரத்தில் தங்களின் கணினியில் இணையம் வசதி பெறப்படும். ACCESS POINTயை அறிய தங்களின் நெட்வொர்கின் வாடிக்கையாளர் மையத்தை அணுகவும்.
     அவ்வளவு தான் முடிந்தது... மேலும் இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும். 

WI FI திருட்டைத் தடுக்க

நெட் யூஸ் செய்யக்கூடிய பல பேர் வயர்லஸ் தான் யூஸ் செய்யுறாங்க . அதுதான் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை உபயோகிக்க ஈஸியா இருக்கும் . அதுவுமில்லாம நோட் பேட் , லேப்டாப் வச்சி இருப்பவங்களுக்கு ரொம்பவும் வசதி .


இதுல ஒரு சிக்கல் இருக்கு . அதாவது அது டெலிகாஸ்ட் செய்யும் சிக்னல் நமக்கு மட்டும் கிடைக்காது. அது எல்லாருக்குமே கிடைக்கும் . ஆனா பாஸ்வேர்ட் போட்டு இருப்பதால அவங்களுக்கு உள்ளே போக முடியாது . அது மட்டுமே அவங்களுக்கு சிக்கல். இதுல சில கில்லாடிகள் டிரோஜான் வைரஸ்களை வச்சி ஈஸியா பாஸ்வேர்டை திருடிடலாம் ((எப்படின்னு கேக்கக்கூடாது )) . சில பேர் பாஸ்வேர்டே போடாம (போடத்தெரியாம ) இருப்பாங்க 
அது மாதிரி உள்ள சிக்னல் நிறைய இடங்கள்ள தேடினால் கிடைக்கும் . அப்படி ஓசியில நெட் வச்சி பதிவு போடுபவர்களும் நிறைய பேர் இருக்காங்க (யாருன்னு கேக்கப்பிடாது ) . அப்படி நம்ம நெட் யாருக்கும் வெளியே தெரியாம உபயோகிக்க ஒரு வழி இருக்கு. பேர் வெளியே தெரிஞ்சாதானே கிராக் செய்ய முடியும் . அதுக்கு 

முதல்ல நெட் புரவுசர்ல அதிக பட்சமா http://192.168.1.1 . ன்னு டைப் செய்தா உங்க வயர்லஸ் செட்டின் யூசர் இண்டர்ஃபேஸ் வரும் .இது ஒரு பொதுவான ஐ பி .உங்ககிட்ட அந்த ரூட்டரின் யூசர் கைட் இருந்தால் பார்த்துக் கொள்ளவும் . அதுல உங்க யூசர் பாஸ் வேர்ட் குடுங்க . அதுவும் நார்மலா அட்மின்/அட்மின் அப்படிதான் இருக்கும் 

அதுல வயர்லஸ் டேப்ஐ கிளிக்கி அதுல வயர்லஸ் நெட் வொர்க் நேம் (SSID)ன்னு இருக்கும் .அதுல உங்களுக்கு பிடிச்ச பேரை ஈஸியா ஞாபகம் வச்சிருகிற பேரா குடுங்க 





அடுத்ததா வயர்லஸ் SSID பிராட் காஸ்ட் செக்‌ஷன் –ஐ டிஸேபிள் செய்யுங்க . இதை வயர்லஸ் சேனல் டிராப் டவுன் லிஸ்ட் பாக்ஸில பார்க்கலாம் .இதை எல்லாம் சேவ் செய்துட்டு வெளியே வந்தால் உங்க சிக்னஸ் வெளியே தெரியாது .

இதை உங்க கம்ப்யூட்டருக்கு சொல்லனும் .இல்லாட்டி அது திருதிருன்னு முழிக்கும் . உங்க கம்ப்யூல வலது பக்கம் கீழே இருக்கும் நோட்டிஃபிகாஷன் ஏரியாவுல இருக்கும் வயர்லஸ் பாக்ஸை கிளிக்கி சேன்ஜ் அட்வான்ஸ் செட்டிங் அதில வயர்லஸ் நெட் ஒர்க் டேபை கிளிக்குங்க 

அதில் ஆட் பட்டனை தட்டினால் பிரிஃபேர்ட் நெட் ஒர்க் செக்‌ஷன் வரும் அதில் ஏற்கனவே அங்கே நீங்க குடுத்த SSID பேரை குடுக்கவும் . இதை சேவ் செய்யவும் . 

இதன் படி செய்யும் போது உங்க கம்ப்யூ , நெட் ரூட்டர் தவிர மூணாவதா யாருக்கும் தெரியாது . நம்ம ஆளு ஒருத்தன் இப்படிதான் சொன்னான் .எனக்கும் இது மாதிரி செட் பண்னிக்குடுன்னு ஒரே அழிச்சாட்டியம் .சரின்னு போய் பார்த்தா கம்ப்யூ ஆனே ஆகல .கேட்டா நான் போன வருஷம் ஆன் செய்தேன் .அதுக்கு பிறகு மூட் இல்ல இப்ப வந்திருக்குன்னு சொன்னான் . கடைசியில உள்ளே திறந்து பார்த்தா ..அதை நீங்களே பாருங்க .கொடுமையை . நம்ம ஆளு கார் பேனட்டுக்குள்ள வளர்த்தாங்க .இவன் என்னடான்னா கம்ப்யூ உள்ளேயே வளர்க்கிறான்